தீராத தீவிரவாதம்.. (கவிதை) வித்யாசாகர்!

.





து தீவிரவாதம்?
எச்சில் உமிழும் வேகத்திலும்
எட்டி குதிக்கிறது தீவிரவாதம்..

எழுந்து நடைபழகும் வயதில்
முட்டை கொடுத்து
பின் மீனறுத்து
பிறகு கோழி விரட்டிப் பிடித்து
துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து
குழந்தைக்குப் பரிட்சையமாகிறது
தீவிரவாதம்..

எதிரியைச் சுடுவது வெற்றி
தான் விழுந்தால் கொலையெனும்
மனோபாவம்
தீவிரவாதத்தின் முதல் போதனையாகப்
பதிகிறது
மனதுள் பிற கேள்விகளின்றி..

அருணோதயா கல்லூரியின் இன்னிசை மாலை - செ.பாஸ்கரன்

.

01.06.2013 சனிக்கிழமை இரவு என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடகர் மதுபாலகிறிஸ்ணன் பாடுகின்றார் என்ற ஆர்வம் கொட்டும் மழையையும் குளிரையும்கூட பொருட்படுத்தாமல் சில்வவோட்டர் பகாய் சென்றருக்கு சென்று அமர்ந்து கொள்கிறேன். உள்நுளையும்போது வரிசையாக கோட்டும் சூட்டும் போட்டு அடையாள அட்டைகள் குத்தியிருந்த பலர் வரிசையாக நிற்கின்றார்கள். பழைய மாணவர்கள் போல் தெரிகிறது. மண்டபத்தில் இருந்தவர்களில் அரைவாசிக்குமேல் அந்தப்பாடசாலையில் கற்காதவர்கள்தான். மதுபாலகிறிஸ்ணனையும் சுப்ப சிங்கர்களான பிரியங்கா ஸ்ரீநிசா ஆகியோரின் பாடலைக் கேட்கும் ஆர்வத்தோடு வந்தவர்கள்தான்.


நிமல் தன் கணீரென்ற குரலில் ( இப்பிடி சில விசயங்கள சொல்லுவன் குறைநினைக்க கூடாது) வந்தவர்களுக்கு வணக்கம் கூறியபின் முன்னைநாள் ஆசிரியை திருமதி நடராஜா அவர்களை குத்துவிளக்கு ஏற்றுவதற்கு அழைத்தார் அதைத் தொடர்ந்து அதிபர் ஆசிரியர் என்று சில ரை அழைத்து மங்களவிளக்கு ஏற்றப்பட்டது.

எமது சினிமா





சேக்கிழார் விழா





சிட்னி சைவ மன்றம் நடாத்திய கலைக் கதம்பம்


படப்பிடிப்பு   ஞானி


மெல்பேர்ன் மில்பார்க் தமிழ் பாடசாலையின் கலை விழா - 2013

.
                                                             நவரத்தினம் அல்லமதேவன்.


மில்பார்க் தமிழ் பாடசாலையின் கலை விழா - 2013  Barry Road Community Hall, Thomastown   இல் ஜுன் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிpகவும் சிறப்பாக, மண்டபம் நிறைந்த நிகழ்ச்சியாக நடைபெற்றது. இந்த ஆண்டுக் கலை விழாவின் ஆரம்ப நிகழ்வாக அமைதியாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாடசாலை மாணவர்கள் அனைவரும் ஒன்றாக பாடசாலைக் கீதத்தினை மிகவும் இனிமையான இசையுடன் இசைத்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. இறைவணக்கம் நிகழ்ச்சியில் இந்து, கிறீஸ்த்தவ மதங்களுக்குரிய பாடல்கள் அழகாகவும், பக்தி சிரத்தையோடும் பாடினார்கள். பாடசாலையின் அதிபர் திரு.யசோதரலிங்ஙகம் ஜெயந்திகுமார் அவர்கள் சமூகமளித்த அனைவரையும் வரவேற்று தனது உரையை வழங்கியிருந்தார். அடுத்து சின்னஞ் சிறிய பிள்ளைகள் அழகியதொரு தீப நடனம் ஆடினார்கள்.

தேசாந்தரியின் இல்லத்தில் சில மணிநேரங்கள் -முருகபூபதி

.


ஒரு ஊரில் ஒருதேநீர் தயாரித்துவிற்பவன் இருந்தான். ஒருநாள் அந்த ஊரில் பிரபலமான ஒரு மல்யுத்தவீரன் அவன் கடைக்குவந்து தேநீர் கேட்டிருக்கிறான். அந்தத்தேநீர் தயாரிப்பவன் அன்று அந்த மல்யுத்தவீரனுக்கு தேநீர் தயாரிக்க சற்று காலதாமதமாகிவிட்டது. அதனால் கோபமுற்ற அந்த மல்யுத்த வீரன், “எனக்கு உனது தேநீர் வேண்டாம். என்னை காத்திருக்கவைத்து அவமதித்துவிட்டாய். அதனால் நாளை நீ என்னுடன் மல்யுத்தப்போட்டிக்கு வரவேண்டும். உனக்கு நாளை ஒரு பாடம் கற்பிக்கின்றேன்எனச்சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அந்த அப்பாவி ஏழை தேநீர்கடைக்காரன் என்ன செய்வது என்று தெரியாமல் அவதியுற்றான். நாளை மல்யுத்தவீரனோடு எப்படி போட்டிபோடப்போகிறேன்? அதில் தான் தோற்பது நிச்சயம். தோற்றால் அடி, உதையும் வாங்கிக்கொண்டு என்ன தண்டனை பெறப்போகிறேனோ தெரியவில்லையே என்று மனம்கலங்கினான். அவனால் தொடர்ந்தும் தனது வேலையை கவனிக்கமுடியவில்லை. ஒரு துறவியிடம் தனது இயலாமையைச்சொல்லி வருந்தி, இனி நான் என்னதான் செய்வது? எனக்கேட்கிறான்.

இலங்கைச் செய்திகள்

.

புலிகளுக்கு சொந்தமான 1.2 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துகள் பறிமுதல்

13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்வதாயின் இந்தியாவின் ஆலோசனைகள் நிச்சயம் பெறப்படும் : கெஹலிய

இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றது: எரிக் சொல்ஹெய்ம்

13ஐ திருத்த தேவையில்லை: இந்திய எம்.பி.க்கள்

யாழ். வீட்டுத்திட்டம்; இந்திய எம்.பி.க்கள் குழு பார்வை

முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கேந்திர நிலையங்களாக இலங்கையில் மத்ரஸாக்கள் : பொதுபல சேனா

காணி, பொலிஸ் அதிகாரங்களையே ஒழிக்க வேண்டும் : குணதாச அமரசேகர

======================================================================

புலிகளுக்கு சொந்தமான 1.2 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துகள் பறிமுதல்


03/06/2013 இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமாயிருந்த 1பில்லியன் ரூபாவுக்கு கூடுதலான பெறுமதியுடைய சொத்துகள் பற்றிய விபரம் பயங்கர வாத புலனாய்வுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட விசாரனைகளின் போது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து அவை இந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பயங்கரவாத புலனாய்வுத் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் 1.2 பில்லியன் ரூபாவுக்குக் கூடுதலான பெறுமதியுடைய இத்தகைய சொத்துகளில் காணி, தொடர்மாடி மனைகள், அழுத்தகங்கள் (அச்சு இயந்திர சாலைகள்) வீடுகள், இயந்திரத் தொகுதிகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் மீன் பிடி இழுவைப் படகுகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன எனவும் அவை பகிரங்க ஏலத்தில் விற்கப்பட்டு அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் திறைசேரிக்கு மாற்றப்படும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கள், கறுப்புப்பண செலாவணியாக்கல் ஆகியவை தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் பிரகாரமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சென்னையில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட லண்டன் இலங்கை தம்பதியர்கள்-வீடியோ

.



Nantri:sinnakuddy1.blogspot

நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 3 -கீதா மதிவாணன்

.
மழைக்காலத்து மாலைப்பொழுதை எவ்வளவு அழகாக விவரிக்கிறார் பாடலாசிரியர்!
 வெள்ளி வள்ளி வீங்குஇறைப் பணைத் தோள்
மெத்தென் சாயல்,முத்து உறழ் முறுவல்
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்துஎழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் குஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர (36 – 44)


உலகச் செய்திகள்

அமெரிக்காவில் காட்டூத் தீ: பெரும் சேதம்

மைக்கல் ஜக்சனின் மகள் பாரிஸ் தற்கொலை முயற்சி: வைத்தியசாலையில் அனுமதி

ஆண் வாரிசுக்காக கணவன் கொடுமை: மனம் வெறுத்து போன பெண் 5 மகள்களுடன் தீக்குளித்து தற்கொலை

சிரியாவில் முக்கிய நகரை மீளக் கைப்பற்றிய அசாத் ஆதரவுப் படையினர்!

 அமெரிக்காவில் காட்டூத் தீ: பெரும் சேதம்

03/06/2013 அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலெஸ் மற்றும் நியூ மெக்ஸிகோவின் செண்டா பீ பகுதிகளில் காட்டூத் தீயினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
iop,

“எழுத்தாளர்கள்:பரிசுகள், விருதுகள், பாராட்டுகள்”

.

சென்னைப் பல்கலைக்கழக பவள விழாக் கலையரங்கில் 26.04.2013ல் நிகழ்ந்த விளக்கு விருது வழங்கும் வைபவத்தில் எம். ஏ. நுஃமான் ஆற்றிய ஏற்புரை

எல்லோருக்கும் வணக்கம்

இது எனக்கொரு புது அனுபவம். இதுவரை இத்தகைய விருது விழாக்களில் விருதுபெறும் ஒருவனாக நான் இருந்ததில்லை. விருதுகளுக்கு எதிரான ஒரு மனநிலையில் இவ்வளவுகாலமும் இருந்து விட்டேன். இன்று இவ்விருதினைப் பெற்றுக்கொண்டு ஏற்புரையாக என்ன பேசுவது என்று யோசித்தேன். எழுத்தாளர்கள்: பரிசுகள், விருதுகள்,பாராட்டுகள் பற்றியே பேசலாம் என்று நினைத்தேன்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ‘காத்திருங்கள்என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். எனக்கு அறுபது வயது பூர்த்தியாவதை முன்னிட்டு எனது சில நண்பர்களும் மாணவர்களும் எனக்கு ஒரு விழா எடுக்கும் நோக்கில் என்னை அணுகிய போது அதை மறுதலித்த மனநிலையில் பரிசுகள் விருதுகள் பாராட்டுகளுக்கு எதிராக எழுதிய கவிதை அது. கவிதை இதுதான்:

மன்னிக்கவேண்டும்
எனக்கு எதற்கு இப்போது பாராட்டு,
பட்டம், பரிசு, விருதுகள்,
விழாக்கள் எல்லாம்?
காத்திருங்கள்
நான் இறந்து நூறாண்டுகள் ஆகட்டும்
நான் புதைக்கப்பட்ட இடத்தில்
புல் முளைக்கட்டும்
இன்னும் நூறாயிரம்பேர் புதையுண்டு போகட்டும்
அதன்பின்பும்
என் புதைகுழியின் அடையாளத்தை
உங்களால் கண்டுகொள்ள முடிந்தால்,
என் எச்சங்களில் ஏதாவது ஒரு துணுக்கு
எஞ்சியிருந்தால்,
மின்மினிபோல் அது சற்றேனும் ஒளி உமிழ்ந்தால்
என்னை நினைவுகூருங்கள்
அதுவரை காத்திருங்கள்
தயவுசெய்து
காத்திருங்கள்

பேராசிரியர் சிவநாதனைப் பற்றி

.
சென்ற வாரம் இந்த செய்தியை தமிழ்முரசு பிரசுரித்திருந்தது இவர் சிட்னியில் வசிக்கும் சிவபாலகன் அவர்களுடைய சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது
ஆசிரியர் குழு 

EPIR Personnel headshots - December, 2009
அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முயற்சியாளர்களுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் வெள்ளை மாளிகை விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இதற்கமைய, இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்கப் படைகளுக்காக பேராசிரியர் சிவநாதன் உருவாக்கிய தொழில்நுட்பம், மேர்க்கியூரி கட்மியம் ரெலுரைட் என்ற குறைகடத்தி மூலப் பொருளை மையமாகக் கொண்டது. அவர் தம்மை வரித்துக் கொண்ட தேசத்தின் ஷகாவலர்களாக அமைந்துள்ளவர்களை பாதுகாக்கும்| தொழில்நுட்பத்தை உருவாக்கியமைக்காக கௌரவிக்கப்படுகிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இலினொய்ஸ் மாநிலத்தில் சிவநாதன் லெபோரட்டரிஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் பேராசிரியர் சிவநாதன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவரது நிறுவனம் புற ஊதாக் கதிர் தொழில்நுட்பம், கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தல், உயிரியல் உணர்கருவிகள் முதலான துறைகளில் ஆய்வு செய்து வருகிறது. சூரிய மின்வலு உற்பத்தியின் அடுத்த படிமுறையை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் சீல் படையணி, பாகிஸ்தானின் அபோத்தாபாத் நகரில் அல்கொய்தா வலைப்பின்னலின் தலைவர் ஒஸாமா பின் லாடனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில், பேராசிரியர் சிவநாதன் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள் என்பது முக்கியமான விஷயம்.
பேராசிரியர் சிவநாதனைப் பற்றி
EPIR Personnel headshots - December, 2009
  • எட்டு பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறாவது பிள்ளை
  • பிறப்பிடம்: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி
  • தந்தையார்: தமிழ்ப் பண்டிதர் (வல்வெட்டித்துறை), தாயார்: சமய, விஞ்ஞான ஆசிரியர்
  • ஆரம்பக்கல்வி: சரஸ்வதி மகாவித்தியாலயம்
  • இரண்டாம் நிலைக் கல்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1967-1975)
  • உயர்கல்வி: பேராதனைப் பல்கலைக்கழகம் (1976-1980)
  • முதல் தொழில்: விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்
  • ஸ்தாபகத் தலைவர்: சிவநாதன் லெபோரட்டரீஸ், இன்ஸ்பையர்
  • வேறு பதவிகள்: இலினொய்ஸ் பல்கலைக்கழக நுண்பௌதீகவியல் ஆய்வுகூடத்தின் பணிப்பாளர், புற ஊதாக் கதிர் மற்றும் மில்லிமீற்றர் அலைவரிசைகள் சஞ்சிகையின் ஆசிரியர் பீட அங்கத்தவர்
  • கௌரவ பட்டங்கள்: இரவின் நண்பன் – அமெரிக்க இராணுவத்தின் பட்டம் (2005)

கவிஞர் இந்திரனுடன் ஒரு மாலைநேரச் சந்திப்பு..! - வி. ரி. இளங்கோவன்

.
கலை விமர்சகர் - மொழிபெயர்ப்பாளர் - கவிஞர் இந்திரனுடன்
ஒரு மாலைநேரச் சந்திப்பு..!

கவிஞர் இந்திரன் கலைத் தூதர் போன்று தமிழகத்திலிருந்து குவாடெலூப் (Guadeloupe) தீவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பும் வழியில் உறவுகளைச் சந்திப்பதற்காக மூன்று நாட்கள் பாரிஸ் மாநகரில் தங்கியுள்ளார்.

நேற்று மாலை (07 - 06 - 2013) பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் குறுகிய கால ஏற்பாட்டில் படைப்பாளிகள் - ஊடகவியலாளர்கள் - இலக்கிய அபிமானிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வு இந்திரனுடன் நடைபெற்றது.

பாரிஸ் மாநகரில் ''ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ''சமரா கோணர் " உணவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் தலைவர் வி. ரி. இளங்கோவன் - கவிஞர் தா. பாலகணேசன் - திருமதி பாலகணேசன் - கவிஞர் க. வாசுதேவன் - ''தமிழமுதம்" வானொலி இயக்குனர் எஸ். கே. ராஜன் - எஸ். குமாரதாஸ் நேசன் - இ. குலம் - மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.


மனைவி இருக்கிறாவா...? Is your wife at home?

.
                                                                                                            முருகபூபதி

இந்தப்பத்தியின்  தலைப்பாக  உபாதை  என்றும்  குறிப்பிட  நினைத்தேன்.  ஏன்  என்பதை  வாசகர்கள்  பத்தியின்  இறுதியில்  தெரிந்துகொள்ளலாம்.
அன்று  ஒருநாள்  மாலைää  நான்  எனது  நூலக  அறையில்  கணினியில் எழுதிக்கொண்டிருந்தேன்.  வாசலில்  அழைப்பு  மணியோசைகேட்டது.  யார்  என்று பார்க்கும்படி  மனைவிக்கு  சற்று  உரத்தகுரலில்  சொன்னேன்.  மனைவி  வீட்டின் பின்புறத்தில்  தான்  புதிதாக   வளர்க்கும்  பூஞ்செடிகளுக்கு   நீர் விட்டுக்கொண்டிருந்திருக்கவேண்டும்.
“   கையில்  வேலை.  நீங்களே  போய்ப்பாருங்கள்”  என்று  அவளும்  உரத்த  குரலில் சொன்னாள்.
யார்... இந்த  நேரத்தில்  வந்திருக்கக்கூடும்.  எவரும்  வருவதாக  இருந்தால்  முற்கூட்டியே சொல்லியிருப்பார்கள்.  பத்து  நிமிட  கார்  ஓட்டத்தூரத்திலிருக்கும்  இரண்டாவது  மகள் அன்று  மாலை  வருவதாகவும்  சொல்லவில்லையே...  தற்பொழுது  நாம்  இருப்பது மெல்பன்  நகரிலிருந்து  சுமார்  200  கிலோ  மீற்றர்  தொலைவிலுள்ள  கிராமமும்  அற்ற  மாநகரமும்  அற்ற  சனசந்தடி  செறிவற்ற  மிகவும்  அமைதியான  பிரதேசம். மெல்பனிலிருந்து   இந்த  மாலைவேளையில்  எவரும்  புறப்பட்டு  வந்திருக்கமாட்டார்கள். வந்திருப்பது  யாராக  இருக்கும்?  என்ற  யோசனையுடன்  எழுந்துசென்று  வாசல் கதவைத்திறந்தேன்.
ஒரு   அழகிய  இளம்  யுவதி. முப்பது  வயதிற்குள்  மட்டிடலாம்.  புன்முறுவலுடன்  மாலை  வணக்கம்  சொன்னாள்.  நானும்  பதிலுக்குச்  சொல்லிவிட்டு  உள்ளே அழைத்தேன்.  ஆனால்  அவள்  உள்ளே  வராமல்  வாசல்  கதவுக்கு  வெளியே நின்றவாறே  உரையாடினால்.  அவளது  ஒரு  கையில்  ஒளிப்படங்கள்  பதிவுசெய்யப்பட்ட சிறிய  அட்டைகள்.  அத்துடன்  ஒரு  ஹேண்ட்பேக்.
எமது  உரையாடல்  ஆங்கிலத்தில்  அமைந்தது.  அதனை  தமிழ்ப்படுத்தினால் இப்படித்தான்  இருக்கும்  என  நம்புகின்றேன்.
“  சொல்லுங்கள்...  என்ன  விடயம்?”
“  நான்  வேர்ல்ட்  விஷன்  அவுஸ்திரேலியாவிலிருந்து  வருகின்றேன்.  ஒரு ஏழைப்பிள்ளைக்கு  உங்களால்  உதவமுடியுமா?”
“ ஏற்கனவே  நாங்கள்  இலங்கையில்  போரிலே  பெற்றவர்களை  இழந்த ஏழைப்பிள்ளைகளுக்கு  உதவி  வருகின்றோம்.”


ப்பா ..எப்படிங்க இணையம் இல்லா காலத்தில் இப்படி சுட்டிருக்காங்க?-வீடியோ

.


nantri:sinnakuddy1.blogspot

தமிழ் சினிமா

.
ரத்தத்தில் இலங்கை: சந்தோஷ் சிவனின் இனம் பட போஸ்டர் வெளியீடு!!1

inam posterபிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் "இனம்" படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரத்ததால் இலங்கை நாட்டின் மேப் போன்று வெளியாகி இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், டைரக்டர் என் பன்முக திறன் கொண்டவர். தற்போது இவர் இனம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதை இலங்கையில் நடந்த போரின் போது அதில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சில மாதங்கள் இலங்கையில் இருந்து ஆய்வு செய்து இந்தப்படத்தை எடுத்துள்ளார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட கைரேகையினை இலங்கை மேப் போல வடிவமைத்துள்ளனர். இந்த போஸ்டர் இப்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் போது போரில் பாதிக்கப்பட்ட அந்த சிறுவர்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும் என்று கூறியுள்ளார் சந்தோஷ் சிவன்.நன்றி தேனீ 



சூது கவ்வும் 

அடர்ந்த தாடி நரைமுடியுடன் வயதான தோற்றத்தில் காணப்படும் விஜய் சேதுபதியின் கடத்தலும், கொமடியும் கலந்து வெளியான சூது கவ்வும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காதல் பிரச்சினையில் வேலை பார்க்கும் இடத்தில் கைகலப்பாகி வேலை இழந்த ஒருவன், விலையுயர்ந்த சொகுசு காரை ஓட்டவேண்டும் என்ற ஆசையில், பைவ் ஸ்டார் ஓட்டல் வேலையை தொலைத்த மற்றொருவன், நயன்தாராவுக்கு கோயில் கட்டி, பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி சென்னைக்கு வரும் இன்னொருவன் ஆகிய மூவரும் ஒரே அறையில் நண்பர்களாக தங்கியிருக்கிறார்கள்.
மறுமுனையில் சிறு சிறு கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் விஜய் சேதுபதி, பெரிய இடத்தில் கை வைக்கக்கூடாது, மிரட்டக்கூடாது, மாட்டிக்கொண்டால் அடிபணிந்துவிட வேண்டும் என்பது உட்பட 5 விதிமுறைகளின்படி கடத்தல் வேலைகளை செய்துவருகிறார். இவருக்கு அவ்வப்போது யோசனை சொல்பவராக, ‘மாமா மாமா’ என்று ஒரு நிழல் உருவமாக வலம் வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.
வேலையை இழந்த மூன்று நண்பர்களும் ஒருநாள் பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும் போது, அங்கு மது அருந்திக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், இன்னொரு கும்பலுக்கும் தகராறு வருகிறது. இந்த தகராறில் நண்பர்கள் கூட்டமும் தாக்கப்பட, அங்கிருந்து தப்பித்து விஜய் சேதுபதியிடம் சேர்ந்து வெளியேறுகிறார்கள்.
மூவரையும் தன்னுடைய இடத்துக்கு அழைத்துச் செல்லும் விஜய் சேதுபதி, தன்னுடைய கடத்தல் வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்த முடிவெடுக்கிறார்.
இதற்கு நண்பர்களில் இரண்டு பேர் சம்மதிக்க ஒருவன் மட்டும் பின்வாங்குகிறான். பின்னர் அவனும் வந்து இணைகிறான். மூவரும் இணைந்து சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், எம்.எஸ்.பாஸ்கரின் மகனை கடத்தி அந்த பழியை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். இந்த கடத்தல் வேலைக்கு விஜய் சேதுபதி கும்பலை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். முதலில் மறுக்கும் விஜய் சேதுபதி, பின்பு ஒத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இதன்படி, ஒருநாள் அரசியல்வாதியின் மகனை கடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு முன்னதாக வேறொரு கும்பல் அவனை கடத்திச் சென்றுவிடுகிறது. அவர்கள் செல்லும் இடத்தை அறிந்து கொள்ளும் விஜய் சேதுபதி கும்பல், மறுநாள் பொலிஸ் உடை அணிந்து அங்கு சென்று பார்க்கின்றனர்.
அங்கு மயக்க நிலையில் தனியாக இருக்கும் அரசியல்வாதியின் மகனை தூக்கிக் கொண்டு வருகின்றனர். அவனை கடத்தியதும் அரசியல்வாதியை தொடர்பு கொண்டு மகனை கடத்திவிட்டதாகவும், விடவேண்டுமென்றால் 2 கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். ஆனால் இதற்கு அடிபணியாத அரசியல்வாதி பொலிஸ் உதவியை நாடுகிறார்.
இதனால் பயந்து போன விஜய் சேதுபதி கும்பல், அவனை விட்டுவிட துணிகிறது. ஆனால், அரசியல்வாதியின் மகனோ, தன்னுடைய அப்பா மூலம் பணம் கேட்டால் கிடைக்காது. தன்னுடைய யோசனையின் படி செய்தால் பணம் கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனையின்படி பணத்தை வாங்க யோசனை கூறுகிறான்.
அதற்கு விஜய் சேதுபதியும் ஒத்துக்கொள்கிறார். அரசியல்வாதியின் மகனின் யோசனையின் படி பணத்தையும் வாங்கி விடுகின்றனர். இறுதியில் பங்கு பிரிக்கும் போது பிரச்னை வர, விஜய் சேதுபதி கும்பலை விபத்தில் சிக்கவைத்து அங்கிருந்து பணத்துடன் தப்பிவிடுகிறான் அரசியல்வாதியின் மகன்.
இதற்கிடையில் தன்னுடைய மகனை கடத்திய கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு சைகோ பொலிசை நியமிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இறுதியில், பணத்தோடு ஓடிச்சென்ற அரசியல்வாதியின் மகனிடமிருந்து விஜய் சேதுபதி கும்பல் பணத்தை வாங்கினார்களா? இந்த கடத்தல் கும்பல் பொலிஸிடம் சிக்கினார்களா? என்பதே மீதிக்கதை.
அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க வயதான தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இவர், இதுவரை நடித்த படங்களில் நாயகியை கட்டிப் பிடித்து நடிப்பது போன்ற காட்சி இல்லாத குறையை இந்த படத்தின் மூலம் நிவர்த்தி செய்துள்ளார் போல.
படத்தின் முதல் பாதி முழுவதும் அரைகுறை உடையுடன் நாயகியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுகிறார். படத்தில் கூறும் வசனம்போல், படம் முழுக்க மனுஷன் வாழ்ந்திருக்கிறார் என்ற பொறாமையை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறார். படத்திற்காக கொஞ்சம் குண்டாகியிருக்கிறார்.
கடத்திவிட்டு பணம் பெறுவதற்காக இவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கிறது. நண்பர்களாக வரும் மூன்று பேரும் குறும்படங்கள் மூலம் பரிச்சயமான முகம் என்றாலும், வெள்ளித்திரையில் மேலும் பளிச்சிடுகிறார்கள். மூவரின் நடிப்பும் வெகுபிரமாதம்.
இவர்களுடைய பயம் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது. எதார்த்தமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திய மூவருக்கும் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. சஞ்சிதா ஷெட்டி அழகாக இருக்கிறார். ‘மாமா மாமா’ என்று விஜய் சேதுபதியுடனேயே வலம் வந்து நம்மையும் வசீகரிக்கிறார்.
முதல்பாதி வரை படம் முழுவதும் நிரம்பியிருக்கிறார். நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், வெள்ளைச்சட்டை, தோளில் துண்டு, மிடுக்கான தோற்றம், மிரட்டும் தொணியில் பார்வை என நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இவருடைய மகனாக நடித்திருக்கும் கருணாகரனின் திருட்டு முழிப் பார்வையும், குரூரத்தனமான இவருடைய செய்கையும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன.
சைகோ பொலிஸ் பிரம்மாவாக வரும் யோக் ஜெப்பி படத்தில் பேசாமலேயே மிரட்டுகிறார். எந்த ஒரு செயலுக்கும் முகபாவனையிலேயே தனது முடிவை சொல்லிவிடும் இவரை, கடைசியில் சிரிப்பு பொலிசாக மாற்றியது தான் ஏமாற்றம்.
முதலமைச்சராக வரும் ராதாரவி, அமைச்சரின் மனைவியாக வரும் ராதா என அனைவரும் தங்கள் நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள். ஒரு கடத்தல் கதையை சீரியஸாகவும், அதே நேரத்தில் கொமெடியாகவும் சொல்லிய இயக்குனர் நலன் குமாராசாமிக்கு பாராட்டுக்கள்.
இந்த படத்தின் நிஜ நாயகனே திரைக்கதை தான். யூகிக்க முடியாத கதை, கதாபாத்திரங்கள் போக்கை எல்லா இடத்திலும் என்ஜாய் செய்யமுடியும் என்பதை திரைக்கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதேபோல், படத்தில் கதாபாத்திரத்துக்கு தகுந்தாற் போல் அவர்களது பெயரையும் தெரிவு செய்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள் தான். விஜய் சேதுபதியின் 5 விதிமுறைகள், கடத்திய பின்பு பெற்றோரிடம் பணத்தை பெறுவதற்காக பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்கவைக்க கூடியவை.
மேலும், ‘கடத்தல் வேலைக்கு குருட்டுத்தனமான முட்டாள் தனம் வேண்டும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேண்டும்’ என்பது போன்ற அறிவார்த்தமான வசனங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பாடல்களும், பிண்ணனி இசையும் படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை. ஒளிப்பதிவாளர் தினேஷும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார். மொத்தத்தில் ‘சூது கவ்வும்’ நிச்சயம் வெல்லும்.   நன்றி விடுப்பு