மிகவெற்றிகரமாக நடந்தேறிய சிட்னி தமிழர் பொங்கல் பெருவிழா 2024

 








































கோடுகளும் சித்திரங்களே – கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை தொடர்பான நயப்புரை முருகபூபதி


என்
பாதங்களுக்குக் கீழே

பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.

என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்

ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்

என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிரூபிக்க வேண்டியதாயிற்று

அரங்கில் தமிழ் அடையாளத்தை வலியுறுத்தும் கூத்துக்கலைஞரும் ஆய்வாளருமான “ பத்தண்ணா “ இளைய பத்மநாதன் ! முருகபூபதி


பம்பலப்பிட்டி ஶ்ரீ கதிரேசன் மண்டபம்.  கலா ரசிகர்கள் நிறைந்திருந்திருந்த அங்கே மேடையேறிய ஏகலைவன் கூத்தின் இறுதிக்காட்சி.   

 “ ஏழை மக்கள் எம்மை, வாழ விடா, வாழவிடா இந்த ஆளும் அரசர் ஓர் நாள்,  ஆளும் அரசர் ஓர் நாள் அழிந்துபோவார்.

ஆண்ட பரம்பரைகள்,  ஆண்ட பரம்பரைகள் பூண்டோடு ஓர் நாள் மாண்டு மடிந்து போகும். மாண்டு மடிந்துபோகும் மண்ணை விட்டே !  ஏழைகள் எழுச்சி பெற்று – ஓர் நாள் ஆள்வோரை அழித்தொழிப்பார், நிச்சயம் அழித்தொழிப்பார். 

அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று உணர்ச்சிப்பெருக்கோடு கரகோஷம் எழுப்புகின்றனர்.

நான் அன்று பார்த்த கூத்து அரங்காற்றுகைதான்  ஏகலைவன். எழுதி ,


இயக்கியவர் இளைய பத்மநாதன் என்ற கலைஞர். 

குறிப்பிட்ட அரங்காற்றுகை 1980 களில் இடம்பெற்றதாக நினைவு.  வீரகேசரியில் பணி முடிந்து, நண்பர் தனபாலசிங்கத்துடன் அந்த மண்டபத்திற்கு விரைந்தேன்.

தோழர் சண்முகதாசனும் வந்திருந்தார். 

அரங்கம் நிறைந்த கலா ரசிகர்கள்.  இறுதிக்காட்சி உணர்ச்சிபூர்வமாக அமைந்திருந்தது.

ஏகலைவன்,  விரல் வெட்டப்பட்ட தனது கையையும் துரோணரையும் பார்க்கின்றான்.

அந்த அரங்காற்றுகை முடியும்போது இரவு ஒன்பது மணியுமாகிவிட்டது. நான் எங்கள் நீர்கொழும்பூருக்குச் செல்வதற்கு பஸ்ஸை பிடிக்கவேண்டும்.

ஏகலைவனின் இயக்குநர் பத்தண்ணாவை அன்று என்னால் சந்திக்க முடியாது போய்விட்டது.

எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை.  பத்தண்ணாவை காலம் கடந்து, 1994 ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியா மெல்பனில் சந்திக்கின்றேன்.

அவ்வேளையில் அவர் நாடகக் கலைஞர் மாவை நித்தியானந்தன் மெல்பனில் ஆரம்பித்திருந்த பாரதி பள்ளியில் மாணவர்களுக்கு நாடகப்பயிற்சி வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்.

இலங்கையில்  வடமராட்சிப்பிரதேசம்,  பல ஆற்றல் மிக்க கல்விமான்களையும் கலைஞர்களையும் படைப்பிலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் எங்கள் தேசத்திற்கு வழங்கியிருக்கிறது.

அறிஞர் கந்த முருகேசனார்,  கலைஞர் கிருஷ்ணாழ்வார், பேராசிரியர் கா. சிவத்தம்பி, எழுத்தாளர்கள் செ. கதிர்காமநாதன், ராஜஶ்ரீகாந்தன் ,  தெணியான் ஆகியோர் முதல் பல ஆளுமைகளை நாம் பட்டியலிடலாம். அந்த வரிசையில் நாம் வியந்து பார்க்கும் கலைஞர்தான் பத்தண்ணா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்  அண்ணாவியார் இளைய பத்மநாதன்.

1937 ஆம் ஆண்டு வடமராட்சி – நெல்லியடியில் பிறந்திருக்கும் அவர்,  கொழும்பில் எழுதுவினைஞராக பணியாற்றியவர்.

வடபுலத்தில் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் அங்கிருந்த கலைஞர்களினால் உருவாக்கப்பட்டிருந்த அம்பலத்தாடிகள் என்ற  கலைக்குழு,  கிராமங்கள் தோறும் அரங்காற்றுகை செய்த பிரபல்யமான  கந்தன் கருணையை மூத்த தலைமுறையினர் மறந்திருக்க மாட்டீர்கள். இதிலும் பத்தண்ணாவின் வகிபாகம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏகலைவன் ரூபவாகினியிலும் ஒளிபரப்பாகியது.  அதனை கொட்டாஞ்சேனையில் தகவம் ராசையா மாஸ்டரின் இல்லத்திலிருந்து ஒரு நாள் இரவு,  அவரின் குடும்பத்தினர் மற்றும் பேராசிரியர் சண்முகதாஸ் – மனோன்மணி தம்பதியருடன் இருந்து பார்த்து ரசித்தேன்.

இணுவிலான் சிகாகோ பாஸ்கர் பேட்டி - கானா பிரபா

 ஈழத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுப்


பின்னணியோடு "இணையிலான்" என்ற வரலாற்று நாவலை எழுதிய இணுவிலான் சிகாகோ பாஸ்கர் அவர்கள் சிட்னி மண்ணில் இந்த நூலை அறிமுகப்படுத்துகிறார். 


 50 வருடங்களுக்கு மேலாக இலக்கியப் பணியோடு, தாயகப் பற்றும் மிகுந்த செயற்பாடுகளோடு இயங்கும் அவரோடு நிகழ்த்திய சிறப்புப் பேட்டி  




சிட்னி முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22/01/2024

 


“தலைமுறைவேறுபாடின்றி அனைவரையும் இணைத்து இயக்கும் எழுத்தூழியன் முருகபூபதி “ எழுத்தாளர் முருகபூபதிக்கு மெல்பனில் நடந்த பாராட்டுவிழாவில் நிகழ்த்தப்பட்ட தலைமையுரை - கிறிஸ்டி நல்லரெத்தினம்




எங்கள் மத்தியிலிருக்கும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும், தன்னார்வத் தொண்டருமான திரு. லெட்சுமணன் முருகபூபதிக்கு அறிமுகம் அவசியமில்லை.

1987 ஆம் ஆண்டு முதல் இவர் அவுஸ்திரேலியாக் கண்டத்தில் வாழ்ந்துவருகிறார். “உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் உலகின் எந்தத் திசைக்கு சென்று வாழநேரிட்டாலும், தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.“  இது நான் சொல்லும் கூற்று அல்ல.

எங்கள் முருகபூபதி, இந்த வாக்குமூலத்தை தொடர்ந்தும் தனது பதிவுகளில் எழுதி வந்திருப்பவர். இந்த வாக்குமூலத்தையே பின்பற்றுபவராக இவர் எங்கள் மத்தியில் தொடர்ந்தும் இயங்கி வந்திருக்கிறார். எழுத்தைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாமல், இந்த நாட்டுக்கு வந்திருக்கும் இவர், எழுத்தையும் கைவிடாமல் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் இங்கே வந்த பின்னர் உருவாக்கிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் மற்றும் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்பன இற்றை வரையில் தங்கு தடையின்றி இயங்கி வருகின்றது.

எழுத்தாளர் முருகபூபதிக்கு ஒரு பாராட்டு விழாவை நடத்தவேண்டும்என்று எமது சங்கத்தின் செயற்குழுவில் வலியுறுத்தியவர் எழுத்தாளர் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா அவரது தலைமையில் நாம் ஒரு உபகுழுவை அமைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்வந்தோம்.

அவுஸ்திரேலியாவிலிருந்து பூமராங் மின்னிதழ் ! அறிமுகக் குறிப்புகள் முருகபூபதி


அவுஸ்திரேலியாவில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், 2001 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தியதன் மூலம் இக்கண்டத்தில் வதியும் இலக்கியப் படைப்பாளிகள், நடனம், இசை, கூத்து, நாடகத்துறை சார்ந்த கலைஞர்கள், மற்றும் வானொலி, பத்திரிகை ஊடகவியலாளர்கள், வாசகர்களை இணைத்து,  “ அறிந்ததை பகிர்தல் அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்  “ என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே, பின்னர் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பாக  உருவாகியது.  

கடந்த 2004 ஆம் ஆண்டிற்குப்பின்னர் இந்த  அமைப்பு அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்டது.

இதுவரையில் மெல்பன், கன்பரா, சிட்னி, கோல்ட் கோஸ்ட் ஆகிய


மாநகரங்களில் இச்சங்கம்,  தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் நடத்தியுள்ளது.

அத்துடன் இலக்கிய சந்திப்புகளையும், குறும்படக் காட்சிகளையும் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வுகளையும்,  நூல்கள், இதழ்களின் கண்காட்சிகளையும் அனைத்துலக பெண்கள் தின விழாவையும் நடத்தி வந்திருக்கும் இச்சங்கம், காலத்திற்குக் காலம் கலை, இலக்கிய ஆளுமைகளையும் பாராட்டி கௌரவித்து சாதனையாளர் விருதுகளையும் வழங்கியிருக்கிறத.

கடந்த  இரண்டு வருடகாலமாக இலங்கை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன்,  அவர்கள் வெளியிடும்  கலை, இலக்கியம் சார்ந்த ( சிறுகதை, நாவல், கவிதை , கட்டுரை ) நூல்களில் அதிசிறந்தனவற்றை நடுவர்களின் மூலம் தெரிவுசெய்து இலங்கை நாணயத்தில் தலா 50 ஆயிரம் ரூபா பணப்பரிசிலும் சான்றிதழும் வழங்கி வருகிறது.

கொவிட் பெருந்தொற்றுக்காலத்திலும் இச்சங்கம் பல நிகழ்ச்சிகளை மெய் நிகர் ஊடாக நடத்தியிருக்கிறது.

2010 ஆம் ஆண்டில், பூமராங் என்ற சிறப்பிதழையும் வெளியிட்டது. அதனையடுத்து சங்கத்திற்கென ஒரு இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தியது.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து உயிர்ப்பு என்ற தொகுப்பினையும், கவிதைகளைத் தொகுத்து வானவில் என்ற நூலையும் வெளியிட்டுள்ளது.  உயிர்ப்பு தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில சிறுகதைகள், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட BEING ALIVE என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

கர்ணன் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 சரித்திர, புராண கதா பாத்திரங்களை முன்னிறுத்தி படங்களை


தயாரித்து தமிழ் திரையுலக வரலாற்றில் இடம் பிடித்தவர் தயாரிப்பாளரும், இயக்குனருமான பி ஆர் பந்துலு. தனது நெருங்கிய நண்பரான சிவாஜி கணேசன் நடிப்பில் இவர் தயாரித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி கண்டது. சில ஆண்டுகள் கழித்து மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமான அரங்க அமைப்புடன் ,ஏராளமான நடிகர்களுடன் கலரில் இவர் உருவாக்கிய படம்தான் கர்ணன்.


மஹாபாரதத்தில் பெரிதும் உயர்த்தி பேசப் படும் கொடைவள்ளலான

கர்ணன் வேடத்தில் சிவாஜி நடிக்க இந்தப் படம் உருவானது. புராண, சரித்திர படங்களில் இருந்து ரசிகர்களின் கவனம் சமூகப் படங்கள் பக்கம் திரும்பிக் கொண்டிருந்த கால கட்டத்தில் இப்படியான ஒரு முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஏ எஸ் நாகராஜன் ( ஏ பி நாகராஜன் அல்ல ) எழுதிய திரைக் கதையை கொண்டு படம் உருவானது. கட்டபொம்மனுக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி இப் படத்துக்கும் வசனங்களை எழுதினார்.

பஞ்ச பாண்டவர்கள் பிறப்பதற்கு முன் குந்திதேவிக்கு பிறந்து அவளால் ஆற்றில் விடப்பட்டு, தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு , பின்னர் துரியோதனனால் அங்க தேசத்துக்கு அரசனாக முடி சூடப்பட்டு ஆட்சி செய்யும் கர்ணன் கொடையில் சிறந்து விளங்குகிறான். ஆனாலும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற அவப் பெயர் அவனை விடாது துரத்துகிறது. இறுதியில் பாரதப் போரின் போது அவன் யார் என்ற உண்மை உலகிற்கு தெரிய வருகிறது. அவனோ தான் செய்த அனைத்து தான தர்மங்களின் புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தர்ப்பணம் செய்து விட்டு புகழுடம்பெய்துகிறான். இந்த கதையே கர்ணன் என்ற பெயரில் படமானது.

இதில் கர்ணனாக வரும் சிவாஜி படம் முழுதும் பாதிக்கப் பட்ட வேங்கையாக காட்சியளிக்கிறார். குரல், முகபாவம் எல்லாம் அதற்கு பொருந்துகிறது. அவருக்கு ஜோடி தேவிகா. கணவருக்கு ஆறுதல் சொல்லும் கட்சியில் இருவர் நடிப்பும் பிரகாசிக்கிறது. துரியோதனனாக வரும் அசோகன், அவர் மனைவி பானுவாக சாவித்திரி இருவரும் பாத்திரத்துடன் ஒன்றிப் போகிறார்கள். குந்தி தேவியாக வரும் எம் வி ராஜம்மா பிள்ளைகளை நினைத்தே சதா உருகுகிறார். அவரும் சிவாஜியும் சந்திக்கும் காட்சி உணர்ச்சிகரமாக அமைந்தது. இருவர் நடிப்பும் பிரமாதம். அதே போல் கண்ணனும், குந்தி தேவியும் சந்திக்கும் காட்சியும் அருமை.

இலங்கைச் செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு 

இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையே வீசா விலக்களிப்பு ஒப்பந்தம்

சுற்றுலா வளர்ச்சிக்கு “Pekoe Trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்

யாழில் 14 ஆவது வர்த்தக கண்காட்சி

அனுபவமில்லாத ஒருவரை ஜனாதிபதியாக நியமித்து நாட்டை மீள ஆபத்துக்குள் தள்ள முடியாது

வடக்கிற்கு செல்லும் 73,000 புத்தகங்கள் அதில் எனது புத்தகமும்!



இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு 

- எம்.ஏ. சுமந்திரனை விட 47 வாக்குகள் பெற்று வெற்றி

January 21, 2024 1:52 pm 0 comment

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

உலகச் செய்திகள்

 அமெரிக்காவுடன் வெளிப்படையாக முரண்பட்ட இஸ்ரேல் காசாவில் தொடர்ந்தும் குண்டு மழை

ஈரானில் பாகிஸ்தான் பதில் தாக்குதல்: பதற்றம் உச்சம்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் ட்ரம்ப் முன்னிலை

கிரேக்க கப்பலின் மீது ஹூத்திக்கள் தாக்குதல்

காசாவில் அடுத்த கட்ட போர் நடவடிக்கை குறித்து இஸ்ரேல் அறிவிப்பு; உயிரிழப்புகள் தொடர்கின்றன


அமெரிக்காவுடன் வெளிப்படையாக முரண்பட்ட இஸ்ரேல் காசாவில் தொடர்ந்தும் குண்டு மழை

January 20, 2024 8:14 am 

மத்திய கிழக்கு அமைதிக்கான ஒரே வழியாக அமெரிக்கா கருதும் பலஸ்தீன நாடு ஒன்றின் உருவாக்கத்திற்கு, இஸ்ரேல் வெளிப்படையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது காசா பகுதி மீது நேற்றும் (19) பயங்கர தாக்குதல்களை நடத்தியது.

தைப் பூசம் திருவிழா

 



SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia

"தை பூசம்" என்பது ஒரு புனிதமான இந்து பண்டிகையாகும், இது தீமையை வென்ற நன்மையின் நினைவாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான “தை”யில் ஆண்டுதோறும் ‘பூசம்’ நட்சத்திரத்தின் போது தை பூசம் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஸ்ரீ முருகன், சிவபெருமானின் ஒளி மற்றும் ஞானத்தின் அவதாரம். தீமையை தெய்வீகமாக வென்றவர் என்பதால், பக்தர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை கடக்க அவரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். தைப்பூசத் திருநாளின் நோக்கம் தீய குணங்கள் அழிந்து இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பதுதான்.

திட்டம்:

ஜனவரி 25, 2024 வியாழன் - காலை 10.00 மணிக்குத் தொடங்குகிறது

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி, ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தேவசேனா ஆகியோருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை.

ஜனவரி 28, 2024 ஞாயிற்றுக்கிழமை - காலை 10.00 மணிக்குத் தொடங்குகிறது

பால் குடம் & காவடி ஆட்டம்

கோயிலுக்குள் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி, ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தேவசேனா புறப்பாடு (ஊர்வலம்) ஆகியவற்றுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சோடச உபசார தீபாராதனை.

“பேராசிரியர் செ.யோகராசாவின் பன்முகஆளுமை”


இலக்கியவெளி 

நடத்தும்

இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 34

“பேராசிரியர் செ.யோகராசாவின் பன்முக ஆளுமை”

 

நாள்:         ஞாயிற்றுக்கிழமை 28-01-2024       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 8.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

சிட்னி துர்க்கா அம்மன் கோவில் வருடாந்த திருவிழா - 2024

மாசிமகம் திருவிழா பிப்ரவரி 14, 2024 அன்று தொடங்கி 24 பிப்ரவரி 2024 அன்று நிறைவடையும். இந்த விழாவின் சிறப்பம்சமாக தேர்த் திருவிழா (23/02/2024) மற்றும் மாசி மக தீர்த்த உற்சவம் நடைபெறும்.

  பிரமிக்க வைக்கும் புதிய சித்திரைத் தேரின் (தேர்) அறிமுகம் இடம்பெறும்.