எல்லோரும் பணிந்து நிற்போம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண்.... அவுஸ்திரேலியா


 கருணைகூர் முகங்கள் கொண்ட
      கந்தனை நினைக்கும் இந்த
பெருமையாம் விரதம் தன்னை
   உரிமையாய் எண்ணி நிற்கும்
அடியவர் ஒன்று கூடி
  அன்னத்தை ஒறுத்து நிற்பர்
அவருளம் புகுந்து கந்தன்
   அருளொளி காட்டி நிற்பான் !

 கந்தனை நினைக்கும்  இந்த 
   சஷ்டியாம் விரதம் தன்னை
சிந்தையில் இருத்தி வைத்து
   சீலமாய் இருக்கும் மாந்தர்
வந்திடும் வினைகள் எல்லாம்
   மறைந்துமே போகச் செய்ய
எந்தையாம் கந்தன் அப்பன்
     என்றுமே உதவி நிற்பான் !

அஞ்சலிக்குறிப்பு: யுகமாயினி சித்தன் கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன் தமிழக - இலங்கை - புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார் - முருகபூபதி


 "பல மொழிகளிலும் ஒருவரது படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவில் வெளியாவதும் ஒரு வகையில் படைப்பாளிக்கு கிட்டும் அங்கீகாரம்." எனச்சொன்னார்  நாமக்கல் கு. சின்னப்பபாரதி. என்னருகில் அமர்ந்திருந்த யுகமாயினி சித்தன் உடனே அதனை மறுத்துரைத்தார்.
மொழிபெயர்ப்பில் ஒரு நாவல் வெளியானால் அதனை இலக்கிய அங்கீகாரம் என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு நாவல் சர்வதேச தரத்தில் எழுதப்பட்டால் மாத்திரமே அதற்கு அங்கீகாரம் தரமுடியும். ஒரு நாவல் இந்திய மொழிகளிலும் அய்ரோப்பிய மொழிகளிலும் வெளியாகிவிட்டால் , அந்தப்படைப்பு உன்னதமானது, தரமானது, உலக அங்கீகாரம் பெற்றது என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?” எனக்கேட்டார் சித்தன்.
சின்னப்ப பாரதி நிமிர்ந்து அமர்ந்தார்.
ஒரு நாவல்,  அந்தநாவலின் படைப்பாளியின் தாய்மொழியில் எழுதப்பட்டு அதனை பிறமொழி வாசகருக்கு அறிமுகப்படுத்துவதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளர்  பிறமொழியில் தரமுனைவதுகூட அங்கீகாரம்தான். மொழிபெயர்ப்பாளர் அந்தப்படைப்பை மொழிபெயர்க்கவிரும்பியதனால்தானே பிறமொழி வாசகனுக்கு அந்தப்படைப்பு கிடைக்கிறது. அத்துடன் மொழிபெயர்ப்புக்கு தகுதியான படைப்பு என்ற சிந்தனை மொழிபெயர்ப்பாளரிடம் இருப்பதனால் அவர் குறிப்பிட்ட படைப்பை மொழிபெயர்க்கின்றார். ஒருவகையில் இது ஒரு அங்கீகாரம்தான்.” என்றார் சின்னப்பபாரதி.
 அய்யா,  எத்தனை படைப்புகளும் மொழிபெயர்க்கப்படலாம்,  ஆனால்,  அவை சர்வதேச தரத்திற்கு உயர்ந்திருக்கிறதா? என்பதுதான் எனது கேள்வி.” எனக்கேட்ட  சித்தன், சற்று அட்டகாசமாகவும் சிரித்தார்.
அந்தச்சிரிப்பை இனி நாம் கேட்கமுடியாமல் நிரந்தரமாக மௌனித்துவிட்டார் எங்கள் சித்தன்.
மேற்குறிப்பிட்ட உரையாடல் சில வருடங்களுக்கு முன்னர் தமிழகம் நாமக்கல்லில் இலக்கிய நண்பர் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி அவர்களின் இல்லத்தில் ஒரு மதியவேளையில் நடந்தது.
சித்தனை அன்றுதான் முதல் முதலில் சந்தித்தேன். எனது நாமக்கல்  வருகை அறிந்து,    கோயம்புத்தூரிலிருந்து தேடிக்கொண்டு வந்துவிட்டார்.
சித்தன் ஆங்கில இலக்கிய பரிச்சயம் மிக்கவர். பலர் தமிழில் மொழிபெயர்த்த பல மேலைத்தேய மற்றும் ஆபிரிக்க  இலக்கியங்களை ஏற்கனவே ஆங்கில மூலம் படித்திருப்பவர். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபடுபட்டவர். (சித்தனின் மொழிபெயர்ப்புக்கூட  புகலிட நாட்டில்  வதியும் ஒருவரது பெயரில் வெளியாகியிருப்பது எனது காதில் விழுந்த வியப்பான தகவல்) அவர் சில நல்லமொழிபெயர்ப்புகளை குறிப்பிட்டார். எனினும் தமிழில் குறிப்பிட்டுச்சொல்லும்படியான சர்வதேச தரத்தில் அமைந்த நாவல்கள் எதுவும் இன்னமும் வரவில்லை என அன்று  தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

"ஒரு சாயங்காலத்திற்குள் உருட்டப்படுவதற்காக,ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டு ஒரு மலையில் ஏறவேண்டுமா?" மெல்பன் வாசகர் வட்டத்தில் வண்ணதாசன் - கருப்பையா ராஜா


”நாளே அன்பெனும் தீபத்தை ஏற்றி நீ வைத்தால் நாளையும் எரியும் உன் பேர் சொல்லும் ஜோதி ".

காந்தியார் பிறந்த அக்டோபர் மாத இறுதி ஞாயிற்று கிழமையில் மெல்பன் வாசகர் வட்டத்தில் கல்யாண சுந்தரம் என்கிற கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் அவர்களின் "சின்னு முதல் சின்னு வரை "  நூல் பற்றிய வாசிப்பு அனுபவம்  பகிர்ந்து கொள்ளப்பட்டது .

புத்தனை கடவுளாக்கி  அவர் போதித்த அன்பினை  காற்றில்  விட்டு ஏசுவிற்கும் காந்திக்கும் கல்லடி கிடைக்கும் காலமிது. புத்தன், இயேசு, காந்தி வரிசை நின்று போய்,  இன்று சந்தேககுறியே தென்படுகிறது, வண்ணதாசன் அவர்களின் சின்னு பேசப்பட்டது ஏனோ இதமாய் இருந்தது.

 அன்பைவிட  கொடிய ஆயுதமும் வன்முறையும் ஏதுமில்லை, காயங்களும் வலிகளும் ரணமானவை .

சந்தியா நடராஜன் அவர்கள் தனது முன்னுரையில் "உணர்வுகள் வதைபடும் கணங்களின் உக்கிரம்” என்பதும் "தானாக நிகழ்வதுதான் தரிசனம் "என்கிற லா .சா .ரா வின் வரிகள் வண்ணதாசன் அவர்களின் வாழ்வுக்கும் அவரை வந்தடைகின்ற வாசகர்களுக்கும் முற்றிலும் பொருந்தும் எனச் சொன்னது
வாசகர் வட்டத்திற்கும் பொருந்தும்.

கல்யாண்ஜி என்னையும் எப்போதோ கை  குலுக்கி நட்புசெய்துவிட்டார், தரிசனம் இப்போதுதான்.

சாலை விபத்தில் பலியாகிப் போன என் அன்பு நண்பன் அ .வடிவேல் ஹோசிமின் "அகத்தினிலே" எனும்  கவிதை தொகுப்பை எழுதி முடித்திருக்க, அவன் மறைவிற்கு பின் அதை புத்தகமாய் நண்பர்கள் ஆக்கியது
அப்புத்தகத்திற்கு அவன் மிகவும் நேசித்த கல்யாண்ஜி "எதுவாகயிருந்தாய்" என முன்னுரை ஏற்றிருப்பது அன்பினால் அன்றி வேறொன்றில்லை . 

கல்யாண்ஜியின் முன்னுரையில்
எதிர் வருபவர் /எவராயிருப்பினும் 
எவராய் இருப்பினும் என்ன 
தொகுப்புகள் /எவருடையதாய் /இருப்பினும் 
இப்படி எல்லாவற்றுக்கும் மத்தியில்
எது எப்படி இருப்பினும் 
எதுவாயினும் பகிர்ந்துகொள்வதற்கு '

மெல்பனில் நடந்த 18 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா இரண்டு அரங்கங்களில் நடந்தேறிய நிகழ்வுகள்


அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில்  கடந்த  4  ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில், Keysborough Secondary College மண்டபத்தில் நடந்த
 இவ்விழா மண்டபத்தின் வெளியரங்கில்  இடம்பெற்ற கண்காட்சிகளுடன் தொடங்கியது.
பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த தென்கிழக்காசிய  நாடுகளின் அமைப்புகளின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர்  சாபாஷ் சவுத்ரி  கண்காட்சிகளை திறந்துவைத்தார்.  விக்ரோரியா பல்தேசிய கலாசார ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. சிதம்பரம் ஶ்ரீநிவாசன் விழா நிகழ்ச்சிகளை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார்.
விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளாக  கண்காட்சிகள் இடம்பெற்றன.   ஓவியர் நஸீரின் ஓவியக்கண்காட்சி, விமல் அரவிந்தனின் இயற்கை எழிலை சித்திரிக்கும் ஒளிப்படக்காட்சி மற்றும் மறைந்த தமிழ் வளர்த்த முன்னோர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்புகளுடன் அவர்களின் ஒளிப்படங்களின் காட்சி மற்றும் அவுஸ்திரேலியாவில் இதுவரையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியான தமிழ் இதழ்கள் - பத்திரிகைகள் - நூல்களின் கண்காட்சி என்பன இடம்பெற்றன.
வள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வை உட்பட பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், ரகுநாதன்,  ஜெயகாந்தன், சுந்தரராமசாமி,  முதல் இலங்கையைச்சேர்ந்த இலங்கையர்கோன், கனகசெந்தி நாதன், டானியல், மு. தளையசிங்கம் உட்பட அண்மையில் மறைந்த பல எழுத்தாளர்களின் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் - நிருவாகிகள் தெரிவு


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த 4 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில்  Keysborough Secondary College மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் 2017 - 2018 காலப்பகுதியில் சங்கம் மேற்கொண்ட பணிகளை விபரிக்கும்  ஆண்டறிக்கையை செயலாளர் மருத்துவர் நடேசன் சமர்ப்பித்தார்.
அதனையடுத்து, நிதியறிக்கையை நிதிச்செயலாளர் முருகபூபதி சமர்ப்பித்தார். சங்கத்தின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டு உறுப்பிர்களிடம் நன்கொடைகளை பெறவேண்டும் என்று திரு. ந. சுந்தரேசனும், மீண்டும் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினர்களை இணைக்கும் வகையில் அமைப்புவிதிகளில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று திரு. இராஜரட்ணம் சிவநாதனும் யோசனைகளை முன்வைத்தனர்.

இலங்கைச் செய்திகள்


நித்தகைக்குளம் உடைப்பு ; ஒரு குடும்பத்தைக் காணவில்லை ; நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் சேதம்

வலையிறவு பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு

 ”இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை”

நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது : இலங்கையில் மனம் திறந்தார் நிஸாம்தீன் 

இலங்கை சர்வதேசரீதியில் அவப்பெயரை சந்திக்கவேண்டிய நிலையேற்படலாம்- அமெரிக்கா எச்சரிக்கை

 ' வேண்டாம் நீங்கள் தந்த தேசமான்ய விருது'

18 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு ; மன்னாரில் தொடர்கிறது மனித எலும்புக்கூடுகள் அகழ்வு

மட்டு. மாவட்டத்தில் 6 நலன்புரி முகாம்களில் 499 குடும்பங்கள் - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் 1104 குடும்பங்கள் பாதிப்பு

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது !

வெளியானது வர்த்தமானி- ஐனவரி ஐந்து தேர்தல்

அரசியல் நெருக்கடி மேலும் மோசமடையலாம்- அமெரிக்கா

இறுதி நாட்களில் நடந்தது என்ன- ஜனாதிபதி நாட்டு மக்களிற்கு நீண்ட விளக்கம்

தேர்தல் ஆணையாளரின் அதிரடி முடிவு- செயலிழக்கின்றது சுயாதீன தேர்தல் ஆணையகம் ?

எந்த விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயார்- கருஜெயசூரிய அதிரடி அறிவிப்பு

பேர்த் பாலமுருகன்கோயில் சூரசம்காரம் 13/11/2018 - திருக்கல்யாணம் 14/11/2018

உலகச் செய்திகள்


இன்று முதல் அமுலுக்கு வருகிறது ஈரான் மீதான பொருளாதார தடை

அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி ; 10 ற்கும் மேற்பட்டோர் காயம்

 ஏமன் போரில் 58 பேர் பலி

தீவிரவாத தாக்குதலில் 12 பேர் பலி

அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி

பட்டாசு வெடித்ததற்காக 1534 பேர் மீது வழக்குப் பதிவு


இன்று முதல் அமுலுக்கு வருகிறது ஈரான் மீதான பொருளாதார தடை

05/11/2018 ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையானது இன்று முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொது மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

ஈழன் இளங்கோவின் சாட்சிகள் சொர்க்கத்தில் - 17/11/2018 in Melbourne.

சிட்னியில் இத் திரைப் படத்தை  பார்த்தவர்களின்  விமர்சனம்
https://www.youtube.com/watch?v=RsqJM8uDmVs&t=115s


சாட்சிகள் சொர்க்கத்தில் 17 & 18 /11/2018


தமிழ் சினிமா - சர்கார் திரை விமர்சனம்

தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது என்றால் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பது தெரியும். அதை சர்கார் படம் பூர்த்தி செய்ததா? வாருங்கள் பார்ப்போம்.

கதைக்களம்

ஒரு டாப் கம்பெனியின் CEOவாக இருக்கும் சுந்தர்(விஜய்) இந்தியா வருகிறார். இந்தியாவில் இருக்கும் மற்ற கம்பெனிகளே அவர் என்ன செய்ய போகிறார் என்று பயன்படுகின்றன. ஆனால் அவர் ஓட்டு போட தான் இங்கு வந்தார் என தெரிந்து நிம்மதி அடைகின்றன.
வாக்குச்சாவடி செல்லும் போது விஜய்யின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என தெரியவர நீதிமன்றத்திற்கு செல்கிறார் விஜய். தன் ஒரு ஓட்டை பதிவு செய்தபின் தான் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவேண்டும் என வழக்கு போட்டு அதில் வெற்றியும் பெறுகிறார்.
அதன் பின் ராதாரவி ஒரு சந்திப்பில் விஜய்யை மிக மோசமாக விமர்சிக்க, கோபமான விஜய் மீடியாவை தூண்டிவிட்டு, கள்ள ஓட்டுக்கு தங்கள் வாக்கை பறிகொடுத்த லட்சக் கணக்கானவர்களை நீதிமன்றத்தில் வழக்கு போட வைத்து, அதையே காரணம் காட்டி மறுத்தேர்தல் வேண்டும் என கேட்கிறார்.
கடைசி நிமிடத்தில் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்ட கோபத்தில் அவரை கொல்ல முயற்சி நடக்க, நானே அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என கிளம்புகிறார்.
அதில் வரும் தடைகளை எப்படி சமாளித்தார் என்பது தான் மீதி “சர்கார்”.

படத்தை பற்றிய அலசல்

“கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கும், நான் கேள்வி கேட்கிறேன்?” என தைரியமாக தமிழ்நாட்டில் உள்ள சமகால பிரச்சனைகளை பேசியுள்ள விஜய்யும், படத்தின் திரைக்கதையும் தான் சர்கார் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.
வில்லனாக பழ. கருப்பையா, ராதாரவி நடிப்பு மிரட்டல்.
பழ. கருப்பையாவின் மகளாக வரும் வரலக்ஷ்மி வார்தையிலேயே மிரட்டுகிறார், நிஜ வில்லன் அவர்தான். “அவன் கார்ப்பரேட் கிரிமினல், நான் கருவுளையே கிரிமினல்” போன்ற அவரது பன்ச் செம.
கீர்த்தி சுரேஷ் எதற்கு இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஒரு கதாபாத்திரம். ஒரு சில காட்சிகளில் வரும் யோகிபாபுவும் பெரிதாக ஜொலிக்கவில்லை.
சண்டை காட்சிகள் வடிவமைத்தது ராம்-லக்ஷ்மன் என்பதால், அதில் தெலுங்கு சினிமா போல கொஞ்சம் ஓவர்டோஸ். விஜய் அதிலும் தெறிக்கவிட்டுள்ளார்.

க்ளாப்ஸ்

மொத்த படத்தையும் தாங்கி நின்ற தளபதி விஜய்.
கருத்தை திணிக்காமல் சமூகத்திற்கு தேவையான கருத்தை பதிவு செய்த முருகதாஸின் திரைக்கதை.
ஏ. ஆர். ரகுமானின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

குறிப்பிடும்படி படத்திற்கு நெகட்டிவ் விஷயங்கள் இல்லை என்றாலும், படத்தின் வேகத்தை அப்படியே குறைத்து சிம்டாங்காரன் மற்றும் OMG பொண்ணு பாடல்களை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் சர்கார் விஜய்யின் தீபாவளி சரவெடி.
நன்றி