பேய்களின் தாண்டவம் - வினோ சர்மிலா


Image result for பேய்


.
இப்பொழுதெல்லாம் எனது தெருக்களில் 
பேய்களினதும் குள்ள நரிகளினதும் கூடல்கள் 
வெகு சாதாரணமாகிவிட்டது 
அதிகாலை வேளையிலும் மாலை மங்கலிலும் கூட 
அவை சுதந்திரமாய் உலா வருகின்றன பேய்களின் இருப்பிடம் காடென்பது மாறி 
என் கிராமங்களாகிவிட்டன 
ஒளிந்து நெளிந்து வளைந்து திரிந்த அவற்றிற்கு 
முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாய் மகிழ்கின்றன 


நான் ஒருபொழுதும் நினைத்துப்பார்த்ததில்லை 
எனது தெருக்களில் பேய்கள் உலாவுமென்பதை 
இரவுகளில் மட்டுமே பேய்கள் வெளிக்கிளம்பும் 
என்ற கற்பனையும் பேய்ப்பயமும் எனக்குள் 
சிதைந்துபோய் வெகு நாட்களாகிற்று 

வாசகர் முற்றம் - அங்கம் 04 - முருகபூபதி

.


இழப்புகளிலிருந்து உயிர்ப்பித்த இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தா
ஈழத்து இலக்கிய உலகில் பேசுபொருளான "சொல்லாதசேதிகள்" தொகுப்பிலும் இடம்பெற்ற கவிஞர்

               
                                                
புத்தர் வந்த திசையிலிருந்து, காந்தி பிறந்த தேசத்திலிருந்து அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இடப்பட்ட நாமம் " அமைதிப்படை" ! மக்கள் அவர்களை நம்பினார்கள். ஏற்கனவே, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போரிட்டு,  தங்கள் தேசத்தின் எல்லைகளை பாதுகாத்தவர்கள் எங்களையும் காப்பாற்றுவார்கள் என போற்றினார்கள்.
அவ்வாறு வந்தவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அங்கு 32 மாதங்கள் தங்கியிருந்தவர். அண்மையில் அவர் மீண்டும் அங்கு  வந்தபோது உதிர்த்த வாக்குமூலம் இது:  "நாங்கள் இங்கு தரையிறங்கியபின், தாக்குதல்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து இலங்கை இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டார்கள். இலங்கை இராணுவத்தினருடன் கைகுலுக்கிய நாங்கள், அமைதி காக்க வந்திருக்கிறோம் என்று தெரிவித்தோம். எதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கு புதிதான எங்களுக்கு வழிகாட்டுவதற்கு வரைபடங்களோ, மேம்பட்ட உளவுத்துறை தகவல்களோ கொடுக்கப்படவில்லை."  
ந்தியப்படை அங்கு வந்திறங்கியபோது, வட இலங்கையில் உரும்பராயில் வசித்த இரண்டு ஆசிரியர்கள் -  அங்கு பிரசித்திபெற்ற  கல்விமான்களாக அறியப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரிடம் சொல்கிறார்கள்: " அமைதி காக்க வந்திருப்பவர்களை நம்பலாம். இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் கைகுலுக்கியது  ஒருவகையில் இராஜதந்திரம்.  எங்கள் தமிழ் மக்களை அவர்கள் கைகுலுக்கி அரவணைப்பது தொப்புள் கொடி உறவு. அவர்கள் பிறந்த தேசத்தின் பிதாவின்  அகிம்சையால், பிரித்தானிய ஆதிக்கம் வெளியேறியது. அதுபோன்று, இங்கும் எங்கள் பிரதேசத்தில்  பேரினவாத ஆதிக்கத்தை வெளியேற்றுவார்கள். தைரியமாக இருங்கள். தயக்கமிருந்தால், ஊருக்குள்ளே உறவினர் வீடுகளில் சென்றிருங்கள்" என்று வழியனுப்பிவைத்தார்கள்.

பரமடடா பொங்கல் நிகழ்வு மழை காரணமாக பின்போடப்பட்டது.

.
 சென்ற சனிக்கிழமை 02 02 2019 பரமடடாவில் நடைபெறவிருந்த பரமடடா பொங்கல் நிகழ்வு மழை காரணமாக பின்போடப்பட்ட்தாக அறிவிக்கப் பட்டது .  ஆயத்த வேலைகள் அனைத்தும் நிறைவடைந்தபின் மழை காரணமாக நிறுத்தப்பட்ட்து.

என்னைப் புரிந்துகொள்ள முடியாது!- நேர்காணல்: இளையராஜா

.

‘பாடல்கள் ஒரு கோடி.. எதுவும் புதிதில்லை… ராகங்கள் கோடி… கோடி… அதுவும் புதிதில்லை. எனது ஜீவன் நீதான்.. என்றும் புதிது’ எனத் தனது ரசிகர்களைப் பார்த்து உருகும் ஒப்பற்ற கலைஞர் இசைஞானி இளையராஜா.
75 வயதுக்குரிய முதுமை, தன்னைத் தொட்டுப் பார்க்க அனுமதிக்காத இந்த இளமை ராஜா, இசையுலகின் எட்டாவது சுரம். தலைமுறைகள் கடந்து கணினியில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையின் ஸ்மார்ட் போனிலும் லேப் டாப்பிலும் குடியிருக்கும் ராகதேவன். அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் காத்திருக்கும் வேளையில்… அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தவரை அவரது இசைக்கூடத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து…

இசை, ஆன்மிகம் இந்த இரண்டுக்கும் அப்பால், இளையராஜாவை இத்தனை இளமையாக வாழ்வித்துக்கொண்டிருப்பது எது?
இந்த இரண்டுக்கும் அப்பால் எதுவுமில்லை. இரண்டு என்பதைவிட ஒன்று சொல்வதே சரி. என் இசையும் ஆன்மிகம்தான், ஆன்மிகம் என்பதே இசைதான். இளமையாக இருக்க வேண்டும் என்று யாராவது முயற்சித்தால் அது முடியாது. ஆகிற வயது ஆகியே தீரும்.

பாரிஸ் மாநகரில் பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழா - முருகபூபதி

.


நினைவில் நிறைந்திருக்கும் பண்டிதர் அய்யா
   
                                                                        
இலங்கையின் வடமேற்குக் கரையில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் திகழும் நீர்கொழும்பூருக்கு ஐதீகத்திலும் வரலாற்றிலும் அழியாத அடையாளம் இருக்கிறது.
இலங்கேஸ்வரன் இராவணனின் புதல்வன் இந்திரஜித்தன் நிகும்பலை என்னும் யாகம் வளர்த்த ஊர் என்பதனால் அதற்கு நிகும்பலை என்றும் ஒரு காரணப்பெயர் இருக்கிறது.
அந்த யாகத்திற்காக இந்திரஜித்தன் இவ்வூரில் ஐந்து இடங்களில் உருவாக்கிய குளங்கள் காலப்போக்கில் அடையாளம் தெரியாதவகையில் உருமாறிக் கட்டிடக்காடுகளாகிவிட்டன. எனினும்,  இன்றும் மழைக்காலத்தில் அந்த இடங்களில் தண்ணீர் தங்கித்  தேங்கிவிடுவதை அவதானிக்கமுடிகிறது.
இலங்கை வரலாற்றில், இடம்பெற்ற துட்டகைமுனுவின் மனைவிக்கு வந்த உடல் உபாதையைப் போக்குவதற்கு இந்த ஊரில் தேன் கிடைத்தமையால் தேன் ஊர் என்ற அர்த்தத்தில் மீகமுவ என்றும் சிங்கள மொழியில் அழைக்கப்பட்டதுதான் இவ்வூர். அவ்வாறே Negombo  என  ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
மன்னர் காலத்தில் தேனும் சுரந்து,  ஒல்லாந்தர் காலத்தில் ஏலம், கறுவா, கராம்பு முதலான வாசனைத்திரவியங்கள் விளைந் பிரதேசமாகவும் திகழ்ந்தமையாலும் இனிமையும் வாசனையும் நிரம்பிய நகரமாகியது.

பரதக்கலையின் வரலாற்று ஒளியில்.... தேவதாசிகளும்; கோயிலும் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் ..
இன்று எமது நகரங்களிலே சிறுமிகள் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு ஆடி வருவது வளமையாகி விட்டது. இது எமது காலாசாரத்தின் ஓரங்கம். இதனால் இந்த ஆடல் பற்றிப் பலரும் அறிய ஆர்வம் காட்டுவது இயற்கையே! இந்தப் பரத நாட்டியம் என நாம் கூறும் இந்த ஆடல்வகை மேடையை நோக்கி வருமுன் எமது கோயில் களிலே ஆடப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆகும்.

இவ்வாறாகக், கோயில்களிலே நடந்த சின்னமேளங்களை இரசித்த பெரியவர்கள் இதைக் கதை கதையாகக் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் கூறியது எல்லாம் நாதஸ்வரக் கச்சேரிகள் போல ஆடல்களும் கோயில்களிலே நடந்ததைத் தான். இதற்கு முற்பட்ட காலங்களிலே இந்த நடன மாதர்களான தேவதாசிகள் கோயில் கிரியைகளில் பங்கு கொண்டிருந்ததை யாரும் கண்டதில்லை.

எம்மில் பலர் தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மைலாப்பூர் பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் போய் தரிசித்துள்ளோம். இற்றைக்குச் சுமார் 100 அல்லது 150 வருடங்களுக்கு முன் இன்று போல சத்தடி மிகுந்த கார்களும் ஓட்டோக்களும் அன்று ஓடவில்லை. கோயிலின் கோபுரங்களே நகரத்தின் மையமாக வானளாவ நின்றிருந்தன. கோயில் மணியோசையே சுற்றுவாழ் மக்களின் கடிகாரமாக இருந்தது. கோயிலில் எழும் மங்கல வாத்தியங்களின் இசையே அவர்கள் அன்றாடம் அனுபவித்த இசை.


ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே தாயகத் தமிழர் - பணங்காட்டான்

.


இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் ஏஜன்டாகச் செயற்பட்டு தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க கூட்டமைப்பின் சுமந்திரன் ஆரம்பித்துள்ளார். இத்தேர்தலில் மைத்திரியின் முகவராக செயற்படவென நியமிக்கப்பட்ட ஆளுனர் ராகவன் தமது செயற்பாடுகளை அத்திசை நோக்கி ஆரம்பித்துள்ளார். இருவரும் ஏட்டிக்குப் போட்டியாக நாளொரு வண்ணம் விடும் அறிக்கைகளும், மலர்மாலை மேளவாத்திய இ ஊர்வலங்களும் வடக்கை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.


இலங்கைத் தமிழரின் அரசியல் போராட்டம், அரசியல் தீர்வு முயற்சி, அரசியல் விடிவுக்கான செயற்பாடு என்பவை எத்திசை நோக்கி இப்போது செல்கின்றன என்ற கேள்வி கடந்த சில நாட்களாக மேலோங்கி வருகிறது. தமிழ் மக்கள் சார்பில் குரல் கொடுப்பவர்கள், பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், தீர்வை நோக்கி காய்களை நகர்த்துபவர்கள் இப்போது யார்? தாம் சார்ந்த சமூகம், தாம் பிரதிநிதித்துவம் செய்யும் இனம், தாம் சார்ந்த அரசியல் கட்சி என்பவற்றைவிட யாரோ ஒருவருக்காக அவர்களின் இயந்திரத்தின் சக்கரமாக சிலர் செயற்படுவது கண்கூடாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களாக பொன்னாடைகள் (பன்னாடைகள்), மலர்மாலைகள், சந்தன மாலைகள், மேளதாள வாத்திய சமேத ஊர்வலங்கள் என்ற முன்னைய அரசியல் கலாசாரம் மீண்டும் மெதுமெதுவாக தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. வ ழி ப ாட் டுத் தல ங ்களை யும், வி ளை ய ாட் டு மைதானங்களையும், வெள்ளம் வழிந்த திடல்களையும் மையப்படுத்தி ஒளிப்பட பரப்புரைகள் ஒருபுறம். தங்களுக்குத் தாங்களே கூட்டங்களை ஏற்பாடு செய்து அட்டகாச அறிவிப்புகளை வெளிப்படுத்துவது இன்னொருபுறம். விரைவில் தேர்தல்கள் வரப்போகின்றன என்பதை வடக்கு மக்கள் அறிய ஆரம்பித்து விட்டனர். இந்தத் திருவிளையாடல்களுக்கு மத்தியில் சில ஊடகங்கள் அகப்பட்டு நெரிபடுவதையும் காண முடிகிறது. இந்த வகையில், வடக்கில் பவனி வரும் இரண்டு பிரதானிகளை இங்கு அலச வேண்டியுள்ளது. ஒருவர், வடமாகாண ஆளுனராக கடந்த மாதம் நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன். அடுத்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாமாகத் தம்மை

குறி அறுத்தேன் விமர்சனம். Tamil Books Review - ஜி. கே. தினேஷ்..

.

“குறி அறுத்தேன்” என்ற தலைப்பை கண்ட உடனேயே எதுவும் தவறாக கருத வேண்டாம். இவ்வுலகில் எது தான் சரி ? 

கடவுளால் கடவுளின் அர்த்தநாரீசுவரர் அவதாரமாக பிறக்கும் திருநங்கைகளை மட்டும் நாம் ஏன் தவறாக கருத வேண்டும் ?? 
சமுதாயத்தை விட்டு ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும். 

இந்த கவிதை நூலை விமர்சனமாக தான் எழுத முனைந்தேன். கடவுளே விமர்சனத்திற்குள்ளாகும் இந்த யுகத்தில் ஏதோ ஒன்று இந்நூலை விமர்சிக்க வேண்டாம் என உள்ளுணர வைத்தது !!! 

கடந்த வருடம் திசம்பர் மாதம் நான் விகடன் அலுவலகத்தில் சில அலுவல்களை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது தான் அண்ணன் கவிஞர். பழநிபாரதி யிடம் இருந்து இந்த புத்தகத்திற்கு அணிந்துரை வந்தது. ஆக சிறந்த அணிந்துரை என்று சொல்லலாம் ! 

கல்கி அவர்கள் என் முகநூல் நண்பர். என் முகநூல் ஆரம்பகாலத்தில் இருந்தே அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ளேன். அவரது முகநூலில் கவிதைகளை இடுவார். தனி தனி கவிதைகளாக படிப்பதை புத்தக வடிவில் படிக்கும் போது வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விடுகிறது. 

திருநங்கைகள் வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை உணர்வுகள் ! 

ஒட்டு மொத்த புத்தகத்தில் என்னை கவர்ந்த கவிதை இது !!! 

போராட்டமே. வாழ்க்கை’: பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் - முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்

.
 நடனக் கலைஞரான நர்த்தகி நட்ராஜுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை இவராவார். கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த உயரத்தை அவர் அடைந்தது எப்படி?
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் நர்த்தகி நடராஜின் இல்லம் பரபரப்பாக இருக்கிறது. ஏகப்பட்ட ஊடகத்தினர் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடகத்திடமும் பொறுமையாகப் பேசி, பேட்டியளித்து வழியனுப்புகிறார் நர்த்தகி. ஒரு மிகக் கடினமான பயணத்திற்குப் பிறகு அவர் வந்தடைந்திருக்கும் இடம் இது. யாரொருவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத கடினமான பயணம். 
"ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டு, அடுத்த வேளை உணவிற்காக தெருவில் திரிந்திருக்கிறீர்களா? அதுவும் எந்தத் தவறும் செய்யாமல்? என் வாழ்வின் முக்கியமான காலகட்டம் அப்படித்தான் கழிந்தது" என்று பேச ஆரம்பிக்கிறார் நர்த்தகி.
மதுரை அனுப்பானடி பகுதியில் பிறந்த நடராஜ், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தை. ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். 
"அந்த வயதிலேயே நான் பெண்ணைப் போலத்தான் உணர்ந்தேன். ஆண்களோடு விளையாடுவதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். பெண்களோடு இருப்பதுதான் பாதுகாப்பாக இருந்தது. அது மிகப் பெரிய சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. ஒரு கோழியின் இறகுக்குள் இருப்பதைப் போல இருக்கும்" என்று நினைவுகூர்கிறார் நர்த்தகி. 
.

டெல்லி காமனி அரங்கில் எழுத்தாளர்.எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதை நேற்று பெற்றுக் கொண்டார். விருதும் காசோலையும் பெற்றுக்கொண்டு வந்த அவரைத் தமிழர்கள், தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  


அப்போது சஞ்சாரம் நாவல் உருவாக்கப் பின்னணி குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் பகிர்ந்துகொண்டார். ``சஞ்சாரம் நாவலை எழுத வேண்டும் என்ற விருப்பம் இன்று உருவானதல்ல; சிறுவயதிலேயே உருவானது. சிறுவயதிலேயே கோயிலில் திருவிழாக்களில், திருமண மேடைகளில் வாசிக்கப்படும் நாதஸ்வரத்தைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். இவர்களெல்லாம் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி வாசிக்கக் கற்றுக்கொண்டார்கள்? யார் இவர்களுக்கெல்லாம் ஆசிரியர்கள்? என்ன ஊதியம் கிடைக்கும்? என்றெல்லாம் கேள்விகள் தோன்றும். அந்த வயதில் அவர்கள் வருவதும் தெரியாது, செல்வதும் தெரியாது. ஆனால், வாசிக்கிற நேரத்தில் சரியாக வாசித்துக்கொண்டிருப்பார்கள்.


அறிவாலயம் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
     
நூலகம் போவது யாவர்க்கும் நன்று
     
ஆலயம் எங்கள் ஆணவம் போக்கும்
     
நூலகம் எங்கள் அறிவினைக் கூட்டும் !

    
சாதியும் பாராது சமயமும் பாராது
    
பதவியும் நோக்காது பணத்தையும் பார்க்காது
    
படிக்கின்ற மனமுடையார் பலருக்கும் வரவேற்பு
    
பக்குவமாய் கிடைக்குமிடம் நூலகமொன்றேயாம் !

    
நூல்வாங்க முடியாதார் நூலகத்தை நாடிடுவார்
    
நூல்தெரிந்து படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்
    
வாழ்வெல்லாம் படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்
    
வளமெனவே அமைந்திருக்கும் நூலகத்தை வாழ்த்திடுவோம் ! 

   ஊருக்குள் நூலகம் ஒருகோவில் போலாகும்
  பாருக்குள் நூலகம் பலகோவில் போலாகும் 
 வேருக்கு நீராக நூலகங்கள் இருப்பதனால் 
 விருப்பமுடன் சென்றிடுவார் வேற்றுமைகள் இல்லாமல் !

நடிகை எமி ஜாக்சனுக்கு கோடீஸ்வரருடன் திருமணம்

.

எமி ஜாக்சனை திருமணம் செய்யப் போகும் ஜோர்ஜின் சொத்து மதிப்பு ரூ.3,600 கோடி ஆகும். நடிகை எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜோர்ஜ் பனியியோட்டுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை எமி சமூக வளைதலங்களில் வெளியிட்டு வருகிறார். எமியை திருமணம் செய்யப் போகும் ஜோர்ஜ் யார், அவரின் சொத்து மதிப்பு என்ன என்பது தெரியவந்துள்ளது. 2018ம் ஆண்டின் பெஸ்ட் இயக்குநர் கோடீஸ்வரர், இங்கிலாந்தின் மிகப்ெபரும் பணக்காரர்களில் ஒருவரான ஆன்ட்ரியஸ் பனயியோட்டுவின் மகன் ஜ�ோர்ஜ். ஜ�ோர்ஜ், எபிலிட்டி குரூப்பின் தலைவராக உள்ளார். அவரின் குடும்பத்திற்கு சொந்தமாக பல சொகுசு ஹ�ோட்டல்கள் உள்ளன. அதில் டன்பிளேன் ஹைட்ரோ, ஹில்டன் லிவர்பூல், ஹில்டன் கேம்பிரிட்ஜ், டபுள்ட்ரீ அபெர்டீன் ஆகியவை அடக்கம

பிங்கலி வெங்கய்யா: தேசியக் கொடியை வடிவமைத்தவர்

.

பட்டொளி வீசிப் பறக்கிறது மூவர்ணக் கொடி. அந்தக் கொடியைத் தனது மனக்கண்ணில் முதலில் ஏற்றி மகிழ்ந்தவர் பிங்கலி வெங்கய்யா. காந்தியின் கட்டளையை ஏற்று, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்ததுதான் இந்திய தேசியக் கொடி.
1878-ல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் பெடகள்ளேபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் வெங்கய்யா. தாய்வழிப் பாட்டனாரான சலபதி ராவின் வீட்டில் வளர்ந்த வெங்கய்யா, பதின் வயதுகளில் மச்சிலிப்பட்டணத்தில் வசித்தார். அப்போது பருத்தி பயிரிடுவது உட்பட பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் விடுத்த அழைப்பை ஏற்று, 19-வது வயதில் ராணுவப் பயிற்சி பெற்று, ஆப்பிரிக்காவில் நடந்த போயர் யுத்தத்திலும் (1899-1902) பங்கெடுத்துக்கொண்டார். ஆப்பிரிக்காவில் வெங்கய்யா தங்கியிருந்தபோதுதான் காந்தியைச் சந்தித்து, அவரது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டது. இந்தியா திரும்பியதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தலைமறைவு இயக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டார். இளமைக் காலத்திலிருந்து வேளாண்மையின் மீதிருந்த ஆர்வமும் தொடர்ந்தது. பருத்திச் சாகுபடியில் தீவிரக் கவனம் செலுத்தினார். வேளாண் துறையில் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டார். கல்வியின் மீதிருந்த ஆர்வத்தால், லாகூருக்குச் சென்று ஆங்கிலோ-வேதிக் பள்ளியில் சேர்ந்து சம்ஸ்கிருதம், உருது, ஜப்பானிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.

இலங்கைச் செய்திகள்

.

தேசிய அரசாங்க யோசனைத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – டலஸ் அழகப்பெரும

மீண்டும் தேசிய அரசாங்கம் உதயமாகும் - ரணில் விக்ரமசிங்க

தேசிய அரசாங்க யோசனைத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – டலஸ் அழகப்பெரும

தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்துள்ளதாகக் கூறப்படும் பிரேரணைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது, அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.சபாநாயகரிடம் நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம். அரசியலமைப்புக்கு முரணாண இந்த யோசனையை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். நாட்டின் அரசியலமைப்பில், 46 (5) ஆம் சரத்தை மீறுவதாகத் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

உலக செய்திகள்

.

பிரேசில் நாட்டில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பிரேசில் நாட்டில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அணை உடைந்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பிரேசில்

தமிழ் சினிமா - இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டு

.
 ``ஆக்‌ஷன் ஹீரோ ஆக டைம் இருக்கு பிரனவ் மோகன்லால்..!"

படத்தின் டைட்டில் கார்டு ஆரம்பிக்கும்போது, மோகன்லாலின் பெயர் பல நொடிகளுக்குத் திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அரங்கத்திலும் கைதட்டல்கள் பறக்கின்றன. அதன்பிறகே பிரனவ்வின் பெயர் சேர்ந்து பிரனவ் மோகன்லால் என முழுமை பெறுகிறது. பிரனவ் மோகன்லாலுக்கு இது இரண்டாவது படம். ஆனாலும், தனது அப்பாவின் நட்சத்திர அந்தஸ்தின் மூலமே தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்.

மிகச்சரியாக ஓராண்டு கழித்து பிரனவ் மோகன்லாலின் இரண்டாவது படமான, `21-ஆம் நூற்றாண்டு (இருபத்தியொன்னாம் நூட்டாண்டு)' வெளியாகியுள்ளது. கடந்த வருடம் வெளியான, தனது முதல் படமான `ஆதி'யின் அவரேஜ் வெற்றியைத் தொடர்ந்து சென்டிமென்டாக ஏறக்குறைய அதே தேதியில் (கடந்த வருடம் ஜனவரி 26-ல் `ஆதி' வெளியானது.) இந்தப் படத்தையும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், குறைந்தபட்சம் `ஆதி'யைப் போன்று ஓரளவுக்கு சுவாரஸ்யமான கதை, திரைக்கதை உடைய படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கலாம். 
கோவாவில் வசிக்கும் அப்பு (பிரனவ் மோகன்லால்) ரிடையர்டு தாதா பாபாவின் மகன். தனது அப்பா வாங்கிய கடனை அடைப்பது, எந்தச் சண்டை சச்சரவுகளுக்கும் போகாமல் அமைதியாக குடும்பத்தை வழி நடத்துவது என இருக்கிறான். ஆனால், அவனது அப்பாவுக்கோ தனது மகனை தாதாவாக்கிப் பார்க்க ஆசை. இதற்கிடையில் கோவாவுக்கு வரும் ஸாயா (ஸாயா டேவிட்) அப்புவுக்கும், அவனது குடும்பத்துக்கும் நெருக்கமாகிறாள். அப்புவும், ஸாயாவும் கமர்ஷியல் பட இலக்கணத்திற்கேற்ப காதலிக்கிறார்கள். அவர்களது காதலுக்கு சாதி, வர்க்கம் ஆகியவற்றைவிட மதத்தினால் ஏற்படும் மற்றொரு வித்தியாசப் பிரச்னை ஒன்று தடையாய் இருக்க, ஒட்டுமொத்தக் கேரளாவே காதல் ஜோடிக்கு எதிராகக் கொந்தளிக்கிறது. இதையெல்லாம் மீறி நாயகன், நாயகியைக் கைப்பிடித்தானா என்பதே, படத்தின் கதை. 

படத்தின் முதல் பாதி முழுவதும் கோவாவில் நடக்கிறது. வழக்கம்போல கோவா என்றாலே நினைவுக்கு வரும் மது, மது சார்ந்த இடங்கள்தான் காட்டப்படுகின்றன. எல்லோராலும் விரும்பப்படும் அப்பு என்ற கதாபாத்திரம் பிரனவ்விற்கு! ஆனால், அதற்குப் பொருந்தும்படி எதையும் செய்யவில்லை அவர். இயலாமை, கோபம், வெறுப்பு எனப் பல உணர்ச்சிகளுக்கு ஒரேமாதிரியான முகபாவனைகளைக் கொடுத்திருக்கிறார். கோவாவில் நடைபெறும் முதல் பாதி முழுவதும் கோர்வையற்ற காட்சிகளாய் எந்தவோர் அழுத்தமும் இல்லாமல் தேமேவென்று செல்கிறது. முதல்பாதியின் குறைந்தபட்ச ஆறுதல், ஸாயாவாக வரும் ஸாயா டேவிட்டும், அப்புவின் நண்பன் மக்ரோனியாக நடித்திருக்கும் அபிரவ் ஜனன்.
அர்த்தமற்ற ஜோக்குகள் அடிப்பது, அதிகப் பிரசிங்கியாக நடந்துகொள்வது என வழக்கமான ஹீரோயின் பாத்திரம்தான், ஸாயாவுடையது. ஆனால், அந்தக் காட்சிகளில் அவர் செய்வது அழகாக இருக்கிறது. முதல் படத்திலேயே நன்றாக நடித்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் அவரது பெர்ஃபாமன்ஸ் செம்ம! மலையாள சினிமாவுக்கு வார்ம் வெல்கம் கொடுத்திருக்கிறார், ஸாயா. இவர்கள் கூடவே வரும் அபிரவ் ஜனனின் குரலும் அவரது ஒன்லைன் கவுன்டர்களும் நம்மை ஆங்காங்கே ஆசுவாசப்படுத்துகிறது. மற்றபடி, மனோஜ் கே.ஜெயன், கலாபவன் சஜோன், இளவரசு எனப் பலர் ஏன் நடிக்க வைக்கப்பட்டார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை. மனோஜ் கே.ஜெயனின் பாபா கதாபாத்திரத்தில்கூட எவ்விதப் பிடிப்பும் இல்லை.  
படத்தின் டைட்டில் கார்டு ஆரம்பிக்கும்போது, மோகன்லாலின் பெயர் பல நொடிகளுக்கு திரையை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அரங்கத்திலும் கைதட்டல்கள் பறந்தன. அதன்பிறகே, பிரனவ்வின் பெயர் சேர்ந்து, `பிரனவ் மோகன்லால்' என முழுமை பெறுகிறது. இவருக்கு இது இரண்டாவது படம். ஆனாலும், அப்பாவின் நட்சத்திர அந்தஸ்தின் மூலமே தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்.
படத்தின் பெயர்கூட மோகன்லாலின் பிரபலமான `இருபதாம் நூற்றாண்டு' படத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. தவிர, படத்திற்கும் தலைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. `இருபதாம் நூற்றாண்டு' படத்தில் மோகன்லாலும், சுரேஷ் கோபியும் இணைந்து நடித்திருப்பார்கள். அதுபோன்று இந்தப் படத்தில் சுரேஷ் கோபியின் மகன் நடிகர் கோகுல் சுரேஷ் சில நிமிடங்கள் கௌரவத் தோற்றத்தில் வருகிறார். மோகன்லாலின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அசைவுகளையும், உடைகளையும் மீட்டுருவாக்கம் செய்கிறார், பிரனவ் மோகன்லால். ஆனால், அவை வெறும் கைதட்டல்களுக்காகத்தானே அன்றி, கதைக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதில், துல்கர் சல்மானை வேறு வம்புக்கு இழுத்திருக்கிறார். 
ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய அமைதியான முதல்பாதி, அதிரிபுதிரியான இரண்டாம் பாதி... என வழக்கமான திரைக்கதை டெம்ப்ளேட்டயே பயன்படுத்தியுள்ளனர். ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய முடிவற்ற சேஸிங் காட்சிகள், நீளமான சண்டைக் காட்சிகள் என எல்லாம் இருந்தும் அவை எல்லாம் மிக சுமாராகப் படமாக்கப்பட்டுள்ளன. பீட்டர் ஹெய்ன், கோபி சுந்தர், விவேக் ஹர்ஷன், அபிநந்தன், தபஸ் நாயக் போன்ற சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தும், படம் அயர்ச்சியையே தருகிறது. அபிநந்தனின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். `பேட்ட' படத்துக்குப் படத்தொகுப்பு செய்த விவேக் ஹர்ஷன்தான், இந்தப் படத்துக்கும் படத்தொகுப்பு செய்தாரா எனக் கேட்க வைக்கிறது அவரது படத்தொகுப்பு. பல இடங்களில் கன்டியுனிட்டி இல்லாமல் ஜம்ப் ஆகிறது.
முக்கியமாக, சண்டைக் காட்சிகளில் படத்தொகுப்பு கோர்வையாக இல்லாமல், விசிறியடிக்கிறது. பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகளும் அப்படித்தான். க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி கீரின்மேட்டில் எடுக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கோபி சுந்தரின் பின்னணி இசை, காட்சிகளுக்குத் தொடர்பே இல்லாமல் ஏகத்துக்கும் இரைச்சலாய் இருக்கிறது.  இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்த இடைவேளை ட்விஸ்ட், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்த விழிப்பு உணர்வு... என ஆங்காங்கே ஆச்சர்யம் காட்டுகிறார், இயக்குநர் அருண் கோபி. 
கம்யூனிஸ முழக்கம், அபிமன்யூவின் கொலை, பாதிரியார்களின் பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, சமூக மத நல்லிணக்கம், பொய் செய்திகளைப் பரப்புவதன் விளைவுகள்... எனக் கேரளத்தின் நடப்புப் பிரச்னைகளைக் காட்சிகளாகவும், கதாபாத்திரங்களின் வழியாகவும் பேச நினைத்திருக்கிறார், இயக்குநர். படத்தின் டைட்டில் கார்டில்கூட, கும்பலால் கொலை செய்யப்பட்ட இளைஞன் மது, கேரள வெள்ளத்தின் ஹீரோக்களான மீனவர்கள், அபிமன்யூ... எனக் கேரளாவையொட்டியே வடிவமைத்துள்ளார். ஆனால், ஆங்காங்கே ஹீரோயின் கதாபாத்திரத்தை வைத்தே பெண்ணியக் கருத்துகளைக் கிண்டலடிப்பது எந்த வகையில் நியாயம்?! ஹீரோயின் கதாபாத்திரத்தைக்கூட அரைகுறையாகவே எழுதியுள்ளார். பெண்ணின் நம்பிக்கையின்மையின் வலியைத் தொடர்ந்து ஹீரோ கதாபாத்திரம் மூலம் குத்திக் காட்டுவது எதற்காக?! 
பிரனவ் மோகன்லாலுக்கு இது இரண்டாவது படம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கவும் நடிப்பில் இன்னும் பயிற்சி மேற்கொள்ளவும் நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற நினைப்பது, '21-ஆம் நூற்றாண்டு' போல பலத்த காயங்களை உண்டாக்கலாம்.
nantri cinema.vikatan.com