கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

  [   நவராத்திரி சிறப்பம்சம்  ] 


























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 
   

ஈரமொடு வீரம் எனக்கருள வேண்டும் 
இரக்கமொடு கருணை எனக்கீய வேண்டும்
காதலொடு நாளும் கவிபாடி உந்தன்
காலடியில் நிற்க கருணைபுரி தாயே 

மனமமரும் இருளைப் போக்கிடுவாய் தாயே
மாயவலை சிக்கா காத்திடுவாய் தாயே
சினமான தீயை ஒழித்திடுவாய் தாயே
தினமுமுனைப் பாடிப் பரவுகிறேன் தாயே 

நோயணுகா வண்ணம் காத்திடுவாய் தாயே
தாயாகி நிற்கும் தயைவுடைய துர்க்கா
பேயாகி பித்தாகி மனமலையா வண்ணம்
பேரொளியே துர்க்கையே காத்திடுவாய் தாயே

நவராத்திரி







நாட்டிய கலாநிதி          கார்த்திகா கணேசர்   



விழாக்காலங்கள் மனித மனத்திற்கு இன்பம் ஊட்டும் நாட்களாக கழியும்.  உழைத்து களைத்த மனதிற்கு உற்சாகம் ஊட்டுவது விழாக்கள். அதனால் தான் போலும் இயற்கையுடன் வளர்ந்த இந்து மதத்தில் விழாக்களுக்கு குறைவே இல்லை.  இந்தியா  பூராவும் விமரிசையாக கொண்டாடப்படுவது நவராத்திரி விழா. ஆனால் எந்த ஒரு விழாவின் பின்னணியிலும் மனித மனதை பண்பட  வைக்கும் தத்துவம் இல்லாது போகாது.

 நவராத்திரி இது மனிதன் வாழ்வாங்கு வாழ தேவையான அறிவு ,செல்வம், ,வீரத்தை போற்றி அதற்கான தெய்வங்களை வணங்குவது. செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. லட்சுமி படங்களிலே தேவியின் கைகளில் இருந்து தங்க காசு கொட்டுவதாக வரையப்பட்டிருக்கும் உலக அரங்கில் நாணயத்தின் மதிப்பு தங்கத்திற்கு இணையாக மதிக்கப்படுகிறது. இந்த தங்கத்தின் மூலம் எதையும் வாங்க முடியும் ஆனால் தங்கத்தை அதிகமாக வைத்திருப்பதால் ஒரு நாடு செல்வந்த நாடாக முடியுமா? நாட்டின் செல்வம் என்பது மக்களின் வாழ்க்கை தரம், அதை நிர்ணயிப்பது நாட்டின் உற்பத்தி, உற்பத்தியை சந்தைப் படுத்துவதால் பெறப்படும் செல்வம்.

 விவசாயம் மனித வாழ்வின் உயிர்நாடி. நீர் இல்லாது வரட்சி நீண்டால் விவசாயம் பாதிக்கப்படும். மழை நீரை தேக்கி வைப்பது தகுந்த முறையில் நீர்ப்பாசனம் இவை நாட்டின் செல்வம் அல்லவா. பாய்ந்தோடும்  ஆறு நாட்டிடை வளம்படுத்தும். இயற்கை அளித்த செல்வம் அல்வா இது. தமிழ்நாடு காவேரி மூலம் பாசனம் பெற்று நெல் விளையும் பூமியாக செல்வச் செழிப்புடன் காணப்பட்ட பிரதேசமாக விளங்கியது. கர்நாடக காரன்  அணையை கட்டி காவேரியை தடுத்தான்.  நாளாந்தம் அணையை திறந்து தமிழ் நாட்டிற்கு நீரை  தா என கெஞ்ச வேண்டிய நிலை.  இவற்றை அறியும் போது நாட்டின் செல்வம், இயற்கை வளம்,  என்பதை உணர முடியும்.  நீர்வளம்,நிலவளம், மற்றும் ஆலைகளே  நாட்டின் செல்வம்.  இது மக்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பவை.  இதை உணர்ந்து தானோ என்னவோ எம் வர்கள் அஷ்ட லட்சுமிகளிலே  அன்னலட்சுமிக்கு முதல் இடம் கொடுத்துள்ளார்கள். அன்னம் உணவு.  உணவு கிடைக்காத எவரும் ஏழைதான்

சண்டிஹோமம்


சண்டிஹோமம் ஓர் பூர விளக்கம் சண்டி ஒரு கடுமையான மற்றும்
சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும். செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். 

\சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. கடவுள்களின் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி சாண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது அனுபவம் வாய்ந்த 9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம். இதை சரியான முறையில் பூஜைகள் நடத்தபடா விட்டாள் பயனுள்ளவையாக இருக்காது. 9 புரோகிதர்களை கொண்டு செய்ய படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும். இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும். 

நவராத்திரி பூஜை

நவராத்திரி பூஜை 03.10.2024 ஆரம்பமாகி 11.10.2024 நிறைவு பெறும். 12.10.2024 பத்தாவது நாள் விஜயதசமி, சுபமங்களமான நிகழ்வுகள் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இடம்பெறும், ஆயுத பூஜை இடம்பெறும். 



இந்த ஒன்பது நாட்களும் அன்னையை வழிபடும் முறைகளாவன நவராத்திரி பூஜை முறை..!!! 

ஒன்பது நாள்களும் போட வேண்டிய கோலங்கள்: 

• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம் 
• மூன்றாம் நாள் –முத்து மலர் 
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு 
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம் 
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம் 
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்) 
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்) 
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம் (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு) 

கவிதை " கண்களே "-மெல்போர்ன் அறவேந்தன்

 


பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாதீபம் திலீபனின் 37வது நினைவு வணக்கம்

பிராஸின் தலைநகர் பாரிஸ் 10ம் வட்டாரத்தில் தமிழர் வர்த்தக மையத்தில் “ குட்டி யாழ்ப்பாணம்” எனஅழைக்கப்படு லா சப்பல் La Chapelle பகுதில்  இன்று (26.09.2024) 10:48 மணிக்கு தியாக தீபம்  திலீபனின் வணக்க நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது  

பிரான்ஸ் தமிழர் வர்தக சங்கத்தினர் , தமிழ் வர்தகர்கள் பொதுமக்கள் அனைவரும் குறித்த நிறைவேந்தல் நிகர்வில் பங்கேற்னர்  

தாயகத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டு சிங்கள அரசால்  அழிக்கப்பட்ட  நினைவுத்துபியின் மாதிரி வடிவத்தில் இம்முறை  இந் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்திலீபன் அவர்களின் 12 நாட்கள் உண்ணாவிரதம் குறித்த விளக்கமளிக்கப்படும் பதாகையும் பிரஞ்சு மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததபிரஞ்சு மக்களைனதும், பாரிஸின் சுற்றாலாவாசிகளினது கவனத்தையும் ஈர்ப்பதற்காக காட்சிப்படுத்தப்படிருந்தது  குறித்த நிகழ்வினை பிரான்சை தளமாக இயங்கும் சே நூ தமிழ் Ç’est Nous les Tamouls அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது . 

செய்தி நிர்வாகம் சே நூ தமிழ்

கல்வியும் கருணையும்:

 


 - சங்கர சுப்பிரமனியன்                     





என் வீட்டு மேஜை மீது பலரின் வாழ்வில் விளக்கேற்றிய அந்த உத்தமரின் புகைப்படம் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. இவர் யார்? என்று ஒன்றிரண்டு தடவை என் மகன் சிவா என்னிடம் கேட்டிருக்கிறான். அவ்வளவு எளிதில் சில வார்த்தைகளில் அந்த புண்ணியவானைப் பற்றி சொல்லிவிட முடியுமா? அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அவரது பின்னணி அவரால் தன்னைப்  போன்றவர்கள் அடைந்ந பலன் என்று எல்லாவற்றையும் சொன்னால்தான் அவரைப்பற்றி நன்றாக புரிந்து கொள்ளமுடியும். எனவே எனக்கு நேரம் கிடைக்காததால் இன்னொரு நாள் சொல்வதாக அவனிடம் சொல்லி இருந்தேன்.

 

"அப்பா, போலாமா? நான் தயார்" பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக சிவா கூப்பிட்டான்.


சிவா பிராட் மீடோஸ் ஆரம்பப் பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கிறான். தினமும் காலையில் அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு வருவது என் வேலை.

 

"சரி, போலாம் வா" என்று சொல்லி ட்ரைவ் வேயில் நின்ற கார் பக்கம் சென்றேன்.

 

கார் ரயில்வே கிரசண்ட் ரோட்டில் அனிச்ச செயலாய் ஓடிக்கொண்டிருக்க என் மனமோ முப்பது ஆண்டு பின்னே சென்று ரயில்வே கிரசண்டை ஒற்றையடிப் பாதையாக கண் முன்னே விரியச் செய்தது. அந்த ஒற்றையடிப் பாதையில் தயங்கித் தயங்கி விழித்தபடி நின்றிருந்தேன். என்னைத் தன்னந்தனியாக தாத்தா

வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என் பெற்றோர்கள்.  

சிவகாமியின் செல்வன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தொண்ணூற்றாராவது பிறந்த


தினம் அக்டோபர் முதலாம் திகதியாகும். தனது அரசியல் தலைவராக அவர் மதித்த காமராஜ் அவர்களுக்கு் கௌரவம் செய்யும் விதத்தில் தான் நடித்த ஒரு படத்துக்கு சிவகாமியின் செல்வன் என்று பெயரிட்டார் சிவாஜி. காமராஜின் அன்னையின் பெயர் சிவகாமி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பெயரிடப் பட்ட படம் 1974ம் ஆண்டு திரைக்கு வந்தது.


ஹிந்தியில் தயாராகி வெற்றி பெரும் பல படங்கள் உடனுக்குடன் தமிழில் உருவாகி திரைக்கு வருவது ஐம்பத்து ஆண்டுகளுக்கு முன் வழமையாகும். இவ்வாறு தயாராகும் படங்கள் பெரும்பாலும் எம் ஜி ஆர் அல்லது சிவாஜியின் நடிப்பில் வெளியாகி , அவற்றுள் சில வெற்றி பெறுவதும், சில தோல்வியடைவதும் சகஜமாகும். இவ்வாறு வெளிவந்து எதிர்பார்த்த வெற்றியை பெறாத படம்தான் சிவகாமியின் செல்வன்.

பிரபல பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான கே. கனகசபை

தனது ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் எம் ஜி ஆரின் நடிப்பில் மாட்டுக்கார வேலன், ராமன் தேடிய சீதை என்ற இரண்டு படங்களைத் தயாரித்து விட்டு தனது அடுத்த படத்துக்கு சிவாஜியை அணுகினார். சிவாஜியும் ஓகே சொல்லி விட படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகின. ஹிந்தியில் புகழ் பெற்ற தயாரிப்பாளரும், டைரக்டருமான சக்தி சமந்தா உருவாக்கிய ஆராதனா என்ற படத்தை தமிழில் சிவாஜி நடிப்பில் தயாரிப்பதென முடிவாகியது. சென்னையில் ஓராண்டுக்கு மேலும், ஏனைய நகரங்களில் பல வாரங்கள் ஓடி ரசிகர்களை கவர்ந்த இந்த ஆராதனா மீண்டும் தமிழில் ரசிகர்களின் ஆராதனையை எதிர்பார்த்து திரைக்கு வந்தது. தமிழ் நாட்டில் வெற்றி பெற்ற ஹிந்திப் படங்களை தமிழில் மீண்டும் எடுத்தால் அது வெற்றி பெறாது என்பது ஐதீகம். இது தெரிந்தும் சிவாஜியும், கனகசபையும் விஷப் பரீட்சையில் ஏனோ இறங்கினார்கள்.

இளம் ஜோடிகளான ராஜேஷ் கன்னாவும், ஷர்மிளா தாகூரும் நடித்த பாத்திரங்களை தமிழில் சிவாஜியும், வாணீஸ்ரீயும் ஏற்று நடித்தார்கள். வசந்த மாளிகையின் வெற்றியைத் தொடர்ந்து இவர்கள் இதில் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். ராஜேஷ் கன்னாவிடம் காணப்பட்ட அந்த இளமையை சிவாஜியிடம் காண முடியவில்லை என்றாலும், சிவாஜியின் நடிப்பு, அந்த ஸ்டைல், அந்த உணர்ச்சிபூர்வமான முகபாவனை இவற்றையெல்லாம் ராஜேஷ் கன்னாவிடமும் காண முடியவில்லை தானே! வாணிஸ்ரீயின் நடிப்பு, உருவம் இரண்டிலும் ஒரு முதிர்ச்சி தென்பட்டது. அது அவர் ஏற்ற பாத்திரத்துக்கு துணை நின்றது. ஆரம்பத்தில் காதலனிடம் அவர் காட்டும் நாணம், குழைவு , தனிமையில் சிக்கும் போது காட்டும் படபடப்பு, பின்னர் காட்டும் உருக்கம், தாயின் தவிப்பு என்று கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்தி இருந்தார் அவர்.

வடக்கு, கிழக்கில் ஜே. வி. பி. ஜே. வி. பி.

 September 28, 2024


தொடர்பில் வடக்கு, கிழக்கில் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதான தோற்றம் தெரிகின்றதா? இதுவரையில் தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறீ லங்கா சுதந்திர கட்சி தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவும் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கின்றன. அண்மைக்காலத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுன ஆகியவை தங்களுக்கான ஆதரவுத்தளத்தை பெருக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

தமிழ் மக்கள் மத்தியில் தென்னிலங்கை கட்சிகள் ஆதரவை பெறுவதற்கு இரண்டு வழிமுறைகளை மேற்கொள்வதுண்டு. ஒன்று நேரடியாக உள்நுழைவது. இரண்டாவது தங்களுடன் கூட்டு வைத்திருக்கும் கட்சிகளுக்குள்ளால் நுழைவது கட்சிகளுக்குள்ளால் நுழைவதுதான் அதிகம். அரசாங்கங்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் கட்சிகளுக்குள்ளால்தான் அதிகம் இவ்வாறான உள்நுழைவு இடம்பெறுவதுண்டு . இந்த வரிசையில் தற்போது ஜே. வி. பியும் இடம்பிடித்திருக்கின்றது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஜே. வி. பியின் ஸ்தாபகர் ரோகண விஜயவீர பேசிக் கொண்டிருக்கும்போது கல்லால் அடிக்கப்பட்டார். காயத்திலிருந்து வடிந்து கொண்டிருந்த இரத்தத்தையும் துடைக்காமல் விஜய வீர பேசிக்கொண்டிருந்தார்.

இன்று நிலைமைகள் வேறு. இன்றைய ஜே. வி. பி. அதிகார அரசியலின் அங்கமாகியிருக்கின்றது. அதிகார அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனை பேணிப்பாதுகாப்பதற்கு பணியாற்ற வேண்டிய நிரப்பந்தம் ஏற்பட்டுவிடும். இந்தப் பின்புலத்தில் ஜே. வி. பியும் தங்களுக்கான தமிழ் ஆதரவுத்தளத்தை பெருக்கிக்கொள்ள முயற்சிக்கும். ஏனைய தென்னிலங்கை கட்சிகளைப்போல், ஜே. வி. பியும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் உத்திகளை கையாளும். குறிப்பாக இளைய தலைமுறையினரே ஜே. வி. பியின் பிரதான இலக்காகும். எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்கும் தமிழ் மக்கள் இருக்கின்றனர். தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் ஒரு விடயமாக எடுப்பதில்லை.

அநுரவை நம்புதல்?

 September 27, 2024


உலகத் தமிழர் பேரவை அநுரவின் மீது நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது. முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை வெளியிட்டிருந்தது. தற்போது அநுரவின் மீது நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது. நம்பிக்கை வெளியிடுவது பிரச்னைக்குரியதல்ல ஆனால் நம்புவதற்கான அடிப்படை என்ன என்பதுதான் முக்கியமானது. அடுத்தது நம்பிக்கொண்டிருப்பது மட்டும்தான் விடயமா என்பதையும் நோக்க வேண்டும். அனுரகுமார திசாநாயக்க வித்தியாசமான நிலைப்பாடுகளை முன்வைக்கின்றார்.

அவரிடம் இனவாதம் வெளிப்படவில்லை ஆனால் அவரால் அதிகம் செய்ய முடியுமா – அப்படியே செய்ய முடியுமென்றாலும் எதைச் செய்ய முடியுமென்பதுதான் கேள்வி. அனுரகுமார திசநாயக்க சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றிருக்கின்றார். கோட்டாபய முன்னர் ஜம்பது விகிதத்தை தாண்டிப் பெற்ற வாக்குகளின் மூலம் தமிழ் வாக்குகள் தேவையற்றவை என்பதை நிரூபித்திருக்கின்றனர். தற்போது அதனையே அனுரகுமார திசாநாயக்க வேறுவிதமாக நிரூபித்திருக்கின்றனர். தமிழ் வாக்குகள் இல்லாமலேயே அநுர அவரது வெற்றியை நிரூபித்திருக்கின்றார். ஆனால் ஜம்பது விகிதத்தை தாண்டிய ஜனாதிபதியாக அவரால் வரமுடியவில்லை.

இந்தப் பின்புலத்தில் அவர் அரசியல்ரீதியில் விடயங்களை முன்னெடுக்கும் வல்லமையுள்ளவாராக இருப்பதற்கான வாய்ப்பில்லை. இவ்வாறானதொரு சூழலில் அநுரவை நம்புவது என்பது தேவையற்ற ஒன்று. ஆனால் அநுரவுடன் உரையாடுவதில் தவறில்லை. அதிகாரத்தில் இருக்கும் எவருடனும் உரையாடுதல் பிரச்னையில்லை. அநுரகுமாரவின் அரசியல் ஆரம்பம் சிக்கலானது. 1971 மற்றும் 1989 காலப்பகுதியில் அவரது அமைப்பின் நிலைப்பாடும் செயல்பாடுகளும் சிக்கலானது. தமிழர் விரோதப்போக்கும் அவரது அரசியலின் அங்கமாக இருந்தது.

இப்போதைய அனுர முன்னைய அனுர இல்லை – அவரது கட்சியும் முன்னைய நிலைப்பாட்டில் இல்லை. ஆனாலும் அவர்களது இரண்டாம் மூன்றாம் மட்ட பிரிவுகள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றன – அவைகள் எந்தளவுக்கு ஒத்துப்போகும் – உடன்பட மறுக்கும் என்பதெல்லாம் இப்போதைக்கு ஊகிக்க முடியாது. எனவே ஓர் ஆட்சியாளரை அளவுக்கதிமாக நம்பவும் வேண்டியதில்லை – அதற்காக விரோதிக்கவும் வேண்டியதில்லை. உலகத் தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் அமைப்புகளுக்கு அரசியல் யதார்த்தமும் புரியாது – அதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்வதில்லை. முன்னர் மைத்திரி – பின்னர் ரணில் – இப்போது அனுர. இப்படியாக நம்புவதில் ஒரு புத்திசாதுரியமும் இல்லை மாறாக – அரசியல் அறியாமைதான் உண்டு.   நன்றி ஈழநாடு 

இலங்கைச் செய்திகள்

வட மாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார் நாகலிங்கம் வேதநாயகன்

புதிய ஆளுநர்கள் 9 பேர் நியமனம்

வைத்தியர் அர்ச்சுனாவின் பிணை இரத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் குழப்பமான தகவல்கள்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி வீசா பெற்றுக்கொள்ள முடியும்

நாடாளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானி வெளியீடு!

ஓய்வூதியத்தை இழக்கும் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஜனாதிபதி அநுர குமாரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து


வட மாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார் நாகலிங்கம் வேதநாயகன்

- வேறொருவர் பதவியை தந்திருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்

September 27, 2024 10:17 am 

– புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல்
– எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும்

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

பெரும் உயிரிழப்புகளிடையே லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்

தெற்கு லெபனானில் இருந்து அச்சத்தால் மக்கள் ஓட்டம்

உக்கிர தாக்குதல்களில் லெபனானில் 492 பேர் பலி

அல் ஜசீரா அலுவலகத்திற்கு இஸ்ரேலியப் படையினர் பூட்டு

இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயற்படும்

அபுதாபியின் ரூவாய்ஸில் உற்பத்திப் பணிகளில் ஈடுபட 2 இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2024 இல் 66 பில்லியன் டொலர்

லெபனான் மீது வான் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாஹ் பலி


பெரும் உயிரிழப்புகளிடையே லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்

- ஹிஸ்புல்லாவின் பதில் தாக்குதல்களால் மோதல் உச்சம்

September 25, 2024 7:54 am 

கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நேற்றும் (24) கடுமையான மோதல் நீடித்தது.

நவராத்திரி அக்டோபர் 03 ஆம் தேதி தொடங்குகிறது. "மகா சண்டி யாகம் - 6 அக்டோபர் 2024 ஞாயிறு - காலை 8 மணி"

 


சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் அக்டோபர் 03 வியாழன் முதல் அக்டோபர் 12 சனிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெறும் சிறப்புமிக்க நவராத்திரி திருவிழாவிற்கு பக்தர்கள் துர்கா தேவியின்  அருளையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.

 அக்டோபர் 06, 2024 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகா சண்டி ஹோமம் நடத்தப்படும்.

மகா சண்டி யாகத்தில் கலந்து கொண்டு அன்னை துர்க்கையின் அருளைப் பெற ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானம் அன்புடன் அழைக்கிறது.

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு - 42

 " நீலாவணனின் பன்முக ஆளுமை" - 2

 


நாள்:
         சனிக்கிழமை 05-10-2024       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

ஒருங்கிணைப்பு: அகில்  சாம்பசிவம்

 

சிறப்புப் பேச்சாளர்கள்:

 

கலாநிதி எம்.எம்.ஜெயசீலன்

திறனாய்வாளர் எஸ்.கேசவன்

கலாநிதி சு.குணேஸ்வரன்

கள ஆய்வாளர் அ. சிவஞானசீலன்

ஆய்வாளர் சி.ரமேஷ்

 

மேலதிக விபரங்களுக்கு: -   001416-822-6316

மெல்பேணில் நூல் வெளியீடும் நகைச்சுவை நாடகமும் - 5/10/2024

 


கீதவாணி விருதுகள் 2024 - 06/10/2024