நாட்டுப்பற்றாளர் நாள் – 2021 - மெல்பேர்ண்

 பாரத தேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்  19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 33-ஆவது ஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்புலமாக நின்றுழைத்துச் சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்-பற்றாளர்களையும் மாமனிதர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நெஞ்சிருக்கும் ஆசைகளை நீசெய்வாய் சித்திரையே ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா





சித்திரையே நீயும்  சிறப்புடனே வரவேண்டும் 

இத்தரையில் யாவருமே இனியசுகம் பெறவேண்டும்

கொத்தாகப் பலியெடுத்த கோரமுடை கொடுநோயும்

திக்குத்திசை தெரியாமல் தெறித்தோடி மடியவேண்டும்  !

மனவுறுதி மக்களது மனமெல்லாம் எழவேண்டும்
வாழ்வழித்த பெருநோயும் மண்விட்  டகலவேண்டும் 
இழந்தமுதல் தொழியெல்லாம் ஏற்றமாய் வரவேண்டும்
இதற்கெல்லாம் தீர்வுகொண்டு எழுந்துவா சித்திரையே  !

பேர்த் பால முருகன் கோயில் - புத்தாண்டு வாழ்த்துக்கள் - 14/04/2021

 


சிட்னி தமிழ் இலக்கிய கலைமன்றம் நடத்திய சிலப்பதிகார விழா


ஏப்ரல் மாதம் 10ம் திகதி சிட்னி
 
தமிழ் இலக்கிய கலைமன்றம் நடத்திய சிலப்பதிகார விழா வெகுசிறபப்பாக நடைபெற்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளிற்க்கு முத்தமிழிற்கு சிறப்பாக தமிழரின் பண்பாடுகளை தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த சிலப்பதிகாரத்தை அருளிச்செய்த இளங்கோ அடிகளின் சிலைக்கு மாலைஅணிவித்து விழா தொடங்கியது.
சிறப்பு அம்சமாக சிட்னி  தமிழ் இலக்கிய கலைமன்றம் நடத்திய சிலப்பதிகார விழா இளம் சிறார்களின் தமிழ் இசையால் தமிழர் மண்டபத்தை மேடையை பெருமிதம் செய்து சிறப்பித்தார்கள். சிலப்பதிகாரத்தின் "மாசறு பொன்னே வலம்புரி முத்தே..... என்று Dr சிவரதி கேதீஸ்வரன் அவர்களின் மாணவர்களின் தமிழ் இசை உணர்வுடன கூடிய பாடடுக்கள் மேடையை சிறப்பித்தன. இப்படி தமிழ் இசை எல்லா உலக நாடுகள் மேடைகளிலும் அரங்கேறட்டும் (தொடரும் ).

மருத்துவம் என்பது வரமாகும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண் .... அவுஸ்திரேலியா





மருத்துவம் என்பது வரமாகும்
மக்களைக் காத்திடும் துணையாகும்
நலமுடன் நாளுமே வாழ்வதற்கு
நன்மைய நல்கிடும் வழியாகும்

பலவித வைத்தியம் பாரிலுண்டு
பாட்டிகள் வைத்தியம் அதிலொன்று
பரம்பரை வைத்தியம் விரும்பிடுவார்
பாரிலே பலபேர் இருக்கின்றார்  

பத்தியம் காத்திடும் மருத்துவமும்
பத்தியம் பேணா மருத்துவமும் 
எத்தனை யெத்தனை நோய்களையும்
எதிர்த்துமே நிற்குது பாரினிலே

வாழும் முறையில் மாற்றமெலாம்
நாளும் பெருகி வருவதனால்
நோயின் வகையும் பெருகிறது
நுண்மையாய் மருத்துவம் நோக்கிறது 

பங்கர் எங்கட கதைகள்.......


கானா பிரபா


 

மரண வேதனை அது அனுபவிப்பவனுக்கு மட்டுமல்ல, உய்த்துணர்வோனுக்கும் கடத்தப்படக்


கூடியது, அப்பேர்ப்பட்டது ஈழத்தின் போரியல் வாழ்வு.


“புத்திர சோகம் பெருஞ் சோகம்” என்பார் எங்கட அப்பா.

போர் கனத்துப் போன முள்ளிவாய்க்கால் முனையில் ஒரு தாயும், மகனுமாக.

மத்தியானம் மீன் வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிக்கிறான் மகன்.

முள்ளிவாய்க்கால் உச்சி வெயிலில், பன்னிரண்டு மணிக்கு வரிசையில் நின்றால் நாலு மணிக்குத் தான் மீன் கிடைக்கும். அந்த வரிசைக்கு மேல் ஷெல் விழுந்தும், சன்னம் பட்டும் செத்தவர்களும் உண்டு. பின்னேரம் நாலுமணிக்கு மீன் வாங்கப் போன தாய் அதை அவிச்சுக் கொடுத்துச் (மீன் ஆக்க ஏதும் இல்லை) சாப்பிட வைத்த தாய்க்குத் தெரியுமா தன் பிள்ளை இன்னும் 4 மணி நேரத்தில் பங்கருக்குள் செத்துப் போவான் என்று?

அந்தத் தாயின் கதையைக் ( நானும் மகனும் – தபோதினி) காலையில் படித்தவன் மாலை வேலையால் வீடு திரும்பும் வரை அந்த தாயையும், பிள்ளையையும் நினைத்து “ஐயோ ஐயோ” என்று அனாத்தியது உள் காயமாய். இப்போது என்னால் எழுதக் கூட முடியாத அளவுக்கு மன உளைச்சலோடு தான் இந்தப் பகிர்வைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

இவ்விதம் 30 போரியல் வாழ்வனுபவங்கள் 26 ஈழத்துச் சகோதர, சகோதரிகளால் பகிரப்பட்டவை

எழுத்தும் வாழ்க்கையும் 36 பொன்விழா ஆண்டில் தடம் பதிக்கும் வேளை… மறக்கமுடியாத ஏப்ரில் மாதமும் எழுத்துலக பிரவேச ஆண்டும் !! முருகபூபதி



ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம் !

                 இந்தப்பாடலை கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் சுபதினம் ( 1969 ) திரைப்படத்தில் எழுத்து ஓடும்போது கேட்டிருப்பீர்கள். அப்போதுதான்  கொழும்பிலிருந்து வெளியான சிரித்திரன் இதழ் மகுடி கேள்வி – பதில் பகுதிக்கு ஒரு கேள்வியை அனுப்பியிருந்தேன்.

மேல் வகுப்பு படிக்கின்ற பருவத்தில் எனது பெயர் இதழில்


வெளிவந்தால், அதனை வீட்டில் பெரியவர்கள் படித்துவிட்டால் திட்டும் ஏச்சும் வாங்கவேண்டும் என்ற பயத்தில் எனது பெயரை முருகன் என்று எழுதியிருந்தேன்.

எங்கள் ஊருக்கு அப்போது மாதாந்தம் சிரித்திரன் இதழ் பிரதானவீதியில் அமைந்த ஒரு  தமிழ்நாட்டு அன்பர் நடத்திய சந்திரவிலாஸ் என்ற  சைவ ஹோட்டலுக்கு வரும். அங்குதான்  தமிழக சினிமாப்  படங்களின் சுருக்கமான கதையுடன் பாட்டுப்புத்தகங்களும் விற்பனைக்கு வரும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் , இரத்தக்கண்ணீர் கதை, வசன , பாடல் புத்தகங்களையும் அங்குதான் வாங்கிப்படித்தேன். அப்பா தரும் Pocket Money யை   இவ்வாறுதான் அந்த பாடசாலைப்பருவத்தில் செலவிட்டேன்.

சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம்,  நான் எழுத்தாளனாக அறிமுகமானதற்குப்பின்னர்தான் எனது நண்பரானவர்.  1969 காலப்பகுதியில் முருகன் என்ற பெயரில் அவ்வப்போது கேள்விகள் அனுப்புவேன்.

எனது முதல் கேள்வி இவ்வாறு அமைந்திருந்தது:  உலகத்தில் மிகவும் பயங்கரமான ஆயுதம் எது..?

சிரித்திரன் மகுடியின் பதில்:  தவறான மனிதனின் கையில் இருக்கும் பேனை !

படித்தோம் சொல்கின்றோம்: சிங்கள மூத்த எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் - எங்கள் கிராமம் அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன் முருகபூபதி


லங்கையின்  தென்பகுதியில் கொக்கலை என்ற சிங்களக் கிராமத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த  மார்ட்டின் விக்கிரமசிங்கா,  சிங்கள இலக்கிய உலகில் புகழ்பெற்ற படைப்பாளி.

அவர்  இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் 90 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர்.  அவற்றில் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மாத்திரமன்றி ருஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவரது  நாவல்கள் சில திரைப்படங்களாகியுள்ளன. 1914 ஆம் ஆண்டில் தனது முதலாவது நாவலாக லீலா என்ற புதினத்தை வெளியிட்டிருக்கும் மார்ட்டின் விக்கிரமசிங்கா 1976 ஆம் ஆண்டு தமது 86 ஆவது வயதில் மறைந்தார்.


அன்னாரின் நினைவாக இலங்கையில் மல்லிகை இதழும் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது.

மார்ட்டின் விக்கிரமசிங்காவின் கம்பெரலிய  நாவலை   பேராசிரியர் முகம்மது உவைஸ் தமிழுக்கு வரவாக்கியதையடுத்து, பின்னாளில்  மடோல்தூவ நாவலை மடோல்த்தீவு என்ற பெயரில் சுந்தரம் சௌமியன் மொழிபெயர்த்தார்.  அத்துடன் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் பற்றற்ற வாழ்க்கை நூலை   சுந்தரம் சௌமியனும் சில சிறுகதைகளை பேராசிரியர் சபா. ஜெயராசாவும் தமிழுக்கு மொழிபெயர்த்து வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே பல சிங்கள இலக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்தவரும், பத்திரிகையாளரும்,  இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகளை பெற்றவருமான இரா. சடகோபன் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் அபே கம என்ற  தன்வரலாறு  சார்ந்த கிராமத்தைப்பற்றிய கதையை எங்கள் கிராமம் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

இதனை இலங்கை இராஜகிரிய சரச பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மொழிபெயர்ப்புத்துறை என்பது இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் ஒரு அரிய கலைவடிவமாக இருந்தபோதும், அதற்கு உரிய மதிப்பளித்து அங்கீகரிக்கும் மனப்பாங்கு இன்னமும் ஏற்படவில்லை. அப்படி இருந்தும் அத்துறையில் சளைக்காது ஈடுபடும் இலக்கிய நெஞ்சங்களுக்கே ஆதங்கத்துடன் இந்நூலை சடகோபன் சமர்ப்பணம் செய்துள்ளார்.

இச்சமர்ப்பணத்தில் பொதிந்துள்ள உண்மை உணரத்தக்கதே.

மொழிபெயர்ப்பு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் படைப்பாளுமையையும் வேண்டிநிற்பது.

“  மூலமொழியின் பண்பாட்டோடு ஒன்றிணைந்து தோய்ந்து மேலெழாது இலக்கு மொழிக்கு கலைப்படைப்பைக் கொண்டுவரும் செயற்பாடு மிகவும் சிரமமான பயிற்சியை வேண்டி நிற்கிறது  “ என்று இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் பேராசிரியர் சபா. ஜெயராசா பதிவுசெய்துள்ளார்.

பக்கவிளைவற்ற பக்குவமான மருத்துவம் ஹோமியோபதி


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...  அவுஸ்திரேலியா

 

 

    பிறப்பு என்பது நல்லதொரு வரமாகும். ஆனால் இறப்பும் அதனுடன் இணைந்தே இருக்கிறது.பிறந்தவுடன் கொண்டாடி மகிழ்கின்றோம்.பல வித கற்பனைகள் சிறகடிக்க வாழ்க்கை என்னும் வானில் சிறகடித்துப் பறந்தும் வருகிறோம்.அப்படி சிறகடிக்கும் வாழ்வில் எப்படியோ நோய்கள் வந்து எங்களின் இன்பக் கனவு களைச் சிதறடித்து விடுவதையும் காண்கிறோம்.இதனால்தான்      " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்னும் பொன் மொழியும் ஏற்பட்டதோ என எண்ணிடத்தோன்றுகிறது.நோயிலிருந்து விடுபட  மண்ணில் வந்த அருந்துணையே மருத்துவம் எனலாம். அந்த மருத்துவம் நாட்டுக்கு நாடு வேறுபட்டதாய் வேறு வேறு பெயர்களில் தோற்றம் பெற்றாலும் மருத்துவத்தின் தலையாய பணி மண்ணில் வாழுகின்ற மக்களை இயன்றவரை நலமுடன் வாழ்ந்திடச் செய்வதேயாகும். அந்தவகையில் காலத்துக்காலம் பல மருத்துவ வழிகள் உருவாக்கப்பட்டன. அந்த வழியில் இன்று உலகின் இரண்டாவது மருத்துவ வழியாக சிறந்து விளங்குவதுதான்

ஹோமியோபதி " என்பதை மனமிருத்துதல் அவசியமாகும். இந்த மருத்துவம் ஐரோப்பாஅமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகள்இந்தியாஇலங்கைபாகிஸ்தான் என்று பரந்து விரிந்திருக்கிறது என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

சிட்னி துர்க்கா கோவிலில் சாண்டி ஹோமம் 18/04/2021

ஹோமம் 2021 ஏப்ரல் 18 ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்படும். இந்த நிகழ்வு கணேஷா ஹோமத்துடன் தொடங்குகிறது.



இந்த புனித சடங்கில் பயன்படுத்தப்படும் நவ துர்க்கா செப்பு யந்திரங்கள் விழா முடிந்த பிறகு கிடைக்கும். 

இந்த நவ துர்க்கா வண்ண செப்பு யந்திரம் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் மற்றும் கடினமான சிக்கல்களை நீக்கும்.


குரு சிவஸ்ரீ முனனவர் சபாரத்தின சிவாசாரியார் அவர்கள் 18 ஏப்ரல் முதல் 31 அக்டோபர் 2021 வரை நடாத்தும் "சிவஞான சித்தியார் ஞானயோகப் பயிற்சி 2021" via Zoom


இலங்கைச் செய்திகள்

 படையினருக்காக தனியார் காணி அளவீடு; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

இலங்கை வர வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை

சர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021

ரஞ்சனின் பதவி அறிவிப்பால் சபையில் அமளி துமளி


 படையினருக்காக தனியார் காணி அளவீடு; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

யாழ். தென்மராட்சி ஜே/334கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியார் காணியை அளவீடு செய்யும் நில அளவைத் திணைக்களத்தின் முயற்சி பொது மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் வடக்கு ஜே/334கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான 50ஏக்கர் காணியை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்வதற்கு நேற்று சென்றிருந்தனர்.

உலகச் செய்திகள்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி நெதர்லாந்தில் இடைநிறுத்தம் 

சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்து சீரானது

தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கு இன்று தேர்தல்

ஈரான் அணு பேச்சில் அமெரிக்கா பங்கேற்பு

மேலும் 2 தடவை தேர்தலில் போட்டி: சட்டத்தில் புட்டின் கையெழுத்து

ஈரான் அணு பேச்சில் அமெரிக்கா பங்கேற்பு

2ஆம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்


அஸ்ட்ராசெனகா தடுப்பூசி நெதர்லாந்தில் இடைநிறுத்தம் 

கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை நெதர்லாந்து வரும் ஏப்ரல் 7ஆம் திகதி வரை இடைநிறுத்தி உள்ளது.

ஆரம்பத்தில் 60 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு மாத்திரம் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்திய நிலையில் அதனை முழுமையாக இடைநிறுத்துவதற்கு நெதர்லாந்து சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை தீர்மானித்தது.

கர்ணன் திரைவிமர்சனம்


 தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை விட மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கர்ணன். பரியேறும் பெருமாள் எனும் எதார்த்தமான படைப்பை தந்துவிட்டு, தற்போது கர்ணன் எனும் படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். சில எதிர்ப்புகள், பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகியுள்ள கர்ணன், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு நீதியை வழங்கினாரா? இல்லையா? என்று பார்ப்போம்.

கதைக்களம்

கர்ணன் { தனுஷ் } கைது செய்து அடித்து உதைத்து ரத்தம் சொட்ட சொட்ட காவல் துறையினர்கள் அழைத்து செல்கின்றனர். அங்கே துவங்கும் 'கண்டா வரச்சொல்லுங்க பாடல் ' அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அந்த இடத்தில் முடித்து சில வருடங்கள் படம் பின்னோக்கி செல்கிறது. அங்கே, பொடியன்குளம் எனும் குக்கிராமத்தில் தனது மக்களுடன் வாழ்ந்து வருகிறான் கர்ணன். கர்ணனின் துணை நிற்பவராக லால் மற்றும் அவரது 6 நண்பர்கள்.

பொடியன்குளம் ஊரில் தொடர்ந்து 8 வருடமாக யாராலும் நிகழ்த்தமுடியாத விஷயத்தை கர்ணன் முடிக்கிறான். அதனால், ஊர் வழக்கப்படி கர்ணனுக்கு வாழ் கொடுத்த கொண்டாடுகின்றனர்.

என்னதான் ஊர் மக்கள் சொந்தோசமாக ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் தங்களது ஊருக்கு அரசால் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் கிடைக்கவிடாமல் மேல் சாதி காரர்கள் தடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்று வருத்தமும் இருக்கிறது.

அதில் ஒன்றாக கர்ணனின் பொடியன்குளம் ஊர் வழியாக செல்லும் ஒரு பேருந்து கூட பொடியம்குளம் அருகே நிற்பதில்லை. அது ஏன் என்று கேட்டால், உங்களின் ஊருக்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று கூறி நிரகிரிகின்றனர் பேருந்து ஓட்டுனர்கள்.

இதற்காக பல வழியில் போராடுகிறார்கள் பொடியன்குளம் மக்கள். ஆனால் குனிந்து கெஞ்சினாள் உரிமை கிடைக்காது, நிமிர்ந்து தைரியமாக போராடுவோம் என்று தனது மக்களுக்காகவும், தங்களது உரிமைக்காகவும் போராடுகிறார் கர்ணன்.

ஒட்டுமொத்தமாக இந்த போராட்டத்தில், பல தடைகளையும், பல இழப்பையும் சந்திக்கும் கர்ணன், உரிமையை மீட்டு தன் மக்களுக்கு தந்தானா? இல்லையா? இறுதியில் வென்றது சாதியா? அல்லது உரிமையா? என்பது தான், கர்ணனின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கர்ணனாக வரும் தனுஷ், கீழ் சாதி மக்களின் உணர்வுகளை கண்முன் பிரதிபலிக்கிறார். அதே போல், கர்ணனுக்கு துணையாக நிற்கும் நடிகர் லால், தனது நடிப்பின் மூலம் கண்கலங்க வைக்கிறார். இருவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்பதில் சந்தகமேயில்லை.

கதாநாயகி ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் படத்தை மலையளவு தூக்கி நிறுத்துகிறது. அதேபோல், வில்லனாக வரும் நடிகர் நட்டி, காவல் துறை அதிகாரியாக படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அலரவைக்கிறார்.

இவர்களை போல் இப்படத்தில் நடித்த கோழி குஞ்சு, கழுதை, குதிரை, பருந்து என ஆரம்பித்து, தனுஷின் தங்கையாக வரும் கதாபாத்திரம் வரை படத்தின் ஒவ்வொரு காட்சியும் பல கதைகளை கூறுகிறது.

பரியேறும் பெருமாள் படத்திற்கு பின், மாரி செல்வராஜ் என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்து ரசிகர்களுக்கு, மிகப்பெரிய விருந்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

சந்தோஷ் நாராயணனின் இசை, படத்தின் பாதி வெற்றி. ஒளிப்பதிவின் மூலம் தேனி ஈஸ்வர் மிரட்டியுள்ளார். மீண்டும் தனது தயாரிப்பில் ஓர் சிறந்த படைப்பை தந்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு.

இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்துக்கொண்ட கதைக்களம், மாஸ்டர் பீஸ். திரைக்கதை வெற்றிக்கு வழி காட்டியுள்ளது.

க்ளாப்ஸ்

தனுஷ், லால், உள்ளிட்ட அனைவரின் நடிப்பு.

மாரி செல்வராஜின் கதை, திரைக்கதை.

ஒளிப்பதிவு, இசை.

பல்ப்ஸ்

படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், அது பெரிதாக குறைபோல் தெரியவில்லை.

மொத்தத்தில் மாரி செல்வராஜின் மாஸ்டர் பீஸ் கர்ணன்.