அகில மக்காள் வாருங்கள் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா                       போட்டி பொறாமை எலாம்
                            பொசுக்கியே விட வேண்டும் 
                       வாட்டமுறும் வகையில் என்றும் 
image1.JPG                             வார்த்தை பேசல் நல்லதல்ல 
                        மூத்தவரை மனம் நோக
                                வைப்பதிலே என்ன பயன் 
                         கீழ்த்தரமாய் வரும் நினைப்பை
                                 கிழித் தெறிவோம் வாருங்கள் ! 

                       பெற்றவர்கள் மனங் கலங்க 
                             பிள்ளை செய்தல் கூடாது 
                      சொத்துப்பற்றி சண்டை செய்து
                              சுகம் பறிக்கக் கூடாது 
                       கற்றுத் தந்த ஆசானை 
                            களங்கமுற வரும் நினைப்பை 
                      கடுந்தீயில் போட்டு நின்று
                             கருக்கி நிற்போம் வாருங்கள் ! 

                    நம்பிக்கை எனும் பண்பை
                           நாம் உடைத்தல் நல்லதல்ல 
                   அவநம்பிக்கை எனும் நினைப்பை
                           அறுத்துவிடல் நம் கடனே 
                    கும்பிட்டு தலை குனிதல் 
                             குறைவான செயல் அல்ல
                    கும்பிட்டு வாழ வெண்ணும்
                           குணம் அதனை பிய்த்தெறிவோம் ! 

                      செருக்கோடு சினம் சேர்ந்தால்
                            சிறந்த நிலை அழிந்துவிடும் 
                     பொறுப்பின்றி  நடந்து நின்றால்
                             பொழுது எல்லாம் சிதைந்துவிடும் 
                      அடக்கம் கொண்டு வாழ்வதுதான்
                               அனைவர்க்கும் பொருத்தம் அன்றோ 
                       அமைதி எனும் மருந்தருந்த
                              அகில மக்காள் வாருங்கள் ! 
                   சிட்னியில் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்புசிட்னி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 18ம் நாள் வெண்ட்வொர்த்வில் ரெட் கம் அரங்கத்தில் சிட்னியில் தமிழை நேசிக்கும் ஆர்வலர்களின் பங்களிப்புடன் இனிதே நடந்தேறியது. விழாவிற்கு அமைப்பின் தலைவர் அனகன் பாபு தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார்.  விழாவில் தமிழிசை ஆராய்ச்சியாளர் மம்மது அவர்கள் இசைத்தமிழ் என்ற தலைப்பிலும், ஓவியர் மருது அவர்கள் ஓவியத்தமிழ் என்ற தலைப்பிலும் மற்றும் நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் அவர்கள் இயல் தமிழ் என்ற தலைப்பிலும் பேசி வந்திருந்தவர்களை கவர்ந்தனர். விழாவில் மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜோடி மெக்கே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருந்தினர்களை சமூக பிரமுகர்களுடன் இணைந்து கௌரவித்தார். விழா அமைப்பின் செயலாளர் கர்ணன் சிதம்பரபாரதி அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.


சவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்


22/08/2019 கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்­கையின் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக்க ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் அமெ­ரிக்கத் தூத­ர­கத்­தி­ட­மி­ருந்தும், ஐக்­கிய நாடு­க­ளி­ட­மி­ருந்தும் கூர்­மை­யான கருத்­துக்கள் வெளிவந்­தி­ருக்­கின்­றன.இலங்­கையில் இனத்­துவ நீதிக்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் பாத­க­மான விளை­வு­களை இந்த நிய­மனம் ஏற்­ப­டுத்­து­மென்று அவை தெரி­வித்­துள்­ளன.

பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருக்கும் இரா­ணுவ அதி­காரி ஒரு­வரை இலங்கை இரா­ணு­வத்தின் தள­ப­தி­யாக நிய­மித்த செயல் இலங்­கையில் அமெ­ரிக்க இரா­ணுவ ஒத்­து­ழைப்­பையும், முத­லீட்­டையும் பாதிக்­கக்­கூடும் என்று செவ்­வாய்­க்கி­ழமை அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­கள சிரேஷ்ட அதி­காரி ஒருவர் எச்­ச­ரிக்கை செய்­த­தாக ராய்ட்டர்ஸ் செய்­தி­யொன்று தெரி­விக்­கி­றது.

விடை தேட வேண்டிய வேளை


24/08/2019 ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான தேர்தல் அறிக்­கை­களை (தேர்தல் விஞ்­ஞா­பனம்) தயா­ரிப்­ப­தற்கு அவ­சி­ய­மான தேர்தல் முன்­கள நிலைமை இன்னும் கனி­ய­வில்லை. ஆனால் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருப்­ப­வர்­களும், வேட்­பா­ளர்க­ளா­வ­தற்குத் தயா­ராகி வரு­ப­வர்­களும் தேர்தல் கால வாக்­கு­று­தி­களை அள்ளி வீசத் தொடங்­கி­விட்­டார்கள். 
அவர்­க­ளு­டைய வாக்­கு­று­தி­களில் சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு என்ன தீர்வு என்­பது குறித்து தெளி­வான உறு­தி­யான நிலைப்­பாட்டைக் காண முடி­ய­வில்லை. அது­கு­றித்து அவர்கள் தமது அதி­கா­ர­பூர்­வ­மான தேர்தல் உறு­தி­மொ­ழிகள் தொடர்­பான அறிக்­கையில் தெளி­வாகக் கூறு­வ­தற்­காகக் காத்­தி­ருக்­கின்­றார்­களோ தெரி­ய­வில்லை.
வேட்­பா­ள­ராக முத­லா­வது அறி­விக்­கப்­பட்ட பொது­ஜன பெர­மு­னவைச் சேர்ந்த கோத்தபாய ராஜ­பக் ஷ தேசிய பாது­காப்­புக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும். நாட்டின் இறை­மைக்குள் வெளிச் சக்­திகள் எதுவும் தலை­யிட முடி­யாது என்று மிகத் தெளி­வாகக் கூறி­யுள்ளார். 
தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என அவர் தெரி­வித்­துள்ள போதிலும் அர­சியல் தீர்வு குறித்து கருத்து வெளி­யி­ட­வில்லை. அர­சியல் விட­யங்­களை தனது சகோ­தரர் மஹிந்த ராஜ­பக் ஷ பார்த்துக் கொள்வார் என்ற நிலைப்­பாட்­டையும் அவர் வெளி­யிட்­டுள்ளார்.

கோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: "ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை"


"தமிழ்த் தரப்­புக்கள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து தேசிய பிரச்­சி­னைக்­கான யோசனைத் திட்­டத்­தினை முன்­மொ­ழிய வேண்டும்"


ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­காக எமது குடும்­ப­த்தி­லி­ருந்து பெயர்கள் முன்­மொ­ழி­யப்­பட்­ட­போது  தற்­போ­தைய சூழலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முன்னாள் பாது­காப்­புச் ­செ­ய­லாளர் கோத்­தா­ப­யவின் பெயரை நானே முன்­மொ­ழிந்தேன் என்று  முன்னாள் சபா­நா­ய­கரும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ­பக்ஷ வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

"சு.கவை மீட்­ப­தற்கு பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணை­வதே ஒரே­வ­ழி­யாகும்"
கேள்வி:- முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?
பதில்:- ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாகக் கூடி­ய­வர்கள் என முன்­மொ­ழி­யப்­பட்­ட­வர்­களில் மிகப்­பொ­ருத்­த­மா­னவர். தற்­போ­தைய சூழலில் சட்டம் ஒழுங்­கினை நேர­டி­யாகக் கையா­ளக்­கூ­டி­ய­வரும், பயங்­க­ர­வா­தத்தின் மிலேச்­சத்­த­னத்­தினை கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வ­ரு­மான நேர்­மை­யான ஒரு­வரின் தலை­மைத்­து­வமே நாட்­டிற்கு தேவை­யா­க­வுள்­ளது. அது­மட்­டு­மன்றி அவர், பாது­காப்பு மற்றும் நிரு­வாகத் துறையில் அனு­ப­வத்­தினைக் கொண்­டி­ருக்­கின்றார். கடந்த காலத்தில் நக­ர­அ­பி­வி­ருத்தி, சுகா­தாரம் உள்­ளிட்ட விட­யங்­களில்  நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான விட­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­மையே அவர் பொருத்­த­மா­னவர் என்­பதை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. பிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா - கானா பிரபா


இன்று ஆகஸ்ட் 16 ஆம் திகதி பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஈழத்தின் ஓவிய மரபில் நீண்டதொரு தடம் பதித்த ஓவியர் ஆசை இராசையா அவர்கள்
ஈழத்தில் புகழ் பூத்த ஓவிய ஆளுமைகளில் ஒருவரான மாற்கு மாஸ்டர் எமது கல்லூரியில் சித்திர வகுப்பு ஆசிரியர். பள்ளிக் கூடத்தில் அவருடைய சித்திரக் கூடம் முழுதும் ஓவியங்கள் பொதிந்த அட்டைகளும், மேசை பரவி பாதி வேலையில் இருக்கும் களிமண் சிற்பங்களுமாக நிறைந்திருக்கும். அந்த நேரத்தில்
சிங்களக் கலையுலகம் வரை போற்றப்பட்ட ஆளுமையாக விளங்கிய மாற்கு மாஸ்டரின் அருமை பெருமையைப் பள்ளி மாணவர் நமக்கோ புரிந்து கொள்ளக் கூடிய வல்லமை இல்லாதிருந்தது. பின்னாளில் திரு பத்மநாப ஐயர்  “தேடலும் பதித்தலும்” என்று ஈழத்தின் அனைத்து ஓவியர்களின் வாழ்வனுபவங்களையும் திரட்டி வெளிவந்த “தேடலும் பதித்தலும்” என்ற நூலை எமது கொக்குவில் இந்துக் கல்லூரியில் பெரும் விழா எடுத்துக் கொண்டாடிய போது சிறப்புப் பிரதி வாங்கிய மாணவர்களில் ஒருவன் நான். அந்த வகையில் அந்தக் காலத்தில் எப்படி அம்புலிமாமா காலத்தில் இருந்து மெல்ல மெல்ல ஈழத்து எழுத்தாளர்கள் பக்கம் திசை திரும்பி அவர்களின் எழுத்துகளை அள்ளியெடுத்துப் படித்தேனோ அது போலவே ஈழத்து ஓவியர்களின் படைப்புகளையும் விரும்பி ரசித்துப் பார்க்கும் வழக்கம் உண்டாயிற்று. ஓவியர் ரமணி, பயஸ் போன்றோர் ஈழத்துப் பத்திரிகைகளில் அடிக்கடி ஓவியம் போடுவார்கள். தவிர ரமணியின் ஓவியம் தாங்கிய ஈழத்து நாவல்கள், சிறுகதைகள் என்று வந்து கொண்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க எங்களையறியாமலேயே இன்னாரென்று தெரியாமல் அவருடைய ஓவியங்கள் நம் பாடப் புத்தகங்களில் இருந்ததை ரசித்துப் பார்த்து வாழ்ந்திருக்கிறோம். அவர் தான் ஓவியர் ஆசை இராசையா.

ஓவியர் ஆசை இராசையா அவர்களை இன்னும் நெருக்கமாக அணுக வைத்தது பெருமதிப்புக்குரிய எழுத்தாளர் அமரர் அநு.வை.நாகராஜன் எழுதிய “காட்டில் ஒரு வாரம்” என்ற சிறுவர் நவீனம். அந்த நாவலுக்கு ஆசை இராசையா அவர்கள் தான் ஓவியம்.என் பதின்ம வயதில் என்னுடைய படிக்கும் ஆர்வம் கண்டு “காட்டில் ஒரு வாரம்” நாவலுக்கு அணிந்துரை எழுத வைத்தவர் அமரர் நாகராஜன் அவர்கள். அந்த வகையில் என் எழுத்து வந்த நூலுக்கும் ஆசை இராசையா அவர்களின் சித்திரம் வந்ததைப் பெருமையோடு நினைவு கூர்வேன். இந்த நூல் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் வெளியீடு கண்ட போது முகப்பு ஓவியம் குறித்தும் அன்றைய மூத்த எழுத்தாளர்கள் பேசியது நினைவுக்கு வருகிறது. இது குறித்து நான் முன்னர் எழுதிய போது ஆசை இராசையா அவர்கள் இவ்வாறு கருத்திட்டிருக்கிறார்.
“பலாலி ஆசிரிய கலாசாலையில் நான் 1973/1974 ம் ஆண்டுகளில் பயிலுனராக இருந்த காலகட்டம். பயிற்சி நிறைவில் நான் கொ/றோயல் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணிக்கப்பட்டிருந்தேன். இலங்கையில் மிகப் பெரிய கல்லூரி. (1983ம் ஆண்டு இக் கலூ.ரியின் மாணவர் தொகை : 8000. ஆசிரியர் தொகை  350.) கல்லூரி வளாகத்தில் கால் எடுத்து வைக்கவே உதறல் எடுக்கும். இக்கலூரியில் வாயப்புக் கிட்டியதே அதிர்ஷ்டம் என்று பலரும் வற்புறுத்தியதன் நிமித்தம் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டேன். அங்கே சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார் அநு.வை.நாகராஜன். பின்புதான் தெரிந்துகொண்டேன் அவர்தான் நான் அக் கல்லூரிக்கு ஆசிரியப்பணிக்கு வரக் காரணமானவரென்று. அப்பொழுது ஏற்பட்டதுதான் அவருடனான நட்பு. காட்டில் ஒரு வாரம், அவன்தான் பெரியன் ஆகிய இரு நூல்களுக்கும் நானே ஓவியம் வரைந்தவன். நல்ல ஆற்றொழுக்கான நடையில் எழுதும் ஆற்றல் உள்ளவர். சிறுவர் இலக்கியங்கள் மட்டுமல்ல சமய நூல்கள் கட்டுரைகள் பலதும் எழுதியுள்ளார். சுவைபட உரையாடுவதிலும் வல்லவர். எனது சுகவீனம் காரணமாக நீண்ட தூரம் பயணிக்க முடியாததால் சந்திக்கமுடியவில்லை. அவருடைய இறுதிப் பயணத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாதது இன்றும் வேதனையே.”

மழைக்காற்று - தொடர்கதை – அங்கம் -03 முருகபூபதி


அபிதா வந்து சேர்ந்த  அந்தவீட்டில்  ஒரு அறையிலிருந்து சுப்ரபாதம் ஒலித்தது.
 “ ரீச்சரம்மா எழுந்திட்டாங்க “ என்றாள் ஜீவிகா. கற்பகம் துயில் எழுந்துவிட்டதன் அறிகுறி அது.
சுப்ரபாதம் ஒலித்த அறைப்பக்கம் திரும்பிப்பார்த்தாள் அபிதா. தான் அருந்திய தேநீர் கப்பை சிங்தொட்டியில் கழுவிவிட்டு, எங்கே அதனை வைப்பது என்று ஒரு கணம் யோசித்தாள். அந்த வீட்டிலிருப்பவர்கள் பாவிக்கும் பாத்திரங்களின் அருகில் வைப்பதா..? இதற்கு முன்னர் இங்கிருந்த வேலைக்காரிகள் என்ன செய்திருப்பார்கள்…? இந்தத் தேநீர் அருந்தும் கப், இப்பொழுது எத்தனையாவது முறையாக தன்னிடம் வந்திருக்கும்…? எனக்கெனவே உணவுண்ணும் தட்டமும் பிரத்தியேகமாக எங்காவது இருக்கலாம்!
அந்த தேநீர் அருந்தும் கப்பை ஜீவிகா தன்னிடம் தந்தபோது  “இனி இதுதான் உனக்குரிய கப்  எனச்சொன்னபோது அந்தத்தொனியின் அழுத்தம் அவ்வாறெல்லாம் சிந்திக்கவைத்தது.
ஒரு தேநீர் கப் தனது சுயசரிதையை சொன்னால் எப்படி இருக்கும்? சிறுவயதில்  பாடசாலையில்  குடை, மேசை, கதிரை, வீடு முதலான தலைப்புகளில் சுயசரிதை எழுதிய காலம் அபிதாவின் நினைவுகளில்  சஞ்சரித்தது.
ஜீவிகா, குளியலறையிலிருந்து வெளியே வந்ததும், “  அபிதா…. உனது கண்ணில் தூக்கக்கலக்கம் இருக்கிறது. நேற்று இரவு சரியாக தூங்கியிருக்கமாட்டாய். கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்திட்டு வா. இந்த வீட்டிலிருக்கும் மற்றவர்களும் எழுந்த பிறகு இங்கு என்ன என்ன செய்யவேண்டும்  “ என்பதை சொல்கிறோம்.. “ என்றாள்.
சுவர்க்கடிகாரம் காலை ஏழுமணிக்கு நாதமெழுப்பியது.

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நிகழ்த்திய தமிழ இலக்கியச் சந்திப்பில் “ஓவியத் தமிழ்” - கானா பிரபாஇன்றைக்குச் சாமியறையில் இருக்கும் சுவாமிப் படங்களில் இருந்து, ஒரு அரசர் காலத்துப் படம் வரை ஏராளம் நகை நட்டுகள் அணிந்து, பட்டுப் பீதாம்பரங்கள் கொண்டதொரு அமைப்பிலேயே எங்கள் வழிபாட்டு முறை வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால் தமிழர் பண்பாட்டுக்கும், வாழ்வியலுக்கும் முற்றும் முரணானதொரு கலாசாரப் படிமத்துடனேயே வாழ்ந்து பழகி விட்டோம் என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை சுருக்கென்று ஊசி தைத்தாற் போல சொல்லி வைத்தார் ஓவியர் ட்ராஸ்கி மருது. நேற்று சிட்னியில்
தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நிகழ்த்திய தமிழ இலக்கியச் சந்திப்பில் “ஓவியத் தமிழ்” என்ற கருப்பொருளில் உரையாற்றிய போதே மேற் கண்ட தொனியில் பேசினார்.

அன்றைய காலத்தில் அரசனும் சரி, குடி மக்களும் சரி மிகவும் எளிமையானதொரு தோற்றத்தில் வெற்றுடலும், இடுப்பில் அரைத் துண்டுமாகவே தம் தோற்ற வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தனர். இதனையே நாடு காண் பயணி மார்க்கோ போலோவும் இந்தியாவில் இம்மாதிரியானதொரு வாழ்வு முறையைக் கண்டு அதிசயத்து மன்னனும் மக்களும் ஒருவர் ஆயினர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் இந்த மாதிரி இடாம்பீகமான, படோபகரமானதொரு அமைப்பில் மன்னரையும், சூழவும் இராணி, மந்திரிமரையும் பட்டுடை, ஆபரணங்கள் கொண்டதொரு தோற்றப்பாடு எப்படி வளர்ந்தது என்பதற்கும் ஓவியர் மருது விளக்கம் சொன்னார். அரச பரம்பரையில் உதித்த ரவிவர்மா மேற்குலகத் தொடர்பால் தன் ஓவியக் கலையில் மேலும் தேர்ச்சி பெற்று அன்றைய கடல் வழி வர்த்தகப் பட்டினமாக வளர்ந்த பம்பாய்க்குச் செல்கிறார். அங்கே ஓவியக் கல்லூரியும் பிரிட்டிஷாரால் நிறுவப்பட அங்கு பணி புரிந்து கொண்டே அந்தக் காலத்து ஜமீன்கள், பிரபுக்கள் போன்றோரை வரையத் தொடங்குகிறார். அப்போது பம்பாயில் நாடகம் போட்டுக் கொண்டிருந்த பார்ஸி இனத்தாரிடம் நாடகத்தில் பயன்படுத்திய விரிப்புகளையும், ஆபரணங்கள், உடைகளையும் பெற்று அவற்றையே தான் ஓவியம் வரையும் மனிதர்களுக்கு அணிவித்து அந்தக் காட்சியியலில் படம் வரைந்தாரம். ஓவியர் ரவிவர்மாவின் சுவாமிப் படங்களும் இத்தகு பாங்கிலேயே இருக்கின்றன.
மெல்ல மெல்ல அச்சு இயந்திர முறைமைக்கு மாறும் சூழலுக்குத் தன்னை உள்வாங்கிக் கொண்ட ரவிவர்மா தன்னுடைய அச்சுப் பதிவிலேயே அந்த ஓவியங்களைக் கடைக் கோடிக்கும் கொண்டு சேர்க்கிறார். அவருடைய உதவியாளராக இருந்தவர் தான் இந்திய சினிமாவின் சிற்பி என்று சொல்லக் கூடிய தாதா சாகிப் பால்கே. எனவே தாதா சாகிப் பால்கேயும், அவரை அடியொற்றிய இயக்குநர்களுமாக சினிமாவிலும் இந்த பார்ஸி இன மக்களின் அடையாளத்தை ஊடுருவ வைத்து விட்டனர். இது குறித்த நீண்டதொரு ஆய்வை இன்னும் விரிவாகப் பார்க்க முடியும். ஆனால் நேற்று ஓவியர் மருது இவற்றைக் குறிப்பிட்டு நம் தமிழரின் அடையாளம் மறைந்து போனதைக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைச் செய்திகள்


படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி. 

நல்லூரில் நடமாடும் பொலிஸ் சி.சி.ரி.வி கண்காணிப்பு வாகனம்!!

இலங்கை விடயத்தில் ஐ.நா. கவலை !

தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் இராணுவத் தளபதி

புதிய இராணுவதளபதி விவகாரம் - இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை பாதிக்கும்- அமெரிக்கா

சவேந்­திர சில்வா நியமனம் ; அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு குறித்து தூதுவர் விளக்கம்

சவேந்திர சில்வாவின் நியமனம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான  முயற்சிகளைக் குறைத்துக் காண்பிக்கிறது  – ஐரோப்பிய ஒன்றியம்

சவேந்திர சில்வாவின் நியமனத்தால் நல்லிணக்கம்,  பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் நலிவடையும் - கனடா , ஜெர்மன் கண்டனம் 

சவேந்திரசில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள்- கனடா

சவேந்திர சில்வா நியமனம்- ஐநா மனித உரிமை ஆணையாளர் கடும் அதிருப்தி

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா  - அமெரிக்கா கவலை 

சவேந்திர சில்வா விவகாரம் ; அமெரிக்கக் குடியுரிமை ; கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு குறித்து அமெரிக்கத் தூதுவர் கூறுவது என்ன ?

ஓ.எம்.பி அலுவலகம் திறப்புக்கு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு போராட்டம்படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி. 


உலகச் செய்திகள்


அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் சீனாவால் அழிக்கமுடியும் - புதிய அறிக்கை

 ஏமனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம்..!

 பப்புவா சிறை சூறையாடல் - 250 கைதிகள் தப்பி ஓட்டம்

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது

நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு

"இனப்படுகொலை குற்றவாளி இராணுவ தளபதியா..?” - வைகோ கண்டனம்

அவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்

இந்தியாவுக்கு மற்றொரு துயரம்; இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது

2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸி­ல் ஆரம்பம்!

பிரான்சில் இன்று ஆரம்பமாகும் ஜி-7 மாநாடுஅமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் சீனாவால் அழிக்கமுடியும் - புதிய அறிக்கை


20/08/2019 ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தின் அமெரிக்கா குறித்த கற்கை நிலையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆசியாவில் அமெரிக்கா மாத்திரம் தற்போது  வலிமையான சக்தியில்லை  என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அறிக்கை சீனாவின் ஏவுகணைகளால் ஓரிரு மணித்தியலாங்களில் அமெரிக்காவின் தளங்களை  அழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
இந்தோபசுவிக்கிற்கான அமெரிக்காவின்  பாதுகாப்பு தந்திரோபாயம் கடும் குழப்பநிலையிலுள்ளது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சீனாவிடமிருந்து தனது சகாக்களை பாதுகாப்பதில் நெருக்கடியை சந்திக்கலாம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் சக நாடுகளான அவுஸ்திரேலியா ஜப்பான் போன்றவை தங்கள் படையணிகளை மீள கட்டியெழுப்பவேண்டும் , அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்தவேண்டும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதன் சகாக்களைவ விட சீனா ஏவுகணை விடயத்தில் மிகவும் பலம் பொருந்தியதாக மாறி வருகி;ன்றது என  குறிப்பிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 8கட்டடத் தொழிலாளியாக கல்லையும் மண்ணையும் சுமந்து தன் தங்கையை வக்கீலுக்கு படிகக வைக்கிறாள் அக்கா. தன் கல்லூரி மாணவர்களுடனும் தன் காதலனுடனும் பிக்னிக் செல்கிறாள் தங்கை. அங்கே ஒருவன் ஒரு பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்வதை தூரத்திலிருந்து பார்த்து அதிர்ச்சியடைகிறாள். சில காலம் கழித்து காதலனின் அண்ணனான நீதிபதி தன் அக்காவை திருமணம் செய்ய விரும்புவதாக அறிந்து உவகை கொள்கிறாள். அக்காவுக்கும் நீதிபதிக்கும் திருமணம் நடக்கிறது. அக்கா புருஷனைப் பார்த்த தங்கைக்கு பேரதிர்ச்சி!

எந்த கொலைகாரனை தூரத்தில் கண்டாலோ அவனே அக்கா கணவனாக முன்வந்து நிற்கிறான். இதுதான் தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்த அக்கா தங்கை படத்தின் மூலக் கதை.

ஆங்கிலப் படம் ஒன்றின் கதையைத் தழுவி பூவை கிருஷ்ணன் எழுதிய கதை முதலில் வில்லன் வீரப்பாவிடம் கிருஷ்ணனால் கொடுக்கப்பட்டது. ஆனால் வீரப்பா படத்தை தயாரிப்பதில் கால தாமதம் செய்ததால் அதே கதையை சின்னப்பா தேவிரிடம் மீண்டும் சொன்னார் கிருஷ்ணன். தேவருக்கு கதை பிடித்துவிட்டது. வீரப்பாவிடம் இருந்து கதையை வாங்கி தேவரிடம் கொடுத்து கதைக்கான நன்மானத்தைப் பெற்றுக் கொண்டார் 
பூவை கிருஷ்ணன்.

தேவர் வசனகர்த்தா ஆருர்தாஸிடம் இணைந்து கதையை மேலும் மெரு
கூட்டி படமாக்கினார். கதையை செப்பனிட்டு வசனம் எழுதும் போதே அக்கா தங்கையாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கற்பனை பண்ணி அவர்கள் பேசுவது போலவே வசனங்களை எழுதினார் ஆடூர்தாஸ். தான் நினைத்த நடிகைகள் யார் என்பதையும் தேவரிடம் சொன்னார். அக்கா வேடத்திற்கு சௌகார் ஜானகி. தங்கை வேடத்திற்கு கே ஆர் விஜயா. ஆரூர்தாஸின் மனத்தெரிவு தேவருக்குப் பிடி;துவிட்டது.
சௌகார் விஜயா இருவரையும் ஒப்பந்தம் செய்து படத்தை தயாரிக்கத் தொடங்கி விட்டார். கதாநாயகனாக ஜெய்சங்கரும், அவரின் அண்ணனாக நீதிபதியாக மேஜர் ச
ந்தரராஜனும் நடித்தார்கள். இவர்களுடன் நாகேஷ் விஜயலலிதா தேங்காய் சிPனிவாசன் ஆகியோரும் இடம் பெற்றார்கள்.
விறுவிறுப்பான படத்தின் கதைக்கு ஆரூர்தாதஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார். படிப்ப வேறு பண்பு வேறு படிப்ப ரத்தத்தில் வந்து கலப்பது பண்பு ரத்தததிலே 
ஊறுவது, நீதியின் பலத்திலேயே உனக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ அதேயளவு என் தாலியின் பலத்திலே எனக்கும் நம்பிக்கை இருக்கு போன்ற பல துடிப்பான வசனங்களை உணர்ச்சிகரமாக எழுதியிருந்தார் ஆரூர்தாஸ்.

சங்கர் கணேஷ் இசையமைப்பில் ஆடுவது வெற்றி மயில், குருவிகளா குருவிகளா பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா மாறிவரும் சொஸைட்டி ஆகிய நான்கு பாடல்களும் இனிமையாக அமைந்தன.

சிட்னி தமிழர் மண்டபத்தில் சிலப்பதிகாரப் பேச்சுப்போட்டி 01/09/2019


தமிழ் மொழியின் மகத்தான இலக்கியக் கருவூலம் சிலப்பதிகாரம். தமிழரின் முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், தமிழரின் கலாசாரத்தை உலகிற்கு கொண்டுவந்துள்ள தமிழரின் வரலாற்றுக் காப்பியமாகும் சிலப்பதிகாரத்திற்கு சிட்னியில் முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மகாநாடு 27, 28, 29 செப்டம்பர் 2019 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மகாநாட்டை முன்னிட்டு,  சிலப்பதிகாரத்தின் பெருமைகளையும் சிறப்புக்களையும் மாணவர்களும் அறியும் பொருட்டுப் பேச்சுப்போட்டிகள் 6 – 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் இளையோருக்கும் நடாத்தபடவுள்ளன. தயாரிக்கப்பட்ட பேச்சுக்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் இத்துடன் தரப்பட்டுள்ளது. பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலாம் பரிசு பெறுபவருக்குத் தங்கப் பதக்கம் மகாநட்டில் வழங்கப்படவுள்ளது.

பிரிவுகளும் வயதெல்லைகளும்

கீழ்ப்பிரிவு  01.08.2013 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு 01.08.2010 க்கும் 31.07.2006 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு 01.08.2006 க்கும் 31.07.2001 க்கும் இடையில் பிறந்தவர்கள்


இப் போட்டிகள் சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் 01 September 2019 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து  நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமா - கென்னடி க்ளப் திரை விமர்சனம்

கென்னடி க்ளப் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம்.சுசீந்தீரனுக்கு முதல் படத்தில் கைக்கொடுத்தா கபடி இதிலும் கைக்கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ஒட்டன்சத்திரம் ஊரில் பாரதிராஜா தலைமையில் கென்னடி க்ளப் என்று ஒரு பெண்கள் கபடி அணி உள்ளது. அந்த அணியில் உள்ள பெண்களை நல்ல நிலைக்கு கொண்டு வர பாரதிராஜா போராடி வருகிறார்.
அந்த சமயத்தில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட அப்போது பாரதிராஜாவின் முன்னாள் மாணவர் கோச் சசிகுமார் அந்த அணியை வழி நடத்துகிறார்.
மாநில அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கென்னடி க்ளப்பை சார்ந்த ஒரு பெண் இந்திய அணிக்கு செலக்ட் ஆகின்றார். ஆனால், அவர் இந்திய அணியில் விளையாட ரூ 30 லட்சம் லஞ்சம் கேட்கின்றனர்.
இதனால் அந்த பெண் விளையாட முடியாமல் போக தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கின்றார். இதை தொடர்ந்து அந்த க்ளப் என்ன ஆனது, சசிகுமார் பாரதிராஜா கனவை நிறைவேற்றினாரா இது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சுசீந்திரன் கடந்த சில வருடங்களாகவெ தனக்கான இடத்தை தொலைத்து வெற்றிக்காக போராடி வந்தார், அந்த சமயத்தில் அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதமே கபடி, இதே நிலை தான் சசிகுமாருக்கும்.
அதனாலேயே இவர்கள் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சொல்லி அடித்திருக்கிறார்கள், சசிகுமார் ஒரு கோச்சாக மனதில் நிற்கின்றார், தன் அணிக்காக வேலையே தூக்கி எறியும் இடம் விசில் பறக்க வைக்கின்றார்.
 அதே நேரத்தில் பாண்டியநாடு படத்தில் பார்த்த பாராதிராஜா இதில் மிஸ்ஸிங், ஏதோ அவர் படம் முழுவதும் வந்தும் பெரிதாக மனதில் நிற்கவில்லை, கபடி ஆரம்பித்த கதையில் தொடங்கி அது வளர்ந்து தற்போது எப்படி ஒரு விளையாட்டு அரசியலாக மாறியுள்ளது, இதன் பின் எப்படி பணம் விளையாடுகின்றது என்பதை தெளிவாக காட்டியுள்ளனர் படத்தில் ஹீரோயின் என்று தான் யாருமில்லை, நடித்தவர்கள் அனைவருமே ஹீரோயின் தான், கபடி காட்சிகள் அனைத்தும் அத்தனை தத்ரூபம், அதில் ஒரிஜினல் கபடி வீராங்கனைகளையே நடிக்க வைத்தது பாராட்டத்தக்கது.
அதிலும் டுவின்ஸாக நடித்திருக்கும் இருவர், பாராதிராஜா மகளாக வருபவர், சாப்பாடு தான் முக்கியம் மானம் முக்கியமில்லை என வெகுளியாக சொல்லும் பெண் என பலரும் மனதை கவர்கின்றனர்.எப்படியும் இந்த மாதிரி விளையாட்டு போட்டி படம் என்றாலே கிளைமேக்ஸ் சீட்டின் நுனிக்கு வர வைப்பார்கள், படத்தில் ஆரம்பத்திலிருந்து பெரிதும் அப்படி எந்த காட்சி இல்லை என்றாலும், கிளைமேக்ஸில் கண்டிப்பாக அனைவரும் சீட்டின் நுனிக்கு வருவது உறுதி.
படத்தின் ஒளிப்பதிவு நாமே கபடி அரங்கில் சென்ற அனுபவம், டி.இமான் பின்னணியில் கலக்கியுள்ளார், ஆனால், விஸ்வாசம் ஹாங் ஓவர் இன்னும் போகவில்லை போல.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம், சொல்லி அடிக்கும் ஹிட் மெட்ரீயல்.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.
படத்தில் நடித்திருக்கும் கபடி வீராங்கனைகள்.

பல்ப்ஸ்

பாராதிராஜா கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். கிளைமேக்ஸ் வேண்டுமென்ற வைக்கப்பட்டது போன்ற டுவிஸ்ட்.
மொத்தத்தில் இந்த கென்னடி க்ளப் நம்பி இந்த களத்தில் அனைவரும் இறங்கலாம்.
நன்றி  CineUlagam