அகல் விளக்கு - சேரன்

.

கடவுளர்க்கு நிழல் உண்டா?
இருந்தாலும் யார் கண்டார்?
எம்
நெருப்புக்கும் கண்ணீருக்கும்
இல்லை.


சுக்கிலத்தாலும் குருதியாலும்
வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக
நாம் அனுப்பும் கணை
எதுவெனத் தேடிக் காட்டுக்குள்
போக முடியாது. காடும் எரிகிறது.
ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது
இருப்பதே ஒரு கால்


உருவற்ற கவிதையின் உயிரை
தேடாதே
தீ பெருகும் என்றாள்
பெருகுவது எல்லாம் நன்மைக்கே
எனத் தொடர்ந்து நடந்தேன்
கடலோரம்
வழி விடா நீர்
வழி தரும் மொழி

சிட்னி முருகன் வைகாசி விசாகத் திருவிழா

சிட்னி முருகன் வைகாசி விசாகத் திருவிழா மிக சிறப்பாக 21.05.2016  இடம்பெற்றுள்ளது. 

இந்த நிகழ்வில் பெரும்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Thavil 

T.G. Selvamuthu Kumarasam(Thirupoogur- India)
N R Suthakar ( Inuvil - Jaffna)

Nathaswaram

M.K.S. Siva ( Mabalam - India)

M.K.S. Nadarajan ( Mabalam - India)




இருநூறு வயதுகளில் நடைபயிலும் யா. யூனியன் கல்லூரி

.

இருநூறு வயதுகளில் நடைபயிலும் எமது கல்லூரித் தாய்
யா. யூனியன் கல்லூரி,தெல்லிப்பழை 1816 - 2016
யாழ் கல்லூரிகளின்  மூத்த தலைமகள் இருநூற்றாண்டு விழா காணும் எமது யூனியன்  தாய்க்கு வாழ்த்துச் சொல்ல வாய ப்புத் தந்த இறைவனுக்கு நன் றி சொல்வதோடு எனது மனப்பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்
“எழுத்தறிவித்தவன் இறைவன்” என்ற கூற்றுக்கிணங்க கல்விப் பணியானது
இறைவனால் தரப்பட்ட நற்பணியாகும ;. கல்வியின் மூலமே ஒரு சமுதாயம் உன்னத நிலையை அடைகின்றது. அந்த வகையில் யாழ் மண்ணில் தெல்லியூரில்  ஆலம் விழுதாய் அழியாது நிற்கும் யூனியன்  கல்லூரி ஆற்றும் பணியும் காலத்தால் அழியாதது என்பதற்கு அவளின் இருநூறு வயதுகளே ஒரு சான்றாகும்.


அவுஸ்திரேலியா மெல்பேன் நகரில் நடைபெற்ற "மே 18

.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஏழாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் தமிழர் இனவழிப்புநினைவுநாள் நினைவுகூரல் நிகழ்வும் ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ணில் 18 – 05 – 2016  புதன்கிழமையன்று மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டதுகங்கேரியன் மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நிகழ்வுகள்ஆரம்பமாகியதுஇந்நிகழ்வை தமிழில் செல்வன் அருந்தவம் பகீரதன் அவர்களும் ஆங்கிலத்தில் செல்வி துளசிஅவர்களும் தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள்.

நிகழ்வின் தொடக்கமாக முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தில் பலியாகிய மக்களின் நினைவாகவும்இதுகாலவரையில் சிங்களப் பேரினவாத அரசினால் காலத்திற்குக்காலம் இனப்படுகொலை செய்யப்பட்டஅனைத்து தமிழ் உறவுகளின் நினைவாகவும் முதன்மைச்சுடர் ஏற்றப்பட்டதுமுதன்மைச்சுடரினைமுள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தில் சிக்கி தப்பிவந்து தற்போது ஒஸ்ரேலியாவில் புகலிடம் கோரியுள்ளசெல்வன் சிவாநந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்தொடர்ந்து ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர் செல்வன் கெளரீகரன் தனபாலசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியைதிருமதி வாசுகி சிறீதர் அவர்கள் ஏற்றிவைத்தார்அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் காவுகொள்ளப்பட்டமக்களின் நினைவான திருவுருவப்படத்திற்கு செல்வன் பிரசாத் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம்செலுத்தினார்அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் மிகவும்உணர்வுபூர்வமாக மலர்வணக்கம் செலுத்தினார்கள்தொடர்ந்து தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தமாவீரர்கள் பொதுமக்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் சுதந்திரமான வாழ்வுக்காக உலகெங்கிலும் உயிர்நீத்ததியாகிகள் அனைவரையும் உள்ளத்தில் இருத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

சம்பந்தர் குருபூசை 24 05 2016

.

யூனியன் கல்லூரி வழங்கும் இசைமாலை 28. May 2016

.







வாழ்வை எழுதுதல் மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும் - முருகபூபதி முருகபூபதி


" இனியும்  அந்தப்புறா  வந்தால்  அதன்  மூக்கில்  விக்ஸ்  தடவுவேன்"
அந்த  மூன்றரை  வயதுக்குழந்தை  சற்று  உரத்தகுரலில்  சொன்னது.
" புறாவுக்கு  என்ன  நடந்தது ?  அதற்கு  தடிமன்  வந்துவிட்டதோ ?"  என்று  யோசித்தேன்.
சிட்னியில்   பிரமாண்டமான  கட்டிடங்கள்  நிரம்பிய  பரமட்டா என்னும்  இடத்தில்  அமைந்திருந்த  ஒரு  பாதுகாப்பான   மாடிக் குடியிருப்பில்தான்  எனக்கு  அந்த  யோசனை  பிறந்தது.  பரமட்டா ரயில்    நிலையத்திற்குச் சமீபமாக  அமைந்த  அடக்குமாடித் தொடர் குடியிருப்புக்கு  அருகில்  பொலிஸ்  தலைமையகத்தின் கட்டிடத்தொகுதி.
சமீபத்தில்தான்  அவ்விடத்தில்  துப்பாக்கிச்சூடும்  நடந்திருக்கிறது.
ஒரு  தீவிரவாதி  ஒரு  பொலிஸ்  அதிகாரியை சுட்டுக்கொன்றதையடுத்து  அந்த  தீவிரவாதியும்  பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
அதன்பின்னர்  அங்கு  பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டிருப்பதாக அறிந்துகொண்டேன்.
அந்தப்பகுதியில்  பொலிஸ்  தலைமையகத்திற்கு  அருகில் மற்றுமொரு  மக்கள்  குடியிருப்பு  மாடிக்கட்டிடம்.   சில  நாட்கள்  நான்  அங்கு  தங்கியிருந்தமைக்கு  சொந்தம்  எப்போதும் தொடர்கதைதான்   காரணம்.
எனது   பத்திகள்  சிலவற்றிலும்  நினைவுக்கோலங்கள்  தொகுப்பிலும் அடிக்கடி  வரும்  முருகானந்தன்  என்ற  எனது  மச்சான்  (தாய்மாமா மகன்)   தமிழ்நாட்டிலிருந்து  தனது  மனைவியுடன்  பரமட்டாவில் வசிக்கும்  தனது  மகள்  வீட்டிற்கு  வந்துள்ளார்.   அனைவரையும் பார்க்கவேண்டும்.
எந்தவொரு   பயணத்திலும்  ஒரு  கல்லில்  பல  மாங்காய்களை விழுத்துவது  எனது  இயல்பு.


உலகச் செய்திகள்


உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் ; கன்னிப்பயணத்திற்கு தயார் நிலையில்

தமிழக தேர்தல் : 74% வாக்குப்பதிவு

கன­டாவில் மீண்டும் பரவும் காட்டுத் தீ.!

ஐ.எஸ்­ஸை எதிர்த்து போரி­ட லிபி­யா­வுக்­கு ஆயுதங்கள் வழங்­க­வுள்­ள­தாக அமெ­ரிக்க அறி­விப்­பு

தென் கொரிய எழுத்­தா­ருக்கு மேன் புக்கர் விரு­து


தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் முதல்வராகிறார் ஜெ ; வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க.

 69 பயணிகளுடன் விமானம் மாயம்

66 பேருடன் மத்தியதரைக் கடலில் விழுந்த எகிப்திய பயணிகள் விமானம்

வெளியானது தமிழக அமைச்சரவை பட்டியல்: 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

பங்காளதேசத்தில் ரோனு புயலின் கோரத் தாண்டவத்துக்கு 24 பேர் பலி : 5 இலட்சம் மக்கள் வெளியேற்றம்



TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்

.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது.
தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார்வையோ அதனை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டமோ இருந்திருக்கவில்லை.
இந்திய அரசின் தலையீடும் வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் விடுதலை இயக்கங்களை வெற்று இராணுவக் குழுக்களாக மாற்றியமைத்திருந்தன. இந்த இராணுவக் குழுக்கள் தமது குழு நிலை நலன்களைப் பேணிக் கொள்வதற்காக தமக்கிடையே மோதிக்கொண்டன. தாமே சிறந்தவர்கள் என அறிவிப்பதற்கு ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒவ்வொரு பிரச்சார நியாயம் இருந்தது. புலிகளோ தாமே முதலில் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஆக, தம்மோடு இணைந்துகொள்ளுங்கள் என ஆண்டபரம்பரை ஆணவத்தோடு கூறினர். ஏனைய இயக்கங்களும் இராணுவக் குழுக்கள் என்ற வகையில் இவ்வகையான நிலப்பிரபுத்துவக் குழுவாத போக்குகளில் மூழ்கியிருந்தனர்.
அன்று 1986 ஏப்பிரல் மாதத்தின் கடைசிப்பகுதி – 29 ம் திகதி காலை, எப்போதும் போல விடியவில்லை. ஆங்காங்கே துப்பாக்கிப் சத்தங்கள் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு எதோ ஒரு பயங்கரத்தை அறிவித்தது. வேப்ப மரங்களைக் கடந்து தெருமுனைக்கு வந்து விசாரணை செய்ததில் புலிகளுக்கும் டெலோவிற்கும் சண்டை நடக்கிறது என்றார்கள்.

கிளிநொச்சி சிவபூமி பாடசாலை திறப்பு விழா 26 05 2016

.

இலங்கைச் செய்திகள்


மலையகத்தின் பல பாகங்களிலும் மண்சரிவு : போக்குவரத்து, மின்சாரம் தடை

சீரற்ற காலநிலையால் இருவர் பலி : மூவர் காணாமல் போயுள்ளார் : 422 பேர் இடம்பெயர்வு : 7090 பேர் பாதிப்பு.!

ஆமி சம்பத் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­விடம்

இலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : வெசாக் தினத்தன்று திறந்து வைப்பு.!

 70 வருடங்களுக்கு  பின் கிளிநொச்சியில் அதிக மழை வீழ்ச்சி

மழையால் யாழில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு

தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரம் (இன்றைய நிலை 17/05/2016)

பதவி விலக்கக்கோருவது தொடர்பில் நான்  கவலையடைவில்லை; வடக்கு ஆளுநர் 

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நினைவேந்தல் இன்று.!

மட்டுவில் 26400 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : மாவை, சி.வி. அஞ்சலி

இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்.!

வித்தியா கொலை வழக்கு ; மரபணு பரிசோதனை அறிக்கை ‎நீதிமன்றில்‬ சமர்ப்பிப்பு

கொழும்பில் மப்பும்மந்தாரமுமான காலநிலை : களனியாறு சடுதியாக பெருக்கெடுப்பு பதற்றத்தில் வெளியேறிய மக்கள்

போர் வெற்றி மகிழ்ச்சியளித்தாலும் மரணங்கள் வேதனையளிக்கின்றன : தேசிய படைவீரர்கள் தினத்தில் ஜனாதிபதி

பிள்ளையானின் பிணை மனு மறுப்பு ; மீண்டும் விளக்கமறியல்

இதுவரை 58 பேர் உயிரிழப்பு : 4 இலட்சம் பேர் பாதிப்பு: பல பகுதிகள் நீரில் மூழ்கின

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்திரேலியா உதவி.!







இலக்கிய சந்திப்பு -25

.

இத்தோடு அண்மையில் ஈழத்தில் இருந்து இங்கு விஜயம் செய்திருக்கும் கடந்த 16 வருடங்களாக மாதம் தவறாது “ஞானம்” என்றொரு சஞ்சிகையை நடாத்திக் கொண்டிருக்கும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ”போர்க்கால இலக்கியம்”,”புலம்பெயர்ந்தோர் இலக்கியம்” என்ற இரு பெரும் தொகுதிகளை வெளியிட்டவருமான திரு. ஞானம். ஞானசேகரன் அவர்கள் அவரது 75வது அகவையைக் கொண்டாடும் முகமாக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64


அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

.
இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 131 பேரைக் காணவில்லை என தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 80 வீதமானவர்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

SAMPANTHAR GURU POOJAH 2016 AT SRIVENKATESWARA TEMPLE, HELENSBURG NSW AUSTRALIA



இலங்கைப் பிரச்னை: தேவை தீவிர சிகிச்சை! - கே.எஸ். இராதாகிருஷ்ணன்

.

இலங்கையில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூட்டாட்சி முறை இருந்தால்தான் தமிழர்கள் சம உரிமையோடு வாழ முடியும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுவே இலங்கையை ஒற்றுமைப்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை, தமிழர் பகுதிகள் மட்டுமல்லாமல் சிங்களர் வாழும் ஏழு மாகாணங்களிலும் கூட்டாட்சி முறை வேண்டும் என்று சிங்களர்களே வலியுறுத்துகின்றனர்.

 புதிய அரசியல் சாசனத்தில் கூட்டாட்சி முறை இடம்பெறக் கூடாது என்று ஆளும் சுதந்திரா கட்சி சமீபத்தில் வலியுறுத்தியுள்ளது. அந்தக் கட்சியைச் சார்ந்த இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புதிதாக ஏற்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
 தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டையில் கூடி "இனிமேல் சிங்களர்களோடு இணைந்து வாழ முடியாது; தனி வாழ்வுதான். சகவாழ்வுக்கான வாய்ப்புகள் சாத்தியமில்லை. தமிழினம் அழிந்துவிடும் என்ற நிலை. இனி தனி வாழ்வுதான்' என்று தனிநாடு தீர்மானத்தை நிறைவேற்றி கடந்த 14-ம் தேதியுடன் (14.5.2016) 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஈழ வரலாற்றில் வட்டுக்கோட்டையில் வடித்த அந்தத் தீர்மானம் ஈழம் என்ற சுதந்திர தாகத்துக்கு அடிப்படை விதையாகும்.

‘பொன் மணி’ உங்கள் மகளின் கதையாகலாம் : தம்பி ஐயா தேவதாஸ்

.


இளைஞரும் மைத்துனரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள். மைத்துனர் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கலாம் என்று ‘ஐடியா’ கொடுத்தார். இளைஞருக்கும் ஆசை வந்துவிட்டது. சர்வதேசத் தரத்துக்கு ஒரு தமிழ்ப் படம் தயாரித்தால் அதை வெளிநாடுகளுக்கு விற்றே அதிக பணமும் புகழும் பெறலாம் என்று ஆசைப்பட்டார் இளைஞர்.
ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்கள். அந்த இளைஞரின் பெயர்தான் காவலூர் ராஜதுரை. அவர்கள் இருவரும் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘பொன்மணி’
டைரக்டராக பத்திராஜா தெரிவு செய்யப்பட்டார். சிங்களத் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கிய டொனால்ட் கருணாரட்ண ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

சிட்னி முருகன் கோவிலில் புதிய பிரதோஷமூர்த்தியும் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டையும் பிரதோஷ விரதமும் 18/05/2016



மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!

.

ணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது.

1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்த புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது.

நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி, பின்னாளில் உலகப்புகழ்பெற்ற அந்த நடிகர் வேறு யாருமல்ல; நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான். 

சிதம்பர ரகசியம் - தில்லைத்திருத்தலம் 19 06 2016

.

அவுஸ்திரேலியாவில் சிறுகதை, கவிதைப்போட்டிகள்

.
அவுஸ்திரேலியாவில், மெல்பேணிலிருந்து ஒலிபரப்பாகும் “வானமுதம்” தமிழ் ஒலிபரப்புச்சேவையின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி, அனைத்துலக ரீதியான சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போட்டிகள் பற்றிய பொது விதிகள்

1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும் இப்போட்டிகளில் பங்கு பற்றலாம்.

2. சிறுகதை, கவிதைப் போட்டிகளில் ஏதாவது ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஒருவர் பங்குபற்றலாம். ஆனால் ஒருவர் ஒரேயொரு சிறுகதையை அல்லது ஒரேயொரு கவிதையை மட்டுமே அனுப்ப முடியும்.

3. ஆக்கங்கள் போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும்.

4. ஆக்கங்கள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, பிரசுரிக்கப்பட்டனவாகவோ அல்லது வெளியிடப்பட்டனவாகவோ இருத்தல் கூடாது.

தமிழுக்கு ஓர் அரியணை - அ.முத்துலிங்கம்:-‏


தமிழுக்கு ஓர் அரியணை - அ.முத்துலிங்கம்:-

.

சமீபத்தில் பொஸ்டனில் ஒரு பேராசிரியரைச் சந்தித்தேன்.  அவருடன் தேநீர் அருந்தப் போன போது அவர் பரிசாரகருடன் ஏதோ மொழியில் பேசினார். அவரும்அதே மொழியில் பதில் சொன்னார். ‘என்ன மொழி?” என்று கேட்டேன். அவர் ‘நேப்பாளமொழி’ என்றார்.

‘எப்படி  அவர் நேப்பாளி என்பதைக் கண்டுபிடித்தீர்கள்?’‘அவருடைய உடை, முகச்சாயல், உடல்மொழி’ என்றார். நான் ஆச்சரியப்பட்டேன். அந்தப் பேராசிரியருக்கு 18 மொழிகள் தெரியும்.  அவர் இன்னொரு விசயமும் சொன்னார். அது என்னை இரண்டாவது தடவையாக ஆச்சரியப்பட வைத்தது.

‘என் இளவயதிலேயே எனக்கு வேற்று மொழிகள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிவிட்டது. இன்று எனக்கு தமிழ் மொழி பற்றி இருக்கும் அறிவு அன்று இருந்திருந்தால் நான் தமிழை முதல் மொழியாகப் பயின்று இருப்பேன். தமிழ் உலகத்தின் ஆதி மொழிகளில் மிகச்சிறந்த ஒன்று’ என்றார்.

இதையே இன்னொரு விதமாக சமீபத்தில் இறந்து போனபேராசிரியர் பேர்னார்ட்பேட் சொன்னார். இவர் சிகாகோபல் கலைக் கழகத்திலும் யேல் பல்கலைக் கழகத்திலும் பலவருடங்களாக தமிழ் கற்பித்தவர். ’தமிழை அறிந்து கொள்வது உங்கள் கடமைஅல்ல.  அதைப் பேசிப் புரிந்து இன்புறுவதற்காகப் படியுங்கள். ஓர் ஓவியத்தை அதன் அழகிற்காக ரசிப்பதில்லையா? ஓர் இசையை அனுபவிப்பதில்லையா? அதுபோல தமிழை அது தரும் இன்பத்திற்காக நுகருங்கள்.’

தமிழ் சினிமா


கோ 2




தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்து பல படங்கள் வந்துள்ளது. இதில்அமைதிப்படை, முதல்வன், கோ என ஒரு சில படங்களே நிகழ்கால அரசியலை தைரியமாக மக்களுக்கு கூறிய படம்.
இதில் கோ கடந்த தேர்தலின் போது வெளிவந்து மிகப்பெரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக இந்த தேர்தலுக்குகோ 2 வெளிவந்துள்ளது.

கதைக்களம்

கோ படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தமே இல்லை. ஆனால், டைட்டில் வைத்ததற்காகவே சிறகுகள் கட்சி வீழ்ச்சியடைந்து மீண்டும்பிரகாஷ்ராஜ் முதல்வரானார் என்ற வசனம் வருகின்றது. அறிமுகஇயக்குனர் சரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பாபி சிம்ஹா படத்தின் ஆரம்பத்திலேயே தமிழகத்தின் முதலமைச்சர் பிரகாஷ்ராஜை கடத்துகிறார். தமிழகமே பதட்டமாக போலிஸ் படையுடன் பாபி இருக்கும் இடத்தை வந்து சேர்கிறது.
உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்கு முதலமைச்சரை கடத்தினீர்கள்? என்று கேட்க, பாபி மிகவும் சிறுபிள்ளை தனமாக காரணங்களை சொல்கிறார். அது அரசாங்கத்திற்கு சிறுபிள்ளை தனமாக இருந்தாலும், பெரிய விஷயத்தை சிம்பிளாக பாபி சொல்ல முயற்சிக்கிறார்.
இதை தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகளை பாபி முதலமைச்சரை தன் கட்டுப்பாட்டில் வைத்து வெளிக்கொண்டுவருவதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

பாபி சிம்ஹா தேசிய விருது நாயகன், அழுத்தமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்தால் அவரும் கமர்ஷியலுக்குள் குதித்துவிட்டார். நாட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெரிய காரணம் இருக்கு என்பதை முதலமைச்சரிடம் விளக்கும் காட்சியில் அப்லாஸ் அள்ளினாலும், ரொமான்ஸ், டூயட் எல்லாம் கொஞ்ச நாளைக்கு வேண்டாம் ப்ரோ.
பிரகாஷ்ராஜ் அவரே மொத்த படத்தையும் தாங்கி நிற்பார் என்று எதிர்ப்பார்த்தால், கொஞ்சம் ஏமாற்றம் தான். இத்தனை பெரிய நடிகரை ஒரு சேரில் உட்கார வைத்து பேச மட்டும் வைத்துவிட்டார்கள். நிக்கி கல்ராணியும் ஒரு ப்ளாஷ் பேக் டூயட், அவ்வப்போது மைக் பிடித்து பேசுகிறார், பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை.
முதலமைச்சரை கடத்த இவர்கள் போடும் ப்ளான் அதற்கு உதவி செய்யும் பாலசரவணன் என பல லாஜிக் மீறல்கள். அதிலும் பாலா சொல்லும் ப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் படத்திற்கு தேவை தானா?.
ஆனால், எது எப்படியோ பல காட்சிகள் பிரபல கட்சிகள் செய்யும் கலாட்டாவை வெளுத்து வாங்கியுள்ளது. இதற்கு எல்லாம் தனி தைரியம் வரவேண்டும், அதற்காக மனம் திறந்து பாராட்டலாம். அதிலும் இளவரசு ஒரு அமைச்சரை நம் கண்முன் கொண்டு வருகிறார்.
படத்தின் ரியல் ஹீரோ இசையமைப்பாளார் லியோன் தாமஸ் தான், பின்னணி பாடல்கள் என அனைத்திலும் கலக்கியுள்ளார். இன்னும் பல படங்கள் பணியாற்ற வாழ்த்துக்கள் சார்.
கோ படத்தில் மக்களின் மொத்த பிரச்சனைக்கும் போராடுவது போல் இருக்கும், இதில் தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனையை வைத்து மையக்கதையை நகர்த்திருப்பது கொஞ்சம் யதார்த்தத்தை விட்டு தள்ளி நிற்கின்றது.

க்ளாப்ஸ்

வசனம், அரசாங்கத்திற்கு சாட்டையடி அதிலும் தேர்தல் நேரத்தில்.
படத்தின் இசை, இரண்டாம் பாதி, கருணாகரன் முதன் முதலாக காமெடி தவிர்த்து சிறிது நேரம் வந்தாலும் ஈர்க்கிறார்.
இளவரசு வாயிலாகவே அரசாங்கத்தை பற்றிய கிண்டல் கேளிகளை பாபி சிம்ஹா வெளியே கொண்டு வரும் காட்சி. காமெடியை விட அனைவரும் கவனிக்கவேண்டிய இடம்.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதியில் வரும் தேவையற்ற ப்ளாஷ்பேக் காட்சிகள்.
லாஜிக் மீறல்கள், முதலமைச்சரை கடத்துகிறார் என்று கூறும் போதே அத்தனை சீரியஸான விஷயத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக கொண்டு சென்றிருக்கலாம்.
மொத்தத்தில் இதுவரை சினிமாவில் கூட கேட்க முடியாத சில கேள்விகளை முதன் முறையாக தைரியமாக கேட்டதற்காகவே ஒரு முறை சென்று வரலாம்.

ரேட்டிங்- 2.75/5   நன்றி cineulagam