வியட்நாமில் தமிழர்கள்- 1– நோயல் நடேசன்



 நாங்கள் வியட்நாம் சென்றபோது எங்களுக்கு வழிகாட்டியாக வந்த பெண் மிகவும் கரிசனையாக எங்களைப் பார்த்துக்கொண்டாள். என் மனைவிக்குத் துணிகள் தைக்குமிடமெல்லாம் அவளே கூட்டிச் சென்றாள். என்னால் அந்த நேரத்தில் ஓய்வெடுக்க முடிந்தது. அவள் மற்றைய மஞ்சள் நிற வியட்நாமியப் பெண்களைவிட கறுப்பான நிறத்திலிருந்தாள். எங்களது நிறத்தில் எனலாம். அதாவது பொது நிறமென இலங்கையிலும் மாநிறமெனத் தமிழ்நாட்டிலும் சொல்லும் நிறம் கொண்டவள். அது எங்களது மனதில் கேள்வியை உருவாக்கி, முகத்தைச் சுற்றி பட்டாம்பூச்சியாகப் பறந்தபடி இருந்தது. காலை உணவின்போது அந்தப் பேச்சு வந்தபோது, நான் நகைச்சுவையாகச் சொன்னேன்: “யாரோ இலங்கையையோ இந்தியாவையோ சேர்ந்த மாலுமி ஒருவன் கப்பலில் வந்திருக்க வேண்டும்.“ அதைக் கேட்டு என் மனைவி சியாமளாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. காரணம் என்னோடு வந்த எனது நண்பன் கப்பலில் முன்பு வேலை செய்தவன். வியட்நாமில் போர் முடிந்த 1975இல் இனக் கலப்பு என்பது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக மாறியிருந்தது. அமரிக்கர்கள் தென் வியட்நாமில் விட்டுச் சென்ற குழந்தைகளும் பெண்களும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டார்கள். அவர்கள் அவமானச் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார்கள். 

கந்தசஷ்டிப் பிரார்த்தனை

                        [ 1 ம் நாள் ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 





  பேரரக்கர் தனையழித்த பெருமானே போற்றி

  பாருலகில் பேரரக்கர் பெருகுகிறார் நாளும் 

  தீராத தொல்லையினை கொடுக்கின்றார் தினமும்

  சிவன்மைந்தா தீர்வுதந்து காத்துவிடு ஐயா 

 

  ஊர்சிறக்க உழைக்கின்றார் ஒன்றுங் கிடையாமல்


  உளமுடைந்து உணர்விளந்து உழலுகிறார் ஐயா

  பாருலகில் கலியெழுந்து ஆடுகிறான் கந்தா 

  பகையழித்த வேலவனே பொழிந்திடுவாய் கருணை 

 

  ஆலமதை உண்டானின் அழகு திருக்குமரா

  நீலமயில் நீயமர்ந்து எமக்கருள வேண்டும்

  சீலமுடை வாழ்வுதனை தந்திடுவாய் முருகா

  திருவடியே சரணமையா சிவானாரின் மைந்தா 

 

 

எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா பேசுகிறார்

 கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி


விஜேந்திரா அவுஸ்திரேலியா வந்திருக்கிறார். 

அவரை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் வீடியோஸ்பதி காணொளித் தளத்துக்காகவும் வானலையில் சந்தித்திருந்தோம்.
அந்த நேர்காணலின் இணைப்பு



படித்தோம் சொல்கின்றோம்: நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் முருகபூபதி


நாட்டியக் கலாநிதி  கார்த்திகா கணேசர், நாட்டியம் மாத்திரம் ஆடவில்லை. அதற்கும் அப்பால் சென்று பல கலைஞர்களை உருவாக்கிய ஆளுமை.  கார்த்திகா   ஏனைய  நடன  நர்த்தகிகளிடமிருந்து  வேறுபட்டிருப்பதற்கு  அவரிடமிருக்கும்  ஆற்றலும்தேடலும் மாத்திரம்  காரணம்  அல்ல.   நாட்டியக்கலை தொடர்பாக  அவர் நீண்டகாலம் ஆய்வுசெய்து  நூல்களும் எழுதியிருக்கும் எழுத்தாளரும் ஆவார்.   நடன நர்த்தகியாக  மாத்திரமன்றி  தமது ஆய்வின்  வெளிப்பாடாக  நாட்டியக் கலாநிதியாகவும்  மிளிர்ந்தவர்.

  இதுவரையில் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலம் தோறும்  நாட்டியக்கலை,  இந்திய  நாட்டியத்தின்  திராவிட  மரபு, நாட்டியக்கடலில் புதிய  அலைகள் முதலான நூல்களை


வரவாக்கியிருப்பவர.  இந்த ஆண்டு  தனது பவளவிழாக்காலத்தில் மற்றும் ஒரு நூலை அவர் வரவாக்கியிருக்கிறார். 

நூலின் பெயர் இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்.   

இந்த நூல் என்னிடம் வந்து சேர்ந்தபோது, இதனை எவ்வாறு உள்வாங்கப் போகின்றேன் என்ற தயக்கமும் முதலில் வந்தது.

சமகாலத்தில் இந்த பொன்னியின் செல்வன் திரைக்கு  வந்து நடக்கின்ற அலைப்பறைகளுக்கு மத்தியில், இந்த நூல் எனது வசம் வந்து சேர்ந்தது.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர், அங்கே சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள்தான் இருந்தன.  இந்தியாவை பல வருடகாலம் தங்களது ஆளுகைக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், சுதந்திரத்தையும் தந்துவிட்டு, மூன்று மதங்களையும் ஒரே குடைக்குள் வைத்து இந்து மதம் என்ற பொதுப்பெயரை வைத்துவிட்டு,  மகாராணியின் மகுடத்தில் பதிப்பதற்காக கோகினூர் வைரத்தையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள்.

மகாராணி மறைந்தபின்னர்தான் அந்தக்கிரீடத்தில் இருப்பவை எங்கெங்கிருந்து சென்றன என்பதும் தெரியவந்துள்ளது.

கார்த்திகா கணேசரின் இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன்னர் ஒரு குட்டிக்கதையை சொல்லிவிடுகின்றேன்.

கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

சொன்னபிறகும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு குழந்தை தனது அம்மாவிடம் கேட்கிறது.

   அம்மா,  நான் இந்த உலகத்திற்கு எப்படி வந்தேன்...?

அம்மா சொல்கிறார்:

நானும் உனது அப்பாவும் கடவுளிடம் பிரார்த்தித்து எமக்கு குழந்தை வேண்டும் என்றோம்.  உடனே ஒரு  அழகான பூக்கூடை  மேலிருந்து கீழே இறங்கியது.  அதில் நீ இருந்தாய். என்றாள் அம்மா.

குழந்தை மீண்டும் கேட்கிறது.

அவ்வாறாயின் அம்மா,  நீங்கள் எப்படி இந்த உலகத்திற்கு வந்தீர்கள்...?

எழுத்தும் வாழ்க்கையும் - ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 37 நண்பர்களைத் தேடித்தந்த பேனை ! “ டொபி மாமா “ தெளிவத்தை ஜோசப் ! முருகபூபதி


இலங்கைக்கு 1997 ஆம் ஆண்டு சென்றவேளையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு செல்லமுடியாதிருந்தமைக்கு அங்கிருந்த சூழ்நிலைகள்தான் காரணம்.

தலைநகரிலிருந்த இலக்கிய நண்பர்களையும், கண்டியில் தலாத்து ஓயாவிலிருந்த மூத்த படைப்பாளி கே. கணேஷ் அவர்களையும் மற்றும் தென்னிலங்கை இலக்கிய நண்பர்களையும் வீரகேசரி, தினகரன், தினக்குரல், இலங்கை வானொலி, ரூபவாகினி தொலைக்காட்சி ஆகியனவற்றில்  பணியாற்றிய நண்பர்களையும் சந்தித்தேன்.

கணேஷ், கண்டியில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருந்த கவிஞர்


பண்ணாமத்து கவிராயரிடம் அழைத்துச்சென்றார்.

எழுத்தாளர் கணேஷ் ஈழத்தின் மூத்த எழுத்தாளர். சுவாமி விபுலானந்த அடிகளார், பிரபல  சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரம சிங்கா ஆகியோருடன் இணைந்து அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தவர். கே. ராமநாதனுடன் இணைந்து பாரதி என்ற இலக்கிய சிற்றிதழையும் வெளியிட்டவர். அத்துடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.

எனது மகன் முகுந்தனும் அந்தப் பயணத்தில் இணைந்திருந்தமையால்,  அவனுக்கு எனது நண்பர்கள் யார் என்பதும் தெரிந்திருந்தது.

கணேஷுடன் கண்டி தலதா மாளிகையை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது, மகன் திடீரெனச்சொன்னான்.

 “ அப்பா… உங்களுக்கு செல்லுமிடங்கள் எங்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவ்வாறு நீங்கள் நண்பர்களை தேடிக்கொள்வதற்கு என்ன காரணம்..? என்று யோசித்தேன். அதற்குக்  காரணம் உங்கள்  பொக்கட்டில் எப்போதும் இருக்கும் பேனைதான் என்று புரிந்துகொண்டேன்    மகனது இந்தப்பேச்சைக்கேட்ட நண்பர் கணேஷ் சிரித்தார். அவனது தலையுச்சியை முகர்ந்து முத்தமிட்டார்.

 “ தம்பி… நீ சரியாகத்தான் சொல்கிறாய்.   பேனையால் எது எதுவெல்லாமோ செய்ய முடியும்.   பேனை நண்பர்களை உருவாக்கும்.  தேடியும் தரும்… இல்லாமலும் செய்துவிடும் “  என்று அவனது கருத்தை ஆமோதித்த கணேஷ்,     தம்பி … நீ…. என்னவாக வருவதற்கு விரும்புகிறாய்..?  “ எனக்கேட்டார்.

   அங்கிள்… நான் பைலட்டாக விரும்புகின்றேன்.  இரண்டு மூன்று தடவைகள்  விமானத்தில் பறந்துவிட்டேன்.  விமான நிலையங்களில் பைலட்களை பார்க்கும் போது எனக்கும் அவர்களைப்போன்று வரவேண்டும் என்று ஆசை.  “ என்றான் மகன்.

 “பைலட்டுக்குப் பயிற்சி பெறுவதற்கு நிறைய செலவாகுமே…  “ என்றார் கணேஷ்.

 “ அதனால் என்ன…?  ஶ்ரீலங்காவில் அப்பாவின் அப்பாவால், இவரை, ஒரு எழுத்தாளனாக்க மாத்திரம்தானே முடிந்தது.  நான் அவுஸ்திரேலியாவில் அப்பாவுடன் இருக்கிறேன்.  என்னை அப்பாவால் பைலட்டாக்க முடியும்தானே…?! 

எனக்கும் கணேஷுக்கும் சிரிப்புக்கு மேல் சிரிப்பு வந்தது.

பெருவாழ்வு வாழ்வதற்கு வழிவகுக்கும் கந்தசஷ்டி விரதம்

 Friday, October 28, 2022 - 6:00am

- அகத்தின் அழுக்குகளை அகற்றும்

கந்தசஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை 6 நாள் ஸ்கந்த சஷ்டி திருவிழா எல்லா முருகன் கோயில்களிலும் நடைபெறுகிறது. சஷ்டி திதி ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை தொடங்கி ஒக்டோபர் 31 ஆம் திகதி காலை முடிவடைகிறது.

ஈழத்து இலக்கியவாதி தெளிவத்தை ஜோசப் ✍🏻வானலையில் நினைவேந்தல்


 

ஈழத்தின் மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்கள் 

கடந்த அக்டோபர் 21 நம்மை விட்டு மறைந்த தினம் உலகெங்கும் வாழும் அவரதுவாசக உலகம் சோக தினம் னுஷ்டித்தது.


இந்த நிலையில் அவுஸ்திரேலியத் மிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வில் நம் எழுத்தாளர்சமூகம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி பகிர்ந்தார்கள்.


அந்த இணைப்பு


https://www.youtube.com/watch?v=8D2pwytlhJo



தூங்கும் பனிநீர் –குறும் திரைப்படப்பிரதி கே.எஸ்.சுதாகர்


ஐந்து  பாத்திரங்கள் : சிந்து, பிரதீபன் (சிந்துவின் தம்பி),

சிந்துவின் அம்மா, சிந்துவின் அப்பா,

ஜோதி ரீச்சர்

 

காட்சி 1

உள்

வீடு

மாலை


சிந்துவும் பிரதீபனும் ஹோலிற்குள் இருந்து, ரெலிவிஷனில் தமிழ் சினிமா பார்க்கின்றார்கள். (க்ளோஸ் ஷாட் / close shot). ஹோலிற்குள் லைற் எரிகின்றது. வீட்டிற்கு வெளியே கார் வந்து நிற்கும் சத்தம்.

            பிரதீபன்    : அக்கா…! அப்பாவும் அம்மாவும் வேலையாலை வந்திட்டினம்.

சிந்து         : சனலை நியூசிற்கு மாத்து. படிக்கிறதை விட்டிட்டு, படம் பாத்துக் கொண்டிருக்கிறாய் எண்டு தெரிஞ்சா அம்மா கத்துவா.

பிரதீபன் அவரசப்பட்டு ரி.வி சனலை மாத்துகின்றான். அது எத்தனையோ சனலுக்கு மாறி மாறிப் போய் கடைசியில் நியூஸ் சனலுக்கு வருகின்றது. சிந்து வீட்டின் கதவை நோக்கிப் பார்க்கின்றாள். சிந்துவின் அம்மா கதவைத் திறந்தபடி நிற்கின்றார்.

சிந்துவின் அம்மா         : சிந்து… பிரதீபன்… இரண்டு பேரும் நான் சொல்லுறதை வடிவாக் கேளுங்கோ… நானும் அப்பாவும் ஒருக்கா ஜோதி ரீச்சர் வீட்டை போட்டு வாறம். வாறதுக்கு கொஞ்சம் லேற்றாகும். நீங்கள் இரவுச் சாப்பாட்டை முடிச்சிட்டுப் படுங்கோ. நாங்கள் திறப்பு வைச்சிருக்கிறம்... திறந்துகொண்டு வருவம்.

சிந்து & பிரதீபன்       : ஐய்… ஜோதி ரீச்சர் வீடுதானே! நாங்களும் வாறம்.

சிந்துவின் அம்மா         : உங்களை நாங்கள் இன்னொருநாள் கூட்டிக்கொண்டு போவம். இப்ப ஒரு அவசர அலுவலாப் போறம். அப்பா காருக்குள்ளை இருக்கிறார்.

சிந்து                 : என்னம்மா நீங்கள்? (சலித்தபடி) ஜோதி ரீச்சர் ஒஸ்ரேலியாக்கு வந்தாப் பிறகு நான் ஒருக்காவும் அவவைச் சந்திக்கேல்லை.

சிந்துவின் அம்மா       : சரி.. சரி.. கண்ணைக் கசக்கிறதை விட்டிட்டு ஹப்பியா இரு. இன்னும் ஆறு மாசத்திலை உனக்குக் கலியாணம். கதவை உள்ளாலை பூட்டிப் போட்டு இருங்கோ. Bye

சிந்து & பிரதீபன்       : bye அம்மா…

தெய்வம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழில் புராணக்க கதைகளையே அடிப்படையாக வைத்து பக்திப்


படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் சமூகக் கதைகளை கருவாகக் கொண்டு பக்திப் படங்களை தயாரித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெறலாம் என்பதை நிரூபித்தவர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர் .1969ம் ஆண்டு இவர் தயாரித்த முதல் சமூக பக்திப் படமான துணைவன் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.அதனை தொடர்ந்து 1972ம் வருடம் தேவர் தயாரித்த பக்தி படம் தான் தெய்வம்.முழு நீள வண்ணப்படமாக இதனை அவர் தயாரித்தார்.


படத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்திருந்த போதும் படத்தின்

கதாநாயகன் முருகப் பெருமான்தான்.ஆறு படை வீடுகளில் குடிகொண்டிருக்கும் முருகனை சுற்றியே படத்தின் கதை அமைக்கப் ப ட்டிருந்தது.சுவாமிமலை,பழனி,திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர்,திருத்தணி ஆகிய ஐந்து கோயில்களுடன் தன் மனதுக்கு பிடித்த மருதமலையையும் சேர்த்து ஆறு கோவில்களில் படப்பிடிப்பை நடத்தியிருந்தார் தேவர்.ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை மட்டும் படத்தில் இடம் பெறவில்லை.அதற்கு பதில் மருதமலை இடம் பெற்றது.

படத்தை தயாரித்த தேவரே படத்தின் கதையையும் எழுதி,வசனங்களையும் எழுதியிருந்தார்.தன்னுடைய சொந்த வாழ்வில் இடம்பெற்ற சில சம்பவங்களையும் படத்தின் கதையில் சேர்த்திருந்தார் தேவர்.கோயிலை கொள்ளையடிக்க வந்தவன் முருகன் அருளால் திருந்தி திருப்பணியில் ஈடுபடுவது,பிரிந்த கணவன் மனைவி இருவரும் கந்தன் கருணையால் இணைவது,பண மோசடி செய்த நண்பனை வேல்முருகன் நீதிமன்றத்தில் சிக்க வைப்பது,கொள்ளை போன நகைகளை மால்மருகன் மீட்டுத்தருவது,கடன் தொல்லையில் மாட்டிக் கொண்ட நாஸ்திகனுக்கும் சண்முகப் பெருமான் அருள்வது,திருவிழாவுக்கு வந்த பக்தையை பாலியல் வல்லுறவில் இருந்து வேலவன் காப்பது என்று ஆறு விதமான கதைகளை சுவாரசியமாக அமைத்திருந்தார் தேவர்.

படத்தின் ஆரம்பத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் தோன்றி ஒவ்வொரு கதையாகத் தொடங்க அது படமாக விரிகிறது.படத்தில் ஜெமினி,ஏ வி எம் ராஜன்,சௌகார்ஜானகி,சுந்தரராஜன்,சிவகுமார்,ஜெயா,ஸ்ரீகாந்த்,கே ஆர் விஜயா,நாகேஷ்,தேங்காய் சீனிவாசன்,என்று பலர் நடித்திருந்தார்கள்.இவர்கள் போதாதென்று அசோகன்,மனோகர்,ராமதாஸ்,கே கண்ணன்,என்று வில்லன் நடிகர்களையும் படத்தில் சேர்த்திருந்தார் தேவர்.

இரட்டைக் குடியுரிமையும் இரட்டை வேடமும் ! அவதானி


இந்தப்பதிவை எழுதுவதற்கு முன்னர், ஒரு குட்டிக் கதையை சொல்லிவிடலாம் போலத்தோன்றுகிறது.

இக்கதை முகநூல் சம்பந்தப்பட்டது.  இதனை எழுதும் தருணத்தில் தமிழ்நாடு சன் தெலைக்காட்சிக்காக பேராசிரியர் சலமன் பாப்பையாவின் தலைமையில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

செல்ஃபோனால், நன்மையா தீமையா..? என்பதுதான் தலைப்பு.

அதுபோன்று முகநூலினால் நன்மையா ? தீமையா..? என்றும்


இரட்டைக் குடியுரிமையால் நன்மையா..? தீமையா..? என்றும் பட்டிமன்றங்கள் நடத்தலாம்.

இனி,  சொல்லவேண்டிய குட்டிக்கதைக்கு வருகின்றோம்.

ஒரு  தமிழ் அன்பர், இலங்கையில் நீடித்திருந்த போர் நெருக்கடியினால்,  ஒரு ஏஜன்ஸி மூலம் நாட்டைவிட்டுச்சென்று,  வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்தார். அங்கு அகதியாக விண்ணப்பித்தார்.   அங்கிருந்த குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து, நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர் மனிதாபிமான அடிப்படையில் நிரந்தர வதிவிட அனுமதியை வழங்கியது. அதனை வைத்துக்கொண்டு அவர் கடுமையாக உழைத்து முன்னேறினார். புகலிடம் தந்த  நாட்டுக்கும் வரிசெலுத்தினார்.


சில வருடங்களில் அந்த நாட்டு குடியுரிமையும் பெற்று, அந்த நாட்டு கடவுச்சீட்டும் பெற்றார்.  தன்னால் இனிமேல் எந்த நாட்டில் வாழமுடியாது என்று முதலில் சொன்னாரோ, அதே தாய் நாட்டிற்கும் , அந்த புதிய கடவுச்சீட்டின் மூலம்  வந்து திரும்பினார்.

நீடித்த போர் முடிவுக்கு வந்ததும், இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என கருதியதும், பெருந்தொகை பணத்தையும் அதற்காக செலவிட்டு, இரட்டைக் குடியுரிமையும் பெற்றுக்கொண்டார்.

அதனால் அவருக்கு பல நன்மைகள் விளைந்தன.  வெளிநாட்டு குடியுரிமையுடன் தாயகம் சென்றால் ஒரு மாதம்தான் விசா தருவார்கள். இரட்டைக் குடியுரிமையுடன் சென்றால், கூடுதல் மாதம் நின்று திரும்பலாம். இலங்கை குடிவரவு திணைக்களத்திற்கும் கட்டணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. 

மற்றும் ஒரு தடவை அந்த இரட்டைக்குடியுரிமை பெற்ற அன்பர் தாயகம் சென்றார். அவரது நண்பர் ஒருவர் ஒரு உல்லாசப்பயணிகள் தங்குமிட விடுதி கட்டி முடித்து, அதன் திறப்புவிழாவுக்கு குறிப்பிட்ட இரட்டைக்குடியுரிமை பெற்ற அன்பரையும் அழைத்தார். அந்த விழாவின்போது எடுத்துக்கொண்ட படங்களை தனது முகநூலில் பதிவேற்றினார் இந்த அன்பர்.

அதனை வெளிநாட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த அன்பரின் நண்பர் ஒருவர், இவ்வாறு தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

 “ வாழ்த்துக்கள். தாய் நாட்டில் வாழ முடியாது என்று வெளிநாட்டுக்கு அகதியாக வந்து, நிரந்தர வதிவிட உரிமையும் பெற்று, அதன் பிறகு குடியுரிமையும் பெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் தாயகம் சென்று திரும்பி, இரட்டைக்குடியுரிமையும் பெற்ற பின்னர், மீண்டும் சென்று வெளிநாட்டில் தேடிய சொத்துக்களின் வருமானத்தின் மூலம் ஊரில் உல்லாசப் பயணிகள் விடுதியும் கட்டிவிட்டு, அதற்கு முன்னால் நின்று போஸ் கொடுக்கிறீரா..? 

இதற்குப்பின்னர் என்ன நடந்திருக்கும்… ? அந்த அன்பர், இவ்வாறு எள்ளி நகையாடிய நண்பரை தனது முகநூலிலிருந்து நீக்கி, முடக்கிவிட்டார்.

இனிச்சொல்லுங்கள்:  முகநூல் நன்மையா..? தீமையா..?

இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட 22 ஆவது அரசியல் திருத்தச்சட்டத்திலும் உறை பொருளாகவும் மறை பொருளாகவும் இருப்பதும் இந்த இரட்டைக் குடியுரிமை விவகாரம்தான்.

ஜனாதிபதியிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை குறைப்பதற்கு இதுவழிசெய்யுமா..? இல்லையா..? என்பது ஒரு புறமிருக்க, பஸில் ராஜபக்‌ஷ மீண்டும் இலங்கை அரசியலுக்குள் தீவிரமாக பிரவேசித்துவிடுவாரா..?  இல்லையா…? என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

இது இவ்விதமிருக்க, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  இந்த விவாதத்தில் கலந்துகொள்ளவும் இல்லை. வாக்களிக்கவும் இல்லை.

போதைப்பொருள் குற்றங்களை ஒழிக்க தீவிர நடவடிக்ைக தேவை

 Saturday, October 29, 2022 - 6:00am



நாட்டில் போதைப்பொருள் கடத்தலையும் பாவனையையும் முடிவுக்குக் கொண்டுவருவதென்பது இலகுவான காரியமல்ல. போதைப்பொருளுக்கு எதிரான சட்டம் இலங்கையில் மிகக் கடுமையாக்கப்பட்டிருக்கின்றது. போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுகின்ற தண்டனையும் மிகக் கடுமையானது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையில் ஈடுபடுவோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு நீதிமன்றங்களினால் ஆயுட்காலச்சிறைத் தண்டனையோ அல்லது மரணதண்டனையோ தீர்ப்பாக வழங்கப்படுவதையும் நாம் அறிகின்றோம்.

தண்டனைகள் கடுமையானதாக இருந்த போதிலும், போதைப்பொருள் சம்பந்தமான குற்றங்கள் இன்னுமே முடிவுக்கு வருவதாக இல்லை. போதைவஸ்து கடத்தல்களும் அதன் பாவனைகளும் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தபடியே உள்ளன. போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவதும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.

கிழக்கின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் போதைப்பொருள் குற்றங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருட்கள் அங்கு அடிக்கடி கைப்பற்றப்படுகின்றன. விற்பனையாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பிரதேசங்களுக்கு போதைப்பொருட்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

இலங்கைச் செய்திகள்

வடக்கில் திடீரென அதிகரித்த போதைப் பொருள் பாவனை

தனுஷ்கோடியில் மேலும் 07 இலங்கையர் தஞ்சம்

இலங்கையின் நிலைமை மேலும் மோசமடையலாம்

குருந்தூர் மலை- வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் சுமுக தீர்வு

தமிழ் தரப்புகளை ஒன்றுபட அமைச்சர் டக்ளஸ் அழைப்பு


 வடக்கில் திடீரென அதிகரித்த போதைப் பொருள் பாவனை

தீவிர கவனம் செலுத்தி கடும் நடவடிக்கைக்கு டக்ளஸ் வலியுறுத்து

வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்குமாறும் கோரிக்ைக

வடக்கில் போதைப் பொருள் பாவனை அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதால் அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக அவசரமாக சிந்திக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் அதி தீவிரமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றன. எனவே இது தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளதுடன் அவசியமான சட்ட ஏற்பாடுகள் குறித்தும் அவசரமாக சிந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகச் செய்திகள்

வெள்ளையர் அல்லாத, இந்து மதத்தை சேர்ந்த முதல் இங்கிலாந்துப் பிரதமராக ரிஷி சுனக்

இத்தாலியின் முதல் பெண் பிரதமரானார் மெலோனி

உலகின் மிக அபாயகரமான தசாப்தம்: புட்டின் எச்சரிக்கை

தென் கொரியா Halloween கூட்ட நெரிசலில் சிக்கி மரணித்த 151 பேரில் இலங்கையரும் ஒருவர்

ட்விட்டரை கைப்பற்றினார் மஸ்க்

ஈரான் ஷியா தலத்தில் தாக்குதல்: 15 பேர் பலி


வெள்ளையர் அல்லாத, இந்து மதத்தை சேர்ந்த முதல் இங்கிலாந்துப் பிரதமராக ரிஷி சுனக்

பிரிட்டனில் ஏழு வாரங்களில் மூன்றாவது பிரதமராக நேற்று (25) உத்தியோகபூர்வமாக பதவியேற்ற ரிஷி சுனக், தமக்கு முன்னிருந்தவர்கள் தவறுகளை செய்ததாகவும் நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர பாடுபடுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

பதவியில் இருந்த பிரதமர் லிஸ் டிரஸ் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்ததை தொடர்ந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் மாளிகையில் மூன்றாம் சார்ல்ஸ் மன்னரிடமிருந்து சுனக் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

சிட்னியில் இலக்கிய சந்திப்பு 05-11-2022 ஆவணப்படக்காட்சி - ஐந்து நூல்களின் அறிமுகம்

 அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், 


எதிர்வரும் 05 ஆம் திகதி  ( 05-11-2022 ) சனிக்கிழமை மாலை   4-00 மணிக்கு சிட்னியில் Toongabbie Community Centre (244 Targo Rd, Toongabbie NSW 2146 )  மண்டபத்தில்  நடைபெறவிருக்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு,  கலை, இலக்கிய ஆர்வலர்களையும் ஊடகவியலாளர்களையும்  சங்கம் அன்புடன் அழைக்கின்றது.

           இந்நிகழ்வு சங்கத்தின் உறுப்பினர்  சட்டத்தரணி கலாநிதி ( திருமதி )  சந்திரிக்கா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும்.

அண்மையில் இலங்கையில் மறைந்த மூத்த எழுத்தாளர்


தெளிவத்தை ஜோசப் அவர்களை நினைவுகூர்ந்து மௌனம் அனுஷ்டிக்கப்படும்.  அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் திருமதி கனகா. கணேஷின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்  சங்கத்தின் வரலாற்றுச்சுவடுகள் ஒளிப்படத் தொகுப்பும்  காண்பிக்கப்படும்.

                                         வாசிப்பு அனுபவப்பகிர்வு

மெல்பனில் மறைந்த வானொலி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ( அமரர் ) சண்முகம் சபேசனின்  காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்   ( கட்டுரைகள் )  நூல் பற்றி எழுத்தாளர் திரு.  ஐங்கரன் விக்கினேஸ்வராவும் -  நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின்  இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் ( கட்டுரைகள் )  நூல் பற்றி திரு.  திருநந்தகுமாரும் -  எழுத்தாளர் நடேசனின்  அந்தரங்கம்                 ( சிறுகதைகள்  )  நூல் பற்றி கவிஞர்  திரு. செ. பாஸ்கரனும் -  எழுத்தாளர் முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதை                  ( சிறுகதைகள் ) நூல் பற்றி எழுத்தாளர் திரு.  கானா. பிரபாவும் -  

கனடாவிலிருந்து வருகை தந்துள்ள எழுத்தாளரும் ஆசிரியருமான  ஶ்ரீரஞ்சனியின்   ஒன்றே வேறே                                             ( சிறுகதைகள் ) நூல் பற்றி கவிஞரும், வானொலி ஊடகவியலாளருமான சௌந்தரி கணேசனும் தத்தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பித்து உரையாற்றுவர்.

 நூல்களின் ஆசிரியர்கள் – வெளியீட்டாளர்களின் ஏற்புரையைத் தொடர்ந்து கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும்.

அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.  

                        atlas25012016@gmail.com

சிட்னி ஸ்ரீ துர்கா தேவஸ்தானம் வருடாந்த இரவு உணவு 05/11/2022

 


நவம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை: இனிய இலக்கிய சந்திப்பு 2022


 



அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினரால் சிறப்புற இவ் வருடம் நடாத்தப்படவிருந்த கம்பன் விழா ஒத்தி வைக்கப்பட் டு ள்ளன