மரண அறிவித்தல்

.
      திருமதி ஜெயமணி செல்லையா

திருமதி ஜெயமணி செல்லையா 3-10-2018 புதன்கிழமை கன்பெராவில் காலமானார். அவர் காலஞ் சென்ற அந்தோனி செல்லையாவின் அன்பு மனைவியும் , ஜெயராஜாதேவி செல்வராஜா (கன்பெரா), மனோரஞ்சிதம் ராமச்சந்திரன் (கன்பெரா) , சந்திரசேகரம்(டென்மார்க்), தயானந்தன்(கொழும்பு), நித்தியானந்தன்(கனடா), யோகானந்தம்(கன்பெரா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற செல்வராஜா, ராமச்சந்திரன், ஜீவமலர், தனகாம்பிகை, தமிழ்ச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும் சுஜீவன், சஜனி , நிலானி, கீதா, சஞ்சீவன், மரியா, மதுரா , தயானி, நிஷாந்தினி, ரஜீவன், தினேஷ், ரதினி ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஜெசிக்கா, நவீன், ஜஸ்லீன், ஜோயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.    
பூதவுடல் 5-10-2018 அன்று மாலை 6.30 மணிக்கு பார்வைக்காக Uniting Church, 69 Northbourne Ave, Canberra இல் வைக்கப்பட்டு 6-10-2018 அன்று காலை 10.30 மணிக்கு Norwood Park Crematorium, 65 Sandford St, Mitchell தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

தகவல்: யோகன் 0421348624


சன்மார்க்க வழிசெல்வோம் ! - ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )

               நபிவந்தார் யேசுவந்தார் நாயன்மார் வந்தார்கள்
                    புவியுள்ளார் மனமெல்லாம் புனிதமுறச் செய்வதற்கு
               கலிவந்து பிடிக்காமல் காப்பதற்கு வழிசொன்னார்
                       புவியுள்ளார் அதைக்கேட்கா புறந்தள்ள முற்பட்டார் 
              செவிவழியே நல்லவற்றை செலுத்துவிட விரும்பாமல்
                       செம்மையிலா பலவற்றைச் செலுத்துவிட்டு நின்றார்கள்
               கலிகாலம் வந்துவிடின் இப்படித்தான் இருக்குமெனெனின்
                       கரையேற்றம் வாழ்வினிலே எப்படித்தான் வந்திடுமோ !

              உலகத்தில் சமயமெல்லாம் உன்னதத்தைச் சொல்கிறது
                       ஒழுக்கமுடை வாழ்வினையே உயர்வுஎனப் பகர்கிறது 
              நலங்கெடுக்கும் செயலையெல்லாம் நஞ்செனவே நினைக்கிறது
                       நாளெல்லாம் நல்லதையே நாடுவென நவில்கிறது 
              நிலமுழுக்கச் சமாதானம் நீடிக்க நினைக்கிறது
                        நிட்டூரம் வாழ்வைவிட்டு நீக்கிவிட முயல்கிறது 
              உலகத்து மாந்தரெலாம் உண்மைதனை உணர்வதற்கு
                        உகந்ததுணை கடவுளென ஒருமித்தே உரைக்கிறதே !

சிட்னியில் நடைபெற்ற சிலப்பதிகார விழா 2ம் நாள் (23/09/2018)

வாழ்வை எழுதுதல் - அங்கம் 04 வரலாற்றில் பதிவாகும் காலிமுகத்தைச் சுற்றி முட்கம்பிவேலி அமைத்த கதை! 1953 ஹர்த்தாலும் சமகாலத்து ஆர்ப்பாட்டங்களும் - முருகபூபதி


ஆர்ப்பாட்டங்கள் மனிதவாழ்வுடன் ஒன்றித்திருப்பது. தங்கள் கோரிக்கையை முன்வைத்து குழந்தைகளும் அடம்பிடித்து - அழுது காரியம் சாதிக்கும்.
ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் தத்தம் தேவைக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் பெற்றவர்கள் திணறிப்போகும் காட்சிகளையும் அன்றாடம் காணமுடியும்.
குழந்தைகளிடத்தில் பாரபட்சம் காண்பித்தால் அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் புதிய புதிய வடிவங்களை எடுத்துவிடும். அரசியலும் அப்படித்தான்.
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக  கலந்துகொண்ட ஒரு பொதுநிகழ்வில் இலங்கை இனப்பிரச்சினையின் மூலவேர் குறித்து,  சிங்கள மொழியிலேயே உரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரனும் தேசிய இன நெருக்கடிக்கு ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் மீதான பாரபட்சத்தையே உதாரணமாக காண்பித்திருந்தார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி இலங்கைத் தலைநகரத்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை முன்னெடுத்திருந்த பொது எதிரணிக்கு இன்றைய மைத்திரி - ரணில்  கூட்டு நல்லாட்சி(?) யை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருந்தது.
இந்த நல்லாட்சிக்கூட்டணியின்  சூத்திரதாரியான சந்திரிக்கா குமாரணதுங்க பதவியிலிருந்த காலத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.  அவருடைய தாயார் ஶ்ரீமா பிரதமர் பதவியிலிருந்தபோதும்  தந்தையார் பண்டாரநாயக்கா பிரதமராக இருந்தபோதும் ஆர்ப்பாட்டங்களும் குறைவின்றி நடந்துள்ளன.
பண்டாரநாயக்காவின் காலத்திலேயே தமிழரசுக்கட்சியினரின் சிங்கள ஶ்ரீ எழுத்துக்களுக்கு தார்பூசி அழிக்கும் போராட்டமும் காலிமுகத்தில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டமும்  நடந்த காலத்தில் எனக்கு ஏழுவயது. அதனை நேரில் பார்க்காது விட்டாலும் அந்தப்போராட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகளையும் அவற்றின்  பின்னணி வரலாறுகளையும் படித்து தெரிந்துகொண்டிருக்கின்றேன்.
1953 இல் பெரிய ஹர்த்தால் நடந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட காலத்தில் எனக்கு இரண்டுவயது. அந்தச்செய்திகளையும் பின்னாளில்தான் படித்து தெரிந்துகொண்டேன்.
1947 இல் பொதுவேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தபோது நான் இந்த உலகில் பிறந்திருக்கவில்லை. அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்தான்  கந்தசாமி என்ற தமிழ் அரசாங்க ஊழியர் என்ற தகவலையும் படித்துத்தான் தெரிந்துகொண்டேன்.

1966 இல் டட்லி - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து தலைநகரில் அன்றைய எதிரணியினர் நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் ஒரு பெளத்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்டார்.
1953 ஹர்த்தால்,  இலங்கையின் மூவின மக்களும் அரசியல், இன, மத வேறுபாடுகளின்றி விலைவாசி உயர்வைக்கண்டித்து பேரெழுச்சியாக ஒன்றிணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் என்று வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன.
ஹர்த்தால் என்ற பெயரும் இலங்கைக்கு இந்தியா குஜராத்திலிருந்து இறக்குமதியான சொல்தான்! பின்னாளில் தெற்காசிய நாடுகளில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள் நடக்கும்போது பயன்படுத்தப்பட்ட சொற்பிரயோகம். முதல் முதலில் இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய இச்சொல்லைத்தான் இலங்கையில் 1953 இல் பயன்படுத்தியிருக்கின்றனர்.

சிலப்பதிகார விழாவில் மேடை ஏறிய திருமதி உமாசங்கரின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி


 படப்பிடிப்பு : ராஜா

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை உள்மனயாத்திரையில் இலக்கியம் படைக்கும் உமா வரதராஜன் - முருகபூபதி


பெயர்களுக்கு முதல் எழுத்து அவசியப்படுகிறது.  அவுஸ்திரேலியாவில் எனது மகன், தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்குப்பெயர் வைத்து,  அதன் முதல் பெயராக எனது பெயரைச்சூட்டி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறான்! யாருக்கு கிடைக்கும் இந்தப்பாக்கியம்!  நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதனால் எனக்கும் பெருமைதான்!
ஆறறிவு படைத்த மனிதர்கள் தந்தையின் பெயரில் வரும்  முதல் எழுத்தையும்  பயன்படுத்துவோம். பெண்கள் திருமணமானதும்  கணவரின் பெயரையும் இணைத்துக்கொள்வார்கள். எங்கள் ஈழத்து இலக்கிய உலகில் ஒருவர் தனது தாத்தாவினதும் தந்தையினதும் முதல் எழுத்துக்களை இணைத்துக்கொண்டு வலம்வருகிறார். முன்பின் தெரியாத வாசகர்கள் அந்தப்பெயருக்குரியவர் பெண் என்றுதான் நினைப்பார்கள். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியையும்  பல வாசகர்கள்  முன்னர் அப்படித்தான் நினைத்தனர்!
இந்தப்பதிவில் நான் குறிப்பிடும்  கிழக்கிலங்கையில் கல்முனையிலிருந்து நீண்டகாலமாக எழுதிவரும் உமா வரதராஜனின்  தாத்தாவின் பெயர் உடையப்பா. தந்தையின் பெயர் மாணிக்கம். இவர்களின் முதல் எழுத்துக்களை இணைத்து தனது பெயருடன் உமா வரதராஜனாக எம்மத்தியில் அறிமுகமானவர்.
சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்து, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, இதழியல் முதலான துறைகளில் ஈடுபடுபவர். காலரதம், களம் ஆகிய இதழ்களையும் நடத்தியிருப்பவர். இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம். ஜெர்மன் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.
நான் எழுதத்தொடங்கிய கால கட்டத்தில் இவரும் இலக்கியப்பிரவேசம் செய்தமையாலும் அக்காலப்பகுதியில் கொழும்பில் சிங்கர் தையல் இயந்திர விற்பனை நிறுவனத்தில் இவர் பணியாற்றிக்கொண்டிருந்தமையாலும் அவ்வப்போது எங்கள் ஊருக்கும் வந்து என்னை சந்தித்திருப்பவர்.
மூத்த எழுத்தாளர் இளங்கீரன் அவர்களின் புதல்வர் மீலாத் கீரனுடன் இணைந்து இவர் நடத்திய காலரதம் வெளிவந்த காலத்தில் இவரது வயது 17 எனச்சொன்னால் எவருக்கும் வியப்பாகத்தானிருக்கும். காலரதம் சில இதழ்கள்தான் வெளிவந்தன. அதில் இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் இளங்கீரன், கே. டானியல் ஆகியோருக்கும்  மற்றும் பல எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி எழுத்தாளர்களுக்கும் களம் வழங்கியவர்.
அதன்பின்னர் வியூகம் என்ற பெயரிலும் ஒரு இதழ் வெளியிட்டதாக அறியக்கிடைக்கிறது. அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்த பின்னர் இவருடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்தாலும், அவ்வப்போது இவரது கதைகளைப்படித்து வந்திருக்கின்றேன்.
தனது வாழ்வின் தரிசனங்களையும் அனுபவங்களையும் தனது கதைகளில் பிரதிபலிக்கும் உமா வரதராஜனின் உள்மனத்தில் அவை தொடர்ந்து யாத்திரை செய்கின்றமையையும் இவரது கதைகளிலும் அவை எதிரொலிப்பதிலிருந்து  அவதானிக்கமுடியும். இவர் எழுதிய உள்மனயாத்திரை என்ற கதைத்தொகுப்பிற்கு வடக்கு கிழக்கு மாகாண சபையின்  விருதும் கிடைத்துள்ளது.

உலகில் முதல் முறையாக ஹாலிவுட் விநியோக அங்கீகாரம் பெற்ற ஈழ மக்கள் பற்றிய ஈழத்தமிழர் திரைப்படம் "சாட்சிகள்சொர்க்கத்தில்".


உலகில் உள்ள மக்களை உலுக்கிய, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா இருவரின் கொடூர கொலை சம்பவங்களை  மையமாக வைத்து உருவாக்கபட்ட திரைப்படம் "சாட்சிகள் சொர்க்கத்தில்", இத்திரைப்படத்தை ஆஸ்திரேலியவாழ் ஈழத்தமிழரான, திரைப்பட இயக்குனர் ஈழன் இளங்கோ அவர்கள் இயக்கி இருந்தார், இத்திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படடது அனைவரும் அறிந்ததே.

பொதுவாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடும் போது, தயாரிப்பாளர்களே தனிப்பட்ட முறையில் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து, ஒருசில காட்சிகள் மட்டுமே திரையிடுவது வழக்கம். இந்திய திரைப்படங்களை திரையிடும் விநியோகஸ்தர்களோ அல்லது திரையரங்குகளோ இதுபோன்ற வெளிநாட்டு உள்ளூர் தயாரிப்புகளை திரையிட முன்வருவதில்லை.

இலங்கைச் செய்திகள்


யாழ். குடா பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ; எச்சரிக்கும் சுந்தரம் டிவகலாலா

ஜனாதிபதி மைத்திரி தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினுடன்

62,338 பேருக்கு பயணத் தடை

பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியாவில் இடம்பெற்றது

ஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார்

ஜனாதிபதி, கோத்தா கொலைச் சதி ; கைதுசெய்யப்பட்ட இந்தியரின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் !

ஜனாதிபதி மைத்திரி ட்ரம்புடன்

நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை!!!

யாழ்.நகரில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பேரணி

வெள்ளத்தில் மூழ்கியது நாவலபிட்டி நகரம்

யாழில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தகவல்

திருமணம் முதல் அவர்களது குடும்பத்தில் பிரச்சினை இருந்தது - தற்கொலையாயின் நிரூபிக்கவும் பெண் விரிவுரையாளரின் தாயார்

நிசாம்தீன் பிணையில் விடுதலையாழ். குடா பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது ; எச்சரிக்கும் சுந்தரம் டிவகலாலா

25/09/2018 ஐம்பது வருடங்களில் மக்கள் முழுமையாக வெளியேற வேண்டிய அபாயத்தை யாழ். குடாநாடு எதிர்நோக்கியுள்ளதென வடமாகாண ஆளுநர் அலுவலக இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகலாலா தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்


பொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா

தான்சானியாவில் படகு விபத்து பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு

மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியின் இப்ராகிம் முகமது வெற்றிபெற்றதாக அறிவிப்பு

பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டுகள் சிறை

இந்தோனேசியா சுனாமி : உயிரிழந்தோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

தென் பசுபிக் கடற் பிராந்தியத்தில் விமானம் வீழ்ந்து விபத்து!!!

இனி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் ; இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 “மீண்டும் சந்திப்போம்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை”பொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா

25/09/2018 அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பால்  சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்­கப்­பட்ட  புதிய சுற்று சுங்க வரி விதிப்­புகள் நேற்று திங்­கட்­கி­ழமை முதல் அமு­லுக்கு வந்­துள்­ளன.

'தமிழ் ஓசை'யின் 10 ஆவது ஆண்டு விழா 01/10/2018தமிழ் சினிமா - ராஜா ரங்குஸ்கி திரை விமர்சனம்பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது நிச்சயம். அந்த வகையில் ராஜா ரங்குஸ்கி என பெயர் தாங்கி வந்துள்ள படம் ராஜா போல நின்று விளையாடுமா என பார்க்கலாம்.

கதைக்களம்

ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே.
இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறையில் ஆர்வலராக இருக்கும் இவருக்கென ஒரு தனி பாலிசி. ஒரு நாள் அவர் குடியிருப்பில் பெண் ஒருவர் கொல்லப்படுகிறார். ரோந்து பணிக்காக சென்ற ஹீரோ இதை கண்டு அதிர்ச்சியாகிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகள். சம்மந்தமில்லாமல் இவர் இக்குற்ற வழக்கில் சிக்க, நடப்பது என்ன? பின்னணியில் இருப்பது யார்? என புரியாத புதிராக நகர்வது தான் ராஜா ரங்குஸ்கி.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ சிரிஷ் மெட்ரோ படத்தை தொடர்ந்து 2 வது படமாக இந்த ஆக்‌ஷன் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். கதையில் இவர் தான் ராஜா. ஒரு சாதாரண போலிஸ் காவலர். காதல் ஒரு பக்கம். பழி மறுபக்கம் என அமைதியற்று அலைகிறார். பொருத்தமான கதையை தான் அவர் தேர்வு செய்திருக்கிறார். அவர் முன்பு நேர்காணல்களில் சொன்னது போல இப்படம் பலருக்கும் பிடிக்கும்.
ஹீரோயின் சாந்தினி பல படங்களில் நடித்த அனுபவத்தை காட்டியுள்ளார். ரங்குஸ்கியாக அவர் கேரக்டரில் இருந்தாலும் ஹீரோவுக்கு நிகரான இடம் இங்கே அவருக்கு என சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு ஹீரோயினை மையப்படுத்திய கதை போல என்றால் மிகையல்ல.
இயக்குனர் தரணி தரண் ஜாக்சன் துரை படத்தை கொடுத்து மற்ற படங்களுக்கு மத்தியில் இடம் பிடித்தது போல இப்படத்திலும் அவர் பிடித்து வைத்திருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார்.
கல்லூரி வினோத் இப்படத்தில் ஒரு சப்போட்டிங் ரோல் என்றாலும் சில இடங்கள் அடிக்கும் காமெடிகள் படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் புத்துணர்வு கொடுக்கிறார். வாழ்த்துக்கள்.
சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்குள் வரும்படியான காட்சி நகர்வுகளை பார்க்கும் போது பல படங்களை பார்த்து பழகியவர்களுக்கு கொஞ்சம் Uneasy போல தான். ஆனாலும் சம்திங் மிஸ்ஸிங் என சொல்லவைக்கும். அதனால் ஒளிப்பதிவாளருக்கும் இதில் பங்குண்டு.
இசைக்கு யுவன். நாம் சொல்லவா வேண்டும். இந்த படத்திற்கு அவர் பெரிதளவில் சம்பளம் வாங்கவில்லை என்றாலும் தனக்காக இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து வைத்துள்ளதோடு, அவர்களின் எதிர்பார்ப்பை இங்கேயும் நிறைவேற்றியுள்ளார். சிம்பு இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதுமட்டுமல்ல. படத்தில் நாம் எதிர்பாராத விசயங்களும் உண்டு. அதை நாங்கள் இங்கே சொல்லப்போவதில்லை.

கிளாப்ஸ்

படத்தில் கதை நகர்வு சலிப்படையாமல் நம்மை இழுத்து செல்வது தான்.
இயல்பான காமெடிகள் காமெடி நடிகர்கள் இல்லை என்ற குறையை மூடிவிட்டது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு பக்க பலம்.
எதிர்பாராத கிளைமாக்ஸ் Interesting Segment.

பல்ப்ஸ்

ஹீரோ இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்களை கூட்டியிருக்கலாம்.
பாடல்கள் மனதில் இடம் பெறுவது கொஞ்சம் கேள்வியாக தான் இருக்கிறது.
மொத்தத்தில் ராஜா ரங்குஸ்கி ஒரு புதிரான விளையாட்டு. தியேட்டரில் பாருங்கள் மக்களே...