தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
தைப்பூசத் திருநாள் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
கண்ணப்பன் அன்பை கணக்கிடல் அரிது !
துயரினைத் துணிவுடன் விரட்டுவாய் – அன்பு ஜெயா பா வகை: கழி நெடிலடி ஆசிரிய பதினொன்றாம் சீர் மண்டிலம்.
வாழ்க்கைதனின் ஓட்டமதில் வளமதுவும் வந்துபோகும்,
வழக்கமிதை உணர்ந்துநீயும் வாழ்வாய் – அன்றேல்
வளம்குன்றி வாழ்வினிலே தாழ்வாய்!
தாழ்ந்தவரும்
வாழ்விலோர்நாள் தன்னிறைவும் பெறுவர்தான்,
தவறாமல் அதற்கெனவே உழைப்பாய் – அந்நாள்
தகுதியுள்ள வாழ்வுபெற்றே தழைப்பாய்! (1)
வாழ்க்கையதோ
பேரலையில் தடுமாறும் ஓடம்போல்
வழியொன்றும் தெரியாமல் நோக்கும் – துணிவே
வழியொன்றைக் கண்டெடுத்துக் காக்கும்!
தாழ்வான
இடம்நோக்கிப் பாயுமந்த ஆறுபோல
தத்தளிக்கும் உன்னையுமே காக்கும் – மாந்தம்
தளிர்விட்டே வாழ்வுதனை நோக்கும்! (2)
புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் மொழிக் கல்வி : அவுஸ்திரேலியாவில் சமூகமொழிப் பாடநூல்களின் அடிப்படையில் வெளிவந்த ஆய்வு: கலாநிதி குலசிங்கம் சண்முகம்
திரு குலசிங்கம் சண்முகம் அவர்கள் தம்து கலாநிதிப்பட்ட (PhD) ஆய்வுக்காக 2024 இல் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நியூ சவுத் வேல்ஸில் மாநிலத்தில் வெளிவந்த ஆண்டு நான்கு முதல் ஆண்டு எட்டு வரையான தமிழ்ப் பாடநூல்களில் அடங்கியுள்ள பாடங்கள், மாணவர்களது அடையாளம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதில் ஆற்றக்கூடிய பங்கினை ஆய்வு செய்வதுதான் இந்தக் கட்டுரை.
பொதுவாகவே சமுகமொழிக் கல்வி அல்லது பாரம்பரிய மொழிக்கல்வி பற்றி ஆராய்பவர்கள் மாணவர் பெற்றோர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே ஆராய்வர். ஆசிரியர் குலம் அவர்களுடைய ஆய்வு, பாடநூல்களின் தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளமை சிறப்பானது என்று பல்கலைக்கழகத்தின் வெளியகப் பரீட்சகர்கள் பாராட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் சமூகமொழிப் பாடநூல்களின் அடிப்படையில் வெளிவந்த முதலாவது ஆய்வுக் கட்டுரை இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு தமிழ்ப் பாடநூல்களின் உண்மைப் பயன்பாட்டை எமது தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமன்றி, பரந்த அவுஸ்திரேலிய சமூகத்திற்கும் எடுத்துரைப்பதில் பெரிதும் பயன்படும்.
தமிழ் சமூக மொழிப் பள்ளிகளின் தமிழ்ப் பாடநூல்கள
நியூ சவுத் வேல்ஸில் உள்ள தமிழ் சமூக மொழிப் பள்ளிகளின் தமிழ்ப் பாடநூல்களில் அடங்கியுள்ள பாடங்கள், மாணவர்களது அடையாளம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதில் ஆற்றக்கூடிய பங்கு
ஆக்கிய செயலும் அதன்வழி நிற்குமே!
இணைக்குறள் ஆசிரியப்பா!
(முதலும் ஈறும் அளவடிகளாகி இடையடிகள் குறளடிகளாகவும் சிந்தடிகளாகவும் அமைய ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிகிறது)
வெள்ளத் தனைய மலரின் நீட்டமாய்
உள்ளத் தனையவே உயர்வும்
அத்தகு உயர்வை உயிராய்
இத்தரை மீதி லடைந்திட
பண்பில் உயர்ந்து
கண்ணியம் மிகுந்து
நுண்ணறிவொடு திகழ
உள்ளுவதி லெல்லாம்மு யர்ந்து நிற்பீரே
பள்ளத்தில் கிடக்கும் தண்ணீர் போன்று
எள்ளினிலே யெண்ணையு மிருக்க
ஆற்றலு மிங்கி ருந்தாலே
ஏற்றிட வகையுமே யுண்டாம்
தக்க வழியினில்
மிக்க முயன்றால்
எக்காலமு மிங்கு
எள்ளளவு மிங்கு பிழையின்றி போகுமே
புலி ஒவ்வாமையில் பிறந்த நொயல் நடேசனின் 'கானல் தேசம்' நாவல்
'அசோகனின் வைத்தியசாலை' என்ற நாவல் மூலமே நொயல் நடேசன் என்கிற படைப்பாளர் எனக்கு அறிமுகமாகிறார். ஒஸ்ரேலியா மெல்போனில் இயங்கும் ஒரு மிருக வைத்தியசாலையை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை அது. ஆசிரியரும் ஒரு மிருக வைத்தியர் என்பதால் அவரால் சிறப்பாக எழுத முடிந்துள்ளது. உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றில் மேம்பட்டு நின்ற அந்நாவல் என்னைக் கவர்ந்திருந்தது. ஆகையால் மிகுந்த எதிர்பார்ப்போடு அவரின் 'கானல் தேசம்' நாவலைப் படித்த போது ஏமாற்றமே எஞ்சியது. உருவத்தில் நன்றாக இருக்கும் இந்நாவல் உள்ளடக்கத்தில் மிகவும் பலவீனமாக உள்ளது. ஆசிரியர் தனது சுய அரசியல் நிலைப்பாட்டின் மீது அடையாளப்பட்டதன் விளைவாக பிரதியானது விடுதலைப்புலிகள் மீதான காழ்ப்பாக வெளிப்பட்டுள்ளது.
01. கதைச்சுருக்கம்
இந்தியா ராஜஸ்தானிலுள்ள ஜெய்சல்மீர் கோட்டைக்கு முன்னால் கதை ஆரம்பிக்கிறது. அசோகன் ஒஸ்ரேலியாவிலிருந்து உல்லாசப் பயணியாக அங்கு வந்திருக்கிறான். ஜெனி என்றழைக்கப்படும் ஜெனிபர் என்ற ஜிப்சிப் பெண்ணை அங்கு சந்திக்கிறான். காமலீலைகளில் இருவரும் ஈடுபடுகிறார்கள். மறுநாள் அசோகன் சென்னை செல்கிறான் . பின்னோக்கு உத்தியில் அவனது சிறுபிராயம் கதையில் வருகிறது. யாழ் கொக்குவிலில் பிறந்தவன் 1987ல் அமைதி காக்கும் படையினரால் பெற்றோர்கள் கொல்லப்பட, சிறுவனான அசோகன் அம்மாச்சியுடன் வாழ்ந்து வந்து, 1995இல் வலிகாம இடப்பெயர்வின் போது சாவகச்சேரிக்கு வருகிறான். அங்கு அம்மாச்சி சாவடைய, பெரிய தந்தை தாயின் அரவணைப்பில் வன்னி வந்து, வவுனியா வருகிறான். பெரிய தந்தையின் மகள் கார்த்திகா தங்கைக்குரிய பாசத்தோடு இருக்கிறாள். அவன் கல்வியில் மிகவும் திறமைசாலியாக விளங்குகிறான். அதனை அடையாளங்கண்ட அருட்தந்தை அகஸ்ரின் அவனை வளப்படுத்திவிடுவதாகக் கூறி பெரியதந்தையிடம் (சதாசிவம்) அனுமதி பெற்று மலேசியாவிலிருக்கும் சிற்றம்பலத்திடம் அனுப்பி வைக்கிறார். அந்த சிற்றம்பலம் அவனை ஒஸ்ரேலியாவிலிருக்கும் டொக்ரர் ஒருவரிடம் அனுப்பி வைக்கிறார்.
சங்கீதம் யாருடையது? சர்ச்சை வேண்டுமா? நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
2024-ஆம் ஆண்டிற்கான ‘சங்கீத கலாநிதி’ விருது
இசைக்கலைஞரும் எழுத்தாளருமான T.M.கிருஷ்ணாவிற்கு
வழங்கப்பட்டது. வருடாவருடம் மார்கழி இசைவிழாவில் மியூசிக் அகடமி, சிறந்த இசைக்கலைஞர்க்கு
இவ்விருதினை வழங்கி கௌரவிக்கும். இவ்விருதை அவருக்கு வழங்குவது முறையல்ல
என கர்நாடக சங்கீத சகோதரிகள் ரஞ்சனி, காயத்ரி எதிர்ப்பைத்
தெரிவிக்க இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. சகோதரிகளின் வெறுப்புக்குக்
காரணம், அவர் மரபை மீறினார் என்பதே. பார்ப்பனிய
மரபான கர்நாடக இசையை இவர் யாவருக்கும் பொது என்கிறார் என்பதே பெரிய குற்றம். கிருஷ்ணாவோ
இசையில் புனிதமானது என ஒன்றில்லை என்கிறார். கிருஷ்ணா
இசையை
ஜனரஞ்சகப்படுத்துகிறார். சங்கீத அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கும் இசையை அவர் பொது இசையாக மாற்றுகிறார். குறிப்பிட்ட ஒரு சாராருக்கானது அல்ல இசை எனக் கூறி செயல்படுத்துகிறார். சேரிகளுக்குச் சென்று தனது இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
T.M.கிருஷ்ணா இசைக்கலைஞராக இருப்பதுடன் தான் பயிலும் இசையில் பல ஆய்வு நூல்களை எழுதியவர். அவர் நூல்களில் மனிதநேயத்தைக் காணமுடியும்.
கர்நாடகம் என்றால் மிகப் பழமையானது என்று பொருள்படும்.
காஸாவை கையகப்படுத்தல்: தொடர்ந்து நீடிக்கும் ட்ரம்பின் அடாவடிகள்
Published By: Digital Desk 2
09 Feb, 2025 | 10:46 AM

சதீஷ் கிருஷ்ணபிள்ளை
டொனல்ட் ட்ரம்பின் அடாவடித்தனங்கள் பற்றி வாய் கிழியக் கிழிய பேசியாயிற்று.
உலகம் என்ன சொன்னாலும், அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும் அவர் சொல்வதைத் தான் சொல்வார். செய்வதைத் தான் செய்வார்.
பதவியேற்ற நாளில், காஸா அற்புதமான இடம் என்றார். ஆறு நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில், காஸாவை கையகப்படுத்தப் போவதாக சென்னார்.
'ட்ரம்ப் உளறல்'களாக இதையும் பார்த்த உலகம், கடந்த வாரம் உறைந்து நின்றது.
அடாவடியுடன், இன்னொரு அடாவடியுடன் சேர்ந்து கொண்டு, காஸாவை கையகப்படுத்துவோம், காஸாவாசிகளை வேறு நாடுகளுக்கு அனுப்புவோம் என்று பேசினார், ட்ரம்ப்.
மற்றைய அடாவடியின் உள்ளம் குளிர்ந்திருக்க வேண்டும். “இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்களில், நீங்கள் தான் மிகச் சிறந்தவர் என்று சொன்னது. நெருங்கிய நண்பரென பாராட்டியது.
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு சந்தர்ப்பம்
03 Feb, 2025 | 01:28 PM

ரி. இராமகிருஷ்ணன்
யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு தெய்வப்புலவர் வள்ளுவரின் பெயரைச் சூட்டுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை இலங்கையுடனான பிரிக்கமுடியாத பிணைப்பை வலுப்படுத்துவதற்கான அடையாளபூர்வமான ஒரு சைகையாகும். மையத்தின் பெயரில் இருந்து 'யாழ்ப்பாணம்' என்ற சொல் நீக்கப்பட்டது தொடர்பாக இலங்கை தமிழர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியபோது உடனடியாகவே அதில் திருத்தத்தைச் செய்தார்கள். மையம் இப்போது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவான வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்ட இரு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை எவரும் வலியுறுத்திக் கூறவேண்டிய தேவையில்லை.
வல்லவனுக்கு வல்லவன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
தமிழ் தயாரிப்பாளர்களுக்குள்ளே தனித்துவம், திட்டமிடல், உறுதி,
கண்டிப்பு என்று அனைத்தும் கொண்ட ஒருவராகத் திகழ்ந்தவர் டி . ஆர். சுந்தரம். இவர் உருவாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் பல சாதனைகளை செய்ததோடு பல "முதல்களுக்கு" சொந்தமானது. தமிழில் முதல் இரட்டை வேடப் படம், முதல் கலர் படம், முதல் ஆன்டி ஹீரோ படம், முதல் மலையாள படம் என்று சிறப்புகளை காரணமான இந்த நிறுவனம் முதன் முதலாக நூறு படங்களை தயாரித்த நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றது. 97 படங்களை தயாரித்து முடித்த நிலையில் சுந்தரம் இயற்கை எய்து விட பட நிறுவனத்தின் பொறுப்பை அவர் மகன் ராமசுந்தரம் ஏற்றுக் கொண்டார். அவரின் தயாரிப்பு, இயக்கத்தின் கீழ் மாடர்ன் தியேட்டர்ஸின் நூறாவது படம் 1965ம் ஆண்டு தயாரானது.
தேர்ந்தெடுத்த ராமசுந்தரம் அதற்காக பம்பாய் புறப்பட்டார். அங்கே அவர் கவனத்தை கவர்ந்த படம் ஹிந்தியில் வெளியான உஸ்தாத்தோன் கி உஸ்தாத். இப் படத்தையே தமிழில் எடுக்கலாம் என்று அப் படத்தின் உரிமையாளரை தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்ட போது அப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் படத்தின் புரொடியூசர் என்று தெரிய வந்தது. அவர் தான் பிரபல நடிகர் ஷேக் முக்தார். முதல் சந்திப்பிலேயே அவருடன் நண்பராகி விட்ட ராமசுந்தரம் இரண்டு உஸ்தாத்துகளுடன் சேலம் திரும்பினார். ஆம் , ஷேக் முக்தார் நடித்த உஸ்தாத்தோன் கி உஸ்தாத் , தோ உஸ்தாத் என்று இரண்டு படங்களின் உரிமைகளோடு வந்தவர் மாடர்ன் தியேட்டர்ஸின் நூறாவது படமாக உஸ்தாத்தோன் கி உஸ்தாத் படத்தை தமிழில் தயாரிக்கலானார். அந்தப் படம் தான் வல்லவனுக்கு வல்லவன்.
ஆனந்தி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
அறுபது ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் பிரபலமாக விளங்கிய
நிறுவனங்களுள் ஒன்று ஏ எல் எஸ் புரடக்சன்ஸ் . இதன் அதிபரான ஏ எல் சீனிவாசன் தமிழிலும், ஹிந்தியிலும், தெலுங்கிலும் பல படங்களை தயாரித்தவர். கவிஞர் கண்ணதாசனின் அண்ணனான இவர் பலரை திரையுலகில் கை தூக்கி விட்டவர். கே எஸ் கோபாலகிருஷ்ணன், பி. மாதவன், ஆரூர்தாஸ் போன்றோறுக்கு முதன் முதலில் படம் இயக்க வாய்ப்பளித்தவர் இவராவார். இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை சிங்களத் திரையுலகிலும் இவருடைய ஈடுபாடு ஒரு காலத்தில் காணப்பட்டது. இலங்கை படத் தயாரிப்பாளரான ஜாபிர் ஏ காதர் இவரின் நெருங்கிய நண்பராகவும், இவரின் படங்களுக்கு இலங்கை வினியோகஸ்தராகவும் திகழ்ந்தார். 1965ம் வருடம் ஏ எல் சீனிவாசன் தயாரித்த படம் தான் ஆனந்தி.
நடித்த இந்தப் படம் ப . நீலகண்டன் இயக்கத்தில் உருவானது. எம் ஜி ஆரின் ஆஸ்த்தான இயக்குனராக அறியப்பட்ட நீலகண்டன் அந் நிலையை அடையும் முன் எஸ் எஸ் ஆரின் படங்களையே தொடர்ந்து இயக்கி வந்தார். தேடி வந்த செல்வம், எதையும் தாங்கும் இதயம், பூம்புகார்,பூமாலை, அவன் பித்தனா , என்று அவர் டைரக்ட் செய்த பட வரிசையில் எஸ் எஸ் ஆர் நடிப்பில் அவர் இயக்கிய படமாக ஆனந்தி வெளிவந்தது. அதன் பின் நீலகண்டன் எம் ஜி ஆருடன் பிசியாகி விட்டார்.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
10-02- 2025 Mon: Tamil arts and Culture Association - Pongal at Federak parliament at 5.30
13-02- 2025 Thu: Tamil arts and Culture Association - Pongal at NSW parliament at 5.30
01-03- 2025 Sat: போமன் மண்டபத்தில் வேம்படி மகளிர் உயர்நிலைப் பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் NSW நடாத்தும் வருடாந்த இரவு உணவு & நடனம்
03-03- 2025 Mon: Sydney Durga Amman Temple Anneual fistivel Start
04-03- 2025 Tue: Sydney Durga Amman Temple Flag Hoisting
08-03- 2025 Sat : Sydney Durga Amman Temple Mampazha Thiruvizha
09-03- 2025 Sun : Sydney Durga Amman Temple Veddai Thiruvizha
11-03- 2025 Tue : Sydney Durga Amman Temple Sappara Thiruvizha
12-03- 2025 Wed : Sydney Durga Amman Temple Chariot Thiruvizha
13-03- 2025 Thu : Sydney Durga Amman Temple Theertha Thiruvizha
14-03- 2025 Fri : Sydney Durga Amman Temple Poonkavanam Thiruvizha
08-03- 2025 Sat: ட்ரீபெர்க் கல்லூரி (Drieberg) (சாவகச்சேரி, இலங்கை) முன்னாள் மாணவர் சங்கம், NSW கிளை, வென்ட்வொர்த்வில்லில் (Redgum Function centre), இரவு உணவு மற்றும் பொழுதுபோக்குகள் at 6pm
15-03- 2025 Sat: கம்பன் கழகம் வழங்கும் ஆடல் வேள்வி 5.30 pm at Joan Sutherland Performing Arts Centre
22-03- 2025 Sat: தரிசனம் வழங்கும் "இளைய நிலா பொழிகிறதே" 10வது ஆண்டு இசை நிகழ்ச்சி Sydney Durga Auditorium 6pm
29-03- 2025 Sat: அபயகரம் வழங்கும் 33வது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்வு
தண்டேல் - திரைப்பட விமர்சனம்
Published By: Digital Desk 2
08 Feb, 2025 | 04:17 PM

தயாரிப்பு கீதா ஆர்ட்ஸ்
நடிகர்கள் : நாக சைதன்யா , சாய் பல்லவி, 'ஆடுகளம்' நரேன், கருணாகரன், திவ்யா பிள்ளை, பப்லு பிரித்விராஜ், மைம் கோபி, பிரகாஷ் பெலவாடி மற்றும் பலர்.
இயக்கம் : சந்து மொண்டேட்டி
மதிப்பீடு : 2.5 / 5
தெலுங்கு திரையுலகிலிருந்து பான் இந்திய அளவிலான படைப்புகள் தயாராகி ரசிகர்களை வந்தடையும் போது அதற்கான எதிர்பார்ப்பு என்பது எப்போதும் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் உண்மை சம்பவத்தை தழுவி தயாரான இந்த 'தண்டேல்' திரைப்படத்திற்கு இயல்பான அளவைவிட கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதனை படக் குழுவினர் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகா குளம் எனும் பகுதியிலுள்ள மீனவரான ராஜு( நாக சைதன்யா) அதே பகுதியில் வசிக்கும் சத்யா( சாய் பல்லவி)வை காதலிக்கிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு காதலித்து வருகிறார்கள். ஒன்பது மாதம் கடல் சார்ந்த தொழில் முறையிலான வாழ்க்கை- மூன்று மாதம் குடும்பம் சார்ந்த நிலவியல் வாழ்க்கை- எனும் வாழ்வியல் முறையை கொண்டிருக்கும் அப்பகுதி மீனவர்களுக்கு ராஜு தலைவனாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
இலங்கைச் செய்திகள்
'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்திற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
“தையிட்டி விகாரை விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திசைதிருப்பியதும், ஏனையவர்கள் அமைதியாக இருந்ததும் வேதனையளிக்கிறது; கஜேந்திரகுமாருக்கு பக்கபலமாக கதைத்திருக்கவேண்டும்”
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகம் : Govpay திட்டம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்
மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்திற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை ஜப்பான் வழங்குகிறது
Published By: Vishnu
04 Feb, 2025 | 02:16 AM

ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் 300 மில்லியன் ஜப்பான் யென் நிதி உதவியை வழங்குவதற்கான ஒரு பரிமாற்றக் ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டது.
உலகச் செய்திகள்
காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை
யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?
பனாமா கால்வாயை அமெரிக்கா கைப்பற்றும் - மீண்டும் டிரம்ப்
அமெரிக்காவில் வீடுகள் மீது விழுந்து நொருங்கிய விமானம் !
கொங்கோவின் கிழக்கு பகுதி நகர மோதல்கள் - 775 பேர் பலி
காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை
Published By: Rajeeban
07 Feb, 2025 | 02:08 PM

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 46 “அந்தனி ஜீவாவின் பன்முக ஆளுமை” 15/02/2025
நாள்: சனிக்கிழமை 15-02-2025
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
ஒருங்கிணைப்பு: கலாநிதி சு.குணேஸ்வரன்
சிறப்புப் பேச்சாளர்கள்:
கவிஞர் சு. முரளிதரன்
கலாநிதி எம்.எம்.ஜெயசீலன்
ஆய்வாளர் சி.ரமேஷ்
எழுத்தாளர் சு. தவச்செல்வன்
திரு. விஜயகுமார் சுதர்சன்
மேலதிக விபரங்களுக்கு: - அகில் 001416-822-6316
சிட்னி அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில் வருடாந்த மாசிமக பெருந்திருவிழா 2025
மாசி மகாம் ஆண்டு விழா 2025 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம்
தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி நிறைவடையும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, பிரமிக்க வைக்கும் சித்திரைத் தேர் (தேர்) இடம்பெறும் தேர் திருவிழா மற்றும் மாசி மகாம் தீர்த்த உற்சவம், புதன் மற்றும் வியாழன், 12 மற்றும் 13 மார்ச் 2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அன்னை துர்கா மாசி மஹம் திருவிழாவில் எங்களுடன் கலந்து கொண்டு அன்னை துர்காவிடம் அருள் பெறுங்கள்.