மரணத்தை வென்ற மாவீரர்களே


.


மரணத்தை வென்ற மாவீரர்களே
மனங்களில் வாழும் உங்கள் நினைவுகள்
மண்ணுள்ளவரை வாழ்ந்துகொண்டிருக்கும்
விடியலைத் தேடிய கால்களின் தடங்களில்
நீங்களும் சேர்ந்தீர்கள்
வெந்து பொசுங்கிய தேசச் சுவட்டினில்
அங்கமும் ஆனீர்கள்
நீங்கள் எமக்காய் எழுந்தீர்கள்
எமக்காய் வீழ்ந்தீர்கள்
உங்கள் லட்சியம் புனிதமானது

ஆசிரியர் குழு 

கோகிலா மகேந்திரனின் ‘உள்ளத்துள் உறைதல்’

.
படித்தோம் சொல்கிறோம்
முருகபூபதி



ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த கவனிப்புக்குள்ளான எழுத்தாளர்களின் வரிசையில் பேசப்படும் படைப்பாளி கோகிலா மகேந்திரன் 1970 களில் இலக்கியப்பிரவேசம் செய்த ஒரு ஆசிரியர். பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்குத்தெரிவாகி பி;ன்னர் தனது மருத்துவ கற்கைநெறியை விட்டு விலகி கல்விப்பணியில் ஈடுபட்டவர். ஒரு மருத்துவநிபுணராகியிருக்கவேண்டியவர் இலக்கியவாதியாக தோற்றம்பெற்றார். 
சமீபத்தில் அவரது புதிய நூல் உள்ளத்துள் உறைதல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே நாவல், சிறுகதை இலக்கியவரிசையில் சில நூல்களை எழுதியிருக்கும் கோகிலா மகேந்திரனின் இந்தப்புதிய நூலை வாசிக்கும் வாசகர்களுக்கு அவர் ஒரு இலக்கிய மருத்துவர் என்ற சித்திரமும் மனதில் பதியும்.

2011 ஆம் ஆண்டின் மாபெரும் இசை நிகழ்ச்சி கான மழை


ஸ்ரீ ராம "ராஜா" ராஜ்ஜியம் -கானா பிரபா




.


மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஶ்ரீ ராம ராஜ்யம், தெலுங்கில் வரப்போகும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்த நாளே கேட்டுக் களித்துக் கொண்டிருக்க வைத்து விட்டது. அதை ஆந்திராவின் இசையுலகமும் நிரூபிப்பது போல இப்படத்தின் பாடல் இசைத்தட்டுக்கள் விற்பனையில் சாதனையைப் படைத்து விட்டது. 
சில மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் இப்படம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது. ஶ்ரீ ராம ராஜ்யம் படம் பார்க்கவேண்டும் என்பதற்கு முழுமுதற்காரணியாக அமைந்தது இசைஞானி இளையராஜா ஏற்கனவே தந்து விட்ட பாடல்களும், படத்தில் தரப்போகும் பின்னணி இசை தான். ஏற்கனவே "சீனி கம்" (ஹிந்தி), "ரசதந்திரம்", "பாக்யதேவதா" (மலையாளம்) வந்தபோதும் இன்னொரு மொழிப்படத்துக்காகத் தியேட்டரை எட்டிப்பார்க்க வைத்தார் ராஜா. இப்போது முதன்முறையாக ஒரு தெலுங்குப் படத்துக்குப் போகும் பெருமையை இந்தப் படம் பெற்றுக்கொண்டது.

இலங்கைச் செய்திகள்

உள்நாட்டிலேயே பேசித்தீர்க்கும் உறுதியான நம்பிக்கையாலேயே 13 ஆவது சுற்றிலும் ஏமாற்றம் அரசுடனான பேச்சு குறித்து தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன்

இலங்கை நாணயம் மூன்று வீதத்தினால் மதிப்பிறக்கம்

கொழும்பில் இடம்பெற்ற சாயி பாபா ஜனன தின நிகழ்வு (பட இணைப்பு)

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை பகிரங்கமாக்குமாறு பிரிட்டன் கோரிக்கை
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசு தீர்வு காண வேண்டும்: வாசுதேவ
"யாழ்ப்பாணத்தில் இராணுவம், பொலிஸாரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது"

அப்துல் கலாம் ஜனவரியில் இலங்கை வருகிறார்

தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுமாறு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் பாராளுமன்றில் அமைச்சர் வாசுதேவ

மட்டக்களப்பில் கடும் மழையால் வெள்ள அபாயம் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படுகின்றன வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படலாம்

மும்மொழிச் சமூகத்தை உருவாக்கும் திட்டம்

மோசமான வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

ஆணைக்குழு அறிக்கைகள்; அடுத்து அரசு என்ன செய்யப் போகிறது

ஆஸ்திரேலியா மருத்துவ உதவி நிதியம் பெருமையுடன் வழங்கும் முத்தமிழ் மாலை 11

 

தென்னிந்திய இசைக்கு நிகரான இலங்கை கலைஞர்களின் புதிய பாடல்.



.நம்நாட்டுக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள காந்தல் பூக்கும் தீவிலே என்ற பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வரிகளுக்கு வவுனியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்துள்ளார்.



இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனுடன் இணைந்து ஜெயபிரதா இந்தப்பாடலைப் பாடியுள்ளார்.

மாவீரனின் தாயொருத்தி -ஆவூரான் மெல்பேர்ண்


.
வீரமாய் பிள்ளை எழுந்தவன்
விடுதலை கேட்டே நடந்தவன்
உடலை வில்லாய் வளைத்தவன்
உயிரினை அம்பாய் தொடுத்தவன்

தாய் நாட்டினை காக்க விளைந்தவன்
தலைவனின் பார்வையில் வளர்ந்தவன்
எதிரின் பாசறை தன்னை எரித்தவன்
எத்தடைகள் யாவையும் தகர்த்தவன்

இன்னொரு வசந்தா - சிறுகதை


 

.
“சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி.

திசைக்கொன்றாகப் பக்கங்கள் பறந்து விழும்படிப் பத்து நாட்களாகச் செய்தித்தாள் விசிறியடிக்கப்பட்டக் கடுப்பில் இருந்தவர்“ஏஜெண்ட் வரலியோ? இந்த மாசத்திலேருந்து பேப்பரு வேண்டாம்னு சொல்லிடு”என்றார் அலைபேசியில் தினம் கூப்பிட்டும் ஏஜண்ட் தன் அழைப்பை எடுக்காத கோபத்தில்.

“ஐயையோ அப்படில்லாம் சொல்லாதீங்க. என்னய வேலய விட்டுத் தூக்கிடுவாரு. நேரத்துக்குப் போடுறனே சார்!”பதட்டமாகக் கூவினான் சிறுவன்.

அதிர்ச்சியாக இருந்தது சபாபதிக்கு. பேப்பர் போடப் பையன்கள் உபயோகிக்கப்படுவது அறிந்ததுதான். அதற்காக இப்படியா? நாலடி எட்டாத உயரம். பனிரெண்டு வயதைத் தாண்டியிருக்க வாய்ப்பே இல்லாத பால் வடியும் முகம்

சமீபத்திய ஆக்கம்: குறும்படம் - அ.முத்துலிங்கம்


ஒருமுறை நான் பொஸ்டனில் இருந்தபோது வழக்கம்போல காலை குளியலறையில் முகத்தில் நுரை தடவிவிட்டு, சவரம் செய்வதற்கு முன்னர் ஒரு நிமிடம் என் முகத்தை நானே கண்ணாடியில் உற்று நோக்கினேன். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிப் பார்த்தேன். அந்தக் கணம் என் மூளையில் ஏதோ ஒன்று உதித்தது. எப்படி என்று தெரியவில்லை. அது ஒரு சின்னக் கதை. ஒன்றரைப் பக்கம்தான்.  அந்த நிமிடத்தில் அதை எழுதி முடித்தேன். இதிலென்ன அதிசயம் என்றால் இப்படி சிறுகதைக்கான கரு என் மூளையில் தோன்றுவது கிடையாது. ஒரு சிறுகதையை எழுதி முடிக்க எனக்கு குறைந்தது ஒரு வாரம் ஆகும். மூன்று மாதம் ஆகும்.  சிலவேளை ஆறு மாதம்கூட எடுக்கும்.

அந்தச் சிறுகதையை என் இணைய தளத்தில் ’பவித்திரா’ என்ற தலைப்பில் வெளியிட்டேன். பின்னர் நான் அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. மறந்தும் போனேன். ஆறு மாதங்கள் கழிந்திருக்கும். பிரபல இயக்குநர் பாலு மகேந்திராவிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. இதற்கு முன்னால் எங்களுக்கிடையே தொடர்பு கிடையாது. அந்தக் கடிதத்தில் அவர் திரைப்படக் கல்லூரியில் தன்னிடம் படிக்கும் மாணவர் ஒருவர் அந்தக் கதையை குறும்படமாக எடுக்க விரும்புகிறார் என்றும் அதற்கு அனுமதிகேட்டும் எழுதியிருந்தார்.

திரு பவித்ர உற்சவம் டிசம்பர் மாதம் 2 – 4 , 2011

.
ஹெலன்ஸ்பேர்க் (Helensburgh)  ஸ்ரீவெங்கடேஸ்வரர் கோயிலில் வருடாவருடம் பெருமாளுக்கு பவித்ர உற்சவம் நடைபெற்று வருகின்றது.

ஆண்டு தோறும் பெருமாளின் இன்னருள் வேண்டி, ஸ்ரீவேங்கடேச சுவாமிக்கு பவித்ர உற்சவம் வெள்ளிக்கிழமை டிசம்பர் மாதம் 2ம் திகதி ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 4ம் திகதி வரை விமரிசையாக நடைபெறும்.

சனிக்கிழமை டிசம்பர் மாதம் 3ம் திகதி ஸ்ரீவெங்கடேசருக்கு விசேட அபிஷேகம் காலையில் நடைபெற்று பின் பவித்ரம் சாத்தப்படும்.

ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 4ம் திகதி தீர்த்தம், சுவாமி புறப்பாடு நடைபெறும்

மேலதிக விபரங்களுக்கு கோயில் அர்ச்சகர்களை 42943224 அல்லது 42949233 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளவும்.

பாபாவின் அவதார தினச் செய்தி


.
 Wednesday, 23 November 2011


தொடக்கமும் முடிவுமற்ற கால ஓட்டத்தில் இரவும், பகலும், கோடையும், குளிரும் முடிவற்று சுழன்றபடி இருக்கின்றன. கால வெள்ளப் பெருக்கினால் இந்த அகண்டத்தின் மீது விடாது அவை ஏற்பட்டபடி இருக்கின்றன. உயிரினங்களின் வாழ்வு ஒவ்வொரு நாளும் சுருங்கிக்கொண்டே வருகின்றது. வெள்ளத்தினால் முன்னே எடுத்துச் செல்லப்படும் பொழுது, அதிசயமாக மனிதன் தனது விதியினைப் பற்றி அறியாது இருக்கிறான். வேகமாகக் குறைந்து கொண்டிருக்கும் அவனது வாழ்நாளைப் பற்றி சிறிதும் எண்ணாது இருக்கிறான். அவனது அறியாமையால் அவன் குருடனாக இருக்கிறான். வளங்களும், செல்வங்களும் குறுகிய கால அளவினையே கொண்டுள்ளது. அதிகாரமும்கூட தற்காலிகமானவையே. வாழ்வின் சுவாசமானது காற்றில் அலைபாயும் சுடரைப் போன்றது. இளமை என்பது மூன்று நாளைய சந்தை. இன்பங்களும், செல்வங்களும் துயரத்தின் மூட்டைகளே. இதனை அறிந்து கொண்டு, மனிதன் இந்தக் குறுகிய கால வாழ்வினை, இறைவனது சேவைக்கு அர்ப்பணித்தால், அவன் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆகின்றான்.

உலகச் செய்திகள்

*
* உலகின் மிக உயரமான ஒலிபரப்பு கோபுரம் ஜப்பானில் அமைப்பு
 
* 30 நிமிடங்களில் பூமியின் எப்பகுதியையும் தாக்கக்கூடிய அமெரிக்காவின் புதிய ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டது

* இராணுவஅரசுக்கு எதிராக எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள்; 670 பேர் காயம்

* ஈராக் குண்டுவெடிப்பில் 10 பேர் பலி: 45 பேர் காயம்

* பாகிஸ்தான் இராணுவத்தினர் 20 பேர் நேட்டோ படையினரின் தாக்குதலில் பலி


உலகின் மிக உயரமான ஒலிபரப்பு கோபுரம் ஜப்பானில் அமைப்பு Monday, 

உலகில் மிகவும் உயரமான தொலைக்காட்சிச் சேவை ஒளிபரப்புக்கோபுரம் ஜப்பானில் அமைக்கப்பட்டுள்ளது.
634 மீற்றர் உயரம் கொண்ட இந்தக் கோபுரம் டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கின்னஸிலும் இடம்பெற்றுள்ளது.

இதற்கான கின்னஸ் சான்றிதழ் டோபு டவரின் தலைவர் மிஸ்ஹியாகி சுசுகியிடம், கின்னஸ் உலக சாதனை தலைமைச் செயலாளர் அலிஸ்டர் ரிச்சாட்ஸ் வியாழக்கிழமை அளித்தார்.

இதன் மூலம் ஜப்பானுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகிற்கு தெரிய வந்துள்ளது. இந்த அங்கீகாரம் எங்களுக்கு மேலும் பலமாக அமையும். இதற்காகவே நாங்கள் முயன்றோம் என்று சுசுகி தெரிவித்தார்.

இதற்கு முன் சீனா 600 மீற்றர் உயரத்துக்கு கோபுரம் அமைத்ததுவே சாதனையாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் அடுத்த வருடம் மே மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.


ஆசியாவில் யுத்த ஆபத்தை அதிகரிக்கும் ஒபாமா

.
கடந்த ஒரு வாரத்தில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மாற்றம் குறித்த முக்கியத்துவம் வெளிப்படையாகியுள்ளது. இராஜதந்திர பொருளாதார மற்றும் இராணுவ என்று ஒவ்வொரு பிரிவிலும் ஒபாமா நிர்வாகம் ஆக்ரோஷத்துடன் சீனாவை எதிர்கொள்கிறது.இது அப்பிராந்தியத்திலும் அங்குள்ள ஒவ்வொரு நாட்டிலும் அழுத்தங்களைப் பெரிதாக உயர்த்தியுள்ளது.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!! - by: Dhinesh Es



.



வாசகர்களே இது பற்றிய சரியான தகவலை பெற்றுக்கொள்வது நன்று. -ஆர் குழு

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி
கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

தமிழ் சினிமா

வேலாயுதம்
க்கள் பிரச்சினையையும், அண்ணன், தங்கை பாசத்தையும் கருவாக கொண்ட படம் தான் வேலாயுதம்.

தமிழகத்தை சீர்குலைக்க நினைக்கும் தீவிரவாதிகள், தமிழக உள்துறை அமைச்சரின் உதவியுடன் தமிழகத்தில் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதன்படி பள்ளி பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வைத்து அதிர்ச்சியுண்டாக்குகிறார்கள். இந்த வெடிகுண்டு ஆசாமிகளை கண்டறிய பத்திரிகையாளர்களான ஜெனிலியாவும் அவருடைய நண்பர்களும் தீவிரம் காட்ட, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். வில்லன்களின் அட்டாக்கில் இரண்டு நண்பர்களையும் பறிகொடுத்து விட்ட ஜெனிலியாவையும் கத்தியால் குத்திவிடுகிறார்கள். இதற்கிடையில் பள்ளி பேருந்தில் வெடித்த வெடிகுண்டை வைத்தது நாங்கள்தான். வரும் வெள்ளிக்கிழமையன்றும் ஒரு வெடிகுண்டு வெடிக்கும் என்று ஜெனிலியாவிடம் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

வில்லன்கள் போகும் வாகனம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்து விடுகிறது. கத்தி குத்து வாங்கி உயிருக்கு போராடிகொண்டிருக்கும் ஜெனிலியா, அவர்கள் சொன்ன வெடிகுண்டு விஷயத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, பள்ளி வாகனத்தில் வெடிகுண்டு வைத்த இந்த மூவரையும் நான் தான் கொலை செய்தேன். இவர்கள் வைக்கப்போகும் மற்றொரு வெடிகுண்டையும் எடுத்து மக்களை காப்பாற்றுவேன் என்று எழுதி அதன் கீழ் வேலாயுதம் என்ற பெயரை எழுதிவிடுகிறார்.

பவுனூர் என்ற கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வரும் விஜய்யும், அவருடைய தங்கை சரண்யா மோகனும், அண்ணன் - தங்கை பாசத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து வருகிறார்கள். தங்கையின் திருமணத்திற்காக சீட்டு கம்பெனியில் பணம் போட்டு வைத்திருந்த விஜய், தனது தங்கை மற்றும் நண்பர்களுடன் சென்னைக்கு வருகிறார். சென்னையில் விஜய்யின் தங்கையுடைய பை திருடர்களால் பறிக்கப்பட, அதை பிடிப்பதற்காக அங்கு நிற்கும் பைக்கை எடுத்துகொண்டு விஜய் புறப்படுகிறார். ஆள் இல்லாத இடத்தில் அந்த பைக்கை நிறுத்திவிட்டு விஜய் ஓட, பைக் திடீரென்று வெடிக்கிறது. அந்த இடத்தில் வரும் பொலிஸ் ஒருவர் விஜய்யை நீ யார் என்று கேட்க, வேலாயுதம் என்று தனது பெயரை சொல்கிறார். அந்த சம்பவத்தில் வெடிகுண்டை எடுத்து மக்களை வேலாயுதம் காப்பாற்றிவிட்டார் என்று கூறி, வேலாயுதம் மீது மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். இப்படி தொடர்ந்து சில சம்பவங்கள் நடைபெற, தான் உருவாக்கிய கற்பனை நிஜமாகிவிட்டதா என்று நினைக்கும் ஜெனிலியா, விஜய்யை உண்மையிலே வேலாயுதமாக மாற்ற முயற்சிக்கிறார். முதலில் இதற்கு மறுக்கும் விஜய், பிறகு சம்மதித்து வேலாயுதமாக மாறி, பிறகு என்ன செய்கிறார் என்பது மீதிக்கதை.

வழக்கத்தைவிட அதிக உற்சாகம் தெரிகிறது விஜய்யிடம். கிராமத்தில் தங்கை சரண்யா மோகனுடன் சேர்ந்து கொண்டு விஜய் அடிக்கும் லூட்டியில் கிராமமே ஆடிப்போய் கிடக்கிறது. அதேசமயம் தங்கை மேல் அவர் வைத்துள்ள பாசத்தை ஊரே மெச்சுகிறது. தங்கைக்காகவே வாழும் அண்ணனாக வந்து கடைசியில் நாட்டுக்காக வாழும் நிலைக்கு தள்ளப்படும்போது விஜய்யின் கெட்டப்பும், நடிப்பும் அதிரடியாக இருக்கிறது. வெறி கொண்டு வில்லன்களை தாக்கும் காட்சிகளில் ஆவேச நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். விஜய்யின் முறைப்பெண்ணாக நடித்துள்ள ஹன்சிகா பாவாடை தாவணி கெட்டப்பில் பளிச்சிடுகிறார். இடைவெளியில் தெரியும் கவர்ச்சி கண்களை பறிக்கிறது என்றாலும் ஜெனிலியாவுக்கு கதையில் இருக்கிற முக்கியத்துவம் அவருக்கு இல்லை. பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். கவுண்டமணி பாணியில் சில அதிர்வேட்டு காமெடிகளை அள்ளிவிட்டு கலக்கல் பண்ணுகிறார் சந்தானம். கூடவே விஜய்யும் சேர்ந்து கொள்வதால் கொமெடி களைகட்டுகிறது.

முதல் பாதியில் வேலாயுதத்தை விட சந்தானத்தின் கொமெடி அதிரடியாக உள்ளது. இரண்டாவது பாதியில் வேலாயுதத்தின் வேட்டை ஸ்பீடு. வேலு, வேலாயுதமாக மாற இளவரசுவின் மரணமும் ராகவ்வின் கதறலும் ஒரு காரணமாகிவிடுகிறது. நகைச்சுவைக்கு கியாரண்டி கொடுத்திருக்கும் சந்தானத்தின் கொமெடி கலகலப்புதான் என்றாலும், இரட்டை அர்த்தம் உள்ள நகைச்சுவை வசனங்களை தவிர்த்திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கர், மணிவண்ணன், ஷாயாஜி ஷிண்டே, சூரி, இளவரசு என்று பெரிய நடிகர்களின் பட்டாளம் இருந்தாலும், அத்தனை பேரும் மனதில் நிற்கிறார்கள். வில்லன் கோஷ்டியில் வின்சென்ட் அசோகனைத் தவிர்த்து மற்றவர்கள் தமிழ்ப் படங்களில் பார்க்காத முகங்களாக இருப்பதால் மனதில் நிற்கவில்லை. தங்கை சரண்யா மோகன் வரும் காட்சிகள் 'திருப்பாச்சி'யை நினைவுபடுத்துகின்றன.

தமிழ் சினிமாவுல கதாநாயகன் பொலிஸ் ஆபிசரா இருந்தா மட்டும்தான் தீவிரவாதிகளை பொலிஸ் வேட்டையாடுது. கதாநாயகன் பால்காரனாகவோ, ஐஸ்கிரீம் விற்பவராகவோ இருந்தாலும் தீவிரவாதிகளை அவர் வேட்டையாடும் போது பொலிஸ் வேடிக்கை மட்டும் பார்க்குது. இது தமிழக பொலிஸின் வரமா..? சாபமா..? ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். நேரு ஸ்டேடியம், ஆயிரக்கணக்கில் துணை நடிகர்கள் என்று பிரம்மாண்டமாகப் படம் பிடித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவரால்தான் அது சாத்தியப்பட்டிருக்கிறது. விஜய் ஆண்டனியின் துள்ளல் பாடல்கள், ப்ரியனின் ஒளிப்பதிவு என அனைத்தும் படத்திற்கு ஏற்ப பொருத்தமாக அமைந்திருக்கிறது. சுபாவின் வசனங்களில் சில இடங்களில் அரசியல் வாடை வந்தாலும், பல இடங்களில் அப்ளாஸை அள்ளிச்செல்கிறது. குறிப்பாக "நீயும் ஒரு முஸ்லீம் தானே, உனக்காவும்தான் நான் போராடுகிறேன், அதனால் நீ என்னை விட்டுவிடு" என்று தீவிரவாதி ஒருவன் ஷாயாஜி ஷிண்டேவிடம் கூறும்போது, "உங்க நாட்ல இருக்கிற முஸ்லீம்களை விட இங்கே நாங்கள் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம். உங்களுக்கு தேவையான பின்லேடனின் உயிரையே உங்களால காப்பாற்ற முடியல, ஆனா எங்களுக்கு தேவையில்லாத கசாப்பையே நாங்கள் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறோம்" இது போன்ற பல வசனங்களில் முத்திரை பதித்திருக்கிறார்கள் இந்த இரட்டையர் வசனகர்த்தாக்கள்.

கடைசி பத்து நிமிடம் வழக்கம் போல விஜய் பேசிக் கொண்டே போகிறார். இந்த மாதிரி காட்சிகள்தான் அவர் மீது மற்ற ரசிகர்களுக்கு கடுப்பை வரவழைப்பவை. மற்றபடி இரண்டாம் பாதியில் ஆக்சன் காட்சிகளைக் குறைத்து, இரண்டு பாடல்களை வெட்டி, நறுக்குத் தெரித்த மாதிரி வசனங்களை வைத்திருந்தால், விஜய் படங்களில் வித்தியாசமானதாக வந்திருக்கும் 'வேலாயுதம்'.

சென்டிமெண்ட், காதல், கொமெடி, சண்டை என்று சரியான மசாலா மிக்ஸ் இயக்குநர் ராஜாவுக்கு வேலாயுதம் கிளாஸ் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு மாஸ் படமாக அமைந்திருக்கிறது. விஜய்தான் அந்த வேலாயுதம் என்று பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாமல் உங்கள் ஒவ்வொருவரின் உள் இருக்கும் தைரியம்தான் வேலாயுதம் என்று சொல்லிய விதம் அருமை.

நன்றி விடுப்பு