தீராத பார்வைகள்...!

.

சங்காத பார்வை
என் உரிமை நீ
என சொல்லாமல்
சொல்லும் பார்வை!

இந்த பெண்ணிற்கென்ற
கனவு உலகில் நுழையும்
அதிகாரம் பெற்று
என் கனவுகளையும்
காட்சிகளாக்கும்!

ஒரு நிமிடப்பார்வை
 உயிர்வரை இனிக்கும்
மறு நிமிடப் பார்வையோ
யுக யுகமாய் நீடிக்கும்!

கம்பன் கழகம் நடாத்திய இசை வேள்வி - 2017 நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.

கம்பன் கழகத்திற்காக இசை வேள்வியை நடத்தியவர் சங்கீத உலகிலே 30 வருட அனுபவம் பெற்று இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை வகிக்கும் பாம்பே ஜெயஸ்ரீ இசை அரங்கை தன்வசமாக்கி ஒப்பற்ற சாஸ்திரிய சங்கீதத்தை வழங்கினார். இசைக் கலை என்பது அவர் அவர் ஆத்மாவில் இருந்து புறப்படுவது. அவர் அவர் அருமையை அங்கு நாம் தரிசிக்கிறோம். சிலரோ இசை மூலம் உயர பறந்து எம்மையும் தம்முடன் அழைத்து சென்று இசையில் பல பரிமாணங்களையும் காட்டுவார். வேறு சிலரோ இசை என்ற ஆழ் கடலில் மூழ்கி நன் முத்துக்களை எடுத்து வரும் வல்லமை படைத்தவர். இசையால் இறைவனுடன் நனைய வைத்து கடும் பக்தி பிரவாகமான இசையையும் அனுபவிக்க வைப்பார் சிலர். இருந்த இடத்திலேயே அமைத்து உள்ளத்தை துள்ள வைக்கும்  குதூகல சங்கீதத்தை வழங்குபவரையும் காணலாம். இந்த எந்த வகையிலும் சேராத ஒரு சங்கீத அனுபவத்தை அன்று நான் பெற்றேன். பாம்பே ஜெயஸ்ரீயின் சங்கீதம் தன்னுளேயே ஆழ்ந்து தானே அதில் மூழ்கி இசைத்தார். அவர் இராகம் பாடும் பொழுது எமது உள்ளம் தூய்மை அடைந்து நிர்மல மாக்கப்படுகிறது. இசையால் எம்மை வசமாக்கி எம்முள்ளே இருக்கும் ஆணவம், கோவம், வெறுப்பு என்ற சகல மலங்களையும் கொன்று விட்டாரோ என எண்ணத்  தோன்றியது. ஆம் அவர் நடத்தியது இசை வேள்வியே.. 

பயணியின் பார்வையில் -- அங்கம் 12 - முருகபூபதி

.

புதுவை இரத்தினதுரையின் பிறந்த திகதியை தெரிந்துவைத்திருக்கும்   சிங்கள  புலனாய்வு எழுத்தாளர்...?!

               
                                                                                                                                                 " உங்களுடைய கையெழுத்து அழகாக  இருக்கிறது” என்றேன்.
   “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான      புன்னகை.  பல  எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது  போன்று   அழகாக  அமையவில்லை   என்பது  என்னவோ  உண்மைதான்.
வேறு எந்தத்  தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத்    தொடங்கியவர்களின் வரிசையில்   இடம்    பெற்றவர்  மு.கனகராசன். இவர்  பணியாற்றிய   பத்திரிகைகள்   பல.       இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும்      நெருங்கிய        தொடர்பு      கொண்டிருந்தார்.      நான்     அறிந்த வரையில்   மு.க.       என   எம்மால்  அழைக்கப்பட்ட    மு. கனகராசன், சுதந்திரன் - தேசாபிமானி - புதுயுகம் , தினகரன்  முதலான  பத்திரிகைககளிலும்   சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர்.

சிற்பி  சரவணபவனின்  கலைச்செல்வி,  செல்வராஜாவின்      அஞ்சலி   முதலான  இலக்கியச்  சிற்றேடுகளில்  வேலை     செய்திருக்கிறார். மல்லிகை ஜீவாவுக்கும்  மல்லிகை தொடர்பாக      அவ்வப்போது  ஆலோசகராக  இயங்கினார்.       மரணப்படுக்கையில்  விழுவதற்கு முன்னர் இறுதியாக       தினகரனில்  வாரமஞ்சரியை  கவனித்துக்கொண்டிருந்தார்.

கவி விதை - 25 - மீளா அடிமை -- விழி மைந்தன் --

.


சந்திரன் ஒளியில் அவளைக் கண்டான் அவன்.

சரணம் அடைந்தான். மனதினுள் மரணம் அடைந்தான். புதிதாக ஜனனம் அடைந்தான். ரொம்பச் சலனம் அடைந்தான்.
அன்று முழுநிலவு. திருவாரூர் தியாகேசப் பெருமானின் கோவில் வீதியிலிருந்த நூற்றுக்கால் மண்டபத்தில் அவள் நடன அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது.

நடனம் பார்க்க வந்தவர் சிலர். அவளைப் பார்க்க வந்தவர் பலர்!

ஆயிரம் பிறை கண்ட முதியவர்களும், அவள் போல் அழகியின் நடனத்தைக் கண்டதில்லை என்று சொன்னார்கள்.

சேலைப் பழித்தன; கொலை நெடு வேலைப் பழித்தன அவள் கண்கள்.

வானில் நின்றது முழு நிலா. அவள் நுதலோ சின்னப் பிறை நிலா!

கன்னங்கள் பொன்னென மின்னின.

தேறலும் கருப்பஞ்சாறும் சேர்த்துப் பிளிற்றின செக்கச் சிவந்த இதழ்கள்.

அவள் புன்னகை கண்டு பொறாமை கொண்டன அவள் அணிந்திருந்த பொன்னகைகள்!

உலகச் செய்திகள்


வட கொரியா ஜப்­பா­னுக்கு மேலாக ஏவு­க­ணையை ஏவிப் பரி­சோ­தனை

சசிகலா , தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து ஓதுக்கி வைப்பு : முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

ஈராக்கில் தலை துண்டித்த நிலையில் 500 உடல்கள் கண்டுபிடிப்பு

அமெ­ரிக்­க வெள்ள அனர்த்தம் இர­சா­யனத் தொழிற்­சா­லையில் வெடிப்­புகள்

கராச்சி நகரில் வெள்ள அனர்த்தம் : 23 பேர் பலி

 மருத்துவராகும் கனவுடன் பயணித்த அனித்தாவிற்கு தற்கொலையா முடிவு ?

விடுதலை கேட்டவருக்கு வீட்டுச் சிறை சொந்த மண்ணில் பேரறிவாளன் - து .ராஜ

.

ந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாவதற்கு முன்னரே, ஏன் தலைமைச் செயலகத்தில் அரசாணை வெளியாவதற்கு முன்பாகவே வேலூர் சிறை நிர்வாகத்துக்கும், ஜோலார்பேட்டை வீட்டுக்கும் பேரறிவாளனின் பரோல் குறித்து அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 24-ந் தேதி மாலையில் முறைப்படி அரசாணை வெளியானது.  

""வேலூர் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தலைமையில் போலீஸ் டீம் பாதுகாப்பு தர வேலூர் மத்திய சிறையில் இருந்து இரவு 8.45 மணிக்கு பேரறிவாளனை அழைத்துக்கொண்டு ஜோலார்பேட்டையை நோக்கி புறப்பட்டது. ஒரு மாத பரோல் தகவல் முன்கூட்டியே தெரிந்தால், தமிழுணர்வாளர்கள் சிறை வளாகம் முன் திரண்டுவிடுவார்கள் என்பதால்தான் இந்த திடீர் வேகம்'' என்றனர் அரசு அதிகாரிகள் நம்மிடம். அத்துடன், "நீட் தேர்வு விவகாரத்தில் ஏமாற்றிய தமிழக அரசு மீது மக்களுக்கு இருந்த கோபத்தைத் தணிக்க, பரோல் அரசாணையில் கவனம் செலுத்தப்பட்டது' என்றனர்.


வீணாக்கார் தம்முயிரை ! எம் .ஜெயராமசர்மா .... மெல்பேண் ....

.

              பிறப்பிக்கும் இறப்புக்கும் பெரும்போரே நடக்கிறது
                     பிறந்துவிட்ட யாவருமே இறந்துவிடல் நியதியன்றோ
              இறப்பதற்கு எவருமே ஏக்கமுடன் இருப்பதில்லை
                    இருந்துவிட வேண்டும் என்னும் ஏக்கமதேயிருக்கிறது
              வருந்தியமன் அழைத்தாலும் வரமாட்டேன் என்றழுத்தி
                      யமனுக்கே போக்குக்காட்டும் நாடகத்தை ஆடுகிறார்
              விருந்துண்டு நாள்முழுக்க மேதினியில் வாழ்வதற்கே
                      மருந்துண்டு மருந்துண்டு வாழ்நாளை பார்க்கின்றார் !

             எத்தனையே வைத்தியங்கள் அத்தனையும் பார்க்கின்றார்
                   சத்திர சிகிச்சையெலாம் தான்செய்து நிற்கின்றார்
            நித்திரையை வரவழைக்க  நிறையப்பணம் கொடுக்கின்றார்
                  அத்தனைக்கும் அவர்வசதி உச்சமதில் இருக்கிறது
            சொத்தெல்லாம் வித்தாலும் சுகம்பெறவே விளைகின்றார்
                  சத்தான உணவையெல்லாம் தானவரும் உண்ணுகிறார்
            மொத்தமுள்ள வைத்தியரை குத்தகைக்கே எடுக்கின்றார்
                  முழுமையாய் வாழ்வதற்கே முழுக்கவனம் செலுத்துகிறார் !

இலங்கையில் பாரதி - அங்கம் 32 - முருகபூபதி

.


இனிவரும் நூற்றாண்டில் அழியும் உலகமொழிகளில் தமிழும் ஒன்று என சில காலமாக சொல்லிவருகிறார்கள்.
கடந்த காலங்களில் உலகமொழிகள் பல பேச்சு, எழுத்துவழக்கில்லாமல்போனதனால் மறைந்துவிட்டன. சில மொழிகளுக்கு வரிவடிவம் இல்லை.
ஆனால், தொன்மையான தமிழ்மொழிக்கு வரிவடிவம் இருக்கிறது. ஈழத்தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்து வாழத்தலைப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்க மற்றும் மத்தியகிழக்கு, ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் பேசப்படுகிறது.
எனினும் அண்மைக்காலங்களில், எதிர்காலத்தில் அழியும் மொழிகளில் தமிழும் ஒன்றென்று பேசப்பட்டதற்கு காரணம் என்ன..?
இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் வெளிநாடுகளுக்குச்சென்றவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதாது, பேசாது என்ற பொதுவான காரணம் சொல்லப்படுகிறது. இந்த அச்சத்தினால் வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகள், தமிழ்ப்பாடசாலைகள், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழை வாழ வைக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.
" தமிழினி மெல்லச்சாகும்" என்று பாரதியும் உரைத்திருக்கிறார் என்று பலரும் மேடைகளில் பிதற்றிவருவதையும் அவதானிக்கமுடிகிறது.
பாரதி அப்படிச்சொன்னாரா...? என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு அவர்கள் தயாரில்லை. மேடைகளில் முழங்கும்போது பாரதியே சொல்லியிருக்கிறார் " தமிழினி மெல்லச்சாகும்" என்று மேலோட்டாகச் சொல்கிறார்கள்.
ஆனால், பாரதி என்ன சொன்னார் என்பதை இங்கு கவனிப்போம்.


ரோஹிங்கியா: உலகம் அறிந்திராத இனப்படுகொலை – ஆவணப்படம்

.


மியான்மரில் தங்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறையில் இருந்து தப்புவதற்காக வங்கதேசத்தின் எல்லையை கடக்க முயன்ற ரோஹிங்க்யா மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மியான்மர் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறது. தாக்குதல் குறித்த காணொளிகளை ஆய்வு செய்த பின்னர் அதை வெளியிட இருப்பதாக ஐரோப்பிய ரோஹிங்கியா சங்கம் (European Rohingya Council) அறிவித்துள்ளது.

இலங்கைச் செய்திகள்


காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

யாழ் படகு கவிழ்ந்து உயிரிழந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகின 

யாழ் படகு விபத்து : மாணவர்கள் 6 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்.!

ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார் ஃபிரான்ஸிஸ் அடம்ஸன்

 தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழு இலங்கை வருகை


மூலிகை பேசுகிறது - செம்பருத்தி

.

கிழக்காசிய நாடுகளில் தழைத்திடும் தாவரம்
       கிடைத்தோர்க்கு நலமென கொடுத்திடும் ஓர்வரம்
அழகென பூத்திடும் அருமருந்து செம்பருத்தி
        ஆரோக்கியம் தந்திடும் அன்றாடம் நிலைநிறுத்தி
அழகான கூந்தலுக்கு அற்புத மருந்தாகும்
      அன்புடன் உபசரிக்கும் ஆதிவாசி விருந்தாகும்
விழாக்கால வேள்வியிலும் வைத்திடும் பூவாகும்
      விடியாத நோய்களுக்கும் வெளிச்சமென தீர்வாகும்

விதையில்லா பதியத்தால் விளைந்திடும் செடியாகும்
       வேர்இலை பூக்களால் வரும்நோயும் பொடியாகும்
சிதையாமல் பூவிதழை சுடும்பாலில் நனைத்திடு
        சிவந்திடும் பாலினை தினந்தோறும் அருந்திடு
பதைத்திடும் பதட்டத்தை பக்குவமாய் குறைத்திடும்
        பலமூட்டி  இரத்தத்தை   பயன்பெற  செய்திடும்
வதைத்திடும்  இதயத்தின்  வலிகளை  மாற்றிடும்
        வளமான வாழ்விற்கு வழிதனை காட்டிடும்

செந்நிற வண்ணத்தில் சிரித்திடும் பூவாகும்
         சீனர்களும் போற்றிடும் சிறப்பான மருந்தாகும்
வந்திடும் வெள்ளைநோய் வஞ்சியர்க்கு நலமாகும்
         வையகம் முழுக்கவே வளர்ந்திடும் குலமாகும்
தந்திடும் வைத்தியம் தரணிக்கு பயனாகும்
         தாவர வகைகளில் தரமான மருந்தாகும்
சிந்தனை செய்திடு செம்பருத்தி வளர்த்திடு
         செழிப்புடன் ஆரோக்கியம் ஜகத்தினில் நிறுத்திடு.

                                               -ப.கண்ணன்சேகர், திமிரி.

தமிழ் சினிமா


தரமணி


சினிமா என்றாலே காதலை மையப்படுத்தி தான் படங்கள் எடுக்கப்படும். பல படங்கள் இதை பிரதிபலித்ததுண்டு. ஆனாலும் இதிலிருந்து சற்று விலகி வந்துள்ள படம் தான் இந்த தரமணி.
தரமணி தரமானது தானா, மணி ஓசை போல் புரியவைக்கும் சேதி என்ன என பார்க்கலாம்.

கதைக்களம்

Taramaniஆண்ட்ரியா ஒரு ஆங்கிலோ இந்திய பெண். தான், தன்னுடன் தன் அம்மா, ஒரு சிறுவயது மகன் என தனிக்குடும்பமாக வாழ்கிறார். இவருக்கு பின்னாலும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கிறது. ஐடி நிறுவனத்தில் ஒரு மனிதவள அதிகாரியாக (HR) சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் சில சோகங்கள் இவருக்கு பின்னாலும் இருக்கிறது.
அடை மழைக்காக சாலையோரம் ஒதுங்கும் ஆண்ட்ரியா சட்டென பின்னால் இருப்பவரை பார்த்து மிரள்கிறார். அந்த வழிபோக்கன் தான் நம்ம ஹீரோ. பின் என்ன இருவரும் பேசிக்கொள்வதிலேயே பின்னால் என்ன நடக்கப்போகிறது என கணித்து விடலாம். கதையின் நாயகனாக வசந்த் இவரின் பின்னாலும் ஒரு தனி ட்ராக்.
இருவரும் ஒரு கட்டத்தில் நண்பர்களாக, பின் காதலர்கள் ஆகிறார்கள். சீக்கிரம் வந்த காதல் சட்டென விரிசலாகிறது. ஆண்டிரியா ஒரு பாதையில் செல்ல, ஹீரோ தவறான பாதையில் செல்கிறார். முன் பின் அறிமுகமில்லாத இவர்கள் எதற்காக சந்தித்தார்கள், ஏன் பிரிந்தார்கள், பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை.
இதற்கிடையில் அஞ்சலி வேறு. அவர் ஒருவரை காதலித்து விட்டு, வெளிநாடு சென்றதும் மாறிவிட்டார். இவர் இப்படி மாறக்காரணம் என்ன என்பதையும் இப்படம் காட்டியிருக்கிறது.

படம் பற்றிய அலசல்

ஆண்ட்ரியா இக்கதைக்கு பொருத்தமானவர் என அவரது நடிப்பே சொல்கிறது. அவருக்கே உரிய ஸ்டைல், தனக்கென ஒரு கொள்கை என சுற்றும் இவர் ஆண்களின் மாற்று பார்வையில் பரிதவிக்கும் பெண்களில் ஒருவர்.
சூழலை எதிர்கொள்ளும் விதம், தைரியம் இருந்தாலும் தன் மகன் தான் தனக்கு உலகம் என நினைப்பவர். இக்கதையில் நடிப்பதற்கே இவருக்கு தனி தைரியம் இருந்திருக்கிறது.
வசந்த் அறிமுக நாயகனாக நடித்திருந்தாலும், திறமையை காட்ட இது ஒரு நல்ல சான்ஸ். காட்டியிருக்கிறார். படம் முழுக்க ஒரு இயல்பான நடிப்பு.
அஞ்சலி ஒரு ஸ்பெஷல் ரோலில் நடித்திருந்தாலும், இவரால் கதையில் ஒரு ஸ்ட்ராங்க் ஃபிளாஷ் பேக் சுழல்கிறது. இவரின் நடிப்பும் எதார்த்தம்.
இயக்குனர் ராம் சற்று வித்தியாசமாக ஆண் என்னும் போர்வையில் சிலர் பெண்களை எப்படி பார்க்கிறார்கள் என உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா காதலில் வெற்றியானாலும், தோல்வியானாலும் அதற்கேற்ப படங்களில் பாடல்களை கொடுத்து கவர்ந்து விடுவார். அது இப்படத்திலும் தொடர்கிறது.
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இப்படம் மூலம் மீண்டும் நம் எண்ணங்களில் தான் இருப்பதை தன் வரிகள் மூலம் காட்டியிருக்கிறார்.

க்ளாப்ஸ்

ஆண்ட்ரியாவின் நடிப்பு கதைக்கு மெருகூட்டுவதை சொல்லாமல் இருக்க முடியாது.
இயக்குனர் பார்வையில் குழந்தைகளுக்கான விசயம் இதில் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
ஒளிப்பதிவு, யுவனின் பாடல்கள் என உள்ளிருக்கும் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது.
இருப்பதை இருப்பதாக கேமிராவில் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

பல்ப்ஸ்

அடுத்தடுத்து பாடல்கள் தொடர்ந்து வருவது ஒரு மாதிரி இருக்கிறது.
படத்தின் நீளம் எதிர்ப்பார்ப்பை தளரவைப்பதாக தெரிகிறது.
யுவன் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும் ஏதோ ஒன்று குறைவதாக தோன்றுகிறது.
மொத்தத்தில் இயக்குனர் சொன்னது போல தான். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடுவது மாதிரி தான். தரமணி தரம் குறையாமல் படம் காட்டியிருக்கிறது.
ஆபாச படம் என பலர் நினைத்தாலும், தரமணி வயது வந்தோர்க்கு மட்டுமே என்பதை தான் தெளிவாக்கியிருக்கிறது.
Cast:
Direction:
Ram
Production:
  
நன்றி  CineUlagam