தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட பஸ் சேவை

.

நாளை ஞாயிற்றுக்கிழமை 28.03.2010 சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெறும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட பஸ்சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வெஸ்மீட் புகையிரத நிலையத்தில் இருந்து சிட்னி முருகன் ஆலயத்திற்கும் சிட்னி முருகன் ஆலயத்தில் இருந்து வெஸ்மீட் புகையிரத நிலையத்துக்குமாக இந்த பஸ் வண்டிகள் செயற்படும். காலை எட்டுமணி முதல் மாலை ஜந்து மணிவரை இடம்பெற இருக்கும் இந்த சேவையில் ஒவ்வொரு அரை மணித்தியாலத்திற்கும் ஒரு பஸ் வண்டி புறப்பட இருக்கின்றது. கோவிலை அண்டிய பகுதிகளில் வாகனத் தரிப்பிட பற்றாக் குறையை போக்குவதற்கும் வாகனங்களில் வர வசதியற்றவர்களுக்குமாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

சிட்னி முருகன் ஆலயத்தில் ஏழாம் திருவிழா கோலாகலமாக நடந்தது.

.

26.03.2010
சிட்னி முருகன் கோவிலின் ஏழாம் திருவிழா பக்தர்கள் நிறைந்த திருவிழாவாகக் காணப்பட்டது. இன்று வெள்ளிக் கிழமை ஆனதினால் பக்தர்கள் கூட்டம் என்றும் இல்லாதவாறு காணப்பட்டது. முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த காட்சி மிக அழகிய காட்சியாக இருந்தது.
இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் இன்று வாசித்த நலம் தானா நலம் தானா என்ற தில்லானா மோகனாம்பாள் படப் பாடல் மனதை கொள்ளை கொண்டது.

முருகப்பெருமான் வீதி உலா வரும் காட்சியை வாசகர்களும் கண்டு ஆனந்தம் கொள்வதற்காக படங்களாக இணைக்கின்றோம்.



                          முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் காட்சி


                                ஆலயத்திற்கு வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர்



             நாதஸ்வர தவில் கலைஞர்களின் கச்சேரி கோவில் வீதியில் இடம்பெறுகின்றது.


                                                                                                                                 Photos by Gnani

       சுவாமி வீதி உலா வந்து கிழக்கு வீதியில் நிற்கும்போது சிறு பெண் குழந்தை தேவாரம் பாடுகின்ற காட்சி

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேரடி அஞ்சல் நிகழ்ச்சி

.

சிட்னி முருகன் ஆலயத்தின் ரதோற்சவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 28.03.2010 அன்று நடைபெறஇருப்பதை முன்னிட்டு அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி அஞ்சல் நிகழ்ச்சியை நடாத்த இருப்பதாக அறியக்கிடைத்தள்ளது. சிட்னி நேரப்படி காலை 10.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணிவரை இந்த நேரடி அஞ்சல் இடம்பெற உள்ளது. கோவிலுக்கு சென்று முருகனின் தேர் திருவிழாவில் பங்கு பற்ற முடியாத பக்தர்களுக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள் அதே போன்று தீர்த்த திருவிழாவையும் திங்கட் கிழமை காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணிவரை நேரடியாக அஞ்சல் செய்ய இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி முருகன் ஆலயத்தில் ஆறாம் திருவிழா

.

25.03.2010

சிட்னி முருகன் கோவிலின் ஆறாம்   திருவிழா பக்தர்கள் நிறைந்த திருவிழாவாகக் காணப்பட்டது. முருகப்பெருமான் வீதி உலா வந்த காட்சியை காணக் கண் ஆயிரம் வேண்டும் என்பதுபோல் மிக அழகிய காட்சியாக இருந்தது.


இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் இன்று வாசித்த காற்றில் வரும் கீதமே என்ற பாடல் மனதை கொள்ளை கொண்டது


முருகப்பெருமான் வீதி உலா வரும் காட்சியை வாசகர்களும் கண்டு ஆனந்தம் கொள்வதற்காக படங்களாக இணைக்கின்றோம்.





RADIOTHON

.

 அவுஸ்திரேலியா மருத்துவ உதவி நிதியம்
இன்பத்தமிழ் மற்றும் 2CCR வானொலிகள் மூலம் பணம் சேகரிப்பு 02 .04. 2010
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி வெள்ளிக்கிழமை (GOOD FRIDAY) காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை இன்பத்தமிழ் வானொலி மூலமாகவும் மெல்பேண் நகரில் 2CCR வானொலி மூலமாகவும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கும் நோக்கத்திற்காக நிதி சேகரிக்க உள்ளார்கள் . சிட்னியில் 02 9798 2993 லும் மெல்பேணில் 03 9419 8377 லும் தொடர்பு கொண்டு உங்களால் கொடுக்க கூடிய பணத்தை உறுதி செய்து கொள்ளும் படி அறிவித்துள்ளார்கள்.







சிட்னி முருகன் ஆலயத்தில் ஜந்தாம் திருவிழா

24.03.2010


சிட்னி முருகன் கோவிலின் ஜந்தாம் திருவிழா பக்தர்கள் நிறைந்த திருவிழாவாகக் காணப்பட்டது. முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் அமர்ந்திருக்க முருகனின் முன்னே பிறைச்சந்திரன் ஒலித்துக்கொண்டிருக்க வீதி உலா வந்த காட்சியை காணக் கண் ஆயிரம் வேண்டும் என்பதுபோல் மிக அழகிய காட்சியாக இருந்தது.நாதஸ்வர இசையுடன் வீதிஉலா வந்த முருகனுக்கு நான்கு மூலையிலும் மண்டபபடி போட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தென்கிழக்கு மூலையில் பிரசாதமாக வடை பரிமாறப்பட்டது பக்தர்கள் மகிழ்ச்சியோடு பிரசாதத்தை பெற்றுக்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் இன்று வாசித்த மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன என்ற தில்லானா மோகனாம்பாள் படப் பாடலும் தொடர்ந்து வந்த தில்லானா இசையும் பக்தர்களை கொள்ளை கொண்டது. இதன்போது தவில் வித்துவான்கள் தவில் வாசித்தi அழகை மக்கள் புகழ்ந்து பேசியதை கேட்கக்கூடியதாக இருந்தது. பாடலைத் தொடர்ந்த தனித்தவில் கச்சேரி மனதை வருடிச்சென்றது

முருகப்பெருமான் வீதி உலா வரும் காட்சியை வாசகர்களும் கண்டு ஆனந்தம் கொள்வதற்காக படங்களாக இணைக்கின்றோம்.

                                                                                                                                     Photos by Gnani.
                 முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் அமர்ந்திருக்க முருகனின் முன்னே     
                                 பிறைச்சந்திரன் ஒலித்துக்கொண்டிருக்க வீதி உலா வந்த காட்சி

 


                                   தெற்கு வீதியில் நாதஸ்வர கச்சேரி இடம் பெறுகின்றது.

 
                             திரண்டு வந்திருந்த பக்தர்களின் ஒரு பகுதியினர் இங்கே
 

                                                                                                                                 Photos by Gnani

சிட்னி முருகன் ஆலயத்தில் நான்காம் திருவிழா

.
23.03.2010



இன்று சிட்னி முருகன் ஆலயத்தில் நான்காம் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.வழமைபோல் பெருந்திரளான மக்கள் வருகைதந்திருந்தார்கள். நாதஸ்வர தவில் வாத்திய இசை முழங்க முருகப்பெருமான் இடபவாகனத்தில் சிவலிங்கத்துடன் அமர்திருந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
 
இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் இன்று வாசித்த ஒருநாள் போதுமா இன்றொரு நாள் போதுமா என்ற திருவிளையாடல் பாடலை கேட்பதற்கு ஒருநாள் உண்மையிலேயே போதாமல் தான் போய்விட்டது.மிக அற்புதமான இசை வெள்ளத்தில் அனைவரையும் நனைத்து விட்டார்கள்.
இக் காட்சிகளை வாசகர்களும் கண்டு ஆனந்தம் கொள்வதற்காக படங்களாக இணைக்கின்றோம்.
 
 
 
                           சிட்னி முருகன் ஆலயத்தின் ஒரு பகுதியும் முருகப்பெருமான் வீதி உலா வரும் காட்சியும்



                                                தெற்கு வீதியில் நாதஸ்வர கச்சேரி இடம் பெறுகின்றது.



                              திரளாக வந்திருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர்








                                                                                                                               Photos by gnani


சிட்னி முருகன் ஆலய மூன்றாம் திருவிழா

.


அருள்மிகு சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா தொடர்ச்சியாக நடைபெற்றவண்ணம் இருக்கின்றது 22.03.2010 திகதியான இன்று மூன்றாம் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.புலம்பெயர்ந்த நாடான ஒஸ்ரேலியாவில் பக்தர்கள் பகலிலும் இரவிலும் பெரும் திரளாக வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றார்கள்.முருகப்பெருமானின் கிருபையினால் காலநிலை மிகவும் நன்றாக அமைந்து யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் சன்னிதானத்திலே நிற்பதைப்போன்ற உணர்சியை ஏற்படுத்துகின்றது.தண்ணீர்பந்தல் மிகச்சிறப்பாக பலவகையான பானங்களை வழங்கி தாகசாந்தி செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.இரவு நிகழ்சி நாதஸ்வர தவில் கலைஞர்களான நாகேந்திரம் குழுவினரின் நாத வெள்ளத்தோடு முடிவடைந்தது அதில் அவர்கள் வாசித்த சங்கராபரணம் அற்புதமான இசையாக அனைவரையும் கவர்ந்து கொண்டது.
 
 

                                                                                                                                         





                                                                                                                       Photos By Gnani


சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா

இரண்டாம் திருவிழா

சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 21.03.2010 ல் இரண்டாம் திருவிழாவாக இடம் பெற்றது. இன்று அலை மோதிய மக்கள் முருகப்பெருமானின் அருள் வேண்டி திரண்டிருந்தார்கள். முருகன் யானை வாகனத்தில் வீதிஉலாவந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.