இலங்கைச் செய்திகள்


.
நியாயம் எப்போதாவது கிடைக்குமென்ற எந்தவொரு நம்பிக்கையுமின்றி வன்னி மக்கள்
Thursday, 11 August 2011 

 உலகில் மிகவும் செறிவான இராணுவமயமாக்கப்பட்ட வலயங்களில் ஒன்றில் யுத்தத்திற்குப் பின்னர் தற்போது உயிர்தப்பி வாழ்பவர்கள் நீதியை எப்போதாவது பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக எந்தவொரு நம்பிக்கையுமின்றி இருக்கின்றனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டங்கள் பொதுமக்களுக்கு மிகவும் கொடூரமான கதையைக் கொண்டதாக உள்ளன. பரந்தளவில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் நாட்டின் வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி கொழும்பு தொடர்ந்தும் நிராகரிப்பையே கடைப்பிடித்து வருகிறது.

துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாபெரும் மண்டபம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.

.
 Hall Opening Photos by Sothirajah
துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட  மண்டபம் சிட்னி வாழ் தமிழ் மக்களுக்காக  சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஓபன் பாராளுமன்ற உறுப்பினர் கொரவ பாபரா பெரி

அவர்களால் சம்பிதாயமாக திறந்து வைக்கப்பட்டது. சத்தியமூர்த்தி குழுவினரின் நாதஸ்வர இசையுடன் ஆரம்பித்த இந்த திறப்புவிழா நிகழ்வு பல கலை


நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்தது. துர்க்கை அம்மன் ஆலய சமய அறிவுப் போட்டி 2011 இற்கான பரிசளிப்பு விழாவும் இந்த புதிய மண்டபத்தின் மேடையில் இடம் பெற்றது.  5.45 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 10.30 மணிவரை இடம் பெற்றது.  மண்டபம் நிறை;த மக்கள் வருகை தந்திருந்தது. சிறப்பாக அமைந்திருந்தது.  தொடர்ந்து இந்த மண்டபம் சிட்னிவாழ் மக்களின் பாவனை;கு வழங்கப்படும் என்று குறிப்பட்டுள்ளார்கள் ஆலய நிர்வாகத்தினர்.

மரணம் இரைந்த தெருக்கள் - கவிதை - வித்யாசாகர்

.

கைமாற்றி கைமாற்றிக்
கொண்டுவந்த
அறிவுத் திரள்களின் பிதற்றலில்
எப்படியோ கொப்பளிக்கிறது ஞானம்;
அல்லது மரணம்!

தீக்குச்சி உரசி வீசும்
நேரத்திற்குள்
அணைந்துவிடுகின்றன
உயிர் விளக்குகள்;
அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ!!

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 4


.
                                                                                  பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

ஒருதலைக் காதல்


தங்களது மனதுக்குப் பிடித்த பெண்ணை எப்படியாவது அடைந்துவிடத் துடிக்கும் ஆண்களின் வாய்மொழிகளாகவும், அவற்றிற்கு மறுமொழிகளாகவும் அமைந்துள்ள பாடல்கள் சிலவற்றைக் இப்பகுதியில் காணலாம்.

வளமான மண்ணை மட்டுமல்ல, அழகான பெண்களையும் கொண்டது மட்டக்களப்பு நாடு. வீடுகள் எல்லாம் நெல் மூடைகள். வீட்டுக்கு வீடு கறவை மாடுகள். பச்சைப்பசேலென்ற காய்கறித் தோட்டங்கள். பால், தயிர், மீன், இறால், நண்டு... இப்படி பற்றாக்குறையில்லாத வளமான பிரதேசம் என்பதால் மக்களின் மனமெல்லாம் மகிழ்ந்திருந்தது. அதனால் அவர்களின் முகமெல்லாம் எப்போதும் மலர்ந்திருந்தது.

Aithra's Musical Night

.

வானவில் திட்டம்- வ.ந.கிரிதரன்

.
"நடேசனின்  வானவில் திட்டம் கட்டுரைக்கு பதிவு கிரிதரனின் பதிலும் அதற்கு நடேசனின் விளக்கமும் "
உங்களது திட்டம் நன்மையானது. நியாயமானது. பாராட்டப்பட வேண்டியது. அதே சமயம் போர் முடிந்து இரு வருடங்களைக் கடந்து விட்ட நிலையிலும், வட கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் படும் துயர்களையும், அனுபவித்த துயரகரமான அனுபவங்களையும் பற்றி அண்மையில் ‘இந்தியா டுடே’ மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தது பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். இன்றைய ஸ்ரீலங்கா அரசுடன் அதிகளவு தொடர்புகளை வைத்திருக்கும் உங்களைப் போன்ற செல்வாக்கு மிக்க தமிழர்கள் நீடித்த நிலையான சமாதானத்தின் அவசியத்தைப் பற்றியும், அத்தகைய சமாதானம் தமிழர்களுக்கு உரிய உரிமைகளையும் வழங்குவதன் மூலமும், இதுவரை தமிழர்கள் அனுபவித்த துயரங்களுக்கான அரசின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், நடைபெற்ற போர்க் குற்றங்களை சர்வதேச அனுசரணையுடன் சுயாதீன விசாரணையொன்றினை நடாத்துவதன் மூலமும்தான் ஏற்படுத்த முடியுமென அரசினை வற்புறுத்துவதன்மூலமும்தான் ஏற்படுமென நாம் கருதுகின்றோம். தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாதவிடத்து, மீண்டும் எழும் மோதல்களுக்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய நிலையொன்று ஏற்படுமானால் உங்களைப் போன்றவர்களின் இத்தகைய திட்டங்களும் பாதிக்கப்படுமென்பதையும் கருத்தில்கொள்ள வேண்டுமெனக் கருதுகின்றோம். இலங்கை அரசானது மிகவும் தந்திரமாகத் தமிழர்களை, தமிழ் அரசியல் அமைப்புகளை, தமிழ் விடுதலை அமைப்புகளை (முன்னாள்) தனது பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பிளவு படுத்திக்கொண்டு, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களை இராணுவமயப்படுத்தி, சிங்கள மயப்படுத்தி வருவதாகவே தெரிகின்றது. இத்தகைய அணுகுமுறை தொலை நோக்கில் அவர்கள் எதிர்பார்க்கும் பயனெதனையும் தரப்போவதில்லை என்பதே எமது கருத்து. உண்மையில் இதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்துமென்பதையே இது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. 

வானவில் திட்டம் -நோயல் நடேசன் -


.

தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன்.
எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்காலில்“ நீங்கள் நடத்திய பயிற்சியில் நான் எனது மகனை இழந்தேன். ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லை. இப்பொழுது இருக்கும் ஒரு குழந்தையையும் நான் இழக்கத் தயாரில்லை. நான் கடல்வழியாகத் தப்பி கடற்படையினரிடம் சரணடைவதை நீங்கள் தடுக்க முடியாது” என கூறிவிட்டு முள்ளிவாய்காலில் இருந்து அந்த போராளித் தாய் வள்ளத்தில் வெளியேறினாள்.

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - துருக்கிச் சிறுகதை


.
அஸீஸ் நேஸின்
ஆங்கில வழி தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்
அவர் இறுதியாகச் சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடு கடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம்மக்களுக்கும் அவர் புதியவர். அவர் சிறையிலிருந்தபோது அவருடைய மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார்.
அவரது எல்லா எதிர்பார்ப்புகளும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டுசெல்லப் போதுமான பணம்கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக்கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக்கொள்வாரா?
எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார். அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல, நகருக்கு வெளியேயும்கூட வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்த வேண்டியிருக்கும். செலுத்தத் தவறினால், வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வான் என்பதால் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு முகம்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனாலும் அவரது பழைய தட்டச்சுப் பொறி யையும் உடைந்து சிதறிப்போயுள்ள வீட்டுத் தளவாடங்கள் சிலவற்றையும் வைப்பதற்கு ஓரிடத்தைத் தேடிக்கொள்ளவே வேண்டும். மிருகக் காட்சிசாலைக்குப் புதிதாக வந்துள்ள விலங்கொன்றைப் பார்க்க வருவது போல், தன்னைப் பார்க்கவும் மக்கள் வருவார்களெனச் சந்தேகித்த அவர் அமைதியானதொரு வாழ்க்கை நடத்த எண்ணினார்.

கணேச விசர்ஜன் திருவிழா 4 – 9 – 2011

.

கணேச சதுர்த்தியை அடுத்து வரும் கணேசவிசர்ஜன் திருவிழா இவ்வருடம் செப்ரம்பர் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஹெலன்ஸ்பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் வழக்கம் போல் விமரிசையாகக் கொண்டாடப்படும்.

காலை 9 மணிக்கு விசேட ஹோமம் ஆரம்பமாகும். காலை 10.30 மணிக்கு ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு விசேட அபிஷேகம் நிறைவேறிய பின், பூசை, அர்ச்சனைகள் நடைபெறும். பிற்பகல் 2.30 மணிக்கு கணபதி ஊர்வலம் மங்கள வாத்தியத்துடன் ஸ்ரன்வெல்

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????
       முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.


``அவுஸ்திரேலிய ஈழமுரசு பத்திரிக்கையின் நகைச்சுவை இரவு.’’


.

ஒரு இனத்தின் அடையாளமாக மொழி இருக்கும் போது அந்த  மொழியின் அடையாளத்தையும் மொழி வளர்ச்சியையும் சுமந்து நிற்பது பத்திரிக்கையே. அந்த வகையில் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் ஈழமுரசுப் பத்திரிக்கை  எமது தேசத்தின் நினைவுகளையும் வலிகளையும் சுமந்து எவ்வளவோ தடைகளையும் தாண்டி வெளிவருகின்றது. இந்தப் பத்திரிக்கையின் வளர்ச்சிக்காக கடந்த வாரம் சிரிப்போ சிரிப்புஎன்ற நிகழ்ச்சியை றிங்வூட் மண்டபத்தில் சிறப்பாக நடாத்தியது. 

ஊடகத்துறை விற்பன்னர் சி.வி.இராஜசுந்தரம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு


.
[ வியாழக்கிழமை, 11 ஓகஸ்ட் 2011,
தொடர்பாடலுக்கும், ஊடகக்கலைத்துறைக்கும் அரும்பெரும் சேவையாற்றிவந்த சி.வி.இராஜசுந்தரம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத மாபெரும் பேரிழப்பாகும். இவ்வாறு கனடா ரொரன்ரோவில் காலமான திரு சி. வி. இராஜசுந்தரம் அவர்களின் மறைவையொட்டி.....
...இலங்கை ருபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் சேவையின் முன்னாள் பணிப்பாளர் பி.விக்னேஸ்வரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வி.என். மதியழகன் ஆகியோர் கூட்டாக விடுத்த அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.


லண்டன் எரிகிறது -நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

அழகிய மாநகரம் லண்டனை பார்த்து இரசித்து வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. லண்டனிலே கலவரம் கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மாநகரில் மட்டுமல்ல அயலில் உள்ள மன்செஸ்டர் (Mancheste) பேர்மிங்ஷாம்(Birmingham), நோட்டிங்ஷாம்(Notingham) என கலவரம் பரவுவதை தொலைகாட்சியில் கண்டேன் பார்த்து அறிவது என்பது ஒரு வகை. ஆனால் அனுபவத்தில் உணர்வது உள்ளத்திலே பாதிப்பை ஏற்படுத்தி மாற வடுவாக நிலைத்துவிடுவதும் வேறுவகைதான். 1983 கலவரத்திலே உயிரை காப்பாற்ற அடுத்த முஸ்லிம் வீட்டில் தங்கியது, வாழ்ந்த வீடு தீக்கிரையாவதை கண்டு உணர்ந்தவள். அதனால் கலவரம் என்பது என்னை நேரிடையாக தாக்கிய விஷயம்.

354 அரிய பொக்கிஷங்க​ள் அடங்கிய கோப்புகள்

.
திருக்குறள். ஆத்திசூடி. திருவருட்பா இவைபோன்ற 354 அரிய பொக்கிஷங்கள் அடங்கிய PDF கோப்புகள்.

http://www.infitt.org/pmadurai/pmworks.html
இலங்கை அவுஸ்திரேலியா முதல் போட்டி: ஆஸி. 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றி


8/11/2011
 வொட்சன், கெடின் ஆகியோரின் சிறந்த ஆரம்பம் கைகொடுக்க பொண்டிங்கிளார்க் ஆகியோரின் இணைப்பாட்டத்தில், இலங்கை அணி நிர்ணயித்த 192 ஓட்டங்கள் என்ற இலக்கை அடைந்த அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றியீட்டியது.

மிருதங்கக் கலை ஏ.எஸ். ராமநாதன் மறைவு.
நீண்ட மிருதங்க மாணவ பரம்பரையை உருவாக்கி, 02.03.2011 ல் மறைந்தவரும் இலங்கையின் மிருதங்க கலை வளர்ச்சியில்; முத்திரை பதித்த மூத்த மிருதங்கக் கலைஞன் சங்கீத பூஷணம் பேராசிரியர் சிதம்பரம் ஏ.எஸ்.ராமநாதன் அவர்கள் பணியும் வாழ்க்கையும்
இலங்கையின் இசைக்கலை வளர்ச்சியில் (மிருதங்கம் உட்பட) இந்தியக் கலைஞர்களின் பங்கு மகத்தானதாகப் போற்றப்படுகின்றது. காலத்தின் தேவையறிந்து இந்தியாவிலிருந்து இசைக்கலைஞர்களை வரவழைத்து, இலங்கையின் கலைவளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டும், அவ்வாறு வரவழைக்கப்பட்ட இசைக் கலைஞர்களது இசைப் பங்களிப்பும் போற்றுதற்குரியது. இவ் வகையில் மிருதங்கத்திற்கு பங்களிப்பு வழங்கிய பெரியார், மதிப்புக்குரிய பேராசிரியர் ஏ.எஸ். ராமநாதன் அவர்கள் முதன்மை பெறுகின்றார்.

அந்தக் கால இலங்கை நாணயங்களில் சில

.
இருபத்தி  ஐந்து சதம் 1947


                                                பத்து ரூபாய் 1935


பத்து சதம் 1942                                              ஐந்து சதம் 1942உலகச் செய்திகள்

லண்டனில் அமைதி: மற்றைய நகரங்களில் தொடரும் வன்முறைகளில் ஒருவர் பலி(பட இணைப்பு) _

108/2011
இங்கிலாந்தின் பல நகரங்களில் தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும், லண்டனின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் சுமார் 16,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் மெஞ்செஸ்டர், செல்போர்ட், லிவர்பூல், நொட்டிங்ஹம், பெர்மிங்ஹம் நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டுவருவதுடன் தீவைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கார்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக அந் நகர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி வன்முறை சம்பவங்களில் பொலிஸாருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் பாரிய சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா

.
போட்டா போட்டி

கிரிக்கட் உலகின் நட்சத்திர நாயகன் சச்சினுக்கு தனது முதல் படமான ”போட்டா போட்டி”யை அற்பணித்துள்ளார் இயக்குனர் யுவராஜ்.

கிராமத்து பாவாடை தாவணி நாயகியான ஹரிணிக்காக முறைப்பையன்களான கொலை வாணன், கொடை வாணன் இருவரும் மோதிக்கொள்கிறார்கள்.

கிரிக்கட் வீரர் சடகோபன் ரமேஷை கடத்தி வந்து, தன் கிரிக்கட் அணிக்கு பயிற்சியாளராக போட்டு விடுகிறார் கொடை வாணன். கிராமத்து ஆட்களுக்கு கிரிக்கட் சொல்லித்தர படாத பாடுபடும் ரமேஷ், நாயகி ஹரிணி மனதுக்குள் நிலைத்து நின்று மட்டையை சுழற்றுகிறார்.

இரு அணியினரும் பயிற்சி எடுத்து, போட்டியில் மோத தயாராகிறார்கள். கிரிக்கட் மேட்ச் பிளஸ் கொமெடி என ஜாலியாக படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர் யுவராஜ். பசுமையான கிராமத்தில் வெள்ளந்தியாக முறைப்பொண்ணு ஹரிணி மேல் ஆசை வைக்கிறார் கொடை வாணன். ஹரிணியின் இன்னொரு முறைப்பையன் கொலை வாணன், சொத்துக்காக ஹரிணியை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார்.

கிரிக்கட் போட்டியில் வெற்றி பெறுகிறவருக்கு பெண்ணை கட்டித்தர ஹரிணியின் அப்பா சம்மதிக்கிறார். அதற்கு பிறகு தான் ரகளையே ஆரம்பமாகிறது. போலி கிரிக்கட் பயிற்சியாளரான மயில்சாமி, வில்லன் கொலை வாணன் ஆட்களுக்கு கிரிக்கட் சொல்லித் தருவது சிரிப்போ சிரிப்பு. கொடை வாணன், அவதாரம் கதாபாத்திரங்கள் வரும் காட்சிகள் சரியான கொமெடி பீஸ்.

சில இடங்களில் கொமெடியில் ”மேன் ஆப் த மேட்ச்” பட்டத்தையும் தட்டி செல்கிறார்கள். நாயகன் சடகோபன் ரமேஷ், நாயகி ஹரிணியிடம் ரொமான்ஸ் பண்ணும் காட்சிகளில் பவுண்ட்ரி, சிக்சர்களை விளாசியிருக்கிறார்.

கொமெடியான திரைக்கதையில் அலுப்பு தட்டாமல் படத்தை கொண்டு செல்கிறார் இயக்குனர் யுவராஜ். கொமெடி கிரிக்கட் படத்திலும் ரசிகர்களுக்கு தகவல் சொல்லியே தீருவதென உறுதி காட்டியுள்ளார்.

நடிகர்கள்: சடகோபன் ரமேஷ், ஹரிணி, சிவம், அவதார் கணேஷ், உமர், மயில்சாமி மற்றும் பலர்.

இசை: அருள் தேவ்.
பாடல்கள்: ஜெய முரசு.
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்.
எடிட்டிங்: ராஜ முகமது.
தயாரிப்பு: வி.முரளி ராமன்.
பி.ஆர்.: செல்வ ரகு.
எழுத்து, இணை தயாரிப்பு, இயக்கம்: யுவராஜ்