மரண அறிவித்தல்


                                          
                                  
                      
            திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன்

இலங்கையில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் நைஜீரியா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை  வாழ்விடமாகவும் கொண்டிருந்த
            திருமதி அபிதகுசலாம்பிகை தியாகேந்திரன் அவர்கள்
கடந்த 28-02-2017 ஆம்  திகதி  செவ்வாய்க்கிழமை  அவுஸ்திரேலியா  மெல்பனில்  காலமானார்.    அமரர்கள்  பொன்னையா  பத்மநாதன் - அன்னலட்சுமி  தம்பதியரின் செல்வப் புதல்வியும் அமரர் தியாகராஜா தியாகேந்திரனின்  அன்பு மனைவியும்   திருவாளர்கள் சோதிலிங்கம், தேவலிங்கம், திருமதி பத்மலோஜினி சிவராஜா ஆகியோரின் அன்புச்சகோதரியும்,    திரு. அஜந்தன்   தியாகேந்திரன் ( இங்கிலாந்து) , மருத்துவ கலாநிதி ( திருமதி) சசிகலா அனுரதன் ( மெல்பன் - அவுஸ்திரேலியா)ஆகியோரின் அருமைத்தாயாரும், திரு. கணேசன் அனுரதன், திருமதி  சுதாஷினி அஜந்தன் ஆகியோரின்  அன்பு மாமியாரும், செல்வன்கள் அருண் அஜந்தன், அர்ஜூன் அஜந்தன், செல்வி அனீஷா அஜந்தன்,  செல்வி சுவேதா அனுரதன், செல்வன் சந்தோஷ் அனுரதன், ஆகியோரின் அன்புப்பாட்டியுமாவார்.
அன்னாரின்   இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 05-03-2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 11.30  மணி முதல் 1.30 மணிவரையில் மெல்பனில் Bunurong Memorial Park Stratus Chapel ( 790, Frankston -     Dandenong  Road, Bangholme -) (Dandenong South) இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
                                  தொடர்புகளுக்கு:
திரு. கணேசன் அனுரதன் (மருமகன்)
தொலைபேசி: 00 61 (03) 8315 2936  (Home)  00 61 (0)432 287 423 ( Mobile)
                              00 61 (0) 438 090 973 ( Mobile)
                                             Email: tssandra@gmail.com
                                             Email: ganurathan@yahoo.com
                    No 1, Pacific Blvd, Taylors Hill, Victoria - 3037, Australia   
Sydney Sri Durga Temple Annual Festival 02/03/2017 - 13/03/2017
ஆண்டவனை வேண்டிடுவோம் !


      ஆணவம் வந்துவிட்டால் 
      அப்பனும் தெரியமாட்டார்
      அம்மையும் தெரியமாட்டார்
      அறிவெலாம் மயங்கிநின்று
      அகந்தையின் உச்சம்சென்று
      அழிவினைத் தொட்டுநிற்கும்
      அவலத்தில் சிக்கிநிற்போம் !

    குடும்பமாய் கடவுள்காட்டும்
    குணமதைக் கொண்டுநிற்கும்
    அரும்பெரும் சமயந்தன்னை
    அறிந்திட முயலுகின்றார்
    ஆணவம் போக்குவென்று
   அம்மதம் சொல்லிசொல்லி
   அருமையாய் கதைகள்தன்னை
   அமுதமாய் அளிக்குதன்றோ !

  தேவரென மூவரென
  திரளாகக் கதைகள்சொல்லி
  யாவரையும் நல்லாக்க
  நம்சமயம் உதவுதன்றோ 
  பாவமெலாம் போக்குதற்கு
  பக்குவமே தேவையென்று
  பாரினுக்கு எடுத்துரைக்கும்
  பாடமதைப் புகட்டுதன்றோ !

 ஆணவத்தை கொண்டிருப்பார் 
 ஆண்டவனைக் காணார்கள்
 எனும்கருத்தை உணர்த்துகின்ற
 அரும்விரதம் சிவராத்ரி 
 அவ்விரத நாளினிலே
 அனைவருமே கோவில்சென்று
 ஆணவத்தைப் போக்குவென
 ஆண்டவனை வேண்டிடுவோம் !

இலங்கையில் பாரதி அங்கம் - 10 முருகபூபதிஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இலக்கியப்படைப்பாளிகள், கலைஞர்கள், நடன நர்த்தகிகள், ஊடகவியலாளர்கள், இதழாசிரியர்கள் பாரதியின் தாக்கத்திற்குட்பட்டதனாலேயே  பாரதியியலிலும்  ஈடுபாடுகொண்டிருந்தனர்.
ஈழத்தில் பாரதி இயல் என்ற பிரயோகத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் க. கைலாசபதி. எமது நாட்டில் இலக்கியச்சிற்றேடுகளில் பாரதி ஏற்படுத்திய பெரிய தாக்கத்தைப்பற்றி  எழுதுவதாயின் பல அங்கங்கள் தேவைப்படும்.
ஏராளமான  இலக்கிய சிற்றேடுகள் இலங்கையில் வெளிவந்ததே அதற்கு  அடிப்படைக்காரணம். ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வுசெய்ய முன்வந்தால் அதற்கு உரமிட்டவை இலக்கியச்சிற்றேடுகளே  என்ற முடிவுக்கும்  வரமுடியும்.
இலங்கையில் பாரதியின் சிந்தனைகள் விகசிக்கத்தொடங்கிய 1922 ஆம்  ஆண்டிற்குப்பின்னர், 1940 முதல் வெளிவரத்தொடங்கிய சிற்றிதழ்களின் எண்ணிக்கை  நூறுக்கும் அதிகம்.
தமிழ்த்தேசியப்பத்திரிகையின்  வளர்ச்சியில் உதயதாரகை முதல் தற்பொழுது வெளிவரும் காலைக்கதிர் வரையில் கால வரிசைப்படி ஆய்வுசெய்யலாம்.
அதேபோன்று  இலக்கியச்சிற்றேடுகளை  அவதானித்தால் 1940 இற்குபின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து மறுமலர்ச்சி, கிழக்கிலங்கை மண்டுரிலிருந்து 'பாரதி' கொழும்பிலிருந்து மற்றும் ஒரு இதழ் 'பாரதி' முதலானவற்றிலிருந்து தற்போது கொழும்பில் வெள்ளவத்தையிலிருந்து ஞானம்,  யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து ஜீவநதி, கிழக்கில் மட்டக்களப்பிலிருந்து ' மகுடம்' அநுராதபுரத்திலிருந்து 'படிகள்' - ஆகியனவற்றின்  வளர்ச்சியையும் நாம் கண்டுகொள்ளமுடியும். இவைதவிர கவிதைக்கான இதழ்களும் வருகின்றன.
இவற்றுக்கு  இடைப்பட்ட காலத்தில் கலைச்செல்வி, மரகதம், மல்லிகை, புதுமை இலக்கியம், வசந்தம், விவேகி, அஞ்சலி, பூரணி, நதி, களனி, அக்னி, நோக்கு, வாகை, மாருதம், கீற்று, மாற்று, ஊற்று, பாடும்மீன், ரோஜாப்பூ, கதம்பம், பூமாலை, குமரன், தமிழமுதம், தமிழின்பம், மாணிக்கம், அலை, குன்றின் குரல், கொழுந்து, தாரகை, புதுசு, அலை, தீர்த்தக்கரை, பொதுமக்கள் பூமி, சுவர், சமர், சிரித்திரன், வெளிச்சம், களம், சுவைத்திரள், கலகலப்பு, அக்கினிக்குஞ்சு, அமிர்தகங்கை, தாயகம்....  இவ்வாறு  எண்ணற்ற இதழ்கள் தோன்றி மறைந்தன.

ரசனைக்குறிப்பு: பார்த்தோம், ரசித்தோம், புசித்தோம் காலச்சுவடு நாட்காட்டி "அடிசில்" பேசும் நளபாகத்தில் இலக்கிய ஆளுமைகளின் அர்த்தமுள்ள வரிகள் முருகபூபதி
" ஒரு காலைக்காட்சி. வெள்ளைச்சட்டையில், இரட்டைப்பின்னல் போட்ட  இரண்டாம் வகுப்பு மாணவி நான். சைக்கிள் மிதித்து விரைகிறேன். வேம்பும் வாகையும் பனையும் நிழல்தர, மா, பலா, வாழை, தென்னை, கனிகள் நிறைந்து செழித்த ஊர் அது. பாடசாலை போகும் பாதை. ஒவ்வொரு வீட்டைக்கடக்கும்போதும் காற்றில் ஒவ்வொரு வாசம்.
ஒருவீட்டில், தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பிழிந்துவிடும் வாசம். - அது 'பாற்சொதி'. இன்னொரு வீட்டில், செத்தல் மிளகாய் பொரிக்கும் வாசம் - அது ' இடித்த சம்பல்'. அடுத்தவீட்டில் நல்லெண்ணெய் கல்லில் முறுகும் வாசம். - அது தாளித்த ' மஞ்சள் தேசை'. எதிர்வீட்டில், இடித்து வறுத்த சிவப்பு அரிசிமா தேங்காய்ப் பூவுடன் மூங்கில் குழலில் அவியும் வாசம். - அது 'புட்டு'. எனக்குப்பிடித்த உணவு. ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள தென்னோலைகளால் வேய்ந்த வீட்டில், சின்னவெங்காயமும் பச்சை மிளகாயும் வதங்கும் வாசம் - அது ' முட்டைப்பொரியல்'. வளைவில் திரும்பினால், செழித்த பழத்தை இரும்புக்கத்தி அறுக்கும் வாசம் - அது ' கறுத்தக்கொழும்பான்' மாம்பழம்.
ஒவ்வொரு வீட்டின் அடுப்படிக்குள்ளும் எட்டிப்பார்க்காமலேயே  அந்த வாசத்தை நுகர்ந்து, மென்று, சுவைத்து மனதுக்குள் சொல்லிப்பார்ப்பேன். அது அத்தனை நேசித்த ஒரு விளையாட்டு. உணவுக்கும் வாசனைக்குமான எனது பயணம் இங்குதான் தொடங்கிற்று. ஒரு வாசம் நூறு நினைவுகளுக்குள் இழுத்துச்செல்லும். அந்த நினைவுகள் ஒரு காலத்தின் முடிச்சுகளாக உறைந்து கிடக்கும். ஒரு நொடி போதும், அவை மெல்ல உருகி அவிழ"
மேற்சொன்ன வரிகளை படிக்கும் வாசகர்களுக்கு, தமது இளமைக்காலம்  நினைவுக்கு வரலாம். அதில் " ஒரு வாசம் நூறு நினைவுகளுக்குள் இழுத்துச்செல்லும்"  என்ற  வரி  ஒவ்வொருவர் வாழ்வின் அந்தரங்கத்தையும் பேசும்.

"அது எங்கட காலம்" பிறந்த கதை - கானா பிரபா
ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற வலைப்பதிவினூடாக கடந்த 11 வருடங்களாக எழுதிய பதிவுகளில் தேர்ந்தெடுத்த 21 கட்டுரைகளை வைத்து நூலாக்க வேண்டும், அந்தப் பதிவுகளில் இடம் பிடித்த இறந்து போனவர்களும் இன்னும் வாழ்பவர்களுமான எங்களூர் மனிதர்களோடு வாழ்ந்தவர்கள் முன்னால் இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா என்னுள் இருந்தது.

அருணோதயாவின் இன்னிசை மாலை 2017 04 .03.2017

.

இலங்கைச் செய்திகள்


தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இராணுவத்தினர் வைத்திருந்தனர் : புகைப்பட ஆதாரங்களுடன் ஐ.நா.விடம் சிக்கியது

மத்திய வங்கி ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியா படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

காணிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்.!
உலகச் செய்திகள்


வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் பெண்களால் கொல்லப்பட்ட சம்பவம் : வெளியானது பரபரப்பு சிசிரிவி காட்சி

இந்தியப் பொறியியலாளர் இனவெறிக் கொலை; அமெரிக்காவில் அதிர்ச்சி!


தமிழ் சினிமா

காஸி


இந்திய சினிமாவில் எப்போதாவது தான் நல்ல திரைப்படங்கள் வரும், அப்படிப்பட்ட திரைப்படம் தான் இந்த காஸி, இப்படத்தின் முழு விமர்சனத்தை பார்ப்போம்.

கதைக்களம்

Ghazi இந்தியாவின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS VIKRANTH. ஐ என் எஸ் விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை , அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய பங்களாதேஷ்) கிளர்ச்சியாளர்களை அடக்க, இந்தியாவை மீறி இராணுவத்தையோ விமானங்களையோ அனுப்ப இயலாத நிலையில், இந்தியாவிற்கே குறிவைக்கின்றார்கள்.
அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட அதி நவீன நீர்மூழ்கிக்கப்பலில் அரபிக்கடல், இந்தியக்கடல் என்று பயணித்து வங்காள விரிகுடாவிற்கு வருகிறார்கள். பாகிஸ்தான் சதியை முன்பே அறிந்த ரா, இந்தையக்கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் வந்து ஓம் பூரியிடம் எச்சரித்துச் செல்கிறார்கள். கிழக்குக் கடற்கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த கோபக்காரக் கேப்டன் கே கே மேனனுடன், சாதுர்யமான ராணா ஆகியோர் இருவரும் கேப்டனாகப் பணியாற்றும் வகையில் எஸ் 21 நீர்மூழ்கிக்கப்பலில் அனுப்பி வைக்கப்படுகிறது.
காஸியை ஒப்பிடும் போது, பலம் குறைந்த எஸ் 21 ஐ வைத்துக் கொண்டு, காஸியின் சதியை அதாவது பாகிஸ்தான் கடற்படையின் சதியை முறியடித்து, என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

முதலில் இப்படிப்பட்ட ஒரு படத்தை முதல் படமாக எடுத்ததற்காக அறிமுக இயக்குனர் நர்சங்கல்ப்பை மனம் திறந்து பாராட்டலாம், எந்த ஒரு இடத்திலும் திரைக்கதை சோம்பம் தட்டவில்லை.
ராணா, அதுல் குல்கர்னி, டாப்ஸி என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.
நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியது, அதில் பயணித்த அத்துனை வீரர்களும் பலி, என்று நாம் செய்தித்தாள்களில் படிக்கும் போது அது ஒரு சாதாரணமான செய்தி அவ்வளவுதான். ஆனால், ஒரு கட்டத்தில் காஸியின் கண்ணிவெடியில் சிக்கி, இலேசாக சிதிலமடைந்து ஆழ்கடலுள் தரைதட்டும் போது நமக்கும் மூச்சு முட்டுகிறது.

க்ளாப்ஸ்

படத்தின் கதை மற்றும் திரைக்கதை, இத்தனை பதட்டத்துடன் சீட்டின் நுனிக்கு வந்து ஒரு படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.

பல்ப்ஸ்

கொஞ்சம் கிராபிக்ஸ் காட்சிகள் யதார்த்தம் விலகுகிறது.
மொத்தத்தில் காஸி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய படம்.
Cast:

நன்றி   cineulagam