சித்திரையைக் கொண்டாடச் சிறகடிக்கும் கற்பனைகள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 

                            

சித்திரையைக் கொண்டாட சிறகடிக்கும் கற்பனைகள்

எத்தனையே எல்லோரின் மனத்தினிலும் இருக்கிறது
அத்தனையும் நிறைவேற அமைந்திடுமா உலகநிலை
அனைவரது அகங்களிலும் அதுகேள்வி ஆகிருக்கு 

தைபிறந்த பின்னாலே சந்தோஷம் தருவதாய்
சீரான சித்திரை சிறப்பாக வந்தமையும்
ஊரெல்லாம் கொண்டாட்டம் உறவெல்லாம் கூடிடுவர்
தேரோடும் கோவில்களில் திருவிழா சிறந்துவிடும் 

புத்தாடை எடுத்திடுவோம் புத்துணர்வும் பெற்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
கற்றாரைக் கண்டிடுவோம் கைதொட்டு வணங்கிடுவோம்
பெற்றவரின் ஆசியினைப் பெற்றுமே மகிழ்ந்திடுவோம் 

இனிப்புச் சுவையோடு இங்கிதமாய் பட்சணங்கள்
காரமும் சேர்த்து களிப்பாகச் செய்திடுவோம்
கொடுத்து மகிழ்ந்திடுவோம் குதூகலத்தில் மிதந்திடுவோம்
வீடெங்கும் பட்சணங்கள் விதம்விதமாய் வீற்றிருக்கும்

வாசலிலே மாக்கோலம் மங்களமாய் வரவேற்கும்
வீடெங்கும் மகிழ்ச்சியது தென்றலாய் பரவிநிற்கும்
பூஜையறை பக்தியினை வெளிச்சமாய் காட்டிநிற்கும்
பொங்கலுடன் அம்மாவும் உள்நுழைவார் அப்பாவுடன் 

மாமாவும் மாமியுடன் வந்திருப்பார் மகிழ்வுடனே
சித்திரைக்குப் புத்துடுப்பும் சீராகத் தந்திடுவார்
அவர்காலைத் தொட்டுவிட்டால் அகநிறைவார் மாமாவும்
ஆசியினை எமக்கீந்து அவரளிப்பார் பணப்பரிசும்

படித்தோம் சொல்கின்றோம்: சண்முகம் சபேசனின் “ காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் “ நாட்குறிப்பில் பிரபாகரனின் மற்றும் ஓர் பக்கம் ! முருகபூபதி


மாந்தருக்கு சிந்திக்கும் ஆற்றலும் இருக்கின்றமையால், ஏனைய உயிரினங்களிலிருந்து வேறுபடுகிறார்கள். அவர்களின் சிந்தனைக் கருவூலங்கள் எழுத்தில் – பேச்சில் – செயலில் வெளிப்படும்போது, அவற்றுக்கான  மாற்றுச் சிந்தனைகளும் எதிர்வினைகளும் தோன்றுவதும் இயல்பு.

இந்தப்பத்தியில் பேசப்படும் நூலை எழுதியவர் தற்போது எம்மத்தியில் இல்லை. அத்துடன் அவர் உளமாற நேசித்த  தமிழ் ஈழத் தேசியத் தலைவரும் இல்லை.

இவர்கள் இருவரதும் சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டுதான் இந்த நூல் வெளிவந்துள்ளது.

காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் என்ற இந்த நூலை  எழுதியிருக்கும்


  சண்முகம் சபேசன்,  அவுஸ்திரேலியா மெல்பனில்  1989 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்தவர்.  அற்பாயுளில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மெல்பனிலேயே மறைந்துவிட்டார்.

இவர் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு  பிறந்தவர். யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான சபேசன்,   அவுஸ்திரேலியா மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், விக்ரோரியா  ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவாறு, மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கிய  தமிழ்த் தேசிய பற்றாளர்.

3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பினார்.  அவ்வாறு எழுதி ஒலிபரப்பிய ஆக்கங்கள் நூற்றுக்கணக்கானவை.

பத்தியொடு திருமுறையைச் சித்தநிறை வுடன்ஓதப் பரிதிதனைக் கண்டவிருள் போற்றுடக்கும் மறையாதோ

                                                                                                           ………………………. பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்.

 
சொந்தமாமோ? பந்தமாமோ? தூரத்து உறவுதானோ?

தூயநல்ல நண்பனாமோ? தொடர்பற்ற யாரெவரோ?

அந்தகன்வந்(து) உயிரெடுத்த அடுத்தகணம் போயந்த

ஆவியில்லா உடல்தன்னைப் பார்த்ததுமே துடக்கென்பார்!

 


 


 

 

 

 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -08 காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் ! சிநேகத்துடன் நிராகரித்த இதழாசிரியர் பணி !! முருகபூபதி

மெல்பனில் West Brunswick இல் ஒரு படுக்கை அறை வீட்டை


வாடகைக்கு எடுத்தபோது,   “ சாம் அண்ணர்  “ என்ற ஆறுமுகசாமி எனக்கு பலவழிகளிலும் உதவினார்.  அவரே என்னை வீடுகள் வாடகைக்கு கொடுக்கும் Real Estate இடம் அழைத்துச்சென்றார்.

நண்பர் இராஜரட்ணம் வைத்தியநாதன் ( ரஞ்சன் ) ஒருநாள் தனது வாகனத்தில் வந்து எனக்கு ஒரு கட்டிலும் மெத்தையும் வாங்குவதற்கு உதவினார்.

Brunswick இல் எனக்கு கிடைத்த வேலைக்கு மாலை 5 மணிக்கு பஸ்ஸில்  புறப்படவேண்டும்.  Australian Textile Printing Company இல் எனக்கு எந்தவொரு முன் அனுபவமும் இல்லாத வேலைதான் கிடைத்தது.  அங்கே கட்டில் விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சேலைகள் அச்சிடப்பட்டன.  பல நாடுளையும் சேர்ந்தவர்கள் பணியாற்றினார்கள்.

எனக்கு இரவு நேர வேலைதான் கிடைத்தது.  மாலை 5-30 மணிக்கு


தொடங்கும் அந்த வேலை , மறுநாள் அதிகாலை 3-30 மணிக்குத்தான் முடிவடையும்.  நான் வசித்த குடியிருப்புக்கு அருகிலிருக்கும் தாய்லாந்தைச்சேர்ந்த இளைஞரும்  அங்கே பணியாற்றினார்.

வேலை முடியும் அந்த அதிகாலை வேளையில் பஸ்போக்குவரத்து இல்லை. அந்தத்  தாய்லாந்து இளைஞர் என்னை தனது காரில் அழைத்துவருவார்.  அவருக்கு வாராந்தம் 20 வெள்ளிகள் கொடுத்துவிடுவேன்.

அப்போது எமக்கு வாராந்தம்தான் சம்பளம் தரப்பட்டது. அதுவும் ஒரு கடித உறையில் தரப்படும்.  பிற்காலத்தில்தான் எமது வங்கிக்கணக்கிற்கு சம்பளம் வரத்தொடங்கியது.

பகல்பொழுதில் நான் மாத்திரம்தான் வீட்டில் இருப்பேன். அறை நண்பர்களுக்கு பகல் நேர வேலை. அந்தவேளையில்தான் நான் வீட்டுக்கும் இலங்கையிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கும் கடிதங்கள் எழுதுவேன். தினமும் மூன்று – நான்கு கடிதங்கள் எழுதுவேன்.  வீரகேசரியில் என்னுடன் பணியாற்றிய சக நண்பர்களுக்கு மட்டுமன்றி, பொது முகாமையாளர்,  விநியோக – விளம்பர முகாமையாளர், பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன், செய்தி ஆசிரியர் நடராஜா உட்பட அனைவருக்கும் எழுதுவேன். அவர்களிடமிருந்து பதில் வராது.  எனினும் எழுதுவேன்.

அமர்ந்து எழுதுவதற்கும் மேசை இருக்கவில்லை. தரையில் அமர்ந்து தலையணையை மடியில் வைத்துக்கொண்டு ஒரு அட்டையில் காகிதம் வைத்து எழுதி எழுதி குவித்த காலம்தான் அது.

மலையகத் தமிழ் மாணவர்களுக்கான குரலாகத் திகழ்ந்த ஆளுமை பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முருகபூபதி


இலங்கைக்கு  அறுபது சதவீதமான  அந்நிய செலாவணியை பெற்றுத்தந்த மக்கள்,  மலையகத்தில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள்தான்.

எனினும் அவர்களின் வாழ்க்கைத்தரம்,  கல்வி, தொழில் வாய்ப்பு,  பொருளாதாரம் ,  வீட்டு வசதி என்பன இன்றும்  முன்னேற்றப்பாதையில் செல்லவில்லை.

அரசுகள் பல பதவிக்கு வந்தபோதிலும்,  அம்மக்கள் தமது  நாட் சம்பளத்தை உயர்த்தக்கோரி தொடர்ந்தும் போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள்.

அவர்கள் மத்தியிலிருந்து  கலை, இலக்கிய, கல்விப் பின்புலத்திலிருந்து வெளிப்பட்ட ஆளுமைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  அந்த வரிசையில்   ஒரு பேராளுமைதான்


பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள்.

டி. எஸ். சேனநாயக்கா பிரதமராகவிருந்தபோது   மலையக தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.  அதன் பின்னர்  ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் ஆயிரக்கணக்கான மலையக மக்கள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். 

இம்மக்களின் அழுகுரலை பதிவுசெய்த  படைப்பிலக்கிய நூல்தான்  மலையக முன்னணி எழுத்தாளர் மு. சிவலிங்கம் எழுதிய ஒப்பாரிக்கோச்சி  புதினம்.  

மலையக மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களின் வரிசையில் வந்திருக்கும் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் இம்மாதம் 04 ஆம் திகதி தனது 78 வயதில் மாரடைப்பு வந்து எம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்.

   இலங்கையில் வாழும் நான்கு இனக்குழுக்களுள் மலையகச் சமூகமும் ஒன்று. மலையகத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் (பேராதனை, ஊவா வெல்லச, சப்பிரகமுவ ) உண்டு.  ஆனால், இங்கு மலையக மக்கள் சமூகத்தின் , வாழ்வியல், கலை, கலாசாரம் தொடர்பான கற்கை நெறிகளோ, அடையாளமோ எதுவுமில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்பன இலங்கைத் தமிழரின் அடையாளம் கொண்டவை. இராமநாதன்  கலை அக்கடமி, விபுலாநந்தர் இசைக் கல்லூரி என்பன அத்தகையவை. அவ்வாறே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம்களின் அடையாளம் உண்டு. சுருங்கக் கூறின், மலையக மக்களின் தனித்துவ அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் ( சகல இன மாணவர்களும் பயிலும் ) தேசியப் பாங்கான மலையகப் பல்கலைக்கழக கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. 

ஸ்வீட் சிக்ஸ்டி 9 - வீரத் திருமகன் - - - ச சுந்தரதாஸ்

 .

அதிரடி,ஆக்சன்,அட்டகாசம் என்று தமிழ் திரையுலகில் அடையாளம் காணப்பட்டவர் சி எல் ஆனந்தன்.நடன நடிகரான இவரை திடுதிடுப்பென்று தான் தயாரித்து இயக்கிய விஜயபுரி வீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக்கினார் சிட்டாடல் பிலிம்ஸ் அதிபர் ஜோசப் தாளியத்.விஜயபுரி வீரன் படத்தின் வெற்றி ஆனந்தனுக்கு மற்றுமொரு பெரிய பட நிறுவனமான ஏவி எம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க கதவைத் திறந்தது.அப்படி உருவான படம் தான் வீரத் திருமகன்.


ஏவி மெய்யப்பன் செட்டியார் தனது பிள்ளைகளின் பெயரில் முருகன் பிரதர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தைத் தொடங்கி முதன் முதலில் இந்தப் படத்தை உருவாக்கினார்.முருகன்,குமரன்,சரவணன் மூவரும் படத்தை தயாரிக்க ஏ சி திரிலோகசந்தர் முதல் தடவையாக டைரக்டராக இப் படத்தின் மூலம் அறிமுகமானார்.படத்தின் திரைக்கதையையும் அவரே எழுதினார்.வசனங்களை அன்று பிரபலமாகிக் கொண்டிருந்த ஆரூர்தாஸ் எழுதினார்.

ஏவி எம் படங்களுக்கு அதுவரை காலமும் ஆர் சுதர்சனம் இசை அமைத்துக் கொண்டிருந்தார்.இளைய தலைமுறையினர் படத் தயாரிப்பில் சம்பந்தப்பட்டவுடன் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன்,ராமமூர்த்தி எவி எம் நிறுவனத்துக்கு முதல் தடவையாக நுழைந்தார்கள்.

படத்தின் கதாநாயகியாக குமாரி சரஸ்வதி அறிமுகமானார்.இவர் வேறு யாருமல்ல, பிற் காலத்தில் பிரபல நகைச்சுவை நடிகையான சச்சு தான் அவர்.அழகும்,யௌவனமும் கொண்ட இளம் நாயகியாக படத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் அவர்.

காட்சிகள் மாறிய கோலங்கள் ! அன்று “ கோத்தா வா.. “ ( Gota Come ) இன்று “ கோத்தா போ…” ( Gota go ) அவதானி


அரை நூற்றாண்டுக்கு முன்னர், கவியரசு கண்ணதாசன் இதயக்கமலம் என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை இயற்றியிருந்தார்.

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல எனத் தொடங்கும் அந்தப்பாடலில்,  காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற வரியையும் இணைத்திருந்தார்.

இலங்கையில் ராஜபக்‌ஷ சகோதரர்களின் குடும்ப ஆட்சியிலும் காலங்கள்  மாறியிருக்கிறது.  காட்சிகளும் மாறிக்கொண்டிருக்கிறது.

இரண்டு தடவைகள் அதிபராகவிருந்து இறுதியாக 2015 ஆம் ஆண்டு


அதிபர் தேர்தலில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்‌ஷ,  மீண்டும் 2019 இல் இந்தப்பதவிக்கு தனது தம்பி கோத்தாவை  அழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து மற்றும் ஒரு சகோதரர் பஸிலை அமெரிக்காவிலிருந்து அழைத்தனர்.

இவர்களைப் பார்க்கும்போது  “ உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல  “ என்றுதான் ஆளையாள் பார்த்து பாடினார்களோ தெரியவில்லை.   இப்போது இவர்கள் மூவரும் இணைந்து காட்சிகளை மாற்றியிருக்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டு,   “ கோத்தா வா..   “ ( Gota Come ) எனச்சொன்ன சிங்கள பெரும்பான்மையின மக்கள், இன்று, அதாவது மூன்று வருட காலத்திற்குள்  “ கோத்தா போ…”   ( Gota go )  எனச் சொல்லிக்கொண்டு வீதிகளுக்கு இறங்கியிருப்பது மாத்திரமன்றி,  அவரது  வாசஸ்தலத்தையும் இதர அமைச்சர்களின் வீடுகளையும் முற்றுகையிட்டு தமது வெறுப்பினை வெளிப்படுத்திவருகின்றனர்.

செய்திகள் பரிமாறப்படும் என்பதனால், சமூக வலைத் தலங்களையும் மூடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு கோத்தாவின் அரசு ஆளாகியது.

கடந்த சில வாரங்களாகவே எதிர்க்கட்சிகள், உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும்  கோத்தா அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டே வந்தன.

இவற்றுக்கு மத்தியில்  2019 இல் கோத்தாவை பதவியில் அமர்த்துவதற்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரசார பீரங்கிகளாக இயங்கிய இரண்டு முக்கிய அமைச்சர்களான விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் அவரவர் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

ஓவியர் 'செள' - ஒரு படைப்பாளியின் கதை! - கிறிஸ்டி நல்லரெத்தினம்
" இதை கொஞ்சம் பாருங்க..... எப்படி இருக்கு?"

"ச்சா! சோக்கா இருக்கு..... ஆச்சிய இன்னும் கொஞ்சம் வயசானவராக கீற முடியுமோ?"

"!  அதுக்கென்ன..... ஏலும்."

சில கிறுக்கல்களில் பின்

"இப்ப இதை பாருங்க..... சரிதானே?"

"அட, இதுதான் என்ர ஆச்சி!"

 

"ஆச்சி பயணம் போகிறாள்" கதைக்கான கேலிச்சித்திரம் வரைவது


பற்றி ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியானுக்கும் ஓவியர் "செள" என அழைக்கப்படும் கருணாகரன் செளந்தரராஜாவிற்கும் இடையே நடந்த உரையாடல் இது!

இந்தப் புள்ளிதான் இரு படைப்பாளிகளின் எண்ணங்களும் சங்கமிக்கும் இடம்.

எழுத்தும் ஓவியமும் இலக்கியத்தின் இரு கண்கள். அவை ஒரு காட்சியை ஒருமித்து காணும் போது ஒரு தேடல் அங்கே நிறைவடைகிறது.

ஒரு காட்சியைப் பற்றி படித்ததும் ஓவியன் மனதில் பதியும் சுவடுகளே அவன் வரைய இருக்கும் ஓவியத்தின் ஊற்றுப்புள்ளி. அருவம் உருவமாகும் உருமாற்றத்தின் முதல் படி இது.

வாசிப்பு அனுபவம் : முருகபூபதியின் கதைத்தொகுப்பின் கதையில் “ அவள் அப்படித்தான் “ சிவமலர் சபேசன் – மெல்பன் – ஆஸ்திரேலியா


தாயகத்தில்   பாடசாலைப்பருவத்தில் எமக்கு பொழுதுபோக்கிற்கு வானொலிதான் முக்கியமாக அமைந்தது.  காலப்போக்கில்தான் தொலைக்காட்சி அறிமுகமானது.

இதன் வருகைக்கு முன்னர் எமது பொழுதுபோக்காக இருந்தது கதைப்புத்தகங்கள் படிப்பதுதான்.  எனினும்  பாடசாலைப் பாடங்கள், அங்கே ஆசிரியர்கள் தரும் வீட்டுப்பாடங்கள் ( Home work )  இவற்றில்தான் நாம் கவனம் செலுத்தவேண்டும்.  அதனால் கதைப் புத்தகங்களை பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்து படித்த காலமும் எமது பாடசாலைக் காலத்தில் அன்றிருந்தது.

பாடசாலைப் புத்தகங்களுக்கு அப்பால்,  கதைப்புத்தகங்கள்


விடயத்தில் வாசிப்பு அனுபவம் என்பது இத்தகைய எல்லைக்குள்தான் மட்டுப்பட்டிருந்தது.

காலப்போக்கில் தொழில், புலப்பெயர்வு, திருமணம், புதிய வாழ்க்கை என வந்தகாலத்தில் பொழுதுபோக்கிற்கு நிறைய சாதனங்கள் வரவாகிவிட்டன.

நாம் எண்ணிம உலகத்திற்குள் ( Digital World ) பிரவேசித்த பின்னர்,  அந்தச்சாதனங்களும் புதிய புதிய வடிவமெடுத்துவிட்டன.  முக்கியமாக இணைய இதழ்கள், முகநூல்,  டுவிட்டர், இன்ஸ்டகிராம்…. என்பனவற்றின் அறிமுகத்தினால், எமது வாசிப்பின் திசையும் மாறிப்போய்விட்டது.

கைத்தொலைபேசியிலேயே உடனுக்குடன் தரவிறக்கம் செய்து படிப்பதற்கு நிறைய விடயங்கள் வந்துவிட்டன. இந்நிலையில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட ஒரு கதைப் புத்தகத்தை வாங்கி பொறுமையாக படிப்பது என்பதும்,  அதுபற்றிய வாசிப்பு அனுபவத்தை எழுதுவது என்பதும் அபூர்வம்தான்.

சில மாதங்களுக்கு முன்னர், மெல்பனில் வதியும் எழுத்தாளர் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன்.

அவற்றில் ஒன்று சிறுகதை இலக்கியம் சார்ந்தது. அதன்பெயர் கதைத் தொகுப்பின் கதை. அந்த நூல்பற்றி இரண்டு பேர்  உரையாற்றினார்கள்.

எப்பவோ முடிந்த காரியமென எடுத்துரைத்த மகான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா     

 

 

   சித் என்றால் அறிவு ஞானம் தெள்ளிய பார்வை ,கூர்
நோக்கு
விரிந்த நோக்கு என்று பொருள் சொல்ல ப்படுவதால் - சித்தர்களை அறிவாளிகள் ஞானிகள்,  தெளிந்த பார்வையினை உடையவர்கள் கூர்ந்த நோக்கினை உடையவர்கள்,கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !

  சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். " அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு " என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதை யும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் அவர்கள் எப்பொழுதும் கைகொ டுத்திடவே எண்ணுவார்கள். அதன் வழியில் பயணப்படுவார்கள்.

  " மக்கள் சேவையினை மகேசன் சேவையாய் " எண்ணி இப்பூவுலகில் வாழ்ந்தவர் பல சித்தர்கள் இருக்கிறார்கள்அப்படியான சித்தருக்கென்று ஒரு பரம்பரையே இருக்கிறது என்பதை வரலாற்றால் அறிகிறோம்.

  பாரத நாட்டில் திருமூலருடன் சித்தர் பரம்பரையினை இணைத்துக் கூறுவது வழக்கம். திருமூலர் மூவாயிரம் வருடங்கள் இம்மண்ணுலகில் வாழ்ந்து பல அரிய பெரியபணிகளையெல்லாம் ஆற்றினார் என்று அறிகிறோம். அவரின் பேராற்றல் வியந்து பார்க்கக் கூடியதாகும். அவரின் திருமந்திரம் என்னும் திவ்விய நூல் பலவித கருத்துக்களின் பொக்கிஷமாய் மிளிர்கிறது எனலாம். திருமூலரைத் தொடர்ந்து பல சித்தர்கள் பாரத மண்ணில் வந்தார்கள். அவர்களில் சிலர் ஈழத்திலும் கால்பதித்து சமூக நலனுக்காய் பலவற்றைச் செய்தார்கள் என்றும் அறிய முடிகிறது.

  ஈழத்துச் சித்தர்கள் என்றும் சொல்லும் பொழுது மற்றய சித்தர்களை விட மாறு பட்டவராய் வேறு பட்டபராய் ஒருவர் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்துஎல்லா இடமும் திரிந்து,யாவருக்கும் சுமை தாங் கியாய்ஆன்மீக வெளிச்சமாய் விளங்கியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுவது சாலவும் பொருந்தும் என எண்ணுகின்றேன். ஆடையில் ஆரம்பரம் இல்லை. தனிப்பட்ட எந்த அலங்காரங்களும் இல்லை. எளிமையான் வாழ்வு. பரிவாரங்கள் இல்லை.பவனி இல்லை. யாரும் சந்திக்கலாம். ஏற்றத் தாழ்வுகள் பார்ப்பதும் இல்லை. நாடியவர்களின் நலன் காக்கும் நன்மருந்து.

இலங்கைச் செய்திகள்

 தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் தலவாக்கலை நகரில்

 நாடளாவிய ரீதியில் அரச எதிர்ப்பு போராட்டம்

 எத்தகைய நெருக்கடியிலும் மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பேன்

மூன்று மாதங்களில் இலங்கைக்கு 2.5 பில்.டொலர் கடனுதவி

மக்கள் போராட்டங்களில் பின்னணியில் எதிர்க்கட்சி

அடுத்த வாரம் புதிய அமைச்சரவை அமைச்சுப் பணிகள் யாவும் சுமுகம்


தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் தலவாக்கலை நகரில்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நேற்று தலவாக்கலை நகரில் நடைபெற்ற து. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், மனோகணேசன், இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டபோது.

(கிருஷாந்தன், கே. சுந்தரலிங்கம்)  நன்றி தினகரன் 

உலகச் செய்திகள்

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரொக்கெட் வீச்சு; 30 பேர் பலி

மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யா இடைநிறுத்தம்

கிழக்கு உக்ரைனிலிருந்து வெளியேறும் பொதுமக்கள்

கிம்மின் சகோதரி அணு தாக்குதல் எச்சரிக்கை

ரஷ்யா மீது மேலும் தடைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நடவடிக்கை


உக்ரைன் ரயில் நிலையத்தில் ரொக்கெட் வீச்சு; 30 பேர் பலி

உக்ரைனின் கிராமடோர்ஸ்க் நகரிலுள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டு 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக அரச ரயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு & குரு பெயர்ச்சி 2022

 SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia


"பிரகஸ்பதி" என்றும் அழைக்கப்படும் குருபகவான்,'நவக்கிரகங்களின்' மையக் கடவுளான இவர், வளமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு நம்மை ஆசீர்வதிக்கிறார். கும்ப ராசியில் இருந்து மீனா (மீனம்) ராசிக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வியாழக்கிழமை பெயர்ச்சியாகிறார்.

SVT யில், தட்சிணாமூர்த்தி (குரு) மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் செய்வார்கள், இது குரு பகவானின் ஆசீர்வாதங்களை வளமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு அழைக்கும்.
பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

காலை 10.00 மணி - நவக்கிரக ஹோமம், விநாயகருக்கு அபிஷேகம், தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்கள்


சைவ மன்றம் நடாத்தும் பண்ணிசை விழா