மரண அறிவித்தல்

 வெற்றிவேல் கணபதிப்பிள்ளை


ஒக்ரோபர் மாதம் 17 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை வெற்றிவேல் கணபதிப்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்துள்ளார் என்பதனைக் கவலையுடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலம் சென்ற வெற்றிவேல் சிவபாக்கியம, தம்பதியினரின் அன்பு மகனும், காலம் சென்ற சிதம்பரநடராஜா (சிட்னி) சத்தியபாமா (சிட்னி) ருக்மணி (கனடா) சாவித்திரி (சிறி லங்கா) காலம் சென்ற விசாலாட்சி (சிறி லங்கா) ஆகியோரின் அன்புச் சகோதரருமாவர். ஆன்னாரின் இறுதிக் கிரிகைகள் ஒக்ரோபர் மாதம் 21 ம் திகதி வியாழக் கிழமை மதியம் 12:30 மணி முதல் 3:30 மணிவரை லிட்கொமிலுள்ள றோக் வூட் மயான சுவுத் சப்பேலில் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுளது. நியூ சவுத் வேல்ஸ் அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளவாகள் மாத்திரம ; மரணச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிப்படுவர். கோவிட் தடுப்பூசிகள் இரண்டினையும் போட்டுக் கொண்டமைக்கான சான்றிதழ் காண்பிக்கப்படல் வேண்டும். 

மேலதிக தகவலுக்கு: ராமகிருஷ்ணனை 0408 233 479 லோ அல்லது அருள் வேந்தனை 0418 167 181 லோ தொடர்பு கொள்ளவும். தகவல்: கனேசராஜா சிறீதரன் - 0445 441 346அடைக்கலமே தந்து அருளிடுவாய் தாயே !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

அகமதில் தூய்மை அமர்த்திவிடு தாயே

முகமதில் மலர்ச்சி கொடுத்துவிடு தாயே
கறைநிலை மனத்தில் அகற்றிவிடு தாயே

களிப்புடனே வாழ அருளிவிடு தாயே 
 
சினமது தொடரா நிறுத்திடு தாயே
சிறப்பதை மனதில் இருத்திடு தாயே
தனமதில் தயையை நிறைத்திடு தாயே
தாழ்பணிந்  தோமம்மா காத்திடு தாயே 

கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
கசடகல என்றும் துணையாவாய்  தாயே
உள்ளமதில் என்று முறுதிநிறை தாயே
உன்கமல பாதம் துணையெனக்கு  தாயே  

வாய்மையுடன் வாழ வரமருள வேண்டும்

வாழும்வரை நோய்கள் வராதிருக்க வேண்டும்
தாழ்வு மனப்பாங்கு தளர்ந்துவிட வேண்டும்
தாயே உன்பாதம் சரணடைந்தேன் அம்மா

வாதமது செய்யும் மனமகல வேண்டும்

போதைநிறை எண்ணம் பொசுங்கிவிட வேண்டும்
காதலுடன் வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும்
கருணையுடன் என்னைக் காத்திடுவாய்  தாயே

சரஸ்வதியும் சங்கரலிங்கமும் ( சிறுகதை ) முருகபூபதி


  வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்

தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 

சங்கரலிங்கம், சகல கலா வல்லி மாலையை மெய்யுருக பாடிக்கொண்டிருந்தார்.   ஊரில்  பாடசாலையில்  முதலாம் வகுப்பில் அவர் படிக்கும்போது,  பண்டிதர் நமசிவாயம்  ஒரு நவராத்திரி காலத்தில்  சொல்லிக்கொடுத்தது.

மனமுறையும் நவராத்திரிப் பெருவிழா !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ... ஆஸ்திரேலியா

 

  ஒன்பது என்பது எண்களிலும் முக்கியமானது. ஜோதிடங்களிலும்


முக்கிய மானது.எண்கணித ஜோதிடத்திலும் இன்றியமையாததாய் இருக்கிறது.இந்த ஒன்
 பதை நவ என்னும் பெயரினைக் கொடுத்து இராத்திரியுடன் இணைத்து  நவராத்திரி என்றும் அழைக்கின்றோம்.நவராத்திரி என்றாலே ஒன்பது இரவுகள் என்பதையும் எல்லோரும் அறிவோம். நவ - என்றால் இன்னுமொரு கருத்தும் இருக்கிறது. அதாவது புதுமை என்பதையும் கருத்திருத்த வேண்டும். நவநாகரிகம் என்று - புதிய அம்சங்களுடன் வந்தமைந்த நாகரித்தைப் பெயரிட்டு அழைக்கிறோம் என் பதையும் யாவரும் அறிவோம்.புதுமைகள் பல வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் என்னும் எண்ணத்தினால்த்தான் வருடந் தோறும் நவராத்திரியினைப் பக்தி பூர்வமாக அனுஷ்டித்து வருகிறோம் என்றும் எண்ணிடத் வைக்கிறதல்லவா !

பாரதி தரிசனம் - அங்கம் 06 ஈழத்து இலக்கிய இதழ் குமரன் பார்வையில் பாரதி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இரண்டு அணிகள் ! ! முருகபூபதி

 


பாரதி தரிசனம் தொடரில் கடந்த அங்கத்தில் ஈழத்து இலக்கிய இதழ் மல்லிகைக்கும் பாரதிக்குமிடையிலிருந்த தொடர்புபற்றி எழுதியிருந்தேன்.

மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த காலப்பகுதியில் கொழும்பிலிருந்து 1971 ஆம் ஆண்டு முதல் வெளிவரத்தொடங்கிய குமரன் இதழ் . 1983 வரையில் 77 இதழ்களை வெளியிட்டது.

இலங்கையின் அரசியல் , கலை , இலக்கிய வரலாற்றில் சிற்றிதழான


குமரன் , மார்க்சிய வரலாற்றில், மார்க்சிய பார்வையில் பெரும் பங்காற்றியது என்றே அதன் ஆசிரியரும் மூத்த எழுத்தாளருமான செ. கணேசலிங்கன், 2006 ஆம் ஆண்டில் தொகுத்து வெளியிட்ட குமரன் இதழ்கள்                                           ( பெருந்தொகுப்பு ) நூலின் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார்.

மாணவர் மாத இதழாக 15-01-1971 முதல் கொழும்பிலிருந்து வெளிவரத்தொடங்கிய குமரன், பின்னர் படிப்படியாக கலை, இலக்கிய, அறிவியல் படைப்புகளையும் மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் கட்டுரைகளையும் வழங்கத் தொடங்கியது.

தமது குமரன் இதழுக்கெனவே ஒரு வாசகர் குழாமை உருவாக்கிய ஆசிரியர் செ. கணேசலிங்கன்,  ஈழத்து இலக்கிய உலகில் மூத்த படைப்பாளியாவார். பல நூல்களின் ஆசிரியர்.  இவற்றுள் நாவல்களே அதிகம்.

குமரன் இதழ் விமர்சனங்களுக்கும்  அவற்றுக்கான  


எதிர்வினைகளுக்கு வித்திட்ட து.   பேராசிரியர் கைலாசபதிக்கும் செ. கணேசலிங்கனுக்கும் இடையே புரிந்துணர்வுமிக்க  தோழமைக்கும்  அப்பால்,  பாரதி தொடர்பாக மாற்றுக்கருத்துக்களே  நிரம்பியிருந்தன.

கைலாஸின் பார்வைக்கும் கணேசலிங்கனின் பாரதி தொடர்பான பார்வைக்கும் இடையே மார்க்சிய வெளிச்சத்திலேயே வேறுபாடுகள் இருந்தன. அதன் எதிரொலியை குமரன் இதழ்களிலும் பார்க்க முடிந்தது. தனது பார்வைக்கு ஆதார சுருதி சேர்க்கும் கட்டுரைகளையும் குமரனில் கணேசலிங்கன்  வரவாக்கினார். கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், நாடகம் முதலான துறைகளில் விஞ்ஞான பூர்வமான ஆக்கங்களை வெளியிட்ட குமரன் 56 ஆவது இதழுடன் தடைப்பட்டு, மீண்டும் பாரதி நூற்றாண்டு காலத்தில் 1982 நவம்பர் மாதம் முதல் வெளிவந்தது.

பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பு

 Saturday, October 16, 2021 - 12:08pm

DR AG Husain Ismail

- இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அனுதாபம்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உவேந்தரும், இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் சமூகத்தின் மூத்த கல்வி யியலாளருமான பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் அவர்களின் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக கல்வித் துறையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

முஸ்லிம் சமூகத்தில் சமூக ஒழுக்கங்கள் காலத்திற்கு ஏற்ப மேம்பட வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த அவர், மாற்றத்தை வேண்டி நிற்கும் பரப்புகளில் தைரியமாக தனது நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைத்துச் செயற்பட்டவர்.மானிடத் தன்மை கொண்ட சமூகப் பெறுமானம் இலங்கை முஸ்லிம் கல்விப் பரப்பிலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையும் அரச வளங்கள், பாராபட்சமற்ற நிதி ஒதுக்கீடுகள் என்பனவற்றுக்குள் கல்வி சிக்கி விடக் கூடாது என்பதையும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

" 'தெளிவுபெற அறிந்திடுதல்', 'தெளிவுதர மொழிந்திடுதல்' இரண்டுமே கழகத்திடருந்து, யான் கற்றதும் பெற்றதும் " -திருமதி மைத்திரேஜி சிவசுப்பிரமணியம்-

 லகம் யாவையும் பயன்பெற காகுத்தன் காதையை, கவினுறப்


பாடிவைத்தார் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அவர் வாழ்ந்து சில நூற்றாண்டுகள் உருண்டோடி விட்டன. 

காலத்தோணி என்னைக் கங்காரு நாட்டில் கரைசேர்த்தது. புலம் பெயர் நாட்டில் தாய்நாட்டின் சாயல் தேடித் தவித்த இளங்கொடி எனக்குக் கிடைத்த கொழுகொம்பே அவுஸ்திரேலியக் கம்பன் கழகம். 2007ம் ஆண்டு, கம்பன் கழகம் - சிட்னி முருகன் ஆலயத்தில் நடாத்திய குற்றவாளிக் கூண்டில் இராமன் எனும் அவுஸ்திரேலியாவின் முதல்த் தமிழ் வழக்காடு மன்றத்தைப் பார்வையாளராகக் கலந்துகொண்டு இரசித்த நான், விழாவின் நேர்த்தியும், தரமும் கண்டு வியந்து என்னையும் கழகத்தில் இணைத்துக்கொள்ளுமாறு அமைப்பாளர் ஜெய்ராம் அண்ணனிடம் விண்ணப்பித்தேன்.

அவுஸ்திரேலியக் கம்பன் வகுப்பு மாணவிகளின் நாநலம்!

 


புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள வளரிளம் பருவத்தினர் வித்தகம் காட்டிய விவாத அரங்கம்.

நற்றமிழறிவும் நயம்மிகு சொல்வன்மையும் கொண்ட,
பேராசிரியர் வி. அசோக்குமாரன் ஐயாவின் (பாண்டிச்சேரி) அரங்கத் தலைமையில்,
அவுஸ்திரேலியக் கம்பன் வகுப்பு மாணவர் (சிரேஷ்ட பிரிவு) சனிக்கிழமை, 09.10.21அன்று நிகழ்நிலையாய் விவாதித்தனர்.

இலங்கையில் மீண்டும் பிரஜைகள் குழுக்களை உயிர்ப்பித்தல் வேண்டும் ! அவதானி


மாமாவின் கையை வெட்டி வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற மருமகன்.  கிளிநொச்சியில் சம்பவம். காரணம் காணித் தகராறு.

ஆறு இலட்சம் ரூபாவுக்கு  மேற்பட்ட பெறுமதியுடைய போதை மாத்திரை வைத்திருந்த நபர் ஏழாலையில் கைது.  காரணம் பேராசை.

மட்டக்களப்பில் மாத்திரம் கடந்த 2020 ஆம் ஆண்டில் 150 பேர் தற்கொலை. காரணம் மன அழுத்தம்.

மட்டக்களப்பில் பண்ணை  ஒன்றின் காவலாளி சடலமாக மீட்பு.


  காரணம் தகராறு.

பருத்தித்துறை புனித நகர் பிரதேசத்தில் வன்முறைக்கும்பல் அட்டகாசம். காரணம் :  சமூகத்தினுள் முரண்பாடுகள்.

மாதகலில் மீனவரின் படகை எரித்தது ஒரு கும்பல். காரணம் தனிப்பட்ட கோபம்.

திருகோணமலை தனியார் விடுதியில் நஞ்சருந்திய நிலையில் இரண்டு பெண்கள் மீட்பு.

அரியாலையில் ஒரு வீட்டுக்கு தீவைத்த மர்ம நபர்கள்.

கிளிநொச்சிப்பிரதேசத்தில் சிறுவர்மீது பாலியல்  துஷ்பிரயோகம் அதிகரிப்பு.   

கிளிநொச்சி மருத்துவமனைக்குள் புகுந்து ஏற்கனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர் மீது மீண்டும் வாள் வெட்டுத்தாக்குதல் .

அப்பளம் எடுத்துச்சாப்பிட்டதற்காக ஐந்து வயதுக்குழந்தையின் வாயில் நெருப்பால் சுட்டு காயப்படுத்திய  தாய்.  இதற்குக்காரணம் கண்டிப்பு என்பதா..? குரூரம் என்பதா..?

இச்செய்திகள் யாவும் கடந்த சில நாட்களுக்குள் வடக்கு – கிழக்கில்  தமிழ்ப்பிரதேசங்களிலிருந்து கிடைத்துள்ள செய்திகள்.

ஈழத்தமிழ் மக்கள் கொடிய போர்க்காலத்தை கடந்து வந்தவர்கள்.  ஆனால்,  தமிழ் சமூகத்துள் இன்னமும் ஆளை ஆள் தாக்கும் துன்புறுத்தும்,  மனஅழுத்தங்களினால் தற்கொலைக்குத் தயாராகும்,  மனவக்கிரத்தினால், சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும்  மற்றும் ஒரு வடிவத்துள் போர்க்காலம் இன்னமும் தொடருகின்றது.

இக்காலத்தில் எறிகணை வீச்சுக்களோ, குண்டு வீசும் தாக்குதல்களோ இல்லை.  ஆனால், ஆளையாள் தாக்கி கொல்லும்,  படுகாயப்படுத்தும் அல்லது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும்  செயல்கள்தான் தொடருகின்றன.

விலங்கு மனம் – சம்பவம் (12) கே.எஸ்.சுதாகர்


ஆனந்தன் தன் இஸ்டப்படி அனுஜாவை ஆட்டிவைக்க முனைந்தான். அது சரிவராதுபோக, பத்துவருட தாம்பத்தியத்தை முறித்துக்கொண்டு, அனுஜா ஆனந்தனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதை ஆனந்தன் துளியும் எதிர்பார்க்கவில்லை.

”நண்பா... நான் கனவிலும் நினைக்கேல்லையடா! இவள் இப்படிச் செய்வாள் எண்டு. மூக்கைப் பொத்தினா வாயைத் திறக்கத் தெரியாத சீவன். இப்ப? இறக்கை முளைச்சிட்டுது. பெடிச்சிக்கு வேலை செய்யுறன் எண்ட திமிர். ஒருக்கா எனக்காக அவளோடை கதைச்சுப் பாரன்டா” ஆனந்தன் தன் நண்பன் ராஜலிங்கத்திடம் கெஞ்சினான்.

“கதைக்கலாம் தான். ஆனா...”

”என்ன ஆனாவும் ஆவன்னாவும். கதைக்கிறாய். எனக்காகக் கதைக்கிறாய். உவளுக்கு மூன்று பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு போக எப்பிடித் துணிவு வந்ததோ? பெடிச்சி வடிவும் தானே! அதுதான் ஆரையேன் கட்டுவோம் எண்டு கிழம்பியிருப்பாள்!”

ஆனந்தன் - அனுஜாவைத் தன்னுடன் சேர்த்துவைக்குப்படி, நண்பன் ராஜலிங்கத்திடம் கெஞ்சினான், மன்றாடினான், தூது விட்டான்.

மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்தோர் முற்றத்தில் “ கதை எழுதுவோம் வாரீர் “ அரங்கு ! அ. முத்துலிங்கம் எழுதிய “ ஐந்து கால் மனிதன் “ வாசிப்பு அனுபவம் செல்வி அம்பிகா அசோகபாலன்


மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வாராந்த  மூத்தோர் முற்றம் மெய்நிகர் நிகழ்ச்சியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கதை எழுதுவோம் வாரீர் அரங்கில், கனடாவில் வதியும் பிரபல எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் ஐந்து கால் மனிதன் என்னும் சிறுகதை பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை செல்வி அம்பிகா  அசோகபாலன் பகிர்ந்துகொண்டார்.

செல்வி அம்பிகா அசோகபாலன்,  சிட்னியில்  மக்குவாரி பில்ஸ் உயர்தர பாடசாலையில் பத்தாம் ஆண்டிலும், ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையத்தில் பதினொறாம் ஆண்டிலும் கல்வி கற்கின்றார்.  அடுத்த வருடம் உயர்தர பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக  தோற்றவிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும்   திரு, திருமதி அசோகபாலனின் புதல்வியான இவர், இந்த நாட்டில் பிறந்து தமிழையும் ஒரு பாடமாக கற்றுவருபவர்.

ஶ்ரீகாந்த் - கானா பிரபா

 


தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ....
செவ்வானத்தின் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ...

கடந்த ஒரு வருடத்தில் அதிக தடவை கேட்டது, அதுவும் எஸ்பிபியின் பிரிவுக்குப் பின் இன்னும் ஆழமாக நேசித்த பாட்டு. இதற்காகவே யூடியூப் தேடிப் போய்க் கேட்கும் பழக்கத்தில் அந்தக் காட்சியில் தோன்றி நடித்த நடிகர் ஶ்ரீகாந்தும் அடிக்கடி வந்து நினைப்பு மூட்டுவார்.

பால்ய காலத்தில் பழகிய உருண்டு திரண்ட முகவெட்டுக் கொண்டோரைப் பல்லாண்டு கழித்துப் பார்க்கும் ஒரு அதிர்ச்சி தான் எழுந்தது பல்லாண்டுகளுக்குப் பின் அந்த மொழு மொழு முகம் கொண்ட ஶ்ரீகாந்தின் முதுமைப் படத்தை எஸ்.வி.சேகர் ஒரு தினம் பேஸ்புக்கில் பகிர்ந்த போது.

சின்ன வயசில் தங்கப் பதக்கம் பார்த்த போது கடும் கோபம் கோபமாக வந்தது அந்த துர் நடத்தை மகனாக நடித்த ஶ்ரீகாந்த் மேல்.
“அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி” 
என்று பட்டு மாமியுடன் கிட்டு மாமாவாக வந்து ஆட்டம் போட்ட போது கைதட்டி ரசிக்க வைத்தார்.
இது மாதிரித் தினுசு தினுசான குணச்சித்திரங்களில் அவர் ஆளுமைப்படுத்தியதால் தான் அந்த எரிச்சலும், பூரிப்பும் வந்ததைப் பின்னாளில் நடிப்பென்றால் என்ன என்று புரிந்த காலத்தில் தெரிந்தது.

மாகாளியின் அறைகூவல் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .


இன்றய காலத்திலே யுனெஸ்கோ நிறுவனம் சிறுவர் தினம் என நவம்பர் 20ம் திகதியை சிறுவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. சிலகாலங்களின் முன்பு வரை பல நாடுகளிலே சிறுவர்களைக் கொண்டு பெரிய தொழில்சாலைகளில் வேலை வாங்கி குறைந்த ஊதியம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. மற்றும் சிறுவர்களுக்குக் கல்வியறிவு வழங்கப்படாமையும் காணப்பட்டது. குறிப்பிட்ட சிறுவர் தினத்தில் உலக நாடுகள் சிறுவர்கள் நலச் சேவைகள் குறித்த விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தி அவர்களின் மேம்பாடு, அபிவிருத்தி, நலச்சேவைகள் பற்றி அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர இச் சிறுவர்தினப் பிரகடனம் பயனுடயதாக இருக்கிறது. 

 அதே போன்று பெண்கள் தினமும் உண்டு. மார்ச் மாதம் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தி உள்ளது.. காரணம் இன்றய 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் சாதாரண மனிதருக்கு வழங்கப்படும் உரிமைகள் அற்றவர்களாக வாழ்கிறார்கள். கல்வியறிவற்றவராகவும் ஆண்களால் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றவர்களாகவும் பலர் வாழ்ந்து வருகின்றனர். வெளியுலகம் கூடத் தெரியாது சமய சம்பிருதாயம் என வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கப்படும் துன்பமும் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது. 

 பாரதியாரோ, ‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை யென்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலைகுனிந்தார்’ என்று பாடி இன்று 80 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் உலகில் இந்தக் கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளது. பெண்களின் விசேஷ கொண்டாட்டமாகக் கொள்ளப்படும் இந்த நவராத்திரி நாட்களை நாம் ஏன் பெண்கள் தம் நிலையை; திறமையை; பலத்தை உணரவைக்கும் காலமாகக் கொள்ளக் கூடாது? 

 பாரதி வாக்கில், ‘ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என உயர்ந்து விட்ட பெண்ணினம்’

முள் முடி - அனுபவச் சிறுகதை

 


அடுத்த வாரம் சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்க, கணக்காக சிட்னியில் பொது முடக்கமும் வந்து சென்றது. ஒற்றைப் படை இரட்டைப்படை, முப்படை, நாலிலக்கம் என்று கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க, அந்தா இந்தா என்று நான்கு மாதம் கடந்து இன்று தான் சிட்னியைத் திறந்திருக்கிறார்கள்.  மொத்தமாக ஐந்து மாதங்கள் கத்தரி படாத தலை.   

 இடைப்பட்ட காலத்தில் என் தலை முடியும் கிசு கிசுவென்று எல்லாப் பக்கமும் வளர்ந்து விட்டது. கிரீமிலிருந்து, கழிவு ஒயில் தவிர மீதி எல்லா எண்ணெயும் போட்டுத் தலையைத் தடவித் தடவினாலும் அதுவோ சுருட்டினாலும் வளைந்து நெளிந்து கெம்பிக் கிடக்கும் ஓலைப் பாய் பொல எல்லாப் பக்கமும் தோகை விரித்துக் கொண்டிருக்கும். அந்தக் காலத்துப் பட்டிக்காடா பட்டணமா காலத்துச் சிவாஜியின் தலை போல, அல்லது இன்னும் கொஞ்சம் தள்ளி வந்து தொண்ணூறுகளில் உத்தமராசா பிரபுவின் தலைமுடி  போலக் கெம்பிக் கொண்டு கிடக்கும். செல்ல மகளும் தன்னிடம் இருக்கும் தலையலங்காரக் கிரீடம், ரப்பர் பாண்ட் எல்லாம் அப்பாவின் தலையில் இறுகக் கட்டி ஒரு விளையாட்டு மைதானம் ஆக்கி விட்டார்.   

இலங்கைச் செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி திருகோணமலைக்கு விஜயம் 

ஒம்புட்ஸ்மனை சந்தித்துரையாடிய நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்

ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரி காலணியுடன் சென்ற விவகாரம்; இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அறிக்கை

 'பாராளுமன்றத்தில் திலகர்' நூல் வெளியீடு

யாழில் வாள்வெட்டு, திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

வடக்கில் வாள்வெட்டுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!


இந்திய இராணுவத் தளபதி திருகோணமலைக்கு விஜயம் 

அரச அதிபருடன் சந்தித்துரையாடினார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

உலகச் செய்திகள்

 நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை

ஜூலை படுகொலையின் பின்னர் நோர்வேயில் இடம்பெற்ற மோசமான தாக்குதல்

கைவிடப்பட்ட கொள்கலனில் இருந்து 126 குடியேறிகள் மீட்பு

மெக்சிகோ, கனடா எல்லையை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு

கொலம்பஸ் சிலையை நீக்குகிறது மெக்சிகோ

மூவருக்கு பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு

ஆப்கானுக்கு மனிதாபிமான உதவி வழங்க ஜி20 நாடுகள் விருப்பம்


நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை

நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை-Five Killed and Two injured in Bow and Arrow Attack in Norway-Kongsberg

- டென்மார்க்கை சேர்ந்த 37 வயது நபர் கைது

நோர்வே நாட்டில், மர்மநபர் ஒருவர் அம்பு, வில்லை பயன்படுத்தி பொதுமக்கள் மீது எய்து 5 பேரை கொன்றுள்ளதோடு, துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளார்.

இதில் 2 பொலிஸார் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - பாபு - ச. சுந்தரதாஸ் - பகுதி 16

.


தமிழில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி புகழ் பெற்றவர் ஏ சி திருலோகச்சந்தர்.ஏவிஎம்,பாலாஜி போன்றவர்கள் தயாரித்த படங்களையும் சிவாஜி நடித்த பல படங்களையும் இயக்கி வெற்றி பெற்ற இவருக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை உருவானது.அதன் விளைவு சினிபாரத் என்ற நிறுவனத்தை உருவாக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் பாபு என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்தார். படத்திட்கான நிதியுதவியை ஏ வி எம் நிறுவனம் வழங்கி பதிலுக்கு விநியோக உரிமையை பெற்றுக்கொண்டது.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நீண்ட காலமாக கைவண்டி ரிக்சோக்கள் பாவனையில் இருந்து வந்தன.மனிதனை மனிதன் கை வண்டியில் சுமந்து கொண்டு மழையிலும் வெய்யிலிலும் போவதை நீக்கும் வகையில் 70ஆம் ஆண்டுகளில்கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆன தி மு க ஆட்சியில் கை வண்டி ரிக்க்ஷாக்கள் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டன.அதட்கு பதில் சைக்கிள் ரிக்க்ஷாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பாபு படத்தின் கதாநாயகன் பாபு ஓர் அனாதை தெருவில் வளரும் அவன் வாலிபனானதும் கை வண்டி ரிக்க்ஷ இழுத்து பிழைக்கிறான்.சாப்பாடு கூடை தூக்கி ரிக்க்ஷா தரிப்பிடத்தில் உணவு படைக்கும் கண்ணம்மா அவன் காதலி.ஒரு நாள் குழந்தை அம்முவையும் அவள் பெற்றோரையும் தன் வண்டியில் கொட்டும் மழையில் இழுத்து செல்கிறான் பாபு இதனால் அம்மு குடும்பம் அவன் மீது இரக்கம் காட்டுகிறது ஆனால் விதி வசத்தால் அம்முவின் தந்தை காலமாக குடும்பம் நடுத் தெருவுக்கு வருகிறது.குடிசை வாசியான அம்முவையும் அவள் தாயார் பார்வதிக்கும் அரணாக நிட்கும் பாபு அம்முவை பட்டதாரி ஆக்குவதட்கு திடசங்கட்பம் பூணுகிறான்

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பன்னிரெண்டு ]மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேர்ண் .... அவுஸ்திரேலியா 

      பனையும் தென்னையும் எங்களின் வாழ்வில் பயனை அளிக்கும் வகையிலேதான்


இருக்கிறது.அதனில் எந்த மாற்றுக் கருத்துக்களுக் குமே இடமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் உடைய தாகவே இருப்பதை யும் மறுத்துவிட முடியாது. ஆனால் பனையின் ஓலை 
தென்னை யின் ஓலை என்று வரும்பொழுது - பனையின் ஓலைதான் முன் னுக்கு வந்து நின்று விடுவதைக் காணமுடிகிறது. காரணம் பனை யின் ஓலை பெற்று வந்த வரமென்று தான் எண்ணத் தோன்று கிறது.பனை ஓலையின் வன்மையினைத் தென்னை ஓலை யானது பெற்றிருக்கவில்லை. அதனால் தென்னை ஓலை ஒரு மட்டோடு நின்று விடுகிறது.பனை ஓலையோ பல நிலைகளில் தன்னை வெளி ப்படுத்தி நிற்கிறது என்பதை கருத்திருத்தல் வேண்டும்.மங்கலம்அமங்கலம், இரண்டிலும் தென்னை வந்து நிற்கும்.தென்னையின் குருத்தோலை - தோரணங்களில் வந்து நிற்கும்.இந்தக் குருத்தோலை மணவீட்டிலும் வரவேற்கும். பிணவீட்டிலும் முன்னிற்கும்.பச்சைத் தென்னோலையில் பன்னாங்கு செய்து அதனை இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தும் நிலையும் வழமையில் இருக்கிறது. பன்னாங்காய்கிடுகாய் ஆகிய நிலையில் தென்னோலை தன்னை நிறுத்திக் கொண்டுவிடும்.