'கூகுள் மீ' இரகசிய தளம்!

' கூகுள் மீ ' என்ற சமூக வலைப்பின்னல் தளமொன்றினை கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம்.
கூகுள் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

செல்வன் தூயவன்- பிறந்தநாள் வாழ்த்து

.
செல்வன் தூயவன் சந்திரதாஸ்
பிறந்தநாள் வாழ்த்து 11 . 08 .2010




Auburn னைச் சேர்ந்த சந்திரதாஸ் தர்மா தம்பதிகளின் அன்புப் புதல்வன் செல்வன் தூயவன் தனது 11 வது பிறந்த தினத்தை 11-08-10 அன்று சிறப்பாகக் கொண்டாடினார். இவரை அப்பா அம்மா அர்ச்சனா அக்கா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள்

சிட்னியில் சைவமன்றம் நடாத்திய இராப்போசன விருந்து 2010

.

நெருப்பின் கனல் - கவிதை -செ.பாஸ்கரன்

 .


அவள் விழியோரங்களில் கண்ணீர்த் துளி
நெஞ்சு விம்மி தணியும் சோகம்
ஆண்துணை இல்லாதவள் என்று
அழைக்கும் குரல்கள் அவளை அச்சமூட்டியது
நட்பின் போர்வையில் புகுந்து கொண்டு
நடிக்கும் ஆண்களின் அரக்கத்தனம்
அவளை ஆத்திரமூட்டியது
அவளின் விசும்பும் ஒலிகளுக்குள்
வெட்டருவாள்போல் விழுகின்ற வார்தைகள்
அவன் நட்புடன்
செவிமடுத்துக் கொண்டிருந்தான்
இவனாவது நண்பனாய் இருக்கிறானே என்ற
நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது.

மதில் மேல் பூனை -குட்டிக்கதை ந. உதயகுமார்

.

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!"

தமிழ் சினிமா -

.
*எந்திரனும் ரஜனி மகளின் கல்யாணமும்
*கொமரப் புலிக்கு ஆசைப்படும் விஜய்
*எந்திரன் மீது பொறாமைப்படும் சிரஞ்சீவி

*வருகிறது சிக்கு…புக்கு…

மதராசப்பட்டினம் என்றும் அழகான படத்தினில் நடித்திருந்த ஆர்யாவின் அடுத்த படமான 'சிக்கு புக்கு' தயாராகிவிட்டது. செப்டெம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வரவிருக்கும் இந்திரைப்படத்தின் இசை வெளியீடு 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குரல் இருக்கிறது -அ. முத்துலிங்கம்

.

அவர் உயர் படிப்பு படிக்கும் மாணவி. அவரைச் சந்திப்பதற்கு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முயற்சி செய்தேன். அவர் என்னை சந்திப்பதற்கு விரும்பவில்லை என்பதல்ல; அவருடைய வகுப்பு நேரங்கள் அப்படி. சிலநாட்களில் அதிகாலையில் வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவார். சில நாட்கள் அவர் திரும்ப இரவு ஒன்பது மணியாகிவிடும். இன்ன நாள் சந்திப்போம் என ஒரு தேதி தருவார், பின்னர் அவசரமாக அதை மாற்றுவார். இறுதியில் ஒருநாள் காலை 9 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு. அவருடைய வகுப்பு 10.30க்கு. அதற்கிடையில் என்னுடைய சந்திப்பை முடிக்கவேண்டும்.

நான் மகான் அல்ல

.

அவுஸ்ரேலிய வெள்ளித் திரையில் 20ம் திகதி முதல் காண தயாராகுங்கள்     

                                    நான் மகான் அல்ல



கார்த்தி , கஜோல் அகர்வால் , மற்றும் பலரின் நடிப்பிலும், யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும், சுதந்திரனின் நெறியாள்கையிலும் உருவான திரை காவியம் நான் மகான் அல்ல
காட்சி விபரங்கள்

நவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும்.

.

- நவஜோதி ஜோகரட்னம் (இலண்டன்) -


மங்கையராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா

என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் உலகம் அறிவிலோங்கித் தழைக்கும் என்றும், கற்பு நிலையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றும், பாரதத்தில் புதுமைப் பெண்கள் தோன்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார் பாரதி. பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றவர்களின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் நிறைந்துள்ளதைக் காணமுடிகிறது.

நயினை ஸ்ரீ நாகபூஷணி ஆடிப்பூர உற்சவம்

.
'உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க் கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எங்கள் விழுத்துணையே'

என அபிராமிப்பட்டர் அன்னையின் அருளொழுகு திருக்கோலத்தை வர்ணிக்கின்றார். அன்பர் என்பவர்க்கு நல்லன எல்லாம் தருபவனாக அழகுக் கொருவரும் ஒவ்வாத வல்லியாக அன்னை பராசக்தி நயினையம்பதியில் அருளாட்சி நடத்துகின்றாள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புகளைக் கொண்டது நயினையம்பதி. ஆன்ம சாந்தி தரும் சக்தி பீடமாக அமைந்துள்ளதும் இப்பதியாகும்.

பெண் - கவிதை - -எம்.ரிஷான் ஷெரீப்,

.


பறவைகளின் பாதையில் குறுக்கிடும்
கரங்களைப் பெற்றிருந்தவனின் தலையில்
மரங்கள் முளைத்திருந்தன
கிளைகளையடைந்து கூடுகட்டுவதை
அஞ்சிய பட்சிகளெல்லாம்
பறப்பதையும் மறந்தன
கூடு கட்டுதலையும் மறந்தன
பின்னர் அப்படியே தம் இருப்பையும் மறந்து
அந்தரத்தில் இறந்து வீழ்ந்தழிந்தன

பயிர்வள மண்ணில் உயிர்ப்புடன் ஒரு மானிடன்

.
- முருகபூபதி

வானுயர்ந்த கட்டிடங்கள், கோபுரங்களை அண்ணாந்து பார்த்து வியந்திருக்கிறேன். நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் விரையும்போது கண்ணில் பதியும் காட்சிகளினால் அந்தப்பரவசத்தை ரசித்திருக்கின்றேன். ஆனால் அபூர்வமாகத்தான் அந்த நிர்மாணங்களின் பின்னணியிலிருந்த கடின உழைப்பைப்பற்றி நினைத்திருப்பேன். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதுதான் இயல்பு.

கட்டிடங்கள், கோபுரங்களுக்கு அடியில் கண்களுக்கு புலப்படாமலிருக்கும் அத்திவாரம் பற்றியாருக்குத்தான் என்ன அக்கறை? என்ன கவலை.?
யாருக்கு சிந்தனை?

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - எஸ்.பொ.

.
கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும்


அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்பில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதாக அறிகின்றேன். அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள். அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்?


அமைதி'யின் மணம் - கவிதை

.

ஒவ்வொரு
பெருந்துயர்களின் பின்னும்
நீளும் நம்பிக்கையின் துளிர்ப்பிலே
வாழ்வு பெருகும்
எமக்கு

நேற்றுப்பரவிய வெறுமை
துடைத்தெறித்து
நாளையை மீண்டும் சுகிக்க
எங்கிருந்தோ
எழும் மிடுக்கு



குருதிக் கொடை நிகழ்வு - 2010

.


அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், செஞ்சிலுவைச்சங்கத்தின் இரத்த வங்கியும் இணைந்து மெல்பேனில் நடாத்திய குருதிக் கொடை நிகழ்வு - 2010

இலங்கையில் 1983ம் ஆண்டு, அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது.

மழை இருட்டு - எஸ்.ராமகிருஷ்ணன்

.

முந்தாநாள் மாலை நான்கு மணியிருக்கும். பாலாவின் அவன்இவன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தேன். வெளியே பாருங்கள். அதற்குள் இருட்டிவிட்டது என்ற குரல் கேட்டது. அறையை விட்டு வெளியே வந்து நின்று பார்த்தேன். சுற்றிலுமிருந்த மரங்கள் தெரியவில்லை. சட்டென பகல் மறைந்து எங்கும் இருண்டிருந்தது. இது அன்றாடம் காணும் இருளில்லை.

கந்தன் துதிபாடு பேதைமனமே!

.
- கவிஞர் க. கணேசலிங்கம்.

மயிலேறி வான மடமாதி னோடும்
மண்மீது வந்த எழிலின்
ஒயிலான கானக் குறமாதி னோடும்
ஒளிர்ஞான வேலும் மிளிர
மயல்கொண்ட வாழ்வு மருள்தீர உள்ளத்
தருள்பெய்து வேலன் வருவான்!
உயர்வான நல்லைப் பதிசென்று கந்தன்
துதிபாடு பேதை மனமே!

மருந்துக்குக் கட்டுப்படாத புதிய கிருமி.

 .
மருந்துகளுக்குக் கட்டுப்படாத புதிய கிருமி ஒன்று இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்

கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் 'ட்ரொஜன்'

.
கூகுள் அண்ட்ரோயிட் மொபையில் எனப்படுவது கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தின் மூலம் இயங்கும் கையடக்கத் தொலைபேசிகளாகும்.

இக்கையடக்கத் தொலைபேசிகளானது உலகம் பூராகவும் மிகவும் வேகமாக விற்பனையடைந்து வருவதும் போட்டியாளர்களை தனது வேகமான விற்பனை மூலம் அதிர்ச்சியடையச் செய்துவருவதும் நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

வாழ்க்கைப் பாடம் - மணிமேகலா

.

"வாழ்க்கைக்கான பாடம் வகுப்பறைக்கு வெளியே தான் இருக்கிறது"என்று சொல்வார்கள்.அதனை யாரும் சொல்லித் தருவதில்லை. நாமே சமூகம்,சூழல்,குடும்பம், நண்பர்கள்,அனுபவங்கள் வாயிலாகக் கற்றுக் கொள்கிறோம். அதனால் தான் நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்றனர். நல்ல நண்பர் வட்டம் வேண்டும் என்றனர்.குடும்பங்களுக்குள் வன்முறை கூடாதென்றனர்.அறம், பண்பாடு,சமயங்கள் தோன்றின.சட்டங்கள்,தண்டனை முறைகள் பிறந்தன.ஒழுங்கும் விதியும் அமுல்படுத்தப் பட்டன.

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 01

.
பதினேழாம், 18 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் சேவை புரிந்த ஐரோப்பிய அதிகாரிகளும், வரலாற்று ஆசிரியர்களும் இலங்கையின் சமுதாயங்களைப் பற்றிச் சில சமயங்களிலே தெளிவான உறுதியான குறிப்புகளை எழுதியுள்ளனர்.
இலங்கையில் ஒல்லாந்தர்களின் வசமாக இருந்த பிரதேசங்களை ஆங்கிலேயர்கள் போர் புரியாது, இரத்தம் சிந்தாது பெற்றுக் கொண்டார்கள்.

பிரமாண்ட பனிப்பாறை பிரிந்தது

.

கிறீன்லாந்து தீவிலிருந்து 260 சதுர கிலோமீற்றர் (100 சதுரமைல்) பரப்பளவுள்ள பனிப்பாறையொன்று உடைந்து பிரிந்துள்ளதாக அமெரிக்காவின் டெலாவர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

கிறீன்லாந்தின் வடமேற்கு கரையிலிருந்து இந்த பனிப்பாறை பிரிந்துள்ளது. கிறீன்லாந்திலிருந்து வருடாந்தம் ஆயிரக்கணக்கான பனிப்பாறைகள் பிரிகின்றன. ஆனால் 1962 ஆம் ஆண்டின் பின்னர் அதிலிருந்து பிரிந்த மிகப்பெரிய பனிப்பாறை இதுவாகும்.

தியாகி திலீபன் நினைவுப் பேச்சுப்போட்டி

 .
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு, இளையோர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்குடன் அவுஸ்திரேலியா மாநிலங்கள் தழுவிய பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.

தியாகி திலீபனின் நினைவுநாள் நிகழ்வு, தியாகி திலீபன் உயிர்த்தியாகமடைந்த 23 வருட நினைவுநாளான, எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி நியு சவுத்வேல்ஸ் மாநிலத்திலும், விக்ரோரிய மாநிலத்திலும் நடைபெறவுள்ளது.