மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 ஒன்பது என்பது எண்களிலும் முக்கியமானது. ஜோதிடங்களிலும் முக்கியமானது.எண்கணித ஜோதிடத் திலும் இன்றியமையாததாய் இருக்கிறது.இந்த ஒன்பதை நவ என்னும் பெயரினைக் கொடுத்து இராத்திரி யுடன் இணைத்து  நவராத்திரி என்றும் அழைக்கின்றோம்.நவராத்திரி என்றாலே ஒன்பது இரவுகள் என் பதையும் எல்லோரும் அறிவோம். நவ - என்றால் இன்னுமொரு கருத்தும் இருக்கிறது. அதாவது புதுமை என் பதையும் கருத்திருத்த வேண்டும். நவநாகரிகம் என்று - புதிய அம்சங்களுடன் வந்தமைந்த நாகரித்தைப் பெயரிட்டு அழைக்கிறோம் என்பதையும் யாவரும் அறிவோம்.புதுமைகள் பல வாழ்வில் தொடர்ந்து வரவே ண்டும் என்னும் எண்ணத்தினால்த்தான் வருடந் தோறும் நவராத்திரியினைப் பக்தி பூர்வமாக அனுஷ்டித்து வருகிறோம் என்றும் எண்ணிடத் வைக்கிறதல்லவா !
 நவராத்திரி என்றவுடன் பெண்மைதான் முன்னே வந்து நிற்கும். பெண்மை என்றதும் அங்கு தலைமை தாங் குவது தாய்மைதானே ! தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை தொன்று தொட்டு சமூகத்தில் இருந்து வருகிறது என்பதை வரலாற்றால் அறிந்து கொள்ளுகிறோம்.எம்மைப் படைத்த ஆண்டவனையே  " அம் மையே " என்றுதான் அழைத்து ஆராதிக்கின்றோம்.  மணிவாசகப் பெருமானே " அம்மையே அப்பா ஒப்பி லாமணியே அன்பினில் விளைந்த ஆரமுதே " என்று தாயினையே முன்னிறுத்தி அந்தப் பரம்பொருளை விழிக்கின்றார். " தாயினும் நல்ல தலைவர் என்றடியார் " என்றும், " தாயும் நீயே தந்தையும் நீயே " என்றும். சம்பந்தப் பெருமானும் தாயினை முன்னிறுத்திப் பாடுவதும் நோக்கத்தக்கதே.தமிழ் மூதாட்டி ஒளவையார் எத்தனையோ அறிவுரைகள் பகர்ந்தவர். அவர்கூட கொன்றை வேந்தனை ஆரம்பிக்கும் வேளை " அன்னை  யும் " என்றுதான் முதலடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறார்.
 நாம் வாழும் பூமியைய் தாய் என்கின்றோம் . வாழ்வினுக்கு அவசியமான பொறுமையைத் தாய் என்கின் றோம். அனைவரின் அகத்திலும் அமரவேண்டிய கருணையையும் தாய் என்றுதான் சொல்லுகிறோம். ஓடு கின்ற ஆறுகளுக்கும் தாய்மையைக் கொண்ட பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்படுத்துகிறோ ம் அல்லவா !