மரண அறிவித்தல்

.
                 இளைப்பாறிய அதிபர், கதிரேசபிள்ளை ஆறுமுகம் (சிவபாதம்) 
மறைவு 01.03.2019

இளைப்பாறிய அதிபர், கதிரேசபிள்ளை ஆறுமுகம் (சிவபாதம்) அவர்கள் இன்று (1.03.2019) அதிகாலை சிட்னியில் இறைபதம் அடைந்தார், என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றேன்.
காலம்சென்றவர்களான, களுவாஞ்சிகுடி, சீனித்தம்பிக் குருக்களின் பேரனும், கதிரேசபிள்ளை-சிந்தாமணி தம்பதிகளின் இளைய 
மகனும், பழுகாமம் தோன்புதர் குமாரசாமி தம்பதிகளின் மருமகனுமான, ஆறுமுகம் அவர்கள், இளைப்பாறிய ஆசிரியை திருமதி பாக்கியரெட்ணம் அவர்களின் அன்புக்கணவரும்,
சுதமதி, வேல்மாறன், கலாநிதி திருமாவளவன், இளந்திரையன், பூங்கோதை ஆகியோரின் பாசமிகு தந்தையும், சட்டத்தரணி தமிழரசன், பவதாரிணி, சங்கரி,யாமினி, விமலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அவரின் பூதவுடல் 04/03/2019 திங்கட்கிழமை மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை, பொது மக்கள் அஞ்சலிக்காக 524 Windsor Road, Baulkham Hills, NSW - 2153, Australia என்னும் இடத்தில் வைக்கப்பட்டு,
05/03/2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12,00 மணிமுதல் பி.ப. 1.30 மணியளவில் Macquarie Park Cemetery and Crematorium, Cnr Delhi Road and Plassey Road, Macquarie Park, NSW - 2113, Australia என்னுமிடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும்,  அறியத்தருகின்றார்கள்.

வாழ்தல் என்பது - செ .பாஸ்கரன்

.


இலட்சியங்கள் எல்லாவற்றையும்
நம்மால் அடையமுடியாது
ஒவ்வொன்றாய் முயற்சிக்கலாம்
ஜன்னலின் ஊடாய்
வெளித்தெரியும் வானம்
அதில் எங்கோ தொலைதூரத்தில்
வட்டமடிக்கும் பருந்து
கண்கள் மட்டும்
இரையைத் தேடியவண்ணம்
ஊடுருவும் பார்வையில் சிறு புள்ளி
பறத்தலை திசை மாற்றி
தொப்பென வீழ்வதுபோல்
கீழிறங்கி மேலெழும்பும்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கால்கள் இரண்டிற்கிடையில்
உயிருக்காய் போராடும் ஓர் ஆன்மா

சற்று முன்பு நினைக்காத தருணம்
இப்போ நிகழ்த்து விட்டது
வாழ்வில்  இது நியதி 
இன்றும் நேற்றைய நாட்போல்
சுகமாக இருக்குமா
கேள்வியொன்று
விழித்தெழுகையில்
எம்முன் எழுந்து நிற்கும்
நேற்றைய கவலைகள்
இன்றும் மீதமிருப்பதுபோல்
தொற்றிக் கொள்கிறது

நமக்கு நாமே போட்டுக் கொண்ட
திரைகளை விலக்கிப் பார்க்கும் போது
நீண்ட தூரம் பயணித்திருப்போம்
மரணம் அதை  வெல்லும் இலட்சியம்
ஒவ்வொரு நிமிடமும் நீ வாழ்ந்து கொள்
வாழ்தல் என்பது புரியாத புதிர்
விடை தெரிந்து விட் டால்
உன் இலட்சியம் நிறைவேறிவிடும்







நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா



.

“அம்மா தன்னிடம் எதையும் வைத்துக் கொள்ளாமல் தான் கற்ற எல்லாவற்றையுமே தன்னிடம் நடனக் கலை கற்ற பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டார், அவர் எதையுமே ஒளித்து வைக்கவில்லை”

இப்படியொரு நெகிழ்வானதொரு அனுபவ மொழிகளை மகன் பகிர, தாய் கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல் வெளியீடு கடந்த சனிக்கிழமை சிட்னி முருகன் ஆலயத்தின் கலாசார மண்டபத்தில்
நிகழ்ந்தது.நாட்டிய கலாநிதி மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி கார்த்திகா கணேசரின் மூன்று  நூல்களின் அறிமுக நிகழ்வே இவ்வாறு இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை திருமதி சோனா பிரின்ஸ் அவர்களின் வரவேற்புரையுடன், இறை வணக்கத்துடன் திரு திருமதி பவராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். 

ஹெலென்ஸ்பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலய சிவமஹோத்சவம் 23/02/2019 - 06/03/2019




கோவிலில் தற்போதுநடைபெற்று கொண்டிருக்கும்   சிவமஹோத்சவத்தில்  ஓதுவார் திரு ரஜூபதி சிவலிங்கம் கலந்து கொண்டுள்ளார்.




திருக்குறள் போட்டிகள்

 இப்போட்டிகள் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில்
வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் மாலை 2.15 மணியிலிருந்து நடைபெற்றது.
போட்டிக்கான பரிசுகளும், சான்றிதழ்களும் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம்
அடுத்து நடத்தும் விழாவில் வழங்கப்படும் என தெரிவித்தார்கள்.  இப்போட்டியில் 65 மாணவர்களுக்கு  மேலாக கலந்து கொண்டார்கள் 


அற்ப திருப்தி – குறுங்கதை - யோகன், கன்பரா


Image result for mcdonald

.


அது சனிக்கிழமை. காலை பத்து மணி.

கடகடத்து ஓய்ந்த வோஷிங் மெஷினில் பிழிந்த உடுப்புகளை பிளாஸ்டிக் கூடைக்குள் குவித்து ஜேசனின் அறை  வாசல் வரை தூக்க முடியாமல்  அதை  இழுத்து வந்தார் தவநாயகம். 
“இந்தா  தோய்த்த உடுப்புகளைக் கொண்டு போய் காய விடு.” 
“ “
பூட்டியிருந்த அறைக்குள் எந்த சத்தமுமில்லாததால்  சுட்டு விரலால் கதவில் தட்டினார். இரவு வேலையால் பிந்தி வந்தவன் இன்னும் நித்திரை கொள்கிறானா ? ஒருவேளை காதுக்குள் ஹெட் போனைப் போட்டுக் கொண்டு பாட்டுக் கேட்கிறானா?
ஒரு நாள் போட்ட  உடுப்புகளை கூட கொண்டு வந்து சத்தம் போடாமல் வோஷிங் மெஷினுக்குள் போட்டு விடுகிறான்.  அதை விட  கிரிக்கட் ஆடிவிட்டு வந்து போட்டிருக்கும் சேறு அப்பிய வெள்ளை உடுப்புகள் வேறு.  ஜெயராணி  ஏழு  மணிக்கு வேலைக்குப் போகுமுன்னே  அதை அதை பிரித்து வேறு கூடைக்குள் போட்டு விட்டு வோஷிங் மெஷினைப்  போட்டு விடும்படி தவநாயகத்திடம்  சொல்லி விட்டுப் போனாள்.  அவள் வேலை பார்ப்பது முதியோர் பராமரிப்பு நிலையமொன்றில். இந்த நீண்ட  வார விடுமுறையில் பலர் லீவில் நிற்பதால் அவளுக்கு வேலை அதிகம் என்று இரவெல்லாம் அவரிடம் கால் வலிஇ  முதுகு வலி  என்று வேறு  சொல்லிக்கொண்டிருந்தாள்.
தவநாயகத்துக்கும்இ ஜெயராணிக்கும்  நீண்ட காலம் பிள்ளைகளில்லாது பிறகு  பிறந்த ஏக புத்திரன் ஜேசன்.
அறைக்கு வெளியில் நின்றவாறே
"உடுப்புகளை காய போடாமல் வெளியே போய் விடாதே. நல்ல வெயில் எறிக்குது " என்று உரத்துக் கத்தினார்.. 


துர்கா தேவி தேவஸ்தானத்தில் மகா சிவராத்திரி 04.03.2019

.

பேர்த் பாலா முருகன் கோவில் மகா சிவராத்திரி 04/03/2019








மட்டக்களப்பில் முருகபூபதியின் நூல்கள் அறிமுகம்


படைப்பிலக்கியவதியும்  ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் மற்றும் சொல்லத்தவறிய கதைகள் ஆகிய நூல்களின் அறிமுகவிழாவை மட்டக்களப்பில்  எதிர்வரும் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  மாலை 4.00 மணிக்கு  “கா “  இலக்கிய வட்டமும்  “அரங்கம்  வார இதழும் இணைந்து  நடத்துகின்றன.
மட்டக்களப்பு -  பார் வீதியில் 227 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள அரங்கம்  கேட்போர் கூடத்தில்  அரங்கம் ஆசிரியர் திரு. பூபாலரத்தினம் சீவகன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழா, திருமதி ம. விஜயேஸ்வரியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் இவ்விழாவில் தகைமைசார் பேராசிரியர் செ. யேகராசா,  சமூக கலை இலக்கிய வெளியில் முருகபூபதி  “ என்ற தலைப்பில்  உரையாற்றுவார்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவி செல்வி டிலோஷினி மற்றும் திரு. வி. கௌரிபாலன், செல்வி நிலாந்தி சசிக்குமார் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்துவர்.
நூல்களின்  ஆசிரியர் முருகபூபதி ஏற்புரையும் திரு. சொ. பிரசாத் நன்றியுரையும் நிகழ்த்துவர்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

திரு நெறிய தமிழிசை - சிட்னி முருகன் கோயில் - 07/03/2019






சிட்னி ஸ்ரீ துர்க்கா ஆலயத்தில் ருத்திரஅபிஷேகம் 10/03/2019





தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்...

.

பொதுவாக தந்தைகளின்  இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

உலகச் செய்திகள்


இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் - பாக்கிஸ்தான்

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்தியா!

அடையாளம் காணப்பட்டது காஷ்மீர் தாக்குதலில் பயன்படுத்திய வாகனம்

அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்காக வியட்நாம் சென்றார் கிம்

விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி இம்ரான் கான் தெரிவித்தது என்ன ?

இந்தியாவை வந்தடைந்தார் இராணுவ வீரர் அபினந்தன்

பாகிஸ்தான் விமானியை இந்திய விமானி என நினைத்து அடித்துக் கொன்ற கிராம மக்கள்



இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் - பாக்கிஸ்தான்

27/02/2019 இந்தியாவின் இரு போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக  பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது.
பாக்கிஸ்தானின் வான்வெளிக்குள் ஊடுருவிய இரு இந்தியபோர் விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளோம் என பாக்கிஸ்தான் இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அசிவ் கபூர் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானின் வான்பரப்பிற்குள் இரு இந்திய விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைச் செய்திகள்


அமெரிக்காவின் தலையீட்டினைக் கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மகஜர்  ஐ.நா.வதிவிடப்பிரதிநிதியிடம் கையளிப்பு

யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையத் தடை

கோத்தா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி கொலைச் சதி ; விடுதலையானார் இந்தியப் பிரஜை ; பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

“இராணுவ வசமுள்ள பொதுமக்கள் காணி­களை கைய­ளிக்கும் வரை அழுத்­தம் கொடுப்­போம்”

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்: சிவலிங்கம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு..!

வடக்கில் 850 தமிழ் பொலிஸார் சேவையில் இணைப்பு

திருகேதீஸ்வரத்தில் பதற்றம்


அமெரிக்காவின் தலையீட்டினைக் கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

25/02/2019 வட,கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லையெனத் தெரிவித்து அமெரிக்காவின் தலையீட்டினைக்கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சைவசமய அறிவுத்திறன் தேர்வு 2019 02 17





ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2019


இப் போட்டிகள் மார்ச்  மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்) 
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது. 
  
போட்டிகளுக்கான விண்ணப்படிவம் 
போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 30 மார்ச்  2019 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக durgacomp2019@gmail .com  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது ஆலய கரும பீடத்தில்  கையளிக்கப்பட வேண்டும். ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக $5 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது. 
போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை விண்ணப்பப் படிவத்தோடு  கீழே பெற்றுக்கொள்ளலாம். 


தமிழ் சினிமா - தில்லுக்கு துட்டு 2 திரை விமர்சனம்


சந்தானம் ஹீரோவாக ஜெயித்தே தீர வேண்டும் என்று போராடி வருகின்றார். அவரின் போராட்டத்திற்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்தது தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றி தான். அதை தொடர்ந்து அவர் நடித்த படம் பெரிய தோல்வியை சந்திக்க, தற்போது மீண்டும் தன் ஹிட் கூட்டணியுடன் இணைந்து தில்லுக்கு துட்டு-2வை கொடுத்துள்ளார், இவை சந்தானத்தை காப்பாற்றியதா? பார்ப்போம்.

கதைக்களம்

சந்தானம் தன் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் எப்போதும் குடித்து கலாட்டா செய்து வருகிறார். அந்த ஏரியாவில் இரவு நேரத்தில் யாரையும் தூங்க கூட விடாமல் கலாய்த்து கலாட்டா செய்து வருகிறார்.

இந்நிலையில் மாயா (ஹீரோயின்) என்ற டாக்டரை பார்த்து யார் காதலை சொன்னாலும் உடனே பேய் வந்து அவர்களை அடித்து விடுகின்றது. அப்படித்தான் ஒரு மாயாவுடன் பணிபுரியும் ஒரு டாக்டர் அவரிடம் காதலை சொல்லி பேயிடம் அடி வாங்குகிறார்.
அடி வாங்கிய அந்த டாக்டர் சந்தானம் ஏரியா என்பதால் அந்த பெண்ணிடம் சந்தானத்தை கோர்த்துவிட்டு, அவரை மாயாவை காதலிக்க வைக்கின்றனர்.(ஏனெனில் அவரையும் சந்தானம் மிகவும் டார்ச்சர் செய்துள்ளார்).
சந்தானத்தையும் அந்த பேய் தாக்க, பிறகு தான் தெரிகிறது, மாயாவின் தந்தை ஒரு சூனியக்காரர், அவர் வைத்த சூனியம் இது என்பது. சந்தானம் எப்படியாவது காதலியை கரம் பிடிக்க கேரளா செல்ல, அதன் பின் தான் தெரிகின்றது அது சூனியம் இல்லை, ஒரு பேயின் பிடியில் மாயா இருக்கிறார் என, அதை தொடர்ந்து அந்த பேயை விரட்ட நடக்கும் காமெடி கச்சேரி தான் இந்த தில்லுக்கு துட்டு 2.

படத்தை பற்றிய அலசல்

சந்தானம் இஸ் பேக் என்றே சொல்லலாம், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை தன் ஒன் லைன் காமெடியில் கலக்கி எடுத்துள்ளார். அதிலும் மொட்டை ராஜேந்திரனை கலாய்க்கும் இடம், ஏரியா மக்களை டார்ச்சர் செய்யும் விதம், பேய்களை டீல் செய்வது என இனி ஹீரோவாக நடித்தால் தில்லுக்கு துட்டு சீரிஸ் மட்டும் நடியுங்கள் என்று சொல்ல வைக்கின்றது.
மொட்டை ராஜேந்திரன் இந்த படத்திற்கு பிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று விடுவார். அதிலும் பேய் பங்களாவிற்கு சென்ற பிறகு கிஸ் மீ பாடலை பேயிடம் பாடுவது செம்ம ரகளை, அதேபோல் மலையாளியாக வரும் குஞ்சுக்குட்டன், ஊர்வசி என கிளைமேக்ஸ் சிரிக்க வைத்து வயிறே வலிக்க வைத்து விடுவார்கள்.
படத்தின் மிகப்பெரும் பலமே பேயை கலாய்ப்பது தான். ஆனால், சந்தானம் ஒவ்வொருவரையும் பேய் மாதிரி கலாய்த்துள்ளார், கார்பண்டரை அழைத்து வந்து நட்டு போட்டனா பயமுறுத்த முடியாது என பேயிடமே கவுண்டர் கொடுப்பது, பேயை பார்த்து முகத்தை மூடி செல்வது என செம்ம கலாட்டா தான்.
முந்தைய பாகத்தில் லவ் தான் மைனஸ் பாயிண்ட், ஆனால், இதில் காதலை கம்மி செய்து கலாய்யை அதிகப்படுத்தியது சூப்பர். பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரும் பலம்.
கிளைமேக்ஸ் 20 நிமிடம் அந்த இருட்டிலும் ஒளிப்பதிவு துல்லியம். என்ன கிளைமெக்ஸ் அப்படியே காஞ்சுரிங்2 காப்பி போல் உள்ளது.
சந்தானம் இந்த குடியை எப்போது விடுவார் என்று தெரியவில்லை. படம் முழுவதும் பாட்டிலும் கையுமாக தான் இருக்கிறார்.

க்ளாப்ஸ்

படத்தின் ஒன் லைன் பன்ச் தான், என்ன ஆசிரமத்துக்குள்ள ஆடு மேய்க்கிற, 10 நிமிஷம் வர ப்ரியாணி கடைக்கு 10 வருஷம் ஏன் வந்தனு சந்தானம் அனைத்து பாலிலும் சிக்ஸர் தான்.
படத்தின் கான்செப்ட், பேயை கலாய்ப்பது, அதிலும் பேய் பங்களாவிற்குள் சென்ற பிறகு சிரிப்பு சரவெடி.

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் என்ன இவ்ளோ அசால்ட்டா முடிந்துவிட்டது என எண்ண தோன்றுகிறது. வேறு என்ன செய்ய காமெடி படம் தானே..
படத்தின் பாடல்கள் வேகத்தடையாக தான் உள்ளது.
மொத்தத்தில் தில்லுக்கு துட்டு 3 எப்போது ஆரம்பம் என கேட்க வைக்கிறது இந்த தில்லுக்கு துட்டு 2, நான் ஸ்டாப் காமெடி கலாட்டா.