இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

.
அன்பான தமிழ்முரசு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் பொங்கல் வாழ்த்துக்களும்


ஆசிரியர் குழு

தைப்பொங்கல் - சிட்னி முருகன் கோவில் - 15/01/2012

.
சிட்னி முருகன் கோவில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு



                                                                                                                படப்பிடிப்பு ஞானி 

திருவாசக முற்றோதல் 2012


.
அன்புடையீர்!

வணக்கம். கடந்த ஆண்டுகளைப்போல, இந்த ஆண்டும் சிட்னி ஸ்ரீதுர்க்கை அம்மன் கோவிலில் திருவாசக முற்றோதல் நடைபெற திருவருள் கூடியுள்ளது. நமது சமய முதல் நூல்களில் ஒன்றான திருவாசகத்தின் சிறப்புக்கள் பல உள. ஒருசிலவற்றை இங்கு காண்போம்.

பரம்பொருளாகிய சிவபெருமானே தம் கைப்பட எழுதித் தந்தது.

சைவசமயத்தவரால் மிக அதிக அளவில் முற்றோதல் செய்யப்படும் பெருமை உடையது.

பாடும்போதெல்லாம் உள்ளத்தை உருக வைப்பது.

இத்தகைய திருவாசக முற்றோதலில் கலந்துகொண்டு வளமனைத்தும் பெறுவீர்.

திருவாசக முற்றோதலில் கலந்துகொள்ளும் அடியார்கட்கு அன்னதானம் வழங்கப்படும்.

இடம்: துர்க்கை அம்மன் கோவில், 21 & 23 Rose crescent , Regents park NSW - 2143

நாள் - 22 ஜனவரி 2012

நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 4.30 வரை

மேலும் தொடர்புகளுக்கு

Ph: (02) 9644 6682 (02) 9746 9724

Website: www.sydneydurga.org Email: sydneydurga@gmail.com

கவிதைகள்

.
பிரார்த்தனையின் தீவிரத்தில் குவிந்து மூடிய கைகள்
இறுகிக் கொள்ள உன்
கை ரேகைகள் வழியாகத்தன்
வேர்களை வலையாகப் பின்னி
உன்னை இருட்குகைக்குள் வைத்திருக்கும்
உன் கடவுளின் தூக்கம் கலையாமல்
உன் விரல்களை மெல்ல விலக்கி
வெளியுலகம் காணாது
தொழுது அழுது கொண்டிருக்கும்
உன்னை வெளியே கொண்டுவந்து
இதுதான் உலகம் என்று
சொல்ல விரும்புகின்றேன்
இங்கு கடவுள் எதற்காகவும் நம்மை
உச்சி முகர்வதில்லை
இதன் காற்றிற்குள்
வேறு எந்த ஆவிகளுமில்லை
என்று சொல்ல நினைக்கிறேன்

ஆனால் உன்னை வெளியே

கொண்டு வருமுன்னென்
தவறுகளில் தடுக்கி
உன்னை விட்டு விடுகின்றேன்
உன் பிரார்த்தனைகள் இறுக
நீ இன்னும் ஆழமான இருளுக்குள் செல்கின்றாய்


என்றாலும் அம்மா
உன்னுடைய ஒரே வெற்றி
உன் கடவுள்
என் இருளுக்குள்
இருளாகி இறங்கி
விஷமெனப் பரவிக்கொண்டிருக்கிறார்
என் உலகில்

-அகஸ்டஸ்


Nantri:vadakkuvaasal

சொந்தமண்ணில் தொலைந்த இளமைக்காலம் -பரணி


.


வாழையிலையில் அன்னமிட்டு
பருப்போடு நெய் பிசைந்து
உண்ண வழியில்லை

சுவையான உணவுக்கேங்கி
உப்பற்ற உணவைத் துப்பத் துணிவில்லை
எண்ணை இனிப்பு வகையெல்லாம்
உனக்கில்லை நாற்பதின் பின்

அழகிய நங்கையரின் 
ஆடை அணிகளைக்கூட அழகென்று
வாயாரச் சொல்ல வழியில்லை 

ரோட்டோர மரநிழலில் நண்பர்களுடன்
அன்று அடித்த அரட்டை மணிக்கணக்காய்
நிமிடத்துக்காவது இன்று முடியவில்லை

தாய்மொழியில் பேசாமல் நாகரீகத்தில்
சிலர் வேற்று மொழி பேசுகையில்
எண்ணத்தில் மட்டும் கை வலிக்க
அடிக்கும் வேகம் வரும்

அதிகாலைப் புள்ளினங்களின் சத்தத்திலும்
கோயில் மணியோசையிலும் கண் விழித்தது
கனவாக மிஞ்ச
அலாரச் சத்தத்தில் கண்விழித்தேன்

வார இறுதியில் கூட
முடியவில்லை எட்டு மணித்தூக்கம்
பிறகென்ன பிற்பகல் தூக்கம்

சும்மாவா சொன்னார்கள்
சுதந்திரம் எனது பிறப்புரிமையென்று
புரியவில்லை இன்னும்

கடற்கரையில் அப்பாவோடு சிப்;பிகள் பொறுக்கி
மகிழ்ந்த நாட்களும்
சுனாமியால் பிணங்களைப் பொறுக்கும்
தொலைக்காட்சி நிகழ்ச்சியால் அழுகின்ற நாட்களும்

பேனா மை முடிய வானவில்லின் தோழமையில் 
கார்மேகத்தைக் கண்டவுடன்
மை சில துளிகள் கேட்க
குடம் குடமாய் கொட்டியது தண்ணீரை மட்டும்

கனவுகளில் மட்டுமே திரளும் மேகமாய்
இளமைக்கால இனிய நினைவலைகள்
அப்போது நினைத்தேன் - இது
எனக்கு மட்டுமான வலியில்லை என்று

பரணி                     

காணும் பொங்கல்





ஆஸி. செல்ல முயன்ற மேலும் நால்வர் கைது

 _

எம்.நேசமணி 11/1/2012

சட்டவிரோதமான முறையில் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த மேலும் நால்வரை தங்காலை பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் தங்காலை, அம்பாந்தோட்டை கடற்பரப்பில்வைத்து குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தங்காலை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 14 பேரும் அவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்த 7 பேருமாக 21 பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி




எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது - அ. முத்துலிங்கம்



2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.

தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் (நி,ச,வே) பதிவு நடாத்திய பொங்கல் விழா

.
இனிதாக நடந்து முடிந்த தமிழ் மூத்த பிரசைகள் சங்கத்தின் பொங்கல் விழாவினை கீழே உள்ள படங்களில்  காணலாம் .



எண்பது ரூபா


.
நெல்லை .பேரன்

தூரத்தில் எங்கேயோ  பௌத்த ஆலயத்திலிருந்து பிக்குகள் பிரித் ஓதும் சத்தம். 'புத்தம் சரணம் கச்சாமி' 'சங்கம் சரணம் கச்சாமிஎன்று விட்டு விட்டுப் புத்தர்பெருமானின் திருப்பாதங்களைத் தொழுகின்ற அடியார்களது ஒலிகூடக்கந்தையாவை அமைதிப் படுத்தவில்லைபடுக்கையில் புரண்டு படுத்த அவனைக்கணநேரத்திற்குள் சுள் என்று குத்திய மூட்டைப் பூச்சி தட்டி எழுப்பிவிட்டதுபக்கத்துஅறையில் இருந்த தனிக்குடித்தனக் காரர்களின் பழைய காலத்துப் 'பிக்பென்'மணிக்கூடு டாண் டாண் என்று பன்னிரண்டு தடவைகள் அடித்து ஓய்ந்தது.கந்தையாவுக்குப் பெரியதொரு பெருமூச்சு வெளிப்பட்டதுகடந்த காலமும் குடும்பநினைவுகளும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன.

அப்பொழுது கந்தையாவுக்கு இருபது வயதிருக்கும்நெல்லியடி சென்றல் ஸ்கூலில்படித்து எஸ்.எஸ்.சி யைப் பாஸ் பண்ணிவிட்டு அதற்கு மேலே படிக்க முடியாமல்ஊர்ப்பொடியள் ஒன்றுகூடும் முருகையன் கோவிலின் பிள்ளையார் மண்டபத்திற்குமுன்னால் அந்தப் பன்னீர் மர நிழலில் உட்கார்ந்து அரசியல் தொடக்கம் சினிமாஉலகம் வரையில் நண்பர்களுடன் விளாசித் தள்ளுவான் கந்தையா.சிலவேளைகளில் சுவாமியை வைத்துத் தள்ளும் பெரிய சகடைச் சில்லுகளின் மேல்உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் உலக விவகாரங்களையும் ஊர்விவகாரங்களையும் அவன் அலசும் விதமே தனி அலாதியாகவிருக்கும்.அப்போதுதான் எல்லோரும் கிளறிக்கல் உத்தியோகத்திற்குப் பரீட்சை எடுப்பதற்குவிண்ணப்பம் போடுகிறார்கள் என்று அறிந்து 'கோழி மேய்ச்சாலும் கோறண மேந்துஉத்தியோகம் வேணுமடா மேனைஎன்று பக்கத்து வீட்டுச் சின்னாச்சியக்கைசொன்னதையும் ஞாபகத்திலை வைச்சுக்கொண்டு தானும் பதினைஞ்சு ரூபாமுத்திரையொட்டிச் சமாதான நீதவானைப் பிடிச்சு ஒரு கையொப்பமும் வேண்டித்தன்னுடைய பேரில் ஒரு விண்ணப்பத்தைப் போட்டு வைத்தான்சமாதானநீதவானுடைய பெண்சாதி கூடத் தம்பி 'நீ கவனமாகப் படிச்சுக் கிளறிக்கல்உத்தியோகம் பார்க்க வேணும்கொய்யாவின்ரை தோட்ட முயற்சி சரிப்படாதுஇந்தக்காலத்துப் பொடியளுக்கும் தோட்டஞ் செய்யவோகுனிஞ்சு நிமிர்ந்துமண்வெட்டவோ தைரியம் இராதுஏதோ நல்லா வா மேனைநாலு காசு சம்பாதிக்கவேணும்என்று வாழ்த்தி அனுப்பினது அவனுக்கு ஞாபகம் வந்தது.

அவுஸ்திரேலியாவில் இருந்து "Australia Dreaming!” என்ற சிறுவர்களின் கலாசார நிகழ்வு.-( தமிழாக்கம் - வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி)

.

அவுஸ்திரேலியாவிற் காணப்படும் ‘அபோறியினருடைய பலவகைப்பட நம்பிக்கையின் அடிப்படையிலுள்ள ஆன்மீக ஒற்றுமைப்பாடு, ஏறக்குறைய 40,000 வருடங்களுக்கும் மேலாகக் கதைகள், பாடல்கள்;, நடனம் மற்றும் ஓவியம் மூலம் எடுத்து வரப்பெற்றதொன்றாகும். பரம்பொருளின் தெய்வீக உள்ளியல்பாகிய உயிரின் ஒளியும் அன்பின் மூச்சும் நாம் காணும் எல்லாப்பொருள்களிலும் உயிர்த் துடிப்புடன் காணப்படுகிறது. உண்மைமெய்ப்பொருளையும் ஞானநுண்ணறிவையும் உணர்ந்தறிவதற்காக போதனாபீடமாகிய éமி மாதாவிடமே நாம் திரும்பத் திரும்ப வந்தடைகிறோம்.

அடங்காத கொலை வெறி.. (எச்சரிக்கைப் பதிவு)


.


கொலைவெறி பி(ப)டிச்ச நடிகரையோ
ஆங்கில மொழியையோ குறைவாக மதிப்பிடுவதற்காக அல்ல இந்தப் பதிவு!
நடிகரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டவும்
ஆங்கிலேயர்களை எச்சரிக்கவுமே இந்தப் பதிவு...

இந்தப் பாடல் ப(க)டித்தமைக்காக  இந்த நடிகரை சிலர் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்..
சிலர் காலுக்குக் கீழே போட்டு மிதிக்காத குறையாகக் கோபப்படுகிறார்கள்...

தமிழ்மொழிமீது இன்றுவரை நடந்த பண்பாட்டுப் படையெடுப்புளையும், மொழிக்கலப்பையும் ஆழ்ந்து நோக்கும்போது தமிழ் என்றோ அழிந்திருக்கவேண்டுமே..

இன்னும் எப்படி உயிரோடு, உணர்வோடு உள்ளது என்ற எண்ணமே ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

தமிழை யாரும் அழிக்கமுடியாது. தமிழ் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் மொழி.
இதற்குச் சான்றுகள்..
இன்றைய தமிழ் வலையுலகம், தமிழ் இணைய உலகம், தமிழ் மின்னூல் உலகம், சமூகத் தளங்களில் தமிழ்...

ஒலி ஒளி 2012


இலங்கைச் செய்திகள்

.
மட்டக்களப்பில் விவேகானந்தரின் சிலை உடைப்பு

சிலை உடைப்பு விஷமத்தனம்


கூட்டமைப்பு எங்கு சென்றாலும் இறுதியில் எம்மிடம் வர வேண்டும்: பதில் வெளிவிவகார அமைச்சர்


ஆணைக்குழுவின் அறிக்கையும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்

மட்டக்களப்பில் விவேகானந்தரின் சிலை உடைப்பு


10/1/2012

மட்டக்களப்பு மண்முனைப்பற்று(ஆரையம்பதி) பிரதேச செயலகப்பிரிவில்காத்தான்குடி - ஆரையம்பதி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி வீரகேசரி

புலமையிலும் எளிமையிலும் பாரதி ஒரு மகா கவியே! ஆனால் மானுட விடுதலை நோக்கில்…………….?


.                                                                                                                            

இராமியா.

சாதியப் பிரச்சினைகள் பற்றி ஹா¢ஜன்பத்திரிக்கையில் காந்தியார் எழுதிய கருத்துகளுக்கு அண்ணல் அம்பேத்கர் பதிலளிக்கும் போது ‘இவ்வாறுநான் அவருக்குப் பதில் அளித்து உள்ளதால்இ அவர் கூறியுள்ளவை முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள்அவரை ஒரு தீர்க்கதா¢சியாக மதிப்பதோடுஇ அவர் வாய் திறந்தால் பிறர் தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும்இதெருவில் போகும் நாயும் குரைக்கக் கூடாதுஇ என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச்செய்துள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்.
அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும்இ பாரதியார் மானுட விடுதலைக்கருத்தியலுக்கு முற்ற முழுக்க எதிரானவர் என்று பெரும்பான்மை மக்கள் உணராத நிலையிலும்இ அவருடைய மானுடவிடுதலை எதிர்ப்புச் சிந்தனையை மறைத்து அவரை உத்தம புத்திராகச் சித்தா¢ப்பதில் பார்ப்பனர்கள் மட்டுமல்லாதுஒடுக்கப்பட்ட மக்களும் பெருமளவு இணைந்து இருப்பது வருத்தத்திற்கு உரியது.
பாரதியார் தமிழ் மொழியில் புலமை மிக்கவர்.வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் இன்னும் பல வடிவங்களில் செய்யுட்களை இயற்றுவதில் வல்லவர். அதைவிடமுக்கியமான விஷயம் பண்டிதர்களிடையே சிறைபட்டுக் கிடந்த தமிழ் மொழியை அவர்களிடம் இருந்து விடுவித்து எளிய பாமர மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியை நேர்த்தியாகச் செய்தார். இதை நிச்சயமாகப்பாராட்டித் தான் ஆக வேண்டும்.

உலகச் செய்திகள்

.
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி

இந்தோனேஷியாவில் பூமியதிர்ச்சி

மஞ்செஸ்டரில் இன்னுமொரு இந்திய மாணவன் சடலமாக மீட்பு

ஈரான் கார் குண்டுவெடிப்பில் அணு விஞ்ஞானி பலி

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி

10/1/2012

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பழங்குடியினர் பகுதியில் உள்ள சந்தையொன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 29 பேர் பலியானார்கள். இதில் மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிரக்கில் குண்டு வெடித்தது.

இதனால் டிரக்கில் அமர்ந்திருந்த அனைவரும் பலியானார்கள். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி

புத்தாண்டு வாழ்த்துக்கள்...


.



’’எனக்கு நீ வேண்டும்...
நீதான் வேண்டும்..
என்னுடைய இருதயம் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும் 
கடைசிவரையில்....
என்னுடைய மற்ற ஆசைகள் எல்லாம்
காலையிலும் மாலையிலும் அலைக்கழிப்பவை
வெறுமையானவை
வெளிச்சத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் இரவைப் போல்
என்னுடைய அந்தராத்மாவிலிருந்து 
ஒரே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
எனக்கு நீ வேண்டும்...
எனக்கு நீதான் வேண்டும்’’
-தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து...

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 4) வித்யாசாகர்!

.
மருந்துக் கடையின் வரிசையில் ஆட்கள் குறைய கையை அன்னாந்து நீட்டி மருந்துக் கடைக்காரரை அழைத்தார் ஜானகிராமன்.

‘இங்ஙனம் நெடுநாளாய் அவளுக்கு நெஞ்சுவலி வந்துப் போகிறதென்றும், உடம்பெல்லாம் சோர்ந்துப் போகிறதென்றும், கைகால் உடம்பிலெல்லாம் அங்காங்கே அடிக்கடி கட்டிப்போல வருகிறதென்றும், கண்பார்வை கூட மங்கிப் போகிறதாமென்றும் சொல்லி மருந்து கேட்க –

“கிழங்கு சோளம் எண்ணெய் பொருட்கள் கொடுக்க வேண்டாம், உப்பு இனிப்பு புளிப்பு கொடுக்கவேண்டாம். வயதானவர் என்பதால் ரத்த அழுத்தமோ நீரிழிவு நோயோ இருக்கலாம், அதனால் இதயத்தில் கொழுப்படைக்கும் வாய்ப்புமுண்டு. அதனால்தான் நெஞ்சிவலிகூட வந்திருக்கவேண்டும். சிலநேரம் இதுபோன்ற கட்டம் உயிருக்கே ஆபத்தான ஒரு நிலையையும் ஏற்படுத்தி விடலாம். முழுதாக மருந்து வாங்குமளவு உங்களிடம் பணமுமில்லை’ எனவே தற்காலிகமாக ஓரிரு வேலைக்கு மட்டும் போதிய மாத்திரைகளை தருகிறேன் முடிந்தவரை சீக்கிரம் மருத்துவரிடம் கொண்டுபோய் காட்டி பரிசோதித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி அவர் மருந்தும் மீத பணமும் கொடுத்துவிட்டு, அரிசி உணவு, கிழங்குவகை, எண்ணெயில் தாளித்த பொறித்த பலகாரங்களெல்லாம் தரவேண்டாமென்று சொல்ல, துக்கம் ஜானகிராமனுக்கு தொண்டைவரை அடைத்தது.

தமிழ் சினிமா


மம்பட்டியான்

மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற ஒரு தனிமனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் மலையூர் மம்பட்டியான்.

மலையூர் கிராமத்தில் நேர்மையான விவசாய கூலி விஜயகுமார். ஊர்ப் பண்ணையார் கோட்டா சீனிவாசராவ் நிலத்தில் கிடைக்கும் புதையலை அரசாங்கத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என அவர் பிடிவாதம் காட்ட, கோட்டாவின் ஆட்கள் அவரையும் மனைவியையும் கொன்றுவிடுகிறார்கள். இதில் பொங்கியெழும் மகன் மம்பட்டியான் பிரஷாந்த், ஊர்த் திருவிழாவில் கோட்டாவையும் அவரது ஆட்கள் ஏழு பேரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவாகி விடுகிறார்.

பண்ணையாரால் வஞ்சிக்கப்பட்ட சிலரும் அவருடன் சேர்ந்து கொள்ள, காட்டுக்குள் தங்கியபடி, அந்த வழியாக வரும் பெரும்பணக்காரர்களைக் கொள்ளையடித்து, ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். போலீஸ் துரத்துகிறது. ஆனால் மம்பட்டியான் நிழலைக்கூட தொட முடியாமல் தோற்றுக் கொண்டே இருக்கிறது. அப்போது புதிதாக மம்பட்டியானைப் பிடிக்க வருகிறார் போலீசார் அதிகாரி பிரகாஷ் ராஜ்.

இடையில், பணக்கார கோஷ்டியொன்று காட்டுவழி வருவதாக கேள்விப்பட்டு, அவர்களைக் கொள்ளையடிக்க மம்பட்டியான் குழு முயல்கிறது. ஆனால் வந்தது கல்யாண கோஷ்டி என்பதும், அவர்கள் மணப்பெண்ணை (மீரா ஜாஸ்மின்) மட்டும் அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டதையும் அறிந்து, அந்தப் பெண்ணிடமே அனைத்து நகைகளையும் கொடுத்து தன் தம்பியை துணைக்கு அனுப்பி வைக்கிறார் மம்பட்டியான். ஆனால் அடுத்த நாள் திருமணம் நடக்காததால் மம்பட்டியானை நினைத்தபடி மலையூரிலேயே தங்கிவிடுகிறாள் அந்தப் பெண். ஊருக்கு அளக்கும் படியில் ஒரு படி அவளுக்கும் தரச் சொல்கிறார் மம்பட்டியான்.

போலீஸ் துரத்தல் தொடர்கிறது. மம்பட்டியானின் ஓட்டமும் தொடர்கிறது. ஆனால் கடைசி வரை போலீசின் கையில் சிக்காத மம்பட்டியான், இறுதியில் என்னவாகிறார்... அவரை நம்பி வந்த பெண்ணின் கதி என்ன என்பது மீதிக்கதை.

ஏற்கெனவே பார்த்த கதைதான் என்றாலும், பிரஷாந்த் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் மூலம் சற்று விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார் இயக்குநர். அதேபோல் காட்சிகளில் பிரம்மாண்டம், நேர்த்தியான படமாக்கம் என நிறைய மெனக்கெட்டிருக்கிறார் தியாகராஜன்.

குறிப்பாக படத்துக்காக தேர்வு செய்த லொகேஷன்கள் அற்புதம். சீறிவிழும் அருவிகள், பச்சைப் பசேல் மலைத் தொடர்கள், காலைத் தழுவி ஓடும் ஓடைகள், இயல்பு மாறாத மலைக் கிராமங்கள் என மனதை ஈர்க்கிறது.

தற்போதைய மம்பட்டியானாக பிரஷாந்த், அப்பா நடித்த கதாபாத்திரத்தில் கொஞ்சமும் ஒட்டவில்லை. மிகவும் குண்டாக காணப்படுகிறார். முகத்தை மிகவும் கோவக்காரராக காட்டும் முயற்சியில் மிகவும் சிரமப்பட்டு அதுவராமல் பார்ப்பதற்கு என்னவோபோல் இருக்கிறது. படம் முழுக்க நடிக்கவேண்டும் என்பதற்காக அப்பா சொன்ன வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார். வசனம் கதைக்கு அதிகம் தேவையில்லை என்பதால் தப்பிக்கமுடிகிறது. சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் வேகம் கொடுத்திருக்கிறார். யாதார்த்த காட்சிகள் அவருக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை.

கண்ணாத்தாளாக மீரா ஜாஸ்மின், பழைய மம்பட்டியான் நாயகி சரிதா இடத்தை எட்டிப்பிடிக்க முயன்றிருக்கிறார் அவ்வளவே! ஆனாலும் 'சின்னப் பொண்ணு சேலை...' பாடலில் சரிதாவையும் விஞ்சி சபாஷ் வாங்கிவிடுகிறார்.

மம்பட்டியானை பிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், கொடுக்கப்பட்ட வேலையை வஞ்சகம் இல்லாமல் செய்திருக்கிறார். (அந்த செல்லம் என்ற வார்த்தையை சொல்லாமல் இவரால் இருக்கவே முடியாது போல)

சிலுக்கு வேடத்தில் முமைத் கான் நடித்திருக்கிறார். சிலுக்கின் லுக்கு இவருடைய கண்களில் மிஸ்ஸிங் என்றாலும், மற்றபடி ரொம்பவே செழிப்பாகவே இருக்கிறது இவருடைய காட்சிகள்.

ஒரிஜினல் படத்தில் கவுண்டமணி செய்த அதே சின்ன பண்ணையார் வேடம். காட்சிகளில்கூட பெரிதாக மாற்றமில்லை. ஆனாலும் வடிவேலு வரும்போதை முகம் மலர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ரசிகர்கள் (காட்சிகளில் பெரிதாக காமெடி இல்லாவிட்டாலும்!). குறிப்பாக கோபு பாபு என இரு நாய்களை அவர் மம்பட்டியானிடம் இழக்கும் இடத்திலும், பிரகாஷ் ராஜிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் காட்சியிலும் சிரிப்புக்கு உத்தரவாதம்!

இடைவேளைக்கு பிறகு படம் ஓடோ ஓடு என்று ஓடுகிறது. தற்போது முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால் மலை காடு என்று போலீஸை அங்கிட்டு இங்கிட்டும் ஓடவிட்டு பார்ப்பவர்களை கடுப்பேற்றுகிறார் இயக்குநர்.

'காட்டுவழி போறப்பெண்ணே கவலைப்படாதே' பாடல் டைட்டில் போடும்போதே போட்டு விடுகிறார்கள். மற்ற பாட்டு ஏதும் மனசில் நிற்கவில்லை. இசைக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதால் தமன் என்பவரை பயன்படுத்தி காசை மிச்சம் பிடித்திருக்கிறார்கள்.

ஒரு தனிமனிதனின் உண்மைக்கதை என்பதால் ஏதும் மாற்றம் செய்யமுடியாமல் அப்படியே எடுக்கப்பட்டுவிட்டது. ஆகையால் வேறு எந்த சுவாரஸ்யமும் சேர்க்க முடியாமல் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது. என்ன.. கதை, வசனம், திரைக்கதை, கலை, இயக்கம் என அனைத்து வேலையும் தானே உருவாக்கி தான் இப்போதும் அனைத்து வேலையையும் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தியாகராஜன்.
நன்றி விடுப்பு







மௌன குரு

ஒரு கல்லூரி மாணவன் சந்திக்கும் வினோதமான மற்றும் அசாதாரணமான பிரச்சினைகளே கதை.

நான்கு காவல்துறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து செய்யும் குற்றத்தில் இருந்து, அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள செய்யும் சில்மிஷ வேலைகளில் எப்படியோ வந்து சிக்கிகொள்ளும் இளைஞன், அந்த பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கரு. இந்த கருவை வைத்துகொண்டு திகட்டாத ஒரு த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்கள் 'மௌனகுரு' டீம்.

வழக்கமான தமிழ் சினிமாவில் இருக்கும் குத்துப்பாட்டு, பத்து அடிக்கு மேல் பறந்து அடிக்கும் ஹீரோயிஸம் என்றெல்லாம் இல்லாமல், விறுவிறுப்பான ஒரு ஆக்ஷன் த்ரில்லரை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் சாந்தகுமார். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை நம் மனதை எங்கும் அலைபாய விடாமல் படத்துடனே பயணிக்கவைக்கிறது திரைக்கதை.

தனது முதல் படத்தை காட்டிலும் இப்படத்தில் பல மடங்கு உயர்ந்திருக்கிறார் அருள்நிதி. ரியாக்ஷன், நடிப்பு, பாடிலேங்குவேஜ் என அத்தனையிலும் தனது கெட்டிகாரத்தனத்தை காட்டி அசத்தியிருக்கிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறே படம் முழுவதும் மௌனமாக வரும் அருள்நிதி, இரண்டு ரூபாய்க்காக டெலிபோன் பூத்தில் சண்டைபோடுவதும், எதுவும் விசாரிக்காமல் தன்னை அடித்த போலீஸை அடித்துவிட்டு அவருடைய குழந்தையை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுவந்து விடுவதும் என ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

நம் படங்களுக்கு ஹீரோயினும், பாடல்களும் தேவையா என்பது பெரிய கேள்வி. கதையோடு எந்த சம்பந்தமுமில்லாமல் சதைக்காக ஹீரோயின். பல லட்சங்கள் ஹீரோயினுக்கு கொட்டியழுது விட்டோமே என்கிற பரிதவிப்பில் மூன்று டூயட், ஒரு குத்துப் பாட்டு. அதில் இரண்டு பாடல்கள் சுவிஸ்ஸிலோ, ஆஸ்திரேலியாவிலோ படமாக்கம் என்று அனாவசியமான பொருட்செலவு. இந்தப் படத்தில் ஹீரோயின், ஹீரோயினாகவே இருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். அதுபோலவே வில்லனும், வில்லனாக இருக்கிறார்.

ஜான் விஜய் ஒரு குட்டி எம்.ஆர்.ராதா. துரதிருஷ்டவசமாக இவர் இன்னமும் சரியாக பயன்படுத்திக் கொள்ளப்படாத நல்ல நடிகர். தேவையில்லாத சதை எதுவுமே திரையில் இல்லை. லென்ஸ் வைத்துத் தேடினாலும் தர்க்க மீறல் எதுவும் கண்ணில் படவேயில்லை. குறிப்பாக இடைவேளை காட்சி, ஓர் இலக்கியம்.

ஜான் விஜய் கூடவே வருகிற அந்த மூன்று காவல்துறையினர், க்ளைமேக்ஸ் காட்சியில் அருள்நிதியுடனே வரும் அந்த மனநோயளி கேரக்டர் எல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதுவும் கடைசியில் அவர் சொல்லும், 'தள்ளுவண்டியில பரோட்டா விக்கிறவன்கிட்ட எவ்வளவு வாங்குவாங்கன்னு கேளு.. சொல்லுவான்..' என்று சொல்லும் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.

இனியாவுக்கு அக்காவாக நடித்திருக்கும் நடிகை எப்ப பார்த்தாலும் மதுரையை எரிக்கிற மாதிரியே பார்க்கிறாங்க. டிவி தொடரில் வில்லி கேரக்டருக்கு ரொம்பவே கரெக்டாக இருப்பாங்க.

பாதராக வருகிற அந்த கேரக்டர் தன் மகனே ஒரு திருடன் என்று தெரியும் போது வருத்தப்படுகிற காட்சிகள் நம்மை ரொம்பவே டச் பண்ணுகின்றன. க்ரைம் இன்ஸ்பெக்டர் பழனியம்மாளாக வரும் உமா ரியாஸ்கான் கர்ப்பமான இன்ஸ்பெக்டராக இருந்தாலும் கடமை தவறாத இன்ஸ்பெக்டராக மின்னுகிறார்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் மூன்று பாடல்கள். பாடல்கள் சொல்லிகொள்ளும் அளவுக்கு இல்லையென்றாலும் தமனின் பின்னணி இசை அசத்தல். படம் முழுவதும் தனது பின்னணி இசையில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்.

நன்றி விடுப்பு