சுமங்கலியாக இருக்க நீ அமங்களியாக வேண்டுமா?
குடியும், குடித்த பின் அடியும் வாங்கப் பிறந்தாயா?
குடியுடன் கூடிக் கூடி குழந்தை பெறப் பிறந்தாயா?
குற்றியுரும், குறவயிருமாய் இருக்கத்தான் பிறந்தாயா?
அண்டி வாழ்ந்து உன் வாழ்கை தனை துறந்தாயா?
வாழப் பிறந்த சூட்சுமம் ஒன்றை மறந்தாயா?

விழித்தெழும் நேரம்,
இது தான் பெண்ணே;
உன் குழந்தைகளையும்,
அதுபோல் ஆக்காதே கண்ணே.

நீ படிக்க வில்லை, ஆனால்
வாழ்க்கைப் பாடமுமா,
இன்னும் படிக்கவில்லை?

விடியும் வரை காத்திருக்காதே,
விரைந்திடு விடியலைத் தேடி,
உன் விடுதலை நாடி,
நன்மைகள் கோடி -
உனக்கும் உன் குழந்தைகளுக்கும்.

சமர்ப்பணம்:

உலக பெண்கள் தினம் என்றே அறியாத,
படிக்காத, பாமர, பாரதப் பெண்ணுக்கு.