அழகான ஆலமரம்
கிளைவிட்டு நின்றதங்கே
விழுதெல்லாம் விட்டுஅது
வேரோடி நின்றதங்கே
ஆலமர நிழல்தேடி
அனைவருமே வருவார்கள்
வேலையில்லா நிற்போரும்
விரும்பி வந்திருப்பார்கள்
காலைமாலை என்றின்றி
காளையரும் வருவார்கள்
சேலையுடன் பெண்கள்வந்து
சிரித்து விளையாடிடுவர்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 02/11/2024 - 08/12/ 2024 தமிழ் 15 முரசு 34 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
அழகான ஆலமரம்
கிளைவிட்டு நின்றதங்கே
விழுதெல்லாம் விட்டுஅது
வேரோடி நின்றதங்கே
ஆலமர நிழல்தேடி
அனைவருமே வருவார்கள்
வேலையில்லா நிற்போரும்
விரும்பி வந்திருப்பார்கள்
காலைமாலை என்றின்றி
காளையரும் வருவார்கள்
சேலையுடன் பெண்கள்வந்து
சிரித்து விளையாடிடுவர்
மின்னஞ்சல் யுகம் வந்த பின்னர் காகிதமும் பேனையும் எடுத்து
அப்பொழுது நான் இந்த உலகத்தையே எட்டிப்பார்க்கவில்லை.
ஆயுதம் ஏந்திப்போராடிய
தமிழ், சிங்கள இயக்கங்களும் அரசியல் ரீதியாக தமது இனத்திற்கு விடிவைத் தேடித் தருவதற்காகவே
அவ்வாறு ஆயுதம் ஏந்தியதாகச் சொன்னாலும், ஆளும்
அதிகார வர்க்கத்தினால்தான் அடக்குறைக்கு ஆளாகின. ஆனால், இவ்வியக்கங்கள் தமது இயக்க உறுப்பினர்களினால், நீதிமன்றத்தை
நாடவில்லை.
தம்மிடமிருந்த
ஆயுதங்களினாலேயே தீர்வுகளை கண்டடைய முற்பட்டனர். இவர்களுக்கு நீதிச்சட்டங்களில் நம்பிக்கை
இருக்கவில்லை. ஆயுதங்களை மட்டுமே நம்பினர் !
சமகாலத்தில், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், தமிழரசுக்கட்சியும்,
இந்தப்பின்னணிகளுடன்தான், தமிழ்த்தேசிய விடுதலைக்கு ஆயுதப்போராட்டம்தான் தீர்வு,
என்ற நோக்கத்தை இலக்காகக்கொண்டிருந்த ஈ.பி. டி. பி, ஈ.பி. ஆர். எல். எஃப், புளட், டெலோ,
ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பி,
தேர்தல்களிலும் போட்டியிடத் தொடங்கின.
1971 இல் நடந்த
ஏப்ரில் கிளர்ச்சியை முன்னெடுத்த மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே. வி. பி. இயக்கமும்
அக்காலப்பகுதியில் தடைசெய்யப்பட்டு, பொது மன்னிப்பின்பேரில் அதன் முக்கிய தலைவர்கள்
1977 இல் சிறையிலிருந்து விடுதலையாகி, மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைபோன்று எழுந்து, ஜனநாயக
வழிக்குத் திரும்பி தேர்தல்களிலும் ஈடுபட்டு, 1983 ஆம் ஆண்டு அன்றைய ஜே. ஆர். ஜெயவர்தனாவின் ஐ.
தே. க. அரசின் பதவிக் காலத்தில் மீண்டும் தடைசெய்யப்பட்டது, 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து
கிளர்ச்சிகளை நடத்தியதையடுத்து, இவ்வியக்கத்தினர்
கொடுரமாக அழிக்கப்பட்டனர்.
அதன் தலைவர்கள்
ரோகண விஜேவீரா, உபதிஸ்ஸ கமநாயக்க, சாந்த பண்டார, மாரசிங்க உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
சகோதர தமிழ்
விடுதலை இயக்கங்களை கொன்றழித்துவிட்டு, ஈழத்தமிழ்
மக்களின் ஓரே ஒரு பேரியக்கம் தமது தமிழ் ஈழவிடுதலைப்புலிகள்தான் என்று பல ஆண்டுகளாக
வடக்கினையும் கிழக்கினையும் தங்கள் கட்டுப்பாட்டிலும் - தென்னிலங்கையை பதட்டத்திலும்
வைத்திருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனது போராட்டமும்
கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.
கடந்த பதினைந்து
ஆண்டு காலமாக தங்கள் தமிழ்த்தேசியத்தலைவர் மீண்டும் வருவார்… என்று அவரது விசுவாசிகள்
பலர் இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் தேசங்களிலும் நம்பிக்கொண்டிருந்த பின்னணியில்,
அந்தத்தலைவரின் மூத்த சகோதரர் மனோகரன்,
இறுதிக்கட்டப்போரில் தனது தம்பி பிரபாகரனும், அவரது குடும்பத்தினரும் இறந்துவிட்டனர்
எனவும், அதற்காக வீரவணக்கம் செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முப்பது ஆண்டுகாலப் போருக்குப்பின்னர், பதினைந்து ஆண்டு காலம் மற்றும் ஒரு போரினை தமிழின பற்றாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்தும் நடத்தி வருகிறார்கள்.
உலக சைவப்பேரவை (அவுஸ்திரேலியா) வாரந்தோறும் நடாத்தும் “சிவத்தோடு நாம்” திருமுறை பாராயணத்திபோது சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்திலன்று நடைபெற்ற சிறுத்தொண்ட நாயனார் குருபூசையை முன்னிட்டு திரு தெட்சணாமூர்த்தி சிவராமலிங்கம் அவர்கள் பகிர்ந்துகொண்ட சிறுத்தொண்டர் வரலாறும் அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியவற்றையும் இரண்டு பகுதிகளாக இங்கே தரப்பட்டுள்ளது.
பகுதி
- 1 சிறுத்தொண்டநாயனார் வரலாறு
ஓம் நமசிவாய
இவ்
ஊரிலே மாமாத்தியர் குலத்திலே *பரம்சோதியார்* (சிறுத்தொண்டர்) அவதரிக்கிறார்.
மாமாத்தியர் குலம் என்பது பூநூல் போட்டு ஆயுர்வேத வைத்தியம் செய்யும் இனம் ஆகும். இதனால்
இவர் இளமையிலேயே ஆயுர்வேதம், வடமொழி போன்றன பயின்றதுடன் வாள்வித்தை, குதிரையேற்றம் போன்ற போர்க்கலைகளையும், பிற போர்த்தந்திரங்களையும் பயின்றிருந்தார். இக்காலத்தில்
காஞ்சிபுரம் பல்லவ நாட்டின் தலைநகரமாக விளங்கியது. இதனை *நரசிம்மபல்லவ * மன்னன் ஆட்சிசெய்து வந்தார். இம்மன்னர் பரம்சோதியாரின் அறிவு, ஆற்றல், திறமைகளைப் பற்றி கேள்வியுற்றமையால் அவரை அழைத்து பல்லவநாட்டுப்
போர்ப்படைகளை தலைமையேற்று வழிநடத்தும்படி வினவினார். அதனால் அவருக்கு சகல வசதிகளும் செய்து
சேனாதிபதியாக (தளபதி) நியமனம் செய்தார். அதாவது சேக்கிழார் பெருமானுக்கு, அநபாயசோழன் மன்னனும், மாணிக்கவாசகப் பெருமானுக்கு, அரிமர்த்தனபாண்டிய
மன்னனும் செய்தது போன்று.
இந்நிலையில்
நரசிம்மபல்லவன் சிறுவனாக இருந்த போது அவர் தந்தை
மகேந்திர பல்லவ மன்னன் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின்
வடபகுதியான பம்பாய்க்கு அருகில் உள்ள பெல்ஹம் என்ற
பகுதியின் தலைநகராக வாதாபி நகரம் விளங்கியது. இப் பகுதியை சாளுக்கிய
இனத்தின் தலைவராக இரண்டாம் புளகேசி மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவனது இயற் பெயர் இறைஅம்மான்.
இவனுக்கு இரு பட்டப்பெயர்கள் உண்டு.
1) புளகேசி, இது மருவி புலிக்கேசி
ஆனது.
2) சத்தியாச்சிரே.
புளகேசி என்றால் மயிர்க்கூச்செறியும் தன்மை. அதாவது இவன் போர்
விபுலானந்த அடிகளாருக்கு
அவுஸ்திரேலியாவிலே (குறிப்பாகச் சிட்னி நகரிலே) முதன் முதலாக 26 – 04 – 2015ல்
எடுக்கப்பெற்ற பெரு விழாவை – நினைவு கூருகிறோம்!
விபுலானந்த அடிகளாரின்
நூற்றாண்டு நிகழ்வுகள் எங்கும் நடைபெற்று வருகின்றவேளை சிட்னியிலே நடந்தேறிய பெரு
விழா வர்ணனையை சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளது
முதல்- முதலாக விபுலானந்த அடிகளாருக்குத் தமிழ் வளர்த்த சான்றோர் விழா மூலம் சிட்னியிலே எடுத்த பெரு விழாவிற்கு அனுசரணை வழங்கிய பெருமை உலக சைவப் பேரவை(அவுஸ்திரெலியா) அமைப்பையே சாரும். தமிழ் வளர்த்த சான்றோர் விழா வினை 2013ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செவ்வனே வெற்றிகரமாக ஒழுங்குசெய்துவரும் விழா அமைப்பாளர் கலாநிதி பாரதி இளமுருகனார் என்பது யாவரும் அறிந்ததே!
உத்தமனார் உறைவதற்கே உள்ளமென்ற கமலம் உகந்த தென்று பாடி நற்றமிழர் போற்றி வந்த நாடகமும் இசையும் நலியாது காத்திட யாழ்நூல் தந்தவர் மீன்பாடும் மட்டுநகர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். விபுலானந்த அடிகளாளுக்கு அவுஸ்திரேலியாவிலே குறிப்பாகச் சிட்னி நகரிலே முதன் முதலாக பெரு விழா எடுத்தது சரித்திரப் பிரசித்தி பெற்ற சிறப்பு நிகழ்வாகும். அருள்மிகுதுர்க்கைஅம்மன்வளாகத்தில்அமைந்துள்ளதமிழர்மண்டபத்தில்அவைநிறைந்ததமிழ்அன்பர்களுடன்கோலாகலமாகவும்வெற்றிவிழாவாகவும் இந்த விழா நடைபெற்றது.
இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக
இந்த மாபெரும்விழாவிலே இளைஞர்கள்
இருவர் சிற்றுரை ஆற்றியிருந்தனர். ‘
பல்வைத்தியகலாநிதி
பாரதி இளமுருகனார் அவர்களின் கவிதை
கிழக்கிலங்கையில் சிறப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
வழிபாடு தோன்றிய வரலாறு
அடிகளாருடன் மிகவும் கேண்மை பூண்டு வாழ்ந்த தங்கத் தாத்தா நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர் விபுலாநந்த அடிகளாருக்கு அளித்த வாழ்த்து ஒன்றினைத் தமிழ் முரசு நேயர்களுடன் பகிர்வதிலே மகிழ்ச்சி அடைகிறேன்
-------------------------பாரதி
இளமுருகனார்.
வாயுறை வாழ்த்து
வாழி யினியதமிழ் வாழி தமிழகத்தார்
வாழி மணியிலங்கை வான்கழகம் - - வாழியரோ
பேரா சிரியன் பெரியவிபு லானந்தன்
ஓரா யிரம்பாண் டுலகு
நிலைமண்டில ஆசிரியப்பா
வடாஅது வான்றொடு வேங்கட மலையுந்
தெனாஅது கன்னித் தெய்வதன் குமரியுங்
குடாஅதுங் குணாஅதுந் தொடுகடற் பரப்புமென்
றுந்நாள் வரைந்த விந்நான் கெல்லையுள்
கடுவொடு பிறந்த வமிழ்துதலை குளிக்குஞ்
சுவையொடு பிறந்த தமிழ்வளங் குலகில்
ஒருகடல் குடித்த குறுமுனி நாணச்
சீரிய வாரியத் திருமொழி யென்றா
திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பிரமுகராகத் திகழ்ந்தவர்
May 14, 2024
May 15, 2024
வன்னி ஹோப்
மட்டக்களப்பு, கதிரவெளியில் அமைந்துள்ள புத்தூர் மிகவும் பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாகும், இது பல தலைமுறைகளாக பழங்குடி சமூகத்தினரால் வசித்து வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்தின் கீழ் அமைந்துள்ள இந்த கிராமத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுமார் 75 குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடுகின்றன. வேலையின்மை மற்றும் வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகள் போன்ற பல சவால்களை பழங்குடியினர் எதிர்கொள்கின்றனர்.
மார்ச் 2024 இல் வன்னி ஹோப் ஃபீல்ட் குழுவால் (the Vanni Hope Field team) நடத்தப்பட்ட சமீபத்திய மதிப்பீடு, பல குடும்பங்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுடன் நேர்காணல்களை உள்ளடக்கியது, கிராமத்தின் அவசரத் தேவைகளை எடுத்துக்காட்டுகிறது. பெரும்பான்மையான குடும்பங்கள் தென்னை ஓலையால் வேயப்பட்ட குடிசைகளில் வசிக்கின்றனர். அவர்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி கடுமையாகத் தேவைப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த இடைக்கால அல்லது அரை நிரந்தர தங்குமிடங்களின் தேவையை வெளிப்படுத்தின.
யாழில் பல்வேறு தரப்பினருடனும் அமெ. தூதுவர் ஜூலி சங் சந்திப்பு
LankaPay உடன் இணைந்து PhonePe UPI கட்டண முறை அறிமுகம்
யாழில் போதைப்பொருள் உற்பத்தி மையம் சுற்றிவளைப்பு
முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க சஜித்துடன் இணைவு
கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்காக நிதி ஒதுக்கீடு
சிறப்பாக நடைபெற்ற நுவரெலியா சீதாஎலிய ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
யாழில் பல்வேறு தரப்பினருடனும் அமெ. தூதுவர் ஜூலி சங் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பல்வேறு தரப்பினரையும் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டம்
இஸ்ரேல்–ஹமாஸ் போராளிகள் இடையே வடக்கு, தெற்கு காசாவில் உக்கிர மோதல்
காசாவின் ரபா, ஜபலியாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: கடும் மோதல்
வடக்கு காசாவில் முன்னேறிவரும் இஸ்ரேலிய படைக்கு கடும் எதிர்ப்பு
காசாவின் ரபாவுடன் ஜபலியா முகாமிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்
ரபாவின் மேலும் பல இடங்களில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவு
ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ மீது துப்பாக்கிச்சூடு
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டம்
இஸ்ரேலின் ரபா தக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் அமெரிக்கா ஒரு பில்லியன் டொலருக்கு மேல் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சிட்னி ஸ்ரீ துர்கா தேவஸ்தானம்
முருகனின் பிறந்த நாளாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இது வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.
துர்க்கை கோவிலில் ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா ஆகியோருக்கு பால கலச அபிஷேகம், தங்கத்தேர் ஊர்வலம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன.
நிகழ்ச்சி நிரல்:
ஹோமம் - 5.30 மணி
பல் கலாச அபிஷேகம்
முருகனுக்கு தங்கத்தேர் ஊர்வலம்
மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் - இரவு 8.30 மணி
வைகாசி விசாகம் & மூல மந்திர ஹோமம் புதன்கிழமை, 22 மே 2024
ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார்.
சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் என ஸ்கந்தர் உருவானார். உலகில் உள்ள சகல ஜீவராசிகளும் தாயிடம் இருந்து உருவாக, முருகன் ஒருவரே தந்தையின் மூலம் உருவானார்.
ஓம் நமசிவாய
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஞானசம்பந்தர் தேவாரத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து பக்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் நாமஜபம் செய்ய "ஞானசம்பந்தர் தேவாரம்" நூல் பிரதி வழங்கப்படும். பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப முழு நிகழ்ச்சியிலும் அல்லது அதன் ஒரு பகுதியிலும் பங்கேற்கலாம்.