காதல்! - ராம்ப்ரசாத், சென்னை

 .

நேற்று மாலையே!

முடித்து வைத்த‌!
வீட்டுப்பாடங்களை!
சுக்குநூறாய் கிழித்தெரிந்துவிட்டு!
வகுப்பறைவிட்டு வெளியேறுகிறேன்!
ஏற்கனவே வெளியேறிவிட்ட!
உன்னை!
தனிமையில் சந்திப்பதற்காக...!
!
எனக்கு மிகவும் பரிச்சயமான‌!
கல்லூரியில்,!
அதிகம் பரிச்சயமில்லாத‌!
உன்னுடன் பகிர்ந்துகொள்ள,!
மிகவும் பரிச்சயமான‌!
என் தாய்மொழியிலோர்!
கவிதை கிட்டாவிட்டாலும்!
குறைந்தபட்சம்!
நான்கைந்து வார்த்தைகளாவது!
கிட்டியிருக்கலாம்...!
!
தயங்கி வேர்த்தோதுங்கிய‌!
சில மணித்துளிகளில்!
உன்னைச்சூழ்ந்துகொண்ட‌!
தோழிகளுடன் நீ!

கதைபல கதைப்பதைப்பார்த்து!
சற்றே தள்ளி நின்று!
நடத்திக்கொண்டிருந்தேன்!
மனதிற்க்குள் ஓர் விவாதம்!
'ரோஜாப்பூவுக்குப் பேச‌!
யார் கற்றுக்கொடுத்தது'

 ராம்ப்ரசாத், சென்னை

இசை நிகழ்ச்சி 09/03/2024 வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை பழைய மாணவிகள் சங்கம் வழங்கும்


படித்தோம் சொல்கின்றோம்: பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுதிய “ துப்பாக்கிக்கு மூளை இல்லை ! “ மரணத்துள் வாழ்வோரின் குரலை பிரதிபலிக்கும் கவிதைகள் ! ! முருகபூபதி

 .

“ துப்பாக்கி முனையில் இருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது.  அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம்.
யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்.   “ எனச் சொன்னார் சீனாவின் பெருந்தலைவர் மா ஓ சேதுங்.

 

எங்கள் ஈழத்து இலக்கிய உலகில் புகழ்பெற்ற கவிஞரும், விமர்சகரும் இலக்கிய பேராசிரியருமான எம். ஏ. நுஃமான் அவர்கள்,  “ துப்பாக்கிக்கு மூளை இல்லை  என்று சொல்லியிருக்கிறார்.

 

இக்கூற்றிலிருக்கும் உண்மையை நாம் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம்.

 

ருஷ்யா – உக்ரேய்ன் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன.

 

கடந்த  2023 ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் –  காஸா யுத்தம்  முடிவில்லாமல் தொடருகின்றது.

 

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு நிவாரண உதவிகள் வந்தவேளையில்,  அவ்விடத்திலும் இஸ்ரேல் படைகள் தங்கள் கைவரிசையை காண்பித்து அப்பாவி மனிதர்களின் உயிர்களை பறித்திருந்த தருணத்தில், பேராசிரியர் நுஃமானின் துப்பாக்கிக்கு மூளை இல்லை என்ற 70 பக்கங்கள் கொண்டிருக்கும் இச்சிறிய நூல் வீரியம் மிக்கதாகவும் அறச்சீற்றம் கொண்டதாகவும்  அமைந்துள்ளது.

 

கடுகு சிறிதானாலும் காரம் பெரிதல்லவா..?

 

1977 – 2010 காலப்பகுதியில் நுஃமான் எழுதியிருக்கும் சமூக, அரசியல் முக்கியத்துவம் மிக்க சில கவிதைகளை உள்ளடக்கியிருக்கும் இந்நூலை  

தமிழ்நாடு கலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 

2010 இற்குப்பின்னரும் நுஃமான் பல கவிதைகளை எழுதியிருப்பவர்.

 

அவர் அண்மையில்,  இஸ்ரேல் பிரதமரின் கூற்றுக்கு எதிர்வினையாக எழுதியிருந்த ஒரு பலஸ்தீனக் குரல்  என்ற  கவிதையும் சமூக வலைத்தளங்களில் பிரசித்தம் பெற்றிருந்தது.

 

இலங்கையின் முன்னைய அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கும்  அவரது அரசுக்கும் எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டம் , காலிமுகத்திடலில் நடந்தவேளையிலும் நுஃமானின் புத்தரின் படுகொலை  ( 1981 ஆம் ஆண்டில் எழுதியது  ) என்ற பிரசித்திபெற்ற கவிதையும் மும்மொழியிலும் வாசிக்கப்பட்டது.


ஆயிரம் ருபாய் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 .

இன்றைய பண மதிப்பின்படி ஆயிரம் ருபாய் என்பது சாதாரண பணமாகத் தெரியலாம். ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் ரூபாய் என்பது பெறுமதியான பணமாகும். இதனைக் கொண்டு ஒரு கல்யாணத்தையே அன்று நடத்தி விடலாம். அப்படிப் பட்ட ஆயிரம் ரூபாய் தெருவில் ஆடிப் பாடித் திரியும் ஒரு சேரி வாழ் பெண்ணிடம் கிடைத்தால் என்ன நடக்கும், என்ன செய்யலாம் என்பதை சொல்ல முற்பட்டு உருவாக்கிய படம்தான் ஆயிரம் ருபாய்!

வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முனையும் சந்தானம் ஒரு குழந்தையை விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியவனாகிறான். அதனால் அவனது தற்கொலை செய்யும் எண்ணம் அகலுகிறது. அதே சமயம் வள்ளி என்ற நாட்டியக்காரியின் அறிமுகம் ஏற்படுகிறது. ஆனாலும் அவள் ஒரு நாட்டியக்காரி என்பதால் அவளது அன்பையும் காதலையும் தவிர்த்து வெளியேறுகிறான். பொன்னி என்ற சேரிப் பெண்ணின் அறிமுகம் அடுத்து அவனுக்கு கிடைக்கிறது. அவளும் தெருவில் ஆடிப் பாடுபவள்தான். ஆனாலும் அவளின் காதல் அவனுக்கு இனிக்கிறது. அந்த சேரிப் பெண்ணுக்கு எதிர்பாராத விதத்தில் தெருவில் ஆயிரம் ருபாய் கிடைக்கிறது. அந்த பணம் அவள் வாழ்வில் ஏற்றத்தை தரும் என்று எதிர்பார்த்தால் , அவள் வாழ்வையே புரட்டிப் போட்டு விடுகிறது அந்த ரூபாய் நோட்டு. அத்துடன் படத்தின் கதைக்கும் வைக்கிறது வேட்டு !

படத்தில் எல்லோரையும் கவருபவர் சாவித்திரிதான் . ஆனாக்க அந்த மடம் ஆலாட்டி சந்தை மடம் பாடலுடன் அவர் அறிமுகமாவதே ஜோர்தான். நடிப்பில் என்ன ஒரு அலட்சியம், தெனாவெட்டு, குத்தல் பேச்சு என்று பாத்திரத்துக்கு மெருகூட்டி விட்டார் அவர். அடக்கமாக , குடும்பப் பெண்ணாக மட்டும் தான் அவரால் நடிக்க முடியும் என்ற என்ற எண்ணத்தை இந்தப் படத்தின் மூலம் மாற்றி விட்டார் சாவித்திரி. இன்னும் சொல்லப் போனால் படத்தையே தாங்கி நிற்பவர் அவர்தான்.

மகாசிவராத்திரியின் மகத்துவம் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 .

               மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
           மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
               மெல்பேண் .... அவுஸ்திரேலியா



மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் " என்று நம்பிக்கை ஊட்டினார் ஞானசம்பந்தப் பெருமான்.அவரால் அப்பரே என்று அழைக்கப்பட்டவர்,  " நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா "  என்று அழைத்து  " கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் - நற்றுணையாவது நமச் சிவாயவே " என்று உபதேசம் செய்தார்.அவர்களின் பின்னர் வந்தவர்  " மீளா அடிமை உமக்கே ஆளாய் " என்று இறைவனிடம் இயம்பி நிற்கின்றார். " ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி - உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரியும் செல்வமாகிய சிவனை " , " நமச்சிவாய வாழ்கநாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க " என்று பணிந்து நின்று அதன் வழியில் எம்மையும் ஆற்றுப்படுத்துவராக மணி வாசகப் பெருமான் வந்து நிற்கிறார். இவர்கள் யாவருமே இறை நினைப்பினை மனமிருத்தி வாழ்நாளெல் லாம் வாழ்ந்தவர்கள். இவர்கள் சமயநெறியின் வழியில் கால்பதித்து நின்றவர்கள் எனலாம்.   இவர்களை முன்னிறுத்தியே " நால்வர் வழியில் நடப்பது நன்று " என்றும் ,  " நாலு பேர் சொல்லுவதைக் கேள் " என்றும் மரபாக வந்திருக்குமோ என்பதும் கருத்திருத்த வேண்டியதே.இவர்களின் சிந்தனைசெயற்பாடு , வாழ் 
வியல் முறைகள் அத்தனையுமே கோவிலாகவே இருந்திருக்கிறது என்பதுதான் முக்கியமா கும். கோவிலை மையமாகக் கொண்ட இவர்களின் செயற்பாடுகளிற் கிடைத்த அனுபவங்கள் எங்கள் சமயநெறியில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. முழுமுதற் கடவுளாய் எம்பிரான் சிவனையே இவர்கள் யாவரும் பணிந்து போற்றி தங்களின் மனத்தைப் பக்தியால் பிணைத்து உருக்கமாய் பல தெய்வத் திருமுறைகளாக ஆக்கி எமக்கெல்லாம் அளித்திருக்கிறார்கள். அவர்களின் அகத்தில் அமர்ந்திட்ட அந்த ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ் சோதியான சிவனைக் குறித்து பல விரதங்கள் அனுடிக்கப்பட்டு வருவதை யாவரும் அறி வோம்.அப்படி அமையும் அந்த அருட் சோதியான சிவனின் விரதங்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியதா கவும்ஆன்மீக. அறிவியல் கருத்துகள் நிறைந்ததாகவும் அமைகின்ற விரதந்தான் வருடந் தோறும் வருகி ன்ற " மகா சிவராத்திரி " விரதமாகும்.


  மகிமை வாய்ந்த சிவராத்திரி என்பது  ஐந்துவகையினதாக இருக்கிறது  என்பது நோக்கத்தக்கத்தாகும். திங்கட்கிழமையோடு இணைந்து வருவது " யோக சிவராத்திரி. வருடத்தின் பனிரெண்டு மாதங்களில் வரு கின்ற தேய்பிறைவளர் பிறைகளில் வரும் சதிர்த்தசி திதியில் வருகின்ற இருபத்து நான்கு நாட்களை யும் " யோக சிவராத்திரி " என்னும் பெயரினால் அழைக்கின்றனர் . தை மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி பதிமூன்று நாட்கள் தினமும் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு பதினான்காம் நாள் வரு கின்ற சதிர்த்தசி திதியன்று முறையாக விரதம் இருப்பதுதான் " பட்ச சிவராத்திரி " என்று அழைக்கப்படு கிறது,சிவராத்திரி என்பது பெரும்பாலும் அமாவாசை அல்லது சதிர்த்தசி திதியை அண்டியே வரும். ஆனால் " மாத சிவராத் திரி " மாதத்தின் மற்றைய திதிகளிலும் வருகிறது என்பது நோக்க த்தக்கதாகும். இப்படிச் சிவராத்திரிகள் இடம் பெற்றாலும் மாசி மாதத்து தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வருகின்ற சிவராத்திரியே " மகா சிவரா த்திரி " என்று ஏற்றிப் போற்றி அனுட்டிக்கப்படுகிறது. ஐந்து சிவராத்திரிகள் என்னும் நிலையில் அவற்றுள் ஒன்றான சிவராத்திரிக்கு மட்டும் " மகா " என்று அடைமொழி கொடுத்து அதனை உயர்வாக எண்ணுவது ஏன் என் னும் எண்ணம் எம்முள் எழுகிறதல்லவா அப்படி அந்த நாளில் சிவராத் திரி அமைவதற்கு ஆன் மீகம் முக்கியமா அல்லது அதனுடன் அறிவியல் முக்கியத்துவப்படுத்த ப்படுகிறதா என்ன்னும் சிந்தனைகள் எழுகின்றன அல்லவா !

மெல்பனில் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் இலக்கியச் சந்திப்பு 10.03.24

 .

தமிழ்நாட்டிலிருந்து  அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப்பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre  மண்டபத்தில்                   

                        (  1, Karobran Drive, Vermont South, Vic 3133 )

நடைபெறும்.

எழுத்தாளர் பெருமாள் முருகன்,

  அகராதியியல், பதிப்பியல் ஆகிய

 துறைகளிலும்  மானுடவியல் ஆய்வுகள், வட்டார வழக்கு ஆராய்ச்சி, நாட்டார் இலக்கிய ஆய்வு முதலானவற்றிலும்  பங்காற்றியுள்ளார்.

பெருமாள் முருகனின் ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில்

 மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும்

மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும்

 வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி

 உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன்  நாவல்

 மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

விளக்கு விருது  - கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது -  கதா விருது -  கனடா  தமிழ் இலக்கியத் தோட்டத்தின்  விருது -  அமுதன் அடிகள் விருது -  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்பட பல இலக்கிய விருதுகள் பெற்றிருக்கும் பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு கலை, இலக்கிய ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றது,

     அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

atlas25012016@gmail.com    --        https://atlaswriters.wordpress.com/

 

சாந்தனின் அன்னை - கவிதை - கவிஞர் த .நந்திவர்மன்

 .



மகளிர் தினம் கவிதை - பெண்ணே... சொல்லமாட்டேன் -மெல்போர்ன் அறவேந்தன்

 .



துர்க்கை அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி 08.03.2024

 .

Maha Shivaratri is a yearly celebration honoring Lord Shiva. Keeping an all-night vigil and praying is part of the festival, which is symbolized by Shiva as "overcoming darkness and ignorance" in one's life and the world.

In Sydney Durga Temple, we have 4 kala poojas arranged. Arrangements are made for devotees to do milk abhishekam with their own hands. Additionally, Thirumurai parayanam cultural programs are arranged throughout the night.



“கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்” இலக்கியவெளி நடத்திய இணையவழிக் கலந்துரையாடல்

.


 

போர் தின்ற வன்னிமண்ணின் ஆத்மாவை மும்மொழிகளில் எழுதியிருக்கும் நிலக்கிளி அ. பாலமனோகரன் - முருகபூபதி

 .


அரைநூற்றாண்டுக்கு முன்னர், 1973 ஆம் ஆண்டு மே மாதம் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது அ. பாலமனோகரன் என்ற எழுத்தாளர் எழுதிய முதல் நாவல் நிலக்கிளி.  இந்நாவல் வௌியாகும் முன்னர் அவர் பல சிறுகதைகளை இலங்கை இதழ்களில் எழுதினார்.

ஆனால், நிலக்கிளி நாவல் இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தை பெற்றதையடுத்து,  இந்த இலக்கியப் படைப்பாளி நிலக்கிளி பாலமனோகரன் என்றே அழைக்கப்படலானார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு  கிராமத்தின் மண்வாசனை கமழ்ந்த இந்த நாவல், பின்னாளில் மேலும் சில பதிப்புகளைக்கண்டது.  அத்துடன் ஆங்கில மொழியிலும் வெளியானது.

டென்மார்க்கில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் நிலக்கிளி பாலமனோகரனின் எழுத்துக்களை அவரது முதல் நாவலிலும், அதன்பின்னர் வெளியான குமாரபுரம் நாவல் உட்பட சில சிறுகதைகளிலும் படித்திருந்தாலும், அவரை இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினை அவுஸ்திரேலியாவில்  1988 ஆம் ஆண்டில்  பல இரக்கமுள்ள அன்பர்களின் ஆதரவுடன்   ஆரம்பித்திருந்தேன்.  எனினும்,  2009 ஆம் ஆண்டு மே மாதம் அந்தப்போர் முடிவுக்கு வரும்வரையில் வடபுலத்திற்கு செல்ல முடியாதிருந்தது.



முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல மாணவர்களுக்கு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் ஊடாக உதவி வந்தோம்.  2011 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று  இக்கல்லூரிக்குச்சென்ற வேளையில் நிலக்கிளி பாலமனோகரனும், டென்மார்க்கிலிருந்து  தமது ஊருக்கு வருகை தந்திருந்தார்.  

கண்களுக்கு விருந்தாகும் நிகழ்வுகள் கலை நிகழ்ச்சிகளாகிவிட முடியுமா?

 

.

சென்ற இதழில் 'வெற்றிகரமாக 14வது ஆண்டில் வானவில்' என்று தலைப்பிட்டு தமிழில் வாசிப்புத்திறன் குறைந்து வருவது தொடர்பாக நாங்கள் எழுதிய குறிப்புகளை வாசித்த சிலர், இலங்கைத் தமிழர்களிடையேதான் வாசிப்புத்திறன் குறைந்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் புத்தகங்களின் எண்ணிக்கைகளையும், வருடாவருடம் (இவ்வருடம் ஜனவரி 5 முதல் 21ந் திகதி வரை நடந்தது) சென்னையில் நடக்கும் புத்தகக்கண்காட்சிக்கு வருகை தந்தவர்களையும் சுட்டிக்காட்டி, இலங்கைத் தமிழர்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வாசிப்பு மீதான அக்கறை என்பது சீராக உள்ளதாகவே அவர்கள் மேலும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்விக்கு வாசிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது. துறைசார்ந்த கல்விக்கு அப்பால், ஓய்வு நேரங்களில் வாசிப்பு என்பதை இயல்பாக்கியும் கொள்ளலாம். இவ்வாறான வாசிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கிற்கானது என்பதற்கும் அப்பால், அறிவுத்தேடல் என்பதும் அதனுள் அடங்கியுள்ளது. அத்தோடு அரசியல், சமூகம், பொருளாதாரம், விஞ்ஞானம், மெய்யியல், கலை, இலக்கியம் என வாசிப்பதற்கு பலதரப்பட்ட விடயங்கள் உள்ளன. அதாவது அவரவருக்கு ஆர்வமான துறைகளில், அவரவர் மொழிகளில் படிப்பதற்கு உலகில் நிறைய விடயங்கள் உள்ளன.
ஆனால் பொழுதுபோக்கு என்பதை மாத்திரம் முன்னிறுத்தி கண்களுக்கும் எண்ணங்களுக்கும் விருந்தாக முழுக்க, முழுக்க வியாபார நோக்குடன் தயாரிக்கப்படும் படைப்புகளுக்கும் நிகழ்சிகளுக்கும் பின்னாலேயே பெருந்திரளான மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இதனைத்தான் நாங்கள் கடந்த பெப்ரவரி 9ந் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் கண்டோம். ஏழு இலட்சத்திற்கும் குறைவாக மக்கள் வாழும் ஒரு நிலப்பரப்பில், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொழுபோக்கு நிகழ்ச்சியொன்றினை பார்க்க விழைந்ததை வெறுமனே அவரவர் சுதந்திரமென்று கடந்து போய்விட முடியாது.
யாழ் குடாநாட்டை பூர்வீகமாக் கொண்டு, கனடா நாட்டில் வாழும் ஒருவர் NOTHERN UNI என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகம் (அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காதவர்களுக்காக உருவாக்கப்பட்டது) ஒன்றினை யாழ்ப்பாணத்தில் நிறுவியுள்ளார். இப்பல்கலைக்கழகத்தின் நிதியுதவிக்காக (மாணவர்களிடம் கிட்டத்தட்ட வருடம் 6 இலட்சம் அறவிடப்படுகின்றது. 4 வருடப்படிப்புக்கு 24 இலட்சம். அதாவது பணம் படைத்தவர்கள் மாத்திரமே இங்கு கற்கலாம்) என அறிவிக்கப்பட்டு, சென்னை சினிமாத்துறை சார்ந்த பாடகர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் அரங்க அறிவிப்பாளர்களை வரவழைத்து, யாழ் முற்றவெளி திறந்தவெளி அரங்கில் நிகழ்ச்சியொன்று நடத்தப்பட்டது.