தமிழ்முரசு வாசகர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 2012

.

தமிழ்முரசு வாசகர்களுக்கு இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 2012

ஆசிரியர்குழு

அதிரடிக்கும் தீபாவளி வாழ்த்து! --Dr பாலு விஜய்

.


பட்டாடை கண்ணில் பளபளக்க

பட்டாசுகளின் ஊர்வலத்தில்

பறித்திடும் வண்ணங்களில்

பரவசமாக்கும் இன்பத்தீபாவளி!

எண்ணங்களனைத்தும் நல்லவை நிறைய

வண்ணங்களாய் மத்தாப்பூக்கள் ஒளிர‌

சின்னத்தீபங்களில் சிரிக்குமின்பதீபாவளி!

காணும் மனிதரிடை கபட இருள் விலகிட‌

பேணும் மாந்தரிடை பேதங்கள் மறைந்து
பேரொளியாய் பெருமகிழ்வு நிறைந்திட‌

ஓரொளியாய் சிற்றகலில் சிறகடிக்கும் தீபாவளி!
ஒளியாய் நம்முள் ஒளிந்திட்ட தமிழே

ஒளிர்விளக்காய் என்றும் நீ ஒளிர்ந்திட

ஓயாமல் உழைத்து உலகத் தமிழரெல்லாம்

ஒன்றா(க்)கி உயர்சிகரத்தில் உனை ஏற்றும் நாள்

இன்றாகி நின்றால்

அன்றே எமக்கது
அதிர்வெடி தீபாவளி!

வாழ்த்திடும் அன்பன்..

Dr பாலு விஜய்

தமிழ் இலக்கிய பேரவை
சிட்னி!

பனைமரத்திடலும், பேய்களும் -

.


பள்ளிக்கூடு விடுத்துப் பறக்கும்
பால்யநாட்களின் பகற்பொழுதுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள் யாவும்
பயத்தால் பின்னிக்கொள்ளும்
பனைமரத்திடல் பார்த்தமாத்திரத்தில்! 
உச்சிப்பனையில் உட்கார்ந்திருக்கும் பேய்களுக்கு
உச்சிப்பொழுதே உகந்ததென்றும்
அச்சமயம் ஆங்கு நடமாடுவோரை,
கொடுங்கரங்களால் பாய்ந்து பற்றி,
கோரைப்பல்லால் கவ்விக்கொல்லுமென்றும்
பலியானவரில் ஒருவர்
தன் பக்கத்து வீட்டு மாமாவென்றும்
விழிவிரிய பாக்கியலட்சுமி சொன்னதெல்லாம்
வழித்துணையாய் வந்து பாடாய்ப்படுத்தும்.

அதிசயம் மிக்க அற்புதமான பரதநாட்டிய அரங்கேற்றம்.


.


அண்மையில் மெல்பேணில் நடைபெற்ற செல்வி சக்தி ஐஸ்வர்யா கண்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் அதிசயம் மிக்கதோர் அற்புத நிகழ்ச்சியாகப் பார்வையாளர்கள் அனைவரையும் பரவசம் கலந்த வியப்பில் ஆழ்த்தியது. செல்வி சக்தி கண்ணன் மூன்றுவயதிலிருந்தே பரதநாட்டியத்தை முறையாகக் கற்று வருபவர். இப்பொழுது பத்து வயது நிரம்பிய சக்தி கடந்த ஏழாண்டுகளாக பரத நாட்டியத்தில் இடைவிடாத பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்.

கடந்த 2012 ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி, மொனாஸ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள விசாலமான, றொபேட் பிளெக்வூட் மண்டபத்தில் அவரது பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. பரதசூடாமணி இந்திய நடனக் கல்லூரியின் இயக்குனரான திருமதி நர்மதா ரவிச்சந்திராவின் மாணவியான சக்தியின் அரங்கேற்றத்திற்கு வந்திருந்த ஏறத்தாழ ஆயிரம்  பார்வையாளர்களால் மண்டபம் நிரம்பிவழிந்தது. மெல்பேணின் பெரும்பாலான பகழ்பெற்ற நடனப்பள்ளிகளின் ஆசிரியைகளும், மற்றும் நுண்கலைப் பள்ளிகளின் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்தனர்.



சமயச் சொற்பொழிவு - பேராசிரியர் அ சண்முகதாஸ்


இலங்கைச் செய்திகள்

.
புத்தர் சிலை அமைப்பதற்கு காணி அளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை
1984ஆம் ஆண்டிற்குப்பின் இலங்கை-சியோலிற்கு இடையில் விமான சேவை
நாட்டை வந்தடைந்தனர் 30 புகலிடக்கோரிக்கையாளர்கள்
ஆலயக் காணியை ஊடறுத்து பலாத்காரமாக வீட்டுக்குப் பாதை அமைத்த காவல்துறை அதிகாரி

வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 27 பேர் பலி: அமைச்சர் சந்திரசிறி கஜதீர

புத்தர் சிலை அமைப்பதற்கு காணி அளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை

 
மன்னார் திருக்கேதிஸ்வர ஆலய சூழலில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தனியார் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்கான ஏனைய கட்டுமானப்பணிகள் பலரது எதிர்ப்பினால் தடைப்பட்டது.

இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து காணியை அளவீடு செய்து புத்தர் சிலை அமைப்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோறி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மதம் பௌத்த மதம் என்பதினால் அவற்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது எனவும், நடு நிலமையாக அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி



சைவமன்றம் வழங்கும் திருப்புகழ் விழா 17 .11 .12

.

நீ, நான், நேசம் --- எம்.ரிஷான் ஷெரீப்,

.
(சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை)
நிவேதாவிற்கு,


எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. முடியவில்லை என்பதனை விடவும் இயலவில்லை என்ற சொல்லே சாலச் சிறந்தது.


சொல்ல மறந்த கதைகள் -20 பெரியம்மா முருகபூபதி – அவுஸ்திரேலியா

.

ஈழத்தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வழக்கமாகச்சொல்லப்படும் ஒரு வார்தைப்பிரயோகம் இருக்கிறது.
“சும்மா பேக்கதை கதையாதை...”
இந்தப்பேச்சுவழக்கு தமிழகத்திலிருக்கிறதா என்பது தெரியவில்லை.
அதென்ன பேக்கதை?
பேய்க்கதைதான் காலப்போக்கில் பேக்கதையாக மருவியதா? “பேயன்” என்ற சொல்லும் எம்மவரிடம் வழக்கத்திலிருக்கிறது. சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானை ‘பித்தா’ என விளித்து தேவாரம் பாடினார்.
பித்தன் - பேயன் இரண்டு சொல்லும் ஒரே கருத்தைக்கொண்டவையா? என்பதை தமிழ்கற்றுத்தேர்ந்த பண்டிதர்கள்தான் சொல்லவேண்டும்.
பேய்க்கதைகள் தமிழர்களிடம் மட்டுமல்ல மேநாட்டினரிடமும் ஏராளம் இருக்கின்றன. ஊடகங்கள் திரைப்படங்களும் பேய்க்கதைகளுக்கு நல்ல களம் கொடுத்துள்ளன. இரவில் தொலைக்காட்சிகளில் பேய்க்கதைகளை ஆவியுலகக்கதைகளைப்பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதன்பின்பு சில நாட்களுக்கு இரவில் தனியே உறங்குவதற்கும் பயப்படுவார்கள். பேய்கதைகளைக்கொண்ட திரைப்படங்களை கண்டுகளிப்பதும் ஒருவகையில் திகில் அனுபவம்தான். திரில்லர் படங்கள் அத்தகைய அனுபவங்களை தரவல்லவை.

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு “பனையோ பனை”




ஞானா:       
என்ரை அப்பாவை மடக்கவே முடியாமல் இருக்கு. திருக்குறளிலை எதைக் கேட்டாலும் ஏதாவது மறுமொழி சொல்லித் தப்பியிடுறார். இன்டைக்கு ஆளை மடக்காமல் விடுகிறேல்லை.

அப்பா:       
என்ன ஞானா மடக்கிறது,  நீட்டிறுது எண்டு உன்ரை பாட்டிலை கதைக்கிறாய்?

ஞானா:       
அது வந்தப்பா பனைமரம் இருக்கெல்லே……..

அப்பா:       
பனைமரம் இருக்கேல்லை ஞானா, பனைமரம் நிக்குது. இலங்கையிலை,   யாழ்ப்பாணம்
        மன்னார்,  மட்டக்களப்பு எண்ட இடங்களிலை பனை மரம் நிறைய நிக்குது.

இனிய தீபாவளி சந்திப்பு 17.11.2012




சுதந்திரம் - செ.பாஸ்கரன்

.




மனிதர்கள் எல்லோருமே எதிர்பார்ப்பது இதைத்தான். வடிவத்தில் தேவையில் மாறுபாடு இருந்தாலும் முடிவு ஒன்றுதான் அதுதான் சுதந்திரம். பத்திரிகைச் சுதந்திரம்  பத்திரிகைச் சுதந்திரம் என்று அடிக்கடி பேசக்கேட்டிருக்கிறோம். அது இல்லாத நாட்டில் நியாயமான ஆட்சி இல்லை என்பதுதான் கருத்தாக இருக்கமுடியும். நமக்கு சுதந்திரம் இல்லை என்று எழுதக்கூட முடியாத காலம் இடம் என்பன இருந்ததென்பதும் மறுக்கப்படமுடியாத கசப்பான உண்மைதான்.

நான் இங்கு கூறவருவது தமிழ்முரசுஒஸ்ரேலிய வாசகர்களுக்கு கொடுத்திருந்த கருத்துப்பதியும் சுதந்திரமும் அது பின் தடுக்கப்பட்டதைப்பற்றியும்தான்.  ஒரு கட்டுரை பற்றியோ அல்லது நிகழ்வு பற்றியோ  எழுதப்படும்போது அதற்கான கருத்துக்கள் பதியும் உரிமையை முழுதாக வாசகர்களுக்கு வழங்கியிருந்தது தமிழ்முரசுஒஸ்ரேலியா. ஆனால் தனிப்பட்ட குரோதம் போட்டி மனப்பான்மை போன்றவற்றால் நாகரிகம் அற்ற முறையிலும் ஒரு நபரை தூற்றியும் கருத்துப்பதிவுகளை சிலர் முன்வைத்த காரணத்தால் வாசகர்களுக்கான அந்த சுதந்திரம் வேதனையோடு நிறுத்தப்பட்டது. கருத்துக்கள் கட்டுரையின் அல்லது நிகழ்வின் கருத்திற்கு வித்தியாசமான கருத்துக்கள் இருந்தால் அதை தெளிவாக முன்வைப்பதுதான் நாகரிமான நாம் வாழும் நாட்டின் பண்பாடு. இதை விடுத்து மறைந்திருந்து கொண்டு அநாகரிகமாக எழுதுவது நல்ல கருத்தைப் பதியும் வாசகர்களின் சுதந்திரத்தையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.

இலங்கை வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிசார்-கைதிகள் மோதல்-வீடியோ

.




காம சக்தி - சி. ஜெயபாரதன், கனடா


.



பூக்கும் மலரில் பொங்கும் தேனது !

ஆக்கும் சக்தி ! ஆத்மாவின் சிறகு !

அளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி !

கவரும் சக்தி காந்தம் போல !

துருவம் இரண்டு ஆண்மை, பெண்மை !

ஆண்மை பாதி ! பெண்மை மீதி !

ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !

பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !



வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !

ஈரினம் இணைந்து பூரணம் அடைவது

மனித நியதி ! மானிட வளர்ச்சி !

காமம் உடற்கு கவின்தர வல்லது !

மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,

முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,

காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !

உலகச் செய்திகள்

.
சிரியாவில் கார் குண்டு தாக்குதல்: 50 பேர் பலி

'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு சிறை

குவாதமாலாவில் நிலநடுக்கம்: 49 பேர் பலி

சோமாலியாவில் முதற் தடவையாக பெண் வெளிநாட்டமைச்சர் நியமனம்

சிரியாவில் கார் குண்டு தாக்குதல்: 50 பேர் பலி

இத்தாக்குதலில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்த போதிலும் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள இராணுவ இலக்கொன்றின் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.




மேலும் தலைநகர் டமஸ்கசில் அரசின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள மேற்குப்பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு கார்குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எம் ஆர் ராதாவின் இந்திய நடனம் Vs ஆங்கிலேய நடனம்-வீடியோ

.


Nantri:sinnakuddy1.blogspot.com

கணக்கு வழக்கு

.
புத்தரைப் பார்க்க வந்த ஒருவன் திடீரென அவர் முகத்தில் உமிழ்ந்து விட்டான். புத்தரும் முகத்தைத் துடைத்தவாறு,''அப்பனே,வேறு என்ன சொல்ல விரும்புகிறாய்?''என அமைதியாகக் கேட்டார்.அவனுடைய அவமாரியாதைக்கு  எதிர் செயல் ஏதும் இல்லாது அவர் முகம் அமைதியாக இருப்பதைக் கண்ட அவனுக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டது.அவன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி விட்டான்.அன்றிரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை.

அவன் கொடுத்த அவமரியாதை அவனுக்கே திரும்ப வந்து விட்டதாய்  அவன் உணர்ந்தான்.நடந்ததை  அவனால் நம்ப முடியவில்லை.நீண்ட யோசனைக்குப் பின் தன்  தவறை அவன் உணர்ந்தான்.மறு நாள் அவன் நேரே புத்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.

புத்தர் சொன்னார்,''அதைப் பற்றி கவலைப் படாதே.இதற்கு முன் எப்போதோ உனக்கு ஏதோ தீங்கு நான் இழைத்திருக்க வேண்டும்.இப்போது அந்தக் கணக்கு சரி செய்யப்பட்டு விட்டது.அதனால் நீ செய்ததற்குப் பதிலாக  நான் ஏதும் செய்யப் போவதில்லை. நான் ஏதேனும் பதிலுக்கு செய்தால் நம் கணக்கு முடியாது தொடர்ந்து கொண்டே போகும்.

நான் கணக்கை முடித்து விட்டேன்.”

நன்றி:தென்றல்.

"மயக்கமென்ன" எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை!!

.

ன் மூளைக்குள் முதன்முதலில் முளைத்த ஆசையின் சிறகு அதுதான் ‘சித்திரம்’ வரைவது. ஓவியம் தீட்டுவது. காட்சிகளில் பிடித்ததை அப்படியே வண்ணம் மாறாமல் பதிந்துக்கொள்வது. பொதுவாக, பிடித்ததை வரைந்து தன் மனதின் ஈர்ப்பினை பிற்கலத்திற்காய் பதிவுசெய்துக்கொள்வதும், புகைப்படமாக எடுப்பதும், அன்றைய நாட்களின் சாதனைகளாக விளங்கிய சமையமது. அதை அந்த புகைப்பட ஆசையை மணல் கொட்டிப் புதைத்துவிட்ட பல கற்பனை மற்றும் லட்சியக் கனவுகளுக்கு அடியிலிருந்துப் பிடுங்கியெடுத்து ஒரு திரைப்படத்திற்குள் திணித்துக் கொண்டது இந்த “மயக்கமென்ன” திரைப்படம்.
உண்மையில், இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கையில், தனுஷை நேரில் பார்த்து எனக்கு கொஞ்சம் நட்பு பகிர்ந்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது. மனசின் கோணங்கள் திரு. செல்வராகவனுக்கு வசியப் பட்டிருப்பதை தனுஷால் மட்டுமே உதிரநெருக்கத்தின் காரணமாக முழுமையாக உள்வாங்கிக் கொள்ளமுடிகிறது. மனதின் அசட்டுத்தனம், உணர்வுகள் இடரும் போக்கு, கண்களின் வழியே குருதி புகும் ஆசையின் கயமைத்தனம் போன்றவைகளை செல்வராகவனால் சொல்லப்படும் அளவிற்கு தனுஷால் மட்டுமே ஏற்று நடித்து அதில் வெல்லவும் முடிகிறது.

சிறுவர்களுக்கான பாடல்கள்

.
1. சாய்ந்தாடுதல்



சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு

சாயக் கிளiயே சாய்ந்தாடு

அன்னக் கிளiயே சாய்ந்தாடு

ஆவாரம் பூவே சாய்ந்தாடு

குத்து விளக்கே சாய்ந்தாடு

கோயில் புறாவே சாய்ந்தாடு

மயிலே குயிலே சாய்ந்தாடு

மாடப் புறாவே சாய்ந்தாடு



சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு

தாமரைப்பூவே சாய்ந்தாடு

குத்து விளக்கே சாய்ந்தாடு

கோயிற் புறாவே சாய்ந்தாடு

பச்சைக்கிளiயே சாய்ந்தாடு

பவழக்கொடியே சாயந்தாடு

சோலைக் குயிலே சாய்ந்தாடு

சுந்தர மயிலே சாய்ந்தாடு

கண்ணே மணியே சாய்ந்தாடு

கற்பகக் கொடியே சாய்ந்தாடு

கட்டிக் கரும்பே சாய்ந்தாடு

கனியே பாலே சாய்ந்தாடு.

அவிசாவளையில் சீதை சிறையிருந்த மலைக் குகை

.








பெறுமதிமிக்கதும், போற்றத்தக்கதுமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அவிசாவளை நகரம் சீதாவக்க அல்லது சீதாவக்கபுரம் என அழைக்கப்படுகின்றது. ஏ4 வீதியில் கொழும்பிலிருந்து 54 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் எல்லைகளில் அமைந்துள்ளதுடன் மலைநாட்டிற்கான நுழைவாயிலாகவும் திகழ்கின்றது. இன்றும் அவிசாவளை நகரத்தின் நிர்வாகம் சீதாவக்கபுர எனும் பெயர் கொண்ட உள்ளூராட்சி சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது.
சீதாவக்க மற்றும் சீதாவக்கபுரம் எனும் பெயர்கள் அதுவும் சீதையுடன் தொடர்புபட்ட பெயர்கள் இந்த நகரத்திற்கு வருவதற்கு காரணம் என்ன என ஆராய்த போது பல்வேறு விதமான ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இவை யாவும் இப்பகுதியில் வாழும் பிரதேச மக்களின் நம்பிக்கைகளாகவும் உறுதிப் படுத்தப்படாதøவகளாகவுமே காணப்படுகின்றன.
நகரின் மத்தியில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கும் அவிசாவளை அரச தங்குவிடுதிக்கும் இடையில் சீதாöலன என்னும் வீதி ஏ4 வீதியில் இருந்து பிரிந்து செல்கின்றது. மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இந்த வீதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்யும் போது வீடொன்றில் இந்த வீதி முடிவடைகின்றது. வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு, வீட்டின் முற்றத்தையடுத்திருக்கும் படிகளினால் பள்ளத்தாக்ககொன்றினுள் இறங்கிச் சென்றால் சீதை ஒழித்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் குகையொன்று காணப்படும். குன்றின் அடிப்பகுதியை அடைய முடியும். 
சாதாரணமாக குகையொன்றை எடுத்துக்கொண்டால் குகையின் மேற்பகுதியின் கற்பாறையிலிருந்து நீர் ஊற்றாக ஓடிக்கொண்டோ அல்லது சொட்டுசொட்டாக ஒழுகிய வண்ணமே இருக்கும். இங்கிருந்து பார்க்கும் போது குகை பற்றைச் செடிகளினால் மறைபட்டிருந்தாலும் தண்ணீர் குகையின் உட்பகுதிக்குள் செல்லாதிருப்பதற்காக பாறையின் மேற்பகுதியில் நீர் குகைக்குள் வருவதை தடைசெய்யும் வகையில் பொழியப்பட்டிருக்கும் பண்டைக் கால வடிகாலமைப்பைக் காணலாம்.
இங்கிருந்து குகையின் உட்பகுதிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. எனவே எமக்கு வழிகாட்டியாக வந்த அவிசாவளை நகர இலக்கம் 432  கிராமசேவையாளர் கே. ஏ. டி. கிறிஷ்டி ஜெயந்த என்பவரின் முயற்சியினால் வேறொரு பாதையால் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குகையின் உட்பகுதியை சென்றடைய முடிந்தது.

உங்களை நாடி வந்துள்ளது புரட்சி FM

.
www.Puradsifm.com வானொலியை   கேட்க  இங்கே  அழுத்தவும் 





வெற்றிக் களிப்பில் ஒபாமா

08/11/2012
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் சிகாகோ நகரில் ஒபாமா உரை நிகழ்த்தினார்.


-

தமிழ் சினிமா

.
கிருஷ்ணா இயக்கும் "நெடுஞ்சாலை"

சூர்யா- ஜோதிகா நடித்து வெற்றி பெற்ற ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கியவர் கிருஷ்ணா.
இவர் அடுத்ததாக பைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன், ஆஜு இருவரும் இணைந்து தயாரிக்கும் "நெடுஞ்சாலை" படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆரி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஷிவதா நடிக்கிறார்.
இவர்களுடன் கண்ணன் பொன்னையா, தம்பி ராமய்யா, பிரசாந்த் நாராயணன் சலீம்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தினைப் பற்றி இயக்குனர் கிருஷ்ணா, படப்பிடிப்புகள் பெரும்பகுதி முடிவடைந்துவிட்டாலும் தற்போது தேனி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சாலையோர மக்களின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
வசனம்- ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவு- ராஜவேல், இசை- சி.சத்யா எங்கேயும் எப்போதும் படத்திற்கு இசையமைத்தவர். கலை- சந்தானம், எடிட்டிங்- கிஷோர், நடனம்- நோபல், ஸ்டன்ட்- லிலீப் சுப்பராயன், பாடல்கள்- கார்த்திக் நேத்தா, மணி அமுதன், தயாரிப்பு மேற்பார்வை- கண்ணன், தயாரிப்பு- சௌந்தர்ராஜன், ஆஜு, கதை, திரைக்கதை, இயக்குனர்-கிருஷ்ணா.
நன்றி விடுப்பு 



MailPrint
புதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் மாசி திருவிழா

பெரியசாமி மூவி மேக்கர்ஸ் மற்றும் சசிகலா சினி மேக்கர்ஸ் என்ற இரு பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் மாசி திருவிழா.
இந்த படத்தில் கதாநாயகர்களாக விதுன், சதிஷ் இருவரும் நடிக்கிறார்கள், கதாநாயகியாக பானுஸ்ரீ, பாலமீனா நடிக்கிறார்கள்.
இவர்களுடன் சசி, கோவை சரளா, அருள் குமார், கலை கோமதி, தாஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட தன் தாயார் எப்படியெல்லாம் பாலியல் தீதியாக துன்புறுத்தப்பட்டார், என்ன மாதிரியான துன்பத்திற்கு ஆளானார் என்பதை சிறுவன் ஒருவன் பார்த்து வளர்கிறான்.
இவன் வளர்ந்து பெரியவனான பிறகு அதே மாதிரி மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.
இந்த பெண்ணும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் போது, எதிரிகளை எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதை.
கோவை, நாமக்கல், கரூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவு: சீன ஆதித்யா.
இசை: காந்திதாசன்.
எடிட்டிங்: பன்னீர்- சங்கர்.
நடனம்: திருமுருகன்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்: E.K.சேகர்.
இணை தயாரிப்பு: கோவை பாலு.
தயாரிப்பு: D.R.G.அருள்குமார்- K.சேகர்.
 நன்றி விடுப்பு  






அஜ்மல் நடிப்பில் வெற்றிச் செல்வன் டிரைலர்

அஜ்மல் நடிப்பில் உருவாகியிருக்கும் வெற்றிச் செல்வன் படம், சமூகத்தில் மனநோயாளிகளின் நிலையை விளக்குவதாக அமைந்துள்ளது.
கோ வெற்றிக்கு பின்னர், அஜ்மல் நீண்ட நாட்களாக இப்படத்தில் நடித்து வந்தார்.
இந்தியாவில் அதிமுக்கிய பாதுகாப்பற்ற இடங்களான காஷ்மீரின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
மன நோயாளிகளின் நிலையை சித்தரிக்கும் படமாக உருவாகியுள்ள வெற்றிச் செல்வனில் ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
குன்னூர் படப்பிடிப்பில் குளிர் தாங்கமுடியாமல் மயங்கி விழுந்ததும் காஷ்மீரில் படப்பிடிப்புகள் நடந்த சமயம் ராதிகா ஆப்தேவை ரசிகர்கள் புகைப்படமெடுக்க சில பிரச்சினைகள் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
படத்திற்கான இசையும் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.       நன்றி விடுப்பு