இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

.
தமிழ்முரசு அவுஸ்திரேலியா வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


மரண அறிவித்தல்

.
                  திருமதி நவமணி மாணிக்கவாசகர்

                 தோற்றம் 11/02/1934    மறைவு 27/12/2016
யாழ் மல்லாகத்தை பிறப்பிடமாகவும் மெல்பேன் ஆஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நவமணி மாணிக்கவாசகர் அவர்கள் 27/12/2016 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்து விட்டார் .அன்னார்   காலம் சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும் ரேவதி (மெல்பேன் ஆஸ்திரேலியா ) துஷ்யந்தி (UK ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,செந்தில்மோகன் ,உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியும், லர்சிகா, துவாரகன் ,சிந்துகா அவர்களின் அன்பு அம்மம்மாவும், காலம் சென்ற குணரட்னம் ,பத்மாதேவி (இலங்கை ) ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 02/01/2017 திங்கக்கிழமை காலை 11 மணிக்கு SPRINGVALE  மயானத்தில் உள்ள BOYD CHAPEL இல் பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதி கிரிகைகள் நடைபெற்று பின்னர் பிற்பகல் 1 மணியளவில் தகனம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்

செந்தில்மோகன் (மருமகன் ) 610434670050

“ஞானாம்பிகை” என்ற தமிழன்னைக்கு முத்துவிழா

.


யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி பழைய மாணவிகளின்சங்கத்தின் அவுஸ்ரேலியா சிட்னி கிளையினரால்அப்பாடசாலையின்முன்னாள் ஆசிரியையும் பேராசியருமான ஞானாம்பிகைகுலேந்திரன் அவர்களின் மாணவிமுனைவர் ஜெயவித்தியாஅவர்களால் உருவாக்கப்பட்ட “ஞான கானம்” நூல் முத்து விழாமலராக இன்று வெளியீட்டுவைக்கப்பட்டது
திருமதி ஞானாம்பிகை குலேந்திரன் தஞ்சாவூர் அறிவியற் கலைகல்லூரியின் பேராசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கே.சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு இரண்டாவதுவாரிசாக அவதரித்த ஞானாம்பிகை சிவசுப்ரமணியம் அவர்கள்கொழும்புமெதடிஸ் கல்லூரியில் கல்வி பயின்று இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதுகலை முனைவர்எனஅனைத்து பட்டங்களையும் அடுத்தடுத்து தனதாக்கிக் கொண்டார்யாழ்ப்பாணம் வேம்படி மகளீர்கல்லூரிஆசிரியராகவும்பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளராகி பின்னர் தஞ்சாவூர்பல்கலைக்கழகத்தில்ஆய்வுக்கல்வியைத் தொடர்ந்து அதே பல்கலையில் பேராசிரியராகவும் இசை மற்றும் பரதநாட்டியத்துறைகளின்தலைவராகவும் பதவி வகித்து ஈழ மண்ணிற்கு பெருமைக்குரியவர் ஆனார்.

"நவநீத பக்தி" சமய சொற்பொழிவு 07.01.2016

.




படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி - அவுஸ்திரேலியா

.
கிரிதரனின் குடிவரவாளன் கதை
அகதியாக தஞ்சம் கோருபவர்களின் வாழ்வுக்கோலங்களை  சித்திரித்த தன்வரலாற்று நாவல்
       
                                 
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நான் மெல்பனில் வாடகைக்கு இருந்த அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எனது வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது.
முதல் நாள் மாலை  வேலைக்குச்சென்று,  அன்று  அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பி,  ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை,  இந்த நேரத்தில் யார் வந்து  கதவு தட்டி எழுப்புகிறார்கள்...?
எனது கட்டிலுக்கு அருகில் மற்றும் ஒரு படுக்கையில் உறங்கிய அந்தத் தமிழ் இளைஞர் காலை வேலைக்குச்சென்றிருந்தார்.
சென்றவர்தான் எதனையும் தவறவிட்டுச்சென்று,  மீண்டும் வருகிறாரோ...? அல்லது வீட்டின் சாவியை விட்டுச்சென்றுவிட்டாரோ...?
அந்தக் காலைவேளையில் எவரும் வரமாட்டார்கள். ஆனால், யாரோ கதவை அடித்துத்  தட்டுகிறார்கள்.
போர்த்தியிருந்த  போர்வையை விலக்கிக்கொண்டு கதவைத்திறக்கின்றேன். வெளியே இரண்டு அவுஸ்திரேலியர்கள் தாம் குடிவரவு திணைக்களத்திலிருந்து வந்திருப்பதாக தமது அடையாள அட்டையை காண்பித்தார்கள்.


உலக அழகி ஐஸ்வர்யா ராய் தற்கொலை முயற்சி

.

உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கரண் ஜோகதர் இயக்கத்தில் ‘ஏக் தில் ஹை முஷ்கில்’ என்ற படத்தில் ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது, ஐஸ்வர்யா ராய் மீது அமிதாப் பச்சன் குடும்பம் கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின.
பொலிவுட் உலகமே பதறிப் போக வதந்தி என தெரியவந்தது, பாகிஸ்தானை சேர்ந்த ஊடகமே இவ்வாறான தகவலை வெளியிட்டதும் தெரியவந்தது.
மேலும் ஐஸ்வர்யா ராய், “என்னை சாகவிடுங்கள், இதுபோன்ற பரிதாப வாழ்க்கையை வாழ்வதை விட சாவதே மேல்” என கூறியதாகவும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2017 Jan 8




பொலிந்துவிட வா ! - என் .ஜெயராமசர்மா .... மெல்பேண்

.




      இரண்டாயிரத்துப் பதினேழே
      இன்முகத்துடனே எழுந்தோடிவா
      இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா
      வறுமையொடு பிணியகல
       வரம்கொண்டு வா
       வளங்கொளிக்கும் வாழ்வுவர
       மனங்கொண்டு வா
       அறியாமை இருளகல
       அறிவொளியாய் வா
       அரக்ககுணம் அழித்துவிட
       அஸ்த்திரமாய் வா
        நிலையாக தர்மெங்கும்
        நிறுத்திவிட வா
        நிம்மதியாய் வாழ்வுவர
        நீநினைந்து  வா !

        சாதிமதச் சண்டையினை
        சம்கரிக்க வா
        சமாதானம் குலைப்பார்க்கு
        சவுக்காக வா
         நீதியொடு சமாதானம்
         நிலைநிறுத்த வா
         நிட்டூரம் செய்வாரை
         குட்டிவிட வா
         வாதமிட்டு வம்புசெய்வார்
         வாயொடுக்க வா
         வாழ்வென்றும் வசந்தம்வர
          மனம்சிரித்து வா !

பல்லாயிரம் உறவுகளின் கண்ணீரில் கரைந்தது முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம்!

.


2004ஆம் ஆண்டு இதே நாளில் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில்,முல்லைத்தீவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் பல்லாயிரக்கணக்கில் கூடி அஞ்சலி செலுத்தி சர்வமத ஆத்மசாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
கடல்கோள் ஏற்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியானாலும் அதன் நினைவலைகள் இன்றும் அந்த உறவுகளை விட்டு அகன்றதாக தெரியவில்லை.இதேவேளை, முல்லைத்தீவு கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அதிகளவான மக்கள் சுனாமியால் காவுகொள்ளப்பட்டார்கள்.இந்த பகுதியில் 3300க்கும் அதிகளவான மக்கள் பலியானார்கள்.பலர் உறவுகளையும்,உடைமைகளையும் இழந்தார்கள்.

சோ – மானுடத்தின் பன்முகம்

.

வாழ்வின் பல்வேறு சமயங்களில் நம் எத்தனிப்பு ஏதுமின்றி சில நல்ல விஷயங்கள் நடைபெறும். அவற்றை “அதிர்ஷ்டம்” என்று அழைப்பதுண்டு. “துக்ளக்” வாசிக்கபடும் வீட்டில் பிறந்தது என்பது எனக்கான ஆரம்பகால அதிர்ஷ்டம். இருப்பினும், எந்தவித “ஜனரஞ்சக” விஷயமும் இல்லாமல் எழுத்துக்களால் மட்டுமே நிரம்பிய அப்பத்திரிக்கையை பார்த்தாலே முதலில் போரடிக்கும். படிக்கத் தோன்றாது. ஆனால், அந்த எண்ணம் விலகிய வகை, ஆச்சரியமானது. எண்பதுகளின் நடுப்பகுதியில் எனக்கு கிரிகெட் கிறுக்கு தலைக்கேறியிருந்தது. அதனால், கிரிகெட் சார்ந்த எந்த செய்தி எந்த வடிவில் இருந்தாலும் என்னை ஈர்த்தது. அப்போது தான் தமிழை கோர்வையாக வாசிக்கவும் எழுதவும் துவங்கியிருந்தேன். “கபில்தேவ் பற்றிய ஒரு கேள்விக்கு சோ எப்படி பதில் சொல்லியிருக்கிறார்” என்ற வீட்டினரின் உரையாடலின் வழியே தான் “துக்ளக்” தொட்டுப்பார்க்கும் ஆர்வமே வந்தது. பின்னர் பல மாதங்கள் துக்ளக் வீட்டிற்கு வந்தவுடன், “கேள்வி பதில்” பகுதியை மட்டும் தேடுவதும் அதிலும் கிரிகெட் பற்றிய ஏதெனும் கேள்வி இருக்கிறதா என்று பார்ப்பதும் வழக்கமானது. கண்ணை மூடிக்கொண்டு தேட முடியாதேஉமிகவும் ஸ்வாரஸ்யமான பிற பதில்கள் அவ்வப்போது குறுக்கிடும். அவ்வாறு கேள்வி பதில் பக்கங்களை தேடிப்போகும் போது “ஒண்ணரை பக்க நாளேடு” குறுக்கிடும். முதன் முதலாக வாசித்து நாள் முழுதும் சிரித்துக் கொண்டே இருந்த இதழ் ஞாபகம் இருக்கிறது. “வெங்காய விலை வீழ்ந்தது எப்படி” என்று “வெங்காய நிருபர்” ஒருவர் பேட்டி எடுக்கும் நக்கலும் நையாண்டியும் நிறைந்த “பேட்டி” அது. யார் எவர் என்று பார்க்காமல் “அடித்து வெளுக்கும்” ஆள் இவர் என்று குறைந்த காலத்திலேயெ புரியத் துவங்கியது.

இலங்கையில் பாரதி ( அங்கம் -04) - முருகபூபதி

.
பாரதியின் புகழ் பரப்பிய இலங்கைத்தமிழ்ப் பத்திரிகை உலக முன்னோடிகள்
                                                         

இலங்கையில் பாரதியின் தாக்கம் பற்றிய ஆய்வில் ஈடுபடும்பொழுது பல பத்திரிகையாளர்களே முதலில் நினைவுக்கு வருகிறார்கள்.
இந்தத்தொடரின் தொடக்கத்திலிருந்து பாரதியின் பாதிப்புக்குள்ளான பத்திரிகையாளர்களே வருவது தவிர்க்கமுடியாதது. பாரதியின் நண்பர் வ.ரா.வைப்போன்று மற்றும் ஒருவர்  வ.ரா.வுக்கு முன்பே 1920  காலப்பகுதியில்  இலங்கைக்கு வந்தார்.
1921 இல் தேசநேசன் என்ற பத்திரிகையையும் வெளியிட்டிருக்கிறார். அவரது பெயர் கோதண்டராம அய்யர் நடேசய்யர் (1887-1947)
தஞ்சாவூரில்  பிறந்திருக்கும்  நடேசய்யர், பன்முக ஆளுமைகொண்டவர். தாம் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் மூலதனமாகக்கொண்டு காப்புறுதி, வங்கி நிருவாகம், வர்த்தகம்  முதலான துறைகளில் நூல்களும் எழுதியிருப்பவர்.
ஒரு வழக்கறிஞராக இருந்த வ.உ.சிதம்பரப்பிள்ளை  எவ்வாறு பிரிட்டிஷாரை  எதிர்த்து  தமிழ்மக்களுக்காக கப்பல் ஓட்டினாரோ அவ்வாறே  தமிழக மக்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு  மாற்றீடாக  வர்த்தகத்துறையில்  மேம்படவேண்டும் என்று விரும்பியவர் நடேசய்யர். அதற்காகவே  தஞ்சாவூரில்  வர்த்தக மித்திரன் என்ற பத்திரிகையையும்  வெளியிட்டவர்.
 வர்த்தகர்களை  ஒருங்கிணைத்து தொழிற்சங்கமும் அமைத்தவர். பிரிட்டிஷாரால்  இலங்கைக்கு  அழைத்துச்செல்லப்பட்ட  இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலும் வர்த்தகத்துறையில் விழிப்புணர்வுகளை  ஏற்படுத்தும்  நோக்கத்தில்  இலங்கைத்தலைநகர் வந்தார்.   ஆனால்,  இங்கு மலையகத்தில் இந்திய மக்கள் படும் துயர்கண்டதும்  அவரது  நோக்கத்தில்  மாற்றம் உருவானது.


அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்

.


முனைவர் மு.பழனியப்பன்,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறைத் தலைவர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவாடானை
கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம், திருமுறை, தத்துவம், திருப்புகழ் போன்றன கோயில்களின்  ஒலிநிலை உயர்வுகள். புராணம், இதிகாசம், சிற்றிலக்கியங்கள் போன்ற படைப்புக்கலை உயர்ச்சிகள். கோயில் பற்றியதான கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றன அழியாத வரலாற்றுச் சான்றுகள். கோயில் அமைவிடம், சுற்றுச் சூழல், நீர்நிலை போன்றன மண்வள மேம்பாடு சார்ந்தன. கோயில் திருவிழாக்கள் பக்தி அடிப்படை மட்டும் வாய்ந்தன அல்ல. சமுதாயக் கட்டுமானம், சமுதாய ஒத்திசைவு ஆகியன சார்ந்துன.
இந்நிலையில் ஒரு கோயிலைக் காண்பதென்றால் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் கண்டுவிட்டுச் சென்றுவிட  இயலாது. அதன் பருப்பொருள், நுண்பொருள் ஆகியனவற்றை உணர்ந்தாக வேண்டும். உணர்ந்ததை வெளியுலகிற்கு உணர்த்தியாகவேண்டும். இவ்வாறு  தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலும் தக்கப் பின்னணியோடு ஆவணப்படுத்தும் முயற்சி தற்போது தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த தமிழன்பர் அன்பு ஜெயா அவர்கள் தமிழகக் கோயில்களில் ஒன்றாக விளங்கும் திருவதிகை பற்றிய அவரின் பதிவை, மேற்சொன்ன அத்தனை உயர்ச்சிகள் சார்ந்து ஒரு நூலாகத் தந்துள்ளார். அந்நூலின் பெயர் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை என்பதாகும். மலேசியா நாட்டில் சேலாங்கூர் பகுதியில் அமைந்துள்ள திருபீடம் அமைப்பு இதனை வெளியிட்டுள்ளது.
அன்பு ஜெயா என்ற பெயரை  முதன்முதலாக மதுரைத்திட்டத்தின் சிலப்பதிகாரப் பதிப்புப் பணியாற்றிய பெருமக்களுள் ஒருவராக அவரைக் கண்டுகொள்ள முடிந்தது. முன்னேற்றமான  சிந்தனைக்குரியவர் அன்பு ஜெயா என்பதன் அறிகுறி அது. தொடர்ந்து பல கருத்தரங்குகள், சந்திப்புகள், இணைய இயங்கு வட்டம் போன்றவற்றில் அவர் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது.

உலகச் செய்திகள்


சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது - விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி கருத்து

மீண்டும் ஒரு விமான விபத்து ;  27 பேர் பலி?

 'ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை!' : அப்போலோ தலைவர் வேதனை

ரஷ்ய தூதுவர் மீது சற்றுமுன் துப்பாக்கிச்சூடு


கிறிஸ்மஸ் சந்தையில் தீவிரவாத தாக்குதல் ; 12 பேர் பலி ; ஜேர்மனியில் பரபரப்பு

மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனம் : அவகாசம் கேட்கும் தலைவர்

ஈரானில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி..!

அமெரிக்காவின் ஜனாதிபதி யார்? ; இறுதி முடிவு வெளியானது

மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் பாரிய வெடிப்பு ; 27 பேர் பலி, 70 பேர் காயம்

இந்தியாவின் 'அக்னி–5' ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது

ஓடு பாதையை விட்டு விலகிய விமானம் ; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

சசிகலா தலைமையின்கீழ் பணியாற்ற அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் 



இலங்கைச் செய்திகள்


11 பேரை காவுகொண்ட யாழ் விபத்து : 'தமி­ழர்கள் எம்­மீது வெறுப்­பாக இருப்பார்கள் என நினைத்தோம்.  ஆனால் தமிழ் மக்­களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள்' : கண்ணீருடன் தெரிவித்த உறவுகள்

தென்னிந்தியாவிலிருந்து வடக்கிற்கு புதிய கப்பல் சேவை...!

கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை

செட்டிகுளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒலிப்பதிவு : மஹிந்தவுக்கு  அறிவுரை கூறும் லசந்த விக்கிரமதுங்க : இரவில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் வெளியானது 

வவுனியா பொதுப்பூங்கா புதுப்பொலிவுடன் இன்று திறந்துவைப்பு.!

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு.!

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை : 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.!



“வெட்டிக்காடு” சுயுபுனைவின் வெளிப்பாடு

.
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி
muelangovan@gmail.com


இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று சுயபுனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக் கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது.

தம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977 இல் சுயபுனைவு என்னும் சொல்லை வழங்கியவர் செர்ஜ் தூப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky). குறிப்பாகப் பிரெஞ்சுத் தேசத்தில் வாழ்ந்த படைப்பாளிகள் மிகச் சிறந்த புனைவு இலக்கியங்களைத் தந்துள்ளனர். ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி என்னும் புனைவு இலக்கியம் குர்தீஸ்தான் விடுதலைப் போரை மிக அழகிய வடிவில் தந்துள்ளது. சலீம் சுயபுனைவாகத் தம் படைப்பை உருவாக்கினாலும் குர்திஸ்தானின் பழைய வரலாறு, பண்பாட்டுச்சிறப்பு, வாழ்க்கை முறை என அனைத்தையும் நுட்பமாகப் பதிவுசெய்திருப்பார்.

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் - - அபிநயா,துபாய்.

.

மரியாள் மகனாய்ப் பிறப்பு
மரித்தும் மீண்டு(ம்) வந்த அற்புதம்
வியத்தகு உந்தன் சிறப்பு
பெத்தலகமில் பிறந்த பாலகன் 
பணிவுடன் பிரபஞ்சத்தை வந்து இரட்சிக்க
அன்பை அள்ளிதந்த காவலன்

சாண்டா தந்திடும் பரிசுகள் 
சகோதரத்துவ சமத்துவப்  பாடம் பறைசாற்ற
சண்டைத் தீர்த்திடும் வழிகள்

அழகாய் அலங்கரிக்க மரங்கள்
அகிலத்தில் அனைவரையும் பாசத்தை பகிர
ஒன்றாய்ச் சேர்த்திடும் கரங்கள்

புத்துணர்ச்சிப் பூத்திடப் புத்தாடை
தீமை எண்ணம் சிந்தையில் அகற்ற
அகசுத்தம் செய்யும் நீரோடை

நெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்: சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் வண்ணதாசன் கருத்து

.


எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, பெருமாள்புரம், சிதம்பரநகரில் வசிக்கும் வண்ண தாசன் 22.8.1946-ல் பிறந்தவர். கல்யாணசுந்தரம் என்கிற இயற் பெயரைக் கொண்ட இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதைத் தொகுப்புகள் உட்பட ஏராளமான நூல்களை எழுதியவர். இவரது `ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கலைமாமணி விருது, இலக்கிய சிந்தனை விருது, சுஜாதா அறக்கட்டளை விருது, வைரமுத்து கவிஞர் தின விருது என்று 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். இன்னும் சில நாட்களில் விஷ்ணு புரம் விருது பெறவுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெறும் வண்ண தாசனை, அவரது இல்லத்தில் `தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
உங்களது முதல் எழுத்து அனுபவம் குறித்து..?
பள்ளியில் படிக்கும்போது தி.சு.ஆறுமுகம் என்ற தமிழாசிரியர் தமிழ் கற்றுக்கொடுத்தார். அவரது வகுப்பில் வைத்துத்தான் சீட்டுக் கவிதைகளை எழுதி அரங்கேற்றம் செய்தேன். 1962-ல் ‘ஒரு ஏழையின் கண்ணீர்’ என்கிற எனது முதல் சிறுகதை `புதுமை’ என்ற இதழில் வெளிவந்தது. ஒரு அச்சகத்தில் வேலை பார்ப்பவனின் கதை அது. அதன் பிரதிகூட இப்போது என்னிடம் இல்லை.
2000-ல் உங்களது தந்தை, திறனாய்வாளர் தி.க.சி.-க்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. உங்களது எழுத்துக்கு அவர் அளித்த ஊக்கம்போன்று வேறு யாரேனும் ஊக்கமாக இருந்துள்ளார்களா?

அமீரகம் - தூங்கா நகரம் ! முனைவர் ப.இப்ராஹிம்

.
அமீரகம் !
சலவைக்குப் போட்ட
தார் சாலைகள் !

கற்பிழக்காத
கற்பனைகளின் கோட்டைகளாய்
கட்டிடங்கள் !

இருளையும், அழகாக்கும்
ஒளி விளக்குகள் !
நிலமகளின் ஹிப்பி !

தூங்கா நகரம்
மதுரை மட்டுமல்ல ….
அமீரகமும் தான் !

அமீரக அகராதியிலிருந்து
அகற்றப்பட்ட
முதல் சொல்
ஏழை !

தமிழ் சினிமா

 சென்னை-28

ஒரு சில இயக்குனர்கள் இப்படி படம் எடுத்தால் தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள், அவர்கள் அந்த ரூட்டில் இருந்து கொஞ்சம் விலகினாலும் எப்போது மீண்டும் அந்த ரூட்டிற்கு வருவார்கள் என ஆவல் தோன்றும், அப்படி தான் வந்த ஏரியாவிலேயே மீண்டும் களத்தில் இறங்கி 6 அடிக்க வந்துள்ளார் வெங்கட் பிரபு, 6 அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

சென்னை-28 படத்தில் நடித்தவர்கள் அனைவரும் 10 வருடம் கழித்து காட்டுவது போல் அவர்கள் வாழ்க்கை தொடங்குகின்றது. படத்தின் ஆரம்பத்திலேயே ஜெய்யின் திருமண நிச்சயத்தார்த்தம் தேனியில் நடைப்பெறுகின்றது.
தேனிக்கு அனைத்து நண்பர்களும் குடும்பத்தோடு செல்ல, ஒரு இக்காட்டான சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் வைபவ் நடத்தும் கிரிக்கெட் டீமுடன் மோதுகிறார்கள், வைபவ் வெற்றி பெறுவதற்காக ஜெய்யை ஒரு பெண்ணுடன் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ஏற்பாடு செய்து மிரட்டுகிறார்.
ஜெய்க்காக அந்த பைனல் மேட்சில் தோற்றாலும், போட்டோ எப்படியோ லீக் ஆகி கல்யாணம் நின்றுவிடுகின்றது. அதை தொடர்ந்து ஜெய் திருமணம் என்ன ஆனது, மற்ற நண்பர்கள் குடும்பத்தினரிடம் எப்படி மாட்டி முழிக்கிறார்கள், இவர்கள் எல்லோரையும் மீண்டும் அதே கிரிக்கெட் எப்படி காப்பாற்றுகிறது என்பதை செம்ம ஜாலியாக கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.

படத்தை பற்றிய அலசல்

முதலில் இப்படி ஒரு கதைக்களத்தை தயார் செய்ததற்காகவே வெங்கட் பிரபுவை பாராட்டலாம், முழுக்க முழுக்க பசங்களுக்காக மட்டுமில்லாமல், முந்தைய பாகத்தைவிட பேமிலி ஆடியன்ஸை மனதில் வைத்து சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார்.
அதிலும் தற்போது உள்ள மார்க்கெட்டிற்கு ஏற்றார் போல் ஜெய், சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்தை மிக அழகாக பயன்படுத்தியுள்ளார், அதிலும் சிவா வந்து நின்றாலே சிரிப்பு சத்தம் வந்துவிடுகின்றது, அவதார் படம் எந்த படத்தின் காப்பி என விமர்சனம் செய்வது, ஓடி போய் கல்யாணம் செய்யலாம் என்று கூறியவுடன், கட் செய்து இது அலைப்பாயுதே ஸ்டைல் என்று சொல்வது எல்லாம் செம்ம சார்.
முந்தைய பாகத்தின் நினைவுகள் அனைத்தும் சில இடங்களில் வந்து செல்வது ரசிக்க வைக்கின்றது, அதிலும் கோபி மறுபடியும் தன் பேட்டை வாங்கினாரா? என்பதை காட்டிய விதம் விசில் பறக்கின்றது.
படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் பின்னணி இசை, அதிலும் பேட் பாய்ஸ் மற்றும் வைபவிற்கு வரும் பின்னணி இசை சூப்பர், ஒளிப்பதிவு தேனி, சென்னை என அனைத்தையும் ரசிகர்களுடன் ஒன்ற வைக்கின்றது.
ஆனால், முந்தைய பாகத்தில் கிரிக்கெட், கிரிக்கெட் என்று தான் கதை நகரும், இந்த பாகத்தில் கமர்ஷியலுக்காக சில விஷயங்களை உள்ளே நுழைத்தது, ஹவுஸ்பார்ட்டி பாடல் என கொஞ்சம் யதார்த்தம் மீறுகின்றது.

க்ளாப்ஸ்

நீண்ட நாட்களுக்கு பிறகு செம்ம ஜாலியாக ஒரு கதைக்களம், அதற்கு திரைக்கதை அமைத்த விதம்.
ஜெய், சிவா, விஜய் வசந்த் என அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக நடித்துள்ளனர், ப்ரேம்ஜி மற்ற அண்ணன் படத்தை விட அதிகம் அடக்கி வாசித்துள்ளார், அதுவும் சென்ற பாகத்தில் கேட்ச் போல், இதில் ஒரு பந்தை தேக்கும் காட்சி சூப்பர்.
கிரிக்கெட் சம்மந்தப்பட்ட காட்சிகள், பின்னணி இசை.

பல்ப்ஸ்

சென்ற பாகத்தில் இருந்த யதார்த்தம் மற்றும் அதிரடி பாடல்கள் மிஸ்ஸிங்.
மொத்தத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் செம்ம FUN பார்ட்டி. நீண்ட நாட்களுக்கு பிறகு இறங்கி அடித்துள்ளார் VP.




நன்றி   Cine Ulagam