தமிழ் முரசு ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது 15.03.2015

.
இன்று தமிழ் முரசு ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது 15.03.2015.

தமிழ்முரசின் ஆறாவது பிறந்தநாளான March 15ம்  தேதியில் தமிழ்முரசை  வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்களது நன்றிகள். அனைத்து வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்கின்றோம். உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் வரை தொடர்வோம்.
தொடங்கும் போது குறிப்பிட்டதுபோல் பக்கச் சார்பு இல்லாமல் தொடர்கின்றோம் என்பதை மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.
வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. கடந்த வருடம் பல புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆண்டும் புதியவர்கள் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஆறாம்  ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில் புதிய பகுதிகள், புதிய முயற்சிகள் பலவற்றை செய்யவுள்ளோம். நீங்களும் உங்களுக்கு பிடித்தவைகளை பட்டியலிடுங்கள். ஆதரவுக்கு நன்றிகள் பல.

அசிரியர் குழு 

மரண அறிவித்தல்

.                                                                      
விஜயலக்சுமி கனகரட்ணம் 

ஸ்ரீ வள்ளுவன் நமஹ…-அறிவுமதி

 

  

                                                              

வருகிறார்கள்
வந்தவர்கள்
வருகிறார்கள்

கொல்ல முயல்வார்கள்
முடியாது
போனால்
உறவு படுத்தி
வெல்ல
முயல்வார்கள்
கொற்றவை
பிள்ளை
அப்படித்தான்
பார்வதிப்
பிள்ளையாய்
ஆக்கப்பட்டான்
அப்படி
ஆக்கப்பட்டவன்


வாசித்ததில் நேசித்தது இயக்குநர் ஜெயபாரதியின் "இங்கே எதற்காக" - கானா பிரபா

.
இயக்குநர் ஜெயபாரதியின் "இங்கே எதற்காக"

வாசித்து முடித்ததும் நீண்டதொரு பெருமூச்சை விட்டேன்.  இந்தப் புத்தகத்தைப் படித்த அனுபவத்தை மீட்டிப் பார்த்தால் ஒரு சுமையொன்று அழுத்துமே அது போலத் பக்கங்கள் ஒவ்வொன்றைக் கடந்த நிலை இருந்தது.

இயக்குனர் ஜெயபாரதி இப்படிச் சொல்கிறார், நான் பகவத் கீதையை ஆழ்ந்து படித்தவன் இல்லை! இருந்தாலும் எப்போதோ படித்தபோது பாஞ்சாலி கிருஷ்ணனிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. 
"தீயவர்களின் (கெளரவர்களின்) மனங்களை மாற்றி இந்த மகாபாரதப் போரை நீங்கள் தவிர்த்திருக்கலாமே!"

ஆணியின் நூல், இசை இறுவெட்டு வெளியீடு

.
மித்ர பதிப்பகமும் பூவரசி மீடியாவும் இணைந்து வழங்கிய அவுஸ்திரேலிய ஈழத்து கவிஞர், எழுத்தாளர் ஆணியின் அங்கஹாரம் நாவல் மற்றும் அம்மா பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா பெப்ருவரி 28 ஆம் திகதி சென்னை புக்பாயின்ட் அரங்கத்தில் இனிதே நிறைவேறியது. புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் தலைமையில் நடைபெற்ற விழா அமரர் எஸ்போ நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது. பூவரசி பத்திரிகை ஆசிரியர் ஈழவாணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம் வாழ்த்துகிறது

.
கடல் கடந்து எம்மோடு இலக்கியத்தை வாரம் தோறும் பகிர்துகொள்ளும்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் 6வது அகவையில் வாழ்த்துவது மகிழ்வே

சிட்னியில் சித்திரைத் திருவிழா 22 மார்ச் 2015



.




இலங்கைச் செய்திகள்


கோத்தபாயவிற்கு வெளிநாடு செல்லத் தடை

ஜெனரல் சரத் பொன்சேகா நிரபராதி: நீதிமன்றம்


ஜெயக்குமாரி நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை

மோடியின் யாழ் விஜயம்: உண்ணாவிரதப் போரட்டம் ஆரம்பம்
சரண குணவர்தன கைது
குவைத்தில் உயிரிழந்த இலங்கை பெண்: சடலத்தை கொண்டுவர நடவடிக்கை

மடு - தலைமன்னாருக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி

நள்ளிரவில் நாடு திரும்பினார் மோடி

பகீரதி பிணையில் விடுதலை

புலர்வின் பூபாளம் 2015 28.03. 2015



திரும்பிப்பார்க்கின்றேன். முருகபூபதி

.
பல்துறை   ஆற்றலுடன்  பதிப்பாளராகவும்  விளங்கிய மூத்த   படைப்பாளி   அன்புமணி
சமூகநலன்   சார்ந்த  பணிகளிலேயே  தனது  வாழ்நாளை செலவிட்டு   விடைபெற்ற  கர்மயோகி
    
                                  
"ஒருவன்  என்னவாக  இருக்க வேண்டும்  என்பதை   அவன்  மனமோ அல்லது    அவனின்  அறிவோ   தீர்மானிப்பதில்லை,  அவனின் ஆன்மாதான்    தீர்மானிக்கிறது"   என்ற  மகாபாரத  தத்துவத்தை சமீபத்தில்    படித்தேன்.
இந்தத்தத்துவத்தை  நெஞ்சத்துக்கு  நெருக்கமானவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில்   அதிலிருக்கும்    உண்மை  புலப்படுகிறது.
வயது    செல்லச்செல்ல  நெஞ்சத்துக்கு  நெருக்கமானவர்கள்  யார்...? என்ற   தெரிவு  எம்மையறியாமலேயே   மனதிற்குள் உருவாகிவிடுகிறது.    அவர்களில்  பலருடைய  மறைவு வெற்றிடத்தையும்    தோற்றுவிக்கிறது.
ஈழத்து    இலக்கிய  வளர்ச்சியில்  காத்திரமான பங்களிப்புச்செய்தவரும்    மூத்ததலைமுறை   எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான    அன்புமணி  இரா . நாகலிங்கம்  கடந்த  2014 ஆம்    ஆண்டு  ஜனவரி  மாதம்  12  ஆம்    திகதி  மறைந்தவுடன் கிழக்கிலங்கையில்    மட்டுமல்ல  எழுத்தாளர்கள்  மத்தியிலும்  ஒரு வெற்றிடம்    தோன்றியதுபோன்ற  உணர்வே   வந்தது.

கழுகு கங்காருவையும் மனிதனையும் தாக்கும் ஏழு காட்சிகள்

.

சங்க இலக்கியக் காட்சிகள் 43- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

மன்னவன் செய்த மாபெரும் தவறு!

இளைஞன் ஒருவன் ஓரு பெண்ணைக் காண்கிறான். அவளைக் கண்டதுமே அவனக்குப் பித்துப் பிடித்ததுபோல இருக்கிறது. அவள் அவ்வளவு அழகாக இருக்கிறாள். “அடடா! இப்படியொரு அழகா? இத்தனை வசீகரமான பெண்களும் இந்த உலகிலே இருக்கிறார்களா? இவ்வளவு காலமும் நான் இப்படியொருத்தியைக் காணவேயில்லையே” என்று மலைத்து நிற்கிறான். இவ்வளவு அழகாக இவள் இருந்தால் பார்ப்பவர்களின் உள்ளங்களெல்லாம் பற்றி எரியுமே! காண்பவர்களின் உயிரை இந்த அழகு கவர்திழுத்துக் குடித்து விடுமே. ஓவ்வொருவரும் இந்த அழகை அடைவதற்காக உயிரையும் கொடுப்பார்களே! இவள் யார்? பொன்னில் வார்த்தெடுத்து உயிரூட்டிய புதுச் சிலைபோல மின்னுகிறாளே. பூரண சந்திரனின் தண்ளொளிக்கு இணையாக இவளது அழகிய முகம் பிரகாசிக்கிறதே. மாiனைப் போல மருண்ட பார்வையும், அன்னத்தைப்போல அழகிய நடையும், மயிலைப்பேன்ற சாயலும், புறாவைப்போன்ற இளமை ததும்பும் அழகுடலும் கொண்ட இந்தப் பெண்ணை இவளின் பெற்றோர்

உலகச் செய்திகள்

பங்களாதேஷில் தொடர் குண்டு வெடிப்புக்கள் மயிரிழையில் உயிர்தப்பினார் பிரதமர் ஹஸினா

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது வான் தாக்குதல்: 30 பேர் பலி

ஆர்ஜென்டீனாவில் இரு ஹெலிகள் மோதி விபத்து 3 பிரான்ஸ் விளையாட்டுவீரர்கள் உட்பட 10 பேர் பலி

உளவு பார்த்த குற்றச்சாட்டுக்குள்ளான இளைஞருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றம்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 13 வருடங்கள் சிறை


கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் துரைவி நினைவுப்பேருரையும் விருது வழங்கலும்

.
 இலங்கை    பதிப்புத்துறைக்கும்   எழுத்தாளர்களுக்கும்  பெரும்  பணியாற்றிய   துரைவி  என  அன்புடன்  அழைக்கப்படும்  அமரர்  துரை விஸ்வநாதன்  அவர்களின்   84  வது  பிறந்தி  தின   நினைவுப்பேருரையும் துரைவி  விருது  வழங்கலும்  அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்  எழுத்தாளர்  திரு லெ.முருகபூபதி       தலைமையில்  நடைபெற்றது.
இவ்விழாவில்  வரவேற்புரையை   மேமன்கவி  நிகழ்த்தினார். 
தலைமையுரையை   திரு லெ.முருகபூபதி   நிகழ்த்த,  துரைவி விருது விபரத்தை   திரு தெளிவத்தை ஜோசப்  அறிவித்தார்.

விழுதல் என்பது எழுகையே" - பகுதி 41 காசி.வி. நாகலிங்கம் யேர்மனி



.
தொடர்ச்சி 
சீலனின் புதிய பயணம் ஆரம்பமாகியது.
„என்னிடம் பாஸ்போட் வீசா ஒன்றும் இல்லை. போடர் பொலிஸ் கேட்டால் என்ன செய்யிறது?“
தன் மனதுக்குள் இடித்துக் குத்திக் கொண்டிருந்த பயத்தை வெளியிட்டான்.
„பயப்படாதையும். அப்படி ஒரு பிரச்சனையும் வராது!
முப்பத்தைந்து வருடத்துக்கு முன் நான் இந்த போடரைக் கடந்த போது, மறித்து, பாஸ்போட்டில் ஜேர்மன் நாட்டுக்கு வருவது நிராகரிக்கப்பட்டு. அதாவது றிஜெக்ற் என்று சீல் அடித்து, திரும்பிப் போ! என்று விரட்டிவிட்டார்கள்.                                  
என்றாலும் எப்படியோ அங்கையிங்கை நுழைந்து ஜேர்மனிக்குள் அடிபதித்து, இன்றைக்கு எப்படி இருக்கிறம் பார்!
எல்லாம் முயற்சி! பயத்தை வென்று, சோம்பலை விரட்டி, அயராது முயன்றால் வாழ்க்கையில் நினைத்ததைச் சாதிக்கமுடியும்“ என்று விவேக் அங்கிள் சீலனுக்கு துணிவூட்டினார்.
மகன் சுந்தரன் காரை ஓட்ட, பக்கத்தில் மகள் சிந்துஜா, பின் சீற்றில் சீலன் நடுவில், இருபக்கமும் விவேக், வவா இருவரும் இருக்கக் கார் வேகமாக விரைந்தது.
கார்றேடியோ ஜேர்மன் பாடல்கள் இசைக்க, அண்ணனும் தங்கையும் ஜேர்மன் மொழியும் தமிழும் கலந்து ஏதோ கதைக்க, பின்னால் இருந்த மூவரும் இனி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்றது பற்றிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

எஸ். எஸ். வாசன் எங்கள் ஆசிரியர் - கொத்தமங்கலம் சுப்பு

.
மார்ச், 10, 1903. எஸ்.எஸ். வாசன் அவர்களின் பிறந்த நாள். 
அவர் நினைவில், கொத்தமங்கலம் சுப்பு விகடனில் 1969-இல் எழுதிய ஒரு கட்டுரையை இங்கிடுகிறேன்.

"கொத்தமங்கலம் சுப்பு ஒரு குழாய்; அதைத் திறந்து விட்டால், கற்பனை கொட்டும் என்று மாலி கூறினார். அதனால், உங்களை மாசம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு வைத்துக் கொள்கிறேன்" என்றார் வாசன்.

அன்பர் பி.எஸ்.ராமையாவும் நானும் 'மதன காமராஜன்' படத்தில் உழைக்கத் துவங்கினோம். வாசனின் மேதாவிலாசத்தை அந்தப் படத்திலேயே கண்டேன்.

விழுதல் என்பது எழுகையே" - பகுதி 42 காசி.வி. நாகலிங்கம் யேர்மனி



.
மறுநாள் விடிந்தது. ஆனால் வெளியே சூரியனின் ஆதிக்கம் இருக்கவில்லை. நீலவானம் பளிச்சென்று இருக்க, வெண்முகில்கள் ஆங்காங்கே நீந்திக் கொண்டிருந்தன. பகலவன் வரப்போகின்றான் என்ற மழையற்ற காலநிலை தெரிந்தது.
காலநிலை என்பது ஒரு முக்கிய அம்சம் வகிக்கின்றது. செய்தி அறிக்கையுடன் காலநிலை பற்றியும் அறிவிக்கப்படும். இதனைப் பலரும் உன்னிப்பாகக் கவனித்துக் கொள்வார்கள். பனிகாலங்களில் சறுக்கும் அபாயங்கள். வீதி விபத்துக்களும் அதிகமாக இருக்கும். கார்க்கடைகளுக்கும் கறாஜ் வைத்து கார் திருத்துபவர்களுக்கும் வருமானம் பெருகும். நடக்கும்போதுகூட பாதையில் உறைந்திருக்கும் பனி, விழப்போகிறோம் என்று நாம் உணர முன்பே எம்மை, வழுக்கி வீழ்த்திவிடும். இதனால் எலும்பு முறிவுதறிவு டாக்டர்களிடம் கூட்டம்கூடும். இன்னமும் பனிகாலம் என்பதால், திடீர் வசதிவந்த மனிதர்கள் சிலர், திடீர்திடீர் என்று மனதை மாற்றிக்கொள்வது போல, ஐரோப்பாக்காலநிலை தலைகிழாக மாறலாம். சரி இது கிடக்கட்டும். நாங்கள் விவேக் வீட்டில் சீலன் படுத்தானா, விடிய எழுந்தானா? அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
இன்று விவேக்கும் வவாவும் சீலனுக்குரிய முக்கிய வேலைகளைக் கவனிப்பதற்காக நேரத்தை ஒதுக்கியிருந்தார்கள்.

கண்­ணீரை வர­வ­ழைக்­கின்­றது : யாழில் மோடி உருக்கம்

.

இலங்­கை­க்­கான இரண்­டு நாள் பய­ணத்தின் இறு­தி­நி­கழ்­வான இந்த நிகழ்வு எனக்கு கண்­ணீ ரை வர­வ­ழைக்கும் ஒன்­றாக அமைந்­துள்­ளது. இந்­திய வீட்­டுத் ­திட்­டத்தை மக்­க­ளுக்கு கைய­ளிப்­ப­தை­யிட்டு நான் மட்­டற்ற மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி தெரி­வித்தார்.
யாழ்ப்­பா­ணத்­திற்­கான நேற்­றைய தனது விஜ­யத்தின் இறுதி நிகழ்­வாக இள­வாலை வட­மேற்கு கூவில் கிரா­மத்தில் இந்­திய வீட்டுத் திட்­டத்தை கைய­ளிக் கும் நிகழ்வில் கலந்­து­ கொண்டு பேசு­கை­யி­லேயே,

கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணம்

.

முற்றுப்புள்ளி - என் கடைசிக் கவிதை

.

கனவுகள் கருகிப்போன
மயிலிறகொன்று
மை சுமந்து திரிந்தது...
கருகிப்போன கனவுகளை
ஓவியம் வடிக்க
இடம் தேடி...

கண்ணாடிக் குடுவையை
முட்டி முட்டி
உடைத்து விட்ட
தங்க மீனொன்று
துள்ளித் துள்ளிக் குதித்தது...
இனி
விடுதலையென்றெண்ணி...

தமிழ் சினிமா மகா மகா

.



நடிகர் : மதிவாணன் சக்திவேல்
நடிகை :மெலிசா இந்திரா
இயக்குனர் :மதிவாணன் சக்திவேல்
இசை :பாவலர் சிவா
ஓளிப்பதிவு :பிரேம் எல் பிரேமவன்
தமிழ் நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் மதிவாணன். அங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அனுஸ்ரீ என்னும் பெண்ணை சந்திக்கிறார். இவருடன் நட்புடன் பழகுகிறார் மதிவாணன்.

ஒருநாள் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு பெண்ணை காணவில்லை என்று கூறி அவரிடம் விசாரிக்கிறார்கள். அப்போது, இந்த வீட்டுக்கு புதியதாக வந்திருப்பதாக கூறிய மதிவாணன், தனக்கு எந்த பெண்ணையும்  தெரியாது என்று கூறி போலீஸ்காரர்களை அனுப்பி வைக்கிறார். 

இதுஒருபுறமிருக்க, மதிவாணன் தன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நாயகி மெலிசாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். இருவரும் காதலை வெளிப்படுத்தி காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர். 

இந்நிலையில், அனுஸ்ரீயை மீண்டும் சந்திக்கிறார் மதிவாணன். அப்போது மதிவாணன் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி தனது காதலியான மெலிசாவின் புகைப்படத்தை அனுஸ்ரீக்கு காட்டுகிறார். போட்டோவை பார்த்த அனுஸ்ரீ, “இந்த பெண் என் தோழி. இவள் காணாமல் போய் நீண்ட நாட்கள் ஆகிறது. இவளை நாங்கள் தேடி வருகிறோம்” என்று கூறுகிறார். இதைக் கேட்ட மதிவாணன், நான் காதலிக்கும் பெண், தினமும் சந்திக்கும் பெண் எப்படி காணாமல் போயிருக்க முடியும்? என்று நினைத்து அதிர்ந்து போகிறார்.

அதன்பின்னர் மெலிசாவின் முழு விவரத்தையும் அனுஸ்ரீயிடம் கேட்டறிகிறார் மதிவாணன். இதையெல்லாம் கேட்ட மதிவாணன் குழப்பத்தில் ஆழ்கிறார். பின்னர் அனுஸ்ரீயும், மதிவாணனும் மெலிசாவை தேட ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் மதிவாணனுடன் பழகிய மெலிசா யார்? அவர் கிடைத்தாரா? அவருக்கு என்ன ஆனது? மதிவாணன்-மெலிசா இணைந்தார்களா? என்பதை விளக்குவதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதிவாணன், ஆர்ப்பாட்டமில்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியை பற்றி விசாரிக்கும் காட்சிகளில் யதார்த்தமாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மெலிசா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். தோழியாக வரும் அனுஸ்ரீ அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். டாக்டராக வரும் நிழல்கள் ரவி அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிரைம் திரில்லர் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் மதிவாணன் சக்திவேல், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமலே கொண்டு சென்றிருக்கிறார். படம் மிகவும் நிதானமாக நகர்கிறது. வெளிநாட்டினரை அருமையாக வேலை வாங்கியிருக்கிறார். 

பாவலர் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். பிரேமின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலியாவின் அழகை நம் கண்முன்னால் நிறுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘மகா மகா’ மனதில் நிற்கும் சகா.

நன்றி மாலைமலர்