மனநோய் - மொழிபெயர்ப்பு,கவிதை

.

தென்கொரியாவில் 1953 பிறந்த Yi Yŏn-ju வின் படைப்புகள் அந்நாட்டு பெண்கவிஞர்களின் படைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பெரும்பாலான கவிதைகள் புறநகர்ப்பெண்களின் நிலையை பேசும் படைப்பாகவும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாகவும் அமைந்துள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘A Night Market where there are Prostitutes’ 1991ல் வெளியானது. இரண்டாம் தொகுப்பான ‘Juda, a Lamb of Redemption’ 1993ல் இவரது தற்கொலைக்கு பிறகு வெளியானது. இவர் பல கலைகளில் தேர்ந்தவராக இருந்தார். இலக்கிய வட்டங்களில் மட்டுமல்லாது ஓவியர்கள், பாடகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டார்.
மனநோய்

‘நிச்சயமாய் நான் எதுவுமே செய்யவில்லை’
என ஒரு பெண்மணி விம்மியழுதாள்

‘தொழிற்சாலையின் அருகிலும் செல்லவில்லை
ஒருமுறை கூட பேரணியில் பங்கேற்கவில்லை’
என கதறினாள்

‘யார்உ ஏன் தீக்குளிந்து இறந்தார் என்றோ
கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்தார் என்றோ
அறிந்துக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை’
என தலைமுடியை விரித்து புலம்பியழுதாள்

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் - கானா பிரபா

.



பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிரிவுத் துயரை "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" (தங்க மீன்கள்), "நினைத்து நினைத்துப் பார்த்தால் (7ஜி ரெயின்போ காலனி) என்றும் அவர் எழுதிய பாடல்களை நண்பர்கள் நினைத்து துயருறும் போது எனக்கோ கடந்த இரண்டு நாட்களாக மனதின் ஓரத்தில் இருந்து "பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்" என்ற பாடலே ஒலித்து அவர் நினைப்பையெழுப்பிக் கொண்டிருக்கிறது.

அது "சத்தம் போடாதே" படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைத்து நேகா பேசின் பாடிய பாட்டு.

யுவன் ஷங்கர் ராஜா இசைத்த மெல்லிசை கொண்ட பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவை சோகப் பாடல் மட்டுமன்றி சந்தோஷப் பரிமாறலாக இருந்தாலும் கூட மெல்லிய சோகம் இழையோடுவது போல உணர்வேன். இன்னும் சொல்லப் போனால் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் இந்த மாதிரி மென் சோகம் கலந்த பாடல்களைக் கொடுப்பதில் யுவனைத் தாண்டி யாரையும் நான் சிந்தித்ததில்லை. அவருக்குக் கூடத் தனிப்பட்ட ரீதியில் இம்மாதிரிப் பாடல்கள் துள்ளிசையை விட ஆத்ம லாபம் பொருந்தியதாக உணரக் கூடும்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் சங்கீத கச்சேரி 28/08/2016


விபரங்களை கீழே பார்க்கவும்

வலியே மருந்தாகும்போது... - சிந்து எஸ்

.

ஒராண்டுக்கு முன்னால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த என்னுடைய தந்தையைப் பார்த்தபோது, வலியாலும் வேதனையாலும் படுக்கையில் புலம்பிக்கொண்டும் புரண்டுகொண்டும் இருந்தார். அவருடைய அரற்றல் என் காதுக்கு எட்டாத தொலைவுக்கு ஓடிவிட வேண்டும் என்றே விரும்பினேன்.

84 வயதான அவர் எனக்கு உற்ற நண்பர். கையிலும் உடலின் வேறு பகுதியிலும் ஊசியாலும் ரப்பர் குழாய்களாலும் செருகப்பட்டு, தாள முடியாத வேதனையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரால் டாக்டர்களையோ செவிலியர்களையோ எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. ரப்பர் குழாய்களைப் பிய்த்துப் போடுகிறார் என்பதற்காக ஒரு கையைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள்.

மெல்பனில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 200 ஆவது ஆண்டு நிறைவு விழா

.

பழைய  மாணவர்  சங்கத்தின்    ஏற்பாட்டில்   பல்சுவை நிகழ்ச்சிகள்
இலங்கையில்  நீண்ட கால  வரலாற்றைக்கொண்ட  தெல்லிப்பழை யூனியன்   கல்லூரிக்கு  தற்பொழுது  200 வயது.   அதனை  முன்னிட்டு உலகில்  பல  நாடுகளில்  வதியும்  கல்லூரியின்  பழைய  மாணவர்கள் ஒன்றுகூடி   தமது  கல்வி  வளர்ச்சிக்கு  வித்திட்ட  கல்விச்சாலைக்கு நன்றி   தெரிவிக்கும்  எண்ணத்துடனும்  அங்கு  பணியாற்றிய அதிபர்கள்,  ஆசிரியர்களின்  தன்னலம்  கருதாத  சேவை மனப்பான்மையை    நினைவு கூர்வதற்காகவும்  பழைய  மாணவர்  ஒன்றுகூடல்களையும்   பல்வேறு  நிகழ்ச்சிகளையும்  ஒழுங்கு செய்துவருகின்றனர்.
அந்த  வரிசையில்  அவுஸ்திரேலியாவில்  மெல்பன்  நகரில்  வதியும் யூனியன்    கல்லூரியின்  பழைய  மாணவர்கள்  ஒன்றுகூடும்  200  ஆவது   ஆண்டு  நிறைவு  விழா எதிர்வரும்  28  ஆம்  திகதி ஞாயிற்றுக்கிழமை   மாலை   4   மணிக்கு   பல்சுவை   கதம்ப நிகழ்ச்சிகளை   ஒழுங்கு  செய்துள்ளனர்.


பேர்த் பால முருகன் கோவில் 24/08/2016












விபரங்களை கீழே பார்க்கவும்

இலங்கைச் செய்திகள்

.
யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் (காணொளி இணைப்பு)

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 இலங்கையர்கள் கைது

நாமலுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியல்

தயா மாஸ்டருக்கு பிணை.!

வவுனியாவுக்கான பொருளாதார மத்திய நிலையம்  தேக்கவத்தையில் 

 33 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை

குவின்ஸ்லாந்து - ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016

.
மறைந்த   படைப்பாளிகள் -  கலைஞர்கள் ஒளிப்படக்காட்சியுடன்   ஆறு  கலை ,  இலக்கிய அரங்குகளில்  27-08-2016  ஆம்  திகதி   ஒன்றுகூடல்
                                                                    முருகபூபதி
( துணைத்தலைவர் - அவுஸ்திரேலியா  தமிழ்    இலக்கிய கலைச்சங்கம்)

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  வருடாந்த  தமிழ் எழுத்தாளர் விழா  இம்முறை  முதல்  தடவையாக  குவின்ஸ்லாந்து மாநிலத்தில்   கோல்ட்கோஸ்டில்  நடைபெறவுள்ளது.
                          ஏற்கனவே  கடந்த  2001  ஆம்   ஆண்டு  முதல்  மெல்பன், சிட்னி,  கன்பரா ஆகிய  நகரங்களில்  வருடந்தோறும்  நடைபெற்ற  தமிழ் எழுத்தாளர்  விழா  இந்த  ஆண்டு  கோல்ட்கோஸ்டில்  எதிர்வரும் 27-08-2016   ஆம்  திகதி  சனிக்கிழமை  மாலை  3.00  மணி  தொடக்கம்   நடைபெறும்.
நடைபெறும்  இடம்:  Auditorium,   Helensvale  Library,  Helensvale  Plaza  -   Helensvale 4212, Gold coast, QLD


கவிஞர் வைதீஸ்வரனுக்கு சிற்பி இலக்கிய விருது

.
அவுஸ்ரேலிய கவிஞா வைத்தீஸ்வரனை தமிழ்முரசு வாழ்த்துகிறது .

என்.ஜி.எம்., கல்லுாரியில், சிற்பி அறக்கட்டளை சார்பில், இலக்கிய விருது வழங்கும் விழா நடந்தது. கவிஞர் வைதீஸ்வரனுக்கு, 2016ம் ஆண்டுக்கான இலக்கிய விருது; இசையறிஞர் மம்மதுவுக்கு, மா.சுப்பிரமணியம் விருது வழங்கப்பட்டது. விருதுகளை கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் வழங்கினார். சிற்பி பாலசுப்ரமணியத்தின், 'கட்டுரை களஞ்சியம்' நுால் வெளியிடப்பட்டது.

விழாவில், மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், ''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வல்லரசு கனவு, விரைவில் நனவாகும். படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த கட்டத்துக்கு, தமிழ் மொழியை கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.
கவிஞர் வைதீஸ்வரன் பேசுகையில், ''கவிஞனின், கவிதைகள் தான் அதிகம் பேச வேண்டும். இலக்கியத்தில், அரசியல் கூடவே கூடாது,'' என்றார்.

தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம், சாகித்ய அகாடமி விருதாளர் செல்லகணபதி, நன்னெறிக்கழகம் தலைவர் இயகோகா சுப்ரமணியம், முனைவர் சேதுபதி,
கல்லுாரி முதல்வர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Nantri dinamalar.com

சிட்னி சைவ மன்றம் இராப்போசன விருந்து 28/08/2016



தெய்வமே தாயாவாள் ! எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...

.

         
       
          பூமியில் பிறந்தமுதல் பூமிக்குள் போகும்வரை
                தான்பெற்ற பிள்ளைக்காய் தனையிழப்பாள் தாயாவாள்
        சேயதனின் வாழ்வினுக்காய் செலுத்திடுவாள் தன்னலத்தை
                பூதலத்தில் தெய்வமாய் பொலிந்திடுவாள் தாயாவாள்
         ஆரென்ன சொன்னாலும் அதைமனதில் ஏற்றாமல்
                 பேரெடுத்துப் பிள்ளைவாழ பெரும்பொறுப்பை தான்சுமந்து
          ஊருணரச் செய்துநிற்பாள் உண்மையிலே தாயாவாள் !

           நிலத்திலே வந்தபிள்ளை மலத்திலே கிடந்தாலும்
                  மனத்திலே மகிழ்ச்சியுடன் அதைச்சுத்த மாக்கிநின்று
           கலத்திலே சோறிருந்தும் கவனமதில் கொள்ளாமல்
                 அணைத்துமே மகிழ்ந்திடுவாள் அருமைமிகு தாயாவாள் !

உலகச் செய்திகள்


4 இலட்ச அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய் கப்பல் கடத்தல்

காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

 உயிருக்காக போராடும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் ; ஒலிம்பிக்கிற்கு சென்றவேளை சம்பவம்

துருக்கியில் கார் குண்டு தாக்குதல் ; 3 பேர் பலி ; 100 பேர் காயம்

துருக்கியில் இரட்டை கார் குண்டு தாக்குதல் ; 14 பேர் பலி

இரோமை தூற்றுவது என்ன மாதிரியான மனநிலை...?

.

அது 2008 ம் ஆண்டின் பிற்பகுதி. தமிழகமே ஒரு உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தது. 'ஈழத்தில் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இருக்கிறோமே...' என்ற குற்ற உணர்ச்சியில் உழன்று தவித்தது.  அந்த சமயத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஜனவரி 29, 2009 ல்,  கு. முத்துக்குமார் என்னும் 28 வயது இளைஞன், ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்தியா துணை போவதாக கண்டித்து, சென்னை சாஸ்திரி பவன் அருகே தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தன்னை மாய்த்துக் கொள்வதற்கு முன்,  தான் எழுதி இருந்த ஒரு நீண்ட கடிதத்தை, அங்கு கூடியிருந்த மக்களுக்கு நிதானமாக விநியோகித்து இருந்தார். அந்த கடிதத்தில், தன் பிணத்தை ஒரு துருப்புச் சீட்டாக ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு பயன்படுத்தச் சொல்லி இருந்தார்.

பைனாப்பிள் கஸ்டட் வித் அகர் அகர் - Jaleela Kamal

.

கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .
இதே கொஞ்சம் இன்னும் ரிச்சாக பழங்கள் சேர்த்து கஸ்டடாக செய்து அதில் அகர் அகரை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.
குழந்தைகளுக்கும் கொண்டாட்டாம் தான்.
இந்த கோடை வெயிலுக்கு சாப்பாட்டிற்கு பதிலாக கூட இதை இரண்டு கப் சாப்பிடலாம். நல்ல பில்லிங்காக இருக்கும்.


தேவையான‌வை

என் டைரியிலிருந்து.... சில குறிப்புகள்..! "Dr.Subashini"

.
நேற்று மாலை   ஜோக்கர் தமிழ்த்திரைப்படம் பார்த்தேன். திரைப்படமா, நிஜ நிகழ்வா என பிரித்தரியமுடியாத படி இந்தத் திரைப்படம் இருக்கின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்பது அத்தியாவசியமான ஒன்று. இதற்கு மக்கள் போராட வேண்டியிருக்கின்றதே. அந்தப் போராட்டத்தைக் கூட சாதகமாக்கிக் கொண்டு அதில் சுய லாபம் பார்க்கும் கூட்டமாக சிலர் இருக்கின்றனரே, என்ற வேதனையை இந்தத் திரைப்படம் என்னுள்ளே ஏற்ப்படுத்தியது.

எளிய மக்கள் வாழவும் முடியாது சாகவும் முடியாது என்பது பரிதாபமானது. கழிப்பறை பல வீடுகளில் இன்றளவும் கூட இல்லை என ஒரு நிலை இருப்பது இதுவரை ஆண்டு வந்த அரசுகள் பொதுமக்களுக்கான தம் கடமைகளைச் சரியாக ஆற்றவில்லை என்பதற்கான அறிகுறிதான். சுதந்திர இந்தியாவில் இன்னமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் கழிப்பறை வசதி வீட்டில் இல்லாது இருக்கின்றார்கள் எனும் போது ஆடம்பரமான அரச நிகழ்வுகளுக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க மனம் வருகின்றதே என்பது வருந்த வைக்கும் ஒரு விசயம் என்பதை புறந்தள்ளி விட்டுப் போக இயலவில்லை.

இவ்வகை போராட்டங்களில் பொது மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் தான் இந்தப் பிரச்சனைகள் ஒரு பிரச்சனை என்றே பார்க்கப்படும். ஆக, பொதுமக்கள் இத்தகைய சமூகப் போராட்டங்களில் இணைந்து கொண்டு அவற்றை முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.

தமிழ்த்திரைப்படம் கனவுலக தொழிற்சாலை அல்ல. நிஜத்தையும் காட்டும் படங்கள் எடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்தத் திரைப்படம் இருக்கின்றது. படத்தின் இயக்குனருக்கும் படத்திற்ககா உழைத்த அனைவருக்கும் என் பாராட்டுதல்களோடு இத்தகைய விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனைக்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-சுபா

ரசிகமணி எனும் நிலா ரசிகர்! - தி.சுபாஷிணி, எழுத்தாளர்.

.
மரணத் தறுவாயிலும் தமிழ் மொழி மீதான காதலுடன் இருந்தார் டி.கே.சி.

அது 1903-ம் ஆண்டு. மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனரும், வள்ளலும், தமிழறிஞருமான ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவருக்கு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தமிழ்ப் பேரவை சார்பில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள், பிரபுக்கள், புலவர் பெருமக்கள், பிரமுகர்கள் என அம்மண்டபம் நிறைந்திருந்தது. உ.வே.சாமிநாதய்யர், வெள்ளக்கால் வி.பி.சுப்பிரமணிய முதலியார் ஆகியோரோடு இணைந்து வந்து, விழா மேடையில் பாண்டித்துரை தேவர் அமர, வரவேற்புரை நிகழ்த்தத் தொடங்கினான் கல்லூரியின் தமிழ்ப் பேரவைத் தலைவராக இருந்த அந்த மாணவன்.

தமிழ் சினிமா ஜோக்கர்

.
ஜோக்கர் - Cineulagam
தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வருவது மிகவும் அரிது. அதிலும் நாட்டிற்கு அவசியமான கருத்துக்களுடன் வரும் படம் அரிதிலும் அரிது, கடந்த முறை குக்கூ என்ற தரமான கதையை கையில் எடுத்த இந்த ராஜு முருகன் இந்த முறை நாம் வாழ்கிறோம், என தெரியாமல் நாட்டிற்காக வாழ்பவர்களை ஜோக்கர், கிறுக்கன் என கூறுபவர்களுக்கு சாட்டையடியாக வெளிவந்துள்ள படம் தான் ஜோக்கர்.

கதைக்களம்

ஒருவனின் ஏழ்மையை அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதே இப்படத்தின் ஒன் லைன், மன்னர் மன்னர் (குரு சோமசுந்தரம்) தன்னை ஜனாதிபதியாகவே நினைத்துக்கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்.
இவரை ஊரே கிண்டலாக தான் பார்க்கிறது, தன் சொந்த மனைவியை கருணை கொலை செய்ய வேண்டும் என மனு கொடுக்கிறார் மன்னர் மன்னர், ஏன் இவர் இப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார், இவருக்கு என்ன தான் வேண்டும். எதற்காக இவருடன் சேர்ந்து ஒரு வயதானவர் மற்றும் இளம் பெண் போராடுகிறார்கள் என்பதை மன்னர் மன்னர் வாயிலாக ராஜுமுருகன் கூறியுள்ளார்.

படத்தை பற்றிய அலசல்:

தமிழ் சினிமாவில் மாதம் 20 படங்கள் வருகிறது, இதில் ஒரு சில படங்களே காலத்தை கடந்தும் மனதில் நிற்கும், அப்படியான ஒரு படம் தான் இந்த ஜோக்கர், நாட்டில் நடக்கும் அனைத்து கேலிகூத்துக்களையும் மிகவும் தைரியமாக ராஜுமுருகன் கூறியுள்ளார்.
மன்னர் மன்னராக குரு சோமசுந்தரம், இதுதான் நடிப்பு என கூறும் அளவிற்கு அனைத்து விதமான காட்சிகளிலும் அசத்துகிறார், அவருடன் வரும் ஒரு வயதானவர் எதற்கு எடுத்தாலும் பெட்டி கெஸ் போடுவார், இவர்களுடன் வரும் இளம்பெண் அனைத்தையும் பேஸ்புக்கில் போட்டு உடனுக்குடன் ரெஸ்பான்ஸ் சொல்வது என கலகலப்பாக படம் தொடங்குகிறது.
மன்னர் மன்னர் தன்னை ஒரு ஜனாதிபதி என்று கூறும் இடத்தில் ஊர் மக்கள் மட்டுமில்லை ஆடியன்ஸும் கூட சேர்ந்து சிரிப்பார்கள், ஆனால், நாம் சிரிக்கும் ஒரு விஷயம் தான் மிகப்பெரும் அரசியல் என்பதை முகத்தில் அறைந்தார் போல் கூறப்பட்டது.
அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இன்னும் பெண்களுக்கு ஒரு கழிவறை கூட இல்லை, கழிப்பிடம் இருக்கும் வீட்டிற்கு தான் மருமகளாவேன் என வைராக்கியத்துடன் இருக்கும் பெண் என பல உணர்வுகளை யதார்த்தமாக காட்டியுள்ளனர், ஒரு கழிப்பிடத்தில் கூட இத்தனை ஊழல் செய்ய முடியும் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.
படத்தின் வசனம் கண்டிப்பாக எழுந்து நின்று கைத்தட்டலாம், இப்படியெல்லாம் வசனங்கள் வைக்க உண்மையாகவே தனி தைரியம் வேண்டும், அதிலும் இந்த காலத்தில், ஆளுங்கட்சி, முதல் எதிர்க்கட்சி வரை அனைவரையும் ஒரு ரைடு விட்டுள்ளார் ராஜு முருகன்.
இதில் குறிப்பாக இப்தார் விருந்தில் கலந்துக்கொண்டதால் தான் என்னை போலிஸ் பிடித்துவிட்டது, இது எல்லாம் பிரதமர் வேலை என குரு சொல்லும் இடத்தில் 1000 அரசியல் மறைந்திருக்கின்றது. பேஸ்புக் போராளிகள் சிலர் நம்மை கிண்டல் செய்கிறார்கள், அவர்களை ப்ளாக் செய்யட்டுமா? என ஒரு பெண் கேட்க, அது அவர்கள் கருத்துரிமை நாம் தலையிடக்கூடாது என மன்னர் மன்னர் கூறும் இடம் அப்லாஸ் அள்ளுகின்றது.
க்ளாப்ஸ்
ராஜு முருகன் எடுத்த கதைக்களம், அதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள், இவற்றை எல்லாம் விட வசனம், ஒரு கக்கூஸை வைத்துக்கொண்டு ஊழல் செய்த உங்களிடம் நான் நியாத்தை எதிர்ப்பார்த்தது என் தப்பு தான், நாட்டுக்காக போராடுகிற நாங்க ஜோக்கராயா? எதையும் செய்யாம ஆட்டு மந்தை மாதிரி ஓட்டை விற்று வாழும் நீங்க தான்யா ஜோக்கர்’ போன்ற வசனங்கள் சபாஷ்.
ஷான் ரோல்டனின் இசையில் என்னங்க சார் உங்க சட்டம் பாடல் காட்சிகளுடன் பார்க்கும் போது இன்னும் ரசிக்க வைக்கின்றது, பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார், செழியனின் ஒளிப்பதிவு தர்மபுரி கிராமப்பகுதிகளின் அழகையும், அழுக்கையும் படம் பிடித்து காட்டியுள்ளது.
நம்ம வீட்டிற்கு ஒரு கழிப்பிடம் வராதா என மன்னர் மன்னரின் மனைவி ஏங்கும் காட்சி, வித்தியாச வித்தியாசமாக போராடும் மன்னர் மன்னர், கிளைமேக்ஸில் உயர்நீதிமன்றத்திலேயே தைரியமாக பேசும் காட்சிகள் என அனைத்தும் செம்ம.

பல்ப்ஸ்

மெதுவாக நகரும் காட்சியமைப்புக்கள்.
மொத்தத்தில் படம் பார்த்து விட்டு வெளியே வருபவர்களுக்கு இந்த சமூகத்தில் நாம் எத்தனை பெரிய ஜோக்கராக இருக்கிறோம் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
ரேட்டிங்- 3.5/5
நன்றி cineulagam
















ஜோக்கர்