மரண அறிவித்தல்

.

சட்டத்தரணி பற்றீசியா சத்தியபாமா டொமினிக்

மறைவு  - 04.11.2014

கொழும்பைப் பிறப்பிடமாகவும் சிட்னி, அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சட்டத்தரணி  பற்றீசியா சத்தியபாமா டொமினிக் அவர்கள் 4.11.2014 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் பேராசிரியர், கலாநிதி, சட்டத்தரணி, போல் டொமினிக்கின்  அன்பு மனைவியும் செல்வி பேனடெற் ஜெரால்ட்  இன் அன்புத் தாயாரும்,
ஜெரால்ட்  இன் அன்பு மாமியாரும், அமொஸ் டானியேல், சந்தனா ஜெனஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ் சென்றவர்களான சாமுவேல், மேரி பரமேஸ்வரி சவரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளுமாவார்.

அன்னார் காலஞ்சென்ற ரீட்டா, ரேமன், காலஞ்சென்ற தர்மன், யுபுரோ, போல், டீரியா, சுசீலா,குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சிறிலின் புஸ்பராணியின் அன்பு மச்சாளுமாவார்.

இவர் Holy Family Convent, பம்பலப்பிட்டி இன் பழைய மாணவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக
வெள்ளிக்கிழமை (நவம்பர் 7 ஆம் திகதி)
மாலை 6 மணி முதல் 9 மணி வரை
St Gerard Church
543 North Rocks Rd, Carlingford NSW 2118 இல் வைக்கப்படும்

இறுதி மரியாதை
சனிக்கிழமை (நவம்பர் 8 ஆம் திகதி)
காலை 8 மணி முதல் 9.30 மணி வரை
1 Metcalf Avenue,
Caringford NSW 2118 இல் செலுத்தப்பட்டு

திருப்பலியும் தகனமும்
சனிக்கிழமை (நவம்பர் 8 ஆம் திகதி)
காலை 10.15 மணி முதல்12 மணி வரை
Mary Mother of Mercy Chapel
Barnet Avenue, Rookwood Cemetery
 NSW 2141 இல் இடம் பெறும்

மேலதிக விபரங்களுக்கு
ஜெரால் 0439 266 578
செல்வி 0451 960 001

என்தாய் - Norway Nackeera

.





காலம் பூராய் தாதியாய்
சமையல்காரியாய்
கட்டில் பிணமாய்
அடுக்களைக்கும் 
படுக்கையறைக்கும்
மரதநோட்டம் ஓடியப் பிள்ளைப்பெற்ற தாய்மெசின்
சேடம் இழுக்கும் போது கூட
வெளியில் போகும் அப்பாவைக் கூப்பிடுகிறது
'தொப்பியப்பா
வெளியில் குளிர்"
குளிரோடி நான் உறைந்து போகிறேன்.
Attachments area


சிட்னிக் கம்பன் விழா 2014


இறையருளால் சிறப்பாக அரங்கேறியிருந்தது சிட்னிக் கம்பன் விழா 2014. தமிழ் ஆர்வலர் பலரும் பாராட்டியும் வாழ்த்தியும் இளைஞர்களை ஊக்குவித்திருந்தனர். தரமான-அறிவார்ந்த இயல் நிகழ்வுகளை இவ்வருடமும் களம் ஏற்றியதில் மட்டற்ற மகிழ்ச்சி. சிட்னி வாழ் தமிழ் அன்பர்களது ஆதரவால் சாத்தியமான நிகழ்வு இக் கம்பன் விழா. உங்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள். அனைத்து அனுசரணையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் கழக நலன் விரும்பிகள் அனைவருக்கும் எம் நன்றிகள். கம்ப வாரமாக மெல்பேர்ண் கம்பன் விழாவோடு (12.10) ஆரம்பித்த எம் நிகழ்வுகள், சிட்னியில் ஆகுதியான 'ஞான வேள்வி' (14, 15, 16/10) மற்றும் இரு நாள் சிட்னிக் கம்பன் விழாவோடு (18, 19/10) நிறைவு பெற்றிருந்தது. சிட்னிக் கம்பன் விழா பற்றிய கருத்துக்களைப் பேராசிரியர் ஞானா குலேந்திரன் அம்மையார் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார்.

சிட்னி முருகன் ஆலயத்தில் திருஊஞ்சல்

.

மெல்பேணில் நாடக பட்டறை கருத்தரங்கு 09.11.2014

.

கண்டி வீரன் - சோபாசக்தி

.
சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகுஅபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில்சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாகமரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனைவிலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். நான் கண்டி வீரனைப்பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே இது எப்படி நடந்திருக்கக் கூடும்என யோசித்து வந்திருக்கிறேன். கண்டி வீரனின் கதையை எழுதவேண்டும் என்பதில் நான் வெகு ஆர்வமாயிருந்தேன். ஆனால் இதுஎவ்வாறு நிகழ்ந்திருக்கும் என என்னால் கற்பனையே செய்யமுடியவில்லை.
அண்மையில் நான் லியோ டால்ஸ்டாய் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்தேன். ‘யானையைக் கட்டியாரால் தீனி போட முடியும்” என்றொரு நீளமான தலைப்போடு அந்தக் கதையை ஆக்கூர்அனந்தாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தக் கதை அய்ரோப்பாவில் 1897-ல் நடந்தகதை. ஆனால் அந்தக் கதை போலத்தான் 1984-ல் சிலோனில் நடந்த கண்டி வீரனின் கதையும்இருந்திருக்க முடியும் என எனக்குத் திடீரெனத் தோன்றியது. வேறெப்படித்தான் கண்டி வீரன்சாவிலிருந்து தப்பித்திருக்க முடியும் சொல்லுங்கள்!
எனவே நான் ஆசிரியர் டால்ஸ்டாயின் அந்தக் கதையை வாங்கி அதற்குள் கண்டி வீரனின்சரித்திரத்தைப் புகுத்திச் சொல்வதற்கு நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்
சிலோனில் 1984 காலப் பகுதியில் பெரிதும் சிறிதுமாக முப்பத்தேழு தமிழ் ஆயுதப் போராட்டஇயக்கங்கள் இருந்ததாக ஒரு கணக்கு. அந்த முப்பத்தேழு இயக்கங்களிலும் ஆகச் சிறிய குட்டிஇயக்கத்திற்குப் பெயர் ‘சோசலிஸத் தமிழீழப் புரட்சிகர இயக்கம்’ ( ஆர்.ஓ.எஸ்.ரி.ஈ). சுருக்கமாக‘ரோஸ்டி’ என அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

சைவ மன்றம் வழங்கும் வயலின் இசை 09.11 .2014

.

கம்பஹா மாவட்டத்தில் இந்து தமிழ் மத்திய கல்லூரிக்கு வைரவிழா.- முருகபூபதி

.
இலங்கை    மேல்மாகாணம்    கம்பஹா   மாவட்டத்தில்  ஒரே      ஒரு   இந்து    தமிழ்   மத்திய        கல்லூரிக்கு     வைரவிழா.
நீர்கொழும்பில்    மூத்த  தமிழ்  அன்பர்கள்   60  ஆண்டுகளுக்கு   முன்னர்   உருவாக்கிய   கல்விக்கலங்கரை  விளக்கம்.
    
                                              
இலங்கையில்   மூவின   மக்களும்   ஐந்து  மதப்பிரிவினரும்  நீண்ட நெடுங்காலமாக   வாழும்  ஒரு  பிரதேசம்   நீர்கொழும்பு.   இந்துமாகடலை  அண்டிய   நெய்தல்  நிலம்.    முதலில்   போர்த்துக்கீசரும்    பின்னர்   ஒல்லாந்தரும்    அதன் பின்னர்  பிரிட்டிஷாரும்  ஆக்கிரமித்தமையினால்   கத்தோலிக்க    மற்றும்  புரட்டஸ்தாந்து   மதப்பிரிவினரும்  தத்தமக்கு தேவாலங்களை   கட்டி  எழுப்பினர்.
பௌத்த   சிங்கள  மக்கள்  செறிந்து  வாழும்  ஹங்குருக்கார  முல்லை  என்ற பகுதியில்  பௌத்த  விஹாரை   தோன்றியது.
முஸ்லிம்கள்   காமச்சோடை,  பெரியமுல்லை,  கம்மல்துறை   முதலான   பிரதேசங்களில்    படிப்படியாக   வாழத்தலைப்பட்டு  அவர்களும்   அவ்விடங்களில்   மசூதிகளை    உருவாக்கினர்.

கத்தோலிக்கர்கள்   முன்னக்கரை,   குட்டித்தீவு ,  குடாப்பாடு, நஞ்சுண்டான்கரை,     ஏத்துக்கால்,  பலகத்துறை,   தோப்பு,  கொச்சிக்கடை, முதலான   பிரதேசங்களில்    செறிந்து  வாழ்ந்தனர்.  இவர்களில்  பெரும்பான்மையானோர்   கடலை  நம்பி  வாழ்ந்த  மக்கள்.  பெரும்பாலான  முஸ்லிம்கள்   வர்த்தகத்திலும்  ஆசிரியப்பணிகளிலும்  ஈடுபட்டனர்.
கத்தோலிக்க   மக்களில்  வர்ணகுலசூரியர்  என்ற  பிரிவினர்  கடலையும்   குருகுலசூரியர்   என்ற  பிரிவினர்  கல்வி   மற்றும்  அரச உத்தியோகங்களையும்   நம்பி  வாழ்ந்தனர்.
சிங்கள  பௌத்தர்கள்   வர்த்தகத்திலும்    கல்வி,    அரசுப்பணி  மற்றும் தனியார்  துறைகளிலிருந்து   தொழில்   வருமானத்தை   தேடினர்.

விழுதல் என்பது எழுகையே".. பகுதி 24 -25 - நயினை விஜயன்

.

31.10.2014 "விழுதல் என்பது எழுகையே".. பகுதி 24 -25 எழுதுபவர் திரு.நயினை விஜயன் அவர்கள் (யேர்மனி) "தமிழருவி" நயினை விஜயன் அவர்கள் அறிமுகம் 1979 முதல் எமது தாய்மொழிக்காகவும்,கலைவளர்ச்சிக்காகவும் இன்றுவரை அயராது உழைத்துக்கொன்டிருப்பவர். 20 ஆண்டுகளாக எசன் நகரில் தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நுண்கலைகல்லூரியை நடாத்தி வருபவர்...

தமிழருவி நயினை விஜயன் அவர்கள் அறிமுகம்
1979 முதல் எமது தாய்மொழிக்காகவும்இகலைவளர்ச்சிக்காகவும் இன்றுவரை  அயராது உழைத்துக்கொன்டிருப்பவர்.
20 ஆண்டுகளாக எசன் நகரில் தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நுண்கலைகல்லூரியை நடாத்தி வருபவர்.150 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலைகளைப் பயின்று வருகிறார்கள்.எமது பாரம்பரியக் கலைகளை 3 தலைமுறைக் குழந்தைகளுக்கு பதியமிட்டுள்ளார்.இவரது சேவைப்பாரட்டி தென்னபிரிக்கத் தமிழர்களும்இ பெங்களூர் டாக்டர்.அம்பெத்கார் பல்கலைகழக முதல்வரும் பாராட்டி வாழ்த்திஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.உ.த.ப.இயக்க தலைவர் பேராசிரியர் இர.ந.வீரப்பன் அவர்களால் தமிழவேள் என சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழிசைத் துறைக்கு யெர்மனியில் காத்திர்மான பங்களிப்பைசெய்துள்ளார் இவரது முயற்சிகளுக்கு ஆசிரியையான திருமதி.சசிகலா விஜயன் உற்ற துணை என்பதை என்றும் நினைவில் கொள்வார்.
இவர் ஒரு செயல்பாட்டு வீரர். துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டவர் கம்பீரமான இவருடைய நடவடிக்கைகள் வியந்து பார்ந்து மனம் கொள்ளத் தக்கவை.
தனது நகரத்தில் நடைபெறும் வெளிநாட்டவர் வாரத்தில் தமிழரின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை பல்கலாச்சார  நிகழ்ச்சிகளில் பங்காற்றச் செய்பவர்.

காலத்தின் தூசி படிந்த புகைப்படங்கள்!

.

ஒருநாள் அம்மாவின் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படம் ஒன்றை துணியால் துடைத்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் முகம் பளிச்சென்றே தெரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, புகைப்படத்தில் படிந்திருந்தது அழுக்கல்ல, காலம் என்று!
இப்படி காலத்தின் தூசி படிந்த எத்தனையோ புகைப்படங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கின்றன. எங்கள் வீட்டுச் சுவர்களை வரிசை வரிசையாக அலங்கரித்த கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படங்கள் நாங்கள் 'டவுன்வாசிகள்' ஆன பிற்பாடு சுவர்களிலிருந்து கழற்றப்பட்டு அட்டைப் பெட்டியிலும் ஜாதிக்காய்ப் பெட்டியிலும் தாள்களால் சுற்றப்பட்டு தஞ்சம் புகுந்துவிட்டன.
எப்படியோ என் குழந்தைகளின் கையில் நான் தஞ்சாவூர் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு படித்தபோது எடுத்த புகைப்படம் கிடைத்துவிட்டது. அந்தப் புகைப்படத்தில் நான் எங்கிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க அவர்களுக்குள் 'போட்டா'போட்டி!
காரை பெயர்ந்த பள்ளிக்கூடத்தின் பின்புறம் செங்கற்கள் துருத்திக்கொண்டிருக்கும் சுவரின் பின்புலத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பாமரனின் முல்லைத்தீவில் கழித்த சிலமணி நேரங்கள் :

  அறையென்று அழைக்கப்பட்டாலும் அது அறையல்ல……


WP_20140817_011

தோழர் பாமரன் நான் மதிக்கும் பகடி எழுத்தாழர்களில் முக்கியமானவர் . கோவையில் ஒரு வேலையின் நிமித்தம் போக நேரிட்டபோது , எப்படியாவது என் லட்சிய  எள்ளல் நாயகனைச் சந்தித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து அவரைத் தொலைபேசியில் அழைத்தேன் , வாங்க தோழர் என்றார் . இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் இருக்கும் அத்தனையும் நேரில் காணும் , பொறாமைப் பட வைக்கும் அந்த அறையென்று அழைக்கப்படாத அறையின் தரிசனம் கிட்டியது , சில பீர் பாட்டில்கள் , சிகரெட்டுகள் , பொட்டலச் சாப்பாடு என கல்லூரிக் கால அறைகளுக்கான எல்லா குணநலன்களோடு , அமைந்திருந்தது , அனால் அந்த அறையென்று அழைக்கப்படாத அறையின் முக்கிய அம்சம் , நிரந்தர , தற்காலிக நண்பர்கள் நிரம்பி இருந்ததுதான் , கலவையான மனிதர்கள் , வேறு வேறு துறை சேர்ந்த , விவாதங்களுக்கும் , கருத்துப் பரிமாறுதலுக்கும் பிரபஞ்சமே எல்லையாக இருந்தது அந்த அறையென்று அழைக்கப்பட்டாலும் அறையல்லாத அரை , மீண்டும் கோவை செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை , கிடைத்தால் , இந்தப் புது அறையில் அரை நாளேனும் கழிக்க வேணும் .. இப்ப்போது எம் எள்ளல் நாயகனின் வார்த்தைகளில் 
............அறையென்று அழைக்கப்பட்டாலும் அது அறையல்ல. ஐந்தாறு அறைகள். அதற்காக வீடென்றும் அழைக்க முடியாது. வீட்டிற்கான அடையாளங்கள் எதுவும் அங்கிருக்காது. வேண்டுமானால் கூடென்று சொல்லலாம். கூட்டிற்கான பிரதான நிபந்தனைகளில் ஒன்று அங்கு எங்கும் நாட்காட்டியோ…. கடிகாரமோ இருக்கக்கூடாது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்த நாள் (அக்டோபர் 29, 1950)
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
Ponniyin selvan

போலியோ இல்லா உலகம், நன்றி Dr. ஸால்க் அவர்களே!

.
இன்று கூகுள் திறந்தவுடன் கண்ணில் பட்டது Dr. ஸால்க் அவர்களின் நூறவது பிறந்தநாள் வாழ்த்து .  Dr. ஸால்க்  என்றவுடன் பலருக்கு யாரென்று தெரிய வாய்ப்பில்லை, ஆனால் பல கோடி குழந்தைகளை ஊனமாகாமல் காப்பாற்றிய பெருமை உடையவர் அவர். பிஞ்சு குழந்தைகளை ஊனமாக்கிய போலியோ வைரஸ்க்கு தடுப்பு ஊசி கண்டுபிடித்தவர் அவர்.

Source: Google doodle

1939 ஆம் ஆண்டு மருத்துவ பட்டம் பெற்று மருத்துவராக நியூயார்க் நகர மவுண்ட் சினாய் மருத்துவமனையில் தனது ஆராய்ச்சியை தொடங்கிய அவர் 1947 ஆம் ஆண்டு பிட்ச்புர்க் பல்கலைகழகத்தின் வைரஸ் ஆராய்ச்சியை தொடங்கினார்.

மனித உடலில் செயல் இழந்த வைரஸ்களை செலுத்தி எதிர்ப்பு சக்தியை தூண்டும் முறையைபயன்படுத்தி  அதனை தடுக்கும் முறையை கண்டுபிடித்தவர் இவர். இதுவே பல நோய் தடுப்பு ஊசிகளை கண்டுபிடிக்க உதவியது.

மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம்

.
மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.
ரெஹானா ஜப்பாரி.
ரெஹானா ஜப்பாரி.










அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?
இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள். என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே? அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும்.
சாவும் கடைசி அல்ல

சுற்றம் இருந்தும் தனிமை: பேரன், பேத்தி

.

சுற்றம் இருந்தும் தனிமை: பேரன், பேத்திகளோடு எப்போது தீபாவளி கொண்டாடப் போறோம்?- முதியோர் இல்லவாசிகளின் பாசப் பரிதவிப்பு‏


நாகர்கோவில் `ரோஜாவனம்’ இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய முதியோர்
நாகர்கோவில் `ரோஜாவனம்’ இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய முதியோர்
குழந்தை பருவத்தில் குதூகலித்து, இளமையில் ஆடி அனுபவித்து நடுத்தர வயதில் வாரிசுகளுக்காக ஓடாய் உழைத்த பலர், இன்று முதுமை எனும் வாசலில் மனம் நிறைய ஏக்கங்களுடன் பாசத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக காப்பகங்களில் வாடும் முதியவர்களின் உணர்வுகளைப் பண்டிகைகள்தான் அவ்வப்போது தொட்டுப்பார்க்கின்றன.
நாகர்கோவிலில் `ரோஜாவனம்’ எனும் முதியோர் இல்லத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை கொடுத்து, செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கான தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள் கைகளில் மத்தாப்பு சிரித்தாலும், அவர்களின் முகம் ஏனோ பூரித்திருக்கவில்லை.
அங்கு தங்கியிருந்த தென்காசியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ராஜம் (86) கூறும்போது, ‘என் பையன் பாசமானவன். டெல்லி யில் நல்ல வேலையில் இருக்கிறான். என் கணவர் 5 வருஷத்துக்கு முன் னால இறந்துட்டாரு. பணம் இருக்கு, வசதி இருக்கு. ஆனா மகன் பக்கத் தில் இல்லை. டெல்லியில் 2 மாசம் இருந்தேன். அபார்ட்மென்ட் வாழ்க்கை பிடிக்கலை. இங்கு வந்துட்டேன். தீபாவளி நெருங்கும் வேளையில் என் பேரன், பேத்தி ஞாபகம் அதிகமா வருது’ என்றார் கண்ணீர் மல்க.

வெற்றிக்கா​ன 14 மந்திரங்க

.
மந்திரங்கள் சில நேரங்களில் தந்திரங்களாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் புத்தமதம் மற்றும் இந்து மதத்தினை சேர்ந்தவர்கள் தியானம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மந்திரம் போன்ற சில வார்த்தைகளை உச்சரிப்பதை அநேக இடங்களில் பார்த்திருக்கிறோம். இது ஆன்மீக ரீதியாகவோ அல்லது விஞ்ஞான ரீதியாகவோ அணுகுவோருக்கு வெவ்வேறு பார்வையில் தோன்றும். தியானம் செய்யும் போது இவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் பார்ப்பவர்களின் மனதிற்கு மந்திரங்களாகத் தோன்றுகின்றன. உண்மையில் இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று பலமுறை நினைத்ததுண்டு. அதன் காரணம் என்னவென்றால் அவர்கள் தங்களது தியானத்தில் கவனம் செலுத்த ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான மந்திரங்களை பயன்படுத்துவதுண்டு. இதேபோல்தான் நாமும், நாம் நினைத்த காரியத்தில் நமது கவனத்தினை வைக்க 14 மந்திரங்கள் உள்ளது. அவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

1. பொறுமையே வெற்றிக்கான வழி
இந்த மந்திரத்தினை புரியும்படி சொன்னால் “ஒரே நாளில் ஒபாமா” ஆக முடியாது என்பதுதான். வெற்றி ஒரே நாளில் கிடைத்திடாது, அதற்கு முக்கியமாக பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு என்ற மூன்றும் அவசியம். இத்துடன் அனுபவமும் ஒன்று சேர்ந்துவிட்டால் வெற்றி கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. நாம் திட்டமிட்டபடி நமது திட்டம் நடைபெறாதபோது கோபம், எரிச்சல் போன்ற தேவையில்லாத எண்ணங்கள் வரும், ஆனால் அதையெல்லாம் தாண்டி பொறுமையுடன் இருந்தால் மட்டுமே வெற்றிக்கனியினை ருசிக்க முடியும்.

கென்னடி, சே குவேரா, காஸ்ட்ரோ, தொலைக்காட்சி… - ஞாநி

 




புரட்சி, ஆயுதப் போராட்டம் போன்றவற்றில் எல்லாம் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு உலகம் முழுவதும் ஆதர்சமான முகம் சே குவேரா. தேர்தல் அரசியல், ஜனநாயகம், நல்லாட்சி போன்றவற்றில் ஈடுபாடுடைய நடுத்தர வகுப்புக்கான சே குவேரா ஒருவர் உண்டென்றால், அது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி. இருவரும் வசீகரமான தோற்றம் உடையவர்கள் என்பதால், ஏறத்தாழ சினிமா நட்சத்திரங்களின் கவர்ச்சி அந்தஸ்தை அடைந்தவர்கள். இருவருக்குள்ளும் மற்றபடி எந்த ஒற்றுமையும் கிடையாது.
சே குவேராவும் கென்னடியும் சம காலத்தவர்கள். ஃபிடல் காஸ்ட்ரோவும் சேவும் புரட்சியை வழிநடத்தி 1957-ல் கியூபாவை விடுவித்தபோது, கென்னடி அமெரிக்க செனட்டராக இருந்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் கென்னடி அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இளம் அதிபரானபோது அவருக்கு வயது 43. சேவுக்கு வயது 33.
கியூபப் புரட்சியும் கென்னடியும்!


மந்திரிமனையினை அரசிடம் வழங்கினால் புத்தர் குடிகொள்வார்; முதலமைச்சர்

news.




மந்திரி மனையினை மத்திய அரசின் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டால் முதலில் அங்கு ஒரு பௌத்த சின்னம் ஒன்று வரும் அதுக்கடுத்ததாக ஒரு புத்தரின் சிலை வரும் அதற்குப் பின்னர் காவி உடுத்தவர்கள் அதற்குப் பின்னர் அங்கு வந்து இருப்பார்கள் பின்னர் அங்கு போவதற்கு முடியாது போய் விடும் எனவே மந்திரி மனையினை வடக்கு மாகாண சபை பாரம் எடுப்பது என்றால் மட்டுமே மேற்கொண்டு பேசமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி .விக்கினேஸ்வரன்  தெரிவித்தார். 
வடக்கு மாகாண சபையின் 18ஆவது மாதாந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது அதன்போது எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் பிரேரணை குறித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
மந்திரிமனை அமைந்துள்ளது யாருக்கு உரிய காணி என்றும் சீனிவாசகம் பிள்ளை தம்பிப்பிள்ளை சமாதியினர் உரிமை கொண்டாட உரித்துள்ளவர்களா என்பது குறித்து அறியவேண்டும். 
அடுத்து இது மந்திரி மனை என்றால் அந்தக் காலத்தில் எவ்வாறு இவர்களிடம் வந்தது என்று அறிய வேண்டும். எனினும் இது மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு என்று முன்னர் பெயர்ப்பலகை இடப்பட்டிருந்தது. 
இருப்பினும் தற்போது அந்த பெயர்ப்பலகையினைக் காணவில்லை. அங்கு வண்டிகள் தரிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருந்தாலும் மத்திய அரசின் கலாச்சார அலுவல்களுக்கு பாரம் கொடுப்பது என்பதை நான் ஆட்சேபிக்கின்றேன். 
எனினும் இதனை வடக்கு மாகாண சபை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக இது மத்திய கலாசார அலுவல்கள்  திணைக்களத்திற்கு கொடுக்கப்பட்டால் முதலில் அங்கு ஒரு பௌத்த சின்னம் ஒன்று வரும் அதுக்கடுத்ததாக ஒரு புத்தரின் சிலை வரும் அதற்குப் பின்னர் காவி உடுத்தவர்கள்  அங்கு வந்து இருப்பார்கள் பின்னர் அங்கு போவதற்கு முடியாது போய் விடும்.
எனவே இதனை ஆராய்ந்து இது யாருக்கு உரியது என்றும் சரித்திரம்  பாரம்பரியம் என்ன என்று அறிந்த பின்னரே மற்றய நடவடிக்கையினை எடுக்க முடியும்.
இவ்வாறான நிலையில் குறித்த தீர்மானம் உடனடியாக கொண்டுவருவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். அடுத்த அமர்வில் பரீசிலிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் யாழ். பல்கலையின் வரலாற்றுத் துறையினர் இருவரின் ஆய்வு அறிக்கையினையும் விவசாய , சுற்றாடல் அமைச்சர் கோரியுள்ளது. 
எனவே பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தற்போது பலர் உரிமை கொண்டாடும் நிலையில் அதனைப்பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு செலுத்தும் வண்ணம் வர்த்தமானியில் பிரசுரத்தை செய்யுமாறு மத்திய கலாச்சார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சினை உரிய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணையினைக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=519123590929741398#sthash.YlaK7jdI.dpuf

தமிழ் சினிமா - பூஜை

.

ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் பூஜை.

கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை பிரிந்து காய்கறி மார்க்கெட்டில் வட்டிக்கு விட்டு பக்காவாக சொந்தக்காலில் வாழுகிறார் விஷால். எதிர்பாராமல் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்திக்கும் திவ்யா எனும் ஸ்ருதிஹாசன் உடன் முதலில் நட்பும், அதன்பின் காதலும் கொள்கிறார் மனிதர்.

பொள்ளாச்சியில் பெரிய மனிதர் அந்தஸ்த்துடன் வாழும் கூலிப்படை தலைவன் அன்னை தாண்டவம் எனும் வில்லன் முகேஷ் திவாரியிடம் மோதுகிறார். சொந்த பகைக்காவும், அதேநேரம் விஷாலின் குடும்பத்துடனான பெரும்பகைக்காவும் விஷாலை தீர்த்துக்கட்ட துடிக்கும் முகேஷ், விஷாலை வென்றாரா.? விஷால், முகேஷை கொன்றாரா.? எனும் அதிரடி ஆக்ஷ்ன் கதையுடன், விஷால்-ஸ்ருதியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி அதிரடியாக, அதேநேரம் லவ், காமெடி, சென்ட்டிமென்ட் என ஜனரஞ்சகமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி, பூஜை போட்டிருக்கிறார் இயக்குநர் ஹரி!

வாசு எனும் வாசுதேவனாக விஷால், செய்யாத குற்றத்திற்காக குடும்பத்தை பிரிந்து தாயின் அன்பிற்கு ஏங்கும் காட்சிகளிலாகட்டும், ஸ்ருதிஹாசன் உடனான காதல் காட்சிகளாகட்டும், ஒற்றை ஆளாய் 30-40 ஆட்களை அடித்து துவம்சம் செய்வதிலாகட்டும், சூரியுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் கலக்குவதிலாகட்டும்... அனைத்தையும் அசால்ட்டாக செய்து சக்கைபோடு போட்டிருக்கிறார். கீப்ட்-அப் விஷால்!

ஸ்ருதி, திவ்யாவாக நடிப்பிலும், இளமை துடிப்பிலும், 16 அடி, இல்லை இல்லை... 32 அடி பாய்ந்திருக்கிறார். அம்மணி காட்டுவது ஓவர் கிளாமர் என்றாலும் அது ஓவராக தெரியாதது ஸ்ருதியின் ப்ளஸ்!

பரோட்டா சூரி - பிளாக் பாண்டி - இமான் அண்ணாச்சி கூட்டணி, கவுண்டமணி-செந்தில் அண்ட் கோவினரை நம் கண்முன் ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறுத்துகிறது என்றால் மிகையல்ல. அதிலும் அந்த உரித்த வாழைப்பழ காமெடி செம சிரிப்பு.

விஷால் - ஸ்ருதி - சூரி அண்ட் கோவினர் மாதிரியே, போலீஸ் ஆபிசராக வரும் சத்யராஜ், விஷாலின் அம்மாவாக வரும் ராதிகா, சித்தாரா, ரேணுகா, கெளசல்யா(பழைய கதாநாயகிகள் மீது இயக்குநர் ஹரிக்கு அப்படி என்ன ஈர்ப்போ...?), தலைவாசல் விஜய், ஜெய்பிரகாஷ், பிரதாப் போத்தன், வில்லன் முகேஷ் திவாரி உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், இப்படியே... என தொடங்கும் பாடல் உள்ளிட்ட 6 பாடல்களும் நச் என்று இருக்கிறது. ப்ரியனின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன்-டி.எஸ்.ஜாய் இருவரது படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், பூஜைக்கு மாவிலை தோரணம் கட்டியிருக்கின்றன.

ஹரியின் எழுத்து-இயக்கத்தில், பூஜை படம் படு ஸ்பீடாக செல்வது, இந்த தீபாவளி ரேசில், இளைய தளபதியை காட்டிலும், புரட்சி தளபதியின் படத்திற்கு மவுஸை கூட்டியிருக்கிறது.

ஆகமொத்தத்தில், விஷால்-ஹரி கூட்டணியின் பூஜை - ஆர்டினரி பூஜை அல்ல, அசத்தும் அதிரடி ஆயுத பூஜை!
- See more at: http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1369&ta=I#sthash.KMX4jDiF.dpuf