தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

அன்னையள் என்றும் அன்பின் உருவாவாள் !




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 




ஐயிரண்டு திங்கள் சுமப்பவள் அன்னை
மெய்வருந்தி எம்மை வளப்பவள் அன்னை
கண்ணிமையா எம்மைக் காப்பவள் அன்னை
கருணையின் வடிவா யானவளும் அன்னை 

பொய்மையிலா அன்பை பொழிபவள் அன்னை
வாய்மையினை மனதில் நிறைப்பவள் அன்னை
தாய்மையெனும் பெருமை பெறுபவளும் அன்னை 
தரணியிலே தெய்வ வடிவானவளும் அன்னை 

கருவுற்றால் மகிழ்வை காட்டுபவள் அன்னை
கருவளர்ந்தால் அதனைக் காப்பவளும் அன்னை
கருகலைந்தால் உள்ளம் கலங்குபவளும் அன்னை 
கருவுருவாய் மலர கடவுளையே நினைப்பாள்

தகுதியின்றிப் புகழைத் தேடாதே – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சி மண்டிலம்)

 

போற்றும் செயலினால் புகழ்வரும்

ஏற்றம் பெற்றிட எண்ணிடு

போற்றும் செயல்களே புரிந்துநீ

ஏற்றம் பெற்றுமே இன்புறு!       (1)

 

உன்னை உயர்த்திடும் உழைப்புமே

என்றும் அவ்வழி ஏற்றிடு,

நன்றாய்ப் போற்றிடும் நாடுமே

இன்பம் பெருகிடும் என்றுமே!     (2)

 

உழைப்பால் ஆயிரம் உயர்ந்தவர்

தழைத்து வாழ்ந்திடும் தளமிது,

பிழைகள் விலக்கிநீ பெரிதுமே

உழைத்தால் போற்றிடும் உலகமே!   (3)

   -----------------------

 

வினை தன் கடமையைச் செய்யும்!



-சங்கர சுப்பிரமணியன்.




சிலசமயங்களில் நாம் ஒரு வார்த்தைகூட சொல்ல வேண்டிய அவசியமில்லை. வினை நமக்காக தன் கடமையைச் செய்யும். சில மதங்களில் கர்மா என்று இந்த வினையைச் சொல்கிறார்கள். சிலர் கர்மாவைத்தான் கடவுள் என்கிறார்கள். நான் சமீபத்தில் படித்த ஒரு செய்திதான் எனது கற்பனையுடன் கலந்து கதையாக உங்கள் முன் உலாவவருகிறது.

கோடைகாலம் தொடங்கி வெப்பம் தன் கைவரிசைய மும்முரமாக காட்டிக் கொண்டிருந்தது. வெப்பத்தின் அதிகரிப்பால் மளமளவென்று மெர்குரி நாற்பதை தாண்டிச் சென்றுகொண்டிருந்தது. மெல்பனில் ஒரு சாதாரணப் பல்பொருள் அங்காடி. பெயருக்கு குளிரூட்டம் என்ற பெயரில் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.

பொருட்களை வாங்கிவிட்டு வெளியில்
வருமிடத்தில் பணம் கொடுப்பதற்காக நான்கு சேவை முகப்புகள் இருந்தன. நான்கிலும் பணிப்பெண்கள் பொருட்களின் விலையைச் சரிபார்த்து பணம் பெற்றுக் கொண்டிருந்தனர். கிறிஸ்துஸ் காலமாக இருந்ததால் நல்ல கூட்டம். காலை ஏழு மணிக்கு வந்தவர்கள் மூன்று மணிக்கு பணிமுடிய இன்னும் முக்கால் மணிநேரமே இருந்தது.

முருகபூபதியின் காலமும் கணங்களும் மின்னூல் - ( முதல் பாகம் )

படைப்பிலக்கியவாதி முருகபூபதி எழுதி விரைவில் வெளியாகவுள்ள புதிய நூல்  காலமும் கணங்களும்  - முதல் பாகத்தின் முன்னுரையும்,  இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பவர்களும்.  

 

                           முன்னுரை

 


லங்கையிலிருந்த காலப்பகுதியிலும், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பும், நான் மிகவும் நேசித்த பல கலை இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் சமூகப்பணியாளர்களையும் அடுத்தடுத்து இழந்துவிட்டேன். எனினும் அவர்கள் நினைவுகளாக என்னுள்ளே  வாழ்கின்றார்கள்.

நினைவுகளுக்கு இழப்பில்லை. அவை சாசுவதமானவை. எனது நேசர்களின் மறைவு துயரம்கப்பிய வெறுமையை என்னுள் ஏற்படுத்தியபோதிலும் - அவர்களை சந்தித்த காலமும் - உரையாடிய கணங்களும் என்றென்றும் ஊற்றாகச் சுரந்து பரவசப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் என்னுடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் குருட்டுணர்வுடன்  காலத்தையும் கணங்களையும் கடந்துகொண்டிருக்கின்றேன்.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் வந்த பின்னரும்  எனது எழுத்துப்பணிகளை தொடர்ந்தபோது பிரான்ஸிலிருந்து வெளியாகும் பாரிஸ் ஈழநாடுஇதழில் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதத் தொடங்கினேன்.

இந்த இதழின் ஆசிரியர் நண்பர் திரு.எஸ்.எஸ்.குகநாதன், கலை,


இலக்கியவாதிகளைப்பற்றிய நினைவுகளைப்  அந்தத் தொடரில் பதிவு செய்வதற்கு களம் அமைத்துத் தந்தார்.

 இரகசியமணி கனகசெந்திநாதன், கே.டானியல், மு.தளையசிங்கம், க.கைலாசபதி, எச்.எம்.பி.மொஹிதீன், கே.ஜி.அமரதாஸ, நவசோதி, காவலூர் ஜெகநாதன், என்.எஸ்.எம். இராமையா, ருஷ்ய இலக்கியவாதி விதாலி ஃபூர்ணிக்கா, ஈழவாணன், நெல்லை.க.பேரன் ஆகியோர் என்னிடத்தில்   விட்டுச்சென்ற நினைவுகளை பதிவு செய்து வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இவற்றில் சில வெவ்வேறு இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டதாகவும் அறிந்தேன். இத்தொடர் சிட்னியிலிருந்த நண்பர், எழுத்தாளர்  மாத்தளைசோமுவை வெகுவாகக் கவர்ந்தமையால் தனது தமிழ்க்குரல்பதிப்பகம் ஊடாக  நூல் வடிவில் வெளியிட விரும்பினார். விரும்பியவாறே பதிப்பித்தார். 

இந்த நூலுக்கு மெல்பனிலும் சிட்னியிலும் அறிமுகம் கிடைத்த சமயம், ஆரோக்கியமான வரவேற்பும் விமர்சனங்களினூடாக வந்தன.

முள்ளும் மலரும்’ நாவல் கே.எஸ்.சுதாகர்



முள்ளும் மலரும் திரைப்படத்தை எண்பதுகளில் பார்த்திருந்தாலும், அதன் நாவல் வடிவத்தை நாற்பது வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் வாசிக்கக் கிடைத்தது. நாவலுக்கும் திரைப்படத்திற்கும் பெருத்த வேறுபாடு இருந்ததைக் கண்டுகொள்ள முடிந்தது. திரைப்படம் ஒரு முள்ளுக் (காளி) கூட மலரும் என்பதைக் காட்டி, நாவலுக்கு ஒரு புது அர்த்தத்தைக் கற்பித்தது. ஆனால் நாவல்? ஒரு கொடியில்/செடியில் முள்ளும் மலரும் தனித்தே இருப்பதைக் காட்டுகின்றது. திரைப்படத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் நாவலை எத்தனை பேர் வாசித்திருப்பார்கள்? திரைப்படத்தைப் பார்த்து காளி (ரஜனிகாந்) மீது ரசனை வைத்திருந்தவர்கள், நாவலை வாசிக்காமல் இருப்பதே நல்லது.

முள்ளும் மலரும் கல்கி இதழ் நடத்திய வெள்ளிவிழா நாவல் போட்டியில் உமாசந்திரன் எழுதி முதல் பரிசு பெற்ற நாவல். பூர்ணம் ராமச்சந்திரன், தாய் உமா மீது கொண்ட பாசத்தினால், தனது புனைபெயரை உமாசந்திரன் என வைத்துக் கொண்டார். உமாசந்திரன் நீலகிரி மாவட்டத்தில் குந்தா அணைக்கட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, தொழில் நிமித்தம் அங்கே சென்றார். ஒரு மாதம் வரையில் அங்கே தங்கியிருந்து, விஞ்சில் பல தடவைகள் சென்று பலரையும் சந்தித்து உரையாடியபோது கருக்கொண்டதுதான் `முள்ளும் மலரும்’ நாவல். நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற பூர்ணம் விசுவநாதன், இவரது உடன் பிறந்த சகோதரர்.

விஞ்ச் ஒப்பரேட்டரான காளியண்ணன், அவனின் தங்கை வள்ளி,


இவர்களின் அத்தை அஞ்சலை, பொறியியலாளரான குமரன், குமரனின் நண்பர்கள் வீரமணி கனகா(வீரமணியின் தங்கை), மங்கா, மங்காவின் தாய் வெள்ளாத்தாள், காளியண்ணனின் நண்பர்கள் முனியாண்டி மாயாண்டி – இவர்கள் நாவலின் முக்கிய பாத்திரங்கள்.

காளியண்ணன் முரடன், திமிர் பிடித்தவன், அதிகம் படிக்காவிடினும் தான் செய்வதே சரியானது என்று நம்புவன். தனது தங்கை வள்ளி மீது கொண்ட பாசம், அவளே வாழ்வு என்ற கோலம் அவனுடையது. குமரன் சுருளியாற்றுத்திட்டப் பொறியியலாளராக அங்கே வருகின்றான். ஏற்கனவே தன் இஷ்டப்படி உடும்புக்கொட்டகையில் இருந்து விஞ்ச் ட்ராலியை இயக்கிக் கொண்டிருந்த காளியண்ணனுக்கு, குமரனின் கட்டுப்பாடுகள் பிடிப்பதில்லை. இருவரும் முரண்பட்டுக் கொள்கின்றார்கள்.

காளியண்ணனும் வள்ளியும் எப்படி அனாதைகளாக அங்கு வந்து சேர்ந்தார்களோ, அதே போல மங்காவும் அவளது தாயார் வெள்ளாத்தாளும் அங்கு வந்து சேர்கின்றார்கள். காளியண்ணன் அவர்களுக்கு அடைக்கலம் குடுக்கின்றான். மங்கா அடக்கமுடியாத புள்ளிமான், துணிச்சலான பெண், எந்நேரமும் அடங்காத பசி அவளுக்கு. வள்ளியும் மங்காவும் சிநேகிதர்கள் ஆகின்றனர். முள்ளிமலைக்காடு, வீரன் வாய்க்கால், கன்னிமலையென சுற்றித் திரிகின்றார்கள். கெளரி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்கின்றார்கள். ஆறு, நீலமலை, அணைக்கட்டு, சம்பா நீர்த்தேக்கம் போன்ற இயற்கைக் காட்சிகளுடன் நாமும் பயணிக்கின்றோம். மனதிற்கு இதம் தரும் இயற்கைக் காட்சிகளினால் குளிர்ந்து போகின்றோம்.

பட பஸ் (கன்பராயோகன்)

அந்த நாட்களில் பத்திரிகையில் வரும் திரைப்படங்களின் பெட்டி விளம்பரம் பார்க்க சனசமூக நிலையம் போனோம்.  வீட்டு மதில்களிலும் அவ்வப்போது திரைப்படங்களின் போஸ்டர்களை பசை வாளி கொண்டு ஒட்டி விடுவார்கள்.  அவை காய்ந்து விட்டால் பிறகு கொதி தண்ணீர் ஊற்றியபடி திட்டிக் கொண்டே அவற்றை மதில் வீட்டுக்காரர் உரித்து அகற்ற வேண்டியிருந்தது.  

இதாவது பரவாயில்லை. தேர்தல் வந்தால் மதில் வீட்டுக்காரர்களுக்கு இன்னொரு தலையிடியும் உண்டு. பிரசார அரசியல் கட்சிகள் தாறுமாறாக எதிர்தரப்பினரை வசை பாடி இலகுவில் அழிக்க முடியாத வர்ணப் பூச்சுக்களைக் கொண்டு மதில்களில் எழுதி வைத்து விடுவார்கள்.  

 

அந்தக் காலம் ஊரில் பெரும்பாலும் கிடுகு மற்றும் பனையோலை வேலிகளே தெருவின் இருவரிசைகளிலும் இருந்ததால் குறைவாகவிருந்த மதில்  வீடுகளுக்கு  இந்த ஆபத்து இருந்தது.  இன்று ஊரில் பெரும்பாலும் மதில் வீடுகளைத் தவிர வேறெதையும் காணமுடியாது ஆகவே இந்த பிரச்சினை இப்போது இல்லைப் போலும். பெரும்பான்மைக்கு எப்போதும் பாதுகாப்பு உண்டு என்பது உண்மையே. 

 

அப்போது சினிமாக்களுக்கு மதில் போஸ்டர் ஒட்டுவதைவிட காரின் கூரையில் எதிரும் புதிருமாக இரண்டு லவுட் ஸ்பீக்கர்களை கட்டிக் கொண்டு  திரைப்பட விளம்பர அறிவிப்புச் செய்தபடி ஊரின் குச்சு ஒழுங்கையெல்லாம் அச்சிட்ட விளம்பரங்களை விசிறி எறிந்து விட்டு போவதுமுண்டு.

காரின் சில்லுகள் மண் தெருவில் எழுப்பும் புழுதிக்குள் வர்ணக் கடதாசித் தாளில் அச்சிட்ட திரைப்பட விளம்பரங்களும் கலந்து பறக்க அவற்றை விழ முன்னர் பிடிப்பதற்காக ஓடினோம். 

ஆஸி நிரந்தரவாசிகளுக்கு பெறுமதியானதோர் வாய்ப்பு

 


ஆஸி நிரந்தரவாசிகளுக்கு

பெறுமதியானதோர் வாய்ப்பு 📚

ஆஸியில் நிரந்தர வதிவுடமை கொண்டோருக்கு புலமைப்பரிசிலோடு முற்றிலும் இலவசமாக  Master of Teaching கற்கை நெறி ஐ சிட்னிப் பல்கலைக்கழகம் (University of Sydney) வழங்குகிறது.
https://mteach.org.au/

பல்லின சமூகத்தில் தமிழ் மொழிப் பாடத்தினைக் கற்பிக்கும் நீரோட்டத்தில் இணைய விரும்பும் ஆசிரிய சமூகத்துக்கும், வேறு விருப்பப் பாட நெறியைக் கற்பிக்க விரும்புவோருக்கும் கூட இதுவோர் பெறுமதியான வாய்ப்பு.
சிட்னிப் பல்கலைக் கழகத்தின் கல்வித்திட்ட இணைப்பாளர்களாக இயங்கி வரும் ஜனார்த்தன் குமாரகுருபரன் மற்றும் பிரணவி
ராஜசிங்கம் ஆகியோர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோருகிறார்கள்.
விரிவான பகிர்வு இதோ

https://www.youtube.com/watch?v=Ii3t5T6bMh8

பூஜைக்கு வந்த மலர் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


சிறிய பஜெட்டில், குறைந்த செலவில் படம் எடுத்து இலாபம் பார்க்கும் வித்தை அறிந்தவர்கள் முக்தா பிலிம்ஸ் சகோதரர்கள். அண்ணன் ராமசாமி சிக்கனமாக படத்தை தயாரிக்க , தம்பி சீனிவாசன் கூடுமான வரை அதை பிரம்மாண்டமாக திரையில் காட்டி வெற்றி பெற்று விடுவார்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய ஆஸ்த்தான ஹீரோவாக திகழ்ந்தவர் ஜெமினி கணேசன். அவர் நடிப்பில் இவர்கள் தயாரித்த பனித் திரை, இதயத்தில் நீ இரண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற்றதால் தங்களின் மூன்றாவது தயாரிப்பான பூஜைக்கு வந்த மலர் படத்துக்கும் ஜெமினியை கதாநாயகனாக நடிக்க வைத்தார்கள். அவருக்கு ஜோடி சாவித்திரி. ஜெமினி, சாவித்திரி ஜோடிக்கு மவுசு குறையத் தொடங்கிய கால கட்டத்தில் துணிந்து அவர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்கள் இந்த சகோதரர்கள்.

 

படத்துக்கு கதை வசனம் எழுத அவர்கள் தேர்ந்தெடுத்தது புதிதாய்

வளர்ந்து வரும் ஓர் இளைஞரை. அவர் தான் கே. பாலசந்தர். தெய்வத்தாய், சர்வர் சுந்தரம், படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கு கதை வசனம் எழுதினார் பாலசந்தர். உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் மலர்களை போன்றவர்கள்தான் , ஆனால் இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பெண்னும் பூஜைக்கு வந்த மலர் என்ற கருத்தை வியுறுத்தும் விதத்தில் படத்தின் கதையை அமைத்திருந்தார் பாலசந்தர். வசனங்களிலும் அவர் தனது திறனை வெளிப்படுத்தியிருந்தார்.
 

ரவியும், சுரேஷும் இணை பிரியா கல்லூரி நண்பர்கள். கல்லூரியில் ரவி செய்யும் ஒரு தவறை சுரேஷ் தன் தலையில் சுமந்து அதனால் கல்லூரியில் இருந்து நீக்கப் படுகிறான். பின்னர் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள். அங்கே சுரேஷ் மீது ஒரு பழி விழ , அவனின் உயர் அதிகாரியான ரவி தனது காதலி மாலாவின் சாட்சியத்தை ஏற்று சுரேஷை வேலையில் இருந்து நீக்கி விடுகிறான். இதனால் சுரேஷ் ரவியை தனது பரம வைரியாக வரித்துக் கொள்கிறான். இதனிடையே சித்ராவை சந்திக்கும் சுரேஷுக்கு அவள் மீது காதல் ஏற்றப்படுகிறது. சித்ராவும் அவனை விரும்புகிறாள். ஆனால் சித்ரா ரவியின் தங்கை என்ற விபரம் சுரேஷுக்கு தெரியாது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் சித்ரா சுரேஷ் திருமணம் நடக்கவிருக்கும் சமயம் சித்ரா ரவியின் தங்கை என்ற விபரம் சுரேஷுக்கு தெரிய வருகிறது. திருமணமும் தடைப் படுகிறது. ஆனாலும் சுரேஷ்தான் தன் கணவன் அவன் மறுத்தாலும் அவனுடனேயே வாழ்வேன் என்று அவன் வீட்டுக்குளேயே புகுந்து விடுகிறாள் சித்ரா. அதன் பின் நடப்பதென்ன என்பதே மீதி படம்.

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

24-05- 2025  Sat: தமிழ் வளர்த்த சான்றோர் விழா - அருள்மிகு சிட்னி முருகன் கோயில் கலாசார மண்டபம் - மாலை 4.45 மணி

25-05- 2025  Sun:   திருக்குறள் மனனப் போட்டி –   சிட்னி துர்க்கை அம்மன் கோயில் - தமிழர் மண்டம் - முற்பகல் 9.00 மணி

25-05- 2025 Sun:   சமய அறிவுத் திறன் போட்டியும், திருமுறை ஒப்புவித்தல் போட்டியும்  -சிட்னி துர்க்கை அம்மன் கோயில் - தமிழர் மண்டம் - முற்பகல் 11.00 மணி

07-06- 2025  Sat: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta

08-06- 2025  Sun: சிட்னி இசை விழா - Riverside Theatre, Paramatta

15-06- 2025  Sun :  சைவமன்றம் வழங்கும் இசை நடன நிகழ்வு

25-06- 2025  Sat:  ETA presents Charity Night 2025 - Dinner Dance - Roselea Community Centre, Carlingford

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை அரசாங்கம் எவ்வாறு நோக்க வேண்டும்?

கலாநிதி ஜெகான் பெரேரா

நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்கள் அண்மைக்காலத்தில் நாம் கண்டிராத அளவுக்கு அரசாங்க அதிகார துஷ்பிரயோகங்கள் இல்லாமல் முடிவடைந்தன. முன்னைய அரசாங்கங்களினால் முன்னைய தேர்தல்களின்போது செய்யப்பட்டதைப் போன்ற பெருமளவிலான துஷ்பிரயோகங்கள் இல்லாமல் இந்த தேர்தல்கள் நடைபெற்றதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறியிருக்கின்றன.

ஆளும் தேசிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சி பெற்ற வாக்குகளின் இரண்டு மடங்கையும் விட கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

ஆனால், கடந்த வருடத்தைய இரு தேசிய தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கில் அதற்கு கிடைத்ததைப் போன்ற வலிமையான ஆதரவை இந்த தடவை பெறமுடியவில்லை.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பதால் தேசிய மக்கள்  சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் விசேட முக்கியத்துவம் வாயந்தவையாக இருக்கும்.

இலங்கைச் செய்திகள்

வடக்கில் தனிக்கட்சியாக முன்னிலையில் தமிழரசு : அ.இ.த.கா, ஜ.த.தே.கூ, தே.ம.ச, ஐ.ம.ச, ஈ.பி.டி.பி ஆகியன சில சபைகளில் ஆதிக்கம்

கிழக்கில் தமிழ் பேசும் பகுதிகளில் ஆசனங்களை கைப்பற்றியுள்ள கட்சிகள் !

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!

முல்லைத்தீவையும் கைப்பற்றியது இலங்கை தமிழ் அரசுக் கட்சி

கிளிநொச்சி இலங்கை தமிழரசுக் கட்சி வசம் !

வவுனியா மாவட்டத்தின் இறுதி முடிவுகள் : மாநகர சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வசம் 


வடக்கில் தனிக்கட்சியாக முன்னிலையில் தமிழரசு : அ.இ.த.கா, ஜ.த.தே.கூ, தே.ம.ச, ஐ.ம.ச, ஈ.பி.டி.பி ஆகியன சில சபைகளில் ஆதிக்கம் 

Published By: Vishnu

07 May, 2025 | 08:08 PM
image

ஆர்.ராம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

உலகச் செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் !   

பரேஷன் சிந்தூர் மூலம் பாக். பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: இந்தியமத்திய அரசு விவரிப்பு

புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் தெரிவு : பாப்பரசர் 14 ஆம் லியோ என அழைக்கப்படுவார்

ஜம்முவில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் ; சைரன் ஒலிப்பு, மின்சாரம் தடை

போரால் ஏற்பட்டுள்ள கடுமையான நிலை குறித்து பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் குழு கூடி ஆராய்வு !

ஒப்பரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலை ஆரம்பித்தது இந்தியா : 9 முகாம்கள் மீது திடீர் தாக்குதல்!




இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் !   

10 May, 2025 | 07:39 PM

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன இரு தரப்பு போர் நிறுத்தத்துக்கு இணங்கியிருக்கின்றன.

இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் உதவி பிரதமர் இஷாக் டார்ரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்தியாவும் பாகிஸ்தானும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்கள் மற்றும் பதில் தாக்குதல்களை நடத்திய பின்னர், "முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு" இணங்கயுள்ளமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 49 “நூல்களைப் பேசுவோம்”


நாள்:
         சனிக்கிழமை 17-05-2025       

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 வழி:  ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

 

நூல்களைப் பேசுவோம்:

ஏ. இராஜலட்சுமியின் “ஆடை வடிவம் அழகு” - சங்கம் காட்டும் தோற்றம்

உரை: முனைவர் இரா.பிரேமா       


ப.அமிர்தவள்ளியின்  “கால் நனைத்த பொழுதுகள்”

உரை: முனைவர் இரா.தமிழரசி


பா.இரவிக்குமார் - ப.கல்பனா ஆகியோரின்

“காயங்களால்  மறைக்கப்பட்டவர்கள்”  (பர்மியக் கவிதைகள்)

உரை: கவிஞர் மனுஷி


இரா.இராகுலனின் “பால்வெளியில் நீந்தும் உடற்படகு”

உரை: கவிஞர் சி.சிவராஜ் (இல்லோடு சிவா)


சர்வேஷ்வரன் வில்வரசனின் “பசி உறு நிலம்”

உரை: லுக்சிகா விநோதன்


ஒருங்கிணைப்பு:   அகில் சாம்பசிவம்

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2025

 


திருக்குறள் மனனப் போட்டி – 25/05/2025

 



சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த திருக்குறள் மனனப் போட்டிகள் மே மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பிரிவுகள்

பிறந்த திகதி விபரம்

பாலர் ஆரம்ப பிரிவு

01.08.2020 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்

பாலர் பிரிவு

01.08.2018 க்கும் 31.07.2020 க்கும் இடையில் பிறந்தவர்கள்

கீழ்ப்பிரிவு

01.08.2016 க்கும் 31.07.2018 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மத்தியபிரிவு

01.08.2013 க்கும் 31.07.2016 க்கும் இடையில் பிறந்தவர்கள்

மேற்பிரிவு

01.08.2010 க்கும் 31.07.2013 க்கும் இடையில் பிறந்தவர்கள்

அதிமேற்பிரிவு

01.08.2006 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள்

 

பங்குபற்றுவர்களின் முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக 

மே மாதம் 24ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com    என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் போட்டிக்கான விதிமுறைகள்,  புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்