மகிழ்ச்சி பொங்கும் நோன்புப் பெருநாள்

 Friday, May 14, 2021 - 2:08pm

பெருநாள் கொண்டாடுவது உலகில் எல்லாச் சமுதாயங்களிடமும் காணப்படும் பண்பாடாகும். கடந்த காலங்களை நினைவு கூர்ந்தோ விஷேச பருவகாலங்களை முன்னிட்டோ மக்கள் பெருநாட்களும் திருநாட்களும் கொண்டாடுவதை காணலாம்.

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - சிட்னி


இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 12 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.


ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.

கொடிய போர் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அன்பான உறவுகளே,

எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில், மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ள நிலையில், எமது விடுதலைப் போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.

Tamil Genocide Day Rally

நிகழ்விடம்: Sydney Town Hall

காலம்: 16-05-2021 Sunday 2pm

Tamil Genocide Remembrance Day

நிகழ்விடம்: Redgum Function Centre, Lane St, Wentworthville, NSW 2145.

காலம்: 18-05-2021 Tuesday 6.30pm - 8pm

தமிழர் இனவழிப்பு நாள் பேரணியிலும் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.


இவ்வண்ணம்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - சிட்னி.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 41 1983 அலைந்துழன்ற காலத்தின் மற்றும் ஒரு பகுதி தெற்கில் தமிழருக்கு அடி விழுந்தது, வடக்கில் உழைக்கும் வர்க்கத்திற்கு சிரட்டையில் தேநீர் தரப்பட்டது ! முருகபூபதி


எங்கள் ஊரின் அயலிலிருந்து சிலாபம்  செல்லும் மார்க்கத்தில் கொச்சிக்கடை, தோப்பு, மணல்சேனை முதலான ஊர்களில்  நீண்ட காலமாக வசித்த தமிழ்க்குடும்பங்கள்  பீதியினால்  இடம்பெயர்ந்து கிடைத்தவற்றை கையிலெடுத்துக்கொண்டு,  கடற்கரை வீதி சித்திவிநாயகர் ஆலயத்திற்கும் அதற்கு முன்பாகவிருந்த எமது இந்து இளைஞர் மன்றத்திற்கும் வரத்தொடங்கியிருந்தார்கள்.

வடபகுதியைச்சேர்ந்த  பலர் எங்கள் ஊரில் அரச உத்தியோகங்களிலும், கட்டுநாயக்கா விமானப்படை தளத்திலும் பணியாற்றியவர்கள். அவர்களின்  குடும்பங்களும் அச்சம் காரணமாக வெளியே வராமல் கதவுகளை மூடிக்கொண்டிருந்தனர்.  கடைத்தெருப்பக்கம் பிரதான வீதி, கிறீன்ஸ் வீதி  எங்கும் இருந்த தமிழர்களின் அனைத்து கடைகளும் சூறையாடப்பட்டு,  தீ அரக்கனிடம் சிக்கி வெந்துகொண்டிருந்தன.


வதந்தி காட்டுத்தீபோன்று பரவியிருந்தது.  விமானப்படையினர் நகர காவலில் ஈடுபட்டனர்.  இதெல்லாம் நடந்துகொண்டிருந்த அந்த கறுப்பு ஜூலை நாட்களில்  எங்கள் ஊர் நாடாளுமன்ற உறுப்பினர் டென்ஸில் பெர்ணான்டோ, மற்றும் ஊர் தமிழ்பிரமுகர்களுடன்,  அயலூர்களிலிருந்து வந்துகொண்டிருக்கும்  அகதிக்குடும்பங்களை கொழும்பில் இயங்கத் தொடங்கிய அகதிமுகாம்களுக்கு அனுப்பும் பணிகள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது எனது அக்காவின் இரண்டாவது மகன் சாந்தகுமார்,  பதட்டத்துடன் ஓடி வந்தான்.

என்னை தனியே அழைத்து,      “ மாமா… உங்களைத் தேடுகிறார்கள்.  நீங்கள் இங்கே நிற்கவேண்டாம்.  மாமியையும் பிள்ளைகளையும் பெரியமுல்லையிலிருக்கும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்.  நீங்களும் அங்கே செல்லுங்கள். வெளியே அலையவேண்டாம். எனச்சொல்லிவிட்டு,  தான் வந்த சைக்கிளில் என்னையும் ஏற்றிச்சென்று உறவினர் வீட்டில் விட்டான்.

அவர்பிரிவால் ஆன்மீகம் அறிவுலகம் அழுகிறதே !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்

 மெல்பேண் ... அவுஸ்திரேலியா  


  

 ஆன்மீகம் தளைப்பதற்கு அறவுரைகள் வழங்கிநின்றார்


  
ஆங்கிலமும் சங்கதமும் அருந்தமிழும் பிணைத்துநின்றார் 
  
மேன்மைமிகு  கீதையொடு மிகச்சிறந்த வள்ளுவத்தை 
  
ஆதாரமாய் கொண்டார் அரனடியைச் சரண்புகுந்தார்  

  
வேதபுரி தேர்ந்தெடுத்து தாமமர்ந்தார் சுவாமிகளும் 
  
நாதமுடை ஓம்காரம் நற்பெயராய் ஆக்கிநின்றார் 
  
பூதலத்தில் பொய்யகல வாய்மைநிறை வள்ளுவத்தை
  
ஓதிநின்றார் காதலுடன் உரைத்திட்டார் உணர்வுடனே 

  
அறமதனை அகமிருத்தி அவர்பணிகள் ஆற்றினரே


  
சகமனிதர் நலன்காக்கும் சன்மார்க்கம் காத்தனரே 
  
பலகருத்தைப் பக்குவாய் பகர்ந்தாரே பலவிடங்கள்
  
பத்திரமாய் இருப்பதற்கும் கொடுத்தாரே எழுத்துருவில

படித்தோம் சொல்கின்றோம் : ஜீவநதி – ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ் இருபது ஆண்டுகால நாவல்களின் அறிமுகத்தை விமர்சனப்பாங்கில் பதிவுசெய்யும் அரிய முயற்சி முருகபூபதி


தமிழ் நாவல் நூற்றாண்டு காலம்  1976 இல்  வந்தபோது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவர் இலக்கிய விமர்சகர் பேராசிரியர் கைலாசபதி இரண்டு நாட்கள் ஆய்வரங்குகளை நடத்தினார்.

அக்காலப்பகுதியில்  தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறாண்டு பிறந்துவிட்டது என்ற தகவல் தமிழகத்திற்கும் தெரியாதிருந்தது. அப்போது அங்கே முதல்வராக இருந்தவர் பல நாவல்கள் எழுதிய கலைஞர் கருணாநிதி.

பின்னாளில் சிட்டி சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் இணைந்து தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலை எழுதினார்கள்.

அதற்கு முன்பே,  இலங்கையில் கலாநிதி நா. சுப்பிரமணியன் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலையும் வீரகேசரி பிரசுர நாவல்கள் பற்றிய மதிப்பீட்டு நூலையும் எழுதிவிட்டார்.

ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என்ற நூலை சில்லையூர்


செல்வராசன் 1967 ஆம் ஆண்டளவில் எழுதி வெளியிட்டுள்ளார்.

கைலாசபதியும் 1968 இல் தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலை எழுதியதையடுத்து, தமிழக விமர்சகர் வெங்கட் சாமிநாதன், அதற்கு எதிர்வினையாற்றி மார்க்ஸீயக் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற விமர்சனத்தை நடை இதழில் எழுதினார்.

அதனை இலங்கையில் பூரணி காலாண்டிதழ் மறுபிரசுரம் செய்ததையடுத்து, பேராசிரியர் நுஃமானும் அதற்கு நீண்ட எதிர்வினையை மல்லிகையில் தொடராக எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக மு. பொன்னம்பலமும் மல்லிகையில் ஒரு கட்டுரையை எழுதினார். 

சில பதிப்புகளைக்கண்டுள்ள கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் நூல் கடந்த 2018 ஆம் ஆண்டிலும் மற்றும் ஒரு பதிப்பினைக்கண்டது. இந்த புதிய பதிப்பினை காலச்சுவடு வெளியிட்டது.

நூலகர் நடராஜா செல்வராஜா, ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு என்ற விரிவான நூலை கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

இத்தகைய இலக்கிய வரலாற்றுப்பின்னணியுடன் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளிவரும் ஜீவநதி மாத இதழ், தனது 150 ஆவது இதழாக ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழை 475 பக்கங்களில் பெறுமதி மிக்க ஆவணமாகவே வெளியிட்டுள்ளது.

சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் இலட்சர்சனை

 


மே மாதம் 16ம் திகதி உலகமக்கள் எல்லோரும் நலம் பெறவும் குறிப்பாக இந்தியா இலங்கையில் உள்ள எமது சகோதரங்கள் corona pandamicல் இருந்து மீளவும் சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் காலையில் இருந்து இலட்சர்சனை நடைபெற்றது.

இந்த நேரத்தில் நாம் எல்லோரும் இறைவனை பிரர்த்திப்போம் எல்லோரும் நலம் பெற.


என் அம்மா பொன் குலேந்திரன் (மிசிசாகா ,. ஒன்றாரியோ, கனடா

.

என்  பழைய  நினிவுகளை  மீட் ட போது  என் வாழ்வில்  நடந்த  ஒரு சம்பவம்  என்  அம்மாவின்  பாசத்தை  என்  மனதில் மீட்டது

என் குடும்பத்தில் அம்மா. அப்பா, அக்கா,.அண்ணா,  மாமா .அம்மம்மா . முத்து ஆகிய நான் குடும்பத்தில் சிறியவன் .கடை குட்டி பயல்  ஒன்பதாம் வகுப்பில் படித்த காலம் அது . ஐம்பதில்    சிவாஜி  கணேசன் முதலில் நடித்த  பராசக்தி படம்  வந்திருந்த  காலம்  அந்த படத்தை  என் இரு  நண்பர்கள் பார்த்து விட்டு அதில்   வந்த  வசனங்களை    திருப்பி திருப்பி  எனக்கு  சொல்லியது  பாரசக்தி   படம் பார்க்க  தூண்டிற்று  அப்போது  இருந்த யாழ்ப்பாணம்  வெலிங்டன்   தகர  சுவர்கள்   உள்ள  சினிமா   தியேட்டரில்   வாங்கில்  இருந்து  பார்க்க 1950 இல்   கலரி 55 சதம் அது பெரிய காசு   அந்த  லகாலத்தி;   முட்டை தேங்காய் ஒன்று ரெண்டு சதம் இப்ப அந்த இரண்டு சதம்  புலக்கத்தில்  இல்லை

 நான் இரண்டாம் கிளலாசில் இருந்து படம் பார்ப்பது வாழக்கம். அப்போது   இரண்டாம் கிளலாசில் கதிரையில் இருந்து பார்க்க ஒரு ரூபாய் ஐம்பத்தைந்தைது சதம்  என் அப்பா கக்செரியில் வேலை    அவர் மாத  முடிப்வில்  சம்பளம் கிடைத்த வுடன்   எனக்கு  ஒரு  ரூபாய்  என் மாத பாக்கெட் செலவுக்கு  தருவார்  அதை    நம்பி வாழ்தவன்  நான்    அந்த  பணந்தில் அம்புலிமாமா என்ற  சிறுவர் சஞ்சிகை  . ஐஸ் கீறீம். சூசியம்  கடலை. கொய்யா பழம்  போன்ற  நொட்டு தீன்கள் வாங்குவேன்  சில சமயம்அம்மம்மாவுக்கு   சுருட்டு வாங்கி வந்து  கொடுதாதல் பத்து சதம் தருவாள்  அது மாதம் மூன்று தடவைகள் அவளிடம் இருந்து  எனக்கு வரும் வருமானம்

****

பரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் தினம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
          மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்               மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 

  
வாழ்கையில் வசதியாய் வாழ்வதற்கு நல்ல வேலை ஒன்று கிடைக்க வேண்டும் என்று விரும்புவது எல்லோரதும் இயல்பு எனலாம். அப்படிக் கிடைக்கும் வேலையில் நல்ல ஓய்வு கிடைக்க வேண்டும். மன உழைச்சல் தருகின்ற வேலையாக இருக்கக் கூடாது. வேலைக்குப் போனால் மன நிறைவாய் மகிழ்ச்சியாய் எந்தவொரு சங்கடமும் இல்லாமல் வீட்டுக்கு வரும் வண்ணமான வேலையாக இருக்க வேண்டும். இப்படித்தான் பெரும்பாலான வர்களின் விருப்பமும் சிந்தனையும் அமைந்திருக்கிறது என்பது நிதர்சன மாகும்.ஆனால் சில வேலைகள் அப்படி அமைந்து விடுவதில்லை. அப்படியான வேலைகளை ஏற்றுக்கொண்டு பொறுமையென்னும்                      நகையணிந்து
,  புன்னகை என்னும்நன்னகை  
அணிந்து,  அன்பாய்,  அரவணைப்பாய்ஆறுதலாய்பக்குவமாய் ஆத்மார்த்தமாய் தொழிலென்று எண்ணாமல் தூய பணியினை ஆற்றுகின்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆற்றும் பணிதான் 'தாதியர்' பணியாகும். தாதியர் பணி என்பது தொழிலல்ல ! அது உன்னத சேவையே யாகும். அப்படி உன்னத பணியினை ஆற்றி வருகின்ற அந்த தொண்டு உள்ளங்களை - அனைவரும் நினைத்துப் பார்த்திடுவது என்பது மனிதாபமான புனித நிலையாகும் என்பதை மனமிருத்துதல் அவசியம் அல்லவா !

ட்யூன் - குறும்படம் ஒரு பார்வை - கானா பிரபா

 


இந்தியத் திரைமொழிக்கே உரித்தானது பாட்டு.

இதற்குள் அன்பு, பாசம், கோபம், தாபம், விரக்தி எல்லாவற்றையுமே அடக்கி விடலாம். ஆகவே பாடல் என்பது உணர்ச்சியின் இசைப் பரிமாணம், இதற்குள் பந்த பாசங்கள் எல்லாமே பின்னிப் பிணைந்திருக்கும், ஐந்து நிமிடத்துக்கு மிகாத பாட்டுக்குள் விக்ரமனின் படம் மாதிரி ஒரு கதைப் போக்கையே மாற்றி விடலாம் என்பது வேறு விஷயம்.
சந்தோஷ் நாராயணனின் “ட்யூன்” குறும்படத்தைப் பார்த்த போது ஏன் அவர் பாடல்களை அடி நாதமாகக் கொண்டு இந்தப் படைப்பைப் பின்னியிருக்கிறார் என்ற சிந்தனை எழுந்த போது இந்த மாதிரியானதொரு கண்ணோட்டத்தைத் தான் விதைத்தது.
இதற்கு மேல் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகளின் வருகை, அவர்கள் வழியாகச் சொல்லப்படும் செய்தி எல்லாம் தொக்கி நிற்கின்றது.
குறும்படம் என்ற வகையில் மிகக் கச்சிதமாகக் காட்சிப் போக்குக் கையாளப்பட்டிருக்கின்றது. நாடகத் தன்மை தவிர்க்கப்பட்டிருக்கின்றது, குழந்தைகள் நடிக்கிறார்களா? அவர்கள் போக்கிலேயே விட்டுப் படமாக்கியதாகத் தெரிகின்றது.
கே.டி.குஞ்சுமோன் போன்ற தயாரிப்பாளரைத் தேடாமல்
கேடி கொரோனா ஊரை ஆட்டிக் கொண்டிருந்த சமயம் பார்த்து ஒரு குடிசைக் கைத்தொழில் முயற்சியாக சந்தோஷ் இந்தப் படைப்பை எடுத்து முடித்திருக்கின்றார்.
“மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு” பட ஓட்டத்தில் திடீரென்று இந்தப் பாடல் பீறிடும் போதே வேற்றுக்கிரகவாசிகள் அதிசயிக்காமல் என்ன என்பது மாதிரியான பிரமாண்டத்தைக் கொட்டுகிறது. கதையோட்டத்துக்குத் தொடர்ந்த பாடல் தேர்வுகளும் நச்.
கொரோனா காலம் குடும்ப உறவுகளின் நெருக்கத்தைச் சற்றுக் கூடுதலாகவே உணர வைத்தது. இப்படியான படைப்புகளும் வர ஏதுவாகியது. இந்தப் படைப்போ அந்த நெருக்கத்தின் தேவையை இசை முலாம் பூசிக் காட்டுகிறது.

உச்சி வகுந்தெடுத்துபிச்சிப்பூ வச்ச கிளி..... கானா பிரபா


இறுகிப் போன மன நிலையில் தன் மன ஆற்றாமையைப் பாடல் வழியாக வடிகால் தேட முனையும் ஒருவனின் உணர்வு எப்படியிருக்கும்?
அதையே தான் எஸ்பிபி இந்தப் பாடலின் வழி பிரசவிக்கின்றார்.
“உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி” அந்தத் தொடக்கமே உள்ளிருக்கும் பெருமூச்சைக் கக்குமாற் போல.
ஒரு பாடகனாக மட்டுமன்றி அந்தப் பாத்திரத்தின் மனவுணர்வைக் கேட்பவருக்குக் கடத்தி ஒரு பெருமூச்சைப் பிறக்க வைக்கிறாரே
அங்கே தான் எஸ்பிபி என்ற மகா கலைஞனின் சக்தி பொங்கிப் பிரவாகிக்கின்றது. இங்கே எந்த விதமான சங்கதிகளோ, குரல் பரிமாணமோ அன்றி வெறும் தட்டையாகவே தன்னுணர்வை அவர் பரிமாறுகின்றார்.
எடுத்த எடுப்பிலேயே தன் மனைவியின் அழகலங்காரத்தைச் சீவி முடித்துப் பின்னி முடித்து விட்டுத் தான் விஷயத்துக்கு வருகிறார்.
“பச்சமலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க”
“பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க”
“கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க”
“செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க”
எங்காவது அவன் ஊரார் கதையை நம்புகிறானா பாருங்கள்?
“சொன்னாங்க” என்று சொல்லி அதைக் கட்டுக்கதை என்று சப்பைக்கட்டுக் கட்டு வேறு கட்டுகிறான் பாருங்கள்.
அந்த ஒவ்வொரு அடியிலும் தன் மனைவியை மேம்படுத்தியே
தொடக்கி வைத்து ஊரார் பழியைத் துடைக்க முற்படுகின்றான்.
“எங்கை மேய்ஞ்சுட்டு வாறாய்” என்று ஊர்ச் சொலவாடை உண்டு.
இங்கே பாடலாசிரியரும் அவ்விதமே “மேயுதுன்னு” என்று எடுத்தாள்கிறார்.

அமெரிக்காவில் பூரி செய்த காலம் - டாக்டர் கல்யாணி நித்யானந்தன்,

 .

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

அது 1964, மார்ச் மாதம். என் மேற்படிப்புத் தேர்வை முடித்து, முடிவுகள் வெளியாகக் காத்திருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அந்தப் ‘பன்னாட்டு வாழ்க்கையும் பரிமாற்றமும்’ என்கிற விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்திருந்தேன். தேர்வு மும்முரத்தில் அதைப் பற்றி மறந்தேவிட்டேன். இப்போது பாஸா, ஃபெயிலா என்று மனத்தின் நகங்களைக் கடித்துக்கொண்டிருக்கும்போதுதான் அந்தக் கடிதம் வந்தது. இப்போது ஒட்டிக்கு ரெட்டியாக எதிர்பார்ப்புகள். முதலாவது சாதகமாக வந்துவிட்டது. அதாவது நான் பாஸ். இரண்டாவது பற்றி ஒரு சந்தேகம். அந்தக் கடிதத்தில் என்னை முதற் சுற்றில் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், நேர்முகத் தேர்வுக்கு வரும்படி தேதி குறித்திருந்தார்கள். என் வயது 25-க்கு மேலாயிற்றே. முதல் சுற்றில் வயதைக் கவனிக்காமலா இருந்திருப்பார்கள். போய்த்தான் பார்ப்போமே என்று நேர்காணலுக்குப் போனேன்.

இந்தியாவிலிருந்து மூன்று குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், பலர் 19 - 21 வயதுக்காரர்கள் ஆக இருப்பதால், குழுக்களுக்குத் தலைவர்களாகச் சற்று முதிர்ச்சியும் அனுபவமும் உள்ள மூவரைத் தேர்ந்து எடுத்திருப்பதாகவும், அதில் நான் ஒருவர் என்றும் கூறினர். பிறகென்ன, என் இரண்டாவது எதிர்பார்ப்பும் நிறைவேறிவிட்டது.

முள்ளிவாய்க்கால் படுகொலைத் தினத்தை நினைத்து……

 







 












பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

  



இனவழிப்புப் பெருமளவில் நிகழ்ந்த நாளில்

   எத்தனையோ ஆயிரமா யிரவுயிர் களந்தோ

நனவுநிலை தனிலேதுடி துடித்து உடல்கள்

   நாலுபக்கம் சிதறுண்டு மடிந்த தம்மா!

தினமேங்கி யேங்கிவாழ்ந்து முள்ளி வாய்க்கால்

   சிறியநிலப் பரப்பிற்குள் செத்தவு றவுகளை

மனமுருகி நினைவுகூரல் மனிதம் அன்றோ?

   மனுநீதிப் பரிகாரம் என்றுசாத் தியமோ?.

 

 

முள்ளிவாய்க்கால் கண்டபெரும் அழிவு நடந்து

   மூநான்கு ஆண்டந்தோ கடந்த தம்மா!

தள்ளிவரும் தீர்ப்புநாள் என்று வருமோ?

   தாளாத துயர்சுமந்தோர் நிலையைக் கண்டு

எள்ளிநகை ஆடிவரும் எதிரிக் கெதிராய்

   இறைவனவன் தீர்ப்பளிக்கத் தாமத மேனோ?

கொள்ளிவைக்க எவருமின்றிச் செத்தோர்க் காகக்

   குவலயத்துத் தமிழரெலாம் கூடித் தொழுவீர்!

 

 

ஒருபாவம் இழைக்காஅப்  பாவி மக்கள்

   ஒருநொடியில் உயிரிழந்தார் தீயோர் கையால்

தெருநாயைச் சுடுவதுபோல் இரக்க மின்றித்

   தேடிநின்று தமிழர்களைக் கொன்று குவித்தார்

கருத்தரித்த நாளன்றே இறப்பினைக் கடவுள்

   கணக்கிட்டா புவிதன்னிற் பிறக்க வைத்தார்?

பெருமனத்தொடு இறந்தோர்க்கு ஞாபகச் சின்னம்

   பிரியமொடு நிறுவினோரைப் போற்று வோமே!



 

ஸ்வீட் சிக்ஸ்டி 11- அரசிளங்குமரி - ச சுந்தரதாஸ்

 .

தமிழ் திரைப்பட தயாரிப்பில் முன்னோடிகளாக செயற்பட்டவர்கள் சோமு, மொஹிதீன் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் நடத்திய ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் எம்ஜிஆருக்கு கதாநாயகனாக நடிக்கும் முதல் சந்தர்ப்பத்தை வழங்கியது. கருணாநிதி வசனகர்த்தாவாக அறிமுகமானதும் ஜூபிடர் மூலமாகத்தான். இன்னும் ஏராளமான நடிகர்கள் கலைஞர்கள் இந்த நிறுவனம் மூலமே சினிமாவில் நுழைந்து ஏற்றம் பெற்றார்கள். ஜூபிடர் தயாரித்த கண்ணகி குபேர குசேலா, அபிமன்யு , மேனகா போன்ற பல படங்கள் வெற்றி பெற்றன. எம் எஸ் விஸ்வநாதன் கண்ணதாசன் இருவருக்கும் முதல்தடவை இசையமைக்க, பாட்டு எழுத இடமளித்ததும் ஜூபிடரே.

ராஜகுமாரி படத்தின் மூலம் எம்ஜிஆரை முதல் தடவையாக கதாநாயகனாக அறிமுகம் செய்த சோமு, முகைதீன் காலமானதை அடுத்து தனித்து ஜூபிடரை நடத்தி வந்தார். 1956 ஆம் ஆண்டளவில் அதுவரை தமிழ்த் திரையுலகில் யாரும் செய்யத் துணியாத வேலையை செய்யத் துணிந்தார் அவர்.

எம் ஜி ஆரின் நடிப்பில் அரசிளங்குமரி, சிவாஜியின் நடிப்பில் தங்கப்பதுமை ஜெமினியின் நடிப்பில் எல்லோரும் இந்நாட்டு மன்னர், டி ஆர் மகாலிங்கம் நடிப்பில் அமுதவல்லி என்று நான்கு படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க தொடங்கினார்சோமு.

எம் ஜி ஆர் கதாநாயகனாகவும், அவரின் தங்கையாக பத்மினியும் அவர் கணவனாக நம்பியாரும் இவர்களுடன் தங்கவேலு ,முத்துராமன், ராஜசுலோசனா என்று பலரும் படத்தில் இடம் பெற்றார்கள். கலைஞர் கருணாநிதி படத்தின் கதை வசனத்தை எழுதினார். இசை அமைப்பை ஜி ராமநாதன் ஏற்றுக் கொண்டார்.

விவசாயியான கதாநாயகனின் தங்கையை இளவரசன் ஒருவன் ஏமாற்றி கைவிட்டு விடுகிறான். அவனை தேடி தங்கை நகரத்திற்கு வர அவளைத் தேடி அவளின் அண்ணனும் வருகிறான். இருவரும் பல இன்னல்களை சந்தித்து தங்கள் நோக்கத்தில் இறுதியில் வெற்றி அடைகிறார்கள்.


திருஞானசம்பந்த நாயனார் குருபூசையும் தேவார முற்றோதலும் 28/05/2021

 


Sri Vakrathunda Vinayagar Temple 1292 Mountain Hwy, The Basin VIC 3154

Inbox



இலங்கைச் செய்திகள்

 அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போவதில்லை

வவுனியாவில், வறுமையிலும் கலைத்துறையில் சாதனை படைத்த பரமசிவம் சுபிலக்ஷி

யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட கொரோனா சிகிச்சை விடுதி

கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 11 கோடி ரூபாய் செலவில் கட்டில்கள்

பொதுபலசேனாவின் செயற்பாடு - அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைத்ததும் ஒரு யுத்தப் பிரகடனம் தான் - தமிழ் சொலிடாரிட்டி


அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போவதில்லை

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஒருபோதும் ஏமாற்றப்பட போவதில்லை. என்னுடன் அவர்கள் துணிந்து நின்று செயலாற்ற முடியும்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்காக உயிரையும்கொடுக்க தயாராக இருக்கின்றேன். தேர்தலிலே பாராளுமன்ற வாய்ப்பை இழந்ததென்பது பாரிய இழப்பு என்றுதான் கூற வேண்டும். ஆனால் இம்மக்கள் ஏமாற்றப்படவில்லை. இவ்வாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சரும், பிரதமரின் விசேட இணைப்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா அம்மான்) தினகரனுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

இஸ்ரேல் - காசா மோதல் உக்கிரம்; 43 பலஸ்தீனர், 6 இஸ்ரேலியர் பலி 

காசாவில் தரைவழிப் படையெடுப்புக்கு இஸ்ரேல் தயார்: 115 பலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல் மீதான ரொக்கெட் வீச்சுக்கு இடையே காசா மீது தொடர்ந்து உக்கிர வான் தாக்குதல்

ஆப்கான் மாவட்டம் தலிபான்கள் வசம்

சீன - மேற்குலக உறவில் விரிசல்

லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டு வீச்சு


இஸ்ரேல் - காசா மோதல் உக்கிரம்; 43 பலஸ்தீனர், 6 இஸ்ரேலியர் பலி 

முழுவீச்சில் போர் வெடிக்கும் அச்சம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் காசா பகுதியில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இஸ்ரேலில் அறுவர் பலியாகியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வான் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.

இதில் இஸ்ரேலிய குண்டு வீடொன்றில் விழுந்ததில் காசா நகரின் டெல் அல் ஹாவா பகுதியைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது ஐந்து வயது ஆண் பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நோட்டுப்புத்தகத்துடன் அலைந்த பிஞ்சுப் பாதங்கள்: மறைந்த ஈரான் இயக்குநரின் மாஸ்டர் பீஸ் - ஆதி வள்ளியப்பன்

 .

ஈரானியத் திரைப்படங்களை உலகறியச் செய்த புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான அப்பாஸ் கிராஸ்தமி நம்மிடமிருந்து விடைபெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

தொடக்கக் காலத்தில் விளம்பரப் படங்களில் வடிவமைப்பு ஓவியராகப் பணிபுரியத் தொடங்கிய அவர், கவிதைகள் புனையக்கூடியவரும்கூட. குறும்படங்கள், ஆவணப்படங்கள் வழியாக திரையுலகுக்குள் நுழைந்த அவர், 20 ஆண்டுகளுக்கு மேல் ஆவணப்படத் துறையில் ஈடுபட்டார். பின்னர் திரைப்படங்களை எடுக்கத் தொடங்கினார். அதன் காரணமாகவே அவருடைய திரைப்படங்களில் ஆவணப்படத் தன்மையும் காணப்படும்.

1970இல் 'Bread and Alley' என்ற குறும்படம் அவருடைய முதல் திரை முயற்சி, எட்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்த 'Like Someone in Love' தான் அவருடைய கடைசிப் படம். 'Taste of Cherry' (கான் திரைப்பட விழா 'தங்கப்பனை' விருது பெற்றது), 'The wind will carry us', 'Through the Olive trees', 'Close up', 'Life and nothing more', 'Ten' ஆகியவை குறிப்பிடத்தக்க படங்கள்.

உலகளாவிய மனித மதிப்பீடுகள், உணர்வுகளைச் சொல்லும் அவருடைய திரைப்படங்கள் அதேநேரம் ஈரானியத் தன்மையையும் தக்க வைத்திருப்பவையாக இருந்தன. அவருடைய திரைப்படப் பாணி இத்தாலிய நவீன யதார்த்தவாத சாயல் கொண்டது. பெரும்பாலும் கிராமங்களைக் கதைக்களமாகக் கொண்ட அவருடைய திரைப்படங்கள் இழப்பு, வறுமையைச் சுற்றி அமைந்தவை. இந்தப் படங்களில் நம்பிக்கை இழப்பை நோக்கிய நகர்வு இருந்தாலும், மனிதர்கள் ஒருவர் மற்றவரிடையே காட்டும் அக்கறை, நம்பிக்கையின் மீதே கவனம் குவிக்கப்பட்டிருக்கும். உற்சாகம் குறைந்திருக்கும் அந்தச் சூழ்நிலைக்கு, அது ஒளியேற்றிவிடும்.

அகத்தில் வைத்துப் பூசிப்போம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்  மெல்பேண் ....அவுஸ்திரேலியா




    தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு

        தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்

        ஊணுறக்கம் தனைமறப்பாள் ஒருகணமும்  தனையெண்ணாள்

        தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !



    பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது

       கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள் 

       பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றவளும்

       துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

 

       உச்சிமுகந்திடுவாள் ஊரார் கண்படா  வண்ணம் 

       குட்டியாப் பொட்டுவைப்பாள் குழிவிழும் அக்கன்னமதில்

       கட்டியணைத் தணைத்து கற்கண்டே  எனவிழித்து

       தொட்டிலே இட்டபடி தூங்கத்தமிழ் பாடிநிற்பாள் !