பேராசிரியர் துரைராஜா; அவரின் 78 ஆவது பிறந்ததினம் 10.11.2011


Posted Image

யாழ்ப்பாண சமூகத்தின் சாதாரண குடும்பத்தில் பிறந்து யாழ்ப்பாணத்துச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா.

இளமையில் உடுப் பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக் கழகத்துக்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியியல் விஞ்ஞான பட்டம் பெற்றுபின் பிரிட்டனில் கலாநிதிப் பட்டம் பெற்றுப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராய், பேராசிரியராய், பீடாதிபதியாய் சேவையாற்றி யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராய் பணியாற்றிய எமது பேராசிரியரை நினைவு கூர்வது சாலப் பொருந்தும்.

சிட்னி துர்கை அம்மன் கோவிலில் திருமுறை பண்ணிசை விழா

.





முதுமை - புங்கையூரன்

.





கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன்.

கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு!

கால்கள் மூன்றாகி நடக்கையில்,

மனம் மட்டும், அங்கும் இங்குமாய்,

மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது!

காலம் தான் எவ்வளவு குறுகியது!

கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில்,

யாரோ பந்து விளையாடுகின்றார்கள்!

களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள்,

காதுக்கு இனிமையாய் இருக்கின்றன!

கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது!

அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில்,

ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது!


இலங்கைச் செய்திகள்

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்துக்கு எதிரான பிரசாரங்கள்
* எதிரணியின் கிளர்ச்சிக் கனவு
* இலங்கைத் தமிழர்களைத் திருப்பியனுப்பும் சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அகதி அமைப்புகள் கடும் கண்டனம்
* இலங்கையில் ஏழு இரகசிய முகாம்கள் இயங்குவதாக ஐ.நாவில் தெரிவிப்பு
* அரசாங்கத்தின் காணிப்பதிவு அறிவித்தல் இடைநிறுத்தம் மேன் முறையீட்டு நீதிமன்றம் பணிப்பு
*  திடீர் பொலிஸ் பதிவு ; மக்கள் அச்சத்தில்
* சட்டத்தின் ஆட்சியின் அவசியம்
* இணையத்தளங்கள் தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவு
* கொடிய போரினால் பாதிக்கப்பட்டு காணாமற் போன ஆயிரக்கணக்கானவர்களை அவர்களது குடும்பத்தினர் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனவரி முதல் விசா கட்டணங்களில் மாற்றம்

தொடரும் பயணம் - நவீன விருட்சத்தில்..

.

ஒரு தேவதையைப் போலதான்
வாழ்ந்திருந்தாள்.
கிரீடத்தில் நட்சத்திரங்களாக
ஒளிர்ந்த வைரங்களுடன்
கூந்தல் நிறம் போட்டி போடவும்
பறத்தலில் வேகம் குறைந்தது.
உதிரும் சிறகுகளால்
வீடெங்கும் குப்பையாவதாக
இறக்கைகள்
வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன.
ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க
அனுமதியில்லை.
நடந்தேனும் ஊர்ந்தேனும்
தனக்கான தானியத்தை
ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

கடைசிகாலத்துக்கு யாழ்ப்பாணத்துக்கு தான்

.
ஊருலகம் எல்ல்லாம் சுத்தி கடைசி காலத்துக்கு உழைத்த காசோடு நம்ம மண்ணுக்கு போகவேணும் என்று சொல்வது போல இந்த விடயத்தலைப்பு அமைந்தவுடன் ஓடொடி வந்தவர்கள் எல்லோருக்கும் நல்வரவு.
இப்படித்தான் முந்தி ஒரு காலத்திலே ”இது வந்திட்டுதோ” என்று விடியற்காலையில் உதயன் பத்திரிகையை பார்ப்பது வழமை,வந்துவிட்டது என்றால் வணிகர்கள் லொறியோடு போவார்கள்,பயணிகள் வருகைக்காக காத்திருக்கும் மக்கள் வாகனத்தோடு அல்லது குறிப்பிட்ட தன் உறவினர் வந்துவிட்டாரா என்று தேடிப்போவர்,”இண்டைக்கு வரவில்லையாக்கும்” என்று எண்ணி ஏமாற்றத்தோடு வீடு திரும்புவர் பலர், சிலர் அறுபட்ட இழுபட்ட பயணிகள் பையையும் தூக்கிக்கொண்டு ”இண்டைக்கு ஒரு மாதிரி அம்மா வந்திட்டா செல்வச்சந்நிதியானுக்கு காவடி எடுக்க வேணும் “ என்று எண்ணியபடி போவர்,

AFTA இனுடைய தகவல் வெளியீடு

மணிமாலை 2011


மனிதன் மட்டும் ஏன் இப்படி..??






றவைகள் எந்த மரங்களையும்
விலைக்கு வாங்கியதில்லை!
இருந்தாலும்..
மரங்கள் யாவும் பறவைகளுக்காகவே
வான் நோக்கி வளர்கின்றன!
 நிலவு என்றும்
இரவைச் சேமித்துவைத்தில்லை!
இருந்தாலும்..
இரவு நிலவை மட்டுமே
எதிர்நோக்கியிருக்கிறது!


உலகச் செய்திகள்


*  உலக அழகி 2011: வெனிசுலா நாட்டு மாணவி தேர்வு!


* ஜக்சன் மறைவிற்கு குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பு

* பாகிஸ்தானில் 4 இந்து வைத்தியர்கள் சுட்டுக்கொலை : நடன மங்கையால் விபரீதம்!


*  இத்தாலிய பிரதமர் பெர்லுஸ்கொனி பதவி விலக இணக்கம்






தமிழ் சினிமா







75 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்தது 7ம் அறிவு


தீபாவளிக்கு வெளியான படங்களில் 75 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்திருகிறது 7-ஆம் அறிவு. ஆனால் விஜயின் வேலாயுதம் 45 கோடியைத் தாண்டமுடியவில்லை.

ஏழாம் அறிவு இன்னும் சில தினங்களில் எந்திரனின் வசூலை மிஞ்சிவிடும் என்று ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்து வரும் சூழ்நிலையில், 7-ஆம் அறிவு டீமில் இருந்து முதல் ஆளாக அந்தபடத்தின் ஹீரோவான சூரியா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி கூறினார்.


அவர் பேசும்போது “ படம் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது என்பதை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூற வேண்டும். எனது நடிப்பில் வரும் ஒவ்வொரு படத்தின் வசூலையும் அடுத்த படம் தாண்ட வேண்டும் என்று நினைப்பேன்.

அதைப் போல எனது ‘சிங்கம்’ படத்தின் வசூலை இப்பவே 7ஆம் அறிவு படம் தாண்டி விட்டது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. 7- ஆம் அறிவு படத்தில் போதிதர்மன் காஞ்சிபுரத்தில் வாழ்த்தாக காட்டி இருப்போம்.

அதைப் போலவே தெலுங்கிலும் அப்படித்தான் காட்டி இருக்கிறோம். தேவையில்லாமல் தெலுங்கில் வெளியான படத்தில் குண்டூரில் வெளியானது போல் காட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதும போன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை. படத்தினை பார்த்துவிட்டு பேச வேண்டும். தெலுங்கு படத்தினை பார்க்காமல் செய்திகளை பரப்புகிறார்கள். இந்தியில் நாங்கள் இன்னும் படத்தினை வெளியிடவே இல்லை. அதற்குள் இந்தியில் போதிதர்மன் தாராவியில் பிறந்து இருப்பது போல் காட்டி இருக்கிறார்கள் என்று செய்தி நிலவி வருகிறது. எப்போதுமே எனது படத்தினை முதல் 10 நாட்களுக்குள் தியேட்டரில் போய் பார்க்க மாட்டேன்.

சில காட்சிகளை இன்னும் கொஞ்சம் நல்ல செய்து இருக்காலமே என்று தோன்றும். முதன் முறையாக ரஜினி சார் வெளியே வந்து பார்த்த படம் ஏழாம் அறிவு. படத்தை பார்த்து பெண்டாஸ்டிக் பிலிம் என்று கட்டிபிடித்து பாராட்டினார்.

அவரிடம் நிறைய நேரம் பேச எனக்கு நேரம் அமையவில்லை. கமல் சார் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவரை பார்க்க சென்றேன். அப்போது என்னை மிகவும் பாராட்டினார். எனது அப்பா 7ஆம் அறிவு படத்தை பார்த்து விட்டு நான் புதிதாக இருக்கும் பெசண்ட் நகர் வீட்டிற்கு வந்து கட்டிபிடித்து அழுது பாராட்டியது எனது வாழ்நாளிலும் மறக்க முடியாத நிகழ்வு.

நான் டிவிட்டர் ,ஃபேஸ்புக் இணையத்தில் எல்லாம் இல்லை. இணையத்தில் அனைவரும் வெவ்வேறு விமர்சனங்கள் வந்து இருக்கின்றன. அவ்வளவு நிறை குறைகள் அனைத்தையும் நான் ஏற்கிறேன். இனிமேல் வரலாற்று படங்களில் நடிப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.

இப்படத்தில் முதல் 20 நிமிட காட்சிகளுக்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. ஒரு பெரிய இயக்குனர் என்னிடம் ஒரு வரலாற்று கதை கூறி இருக்கிறார். இடைவேளை வரை நன்றாக இருந்தது.

அதற்கு பிறகு தயார் செய்து வருகிறார். அனைத்தும் நல்ல விதமாக அமைந்தால் அப்படத்தில் நடிப்பேன். எனது படங்களுக்கு நான்தான் கதை கேட்கிறேன். இயக்குனர் வஸந்த் கதை கேட்டு நான் நடித்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்.

விஜய் சார் இன்னும் 7ஆம் அறிவு படத்தினை பார்க்க வில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரது மனைவிக்கு ஜோ டிக்கெட் கொடுத்து படத்தினை பார்க்க வைத்திருக்கிறார். ” ஒரு படத்திற்கு என்னமா உழைத்து இருக்கிறீர்கள்?!” என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். சந்தோஷமாக இருந்தது.

நானும் இன்னும் வேலாயுதம் படத்தினை பார்க்க வில்லை. வேலாயுதம் ஒரு மசாலா படம் என்றால் 7ஆம் அறிவு வேறு விதமான படம். எனக்கும் மசாலா படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். நானும் இதுவரை பல படங்களில் நடித்து இருக்கிறேன். இரண்டு விதமான படங்களும் மாறி மாறி செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ‘மாற்றான்’ படத்தினை தொடர்ந்து மசாலா படத்தில் தான் நடிக்க இருக்கிறேன்.

‘மாற்றான்’ படத்தில் ஒரு உருவம் இரண்டு தலை உள்ள ஒருவனாக நடிக்கிறேனா என்று கேட்கிறார்கள். அதை பற்றி இப்போது பேசுவது சரியாக இருக்காது. கோடை விடுமுறைக்கு இந்தப்படம் வெளிவர இருக்கிறது. ஹரி படத்தினை பற்றி முழுத்தகவலும் இன்னும் ஒரிரு வாரங்களில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகும்” என்று பேசினார். சூர்யா மட்டும் தனியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்து இருந்தார்.


நன்றி tamilcnn 



ஏழா‌ம்‌ அறி‌வு‌ - வி‌மர்‌சனம்‌
தற்‌கா‌ப்‌பு‌ கலை‌, மருத்‌துவம்‌ என பல கலை‌களி‌ல்‌ பு‌கழ்‌ பெ‌ற்‌றவன்‌ பல்‌லவ மன்‌னர்‌களி‌ல்‌ ஒருவனா‌ன போ‌தி‌தர்‌மன்‌. அவன்‌ சீ‌னா‌ நா‌டு செ‌ன்‌ற போ‌து, அங்‌கு கொ‌டி‌ய வி‌யா‌தி‌னா‌ல்‌ மக்‌கள்‌ இறக்‌கின்‌றனர்‌. அவர்‌களை‌ கா‌ப்‌பா‌ற்‌றி‌, அவர்‌களுக்‌கு மருத்‌துவம்‌, எதி‌ரி‌களை‌ வீ‌ழ்‌த்‌த தற்‌கா‌ப்‌பு‌ கலை‌யு‌ம்‌ என கற்‌றுக்‌கொ‌டுக்‌கி‌றா‌ன்‌. அவரது பு‌கழ்‌ நா‌டு கடந்‌து பே‌சப்‌படுகி‌றது.

அவரது கடை‌சி‌ கா‌லத்‌தை‌ கழி‌க்‌க கா‌ஞ்‌சிபு‌ரம்‌ தி‌ரும்‌ப முடி‌வெ‌டுத்‌த போ‌து, இந்‌த கலை‌கள்‌ மற்‌ற நா‌டுகளுக்‌கு பரவக்‌ கூடா‌து என்‌று உணரும்‌ சீ‌ன நா‌ட்‌டி‌னர்‌, அவருக்‌கு உணவி‌ல்‌ வி‌ஷம்‌ வை‌க்‌கி‌ன்‌றனர்‌. அவர்‌களி‌ன்‌ தவறை‌ மன்‌னி‌த்‌து, அவர்‌களுக்‌கா‌கவே‌ அங்‌கு உயி‌ர்‌ துறக்‌கி‌றா‌ர் போ‌தி‌தர்‌மன்‌‌. அவரது‌ உடலை‌ அங்‌கு அடக்‌கம்‌ செ‌ய்‌வதோ‌டு, அவருக்‌கு கோ‌வி‌ல்‌ கட்‌டி‌ வழி‌ படுகி‌ன்‌றனர்‌. தமி‌ழ்‌ நா‌ட்‌டி‌ல்‌ ஆரா‌ய்‌ச்‌சியி‌ல்‌ ஈடுபடும்‌‌ மா‌ணவி‌ சுபா‌, போ‌தி‌தர்‌மனி‌ன்‌ வரலா‌ற்‌றை‌ ஆரா‌ய்‌ந்‌து வி‌யக்‌கி‌றா‌ர்‌. அவன்‌ வா‌ழ்‌ந்‌த பகுதி‌யி‌ல்‌ செ‌ன்‌று அவனது வம்‌சா‌வழி‌‌ ரத்‌த்‌தை‌ சோ‌தி‌த்‌து அதே‌ மரபனு உள்‌ள ஒரு இளை‌ஞனை‌ கண்‌டு பி‌டி‌க்‌கி‌றா‌ள்‌. அவனை‌ கா‌தலி‌ப்‌பது போ‌ல நடி‌த்‌து, அவனது ஆரா‌ய்‌ச்‌சி‌க்‌கு பயன்‌ படுத்‌த முயற்‌சி‌க்‌கி‌றாள்‌‌.

இந்‌தி‌ய நா‌ட்‌டி‌ல்‌ கொ‌டி‌ய வி‌யா‌தி‌யை‌ உருவா‌க்‌கி‌, அதற்‌கு மருந்‌து தே‌டி‌ தன்‌ நா‌ட்‌டி‌டம்‌ கை‌யே‌ந்‌த வை‌க்‌கவு‌ம்‌, அதன்‌ மூ‌லம்‌ இந்‌தி‌யா‌வை‌ அடி‌மை‌யா‌க்‌க நி‌னை‌க்‌கும்‌ சீ‌னா‌, போ‌தி‌தர்‌மன்‌ பற்‌றி‌ய ஆரா‌ய்‌ச்‌சி‌ செ‌ய்‌யு‌ம்‌ மா‌ணவி‌யை‌ ஒழி‌த்‌து கட்‌டவு‌ம்‌‌, எல்‌லா‌ தி‌றமை‌யை‌யு‌ம்‌ கொ‌ண்‌ட ஒரு இளை‌ஞனை‌ இந்‌தி‌யா‌வு‌க்‌கு அனுப்‌பு‌கி‌றது.

போ‌தி‌தர்‌மனி‌ன்‌ வா‌ரி‌சுக்‌கு அவள்‌‌ தன்‌னி‌டம்‌ கா‌ட்‌டுவது கா‌தல்‌ அல்‌ல, சோ‌தனை‌ என்‌று தெ‌ரி‌ய வரும்‌ போ‌து அதி‌ர்‌ந்‌து போ‌கி‌றா‌ன். சர்‌வ வல்‌லமை‌ பொ‌ருந்‌தி‌ய அந்‌த சீ‌ன நா‌சக்‌கா‌ரனை‌ எதி‌ர்‌க்‌க, சுபா‌ தரும்‌ ஆரா‌ய்‌ச்‌சி‌க்‌கு உதவு‌வதோ‌டு, அந்‌த சீ‌ன இளை‌ஞனா‌ல்‌ நடக்‌க இருந்‌த ஆபத்‌துகளை‌ முறி‌யடி‌த்‌து வெ‌ற்‌றி‌ கொ‌ள்‌கி‌றா‌ன்‌

போதிதர்மன் என்ற துறவி, சர்க்கஸ் கலைஞர் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார் சூ‌ர்‌யா‌. போ‌தி‌தர்‌மனா‌க அறி‌முகமா‌கி‌ற கா‌ட்‌சி‌யி‌ல்‌ வி‌யக்‌க வை‌ககி‌றா‌ர் சூ‌ர்‌யா‌. முறுக்‌கே‌றி‌ய உடம்‌பு‌, மி‌ரள வை‌க்‌கும்‌ பா‌ர்‌வை‌, பதறவை‌க்‌கும்‌ பை‌ட்‌ என அபா‌ரமா‌ன தி‌றமை‌களை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ அந்‌தப்‌‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு வலி‌மை‌ சே‌ர்‌க்‌கி‌றா‌ர்‌.

அதே‌ போ‌ல சர்‌கஸ்‌ கலை‌ஞனா‌க ஆடி‌ப்‌பா‌டி‌, கா‌தல்‌ கொ‌ண்‌டு வி‌ளை‌யா‌ட்‌டு பி‌ள்‌ளை‌யா‌கவு‌ம்‌ கலக்‌குகி‌றா‌ர்‌. பி‌றகு வி‌ல்‌லனை‌ கண்‌டு அதி‌ர்‌ந்‌து, அவனை‌ கண்‌டு ஓடும்‌ போ‌து சரா‌சரி‌ இளை‌ஞனா‌க பளி‌ச்‌சி‌டுகி‌றா‌ர்‌. �தம்‌பி‌ பி‌ரபா‌கரன்�‌ போ‌ல தி‌ருப்‌பி‌ அடி‌ப்‌பே‌ன்‌ என்‌று உரக்‌க பே‌சுகி‌ற போ‌து உரமே‌ற்‌றுகி‌றா‌ர்‌.‌ சண்‌டை‌க்‌ககாட்‌சி‌யி‌லும்‌, நடனத்‌தி‌லும்‌ அவரை‌ அடி‌ச்‌சுக்‌க முடி‌யா‌து என்‌கி‌ற அளவு‌க்‌கு அதரது தி‌றமை‌ பளி‌ச்‌சி‌டுகி‌றது. ஆரா‌ய்‌ச்‌சி‌ மா‌ணவி‌ சுபா‌வா‌க வரும்‌ ஸ்‌ருதி‌, பு‌லி‌க்‌கு பி‌றந்‌தது பூ‌னை‌யா‌கா‌து என்‌பா‌ர்‌களே‌ அதே‌ போ‌ல கமல்‌ மகள்‌ என்‌பதை‌ நி‌னை‌வு‌ படுத்‌துவதோ‌டு, அந்‌தப்‌ பா‌த்‌தி‌ரமா‌கவே‌ வா‌ழ்‌ந்‌தி‌ருக்கிறா‌ர்‌. சீ‌ன இளை‌ஞரா‌க வரும்‌ Johnny Tri Nguyen, அடே‌ங்‌கப்‌பா‌� அதி‌ரடி‌ மி‌ரட்‌டல்‌தா‌ன்‌. அவரது பா‌ர்‌வை‌யு‌ம்‌, பை‌ட்‌டும்‌ பதற வை‌க்‌கி‌றது.

ஒவ்‌வொ‌ரு பி‌ரே‌மை‌யு‌ம்‌ வி‌யக்‌க வை‌க்‌கும்‌ அளவி‌ற்‌கு படமா‌டக்‌கி‌ இருக்‌கி‌றா‌ர்‌ ஒளி‌ப்‌பதி‌வா‌ளர்‌ ரவி‌ கே‌. சந்‌தி‌ரன்‌. பா‌டல்‌ இசை‌யி‌லும்‌, பி‌ன்‌னணி‌ இசை‌யி‌லும்‌ பி‌ரமா‌தப்‌படுத்‌துகி‌றா‌ர்‌ ஹா‌ரீ‌ஸ்‌ ஜெ‌யரா‌ஜ்‌. இன்‌னும்‌ என்‌ன தோ‌ழா‌ என்‌கி‌ற பா‌டலி‌ல்‌ மனதி‌ல்‌ தை‌ரி‌யமூ‌ட்‌டுகி‌றா‌ர்‌. "செ‌ல்‌லலே‌லமா‌ " பா‌டலி‌ல்‌ இளமை‌ துள்‌ளல்‌

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மன் என்ற துறவிக்கு சீனாவில் கோவில் கட்டி சாமியாக வணங்கி வந்‌ததை‌யு‌ம்‌. அவரது வாழ்க்கையை தற்காலத்தில் நடக்கும் ஒரு கதையுடன் இணைந்து படமா‌க்‌கி‌ இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். படமா‌க்‌கி‌ய வி‌தமும்‌, கதை‌ சொ‌ன்‌ன வி‌தமும்‌ பலே‌.

தமி‌ழனி‌ன்‌ வீ‌ரம்‌‌, மருத்‌துவ‌ம்‌, தற்‌கா‌ப்‌பு‌ கலை‌களை‌யு‌ம்‌ உலகம்‌ வி‌யக்‌கும்‌ வண்‌ணம்‌ நி‌னை‌வு‌ படுத்‌தி‌யதற்‌கா‌க இயக்‌குநரை‌ தோ‌ள்‌களி‌ல்‌ தூ‌க்‌கி‌ வை‌த்‌து கொ‌ண்‌டா‌டுவோ‌ம்‌.
நன்றி குசும்பு .com 

விமர்சனம்


வேலாயுதம் - படம் சூப்பர் னா

சமூக அநீதிகளை அழிக்க, ஒரு கற்பனைக் கதாபாத்திரம் உண்மையாக அவதரித்தால்? இதுதான் வேலாயுதத்தின் ஒன் லைன்.

திருப்பாச்சி, கந்தசாமியை கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். விஜய் ஹீரோ என்பதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லி, மும்பை தாண்டி டைரக்டாக சென்னைக்கே வருகிறார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை சீர்குலைக்க பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிடுகிறார்கள். இவற்றையெல்லாம் முறியடிக்க பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயுதம் எனும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அதே நேரத்தில் தங்கை திருமண விஷயமாக சென்னை வருகிறார் விஜய். எதேச்சையாக இரண்டு டைம்லைன்களும் சங்கமிக்க விஜய் வேலாயுதமாக மாறி சமூக அநீதிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படம்.

சரியான கதாபாத்திர தேர்வுகள். சரண்யா மோகன், ஹன்ஷிகா, சந்தானம் என்று அனைவரும் முதற்பாதியை அலுப்புத்தட்டாமல் நகர்த்தியிருக்கிறார்கள். தங்கைக்காக விஜய் செய்யும் சேட்டைகள், பணத்தைத் திருட சந்தானத்தின் முயற்சிகள் என்று முதற்பாதி முழுவதும் சிரிப்பலைகள். வேலாயுதம், போகிறபோக்கில் தீவிரவாதிகளின் சில திட்டங்களை முறியடித்துச் செல்கிறார். மக்களுக்கு வேலாயுதம் யார்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்குகிறது. இடைவேளை.

ஆறாம் அறிவை ஆப் செய்து விட்டு உக்கார்ந்தால் இரண்டாம் பாதி சூப்பர், ஆஹா ஓஹோ. வில்லன்களைப் பின்னிப் பெடலெடுக்கிறார் வேலாயுதம். கள்ளநோட்டுகளை அழிக்கிறார், அணு உலைக்குள் பாயவிருக்கும் ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்துகிறார், சிட் பண்ட் மோசடிப் பணத்தை மீட்டுக் கொடுக்கிறார், என இரண்டாம் பாதி முழுக்க வேலாயுதத்தின் அட்டூழியங்கள், சாரி அற்புதங்கள். இந்தப் பகையில் தங்கை இறந்து விட, அதற்குக் காரணமான வில்லன்களை வேலாயுதம் எப்படி பழி தீர்க்கிறார் என்பது மீதிக்கதை.

பாடல்கள், காமெடி, சென்டிமென்ட் என்று அனைத்தும் சரியாகப் பொருந்தி வருவது படத்திற்கு பெரிய பலம். கத்திப் பேசுவது, சவால் விடுவது, ஜம்ப் பண்ணுவது என்று வழக்கமான விஷயங்கள் இல்லாமல் விஜய் எதார்த்தம், ஜோடி ஹன்ஷிகா செம பதார்த்தம். ஜெனிலியா வந்த வேலையை சரியாக செய்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் சந்தானம் கலக்கியிருக்கிறார்.

இரண்டாம் பாதியில், லாஜிக் மீறல்கள் தான் படத்தின் ஒரே மைனஸ். சூப்பர் ஹீரோ கதை என்பதால் கொஞ்சம் சகித்துத் தான் ஆக வேண்டும். ஆண்டவன் இருக்கானோ இல்லையோ, வேலாயுதம் இருக்கான் போன்ற மக்கள் வசனங்கள், ஸ்ஸ்ஸப்பா முடியல. முதல் முறையாக சிக்ஸ் பேக் காட்டி சண்டை போட்டிருக்கிறார் விஜய், நோ கமெண்ட்ஸ்.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோபம்தான் வேலாயுதம் என்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் வேலாயுதம் நானும் வேலாயுதம் என்பதால், ஒருமுறை நண்பர்களோடு குடும்பத்தோடு படத்தை பார்த்து விடுவது நல்லது. தனியாக சிக்கினால் கம்பெனி பொறுப்பல்ல.

நன்றி குசும்பு .com