மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் குடும்ப குதூகல தினம் 2021 - பரமபுத்திரன்

 .

கடந்த 2017ம் ஆண்டு தொடக்கம் மவுண்ட்றூயிட் தமிழ்க் கல்வி நிலையம்  ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் தமிழ்ப்  பாடசாலைச்  சமூகம் ஒன்றுகூடி மகிழும் தினமாக குடும்ப குதூகல  தினம் நிகழ்வினைச்  செயற்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்வில் கல்வி நிலையச்  சமூகத்தினர் அனைவரும் இணைந்து உணவு உண்டு மகிழ்ந்து அதனைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளை நிகழ்த்துவர். அந்த வகையில் இந்த ஆண்டு 13/03/2021 சனிக்கிழமை பகல் 12 மணி முதல் 5 மணிவரை குடும்ப குதூகல தினத்தினைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.  


 


எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 33 தீர்க்கதரிசனமற்ற தலைவரின் ஆட்சியில் தொடர்ந்த அநர்த்தங்கள் ! எழுத்தையும் தலைமைகளையும் ஒப்புநோக்கிய காலம் !! முருகபூபதி


 


தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு

இது திருவள்ளுவர் வாக்கு.  இலங்கையில் திருக்குறள் சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால், எமது சிங்கள அரசியல் தலைவர்கள் அதனை பொருள் விளங்கிப்படித்தார்களா..? என்பது தெரியவில்லை !

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு பதவியேற்ற காலப்பகுதியில்தான், அவர் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்த இல்லத்தில் பின்னாளில் அமைந்த வீரகேசரியில் நிரந்தர ஊழியனாகச்சேர்ந்தேன்.

1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில்தான் அவரது பதவிக்காலத்தில்


முதலாவது கலவரம் வந்தது, அதற்குச்  சில மாதங்களுக்கு முன்னர்தான் எனக்கும் தனபாலசிங்கத்திற்கும் வேறு சிலருக்கும்  அங்கே நேர்முகத்தேர்வு நடந்தது.

கலவரம் வந்தமையால் அந்த நேர்முகத் தேர்வின் முடிவும் தாமதமாகியது.  அக்கலவர காலத்தில்தான் ஜே.ஆர்,  “ போர் என்றால் போர்- சமாதானம் என்றால்   சமாதானம்   “  என்று வானொலியில் திருவாய் மலர்ந்தருளி முரசறைந்தார். அதனை தமிழில் மொழிபெயர்த்தவர் காலப்போக்கில் அவுஸ்திரேலியா வந்து சிட்னியில்  மறைந்தார்.

ஜே.ஆரின்  பதவிக்காலத்தில் அடுத்தடுத்து மூன்று கலவரங்கள் நிகழ்ந்தன.  அந்த ஆண்டுகள் 1977 – 1981 – 1983. இரண்டாவது கலவரம் வந்தபோது வீரகேசரியில் அவர் திருவாய் மலர்ந்தருளும்  கருத்துக்களை செய்தியாக ஒப்புநோக்கநேர்ந்தது.

திருவள்ளுவர் என்ன சொல்கிறார்..?

ஒரு செயலைப்பற்றி பலவழிகளிலும் ஆராய்ந்து அறியவேண்டும். சந்தர்ப்பம் வரும்போது ஆராய்ந்தவாறு செய்யவேண்டும். அதிலும் நன்மை தருவனவற்றையே உறுதியாகச்  சொல்லவேண்டும். இதில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனே சிறந்த அமைச்சனாக இருப்பான்.

சிட்னி முருகன் கோவில் கொடியேற்றம், தேர் முடி வைத்தல்நன்றி raviglory recording 

என்றுமே அவர்நினைப்பாய் இருந்திடுவோம் வாரீர் !

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா     

 

           சித்தராய் வந்த சிறந்த குருநாதர் 

           சிவாய நமசெப்பும் சிறந்த குருநாதர் 
           பித்தரைப் போல் திரியும் பெருங்குரவரானார்
           நித்தமுமே அவரை  நினைந்தபடி இருப்போம்   

 

              நல்லூரான் அருளால் நம்குரவர் வந்தார்

              தொல்வினையைப்  போக்க நல்லுரைகள் தந்தார் 
              எல்லையிலா இறைவன் திருவடியைக் காட்டும்
              நல்வழியில் செல்ல நமக்குத் துணையானார்    !

 

பணிப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமயணியம்

 .

( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை ) 

 

பெண்களுக்கெதிரானääபலதரப்பட்ட வன்முறைகளääபல காரணங்களால்; காலம் காலமாகääஅகில உலகின் மூலை முடுக்கெல்லாம்; தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

இதை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது(17-3-2021) பிரித்தானிய தொலைக்காட்சியில்  பிரதமருடனான கேள்வி நேரத்தில்ää எதிர்க்கட்சித் தலைவர் ;திரு.கியர் ஸ்ராமர்ää 'பாலின வன்முறையால் பாதிக்கப்படும்; பெண்களில் 1;.-5 விகிதமானவர்கள் மட்டுமே சட்டத்தை நாடி உதவி பெறும் நிலை இன்றிருக்கிறது' என்று கூறிக்கொண்டிருக்கிறார். மிகவும் பணக்காரநாடுகளில் ஒன்றான பிரித்தானியாவிலேயே பாலினக் கொடுமையை எதிர்நோக்கும் பெண்களின் நிலை இதுவென்றால்ää சாதிää சமயää பொருளாதார ஒடுக்குமுறையால் அவதிப்படும் ஏழைநாடுகளில் பெண்கள் அனுபவிக்கும் பாலினக்கொடுமைகளைக் கற்பனை செய்ய முடியாமலிருக்கிறது.

மல்லிகை ஜீவாவின் வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் --- அங்கம் 08 மல்லிகையின் சன்மானம் பெற்ற இளம்படைப்பாளி ! புலம்பெயர்ந்து ஓடியவர்கள் காகக்கூட்டமா..? முருகபூபதிமல்லிகை தொடங்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து,  ஜீவா அதனை தொடர்ந்து நடத்துவதற்கு பல்வேறு சிரமங்களை அனுபவித்தார்.

 

பொருளாதார ரீதியில் அவர் பட்ட கஷ்டங்கள் பற்றி, பல சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் வந்தவர்.  தொடக்கத்தில் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் பூபாலசிங்கம், அ. வயித்திலிங்கம், ஐ. ஆர். அரியரத்தினம் முதலான இடதுசாரி தோழர்களும் பின்னாளில் பல  கலை, இலக்கியவாதிகளும் மல்லிகைக்கு நன்கொடை வழங்கினார்கள்.

 

ஜீவா தனது நன்றியை வெளிப்படுத்தும்வகையில்


மணிக்கரங்கள் என்ற பக்கத்தில், நன்கொடை தந்தவர்களின் பெயர்களையும் குறிப்பிடுவதற்கு தவறுவதில்லை.

 

ஒருசமயம் ஜீவா யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்கச்சென்றபோது,  அந்த வார்டிலிருந்த மற்றும் ஒரு நோயாளி அன்பர், ஜீவாவை தமது அருகில் அழைத்து, தனது தலைமாட்டிலிருந்த தனது பேர்ஸை எடுத்து, அதிலிருந்து சிறிது பணம் கொடுத்து,                        “ இதனை மல்லிகைக்கு வைத்துக்கொள்ளுங்கள்  “ என்று சொல்லியிருக்கிறார்.

 

 “ நீங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும் மல்லிகைக்கு உதவ முன்வந்தமை என்னை நெகிழச்செய்கிறது. இப்போது வேண்டாம். முதலில் நீங்கள் உடல் நலம்தேறி வாருங்கள் . அதன்பிறகு பெற்றுக்கொள்கிறேன்  “ எனச்சொல்லியிருக்கிறார்.

 

அதற்கு அவர்,  “ நாளை என்பது நிச்சயமில்லை. பெற்றுக்கொள்ளுங்கள்  “ என்று கூறி பணத்தை ஜீவாவின் கையில் திணித்துள்ளார்.

ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ ?பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் சாதகங்கள்  மிகப்பொருத்தம் தாமதிக்க நேரமில்லை

   “சாத்திரத்தை நம்பிநீயும் திருமணத்தை வைக்கநல்ல

மாதமிது  கேட்டிடுவீர் மங்கலநாண் ஏறும்வரை

   மணமுடிக்குந் தம்பதியர் பேசிடவே தேவையில்லை”

வேதமந்ரம்’ போலவேயோர் சாத்திரியார் சொன்னவுடன்

   மேளதாளத் தோடுபெற்றோர் விவாகத்தைச் செய்துவைத்தார்

காதலனைக் கண்ணீரில் கதறவிட்ட காதலிதன்

   கதைகூற வழிவிடாது கணையாழி மாற்றவைத்தார்!

உள்ளத்தால் வரித்துவிட்ட காதலனின் கதையையவள்

   உணர்ச்சிபொங்க முதலிரவில் கணவனிடம்  உரைத்திட்டுக்

கள்ளமொன்றும் இல்லைநானும் களங்கப்பட வில்லையெனக்

   கதறியவள் சத்தியந்தான் செய்துநின்றும் பயனில்லை

 தள்ளிப்போ! தொடமாட்டேன்! தந்திடுவேன் விவாகரத்து”

   என்றவளைத் துரத்திவிட்டான்! சாத்திரமும் பொய்த்ததுவே!

வெள்ளைமனப் பெண்ணவளின் கட்டாயக் கலியாணம்  

   விபரீத மாகிப்பெரும் வேதனையில் முடிந்ததுவே!

 

தியாகம் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

தியாகம் - ஆமாம், இவ்வார்த்தையைக் கேட்டதும் எம் மனக் கண்ணிலே தெரிபவர்கள் தமது சொகுசான வாழ்வை தியாகம் செய்ததால் உலகத்தவரால் போற்றப்படும் சமூக சேவையாளர்கள்.


தியாகம் என்ற மாபெரும் வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்து வாழ்ந்து காட்டியவர்கள் பலர். யேசுநாதரின் தியாகம் போற்றுதலுக்குரியது. மனிதனாகப்பிறந்து மனித வாழ்வை அவர் மேம்படுத்தினார்.அன்னை திரேசா வாழ்வையே இன்னலுறும் மக்களுக்காக அர்ப்பனித்தார். மகாத்மா எனப் போற்றப்படும் காந்தி வாழ்வு பூராவும் ஏழை இந்தியனுக்காக உழைத்தவர்.

இதை ஏன் செய்தார்கள்? மக்களின் இன்னலை ; கஸ்டத்தை அவஸ்தையை உணர்ந்து, அதற்கு நிவாரணம் தேட அவர்கள் உள்ளம் துடித்தது. மற்றவர்களின் கண்கள் காணாததை அவர்கள் கண்டுவிடவில்லை. நாளாந்தம் பலர் காணும் ஏழைகளையும் அவர்களின் துன்பத்தையும் தான் இவர்களும் கண்டார்கள். ஆனால் அவற்றைக் காணும் மற்றவர்களுக்கு இல்லாத துடிப்பும் பற்றும் பரிவும் பாசமும் அவர்களிடம் பெருகி ஓடியது. அதற்காக அவர்கள் தம் சுகங்களை இழக்கத் தயாரானார்கள். இதைத் தான் தியாகம் என்பது.


தியாகம் என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம் எதையோ துறப்பது அல்லது விட்டுவிடுவது என்பதாகும். ஆமாம், இத்தகைய தியாகிகள் தமது வாழ்வின் சுகங்களைப் பிறர் பொருட்டுத் துறந்தவர்கள். எனது ; என்னுடயது என்ற பற்றை விட்டு விட்டவர்கள்.

ஆன்மீக ஒளிபரப்பிய ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !   
 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா     

சித் என்றால் அறிவு ஞானம் தெள்ளிய பார்வை ,கூர் நோக்குவிரிந்த நோக்கு என்று பொருள் சொல்லப்படுவதால் - சித்தர்களை அறிவாளிகள் ஞானிகள்,  தெளிந்த பார்வையினை உடையவர்கள் கூர்ந்த நோக்கினை உடையவர்கள்,கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !

  சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். " அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு " என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதையும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் அவர்கள் எப்பொழுதும் கைகொடுத்திடவே எண்ணுவார்கள். அதன் வழியில் பயணப்படுவார்கள்.

  " மக்கள் சேவையினை மகேசன் சேவையாய் " எண்ணி இப்பூவுலகில் வாழ்ந்தவர் பல சித்தர்கள் இருக்கிறார்கள்அப்படியான சித்தருக்கென்று ஒரு பரம்பரையே இருக்கிறது என்பதை வரலாற்றால் அறிகிறோம்.

தமிழ்மொழியின் உரிமையை உறுதிப்படுத்தும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம்

 Wednesday, March 17, 2021 - 6:14pm

தற்போது நமது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில், 1987ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட பதின்மூன்றாவது திருத்தம் உள்ளடங்கியுள்ளது.  

 13ஆவது திருத்தத்தின்படியான விதிமுறைகளை உரியபடி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட நாடுகளில் ஒரு தரப்பான இந்தியாவினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால் இலங்கையின் அதிகாரத் தரப்பில் உள்ளவர்களில் ஒரு சாரார் குறித்த பதின்மூன்றாவது திருத்தத்தால், அதன் விதிகளால் இலங்கைக்கு எதுவித நன்மையுமில்லையென்று கூறி வருகின்றனர். 

செங்கோடா செருப்போடு நில்! - முருகபூபதி -

 


- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -


ஒரு நகரத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஓவியங்களை பரிசுக்குத் தெரிவுசெய்வதற்காக புள்ளிகள் இடும் நடுவர்களும் அங்கு குழுமியிருந்தார்கள். அந்த நடுவர்களில் நீதிபதிகள், கல்விமான்கள், அறிஞர்கள், ஓவியர்கள், கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரு அழகிய பெண்ணின் ஓவியம் முதல்பரிசுக்குத் தெரிவாகியிருந்தது. அக்கண்காட்சி நடக்கும் வீதியில் செருப்பு தைக்கும் செங்கோடன் என்பவனும், அதனை பார்த்து ரசிக்க அங்கே வந்தான்.
முதல்பரிசுக்குத் தெரிவான பெண்ணின் ஓவியத்தை கூர்ந்து பார்த்தான். அந்தப்பெண்ணின் பாதத்திற்கு ஏற்ப அணியப்பட்ட செருப்பின் வடிவம் ஓவியத்திற்கு பொருத்தமில்லாமல் இருந்ததை கண்டான். தான் கண்டுபிடித்த தவறை அங்கிருந்த நடுவர்களிடம் சொல்லி, இந்த ஓவியம் பரிசுக்கு தகுதியானது அல்ல என்று சுட்டிக்காண்பித்தான்.

ஸ்வீட் சிக்ஸ்டி 6 - தேன் நிலவு - ச சுந்தரதாஸ்

.

தமிழ் திரை உலகில் சாதனை இயக்குனராக திகழ்ந்தவர் ஸ்ரீதர். கல்யாணப்பரிசு படத்தின் மூலம் இயக்குனரான இவர் தனது சொந்தப் பட நிறுவனமான சித்ராலயா நிறுவனத்தை 1961ஆம் ஆண்டு தொடங்கினார். அலைகடலில் தோனி திரையுலகில் புதிய பாணி என்ற வாசகத்துடன் உருவான சித்ராலயா தயாரித்த முதல் படம் தேன்நிலவு.

இந்த படம் பெரும்பாலும் காஷ்மீர் வளம் கொஞ்சும் பகுதிகளில் படமானது பிற்காலத்தில் கலவர பூமியாக மாறிய காஷ்மீருக்கு நடிகர், நடிகைகள் தொழில்நுட்பவியலாளர்கள் எல்லோரையும் அழைத்துச் சென்று ஒரு மாதத்திற்கு மேலாக தங்கி தேனிலவை உருவாக்கினார் ஸ்ரீதர். அன்றைய காலகட்டத்தில் இவரின் இந்த முயற்சி வியந்து பார்க்கப்பட்டது.

தேனிலவு என்றவுடன் இளம் தம்பதிகள் போவது என்று தான் கருதுவார்கள் ஆனால் இப்படத்தில் கதாநாயகியின் தந்தை மறுமணம் செய்து தன் புது மனைவியுடன் தேன் நிலவிற்கு காஷ்மீர் போகிறார். அவருடன் மகளும் பிடிவாதமாக இணைந்து கொள்கிறாள். காஷ்மீரில் அவளுக்கு ஒரு காதலனும் கிட்டுகிறான்.

குடிசையில் வாழும் தேர்தல் வேட்பாளர் ! ஊழல்வாதிகள் நிறைந்த தமிழக அரசியலில் இப்படியும் ஒரு எளிய மனிதர் !


தேர்தலில் போட்டியிட முதல் தகுதியாக, செலவு செய்ய பணம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிப்போன சமகாலத்தில், 3,000 ரூபாயை வைத்துக் கொண்டு வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் மாரிமுத்து.

 

தமிழ்நாடு திருத்துறைப்பூண்டி தொகுதியில் தி.மு.க தலைமையிலான கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள மாரிமுத்து தான்


அந்த எளிமையான வேட்பாளர்.

 

மாரிமுத்துவுக்கு சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி அருகே காடுவாக்குடி. அங்கு சென்று மாரிமுத்துவின் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால், ஒரு சிறிய குடிசையை நமக்குக் காட்டுகிறார்கள் ஊர் மக்கள். அந்தக்  குடிசை வீட்டில்தான் மாரிமுத்து, அவரது தாய் தங்கம்மாள், மனைவி ஜெயசுதா, மகள் தென்றல், மகன் ஜெயவர்மன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

 

தொகுதிக்குள் ஒரு பழைய டூ விலரில் வலம் வரும் மாரிமுத்துவிடம் பேசினோம் ``என் அப்பா ஒரு விவசாய கூலித்தொழிலாளி. இப்ப அவர் உயிரோட இல்லை. நான் விவசாய கூலி வேலைக்குப் போய்தான் பி.காம் வரைக்கும் படிச்சேன். இப்ப என்கிட்ட ஒரு டூவிலர் இருக்கு. என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி அதுவும் கிடையாது. இப்ப எங்க குடும்பத்துக்குனு முக்கால் ஏக்கருக்கு குறைவாதான் வயல் இருக்கு. அதுல வரக்கூடிய வருமானத்தை மட்டும் வச்சு குடும்பத்தை ஓட்ட முடியாது. என்னோட மனைவியும் அம்மாவும் விவசாய வேலைகளுக்கு போறாங்க. என்னோட கட்சிக்காரங்களும், ஊர்மக்களும் தங்களால் முடிஞ்ச பொருளாதார உதவிகளை செய்றாங்க.

இலங்கைச் செய்திகள்

 காணாமல் போனோருக்காக யாழ் வந்து போராட்டம்

பசிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் சுமந்திரன்

சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டத்துக்கு 17 நாட்கள்...

பங்களாதேஷில் பிரதமர் மஹிந்தவுக்கு மகத்தான செங்கம்பள வரவேற்பு


காணாமல் போனோருக்காக யாழ் வந்து போராட்டம்

நீதி கேட்டு கண்டி டீமன் ஆனந்த போர்க்கொடி

யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா முன்றலில் கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.

உலகச் செய்திகள்

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி பற்றி உலக சுகாதார அமைப்பு ஆய்வு

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை நெதர்லாந்தும் இடைநிறுத்தியது

வைரஸ் உருமாற்றங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு

அமெரிக்க புதிய நிர்வாகத்திற்கு வட கொரியா கடும் எச்சரிக்கை

மியன்மாருக்குள் நுழைய அனுமதி கோருகிறது ஐ.நா

அமெரிக்க மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச் சூடு: எண்மர் பலி

புட்டினுக்கு பைடன் எச்சரிக்கை: ரஷ்ய - அமெ. உறவில் முறுகல்

அஸ்ட்ராசெனக்கா மருந்தின் பயன்பாடு மீண்டும் ஆரம்பம்

ஆங் சான் சூச்சி மீது புதிய குற்றச்சாட்டு


அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி பற்றி உலக சுகாதார அமைப்பு ஆய்வு

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தை பல ஐரோப்பிய நாடுகளும் இடைநிறுத்திய நிலையில் உலக சுகாதார அமைப்பின் தடுப்பு மருந்து பாதுகாப்பு நிபுணர்கள் அது பற்றி மீளாய்வு செய்ய நேற்று கூடினர்.

இந்த தடுப்பூசியை பெற்றவர்களிடம் இரத்தம் உறையும் சம்பவங்கள் ஐரோப்பாவில் பதிவான நிலையிலேயே இதன் பாதுகாப்புப் பற்றி அச்சம் அதிகரித்துள்ளது.

சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா

 பேர்த் பாலமுருகன் கோயில் பங்குனி உத்திரம் 28/03/2021
 

Zack Snyder's Justice League எப்படி வந்துள்ளது, திரை விமர்சனம்

 2017 ம் ஆண்டே ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் ஜெஸ்டிஸ் லீக் படம் திரைக்கி வந்தது. ஆனால், அது ஸ்னைடர் படமே இல்லை, என்பது தெள்ள தெளிவாக தெரிந்தது.

ஆம், படத்தை முடித்து கடைசிக்கட்ட வேலையில் இருந்த ஸ்னைடருக்கு இடியாக வந்து விழுந்தது அவரின் மகள் தற்கொலை செய்தி.

அதனால் அந்தப்படத்திலிருந்து ஸ்னைடர் விலக, அவெஞ்சர்ஸ் இயக்குனர் ஜோஸ் வைத்து மிச்ச வேலையை பார்த்தனர்.

அவரோ டிசி ஆடியன்ஸை மனதில் வைத்துக்கொள்ளாமல், ஏதோ மார்வல் டீம் அனுப்பி வைத்த ஸ்லீப்பர் செல் போல் அந்த படத்தை எடிட் செய்தும் எடுத்தும் கொடுத்தார்.

உண்மையாகவே இது டிசி படம் தானா என்று ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு படம் இருந்தது. இது எங்கண்ணே வேலாயுதம் இல்லன்ற மாதிரி ரசிகர்கள் ஒன்றுக்கூடி ஸ்னைடர் கட் ரிலிஸ் செய் என்று ஆன் லைன் போராட்டத்தில் குதிக்க, பல பிரபலங்கள் ஆதரவளித்தனர்.

அதன் பின்பு ஒரு வழியாக இந்த படம் OTT தளத்தில் வந்தது. ஸ்னைடர் வெர்ஷன் எப்படி வந்துள்ளது பார்ப்போம்.

சூப்பர் மேன் இறப்பால் வரும் கதீர் வீச்சால் மீண்டும் உயிர்த்தெழுகிறது மதர் பாக்ஸ். இதுவே படத்தின் ஆரம்பக்காட்சியாக இருக்க அதை தொடர்ந்து அந்த மதர் பாக்ஸை கைப்பற்றி தன் தலைவன் டார்க்‌ஷீடை பூமிக்கு அழைத்து வர போராடுகிறார் ஸ்டெபன் ஃவுல்ப்.

பிறகு என்ன இவன் திட்டத்தை அறிந்த பேட்மேன் மற்றும் வொண்டர் வுமன் ஒரு டீமை ரெடி செய்து ஸ்டெபன்ஃவுல்ப் திட்டத்தை அழித்து, டார்க்‌ஷீட் வருகையை தடுத்தார்களா என்பதே மீதிக்கதை.

என்ன தான் பழைய படம் என்றாலும், ஸ்னைடர் வெர்ஷன் ஒரு வித்தியாசமான பயணம் தான், இதெல்லாம் ஏன் கட் பண்ணீங்க என்று ரசிகர்கள் ஜோஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸை திட்டும் அளவிற்கு ஜாக் ஸ்னைடர் சாதித்துவிட்டார் என்றே சொல்லலாம்.

அதிலும் டார்க்‌ஷீட் மதர் பாக்ஸை வைத்துக்கொண்டு சண்டைப்போட வரும் காட்சி, அப்போது அமேசான், அட்லாண்டா என பலரும் சேர்ந்து அந்த டார்க்‌ஷீடை அடித்து துரத்தி மதர் பாக்ஸை கைப்பற்றும் இடம் வெறித்தனம். CG கொஞ்சல் டொங்கல் என்றாலும், கொடுத்த பட்ஜெட்டில் அதகளம் செய்துள்ளார் ஸ்னைடர்.

அதோடு முன்பு வந்த படத்தில் ப்ளாஷ், சைப்ராக் கதாபாத்திரம் ஏதோ கெஸ்ட் ரோல் போல் வருவார்கள், ஆனால், இதில் அவர்கள் தான் மெயின் ரோலே, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சைபராக் வைத்தே தான் கதை நகர்கிறது.

அதிலும் அவர் பின் நடப்பதை அறிந்துக்கொள்வது, கிளைமேக்ஸில் ப்ளாஷ் இறந்தகாலம் சென்று மாற்றுவது, பேட்மேன் கனவுகள் என்று ஸ்னைடர் ட்ச் தெறிக்கின்றது.

டாம் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம், டிஜிட்டல் என்பதால் ஓகே, ஆனால், தியேட்டராக இருந்திருந்தால் கொஞ்சம் நீளம் குறைத்தே ஆகவேண்டும்.

மொத்தத்தில் ஸ்னைடர் கட், தரமான கட். அனைவரின் கேள்வியிம் தற்போது டார்க்‌ஷீட் Entry எப்போது என்பது தான்.

நன்றி CineUlagam