காதல் – எதிர் வீட்டு நிலவு - சுப. சம்பந்தம்

.



நிலவு
உன்னைப் பார்க்காதவர்கள்
சொன்னார்கள்இ
அமாவாசை அன்று
நிலவு வராது என்று!!

நாணம்

உன் பெண்மை பேசும்
முதல் வார்த்தை.


அன்று வழக்கத்திற்கு மாறாக வேலையிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து கதவை தட்டுவதற்காக கையை உயர்த்தினேன். கதவு தானாக திறந்தது. எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய். உன்னை பார்த்த அந்த நொடியில் தனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட்டதாக எண்ணி என் இதயம் சந்தோசத்தில் தாறுமாறாக இயங்க ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து கதவை திறந்த நீயும் வெளியில் நான் நிற்பதை பார்த்து ஒரு நொடி பேச்சு மூச்சின்றி நின்று விட்டாய். பிறகு சுதாரித்து என் கண்களைப் பார்த்து “நீங்க!” என்று இழுத்தாய். பேசும் சக்தியை இழந்து விட்ட நான் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் இருந்து பதில் வராததால் நீயே பின்பக்கம் திரும்பி அத்தே! யாரோ வந்திருக்கிறார்கள் என்று கூறினாய். என் அம்மாவும் உள்ளிருந்தபடியே என்னைப் பார்த்து அது வேறு யாரும் இல்லை என் மகன் தான் என்று கூறினார்கள். நீயும் என்னை நன்றாக பார்த்து ஒரு புன்னகையை எனக்கு அளித்துவிட்டு நான் போயிட்டு வரேன் அத்தை என்று கூறிக்கொண்டு என்னை தாண்டி கொண்டு வேகமாக ஓடினாய்.

மெல்பேண் நகரில் செல்வி சுதா சண்முகசுந்தரத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்


.  
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


மெல்பேணில் உள்ள பிரபல்யமான நாட்டியக் கல்லூரிகளில் ஒன்றான நிருத்தா இந்தியன் நுண்கலைக் கல்லூரியின் இயக்குனரான திருமதி. நிருத்தசொரூபி தர்மகுலேந்திரனின் மாணவியான செல்வி சுதா கண்ணன் சண்முகசுந்தரத்தின்  பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 2011 நொவெம்பர் 17 ஆம் திகதி, றிங்வூட் நகரத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான ஜோர்ஜ் வூட் நிறைவேற்றுக் கலைக்கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நடன ஆசிரியை திருமதி நிருத்தசொரூபி தர்மகுலேந்திரனிடம் பரத நாட்டியத்தைப் பயின்று நாட்டிய நுணுக்கங்களைக் முறையாகக் கற்றுத் தேர்ந்து சிறப்பான முறையில் அபிநயம், அரங்கசுத்தம், தாளம், வேகம் இவை எவற்றிலுமே எவ்வித குறையுமின்றி தனது ஆடற்கலையை நிறைவாக அரங்கேற்றினார் செல்வி செல்வி சுதா கண்ணன் சண்முகசுந்தரம்.

வசந்த விழா 15.12.2012




இசை காற்றினிலே வரும் கீதம் – M.S. சுப்புலக்ஷ்மி -பாஸ்கர் லக்ஷ்மன்

.
எம்.எஸ்.எஸ்  அவர்களின்  நினவு நாள் டிசம்பர் 11 தமிழ் முரசு நினைவு கூர்கிறது 

download (1)
 வாழ்க்கையில் சில அனுபவங்கள் தோளில் ஏறி அமர்ந்து கூடவே பயணிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் என் இளமையில் நடந்தேறியது. அப்போது நான் ஈரோட்டில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை என் பெரியம்மா ஓர் இசைக் கச்சேரிக்கு செல்கிறேன் நீயும் வா எனக் கூடிச் சென்றார். ஆண் பிள்ளை துணைக்காக என்று நினைவு. அந்த இசைக் கச்சேரி திருமதி எம்.எஸ் அவர்களது தான். அன்று அவர் பக்க வாத்திய வித்வான்களுடன் அமர்ந்திருந்தது இன்றும் பசுமையாக என் நினைவில் விரிகிறது. அன்று எனக்கு இசை மேல் பெரிய ஈடுபாடு இருந்ததாக நினைவில்லை. ஆனாலும் அன்று எம்.எஸ் அவர்களின் குரல், அவர் பாடிய விதம் ஒரு சொல்லொணா பரவசத்தைக் கொடுத்தது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
அதன் பிறகு பல வருடங்களாக அவருடைய இசையை கேட்ட வண்ணம் இருக்கிறேன். எம்.எஸ் அவர்கள் 13 வயதில் தொடங்கிய தன் இசை வாழ்கையை எழுபது வருடங்கள் இடைவிடாமல் தொடர்ந்திருக்கிறார். கர்நாடக இசையை பாடுவதில் வெவ்வேறு இசை விற்பன்னர்கள் பல வித விதமான பாணியை பயன்படுத்துகிறார்கள். எம்.எஸ் அவர்களைப் பொறுத்த வரை அவரின் தனித்துவமான குரல் வளமும், பக்தியுடன் கூடிய ஆத்மார்த்தமான பாடும் முறையே தனிச் சிறப்பு. 

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 48 “ புறத்த புகழு மில”

.

ஞானா:        (பாடி) இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு ….. அது                எங்கிருந்த போதும் அதை நாடி  ஓடு

அப்பா:        என்ன ஞானா நல்ல இன்பமாய் இருக்கிறாய் போலை கிடக்கு. என்ன விசேசம்?

ஞானா:        ஒரு விசேசமும் இல்லை அப்பா. இந்தத் திருக்குறள் விசேசம்தான்.

அப்பா:        திருக்குறளிளை அப்பிடி என்ன விசேசத்தைக் கண்ணிட்டாய். எனக்கும் சொல்லன்.

ஞானா:        அது வந்தப்பா திருக்குறளிலை அறத்துப் பாலிலை அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்   புறத்த புகழு மில  எண்டு வள்ளுவர் சொல்லியிருக்கிறார் எல்லே.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் 'இலக்கிய அரங்கம்' நிகழ்வு,




நாடுகடந்த (நட்டுக்கழண்ட) தமிழீழ பாராளுமன்றத்தின் பிரித்தானிய அலைவு- (1) - அருளம்பலம்.


NKTபிரித்தானியாவில் பனிப்பொழிவுக்கான காலநிலை வந்ததோ என்னவோ நாடுகடந்த தமிழீழம் என்ற அமைப்பினருக்கும் தற்போது பிரித்தானியாவில் குளிர் காய்ச்சல் பிடித்துள்ளதாக தெரியவருகிறது. மாவீரர் தினத்தை அடுத்து நாடுகடந்த தமிழீழ அணியினர் தமது 4வது பாராளுமன்ற அமர்வினை நவம்பர் 29 அன்று பிரென்ற் நகர மண்டபத்தில் பிரமாண்டமாக நடாத்த ஒழுங்கு செய்திருந்தனர். சுமார் ஒரு வார காலமாக தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலிகள், மக்கள்  அனைவருக்கும் அழைப்புகள் உத்தரவுகளுடன் அமர்வு பற்றிய விளம்பரம் மற்றும் அது பற்றிய கலந்துரையாடல்கள் மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் திடீர் என்று 27ம்திகதி நாடு கடந்த தமிழீழக்காறார் தலையில் 155மில்லி மீட்டர் அட்லறி ஷெல்லொன்று விழுந்து வெடித்தது. பிரென்ற் நகர மண்டபம்> தமது மண்டபத்தை இவர்களிற்கு வாடகைக்கு விட இருந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டு 29ம் திகதி மண்டபம் உங்களுக்கு கிடையாது  என்று கூறிவிட்டார்கள். அமர்க்களமாக ஏற்றப்பட்ட புலிக்கொடி மற்றும் தமிழீழக் கொடி பிரென்ற் நகர மண்பத்தில் இருந்த அகற்றப்பட்டு அங்கிருந்த நா.க.தவின் விசேட பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

இலங்கைச் செய்திகள்

.
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்: யாழ். பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்

மன்னாரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காரணங்கள், அறிவித்தலின்றி யாழில் 9 பேர் கைது

சட்ட வழிமுறைகள் ஊடாக யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டு பத்திரிகைகளுடன் இராணுவம் போராடுகிறது
   என்.சத்தியமூர்த்தி

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்: யாழ். பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்

மன்னாரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படையினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக்கோரியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமானது.

ஓஷோ சொன்ன கதை - 1

.



ஒரு ஜென் சந்நியாசி மீது கோபம்க் கொண்ட அந்த தேசத்து அரசன், அவரை தூக்கிட உத்தரவிடுகிறான். கொல்வதற்கு முன்பு அவரசன் அவரிடம், " உனக்கு இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கிறது - நீ அதை எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறாய்" என்று கேட்டார்.

இதைக்கேட்ட சந்நியாசி சிரித்தவாறு, " நான் எப்போதும் வாழுவது போல - கணத்துக்குக் கணம் வாழ்கிறேன் ! என்னைப் பொறுத்தவரையில், இந்த கணத்துக்கு மேல் எதுவும் கிடையாது. ஆகவே, எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன ? 24 வருடம் இருந்தால் என்ன ? எனக்கு இதில் எந்த வேற்பாடும் இல்லை. நான் கணத்துக்கு கணம் வாழ்ந்து வந்திருப்பதால், இந்த கணமே எனக்கு அதிகம் தான். இந்த ஒரு கணம் போதும்" என்றார்.

அரசர் ஒன்று புரியாமல் விழித்தார். அப்போது சந்நியாசி அரசரிடம், " நான் உங்களை ஒன்று கேட்க அனுமதி கொடுங்கள். நீங்கள் தொடர்ந்து இரண்டு கணங்கள் ஒரே சமயத்தில் வாழ முடியுமா ?" என்று கேட்டார்.

யாருமே அப்படி வாழ்ந்தது கிடையாது. வாழ்வதற்கு ஒரே வழி, ஒரு சமயத்தில் ஒரு கணம் வாழ்வது தான்.

யோக , யோகி, தியானம் பற்றி விளக்கம் சொல்ல ஓஷோ அவரள் உதாரணத்திற்கு சொன்ன கதை.

***

துர்க்கை அம்மன் ஆலயத்தில் வைரவர் ஹோமம்

.
சிட்னி துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்றய தினம் இடம் பெற்ற வைரவர் ஹோமத்தின் ஒரு காட்சி


உலகச் செய்திகள்

.
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் உடைப்பு

கேட் கர்ப்பம்: உறுதி செய்தது ஜேம்ஸ் மாளிகை

அமெரிக்க ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு!

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் உடைப்பு

பாகிஸ்தானில் கராச்சி நகரிலுள்ள சோல்ஜர் பஜார் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீராம் பிர் மந்திர் என்ற இந்துக் கோவில் உடைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றியும் ஏராளமான இந்துக்கள் குடியிருந்து வருகிறார்கள்.


யட்சியின் குரல் - சிறுகதை -துரோணா

.


அவன் தன்னுடைய பெயரையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்உன்மத்த ஆத்மார்த்தத்துடன் மந்திரங்களை ஜபித்து பிரார்த்திக்கும் பக்தனைப் போல் குரலை ஏற்றியும் இறக்கியும் அவன் தனது பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.அவனை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் அவனைப் போன்றோரை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.நடை வீதிகளில் தங்களை நிர்வாணமாக்கி சாலையில் போவோரையும் வருவோரையும் பார்த்துக் காறி உமிழ்கையில்,பழைய செய்தித்தாள்களையெல்லாம் சேர்த்து வைத்து பின்னர் அவற்றோடு சேர்த்து தம்மையும் எரித்துக் கொள்கையில்ரயில்வே பாதைகளில் உங்களை ஒருகணம் அழச் செய்து யாசிக்கும் கண்களில்,சில சமயம் உங்கள் படுக்கை அறைக் கண்ணாடிகளில் என எப்பொழுதேனும் நிச்சயம் அவனைப் போன்றவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அன்றைய தினத்திற்கு முன் வரை அவன் இப்படி இருந்தவனில்லைமிகவும் சாதாரணமாக காலையில் எழுந்துசாதாரணமாகச் சாப்பிட்டுசாதாரணமாக வேலைக்குச் சென்று,சாதாரணமாக டி.விபார்த்துசாதாரணமாக தூங்கி,மீண்டும் மிகவும் சாதாரணமாக காலையில் எழும் நம்மில் ஒருவனாகவே அவனும் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான்-வெள்ளையும் நீலமும் கலந்த மங்கிய இருள் நீங்கா முன் காலைப் பொழுதில் யட்சி அவன் கனவில் தோன்றும்வரை.அவன் இதுவரை யட்சியை நேரில் கண்டதில்லை.கதைகளில் கேட்டதோடு சரி.யட்சி பேரழகானவள் என்பது மட்டுமே அவன் அதுவரையில் அறிந்திருந்த சேதி.

கண்திறவாய் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

.
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உடலில் ஏற்படும் ரணங்களை மருந்துகள் போக்கிவிடும். மனதில் தோன்றிய பிணிகளை நல்ல கவிதைகள் போக்கிவிடும். இறைவன் எல்லோருக்கும் எல்லா அருட்கொடைகளையும் கொடுப்பதில்லை. ஆனால் கலாபூஷணம் டாக்டர் தாஸிம் அகமது அவர்கள் தொழில் ரீதியாக வைத்தியராயிருந்து பலரை குணப்படுத்துகிறார். மறுபக்கம் கவிஞராக இருந்து இதயப் பிணிகளை போக்குகின்றார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

சாதாரண கவிதைகளை விட, ஆன்மீகம் சார்ந்த அல்லது நன்மை பயக்கும் விடயங்களைக் கற்றுத் தரக்கூடிய கவிதைகளை வாசிக்கையில் வார்த்தைகளில் விபரிக்க முடியாத திருப்தி மனதில் குடியேறி விடுவதுண்டு. அத்தகையதொரு மாமருந்தாக கண் திறவாய் என்ற கவிதைத் தொகுதி காணப்படுகின்றது. வெள்ளையில் ஒரு புள்ளி, சுழற்சிகள், ஆசுகவி போன்ற கவிதைத் தொகுதிகளை இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் கண் திறவாய் என்ற இந்நூலானது 136 பக்கங்களில் அமைந்துள்ளது. கண் திறந்தால், அரங்கக் கவிதைகள், முஸ்லிம் பெண்ணே, பாமடல் போன்ற தலைப்புக்களின் கீழ் கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

விரித்த பாடப்புத்தகம் -


.

முன்னாளில் தலைமை வாத்திகையில் பிரம்பொடுகண்ணில் கடுமையொடுநடைபோட்ட தன்மைகண்ணுக்குள் நிற்கிறது.
இன்றோ
துணைக்கோ எவருமின்ற
இருக்க ஓர் வீடின்றி
உறவினர் 
படலைகள் திறக்கின்ற பாங்கு!

என்னே நிலைமை!

பிள்ளைகள் ஆறு
மூத்தது பெண்
சொந்த வீட்டுச் சொகுசொடு
மாநகரில் குடியிருப்பு
இவர்வழிப் பேரரோ
இலண்டன் கனடா எனப்பல நாடு!

ஆய கலைகள் அறுபத்து நான்கு

.

ஆய கலைகள் அறுபத்து நான்கும் இவை தான்! ஆச்சரியமான தகவல்

1.ஆடல் 2.இசைக் கருவி மீட்டல் 3.ஒப்பனை செய்தல் 4.சிற்பம் வடித்தல் 5.பூத்தொடுத்தல் 6.சூதாடல் 7.சுரதம் அறிதல் 8.தேனும் கள்ளும் சேகரித்தல் 9.நரம்பு மருத்துவம் 10.சமைத்தல் 11.கனி உற்பத்தி செய்தல் 12.கல்லும் பொன்னும் பிளத்தல் 13.கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல் 14.உலோகங்களில் மூலிகை கலத்தல் 15.கலவை உலோகம் பிரித்தல் 16.உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல் 17.உப்பு உண்டாக்குதல் 18.வாள் எறிதல் 19.மற்போர் புரிதல் 20.அம்பு தொடுத்தல் 21.படை அணிவகுத்தல் 22.முப்படைகளை முறைப்படுத்தல் 23.தெய்வங்களை மகிழ்வித்தல் 24.தேரோட்டல் 25.மட்கலம் செய்தல் 26.மரக்கலம் செய்தல் 27.பொற்கலம் செய்தல் 28. வெள்ளிக்கலம் செய்தல் 29. ஓவியம் வரைதல் 30. நிலச் சமன் செய்தல் 31.காலக் கருவி செய்தல் 32.ஆடைக்கு நிறமூட்டல் 33.எந்திரம் இயற்றல் 34.தோணி கட்டல் 35.நூல் நூற்றல் 36.ஆடை நெய்தல் 37. சாணை பிடித்தல் 38. பொன்னின் மாற்று அறிதல் 39.செயற்கைப் பொன் செய்தல் 40.பொன்னாபரணம் செய்தல் 41.பொன் முலாமிடுதல் 42.தோல் பதனிடுதல் 43.மிருகத் தோல் உரித்தல் 44.பால் கறந்து நெய்யுருக்கல் 45.தையல் 46.நீச்சல் 47. இல்லத் தூய்மையுறுத்தல் 48.துவைத்தல் 49.மயிர் களைதல் 50.எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல் 51.உழுதல் 52.மரம் ஏறுதல் 53.பணிவிடை செய்தல் 54. மூங்கில் முடைதல் 55.பாத்திரம் வார்த்தல் 56.நீர் கொணர்தல் நீர் தெளித்தல் 57.இரும்பாயுதம் செய்தல் 58.மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல் 59.குழந்தை வளர்ப்பு 60. தவறினைத் தண்டித் தல் 61.பிறமொழி எழுத்தறிவு பெறுதல் 62.வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல் 63.மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு 64.வெளிப்படுத்தும் நிதானம்.

தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியது : தனது இறுதிப் போட்டியில் பொண்டிங் ஏமாற்றினார்

.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.



ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதலிரு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தன.

காதலிக்கப்படும் போது......கவிதை.

.

இரு கண்களில்
ஓர் அழுகை

உள்ளங்களிரண்டில்
ஒரு புன்னகை

உதடுகளிரண்டில்
ஒரு உச்சரிப்பு

இரண்டு என்றவைகளுக்கெல்லாம்
ஒன்று என்ற பொருள்

காதுமடல்களில்
செல்லப்பெயர்களின்
தேடல்

தமிழ் சினிமா



அம்மாவின் கைபேசி

துப்பாக்கி, போடா போடி என்ற பொழுதுபோக்கு சரவெடிகளின் சப்தங்களுக்கு மத்தியில் தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி காணாமல் போய்விட்டது.
இருப்பினும் இயக்குனர் தங்கர் பச்சானின் அரிய படைப்பு என்று நினைத்துக்கொண்டு அம்மாவின் கைபேசி தியேட்டர் வாசலை மிதிக்கும் ரசிகர் பெருமக்களுக்கு பேராபத்து இருக்கிறது.
ஒன்பது பிள்ளைகளைப் பெற்றத் தாய் தன் கடைசி மகன் மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை மிகவும் நீளமாகவும் உருக்கமாகவும் சொல்லிருக்கிறார் தங்கர்பச்சான்.
வீட்டின் கடைசி மகன் என்பதால் அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்கிறார் அண்ணாமலை என்கிற சாந்தனு.
கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கு கெட்டிக்காரத்தனமாக நடித்து இந்த படத்தில் நல்ல பெயர் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றும் ஊதாரித்தனமாக வாலிபராக வலம் வருகிற சாந்தனுவிற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு தொடக்கம் முதலே இருக்கிறது.
அதனால் வீட்டின் மற்ற அண்ணன்களும் அக்காவும் சாந்தனுவை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
இருப்பினும் தன் மாமன் மகளான செல்வி என்கிற இனியாவை காதலிக்கும் சாந்தனு, அவரை திருமணம் முடிக்க வேண்டுமென்பதற்காக பொருப்புள்ள பிள்ளையாக மாறி தன் மாமாவிடமே வேலைக்கு சேர்கிறார்.
இந்த நேரத்தில் வீட்டில் ஒரு விஷேஷம் நடக்க அங்கு தங்க நகை காணாமல் போக, அதை சாந்தனுதான் எடுத்திருப்பார் என்று எல்லோரும் சந்தேகப்பட, சாந்தனுவை அடித்து உதைத்து வீட்டைவிட்டே துரத்திவிடுகிறார் அவர் அம்மா. பல இடங்களில் வேலைக்கு போய் கஷ்டப்படுகிறார்.
இருப்பினும் சில நல்ல முதலாளிகள் அவருக்கு கிடைப்பதால் நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைகிறார்.
அதுவரை வீட்டுக்கு போகாமலும் தன் அம்மாவை பார்க்காமலும் இருந்த சாந்தனு, தன் அம்மவுடன் பேச ஒரு கைபேசி வாங்கி அம்மாவுக்கு அனுப்புகிறார்.
அம்மாவும் மகனும் கைபேசியில் பாசத்தை பரிமாறிக்கொள்கிறார்கள்.
தான் வேலை செய்யும் இடத்தில் உண்மையாக இருப்பதால், எதிரிகளையும் சம்பாதித்து கொள்கிறார் சாந்தனு.
அந்த எதிரிகள் சாந்தனுவை தீர்த்துக்கட்ட துடித்துக் கொண்டிருக்க, இறுதியாக அம்மாவும் மகனும் சந்தித்துக்கொள்கிறாரார்களா என்ற கேள்வியை நோக்கி நகர்கிறது க்ளைமாக்ஸ்.
தன் நாவலை முழுமையாக எடுக்க வேண்டுமென்பதற்காக பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி படம் முடிகிறவரை புலம்ப வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான்.
’அம்மாவின் கைபேசி’ அண்ணாமலையின் கதையாக இல்லாமல் பிரசாத்தின் (தங்கர் பச்சான் கதாப்பாத்திரம்) கதையாக இருப்பது எதிர்பார்க்காத ஏமாற்றம்.
இன்னும் சொல்லப்போனால் அவர் நடித்திருக்கும் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நீளமான காட்சிகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
படத்தில் ஒரே ஒரு அறுதலான விஷயம் தன் வேலையை மிகச்சரியான விதத்தில் செய்திருக்கிறார் சாந்தனு. நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
அம்மாவின் பாசத்துக்கு அடங்கி நடக்கும்போதும், இனியாவுக்கு நச்சுன்னு ஒரு இச்சு வைக்கும் போதும், எதிரிகளிடம் சிக்கிகொண்ட போதும், ரொம்ப தெளிவான நடிப்பு.
இனியா, கொடுத்த காட்சிகளை சும்மா அல்வா மாதிரி சாப்பிட்டிருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும், நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி கிராமத்துத்தாயை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். அண்ணாமல... அண்ணாமல... என்று மகனிடம் பேசும் வசன உச்சரிப்பிலும் கூட பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கைபேசியில் பேசும்போதெல்லாம் டவர் கிடைக்காமல் சுவர் மேல் ஏறி நின்று பேசும் வேடிக்கையான காட்சிகள் ரசிக்கவைத்தன.
கொமெடி என்ற பெயரில் தங்கர்பச்சான் செய்த சேஷ்டைகள் மிகவும் கோபப்படுத்துகிறது.
அம்மாவின் பாசம் அளக்க முடியாதது, உலகத்தில் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை, கண்ணில் தெரியும் கடவுள் அம்மா என்ற கருத்துகளை உணர்த்தும் படைப்பாக இருக்கிறது அம்மாவின் கைபேசி.
இருப்பினும் தங்கர்பச்சன் சாருக்கு ரசிகர்களின் வேண்டுகோள், அழகி மாதிரியான அழியாத ஒரு படைப்பை மீண்டும் எடுக்க முடிந்தால் எடுங்க, இல்லைன்னா ஆளவிடுங்க என்பதே ஆகும்.
கதாநாயகன்: சாந்தனு பாக்யராஜ்
கதாநாயகி இனியா
இசை ரோகித் குல்கர்னி
இயக்கம்: தங்கர் பச்சான்
நன்றி விடுப்பு