வாசகரின் வாசகத்தை மனமுருகிப் படிப்போம் !
பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி -யசோதா விழா வர்ணனை தொடருகிறது ------ திருமதி கலையரசி சின்னையா அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் தொடர்ச்சி
பண்டித ஆசிரிய கலாசாலை - -ஆரம்பித்தைமை!
ஜூன் 27 அமரர் மல்லிகை ஜீவாவின் 98 ஆவது பிறந்த தினம் முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூலின் முன்னுரை இந்நூலை அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் சாதாரண மத்திய தரக் குடும்பத்தில் பிறந்து, உயர்கல்வியை பெறுவதற்குரிய வாய்ப்பு வசதிகளை இழந்து, அறிஞர்களினதும் முற்போக்கு எழுத்தாளர்களினதும் நூல்களை வாசித்துப்பெற்ற அனுபவங்களினாலேயே மேதையாக வலம்வந்து, ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்திருக்கும் மல்லிகை ஜீவா, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமது 93 வயதில் மறைந்தார்.
ஜோசப் – மரியம்மா தம்பதியருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்திருக்கும் டொமினிக் ஜீவா, மல்லிகை எனும் கலை, இலக்கிய மாத இதழை 1966 ஆம் ஆண்டுமுதல், 2012 ஆம் ஆண்டு வரையில் வெளியிட்டார். இதுவரையில் நானூறுக்கும் மேற்பட்ட
இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
இவ்விதழ்களை நூலகம் ஆவணகத்தில்
பார்க்கமுடியும்.
டொமினிக் என்பது அவரது இயற்பெயர். தமிழகத்திலிருந்து பொதுவுடமை இயக்கத்தோழர் ஜீவானந்தம்
பிரித்தானியர் காலத்தில் தலைமறைவாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில்
அவரது கருத்துக்களினால் கவரப்பட்ட டொமினிக்,
தனது பெயருடன் ஜீவா என்ற எழுத்துக்களையும் இணைத்துக்கொண்டார்.
மல்லிகை ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து சுயமுயற்சியோடு அதனை வெளியிடத்தொடங்கியதும், மல்லிகை ஜீவா என பரவலாக அறியப்பட்டார்.
அவரது இந்த நாமம் இலங்கையெங்கும்
மட்டுமல்ல தமிழகத்தில் இலக்கியவாதிகள் மத்தியிலும் பரவியிருந்தது.
இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருப்பின்
நூறுவயதையும் எட்டியிருப்பார்.
ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளரகவே
இலக்கிய உலகில் பிரவேசித்தவர். அவரது முதலாவது கதைத்தொகுதி தண்ணீரும் கண்ணீரும்.
அதற்கு இலங்கையின் தேசிய
சாகித்திய விருது கிடைத்தது. அதுவே இலங்கையில்
தமிழில் தேசிய மட்டத்தில் இலக்கியத்திற்காக
அவ்வாறு கிடைத்த முதல்விருதுமாகும்!
மன்னார்குடியில் மருதமுத்துக்கு குழந்தை பிறந்தது !
-
சங்கர சுப்பிரமணியன்.
இஸ்ரேலா ? ஈரானா ? : எந்நேரத்திலும் போர் வெடிக்கலாம் : யாருக்கு இராணுவ பலம் அதிகம்
28 Jun, 2025 | 12:22 PM
எம்.டி. லூசியஸ்
இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என கூறினாலும் கூட, மீண்டும் எந்நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு நாடுகளின் இராணுவ கட்டமைப்பு மற்றும் ஆயுதபலம் தொடர்பில் இந்த கட்டுரையில் நாம் விரிவாக ஆராய உள்ளோம்.
உலகில் அதிக ராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் 15-ஆவது இடத்திலும் ஈரான் 16-ஆவது இடத்திலும் உள்ளன.
இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரான் இராணுவத்தில் அதிக ராணுவ வீரர்கள் உள்ளனர். ஆனால் ஆயுதங்களை ஒப்பிடும்போது ஈரான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.
ரஷ்யாவின் பழங்கால டி-72, ஜுல்பிகர், காரர் ஆகிய டாங்கிகளை மாத்திரமே ஈரான் பயன்படுத்தி வருகிறது.
இஸ்ரேல் இராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இராணுவ தொழில்நுட்பத்தில் அந்த நாடு முன்னிலையில் இருக்கிறது.
குழந்தையும் தெய்வமும் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
படத்தின் தயாரிப்பாளர் பெங்களூரில் ஆங்கிலப் படம் ஒன்றை
காட்டி இந்தக் கதையை கருவாக வைத்து தமிழுக்கு ஏற்றாற் போல் திரைக் கதையை எழுதித் தாருங்கள் என்று சொல்லி விட்டார். ஆங்கிலப் படத்தின் கதையோ சற்று ஏடகூடமானது. அதை எவ்வாறு தமிழ் சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றுவது என்று எண்ணியபடி சென்னை திரும்ப விமானத்தில் ஏறினார் கதாசிரியர். விமானத்தில் ஒரு பழைய நடிகையை கண்டார். அவ்வளவுதான், தமிழ் படத்தின் கதை அவர் மனத்துக்குள் உதித்து விட்டது. அவ்வாறு உருவான படம்தான் குழந்தையும் தெய்வமும்.
தமிழுக்கு எழுதவிருந்தவர் ஜாவர் சீதாராமன். விமானத்தில் அவர் கண்ட நடிகை ஜி . வரலஷ்மி. வரலஷ்மியை கண்டவுடன் இவருக்கு ஏற்றாற் போல் ஒரு கதாப் பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழ் படத்துக்கான திரைக் கதையை எழுதி விடலாம் என்ற ஐடியா ஜாவருக்கு உடனே தோன்றி விட்டது. ஒரு சிக்கலின் காரணமாக கணவனும், மனைவியும் விவாகரத்தாகின்றனர். அவர்களின் இரு குழந்தைகளும் ஆளுக்கொருவராய் தாயுடனும், தந்தையுடனும் வளர்கின்றனர். இப்படி அமைந்த ஆங்கிலப் படத்தை குமரன் முதலில் டைரக்டர் ஏ. சி. திருலோகச்சந்தருக்கு காட்டி அபிப்பிராயம் கேட்டார்.
எதிர்த்துப் போராடும் ஈரானின் மன உறுதி பற்றி தப்புக் கணக்கு போட்ட இஸ்ரேல்
29 Jun, 2025 | 03:15 PM
லத்தீப் பாரூக்
இவ்வாறு செய்ததன் மூலம் தமது இருப்புக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை நம்பியுள்ள அரபு சர்வாதிகாரிகளுக்கு ஈரான் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. அவர்களது ஆட்சிகள் ஒடுக்குமுறை, ஊழல் மற்றும் மதச்சார்பற்றவை. இந்த ஆட்சிமுறை அவர்களின் அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலிய எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தங்கள் மக்களை கல்வியறிவற்றவர்களாகவும் வறுமையுடனும் வாழ வைத்திருக்கிறது.
இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ், துறைமுக நகரமான ஜாஃபா மற்றும் பல நகரங்களுக்கு ஈரான் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவை எரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை தெருக்களில் தள்ளியுள்ளது. உயரமான கட்டிடங்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளதால் அவை அழிவுக்குப் பிறகு காஸா போல தோற்றமளிக்கின்றன.
இலங்கைச் செய்திகள்
யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்று இரு மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !
வடக்கில் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை !
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கு மீதான விசாரணை செப்டெம்பர் மாதம்
பகிடிவதையால் பல்கலை மாணவன் உயிரிழப்பு : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது
மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே புதிய வர்த்தமானியை வெளியிட்டிருக்கிறது அரசு - எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை
யாழ். செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்று இரு மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
27 Jun, 2025 | 09:27 PM
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ( 27) மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய அகழ்வு பணிகளின் போது இரண்டு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலகச் செய்திகள்
ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி
காசாவில் கவசவாகனத்திற்குள் பொருத்தப்பட்ட குண்டுவெடிப்பு - ஏழு இஸ்ரேலிய படையினர் பலி
சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப் பரப்பு மூடல்
கட்டாரிலுள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் : தாக்குதலை முறியடித்துள்ளதாக கட்டார் தெரிவிப்பு
ஈரான் ஏவுகணைதாக்குதல் - இஸ்ரேலில் மின்விநியோகம் பாதிப்பு
ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி
26 Jun, 2025 | 04:09 PM
ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி தெரிவித்துள்ளார்
சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா தான் நேரடிப்போரில் இறங்காவிட்டால் சியோனிச ஆட்சி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என கருதியது அதன் காரணமாகவே அது நேரடி போரில் நுழைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனி திருமஞ்சனம்