இடும்பை - ஆதவன் தீட்சண்யா

.
த்தம் எப்போதும் உறைவதுமில்லைஉலர்வதுமில்லை
உறைவதற்கோ உலர்வதற்கோ அவகாசமேயற்று
ஓயாது பீறிட்டோடும் அது
எப்படித்தான் உறையும் ஈரம்தான் உலரும்?

கூற்றுவராகிய கொற்றவர் ஆணையால்
இடையறாது சீறும் வேட்டுகள்
இப்பூமியை சூடான ரத்தத்திற்குள்மூழ்கடிக்கின்றன
காடு மலை கடல் வயலென
எங்கெங்கிருந்தும் உறிஞ்சி துப்பப்படும் ரத்தம்
வானத்தின் நிறத்தையும் மாற்றிவிட்டிருக்கிறது

நீதிபோல் புனைந்த நிறைபொய்யின் சுத்திகொண்டு  
ஓங்கிப் பிளக்கப்பட்ட நம் உச்சந்தலையிருந்து
கொப்பளித்துப் பாயும் குருதியின் அடர்த்தியால்
அசையமாட்டாது திணறும் ஆற்றின் கரைகளில்
நாச்சுழற்றி அலையும் காட்டேரிகளைக் கண்டு
திகிலடைந்து நடுங்குகின்றன தெய்வங்களும்  

ரத்தக்கவுல் எங்கும் வீசுகிறது
நாலாபக்கமும் சுழன்றுவரும் காற்று
ரத்தத்தின் செவ்வரியைப் படர்த்திப்போகிறது
நம்கூரைகளின்மீது
பிசுபிசுக்கும் ரத்தத்திற்குள்ளாக நடக்கப்பழகியிருக்கிறோம் நாம்
பின்தொடரத்தான் மிஞ்சுமோ ஓருயிர்

நன்றி http://aadhavanvisai.blogspot.com.au

பொம்பே ஜெயஸ்ரீ அவர்களின் இசை நிகழ்வு

.
கம்பன் கழகத்தின் நிகழ்வு இன்று 27. 08 .2017 Silverwater இல் இடம்பெற்றது.
பொம்பே ஜெயஸ்ரீ அவர்களின் இசை நிகழ்வு இடம் பெற்றது . இதைப் பற்றிய
பார்வை அடுத்தவாரம் வெளிவரும்.


இலங்கையில் பாரதி -- அங்கம் 31 முருகபூபதி

.

" ஐதீகத்தை  கட்டிக்களிக்கும் வைதீகராயினும் சரி, பழமையைப் பகைக்கும்  புதுமை விரும்பியும் சரி, பாரதியைப் பாராட்டுகிறார்கள். மேடை ஏறிப்பேசும் அரசியல்வாதி பாரதியின் பாடல்களிலிருந்து  மேற்கோள் காட்டுகின்றான். ஏடு தீட்டும் எழுத்தாளன், பாரதியின் கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள் தருகின்றான்.  இசைவாணன் பாரதியின் பாடல்களைப் பண்ணோடு  இசைக்கின்றான். திரைப்படமெடுப்போரும், தெருவிலே  பிச்சை  ஏந்துவோரும்கூட, பாரதியின் பாடல்களை இனிமையான, கவர்ச்சிகரமான, உள்ளத்தைக்குளிர்விக்கக்கூடிய மெட்டுகளிலே  வைத்திழைத்து மக்களுக்கு வழங்குகிறார்கள். அந்த அளவுக்குப் பாரதி தமிழ் உலகத்தில் அழியாச்சித்திரமாகிவிட்டான்."



கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன்!


கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப்போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும்கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.
இது தவிர, சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி-பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.
குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.

உலகச் செய்திகள்


அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தன : துணை முதல்வரானார் ஓ.பி.எஸ்.

பள்­ளி­வாசல் சுவரில் அச்­சு­றுத்தல்.! அவ­தூறு வாச­கங்கள்




படிக்காதீர்கள்! - ப்ரணா


Image result for manjal vaanam

.
என் எண்ணத்திற்கு எதிராகவே
இயங்குகிறேன் நான்

எதையெல்லாம்
எழுதக்கூடாதென்று எண்ணுகிறேனோ
அதையெல்லாம் எழுதுகிறேன்

எதைப் பேசக்கூடாதென்று எண்ணுகிறேனோ
அதைப் பேசிவிடுகிறேன்

எதை மறக்க நினைக்கிறேனோ
அதை மறக்காது நினைக்கிறேன்

எதை விருப்பக்கூடாதென்று விரும்புகிறேனோ
அதை விரும்புவதையே விரும்புகிறேன்

எதன் மீது அக்கறை கொள்ளக்கூடாதென்று எண்ணுகிறேனோ
அதன் மீதே அக்கறை கொள்கிறேன்

‘படிக்காதீர்கள்’ என்று சொல்லியும்
இதைப் படித்த
உங்களைப் போல்!

Nadhamum Natyamum 03.09.2017

.
நாதமும் நாட்டியமும் 03 .09 2017





















காலமெல்லாம் உதவுமன்றோ ! எம் . ஜெயராமசர்மா



                
                               
image1.JPG               வசதிபல பெருகிறது வாழ்வுநிலை உயர்கிறது 
                     வள்ளல்குணம் மனதைவிட்டு மறைந்தோடி ஒழிகிறது 
               தகுதிபல கொண்டவரும் தனைமறந்தே நிற்கின்றார்
                      வெகுமதிகள் தனைநாடி விரைந்தோடி வருகின்றார் !

              கல்விகற்ற பெரியவரும் கண்ணியத்தை மறக்கின்றார்
                   காசுசேர்க்க நிற்பதிலே கருத்தெனவே இருக்கின்றார்
              புண்ணியத்தை மனமதிலே பொசுக்கிவிட நினைக்கின்றார்
                    பூதலத்தில் நடக்குமிது புரியாமல் இருக்கிறது ! 

             மேடையேறிப் பேசிடுவார் மேதையெனக் காட்டிடுவார்
                  தலைக்கனத்தை விட்டுவிட தாம்நினைக்க மாட்டார்கள் 
             உலகத்துப் பட்டமெலாம் ஒன்றாகப் பெற்றாலும்
                   உள்ளமதில் திருப்தியினை உள்நுழைக்க மாட்டாரே !

பயணியின் பார்வையில் -- அங்கம் 11 " அறிவதற்காக கற்றல், செயலாற்றுவதற்காக கற்றல், பிறரோடு சேர்ந்து வாழக்கற்றல், சுயஆளுமையுடன் வாழக்கற்றல்" - யுனெஸ்கோவின் கல்விச்சிந்தனை முருகபூபதி


-->


இலங்கைப்பயணங்களின்போது  தமிழ்ப்பிரதேசங்களில்  சில வீதிகளில் நான் அவதானிக்கும்  ஒற்றுமைகளை இங்கு குறிப்பிடல்வேண்டும். எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்ட மாணவர் தொடர்பாடல் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலையம்,   யாழ்ப்பாணம், அரியாலை கண்டிவீதியில் அமைந்திருக்கிறது.
அதற்கு அருகில்தான், பெண்களின் மாற்றத்திற்கான வலையமைப்பு என்ற தன்னார்வ தொண்டு  நிறுவனம். அந்தவீதியில்தான் இவை இரண்டுக்கும் அருகில் இலங்கைத்தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பணிமனை. அத்துடன், ஈ.பி.ஆர். எல். எஃப். பின் (பத்மாநாபா அணி) அலுவலகம்.
இந்த வீதியில் இந்த அமைப்புகள் தோன்றுவதற்கு முன்னர் 1970 களில் அரஸ்கோ என்ற மாம்பழச்சாறு, மற்றும் பழவகைகள் பதனிட்டு தென்னிலங்கைக்கு ஏற்றுதி செய்யும் பெரிய நிறுவனமும் இயங்கியது. தற்போது அந்தக்கட்டிடம் சிதிலமடைந்து இடிபாடுகளுடன் அனாதையாக காட்சி அளிக்கிறது. எனினும்,  முற்றத்தில்  மாமரங்கள் நிழல் பரப்புகின்றன. இவ்வாறு இலங்கையில் பல உள்ளுர் உற்பத்தி தொழிற்சாலைகள் பாழடைந்துவிட்டன.
அரஸ்கோ நிறுவனம் கொழும்பிலும் அலுவலகம் வைத்திருந்தது. மல்லிகையில் விளம்பரங்களும் வந்துள்ளன. மல்லிகை ஜீவா அந்நாட்களில் கொழும்பு வரும்போது அவருக்கு துணையாக இங்கு சென்றிருக்கின்றேன். சிலவேளைகளில் அவர் சார்பாகச்சென்று விளம்பரத்திற்கான பணமும் (காசோலை) பெற்றுவருவேன்.

இலங்கைச் செய்திகள்


இராணுவத்தினர் மீது வாள்வெட்டு ; சந்தேகத்தின் பேரில் 6 பேர் பொலிஸாரால் கைது

நாட்டில் பாரிய நெருக்­க­டி: 13 இலட்சம் பேர் பாதிப்­பு

கேப்­பாப்­பு­ல­வுவில் 111 ஏக்கர் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை

இந்­தியா, சீனாவின் பரி­சோ­தனை மைதா­ன­மா­க இலங்கை

இலங்கை நீதித்­து­றையில் கடும் பாது­காப்­புக்கு உரி­ய­வ­ராக நீதி­பதி இளஞ்­செ­ழியன்




முயற்சி வெற்றி தரும்


.
அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு "இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது .வானம் பொய்த்துவிடும்".
இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.
மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் ( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள்மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.

கடவுளின் புகைப்படம்

.

கடைசியாக முகத்தை பாக்குறவங்க பார்த்துக்கலாம் சாமியோவ்,
முகத்தை மூடிய பிறகு திறக்க கூடாது அப்புறம் சாமி குத்தம் ஆகிவிடுமென உரத்த குரலில் சொல்லி கொண்டு பிணத்தை எரிப்பதற்கூ உண்டான சடங்கை செய்ய ஆயுத்தமானான் வெட்டியான்.

யாரும் வரவேண்டியது இருக்கா என்று கேட்டு பதில் வராததால் முகத்தை சானி வரட்டி கொண்டு மூடி விட்டு விறகினை உடல் மேல் அடுக்கலானான்...
ஏலே பாஸ்கரா தாத்தாவுக்கு கொள்ளி வைலே என்று தனது அருகில் நின்ற பையனை பார்த்து சொந்தக்கார பெருசு ஒன்று சப்தமிட்டது..

விறகோடு சதையையும் சேர்த்து சாப்பிட்ட நெருப்பு,வயிறு நிறைந்த ஏப்பத்தில் புகையை வெளியிட்டது..தாத்தாவின் எச்சமாய் இப்போது சாம்பல் மட்டுமே மண்ணோடு பரவி கிடந்தது..
மூன்றாம் நாள் காரியம் முடிந்து பூஜையறையில் சாமி படம் அருகே ஆணி அடித்து பித்தளை முலாம் பூசிய பிரேம் இட்டு சிரித்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை தொங்க போட்டிருந்தனர்..

நெற்றியில் குங்குமமிட்டு பூமாலை அணிவித்து அணையாத விளக்கு ஒன்று எரிய விடப்பட்டு இருந்தது..
தரையில் சாம்பிராணி,பத்தி புகை மணம் கமழ,தேங்காயும் வாழைப்பழமும் தாம்பூல தட்டில் ஜோடியாய் கிடந்தது..

ஏலேய் தாத்தாவை கும்புட்டுகோல உனக்கு நல்ல புத்தியும் படிப்பும் வரட்டும்னு என்ற தந்தையின் குரலை கேட்டு தலையசைத்து கும்பிட்டு விட்டு வெளியே வந்த பாஸ்கரனின் கண்ணில் பட்டது மற்றொரு தாழிடப்படாத சாத்தப்பட்ட அறையொன்று..
தாத்தா இறக்கும் முன்பு கவனிப்பாறற்று மலமும் சிறுநீரும் சூழ்ந்து வீசியதை போன்றே பாட்டியின் அறையிலும் நாற்றம் எடுத்தது...

பூஜையறைக்கு இன்னொரு கடவுளின் புகைப்படம் தயாராகி கொண்டிருந்தது.

http://eluthu.com

16வது தமிழ் இணைய மாநாடு இன்று கனடாவில் கோலாகல துவக்கம்

.
இந்த மாநாடு வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .

அனைவருக்கும் வணக்கம்
இன்னமும் சிறிது நேரத்தில் கனடாவில் உத்தமத்தின் 16வது தமிழிணைய மாநாடு துவங்கிட உள்ளது. இந்நேரத்தில் தமிழ் கணிமைக்காக உழைத்த அனைவரையும் நான் நினைவில் வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியமானது,
தொழில்நுட்ப உலகில் கணினியில் தமிழை எப்படி கொண்டுவருவது என்ற பணிகள் ஆரம்பத்திலயே துவங்கிவிட்டது. பிக்சல், பிட்மேப், TTF, OTF, WOFF, EOT , SVG என கணினி எழுத்துருவில் பலமாற்றங்கள் வந்தபின்னரும் அனைத்து வடிவிலும் தமிழ் எழுத்துருக்களை முதலில் மேசை கணினிகளிலும், பின்னர் இணையத்தில் அதன் பின்னர் செல்பேசிகளில் தமிழை கொண்டுவரும்படி உருவாக்கி வெளியிட்டனர்.
பின்னர் யுனிகோடு வந்தபின்னர் யுனிகோடுக்கு ஏற்றவாறும் பல்வேறு எழுத்துருக்களையும், அதோடு மென்பொருள்களையும், இயங்கு தளங்களையும் தமிழில் கொண்டு வந்தனர்.


தமிழ் சினிமா


விவேகம்

 

அஜித் தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். வேதாளம் என்ற மெகா ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் ஹாட்ரிக் அடிக்க விவேகத்தில் கைக்கோர்த்து 2 வருட கடின உழைப்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் சுமார் 2000 திரையரங்குகளுக்கு மேல் வந்துள்ள படம் தான் விவேகம்.
வீரம், வேதாளத்தில் பிரமாண்ட வெற்றியை தொட்ட இந்த கூட்டணி விவேகத்தில் மீண்டும் அந்த வெற்றியை தக்க வைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் ஸ்பை, ஜேம்ஸ் பாண்ட் போல் முடிக்க முடியாத பல விஷயங்களை அஜித் மிக சாதாரணமாக முடிக்கும் அளவிற்கு திறமை கொண்டவர்.
அவருடைய டீம் 5 பேர், இதில் விவேக் ஓபராயும் ஒருவர், இவர்களுக்கு ஒரு மிஷன் வருகின்றது. அதில், உலகத்திற்கு தெரியாமல் மூன்று நியூக்ளியர் (Nuclear) வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர்.
அது தவறான நபர்கள் கையில் கிடைத்தால் உலகமே பெரும் ஆபத்தை சந்திக்கும், அதே நேரத்தில் இந்த பொறுப்பு அஜித் கையில் வர, நியூக்ளியர் வெடிகுண்டுகளை அகற்றும் பாஸ்வேர்ட் அக்‌ஷரா ஹாசனுக்கு தான் தெரியும்.
அவரை அஜித் கண்டுபிடித்து, அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் நேரத்தில் பல அசம்பாவிதங்கள் நடந்து, அவருடைய வாழ்வே திசை மாறுகின்றது. பின் தன் சூழ்ச்சிகளை அஜித் எப்படி முறியடித்தார் என்பதே இரண்டாம் பாதி.

படத்தை பற்றிய அலசல்

அஜித், அஜித், அஜித் என்று ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதையும் தாங்கி செல்கின்றார். அதிலும் தனக்கு கொடுக்கும் மிஷன்களை அவர் கையாளும் விதம், அவரின் மேனரிசம் என ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக மிரட்டுகின்றார். தனக்கான துரோகம் தெரிந்து அவர் தன்னை தயார் படுத்தும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு செம்ம விருந்து.
காஜலுக்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரம், படம் முழுவதும் கதையின் ஓட்டத்திலேயே அவருடைய கதாபாத்திரம் பயணிக்கின்றது. அதிலும் தன்னை கொலை செய்ய வருபவர்களை அஜித் தூரத்தில் இருந்து சுடும் காட்சி, அதற்கு காஜல் கொடுக்கும் ரியாக்‌ஷன் சூப்பர்.
ஆனால், அக்‌ஷரா இரண்டே காட்சிகளில் தான் வருகின்றார், அது கொஞ்சம் ஏமாற்றம். மேலும், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பரபரப்பாக இருக்கின்றது. ஆனால், பல விஷயங்கள் ஏ செண்டர் ஆடியன்ஸுகளுக்கே புரிய வாய்ப்பில்லை. மிகவும் படம் அந்நியப்பட்ட உணர்வு.
படத்தின் மிகப்பெரிய பலமே ஸ்டண்ட் தான், ஒவ்வொரு காட்சியிலும் அனல் பறக்கின்றது. அதிலும் அந்த மோட்டர் பைக் சேஸிங் காட்சி விசில் விண்ணை பிளக்கின்றது. கிளைமேக்ஸ் 6 பேக் காட்சி நீங்களே திரையில் பார்த்து கொண்டாடுங்கள்.
வீரம், வேதாளத்தில் ஒரு சில மாஸ் காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம், அப்படி இதில் குறிப்பிடும்படி பெரிதும் இல்லை. மேலும், கிளைமேக்ஸில் காஜலை வைத்துக்கொண்டு அஜித் மோதும் காட்சி ஏன் இப்படி சிவா சார்? என கேட்கத்தோன்றுகின்றது.

 

க்ளாப்ஸ்

அஜித் ஒன் மேன் ஆர்மி.
வெற்றியின் ஒளிப்பதிவு, இதுவரை தமிழ் சினிமா பார்க்காத தளத்தை காட்டி அசத்தியுள்ளார். சண்டைக்காட்சியில் வெற்றிக்கு தனி அப்ளாஸ் கொடுக்கலாம்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றது.
சண்டைக்காட்சிகள் குறிப்பாக கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி பெரும் பலம்.
நிறைய காட்சிகளை மக்களுக்கு புரியும் அளவிற்கு சரியாக கட் செய்திருக்கிறார் எடிட்டர் ரூபன்.

பல்ப்ஸ்

அனைத்து தரப்பினருக்கும் கதை புரியுமா? என்றால் கேள்விக்குறி தான்.
அக்‌ஷராவை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் படத்தின் வேகம் அதிகம், எதிர்ப்பார்த்த விவேகம் கொஞ்சம் குறைவு.

நன்றி CineUlagam