மரன அறிவித்தல்

.
திருமதி சீதாதேவி அருட்சோதி

மலர்வு: 03.12.1938 உதிர்வு: 29.11.2014
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்,திருச்சி (இந்தியா), மொன்றியல் (கனடா) Sevenhills சிட்னி அவுஸ்திரேலியாவை வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி சீதாதேவி அருட்சோதி அவர்கள் 29.11.14 அன்று
சிட்னி அவுஸ்திரேலியாவில் இறைவனடி சோர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான இராமசாமி தையல்முத்துவின் அன்பு மகளும், இராமசாமி சின்னத்தங்கத்தின் அன்பு மருமகளுமாவார். அவர் இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர் அருட்சோதியின் அன்பு மனைவியும்,அன்பழகன் (Seven hills ) சிட்னி அவுஸ்திரேலியா), பாலசூரியர் (மொன்றியல் கனடா), ஜீவராணி (Seven hills  சிட்னி  அவுஸ்திரேலியா)   ஆகியோரின் அன்புத்தாயாரும், சித்திரா (Seven hills சிட்னி அவுஸ்திரேலியா),  குணாளினி (மொன்றியல் கனடா), வேலாயுதபிள்ளை (Seven hills  சிட்னி
அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,  காலம்  சென்றவர்களான அனந்தலச்சுமி, அனந்தராசா,  கமலாதேவி, பாரததேவி, மற்றும் சக்திவேல் (மொன்றியல் கனடா) ஆகியோரின் பாசமிகு  சகோதரியும், காலம் சென்றவர்களான சிவகுரு, ஈஸ்வரலிங்கம், மோகனதாஸ்  திலகவதி மற்றும் பத்மநாதன் (யாழ்பாணம்) ஆகியோரின் மைத்துனியும், அருண்,ஆணந்தி,ஆதித்தன், ராகவி, கேசவி, சங்கவி, ஹரினி, மெலனி, ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம
Viewing: Tuesday 2nd  December, 2014 from 6.30pm to 8.30pm at Guardian Funerals, First
Avenue Blacktown.
Funeral Service: Thursday 4th December 2014 at Rookwood Cemetery, South Hall from
1.30pm to 3.00pm.

தொடர்புக்கு:
அன்பழகன் -    Sydney Australia  – 10 61 404 081 304
பாலசூரியர - Montreal Canada  - 10 514 334 0786
ஜீவராணி – Sydney Australia  - 10 612 8804 4044

மரண அறிவித்தல் .

.
                                                        ஞானசக்தி சண்முகசுந்தரம்


                                                    மறைவு  26.11.2014
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானசக்தி சண்முகசுந்தரம் அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சபாரட்ணம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தமிழருவி தம்பு சண்முகசுந்தரம்(இளைப்பாறிய ஆசிரியர், அதிபர்- மஹாஜனா கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
பராசக்தி நவரட்ணம் அவர்களின் அருமை சகோதரியும்,
அருள்முருகனார்(மெல்போன்), சிவதம்பு(மெல்போன்), அருள்மங்கை(மெல்போன்), சேகரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற அருள்செல்வி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராதிகா, ஜெயராணி, மதனசேனராஜா, மனோகரி, பாலபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாமா நவரட்ணம், மஞ்சுளா கௌரிசங்கர் ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஆர்த்தி, வானதி, சோபிதா, நிவேஷன், சியாமளா, காயத்திரி, சகானா, பிரசன்னா, கீர்த்தனா, கம்சனா, அவினாஷ், விதுரன், துவாரகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/12/2014, 02:30 பி.ப
முகவரி: Melbourne Boyd Chapel, Springvale
தொடர்புகளுக்கு
அருள்முருகனார் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61433236707
சிவதம்பு — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61408288898
அருள்மங்கை — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61398021802
சேகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +441437769924

எழுத்தாளர் எஸ்.பொ வின் இறுதி நிகழ்வில் அணி வகுத்த எழுத்துக்கள் - செ பாஸ்கரன்

.
எழுத்தாளர் எஸ்.பொ வின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள சென்றபோது இலக்கிய நண்பர்கள் திரண்டிருந்தார்கள் . இறுதிக் கிரிகையின் பாட்டும் மணி ஓசையும் சந்தன மனத்துடன் சங்கமமானது . பார்ப்பவர் முகங்களில் எல்லாம் சோகத்தின் சாயல் அப்பிக்கிடந்தது . எஸ்.பொ வின் உயிரற்ற உடல் பேழையில் வைக்கப்பட்டிருந்தது. எழுத்தின் ஆளுமை இன்று  உறங்கிக்கிடந்தது. ஆனால் நுளை வாயிலில் பரவிக்கிடந்தது எஸ்.பொ வின்
எழுத்துக் குவியல். ஆறு தசாப்தங்களின் சமூக வரலாறு அதில் தெரிந்தது . எஸ்.பொ என்ற எழுத்தாளன் இறந்துவிடவில்லை நீண்ட வரலாறாய்  விரிந்து கிடக்கிறான். பரவிக்கிடந்த அவர் எழுத்துக்களைப்  போலவே உலக தமிழ் வாசகர்கள் மத்தியில் அவர் வாழ்வது நிட்சயம்.
நனைவிடை தோய்தலில் இனி ஒருபக்கம்   எஸ்.பொ விற்காக .
Photo by kana prabha 

நாகரீகம்

.


சீறிய கைக்குட்டையை 
சட்டைப்பையில் வைப்பது
து}ய்மையின் நாகரீகம்

கூளைசாறும் கண்ணை கழுவாது
அஞ்சனம் தீட்டி அலைவது
அழகின் நாகரீகம்

கமக்கட்டுக் கழுவாது
சென்டடித்துத் திரிவது
வாசனை நாகரீகம்

கழுவுதல் மறந்து
மேலும் கீழும் துடைப்பது
சுத்தத்தின் நாகரீகம்

குறுக்குக்கட்டுடன்

மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

.
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 - 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சரியாக மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட் டாளருமான  திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் திரு. கிறிஸ்ரி அவர்கள் ஏற்றி வைத்தார்.

இலங்கையின் மூத்த படைப்பாளி எஸ்.பொ. - முருகபூபதி

.
இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ. 
ஆறுதசாப்த  காலத்தையும்  கடந்து  எழுத்தூழியத்தில்  தவமிருந்த  எஸ்.பொ.
  
                                                                              
இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில் கடந்த  26-11-2014 இல் மறைந்தார்.
கடந்த  காலங்களில்  எனக்குத்தெரிந்த -  நான்  நட்புறவுடன்  பழகிய பல  படைப்பாளிகள்  சமூகப்பணியாளர்கள்  குறித்து எழுதிவந்திருக்கின்றேன்.  வாழும்  காலத்திலும்  அதில்  ஆழமான கணங்களிலும்   அவர்களுடனான  நினைவுப்பகிர்வாகவே  அவற்றை இன்றும்   தொடர்ந்து  எழுதிவருகின்றேன்.
காலமும்  கணங்களும்  ஒவ்வொருவர்   வாழ்விலும்  தவிர்க்க முடியாதது.
எஸ்.பொ.  அவர்களை  1972  ஆம்  ஆண்டு  முதல்  முதலில்  கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில்  ரெயின்போ  அச்சகத்தில்  சந்தித்தேன். அதன்பிறகு  கொழும்பில்  பல  இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன்.   எஸ்.பொ  இரசிகமணி   கனக செந்திநாதன் கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை  உட்பட  பல  இலக்கியவாதிகள்   எமது நீர்கொழும்பு   இந்து  இளைஞர்  மன்றம்  தொடர்ச்சியாக  மூன்று நாட்கள்  நடத்திய  தமிழ்  விழாவிற்கு  வருகை தந்துள்ளனர்.
எஸ்.பொ.  1980  களில்  நைஜீரியாவுக்கு  தொழில்  நிமித்தம்  புறப்பட்ட வேளையில்   கொழும்பு -  ஜம்பட்டா  வீதியில்  மலையக  நாடகக் கலைஞரும்   அவள்  ஒரு  ஜீவநதி  திரைப்படத்தின்   தயாரிப்பாளரும் அதன்  வசனகர்த்தாவுமான   மாத்தளை   கார்த்திகேசுவின்  இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக    நடந்த   பிரிவுபசார  நிகழ்வில்   சந்தித்தேன்.

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லுரி - Sydney Annual Get-together 07/12/2014 6pm

இலங்கைச் செய்திகள்ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டவர் 

கையுமெய்யுமாக பிடிப்பு

ஜனாதிபதி மஹிந்த நேபாளம் பயணமானார்

யாழில் இராணுவ நடமாட்டம் அதிகரிப்பு

தமிழர்கள் மீது முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல், இருவர் வைத்தியசாலையில்: டெல்வின் பகுதியில் பதற்றம்

மட்டக்களப்பில் வெள்ளம்

வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 76 குடும்பங்கள் இடம்பெயர்வு

மோடி – மஹிந்த சந்திப்பு : இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை


=======================================================


ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையிட்டவர் கையுமெய்யுமாக பிடிப்பு

24/11/2014 மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவரை கையுமெய்யுமாக பொலிஸார் பிடித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோயில் வளாகத்தில் காவல் ரோந்து நடவடிக்கையில் இருந்த போது  கோயிலினுள் ஏற்பட்ட சத்தத்தின் காரணமாக கோயிலினுள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அதன்போது  நபர் ஒருவர் உண்டியலை உடைத்துகொண்டிருப்பதை அவதானித்த பொலிஸார் அவரை கையுமெய்யுமாக பிடித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் குறித்த நபரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட  23 ஆயிரத்து 642 ரூபா கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . நன்றி வீரகேசரி 

சங்க இலக்கியக் காட்சிகள் 32- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

இயற்கையை இரசித்தனர், இன்பத்தில் திளைத்தனர்.


நாடாளும் மன்னனின் படைத்தலைவன் அவன். மாற்றாருடன் நடைபெற்ற போரிலே படைகளை வழிநடத்திச் சென்று வேற்று நாட்டிலேää பாசறையிலே இவ்வளவு காலமும் தங்கியிருந்தான். மழைக்காலத்தில் போர் நடப்பதில்லை. ஆதனால் மழைக்காலத்தில் தன் ஊருக்குச் சென்று தன் காதலியுடன் இன்பமாயிருப்பதை எண்ணியெண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தான். ஆனால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே எதிர்பாராதவிதமாகப் போர் முடிவுக்கு வந்தவிட்டது. அவனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. போரை முடிவுக்குக் கொண்டுவந்த கையோடு தன் ஊருக்கு ஓடோடிச்சென்று தன் காதலியைக் காண்கிறான்.  வருவதாகச் சொல்லிச் சென்ற காலத்திற்கு முன்னதாகவே அவன் வந்துவிட்டதால் அவனது காதலி இன்ப மகிழ்வில் துள்ளிக் குதிக்கிறாள். அவனருகே சென்று நாணத்தில் மிதக்கிறாள். இல்லத்திலே இருவரும் கூடிக்குலவி இன்ப வெள்ளத்திலே நீந்துகிறார்கள். பின்னர் காட்டுக்குச் சென்று பொழிலாட்டயரவும்ää புனலாடி மகிழவும் அவன் அவளை அழைக்கிறான். இருவரும் காட்டுவழி சென்று அழகிய இயற்கை வனப்புக்களைக் கண்டு களித்து மகிழ்கின்றனர்.

நினைவஞ்சலி | எஸ்.பொ: வரலாற்றில் வாழ்பவர்- தமிழச்சி தங்கபாண்டியன்

.

ஈழ மண்ணில் பிறந்து, ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, பெரும்பான்மை வருடங்களைத் தமிழ்நாட்டில் தமது அயராத இலக்கியப் பணியில் கழித்த எஸ்.பொ என்னும் எஸ்.பொன்னுத்துரை நவம்பர் 26-ம் தேதி காலமானபோது ‘இறுதியில் இந்தச் சாலையில்தான்/ வந்தாக வேண்டும் நான்/ என நன்றாகத் தெரியும்/ ஆனால்/ இன்றுதான் அந்த நாள் என்று/ எனக்குத் தெரியாது நேற்று' என்ற ஜென் கவிதைதான் நினைவுக்கு வந்தது.
எழுத்துப் பணி ஒரு போர்
ஈழத்தின் ‘இலக்கியப் பொன்னு' என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பொ.வின் மரணம் முதுமையின் நிசர்சனம் சுமந்தாலும், இழப்பின் துயர் அதனோடு மல்லுக்கு நிற்கிறது. தன்னை மூன்றாம் உலகப் படைப்பாளியாக அறிவித்துக் கொண்ட எஸ்.பொ., ஈழத்தின் இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கு முக்கியமான பங்களிப்பை நல்கியவர். இன விடுதலைப் போரில் மரணமடைந்த தன் மகன் மித்ரவின் நினைவாகவே சென்னையில் ‘மித்ர’ பதிப்பகத்தைத் தொடங்கினார். அதன் முக்கியக் களப்பணி - புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களின் படைப்புகளை வெளியிடுவது. அதன் மூலம் தமிழகத்தில் அதுகாறும் அவ்வளவாக அறியப்படாத ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பை ஆவணப்படுத்துதலுமாகும்.
உலக இலக்கியம் பற்றிய அறிவும், ஆங்கில மொழித் தேர்ச்சியும், மொழியாக்கத் திறமையும் பெற்ற அவர், ‘என் எழுத்துப் பணி போரே' என அறிவித்து அதன்படியே வாழ்ந்தும் படைத்தும் காட்டியவர். அனைத்து உலக இலக்கியங்களையும் அங்கீகரித்து, நயந்து போற்றுகின்ற சார்பற்ற விமர்சகர், ரசனையாளர்!

நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வு 13 12 2014

.
     
           அவுஸ்திரேலியா தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்
                  நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வு
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  வருடாந்தம்  தமிழ் எழுத்தாளர்   விழாவை  கலை  இலக்கிய  ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன்   அனுபவப்பகிர்வு  நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்துவருகிறது.
கடந்த   காலங்களில்  சிறுகதை,  கவிதை  மற்றும்  தமிழ்  விக்கிபீடியா பயிலரங்கு  அனுபவப்பகிர்வுகளை   நடத்தியுள்ள  சங்கம் -  நாவல் இலக்கியம்   தொடர்பான   அனுபவப்பகிர்வையும்   நடத்தவுள்ளது.
சங்கத்தின்  தலைவர்  Dr. நடேசனின்  தலைமையில்  நடைபெறவுள்ள நாவல்   இலக்கிய  அனுபவப்பகிர்வில்  இலங்கை  - தமிழக   நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின்  நாவல்  இலக்கிய  முயற்சிகள்  மற்றும் மேலைத்தேய   பிறமொழி  நாவல்  இலக்கியம்  தொடர்பாகவும்  உரைகளும்  கலந்துரையாடலும்   இடம்பெறும்.
மெல்பனில்   எதிர்வரும்  13-12-2014  ஆம்  திகதி  சனிக்கிழமை   மாலை  4.00 மணிக்கு    Mulgrave Neighbourhood  House  ( 36-42 Mackie Road, Mulgrave, Victoria -3170)    சமூக    மண்டபத்தில்  நடைபெறவுள்ள இந்நிகழ்வில்  கலந்துகொள்ளுமாறு  இலக்கிய  ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள்.     கலந்துகொள்ளும்  இலக்கிய  ஆர்வலர்களும்  தமது  நாவல்  இலக்கிய   வாசிப்பு  அனுபவங்கள்  தொடர்பாக  கருத்துக்களை    தெரிவிக்கலாம்.
மேலதிக  விபரங்களுக்கு  நடேசன்    (தலைவர்)   0411 606 767
 ஸ்ரீநந்தகுமார்        (செயலாளர்)     0415 405  361


விழுதல் என்பது எழுகையே பகுதி 28 தேனம்மை லகஸ்மணன்


எழுதியவர்: திருமதி. தேனம்மை லகஸ்மணன்  --- கைதராபாத், இந்தியா

திருமதி.தேனம்மை லக்ஸமணன் பற்றிய அறிமுகம்

வசிப்பிடம்: கைதராபாத், இந்தியா (காரைக்குடி, சென்னை,தமிழ்நாடு)
இளங்கலை வேதியல் பட்டதாரி (B. Sc (Chemistry) முதுநிலை அரசியல் அறிவியல்  பட்டதாரி (M.A Political Science) 
புத்தக ஆசிரியர்,சுதந்திர எழுத்தாளர்,ஊடகவியலாளர், கவிஞர், வலைப்பதிவர்,சிறப்புப் பேச்சாளர்,வசனகர்த்தா,பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
மூன்று புத்தகங்களின் ஆசிரியர்: “சாதனை அரசிகள்” (போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்) “ங்கா” (குழந்தைக் கவிதைகள்) “அன்னப் பட்சி” (கவிதைத் தொகுப்பு)
தினமணி- காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமை, தினமலரில் 4 சிறுகதைகள், குங்குமத்தில் 4 சிறுகதைகள், புதிய தரிசனத்தில் 2 சிறுகதைகள் வெளியாகின.சிறந்த வலைப்பதிவாளராக 25 விருதுகளுக்கு மேல் வாங்கியமை.
இவருடைய வலைப்பதிவில்  கதை,கவிதை,கட்டுரை,சினிமா,புத்தக விமர்சனம்,நிகழ்வுப் பகிர்வுகள்,புத்தக வெளியீடுகள், போன்றவை வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தல் சமையல் குறிப்புகள், இளமைக்கால பள்ளிப்பருவ காலக் கவிதைகளை, சமையல் குறிப்புகளை வலைப்பதிவில் பதிவு செய்தல்.
இதுவரை 1500 கவிதைகளை எழுதியிருக்கிறார்.லேடீஸ் ஸ்பெசல், இவள் பதியவள்,சூரியக்கதிர்,நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஸல் ஆகியவற்றில் கட்டுரைகள் பேட்டிகள் கோலங்கள்.குங்குமத்தில் 4 சிறுகதைகள்,3 கவிதைகள் வெளிவந்துள்ளன.சமையல் குறிப்புகள்,உணவுக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.
குமுதத்தில் “அம்மா யானை” என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகளும் 11 கைக்கூ கவிதைகளும் வெளிவந்துள்ளன.பூஜை அறைக் கோலங்கள் என்ற தலைப்பில் 300 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன.
குமுதம் கெல்த் ஸ்பெஸலில்( முரஅரவாயஅ ர்நயடவா ளுpநஉயைட ) “மேக்கப்பிற்கு பேக்கப”; என்ற தலைப்பில் இவரின் கருத்து வெளிவந்துள்ளது. ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன. கல்கியில் 4 கவிதைகள் வெளிவந்துள்ளன. இந்தியா ருடேயில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளிவந்துள்ளது. அவள் விகடனில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.தேவதையில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.மல்லிகை மகளில் இரு கவிதைகளும் 9 குட்டிக் கவிதைகளும் வெளியாகியுள்ளன.அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “மெல்லினம்” இதழில் “பெண் மொழி”என்ற தலைப்பில் 30 கட்டுரைகளும், ஒரு கவிதையும் வெளிவந்துள்ளன.”இணையதள ப்ளாகர்”என்ற தலைப்பில் “நம் உரத்த சிந்தனை”இதழில் இவரைப் பற்றி வெளியாகி உள்ளது.
“சாதனை அரசி” “ங்கா” ஆகிய இவரின் நூல்கள் பற்றிய விமர்சனத்தை திருச்சி தினமலர்”பதிப்பிலும் இந்தியா ருடேயிலும்,லேடீஸ் ஸ்பெஸலிலும் வெளியிட்டுள்ளன.
இவ்விரு நூல்களும் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளன.
மக்கள் தொலைக்காட்சியில் சாதனை அரசி நூல் பற்றிய விமர்சனம் இடம்பெற்றிருந்தது, கலைஞர் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் இவர் பங்கு கொண்டிருந்தார்
(குறிப்பு: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் அவர்களின் கலை இலக்கிய பன்முகத்தளங்களில் இவரின் செயல்பாடுகள் வியப்பைத்தரும் அளவிற்கு மிக அதிகமாகவே உண்டு. அவற்றிலிருந்து பெறப்பட்ட சுருக்கமே இது.முழு விபரத்தையும் காலக்கிரமத்தில் “தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலில் வெளியிடுவோம்.)

தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிட்ணமூர்த்தி 
திரு.எலையா முருகதாசன்  
(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்)

கதை பகுதி 28 தொடர்கிறது.

கிளிக்...கிளிக்  என்று ஒரு சத்தம்.பக்கத்திலிருந்த பெண் கைத்தொலைபேசியால் பஞ்சுப் பொதியாய்க் குவிந்திருக்கும் மேகங்களை விமானத்தின் கண்ணாடி வழியாக சுட்டுக் கொண்டிருந்தாள்.
லேசாக கண்ணயர்ந்த மங்கையற்கரசிக்கு இந்தச் சத்தம் விழிப்பைக் கொடுக்கவே திரும்பிப் பார்த்தார்.அவள் திரும்பிப் புன்னகைத்து முகநூலில் பதிவேற்றம் செய்வதற்கு புகைப்படம் பிடிப்பதாகக் கூறினாள்.வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணும் இளையதலைமுறையினரில் இவளும் ஒருத்தி.அவளைப் பாரத்து மங்கையற்கரசியும் நட்போடு புன்னகைத்தாள்

உலகச் செய்திகள்


போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு

ஈராக்­கிய சிறு­வர்­க­ளுக்கு இரா­ணுவ பயிற்சி

அமெரிக்க பெர்குஷன் நகரில் தொடர்ந்து இரண்டாவது இரவாக கலவரம்; பலர் கைது

போலி துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் மீது அமெரிக்க பொலிஸார் சூடு

25/11/2014 அமெ­ரிக்­காவில் கிளேவ்லாண்ட் நக­ரி­லுள்ள விளை­யாட்டு மைதா­ன­மொன்றில் போலி துப்­பாக்­கி­யுடன் விளை­யா­டிய 12 வயதுச் சிறுவன் ஒருவன் பொலி­ஸாரால் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்ளான்.

கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.தாமிர் ரைஸ் என்ற மேற்­படி சிறுவன் விளை­யாட்டு மைதா­னத்தில் விளை­யா­டிய வேளை, தனது கையில் இருந்த விளை­யாட்­டுத்­துப்­பாக்­கியை ஏனை­ய­வர்­களை குறி­பார்ப்­பது போன்று தூக்­கிப்­பி­டித்­துள்ளான்.

தமிழ் சினிமா திருடன் போலீஸ்


ஆரண்ய காண்டம் என்ற படத்தை எடுத்து வெகு நாட்கள் காணாமல் போன எஸ்.பி.சரணின் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் திருடன் போலீஸ்.


ஒரு பொருள் கையில் இருக்கும் பொது அதன் அருமை தெரியாது ...அது இல்லாத போது தான் அருமை தெரியும் என்பார்கள் அல்லவா... அந்த கருத்தை மையமாக வைத்து மிக உணர்ச்சி பூர்வமாக அப்பா மகனின் உறவை எடுத்து இருக்கிறார் புதுமுக இயக்குனர் கார்த்திக் ராஜு.

கதை என்ன?

ஒரு தந்தை மகன் நடுவில் உள்ள பாசத்தை பேசுகிறது இந்த படம். 
தினேஷ் ஒரு தலைமை கான்ஸ்டபிளின் மகன், இவர் வெட்டியாக வாழ்கையை ஓட்டுகிறார் கூடவே அப்பாவிடம் தினமும் திட்டு, கோபம், சண்டை என யாரடி மோகினி ஸ்டைலில் பயணிக்கிறது. ஒரு சமயத்தில் திடிரென்று அப்பா இறந்துபோக தினேஷ் இடிந்துபோகிறார்.

பிறகு தந்தையின் வேலை தினேஷ்க்கு கிடைக்க தன் வேலையை தொடர்கிறார். ஆனால் தன் தந்தை இறந்த காரணம் அறியமுடியாமல் திணறுகிறார். பிறகு கண்டுபிடித்து எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் திருடன் போலிஸ் கதை.

நடிகர், நடிகைகளின் பங்களிப்பு 

படத்தில் “அட்டக்கத்தி” தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், ராஜேஷ், முத்துராமன், நிதின் சத்யா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் முக்கிய இடத்தில் வருகிறார். 
அட்டகத்தி தினேஷ் வெட்டியாக திரியும் கேரக்டரிலும் சரி, அப்பாவின் போலீஸ் வேலை கிடைத்தவுடன் காவல் நிலையத்துக்கு கம்பீரமாக சென்று அதன் பிறகு மேல் அதிகாரியின் எடுபிடி வேலைக்கு போவது என மிக இயல்பாக நடித்து இருக்கிறார்.
ஐஸ்வர்யாவுக்கு சொல்லும் அளவுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் ஐஸ்வர்யாவும், தினேஷ் இடையே காதலை அழகாகவும் காட்டியுள்ளனர், ஜோடி பொருத்தம் நன்றாகவே இருக்கிறது. 


காமெடிக்கு நாங்க கேரண்டி என்ற விதத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய்யும் அசத்தியுள்ளனர். இரண்டாம் பாதியில் அவர்கள் வரும் காட்சி அனைத்திலும் செம ரகளை.


ஆடுகளம் நரேன், ராஜேஷ், முத்துராமன், நிதின் சத்யா மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் என அனைவரும் சிறு நேரம் வந்தாலும் மனதில் இடம் பெறுகின்றனர்.


பலம் 

போலீஸ் வேலையில் இருக்கும் கஷ்டங்களையும், சில மறைமுக விஷயங்களையும் சொன்னது. இனி டிராஃபிக்கில் வெயிலில் நிற்கும் ஒரு போலீஸ்காரரைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம் வரும். வெல்டன்!


ராஜேந்திரன் மற்றும் ஜான் விஜய் இறுதியில் அடிக்கும் லூட்டி.


பலவீனம் 

முதல் பாதி பல தமிழ் படங்களின் சாயல் தெரிகிறது எனவோ உண்மை தான்,

ஜான் விஜய் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரனின் கேரக்டரை வடிவமைத்த விதம்.. முதல் பாதியில் கெத்தான வில்லனாக காட்டி விட்டு பின் பாதியில் செம காமெடி பீஸ் போல் காட்டியது ஒத்து போகவில்லை.

ஹீரோயினை இதிலும் ஊறுகாயாக மட்டும் யூஸ் செய்திருப்பது.

2 பாடல்கள் தவிர எந்த பாடல்களும் கேட்கும் ரகம் இல்லை 

மொத்தத்தில் திருடன் போலீஸ் - ஒரு யதார்த்த அப்பாவின் கனவு 
-நன்றி cineulagam