கலாநிதி சபேசன் கணபதிப்பிள்ளை காலமானார்

.


                               பிறப்பு : 22 யூலை 1953 .   இறப்பு : 18 நவம்பர் 2011

அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும்,  சிட்னி Berala வை வசிப்பிடமாகவும் கொண்ட சபேசன் கணபதிப்பிள்ளை அவர்கள் ( மட்டக்களப்பு பல்கைலக்கழக விவசாயபீட முன்னாள் Dean, Dept. of Immigration - அவுஸ்திரேலியா) 18-11-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவம் கணபதிப்பிள்ளை, செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னநயினார், அமராவதி தம்பதிகளின் மருமகனும், மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும், சிந்துஜா, சிஜித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,


அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சாவித்திரி, வசுந்திரா(கிளி), விஜயகுமாரி(சித்திரா), சிறிநிவாசன், வித்தியகுமாரி, மற்றும் சுரேஷ்(பிரான்ஸ்)ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

குணரத்தினம், திருச்செல்வம், அனுந்திக்கா, சிவகுமார், கோமளா, காலஞ்சென்ற புஷ்பாவதி, ரேணுகாதேவன், சுகுணதேவன்(இலங்கை), ஜெயதேவன்(பேர்த்) ஆகியோரின் மைத்துனரும், ரட்ணசிங்கம், லாஷா, மதி, ஷோபனா ஆகியோரின் சகலனும்,

தர்ஷினி, ராகுலன், மயூரன், மகிந்தன், ஜெகரூபன், மாதுரி, தமிழினி, நிரோஷன், கம்ஷினி, ஜனகன், ஷர்மி, நிரோஷன், அர்ஜுன், அஷானி ஆகியோரின் அன்புமாமனாரும், வினோத், விவேக், கெவின், இவான், யூலியன் ஆகியோரின் பெரியப்பாவும், ரமணன், ரமேஷ், ரம்மியா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


திங்கட்கிழமை 21/11/2011,  பி.ப 6 மணியில் இருந்து 9  மணிவரை  பார்வைக்காக  இலக்கம் 101 South Street , Granville Liberty Funerals இல் வைக்கப்பட்டு

நல்லடக்கம்  செவ்வாய்க்கிழமை 22/11/2011, காலை  10   மணிக்கு      
 Lidcome Rookwood cemetery இல்  செய்யப்படும்

தொடர்புகளுக்கு

தொலைபேசி:  96461662
                                0427 026 675

துர்க்கை அம்மன் ஆலயத்தில் பண்ணிசை விழா 2011



 நேற்று 19.11.2011 துர்க்கையம்மன் ஆலயத்தில் பண்ணிசை விழா 2011 சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியிலிருந்து 12.30 மணிவரை காலைநேர பண்ணிசையும் மாலை 1.30 மணியிலிருந்து 4.00 மணிவரை மாலை நேர பண்ணிசையும் இடம்பெற்றது.  திரு செ.பாஸ்கரனின் அறிமுகத்தோடு அம்மன் கோவில் பிரதமகுரு சிவாச்சாரியார் செந்திலின் கற்பூர தீபத்தோடும் அர்ச்சகர் சின்ன செந்திலின் திருமுறையுடனும் நிகழ்வு ஆரம்பமானது.


பின் தங்கிய சிறுமியிடமிருந்து ..... பஹீமா ஜகான்



 .

மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்இ
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்

இலங்கைச் செய்திகள்

* சிங்களப் பயணிகளால் மிரட்டப்பட்ட தமிழ்ப் பயணிகள் மீது படையினர் கடும் தாக்குதல் பரந்தனில் சம்பவம்

* பொது நலவாயப் போட்டிக்காகப் பெருந்தொகையை செலவிட்டும் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை நிதியை விரயமாக்கிவிட்டது அரசு; ஐ.தே.க.

* எதை நோக்கிப் போகிறது யாழ்ப்பாணக் குடாநாடு


சிங்களப் பயணிகளால் மிரட்டப்பட்ட தமிழ்ப் பயணிகள் மீது படையினர் கடும் தாக்குதல் பரந்தனில் சம்பவம்
Tuesday, 15 November 2011

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு தனியார் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த பயணிகள் நேற்று திங்கட்கிழமை பரந்தனில் இராணுவத்தினரால் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பஸ் சாரதி, நடத்துனர், உரிமையாளர் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

பரந்தன் சந்தியில் நேற்றுக் காலை 10 மணியளவில் இந்த பஸ் தென்பகுதி பயணிகளின் பஸ்ஸை விலத்திச் செல்லும் போது ஏற்பட்ட சிறு விபத்தினால் அவர்கள் தமிழ்ப்பயணிகளைக் கடுமையாக மிரட்டித் தாக்கவும் முயன்றுள்ளனர்.

மண்வாசனை...கோண்டாவில். - ஹேமா

.


என்தேசம்.என் ஊர்.

மண் வாசனை அந்தப் புழுதியைச் நாசிக்குள் நுகர்ந்தபடி எழுத நினைக்கிறேன்.கண்ணுக்குக் குளிர்ச்சியாக கிராமுமல்லாமல் நகரமும் அல்லாத ஊர் என் கோண்டாவில்.தோட்டங்கள் சூழ குளிர்ந்த காற்றோடு எப்போதும் கலகலவென்றிருக்கும் அன்று.
காலைப்பொழுது விடிகை மிக ரம்யம்.கோயில் மணியோசை பரவசமாக்க பறவைகளின் காலைக் களிப்பு ஆனந்திக்கும் எங்களையும் சேர்த்து.பறப்பின் படபடப்பும் குஞ்சுக்கு இரை தேடிக் கொடுத்தலும் காலைக்காட்சியின் ஒரு பகுதி.அதிகாலை 4 மணிக்கே கிடுகு வண்டில்களின் டக்டக் சத்தமும் அதை இழுத்துச் செல்லும் காளைமாடுகளின் கழுத்து மணி ஜல்ஜல் ஒசையும் நித்திரையைக் கலைத்தாலும் அந்தத் தாளக்கட்டு ரசனையோடு இசையும்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்

.





அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களின் விபரங்களை பதிவுசெய்து கொள்வதற்கான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்

கோபம் வராது! (சினம் தவிர்த்தல்)‏




.

                          ஒரு ஊரில் சிறந்த ஞானம் கொண்ட ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது சிறப்பு என்னவென்றால். அவருக்கு கோபம் வராது. ஆமாம், யார் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் சினமே அவரை நெருங்காது. ஒரு புன்னகை மட்டுமே பிறக்கும். எவ்வாறு முனிவரால் அப்படி இருக்க முடிகிறது? என்பதை அறிந்து கொள்ள விரும்பினான் சீடன். அவனால் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கடைசியில் முனிவரிடமே அந்த ரகசியத்தைக் கேட்டான். 
முனிவர் அதற்கும் புன்னகைத்தார். மகனே, ஓர் ஏரியில் இருக்கும் காலியான படகில் அமர்ந்து நான் தியானம் செய்வது வழக்கம். அப்படி ஒருநாள் நான் கண் மூடி தியானத்தில் இருந்தபோது, நான் அமர்ந்திருந்த படகை வேறு ஒரு படகு வந்து முட்டியது. எனக்கு கடும் கோபம். இப்படி முட்டாள்தனமாக மோதியது யார் என்று எரிச்சலுடன் கண் விழித்துப் பார்த்தபோது, எனக்கு சிரிப்பு தான் வந்தது. காரணம், மோதியது ஒரு வெற்றுப் படகு. காற்றில் அசைந்து அசைந்து வந்து நான் அமர்ந்திருந்த படகு மீது மோதியிருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப் படகு மீது காட்டுவதால் என்ன பயன்? அன்று தான் முடிவெடுத்தேன். யாராவது என்னைக் கோபப்படுத்தினால் இதுவும் ஒரு வெற்றுப் படகுதான் என்று நினைத்துக் கொள்வேன்.என்னையறியாமல் கோபம் மறைந்து, புன்னகை பிறந்துவிடும். 

சீடனுக்கு அந்த விநாடியே ஞானம் பிறந்தது.

பீ.எம்.புன்னியாமீன்: மௌனமாய்ப் பெய்யும் பெருமழை

.
என்.செல்வராஜா
நூலகவியலாளர், லண்டன்.


உலகெங்குமுள்ள ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களைத் திரட்டித் தனது சொந்த முயற்சியினால் நவமணி, தினக்குரல் போன்ற ஊடகங்களிலும், பின்னர் அவற்றைத் தொகுத்து பல்தொகுதிகளாக நூலுருவிலும் வெளியிட்டுவந்தவர் கலாபூசணம் பி.எம்.புன்னியாமீன். அண்மையில் மற்றுமொரு சாதனையாளராக அவர் தன்னை இனம்காட்டிக்கொண்டிருக்கிறார். 

கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளிலும், பெரியதும் சிறியதுமான 7500 கட்டுரைகளை எழுதி அவற்றைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்து புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். இச்சாதனை 2010ம் ஆண்டு, நவம்பர் 14ம் திகதி முதல் 2011ம் ஆண்டு, நவம்பர் 13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவரால் நிகழ்த்தப்பட்டது. இதனை உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியில்  தனியொரு மனிதனால் நிகழ்த்தப்பட்ட சாதனையாகக் கருதுகின்றேன்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள்


.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள்
அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழவை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான கூட்டம் கடந்த 2011 நவம்பர் 6 ஆம் திகதி மெல்பனில் னுயசநடிin ஐவெநசஉரடவரசயட ஊநவெசந மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் கலைவளன் சிசு.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அண்மையில் இலங்கையில் மறைந்த பேராசிரியர் சிவத்தம்பி, சுவைத்திரள் ஆசிரியர் திக்கவயல் தர்மகுலசிங்கம் மற்றும் சிட்னியில் மறைந்த ஆய்வாளர் கலாநிதி ஆ. கந்தையா ஆகியோரை நினைவுகூர்ந்து மௌனம் அனுட்டிக்கப்பட்டது.
நடப்பாண்டுக்கான நிருவாகிகளும் தெரிவாகினர்.
காப்பாளர்: கலைவளன் சிசு. நகேந்திரன்.
தலைவர்: பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, துணைத்தலைவர்கள்: அருண். விஜயராணி, ஆழியாள் மதுபாசினி
செயலாளர்: மாலதி முருகபூபதி , துணைச்செயலாளர்: ஆவூரான் சந்திரன், பொருளாளர் ஆனந்தகுமார், துணைப்பொருளாளர் நிர்மலன் சிவா, இதழ் ஆசிரியர் லெ. முருகபூபதி,


உலகச் செய்திகள்

.
* சிரியாவில் மீண்டும் உக்கிர வன்முறை: 90 பேர் பலி

* பேஸ்புக்கிற்குச் சவால் விடுத்த சமூக வலையமைப்பின் உருவாக்குனர் மர்மமான முறையில் மரணம்


சிரியாவில் மீண்டும் உக்கிர வன்முறை: 90 பேர் பலி

15/11//2011

சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் பதவி விலக வேண்டுமென ஜோர்தானின் மன்னர் வலியுறுத்தியதையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 90 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ஜோர்தானிய எல்லைக்குரிய சிரிய நகரான கிரிபெட் கஸலெஹ்ஹில் படையினருக்கும் இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 20 படை வீரர்கள் உட்பட 50 பேர் வரை பலியாகியுள்ளனர்.

அஸாத் பதவி விலக வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுத்த முதல் அரபு நாடொன்றின் தலைவராக மன்னர் அப்துல்லாஹ் விளங்குகிறார். அவர் "பிபிசி' செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில், அஸாத்தின் நிலையிலிருந்தால் தான் அதிகாரத்தை கைமாற்றுவதை உறுதிப்படுத்தும் முகமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறினார்.

இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாக அல்ல’

.இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாக அல்ல’ - இராணுவமும் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!


கெரபொத்தா

தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப்



வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் கத்திச் சொல்கின்றன. ‘மனிதாபிமான நடவடிக்கை’யின் பின்னணியில் வந்திருக்கும் வியாபார நிறுவனங்கள், வாழ்க்கைப் போராட்டமானது இன்னும் முடிவுக்குவரவில்லையெனக் கூறியபடி வேலைவாய்ப்புகளோடு காத்திருக்கின்றன.

''உச்சிதனை முகர்ந்தால்''


.
''உச்சிதனை முகர்ந்தால்'' படம் பற்றி அழுதபடியே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்
முதலில் ஒன்றை கூறிவிடுகிறேன்....நான் வழக்கமாக திரைப்படம் பார்ப்பவனோ, அல்லது பார்த்த திரைப்படங்களை விமர்சித்துக்கொண்டு காலம் கழிப்பவனோ அல்ல. பெரும் தலைவர் காமராஜரின் தலைமையில் களம் கண்ட சுத்தமான ஒரு காங்கிரஸ்காரனாக இருப்பவன். இன்றைய காங்கிரஸ் 'தலை'களுக்கும் எனக்கும் மிக நீண்ட தூரம். இங்கு அதுவல்ல முக்கியம்.
என் நீண்டகால நண்பரான புகழேந்தி தஙகராஜ் அழைத்தார். அதன் பேரில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு சென்றேன்....பார்த்துவிட்டு வந்த பிறகு என் மனம் துடித்து அழுததை பதிவு செய்தே ஆகவேண்டும் என்கிற ஆதங்கத்தோடு இதை எழுதுகிறேன்...


"உச்சிதனை முகர்ந்தால்" என்கிற மயிலிறகால் மனதை வருடுகிற பெயரில் திரைப்படம். ஆனால் திரையரங்கைவிட்டு வெளியே வருகின்ற போது துக்கமும் வேதனையும் நெஞ்சை அடைக்கிறது. மனம் வெதும்பி இயலாமையை எண்ணி கண்களில் கண்ணீர் வழியத்தான் ஒவ்வொருவரும் வெளியேறினார்கள். கண்கூடாக பார்த்தேன். என்னைப் போன்ற பெண் பிள்ளையைப் பெற்றவர்களை இந்த திரைப்படம் குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்காவது தூக்கத்தை கெடுத்துவிடும்.


.

எப்போதும்
சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்

காலைஉணவை மறந்ததில் வந்த
களைப்பானாலும்
காய்ச்சலில் கிடக்கும் குழந்தையின்
நினைப்பானாலும்
காரணமேயின்றி மேலாளர்
சீறினாலும்
வாடிக்கையாளர் வரம்புமீறிப்
பேசினாலும்

தமிழ் சினிமா

.
* களைகட்டும் பொங்கல் வெளியீடுகள்

* தீபாவளி படங்கள் ஒரு பார்வை



களைகட்டும் பொங்கல் வெளியீடுகள்

ஏ.எம். றிஷாத்

பொங்கல் தினத்தை குறிவைத்து இப்போதிருந்தே தயாராகிவருகிறது கொலிவூட். தீபாவளியில் விட்டதையெல்லாம் எதிர்வரும பொங்கலில் வட்டியும் முதலுமாக அள்ளிவிடும் போலுள்ளது.

கடந்த தீபாவளிக்கு இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் பெரிதாக களைகட்டவில்லை என்பதலோ என்னவோ பொங்கல் வெளியீடாக வெளிவர பல படங்கள் முட்டிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே பொங்கல் வெளியீடாக விஜயின் நண்பன் மற்றும் கார்த்தியின் சகுனி உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் பல படங்கள் வெளியாவுள்ளதாக கொலிவூட் வட்டாராம் தெரிவிக்கின்றது.

இம்முறை பொங்கலுக்கு சுமார் 10 படங்கள் வரை வெளியாகலாம். இருப்பினும் தீபாவளி போல பொங்கலிலும் ரஜினி-கமல், அஜித்-விஜய் மோதல் இடம்பெறமாட்டாது என்பது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த பொங்கல் பந்தயம் அனேகமாக விக்ரம், விஜய், கார்த்தி ஆகியோரிடையேயான மும்முனை போட்டியாக அமையலாம்.

விக்ரமின் ராஜபாட்டை படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டபோதும் தற்போதைய தகவல்களின்படி பொங்கல் வெளியீடாகவே வந்து சேரும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேலும் தனுஸின் '3' திரைப்படமும், ஆர்யா, மாதவன் இணைந்து நடித்துள்ள வேட்டை படமும் பொங்கல் வெளியீடாக வெளிவரவுள்ளது.

மம்பட்டியான், களவாடிய பொழுதுகள் போன்ற படங்களும் போட்டியில் களமிறங்க வாய்ப்புக்கள் இருக்கிறது. அத்துடன் வழமைபோல சில சிறிய பட்ஜெட் படங்களும் களமிறங்கும். கொலிவூட்டை பொறுத்தவரை எதுவும் நிரந்தரமில்லை. எனவே இவற்றில் சில படங்கள் இறுதி நேரத்தில் பின்வாங்லாம் எதிர்பாராத சில திரைப்படங்கள் களத்தில் குதிக்கலாம்.

தீபாவளிதான் களைகட்டவில்லை பொங்கலாவது களைகட்டுமா?




நன்றி வீரகேசரி

தீபாவளி படங்கள் ஒரு பார்வை


ஏ.எம். றிஷாத்

தீபாவளி என்றால் பல படங்கள் வெளியாகி கொலிவூட்டே களைகட்டும் ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக இரண்டு நேரடி தமிழ் படங்கள் மட்டுமே வெளியானது. இவற்றுடன் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஷாருக்கானின் "ரா ஒன்" திரைப்படமும் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியானது.

தீபாவளி தினத்தில் வெளியானால் வழக்கமான நாட்களில் வெளியாகும் படங்களை விட அதிகமான வசூலினை அடையலாம் என்பதால் சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாவது வழக்கம் ஆனால் இம்முறை 7ஆம் அறிவு, வேலாயுதம் படங்களின் ஆதிக்கத்தால் சிம்புவின் "ஒஸ்தி" மற்றும் தனுஸின் "மயக்கம் என்ன" படங்களுக்கே திரையரங்குகளில் இடமில்லை இதில் சிறிய பட்ஜெட் படங்கள் எங்கே நுழைவது.

தீபாவளிப் பந்தயத்தில் தற்போது வரை சூர்யாவின் 7ஆம் அறிவு திரைப்படமே வசூல் ரீதியாக முன்னணியில் இருக்கிறது. இருப்பினும் வேலாயுதம் படமும் 7ஆம் அறிவுக்கு போட்டியாக உள்ளதாம்.

இந்த தீபாவளி ரசிகர்களை மிகவும் குழப்பமடையச் செய்துள்ளது. இரண்டு படங்களுக்குமே எதிர்மறையான விமர்சனங்களே அதிமாக எழுந்துள்ளது. ஆனால் இரு படக்குழுவினரும் தங்களது படங்கள் வென்றுவிட்டதாக படம் வெளியாகிய 2ஆவது தினத்திலிருந்தே கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர்.

இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் வியாபார யுக்தியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படங்களின் தயாரிப்பாளர்கள் இதுவரையில் படத்தின் வசூல் தொடர்பில் முறையாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சூர்யா, விஜய் இருவரும் தங்களது முந்தைய படங்களின் வசூலினை முறியடித்து வெற்றிகரமாக இப்படங்கள் ஓடுவதாக மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர். இதனால் குழம்பியது அப்பாவி ரசிகர்களே என்பது நிதர்சனம்.

7ஆம் அறிவு படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது சில வசூல் விபரங்களை வெளியிட்டார். ஆனால் வேலாயுதம் பற்றி இதுவரை உத்தியோகபூர்வமான வசூல் விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

வேலாயுதம் வெற்றி விழாக்களின் போது வசூல் தொடர்பில் விஜயிடம் வினவியபோது, எனது படங்களிலேயே அதிக வசூலான படமாக இது மாறியுள்ளதாக சிலர் கூறுகையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என மளுப்பலாக பதில் கூறினார் விஜய். இதே போலவே சூர்யாவும், சிங்கம் படத்தின் வசூலினை முறியடித்துவிட்டதாக தெரிவத்தார் ஆனால் வசூலினை சரியாக குறிப்பிடவில்லை. வரும் நாட்களில் இது தொடர்பில் முறையாக அறிவிப்பார்கள் என நம்பலாம்.

தமிழ் சினிமா பொக்ஸ் ஒபீஸ் ஆய்வாளர்களின் ஊடாக தெரியவருவது, அதிக திரையரங்குகள் மற்றும் விளம்பரம் என்பவற்றால் இதுவரை 7ஆம் அறிவு மொத்தமாக சுமார் 70 கோடியினை வசூலாக பெற்றுள்ளதாம். அதே வேளை வேலாயுதம் திரைப்படம் சுமார் 40 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதா கூறப்படுகிறது. இதனால் இவ்விரு படங்களும் தயாரிப்பாளர்களிள் கையை கடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

தீபாவளி மற்றும் அதிக திரையரங்குகள் என ஆரம்பத்தில் இப்படங்களின் வசூல் நிலைமைகள் சிறப்பாக இருந்தாலும் தற்போது நிலைமை மோசமாகவே உள்ளது.

ஒஸ்தி, மயக்கம் என்ன, வித்தகன் என வரிசையாக இம்மாதம் பல படங்கள் வெளிவரவுள்ளதால் தீபாவளி படங்களின் வசூல் நிலைமைகள் மேலும் பாதிப்படையலாம் எனவே இம்முறை தீபாவளிப் படங்கள் இரண்டுமே உண்மையில் புஸ்வாணமாக மாறியதாகவே தெரிகிறது.





நன்றி வீரகேசரி