தமிழ்முரசு வாசக நெஞ்சங்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

.சித்திரை பிறப்பில் சிறந்திடும் வாழ்வு
சீரொடு  சிறப்பு நிறைந்திடும் எமக்கு

ஆசிரியர் குழு

ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது கலைவிழா

.
ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது கலைவிழா சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு ரவி ஆனந்தராஜா தலைமையில் சில்வர் வாட்டர் பகாய் சென்டரில் இடம் பெற்றது. அனைத்து வகுப்பு மாணவர்களினதும் நாடகங்கள் ஆடல்கள் பாடல்கள் என்று கண்ணைக் கவர்ந்த நிகழ்வாக இடம்பெற்றது. HSC  வகுப்பில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் தமிழ்க் கல்விநிலையத்தின் சிறந்த மாணவர்களுக்கும்  பரிசில்கள் வழங்கப்பட்டது .
நிகழ்வு முடிவடைய இரவு 12.15 மணியாகியது.சிட்னியில் சித்திரைத் திருவிழா

.

.
சிட்னியில் சித்திரைத் திருவிழா தமிழர் நிகழ்வு
ஞாயிற்றுக்கிழமை 13.04.2014 காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கோலாகலமாக இடம் பெற்றது. கரகாட்டம் காவடியாட்டம் பாடல்கள் ஆடல்கள் என்று நாள் முழுவதும் கொண்டாட்டமாக றவுஸ்கில் குதிரைப்பந்தய திடலில் மாபெரும் உள்ளரங்கத்தில் இடம்பெற்றது தமிழர் புதுவருட கொண்டாட்டமான சித்திரைத் திருவிழா. மக்கள் திரண்டிருந்த இந்த விழாவிற்கு பரமட்டா மற்றும் ஸ்ரத’பீல்ட் பாராழுமன்ற உறுப்பினர்களும் வருகைதந்திருந்தார்கள். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த கலைஞர்களோடு உள்ளுரக்கலைஞர்களும் பங்குபற்றி சிறப்பித்தார்கள்.
இந்த விழாவை தமிழ்க்கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆதரவோடு நடாத்தியது.


வருசப்பிறப்பு வந்திட்டுது - கானா பிரபா

.
புதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார். வீடு காயும் மட்டும் அறையளுக்குள்ளை போகேலாது எண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போட்டு விடுவினம். வெளியில முத்தத்தில இருக்கிற வேப்பமர நிழலில் கதிரை போட்டு சாப்பாடு தருவினம். பள்ளிக்கூட லீவும் விட்டுவிடுவினம் என்பதாலை ஊரிலை இருக்கிற குஞ்சு, குமர் எல்லாம் இப்பிடித்தான் இருக்க வேண்டிய நிலை பாருங்கோ.

வரியப்பிறப்புக்கு முதல் நாள் கோயிலடிக்குப் போய் ஐயர் வீட்டுப் படலையைத் தட்டி ஒரு ருவா குடுத்தா, கொண்டு போன பிளாஸ்டிக் போத்தலுக்குள்ளை,அல்லது சருவசட்டிக்குள்ளை நிறைய மருத்து நீரை அள்ளி இறைப்பார். மருத்து நீர் எண்டா என்ன எண்டு ஆவெண்டு வாயைப் பிளக்காதேங்கோ, மாட்டின் கோசலத்தோட இன்ன பிற திரவியங்களும் கலந்து, அறுகம்புல்லையும் நிறைச்சு ஒரு பெரிய கிடாரத்துக்குள்ளை ஐயர் கலக்கி வச்சிருப்பார். 

இலங்கைச் செய்திகள்

.

கோபி, அப்பன்,தேவியனின் இரத்த மாதிரிகளில் பரிசோதனை

தகவல் தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்

நாட்டில் தொடரும் மழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

ஆஸி. செல்ல முயற்சித்த 26 பேர் ஒரு கோடி ரூபா சரீரப் பிணையில் விடுதலை

மாணவர்களுக்கு விரிவுரைகளுக்குச் செல்ல தடை

பொகவந்தலாவை பிரதேசத்தில் மண்சரிவு

பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி இலங்கை வருகை

பிக்குமாரையும் மௌலவிமாரையும் விரட்டியடித்த பொது பல சேனா

யாழ்.மிருசுவில் பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

மனித உரிமைகள் நிலைவரம்: கவலையளிக்கும் நாடொன்றாக இலங்கை இடம்பிடிப்பு
========================================================================கோபி, அப்பன், தேவியனின் இரத்த மாதிரிகளில் பரிசோதனை


வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகியோரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு

.

சிட்னி தமிழர் கத்தோலிக்க ஒன்றியம் வருடாவருடம்  நடாத்தும் தமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு நிகழ்வு  அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊ டாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியிலிலிருந்து மாலை 6.00 மணிவரை நடைபெற்றது. இதில் பெறப்பட்ட பணம்   ஹரித்தாஸ் அவுஸ்ரேலியா  ஊடாக தாயகத்தில் அல்லல் படும் மக்களுக்கு வழங்கப்படுகின்றது. மாலை 3 மணியளவில் 18000 வெள் ளிகள் வரை பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Tamil asylum seeker fighting for his life

.
A Sri Lankan asylum seeker on a bridging visa is fighting for his life after dousing himself in petrol following a decision by the Australian immigration department to deport him back to Sri Lanka.
The man, whose first name is Janarthanan and who is in his late 20s, was on a bridging visa and had been working as a cleaner in Sydney's inner-western suburb of Balmain.
The Tamil asylum seeker, who had been living in Australia for at least 18 months, was this week told by the department that his application for a permanent protection visa had been denied and he would have to return to Sri Lanka, the convener of the Tamil Refugee Council, Trevor Grant, said.
Critical condition: Janarthanan, who was on a bridging visa and living in Western Sydney.
Critical condition: Janarthanan, who was on a bridging visa and living in Sydney. Photo: Supplied
On Wednesday night Janarthanan doused himself in petrol and set himself alight shortly after 8.30pm near the shipyard in Balmain, causing severe burns to 70 per cent of his body.
NSW police confirmed the man was in a ''critical condition'' in Concord Hospital on Thursday night.
Janarthanan, who had come to Australia after fleeing the Sri Lankan authorities, had left a suicide note saying he would rather die in Australia than die in Sri Lanka, Mr Grant said. Tamil asylum seekers are living in continual fear that they will be sent back to Sri Lanka, he said.
A report by the Human Rights Law Centre last month showed many asylum seekers who are sent back to the country face the threat of torture from the very authorities they had fled. Late last month the United Nations Human Rights Council ordered an international investigation into alleged war crimes in Sri Lanka. Australia did not co-sponsor the bill.
Immigration Minister Scott Morrison said it was a "deeply distressing incident".
"The government’s focus is to ensure for the proper care and support of this young man, in partnership with the Sri Lankan high commission," a spokesman for Mr Morrison said.
The government confirmed that the young man "was found not to be owed protection and this decision was affirmed on appeal by the Refugee Review Tribunal earlier this month".


Read more: http://www.smh.com.au/federal-politics/political-news/tamil-asylum-seeker-fighting-for-his-life-20140410-zqt6q.html#ixzz2ylrEck27


Nantri smh.com

திரும்பிப்பார்க்கின்றேன் -முருகபூபதி

.
 மௌனமே    மொழியாக   முதியோர்   இல்லத்தில்     படைப்பாளி  காவலூர்  ராசதுரை
வருங்காலத்தில்   நாம்   கடக்கவிருக்கும்   பாதையில்   பயணிக்கும்   ஆளுமை

  இதுவரையில்     நான்   எழுதிய  திரும்பிப்பார்க்கின்றேன்    தொடர்பத்தியில்  பெரும்பாலும்    மறைந்தவர்களைப்பற்றித்தான்  எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில்  நிலைத்த  நெஞ்சங்கள்  தொடரிலும்   மறைந்த 12 ஆளுமைகளை    பதிவுசெய்துள்ளேன்.    இந்தத் தொடர்  பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது   ஒரு   இலக்கிய   சகோதரி  என்னிடம்   ஒரு  வினாவைத் தொடுத்தார்.   குறிப்பிட்ட   தொடரில்  நான்  மறைந்த  ஆண் படைப்பாளிகளைப்பற்றி   மாத்திரம்   எழுதியதாகவும்   பெண்களைப்பற்றி எழுதவில்லை   என்றும்   புகார்    எழுப்பியிருந்தார்.
பெண்களுக்கு   ஆயுள்   அதிகம்   என்று   மாத்திரம்   பதில்   சொன்னேன். அந்தத்தொடரில்   இடம்பெற்றவர்கள்   அனைவரும்   மறைந்துவிட்ட ஆண் படைப்பாளிகள்தான்.
அவுஸ்திரேலியாவுக்கு  நான்   புலம்பெயர்ந்து  27 வருடங்களாகின்றன. கால்நூற்றாண்டுக்கும்  அதிகமான   காலப்பகுதியில்   நான்   நேசித்த - என்னை  நேசித்த   பலரும்   விடைபெற்றுவிட்ட சோகம்   தனிப்பட்ட   ரீதியில் என்னை   தொடர்ந்து    வந்துகொண்டுதானிருக்கிறது.
திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரில்   தற்சமயம்   எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களைப்பற்றியும்   எழுதவேண்டும்   என்ற  எண்ணம் கடந்த   சில   நாட்களாக   எனது   மனதில்   உருவாகிவருகிறது.

வட மாகாணத்தில் 9982 மாணவர்கள் சித்தி

.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளில் வட மாகாணத்தில் 9982 பேர் சித்தியடைந்து உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி தமிழ் பாடசாலைகளில் முதலிடத்திலும் அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்திலும் உள்ளது.  2013ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இம்முறை வடக்கில் 65.33வீத மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதன் படி கடந்த 2013ஆம் ஆண்டில் வட மாகாணத்தைப் பொருத்த வரையில் 15 ஆயிரத்து 820பேர் பரீட்சைகளுக்கு தோற்றி 9 ஆயிரத்து 982பேர் இவற்றில் உயர்தரத்திற்கு தகுதியடைந்துள்ளனர். குறிப்பாக வட மகாணத்தைப் பொருத்தவரையில் யாழ்ப்பாணத்தில் 8396 பரீட்சார்த்திகளும், வவுனியாவில் இருந்து 2478 பேரும், மன்னாரில் இருந்து 1517 பேரும், முல்லைத்தீவில் இருந்து 1318 பேரும், கிளிநொச்சியில் இருந்து 1571 பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர். அதேபோல் இம்முறை சாதாரண தரப் பரீட்சைகளில் வட மாகாணத்தினை பொறுத்தவரையில் 131பேர் அனைத்து பாடங்களிலும் சிறப்பு சித்தி பெற்றுள்ளதோடு 356பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பரீட்சையில் சித்தியடைந்த வீதத்தின் படி பாடசாலை மட்டத்தில் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி அகில இலங்கை ரீதியில் ஆறாவது இடத்திலும் தமிழ் பாடசாலைகள் அடிப்படையில் முதல் இடத்திலும் உள்ளது. அதேபோல் யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு பாடசாலையான யாழ். இந்துக் கல்லூரி அகில இலங்கை ரீதியில் 27வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியக் காட்சிகள் 3 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.
----------------------------------------------------------------------------------
காதலா ? செல்வமா?
காட்சி இரண்டில் இடம்பெற்றதைப் போன்ற மற்றுமொரு காட்சியைச் சித்தரிக்கும் இன்னுமொரு பாடலையும் பார்ப்போம். இதுவும் நற்றிணையிலேயே இடம்பெறுகின்றது.
வளமாக வாழ ஆசைப்பட்டான் ஒருவன். அதற்குப் பொருள் வேண்டும். சொந்த ஊரிலேயே இருந்தால் பெருமளவு பொருளைச் சம்பாதிக்க முடியாது. எனவே வெளியூர் சென்று பொருளீட்ட முனைந்தான். அவனது மனம் அதைத்தான் வலியுறத்தியது. ஆனால் அதேவேளைää அவ்வாறு தான் வெளியூர் சென்றால்ää தன் உள்ளத்தில் குடிகொண்டுள்ள காதலியைப் பிரியவேண்டி ஏற்படும் என்று அவனுக்கு வேதனையாக இருந்தது. ஒருநாள்கூட அவளைப் பிரிந்திருக்க அவனால் முடியாது. பொருள்தேடிப் போகவும் வேண்டும். அவளைப் பிரியாது இருக்கவும் வேண்டும். இரண்டையும் செய்வது என்பது இயலாது. ஏனெனில் அவளைத் தன்னொடு கூட்டிச் செல்ல முடியாது. ஆதனால்ää ஏதாவது ஒன்றை இழந்தே ஆகவேண்டிய நிலைமை. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் மனதிடம் சொல்லுகின்றான்.

ஒரு தீவையே கடத்திய திருடர்கள் அம்பலம்

.

சிங்கப்பூரில் திரையிடப்பட்ட பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் கூத்து

.

April 12th, 2014 அன்று பிரசுரிக்கப்பட்டது.
பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் சிங்கப்பூரில் நேற்றைய தினம் 11ஆம் திகதி இரவு ஒளிப்படக் காட்சியாக இந்தியச் சங்கத்தில் காண்பிக்கப்பட்டது. அவையோர்களை உணர்வு பூர்வமாக வசீகரித்த நாடகமாக இராவணேசன் இருந்தது.
நேற்று நடை பெற்ற இராவணேசன் கூத்து காணொளி நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் நாடக மற்றும் கலை இலக்கியத்தை முன்னெடுப்பவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்களால் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் நிரம்பியிரு ந்தது.
சிங்கப்பூரில் அரச ஆதரவுடன் தமிழ் மாதம் வருடம்தோறும் நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் தினம் தோறும் கலைநிகழ்வுகள் இடம்பெறும். அதில்ஒரு நிகழ்வாக இம்முறை ஏப்ரில்11ஆம் திகதிமாலை 7.30க்கு அகண்ட திரையில் இராவணேசனை இங்கு காணொளியில் (DVD show) காட்ட சிங்கபூர் இந்திய சங்கத்தினர் ஒழுங்குசெய்திருந்தனர்.
இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. இருப்பினும் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்ற இந்திய மரபுப் பார்வையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

Australian Medical Aid Radiothon 2014 18 -04 -14

.

உலகச் செய்திகள்


கமெரூனில் இரு மதகுருமாரும் கன்னியாஸ்திரியும் கடத்தல்

எம்.எச்.370 விமானத்தினது என நம்பப்படும் புதிய இரு சமிக்ஞைகள் ஆஸி. கடற்படைக் கப்பலால் அவதானிப்பு


கமெரூனில் இரு மதகுருமாரும் கன்னியாஸ்திரியும் கடத்தல்

07/04/2014   கமெரூனில் இரு இத்தாலிய மதகுருமாரும் கனேடிய கன்னியாஸ்திரியொருவரும் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சனிக்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக இத்தாலிய வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
கமெரூனின் வடமேற்கேயுள்ள மரோவா மாவட்டத்திலுள்ள கட்டடமொன்றை கொள்ளையிட்ட ஆயுததாரிகள், மேற்படி மதகுருமாரையும் கன்னியாஸ்திரியையும் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட மதகுருமாரில் ஒருவர் கமெரூனில் கடந்த 6 வருடங்களாக தங்கியிருந்ததாகவும் மற்றைய மதகுரு அந்நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன்பே வந்ததாகவும் இத்தாலிய ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது நன்றி வீரகேசரி 

திருமறைக் கலா மன்றில் வேள்வித் திருமகன்

.
news
திருமறைக் கலா மன்றத்தில் திருப்பாடலின் காட்சி 'வேள்வித் திருமகன்" நாடக ஆற்றுகை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இரண்டாவது நாளாக இன்றும் மேடையேற்றப்பட்டது.
இந்த நாடக ஆற்றுகை நாளை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை மாலை 6.45 மணிக்கு யாழ்.திருமறைக்கலா மன்றத்தில் ஆரம்பமாகும்; என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
கிறிஸ்தவர்களின் கடவுளான யேசுநாதர் பிறப்பு காட்சி தொடக்கம் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள், காட்டிக்கொடுப்புகளூடாக சிலுவையில் அறையப்படுவது வரை இந்த நாடக ஆற்றுகையில் காட்சிப்படுத்தப்பட்டன. 

கி.வா.ஜ. பிறந்த நாள் நினைவாக…

.
என்னவோ படித்துவிட்டு, என்னவோ வேலை செய்து, ஏதோ ஓர் உந்துதலில் திடீரென ஒரு நாள் பத்திரிகை அலுவலகத்தில் பணிக்காகக் கால் வைத்த எனக்கு இதழியல் நுணுக்கங்கள் அவ்வளவாய்த் தெரியாதுதான். ஆனால், மிகக்  குறுகிய காலத்திலேயே சென்னை வாழ்க்கை சில பல படிப்பினைகளைத் தந்தது என்றாலும், மூத்த இதழாளர்களின் வழிகாட்டலும் அரவணைப்பும் எனக்குக் கிடைத்தது பெரும் பேறு.
KiVaJa
ஒரு சிலரை பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில்தான்  படித்திருந்தேன் என்றாலும், அவர்கள் தொடர்புடையவர்கள் அல்லது சீடர் குழாமை சந்திக்கும் வாய்ப்பு பெற்றதும் பெரும் பேறுதான்.
இலக்கிய யாகம் வளர்த்த தென்காசியில் ரசிகமணியின் பெயரனார் தீப.நடராஜன் உள்ளிட்டோருடன் ஒரு தொடர்பு இருந்ததென்றால், நம் ஊர்க்காரர் என்று சொல்லிச் சொல்லியே உரம் ஏற்றப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கமும் ஏ.என்.சிவராமனும் பத்திரிகையியல் தாகத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இருந்தாலும், தமிழ்த் தாத்தா என்று உ.வே.சா. உரம் ஏறிய அளவுக்கு அவர் சீடர் பெயர் மனத்தில் பதியாமல் போனது. பள்ளிக்கூடப் புத்தகத்தில் அவர் பெயர் அழுத்தமாய் ஏறாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும் ஓரளவு வயது வளர்ந்த நிலையில், சிற்சில ஏடுகள் அந்தப் பெயரைப் பளிச்சிட்டுக் காட்டின.

தமிழர் தாய் நிலங்களை கபளீகரம் செய்வதே அரசின் தீர்வு: முதலமைச்சர்

.

News Service
தெற்கிலிருந்து மக்களைக் கூட்டி வந்து இராணுவத்தின் ஏற்பாட்டில் அவசர அவசரமாக வன்னியில் குடியேற்றம் செய்யும் ஒரு தலைபட்சமான தீர்வில் மட்டும் அரசு ஈடுபாடு காட்டி வருகின்றது. இராணுவ உதவியுடன் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் போன்ற இடங்களில் இதுதான் நடக்கின்றது. இப்படி வேதனையுடன் அரசை நோக்கிக் குற்றம் சுமத்தியிருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன். தேசியப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு ஒன்றைக் காணும் ஈடுபாடு ஏதும் அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ கிடையாது என்றும் அவர் கூறுகின்றார்.
  
நிரந்தரமான, நிலையான தீர்வு ஒன்றைக் காணும் திசையை நோக்கி நிறைவேற்று அதிகாரம் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கையில் பங்குபற்றாமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு மீத குற்றம் சுமத்துவதில் மட்டுமே அவருக்கு நாட்டம் உள்ளது என்றார் முதலமைச்சர். கொழும்பில் பேர்னாட் சொய்ஸா நூற்றாண்டு நினைவு தின உரை இன்று கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வன்னியில் இலவசமாகக் காணி பெறுவதற்கு சிங்களவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படும் நோட்டீஸ்கள் தெற்கின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிகள் எனக்கும் கிடைத்தன. அத்தகைய இலவச காணியைப் பெற்றுக் கொண்ட சிலரை வவுனியாவில் உள்ள எனது நண்பர்களுக்குத் தெரியும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை கபளீகரம் செய்வதுதான் ஜனாதிபதி குறிப்பிடும் நிலையான, நிரந்தரத் தீர்வு போலும். நாடாளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கைகளுக்கு வராமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதில்தான் அரசுக்கு அதிக நாட்டம். அரசியல் உள்நோக்கம் கொண்டு இப்போது 'புலிகள் மீள அணி சேர்கின்றன' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அரசியல் உள்நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேட்டையின் கீழே பெரும் எண்ணிக்கையானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் சினிமா

.

கோலிசோடாசாலை ஓரங்களில் சில சமயங்களில் கண்ணில்படும் அழுக்கு உடையணிந்த சிறுவர்களை பார்க்கின்றபோது நம்ம நிலைமை எவ்வளவோ தேவலையப்பா என்றுதான் நினைக்கத் தோன்றும்.. தெருக்களில் கிடக்கும் பொருட்களை அள்ளி தோளில் சுமக்கும் சாக்குப் பைகளில் போட்டுக் கொண்டு ரோட்டோர டீக்கடைகளில் பன்னும்இ டீயும் குடித்துவிட்டு அக்கம்பக்கம் மலங்க மலங்க விழிக்கும் சிறார்களை பார்த்து பயந்ததுண்டு.. பாவப்பட்டதுண்டு.. 

இப்படிப்பட்ட வாழ்க்கை இவர்களுக்கு ஏன் முருகா என்று வருந்தியதுண்டு..! இன்றைக்கும் கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் நுழைந்தால் இவர்களை போல நூறு சிறுவர்களை பார்க்கலாம்.. காய்கனிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் உள்ளே நுழையும்போதேஇ அதன் பின்னாலேயே ஓடி வந்து துண்டு போட்டு மூட்டைகளை இறக்க அனுமதி கேட்கும் சிறார்களை இன்றைக்கும் கோயம்பேட்டுக்கு போனால் நீங்கள் பார்க்கலாம். ஒரு மூட்டையை இறக்கினால் 5 ரூபாய்.. இப்படித்தான் அந்த அதிகாலை வேளையில்  4 மணியில் இருந்து 8 மணிக்குள்ளாக வரும் அனைத்து வண்டிகளுக்கும் ஆளாய்ப் பறப்பார்கள் அந்த சிறுவர்கள். அதில் வரும் காசுதான் அவர்களின் அன்றாடப்படி.. இந்தச் சிறுவர்களின் தாய் தந்தை யார்.. குடும்பம் எங்கே..? உற்றார்இ உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாது.. ஏன் அவர்களுக்கே தெரியாது.. அது பற்றிய சிந்தனையே இல்லாமல் கிடைக்கின்ற காசில் சாப்பிட்டுவிட்டு மீண்டும்இ மீண்டும் உழைத்துக் கொண்டேயிருக்கும் 4 சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சின்ன கதைதான் இந்த கோலிசோடா..! புள்ளிஇ குட்டிமணிஇ சித்தப்பாஇ சேட்டு என்ற நான்கு சிறுவர்களும் ஆச்சியின் கடையில் ஏற்றல் இறக்கல் வேலைகளைச் செய்து பிழைத்து வருகிறார்கள்.. இவர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் ஆச்சி.. கோயம்பேடு மார்க்கெட்டையே கைக்குள் வைத்திருக்கும் மீட்டர் வட்டி தாதா நாயுடுவின் உதவியை நாடுகிறாள். நாயுடு பலவித யோசனைகளுடன் மூடிக் கிடக்கும் ஒரு கடையைக் கை காட்ட.. அதில் ஆச்சி மெஸ் உருவாகிறது..! இந்தப் பையன்களின் கடின உழைப்பில் ஆச்சியின் அரவணைப்பில் மெஸ் ஓஹோவென ஓடிக் கொண்டிருக்கும்போது நாயுடுவின் மைத்துனன் மயிலின் வில்லங்கத்தால் அதில் ஓட்டை.. ஒரு இரவு நேரம் குடித்துவிட்டு.. பஸ்ஸுக்காக காத்திருந்த பெண்ணை நைச்சியமாக அங்கே அழைத்து வந்து ஏமாற்றி அனுபவித்துவிட்டு.. அங்கேயே தூங்கியிருந்து காலையில் எழுந்தும் டார்ச்சர் செய்யும் மயிலை இந்தப் பையன்கள் அனைவரின் முன்பாகவும் அடித்துவிட.. பிரச்சினை இங்கேயிருந்துதான் துவங்குகிறது..! கவுரவம் என்ற ஒற்றைச் சொல்லுக்காகவே உயிர் வாழும் நாயுடு.. இது தன்னுடைய கவுரவப் பிரச்சினை என்று சொல்லி பையன்களை அடிக்கச் சொல்லி ஏற்பாடு செய்ய.. அதுவும் சொதப்பலாகி.. போலீஸ் கேஸாகிறது.. மறுபடியும் ரவுண்டு கட்டி அடித்து பையன்களை பிரித்து இந்தியாவின் ஆளுக்கொரு மூலையில் கொண்டு போய் தள்ளுகிறார்கள்.. இராப்பகலாக உழைத்துஇ உழைத்து 

உருவாக்கிய அந்தக் கடையை நம்பியே வாழ்ந்திருந்த அந்த நால்வருக்கும் அந்தக் கடையை விட்டுக் கொடுக்க மனசில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் தனித்தனியே பிரிந்திருக்கிறாகள். அவர்களது உற்ற தோழியாக இருக்கும் ஏடிஎம் என்ற சீதாஇ இவர்களைத் தேடிப் பிடித்து ஒன்று சேர்க்க.. இவர்களுக்குள் ஒரு வைராக்கியம் பிறக்கிறது. எப்பாடுபட்டாவது அந்த ஆச்சி மெஸ்ஸை மீட்டே தீர வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான் மிச்சம்இ மீதி படம்..! ஏற்கெனவே ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தினை இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்இ அதைவிட பரபரப்பாக இந்தப் படத்தினை படைத்திருக்கிறார்..! முதல் பாதியில் முக்கால்வாசி நேரமும் படம் எதை நோக்கி போகிறது என்பதே தெரியாமல் இருந்தாலும் இடைவேளையின்போதுதான் படத்தின் கதையே துவங்குகிறது.. அங்கிருந்து துவங்கும் விறுவிறுப்பான திரைக்கதையை அதன் டெம்போ குறையாமல் கடைசிவரையிலும் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்..! அந்தச் சிறுவர்கள் நான்கு பேரும் ஷார்ப்பான செலக்சன்.. ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கும் பட்டப் பெயர்கள்.. அதற்கு அவர்கள் சொல்லும் காரணப் பெயர்கள் எல்லாமே நகைச்சுவை ததும்பிய சோகங்கள்..! அந்த வயதுக்கே உரித்தான எதிர் பாலின கவர்ச்சி.. அதை அடையும் பொருட்டு அவர்கள் செய்யும் குட்டிக் கலாட்டாக்கள்.. அதன் எதிர்வினை.. பள்ளிக்குச் செல்லும் மாணவியிடம் செல்போனை வைத்து டிராமா போடுவது.. பின்பு அவள் யாரென தெரிந்து ஜெர்க் ஆவது.. ஆச்சி அவர்களை அதன் பின்பும் அரவணைப்பது என்று சட்டு சட்டென்று திரைக்கதை மாறினாலும்இ ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்தின் பாசம்இ நேசம்இ அன்புஇ முட்டல்இ மோதல்களை இயல்பாகவே சொல்லியிருப்பதால் ரசிக்க முடிகிறது..! நான்கு பையன்களின் கடின உழைப்பை மயிலுடனான சண்டை காட்சியில் காண முடிகிறது.. மிக பரபரப்பான அந்தச் சண்டை காட்சியை அமைத்துக் கொடுத்திருக்கும் சண்டை பயிற்சியாளரையும் அதனை கச்சிதமாக படம் பிடித்திருக்கும் விஜய் மில்டனையும் எவ்வளவு பாராட்டனாலும் தகும்.. அந்த ஒரு காட்சிக்கே காசு செத்துச்சு எனபார்களே… அந்த டயலாக்கை இந்தப் படத்தின் இந்தக் காட்சிக்கு சொல்லிக் கொள்ளலாம்..! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் ஸ்கெட்ச்.. மந்திரவாதி என்ற இமான் அண்ணாச்சிக்கு ஒரு சோகக் கதை.. அவ்வப்போது இவர் செய்யும் அலப்பறைகள்தான் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.. போலீஸ் ஸ்டேஷனில் தண்ணியடித்துவிட்டு குடிகாரர்களின் சார்பாக இவர் பேசும் வசனங்கள் நிச்சயம் உம்மணா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும்.. யாமெனி கேரக்டரைவிட ஏடிஎம் என்னும் அந்தச் சின்னப் பெண்ணின் தேர்வும்இ நடிப்பும் கச்சிதம்.. இப்படியொரு கேரக்டரை படைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள்.. மெஸ்ஸின் வாசலில் பையன்களை நையப்புடைக்கும் காட்சியில்  யாமெனியும்இ ஏடிஎம்முன் உட்புகும் காட்சிகளும்இ சண்டையில் அவர்களுக்கு உதவுகின்ற போர்க்களமும் ஒரு வித்தியாசமான உணர்வை பார்வையாளர்களுக்கு நிச்சயம் தரும்.. இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணாமாகவும் இருக்கலாம்..! சேலம் சுஜாதாவிற்கு மிக அழுத்தமான கேரக்டர்.. தன்னை கிண்டல் செய்வதைக்கூட தாங்கிக் கொண்டு பையன்கள் மீது உண்மையான அன்பு வைத்திருந்து அவர்களுக்காக செய்யும் உதவிகளும்.. தன் மகளை சைட் அடிக்கிறார்கள்.. ஒரு பையன் காதலிக்கிறான் என்று தெரிந்தும் உதவிகளைத் தொடர்ந்து செய்வதும்.. மார்க்கெட் சங்கத் தேர்தலில் நிற்க வந்து நின்றுஇ நாயுடுவிடம் தப்பு பண்ணிட்ட.. என்று முறைப்பு காட்டும்விதத்திலும்   இந்த ஆச்சி அசத்தியிருக்கிறார்.. ஒளிப்பதிவின் நாயகனே படத்தின் இயக்குநர்தான் என்பதால் ஒளிப்பதிவு பற்றி சொல்லியா தர வேண்டும்..? கோயம்பேட்டின் பிரமாண்டத்தை பல காட்சிகளில் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இவரது கேமிரா இருட்டிலும்கூட மென்மையான ஒளியில் காட்சிகளை மிக அழகாக படமெடுத்திருக்கிறது.. ஒரு பக்கம் கேரளா.. இன்னொரு பக்கம் அரபிக் கடல்.. இன்னொரு கோணம் பெளத்த கோவில்.. என்று பல இடங்களிலும் இந்த கேமிரா கவிஞனின் கேமிரா இயங்கியிருக்கிறது.. துண்டு துண்டான சில பாடல் காட்சிகள் இருப்பதுதான் ஒரேயொரு குறை.. ஆனாலும்  இசையமைப்பாளர் பின்னணி இசையில்தான் அதிக கவனம் செலுத்தி அதிரடி ஆடியிருக்கிறார்..  சம்பந்தமே இல்லாமல்இ கடைசியான ஒரு பாடல் காட்சியில் புவர் ஸ்டார் சீனிவாசனும்இ ஆண்டர்சனும் செம ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.. வெகுஜன ரசிகர்களையும் கொஞ்சம் திருப்திப்படுத்த வேண்டியிருக்கிறது என்கிறார் இயக்குநர். இயக்குநர் பாண்டிராஜின் வசனங்கள் படத்திக்கு மிகப் பெரிய பலமாகவே அமைந்திருக்கிறது.. பையன்களின் சோக்க் கதையை வசனத்தாலேயே கடந்து செல்கிறார்.. ஆச்சியை மருத்துவமனையில் நாயுடு மிரட்டும்போது நான் நேத்தே செத்து போயிட்டேன் என்று சொல்லும் அந்த ஒரு வரி வசனம் பல கதைகளைச் சொல்கிறது.. இமான் அண்ணாச்சி போலீஸிடம் பேசும் வசனங்கள்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயுடுவை சமாதானப்படுத்த முயலும் காட்சிகள்.. இறுதியில் தங்களுக்கென இருக்கும் ஒரேயொரு அடையாளமே அந்த ஆச்சி மெஸ்தான் என்பதை மட்டுமே பையன்கள் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அவர்கள் பையன்களாகவே இருக்கிறார்கள் என்பதை நாயுடுவுக்கும்இ ஆடியன்ஸுக்கும் கச்சிதமாகப் புரிய வைத்திருக்கிறார்கள்..! நாயுடுவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. கவுரவத்திற்காக அவர் எதையும் செய்வார் என்பதையும் அளந்துஇ அளந்து வசனத்தில் கொடுத்திருக்கிறாகள்.. மெஸ்ஸில் ஒரு பெண்ணை பயன்படுத்தியதற்காக மயிலையும் அடித்துவிட்டுஇ பையன்கள் அடித்தது தப்பு.. அது எனக்கு கவுரவப் பிரச்சினை.. என்று சொல்லி குண்டை தூக்கிப் போடும் அந்த கவுரவமான நடிப்புக்கு ஒரு சோடா கடையையே எழுதி வைக்கலாம்..! மனிதர் வாழ்ந்திருக்கிறார்.. மொட்டையடித்த நிலையில் பையன்களை தேடி வந்து உதைக்கும் காட்சியிலும்இ அந்த கிளைமாக்ஸில் அவருக்கு இருக்கும் அந்தச் சின்ன டிவிஸ்ட்டும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது..! இத்தனை நல்லவராக இருப்பவர் ஏன் கவுரவத்தை முதன்மையாக நினைக்கிறார்..? அடித்துத் துரத்துபவர் கொலையே செய்திருக்கலாமே..? ஆளுக்கொரு மூலையில் கொண்டு போய்விடப்பட்டவர்கள்.. ஒரு சின்னப் பெண்ணின் முயற்சியால் ஒன்றிணைவது சாத்தியமா..? சின்ன பையன்களை நம்பி ஆச்சி தன்னையே பணயம் வைப்பது.. இத்தனை பெரிய ரவுடிக்கு எதிராக களமிறங்க ஒரு நொடியில் முடிவெடுப்பது.. ஆத்தாவை பாசத்துடன் கட்டியணைத்த நிலையிலேயே ஆர்வத்தில் பெண்ணின் கையையும் பிடித்திழுக்கும் காதல் காட்சி..  சில இடங்களில் அவர்களது வயதுக்கு மீறிய வசனங்கள்.. கோயம்பேட்டில் எது நடந்தாலும்இ போலீஸின் கைகள் கட்டப்பட்டிருப்பது.. போன்ற காட்சிகளெல்லாம் படத்தின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்ப்பதாகவே இருந்தாலும்இ திரைக்கதையின் வேகத்தில் இதுவெல்லாம் வீட்டுக்கு வந்த பின்புதான் தோன்றுகிறது..! இதில் இருக்கும் டிவிஸ்ட்டுகளும்இ சில காட்சிகளும் பலமான குறியீடுகளாகவே படத்தில் தென்படுகின்றன.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் படம் அவார்டு படமாகும் சூழல் வருவதால் அதனை நாம் தவிர்த்துவிடுவோம்..! சின்னச் சின்ன குறைகளை  பொருட்படுத்தாமல் விட்டோமானால்.. வழக்கு எண் போலவே இந்தப் படமும் தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் கருதப்படும்.. இயக்குநர் விஜய் மில்டனுக்கும்இ நடித்தவர்களுக்கும்இ தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.. இந்தப் படம் நிச்சயம் பல விருதுகளை வாரிக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை..! மிஸ் பண்ணிராதீங்க..! -உண்மைத்தமிழன்