மரண அறிவித்தல்

.

மரண அறிவித்தல்

திருமதி . செல்வரெத்தினம் மகேசன்






மறைவு : 10.09.2012 
திருமதி. செல்வரத்தினம் மகேசன்  அவர்கள் 10.09.2012 அன்று  சிட்னியில் சிவபதம் அடைந்தார்.

யாழ்ப்பாணம், உடுவிலை பிறப்பிடமாகவும், சிட்னி கார்லிங்போர்ட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் மகேசன்
10-9-2012 ..அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற பொன்னர் கந்தையா, இளையபிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,

வானொலி மாமா நா. மகேசனின் அன்பு மனைவியும், உமா கேதீசன், கேதா மகேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் உடுவில், திருநாவுக்கரசு, சோமசுந்தரம், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கார்லிங்போர்ட் திரு. திருமதி சிவபாதசுந்தரம், கொன்கோட் வெஸ்ட் திரு. திருமதி. நடராசா ஆகியோரின் சம்பந்தியும்,

கேதீசன், பிரதீபா, சிவபாதன், சாந்தகுமாரி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,;

அரன், அனலி, கபிலன், நர்மதா, மித்திரன், சந்தோஷ், சயோ,ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூத உடல் (12. 9. 2012) புதன் கிழமை மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரரை Macquarie Park Cemetery & Crematorium Magnolia Chapel லில்  பார்வைக்காக வைக்கப்பட்டு, அடுத்த நாள் வியாழக்கிழமை (13. 9. 2012) அன்று பிற்பகல் 1.00 மணி தொடக்கம் 3. 45 மணி வரை சைவ இறுதிக்கிரியைகளின் பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு தொலைபேசி எண் 0432580389.

56 Alemein Ave, CarlingfordNSW 2118 Australia

 Viewing
Date :  Wednesday 12th of September 2012,
Time :  6.00 - 8.30 pm
Macquarie  Park Cemetery  & Crematorium
Magnolia Chapel
Cnr  Delhi  & Plassey Roads
North  Ryde

Funeral  Service

Date  Thursday  13th  of  September 2012
Time  1.00 - 3,45 pm
Macquarie Park Cemetery & Crematorium

Magnolia Chapel
Cnr Delhi & Plassey Roads
North Ryde











சிட்னி சைவ மன்றம் நடாத்திய நிதி சேகரிக்கும் இராப் போசன விருந்து 09/09/2012




                                                                                                         படப் பிடிப்பு ஞானி







இறக்கைகள் -கவிதை - ராமலஷ்மி

.

நாம் பறந்தபடி நாட்கள் பறப்பதாக
அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்.

பறந்த நாட்கள் ஒன்றன்மேல் ஒன்றாக
அடுக்கிக் கொண்டே வரப்படுகின்றன
மாதங்களாகவும் வருடங்களாகவும்.

அவற்றின் இடுக்குகளில் மாட்டிக் கொண்டு
சோபையிழந்து சிரிக்கின்றன
அர்த்தமற்றப் பெருமிதங்களும்
கொண்டாடிய சம்பவங்களும்
உயர்வாய் நினைத்த சேகரிப்புகளும்.

எதையோ தேடப்போனபோது
அகப்பட்டன
அனுபவப் பாடங்களும்
தொடர்பறுந்த நட்புகளும்
தவறவிட்டப் பல
அற்புதத் தருணங்களும்.

இறக்கைகளைக் கழற்றி விட்டு
நடக்கத் தொடங்கிய என் கைகளை
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
பற்றிக் கொண்டு

தளிர்நடை போடுகிறது காலம்.

 
Nantri: Muthusaram

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் சங்கத்தினரின் கீதவாணி விருதுகள் 2012.



யாழ்ப்பாணம் இந்தென்னும் தேன் பொந்தின் தேனீக்களால் (மைந்தர்களால்) 2012ம் ஆண்டுக்கான ஏழாவது கீதவாணி விருதுகள் வெகு கோலாகலமாக 01-09-2012ம் திகதி பரமற்றா ஆற்றடி மண்டபத்தில் மாலை 6.20 தொடக்கம் இரவு  10.40 மணி வரை விறுவிறுப்பாக, சபையோருக்கும் பெருவிருந்தாக நடைபெற்றது.
மாலை 6.20 மணிக்கு தமிழின விடுதலைப் போராட்டத்தில் வீரகாவியமான மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி, தமிழ் வாழ்த்துடனும், கல்லூரி கீதத்துடனும் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் சங்கத்தின் தலைவரான திரு வீரசிங்கம் குணரஞ்சிதன், சங்கத்தின் புரவலர்களான திரு பொன்னம்பலம், திரு அருளானந்தம் மற்றும் அவர்களின் பாரியார்களும் மங்கள விளக்கேற்றி, தலைவரின் வரவேற்புரையுடன் கீதவாணி 2012 தொடங்கியது.

Annual Dinner Dance 2012 presented by St John's College Old Boys' Association NSW


சொல்ல மறந்த கதைகள் ---09


காத்திருப்பு – புதுவை’பற்றிய நினைவுகள்
- முருகபூபதி – அவுஸ்திரேலியா
Puthuvai Ratnthuraiகாத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு. காதலர்களின் காத்திருப்பும் பரஸ்பரம் அன்பு நிறைந்த தம்பதியரின் காத்திருப்பும் நண்பர்களின் காத்திருப்பும் சோகத்தையும் சுகத்தையும் நினைவுகளையும் சுமந்துகொண்டிருப்பவை. நானும் ஒருவருக்காக காத்திருக்கின்றேன்.
வானவில்லுக்கு எவரும் வர்ணம் பூசுவதில்லை கரையைத்தழுவும் அலைகளை திரும்பிப்போ என்று எவரும் கட்டளை இடுவதில்லை.குருவிகளுக்கு இதுதான் உங்கள் கூடு என்று எவரும் பாதை காட்டிவிடுவதில்லை. கவிஞனும் இப்படித்தான். அவனுக்கு எவரும் அடியெடுத்துக்கொடுக்க முடியாது, கொடுக்கவும் கூடாது.”
என்று தனது கவித்துவமான எழுத்துக்களுக்கு வாக்குமூலம் அளித்து உயிரூட்டிய இனிய நண்பனுக்காக கத்துக்கிடக்கின்றேன்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது வாழ்நாளில் எத்தனைபேரை வாய் இனிக்க அண்ணா என்று அழைத்தார் என்பது எனக்குத்தெரியாது. ஆனால் அவர் புதுவை அண்ணா என்று விளித்த கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காக நான் காத்திருக்கின்றேன். புதுவை எனக்கு அண்ணனோ தம்பியோ இல்லை. தோழன். அவ்வப்போது மச்சான் என்று பரஸ்பரம் அழைத்துக்கொள்ளும் உரிமைகலந்த உறவு எம்மிடையே படர்ந்திருந்தது.

இலங்கைச் செய்திகள்


ஆஸி. நோக்கிச் சென்ற பலரது நிலை இதுவரை தெரியாத நிலையில் குடும்பத்தார் பரிதவிப்பு
 

பான் கீ மூன்– மன்மோகனை சந்திக்காது ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பினார்

இலங்கையர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்: இந்தியா

யாழ். வேம்படி மகளீர் பாடசாலை மாணவிகள் ஆர்ப்பாட்டம்

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் சர்ச்சைக்குத் தீர்வுகாணுங்கள்: பழைய மாணவர் கண்டனப் பேரணி

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுதினம்

யாத்திரிகர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

நம்பிக்கையுடன் மீண்டும் வாழ்க்கையை துவக்கியுள்ளோம்: இலங்கை தமிழர்கள் திருப்தி

பயங்கரவாதத்துக்கு பின்னான நல்லிணக்கம்: ஸ்ரீலங்காவின் அனுபவம்

ஆஸி. நோக்கிச் சென்ற பலரது நிலை இதுவரை தெரியாத நிலையில் குடும்பத்தார் பரிதவிப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலைமை இதுவரை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களுடைய குடும்பங்களும்,உறவினர்களும் பெரும் துயரத்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிய வருகின்றது.

தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றனர்.

எட்டாவது சிகரம் - அ .முத்துலிங்கம்


இரண்டு நாட்கள் முன்பு அமர்நாத் குகைக்கு சென்றுவிட்டு வந்த அமெரிக்க பெண் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தலையிலே கறுப்புக் கண்ணாடி குத்திய, கை நகங்களில் பச்சை நிறம் பூசிய பெண். என்னைக் கண்டதும் இதற்காகவே காத்திருந்ததுபோல தான் அமர்நாத் குகைக்கு போய் வந்த சாதனையை சொன்னார். 29 ஜூலை அவர் திரும்பியிருந்ததால் அந்தப் பயணத்தின் அனுபவங்களினால் நிறைந்து போயிருந்தார். என்னிடம் நான் போயிருக்கிறேனா என விசாரித்தார். நான் இல்லை என்றதும் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டார். இந்தியராகவோ இலங்கையராகவோ பிறந்திருந்தால் அந்தக் குகையை பார்த்திருக்கவேண்டும் என அவர் அபிப்பிராயப்பட்டார்.

டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்..! தி.ஜானகிராமன் சிறுகதை

.



நான் தூங்குகிறேனா என்ன ' இல்லையே.....நான் விழித்துக் கொண்டு இருக்கிறேனே! பின்னே ஏன் இந்தச் சந்தேகம் ? ஒரு நாய் எப்படி இங்கிலீஷில் குரைக்கும் ?


நாய்க்கு மொழி ஏது? இருக்கிறது ஒரு மொழிதானே? குரைப்பு ஒன்று தானே மொழி!இல்லாவிட்டால் மீமீ என்று சன்னக் குரலில் குழையும் வாலையும் குழைக்கும். பின்னே ஏன் எனக்கு மட்டும் ஒரு நாய் இங்கிலீஷில் குரைப்பது போல் கேட்கிறது ' கனவா ' இல்லையே. அரைத் தூக்கம் கூட இல்லையே. நல்ல முரட்டு விழிப்பாகத்தானே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இங்கிலீஷில்தான் குரைக்கிறது. என்ன வார்த்தைகள் இவை...?


கூர்ந்து கேட்கிறார் அவர்.

 'வெளவ் வெளவ்...டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்...வெளவ் வெளவ்...டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்... வெளவ் வெளவ் .டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் ' இப்போது தெளிவாகக் கேட்கிறது...
 ஆமாம். ஒரு நாய்தான்!டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் என்றுதான் குரைக்கிறது! இது என்ன டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்!அப்படி என்றால்?

உலகச் செய்திகள்

.
  ஈரானில் சந்தித்துக்கொண்ட மன்மோகன்- சர்தாரி

'இஸ்லாம்: சொல்லப்படாத கதை' செனல்4 இன் புதிய நிகழ்ச்சியால் சர்ச்சை

சாய்பாபாவின் ரூ. 40,000 கோடி சொத்துக்கள்: யாருக்கு சொந்தம்?

ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்!

"போர்டோ' அணு சக்தி நிலையத்தின் உற்பத்தி ஆற்றலை ஈரான் இரு மடங்காக்கியுள்ளது
ஈரானில் சந்தித்துக்கொண்ட மன்மோகன்- சர்தாரி

இதன்போது மும்பைத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான பாகிஸ்தானிய விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துமாறு அவர் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.ஈரான் சென்றுள்ள இந்திப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அங்கு 16ஆவது அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. 

fgsg

குளக்கரை நேசம்

.

குளக்கரை நேசம்


Inline image 1

பச்சைப்பட்டு விரித்தாற்போல்
எங்கும் புல்வெளி

யாருமில்லாப் புல்வெளி
கண்கள் கொள்ளை கொள்ள
இவற்றின் நடுவே
கயல் துள்ளும் நீர்வெளியாக
ஊரோரக் குளம்!!

அன்றாடம் நாட்தவறாது

மாலை ஆறுமணிக்கு

குளக்கரையில் ஓட்டப்பயிற்சி – அங்கே

ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையொருத்தி
இடவலமாய்ப் போய்க்கொண்டிருக்க
வலமிருந்து இடமாய்ப் போகும்
காக்கேசன் மங்கையவள்!
மூன்றாவதாய்ச் செல்லும் இவனது
ஓட்டத்தின் பாதையினூடாய் 
எதிராய்க் கடக்கையில் 
சிந்தும் குறுஞ்சிரிப்பு மாத்திரமே
அவளுக்கும் இவனுக்குமான உறவு!!

கோடையின் தாக்கத்தில்

தமிழ் சினிமா

MailPrint
முகமூடி

இதுவரை ஹாலிவுட் சூப்பர் கதாநாயகர்களை பார்த்து வந்த தமிழக மக்களுக்கு, தமிழக சூப்பர் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் விதத்தில் மிஷ்கின் இயக்கியிருக்கும் படம் முகமூடி.
இந்தியாவில் பல மாநிலங்களில் பெரிய பெரிய பணக்கார வீடுகளில் கொள்ளையடிக்கும் முகமூடி கும்பல் ஒன்று சென்னையிலும் தங்களது கைவரிசையை காட்டுகிறார்கள்.
இந்த நிலையில் குங்பூ கற்று வரும் இளைஞன் லீ, தனது குருவுக்கு உதவி செய்வதற்காக குங்பூ பயிற்சிக்கு ஆட்களை தேடி அலைகிறான். மீனவர்களிடம் சென்று குங்பூ பயிற்சி கற்றுக் கொள்ள வருமாறு அழைக்கிறான்.
ஆனால் அவர்கள் தங்களுக்கு குங்பூ பயிற்சி தேவை இல்லை. எங்களுடைய ஆயுதமே எங்களுக்கு பாதுகாப்பு என்று கூறுகிறார்கள். அதற்கு லீ அந்த ஆயுதத்தால் என்னிடம் சண்டை போட்டு நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு பயிற்சி தேவை இல்லை. நான் வெற்றி பெற்றால் கட்டணம் செலுத்தி நீங்கள் பயிற்சி பெறவேண்டும் என்று அவர்களிடம் கூறுகிறான்.
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் அவனுடன் மோதுகிறார்கள். இறுதியில் தோல்வியடைந்து தப்பி செல்லும் ஒருவனை லீ விரட்டிச் செல்கிறான். அப்போது அங்கு வரும் உதவி கமிஷனரின் மகள் சக்தி, லீயின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து அவனை பொலிசில் பிடித்துக் கொடுக்கிறாள்.
பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் லீ, தன்னை பிடித்துக் கொடுத்த சக்தியை பழிவாங்குவதற்காக அவளது வீட்டுக்குச் செல்கிறான். அவளைப் பார்த்த பிறகு மனம் மாறி அவள் மீது காதல் வயப்படுகிறான். ஒருநாள் சக்தியை பார்ப்பதற்காக இரவில் முகமூடி அணிந்து அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான்.
திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக திருடன் ஒருவனை பொலிசாரிடம் பிடித்துக் கொடுக்கிறான். இதனால் முகமூடி மனிதன் மீது மக்களுக்கு ஒரு தனி மரியாதை வருகிறது.
மற்றொரு நாள் முகமூடி அணியாமல் சக்தியின் வீட்டுக்குச் தனது காதலை சொல்ல லீ செல்கிறான். அப்போது கமிஷனரை கொலை செய்ய வரும் ஒருவன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விடுகிறான்.
அவர் மீது குண்டு பாய்கிறது. இதை பார்த்துவிடும் லீ அவனை பிடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் துப்பாக்கியை லீயின் கையில் விட்டுவிட்டு கொலைகாரன் தப்பிவிடுகிறான்.
சத்தம் கேட்டு அங்கு வரும் பொலிசார் லீயின் கையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு இவன்தான் கமிஷனரை சுட்டான் என்று முடிவு செய்கிறார்கள். லீயை பிடிக்க பொலிசார் வரும்போது தப்பித்து ஓடி தலைமறைவாகி விடுகிறான்.
பின்னர் தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காகவும், கொள்ளைக் கும்பலை பிடிப்பதற்காகவும், தன் காதலை காதலிக்கு உணர்த்துவதற்காகவும் லீ என்ன செய்கிறான் என்பதே மீதிக்கதை.
படத்தின் ஆரம்பத்திலே நம்மை சீட் நுணியில் அமரவைக்கும் மிஷ்கின், ஒவ்வொரு காட்சியையும் உற்றுநொக்க வைத்திருக்கிறார்.
முதலில் கொள்ளை கும்பலை அறிமுகப்படுத்தி விட்டு அவர்கள் யார், எப்படிபட்டவர்கள் என்பதை பொலிஸின் மூலம் தெரியப்படுத்தி விட்டு அடுத்ததாக கதாநாயகன் யார் அவர் எப்படி பட்டவர் என்பதை காட்டும் திரைக்கதை, ஜீவா சூப்பர் கதாநாயகன் ஆவது என பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் முதல் பாதியை பயணிக்க வைக்கிறது.
பெரும் ஆவலோடு இடைவேளை முடிந்து அதே சுவாரஸ்யத்தோடு சீட் நுனியில் அமந்த ரசிகர்களை படத்தின் இரண்டாம் பாதி சற்று சலிப்படைய செய்கிறது.
கொள்ளையர்கள் யார் என்பதை ஜீவாவும், ஜீவா யார் என்பதை வில்லனும் சுலபமாக தெரிந்து கொள்வதால் முதல் பாதியில் பரபரப்பாக நகர்ந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஜீவா இந்த படத்திற்காக ரொம்பவே உழைத்திருக்கிறார். குங்பூ மாணவன் என்பதை ஜீவா தனது அறிமுக காட்சியிலேயே நிரூபித்து விடுகிறார்.
வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞனாக இருந்து சூப்பர் கதாநாயகனாக மாறும் ஜீவா இரண்டு கதாபாத்திரத்திற்கும் கஞ்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
புதுமுகம் பூஜா ஹெக்டேவுக்கு அழகான தோற்றத்தில் பளிச்சிடுகிறார். நாசர் எப்போதும் போல தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
நரேனின் தோற்றம் வில்லன் கதாபாத்திரத்திற்கு கஞ்சிதமாக பொருந்தியிருக்கிறது. முதன்முதலாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் நரேன் அதற்கு பொருத்தமானவர் என்பதை காட்சிக்கு காட்சி மெய்ப்பித்திருக்கிறார். அழகான வில்லனாக வலம் வரும் அவர் அங்குச்சாமி என்ற கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.
கே இசையில் "வாயை மூடி சும்மா இருடா..." பாடல் இந்த ஆண்டு அதிகப் பேர் முனுமுனுத்த பாடலாக இருக்கும். பார் ஆன்தமும் பட்டையை கிளப்ப போகும் பாடலாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சத்யாவின் உழைப்பு அறுமை. ஒவ்வொரு காட்சியும் மிரட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
பட்ஜெட் ரீதியாக படத்தில் பிரமாண்டம் இல்லை என்றாலும், காட்சி ரீதியாக படத்தை பிரமாண்டமாக மிஷ்கின் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமையும் மிஸ் பண்ணாம பார்க்கனும் என்று ரசிகர்கள் எண்ணும் அளவுக்கு காட்சிகளை நகர்த்தியிருக்கும் மிஷ்கின், தனது முந்தையப் படங்களைப் போலவே இதிலும் கால்களை காட்டி சில ஷாட்களை வைத்திருந்தாலும், காட்சிகளுக்கு சற்று வேகத்தை கொடுத்திருக்கிறார்.
வில்லன் யார், அவனுடைய பின்புலம் என்ன என்பதை கதாநாயகன் கண்டுபிடிப்பதற்கு முன்பே பொலிஸ் ரொம்ப சுலபமாக கண்டுபிடித்து விடுகிறது.
அதற்குப் பிறகு வில்லனின் செயல்பாடுகள் பயங்கராமாக இருக்கும் என்றால், அங்கேயும் இயக்குநர் சற்று தடுமாறியிருப்பதால் படமும் சற்று தடுமாறியிருக்கிறது.
என்னதான் சூப்பர் கதாநாயகன் படமாக இருந்தாலும், இதிலும் தனது எதார்த்த பாணியை பின்பற்றியிருக்கும் மிஷ்கின், இதன் மூலம் சில இடங்களில் ஜீவா போட்டுகொண்டிருந்த முகமூடியை அவர் போட்டுகொண்டது போல இருக்கிறது.
"அதிகமான எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல் இந்த படத்தைப் பார்த்தால் முகமூடி உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்." என்று நிகழ்ச்சி ஒன்றி முகமூடி படத்தைப் பற்றி மிஷ்கின் சொன்னார். அவர் கூறியதை ரசிகர்கள் மனதில் வைத்துகொண்டு படத்தைப் பார்த்தால் இந்த முகமூடி உண்மையிலே தமிழக சூப்பர் கதாநாயகன் தான்.

நன்றி விடுப்பு