தேர்தல் முடிவு பசுமைக் கட்சியிலும் சுயேட்சை உறுப்பினர்களுடமும் தங்கியுள்ளது.

.


கடந்த 70 ஆண்டுகளில் தேர்தல் முடிவு எந்தவொரு கட்சியும் 76
ஆசனங்களை எடுக்க முடியாமல்  போனது இதுவே முதல் தடடையாகும்.  யூலியா கிலாட் மக்களின் ஆதரவை நியூ சவுத் வேல்ஸ்சிலும் குயின்சிலாந்திலும் இள்ந்துவிட்டார் பசுமைக் கட்சியின் ஆதரவு   இம்முறை அதிகரித்துள்ளது.  அடுத்த பிரதமர் யார் என்பதை அறிய இரண்டு கிழமைகள் எடுக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை  77.8% எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்

கட்சி % வாக்குகள்SwingWonPredict
Labor               37.9-5.570
Coalition               44.0+1.872
Greens               11.5+3.71
Others                 6.6-0.14

ஓர் மடல் - கவிதை -எம்.ரிஷான் ஷெரீப்

.

*நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி
இங்கும் இல்லாமலில்லை அம்மா
ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி
புதிது புதிதாய்ச் செய்கிறார்கள்

விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால்
காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன
உறக்கமேயில்லாமல் இரவு முழுதும் ஆடுகிறேன்
காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன்

கீற்றில் எஸ்.பொ வின் கட்டுரைக்கு வந்த மாயவனின் குறிப்பு

.
சர்வதேச எழுத்தாளர்கள் ஒன்று கூடல்கள் சந்திப்பு சம்பந்தமாகக் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் பல்வேறு சஞ்சிகைகள், இணைய இதழ்களிலெல்லாம் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலெல்லாம் விரிவான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இவ்விதமானதொரு சூழலில் மதிப்புக்குரிய எஸ்.பொ.அவர்கள் இந்த மாநாடு சம்பந்தமாகத் தனது ஆதங்கங்களை வெளியிடுவதில் தவறெதுவுமில்லை. ஆனால் அவற்றை அவர் வெளியிட்ட விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாயில்லை. மேற்படி ஒன்றுகூடல் பற்றி செய்திகள் வந்திருக்கும்போதே அவர் தனது கண்டனத்தை வெளியிட்டிருக்க வேண்டும். ஏன் வெளியிடவில்லை.

வாழ்நாளில் தெரியும் இரண்டு சந்திரன்கள் -செ. பாஸ்கரன்

.
நம் வாழ்நாளில் இரண்டு சந்திரனை வானில் காணக்கூடிய சந்தர்ப்பம் எதிர் வரும் 27 ம் திகதி கிடைக்க உள்ளது. உலகமே இந்நாளுக்காக காத்திருக்கிறது. அதி தூரத்திற்கு அப்பால் இருக்கும் செவ்வாய் கிரகம் அன்றைய தினம் பூமிக்கு மிக அண்மையில் வருவதால் அதி பிரகாசமாகவும் அதி பெரிதாகவும் தெரியும் என எதிர் பார்க்க படுகிறது.

சிட்னி தமிழர் மானம் கப்பலேறுகிறது

.


ஒஸ்ரேலியாவில் இடம் பெற்ற மிகப் பெரிய கிறடிற் காட் மோசடியில் 20 பேர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்கள் என்றும் இதில் 19 பேர் இலங்கைத் தமிழர்கள் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாக யாகூ நியூஸ் தெரிவித்திருக்கிறது. 6.5 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் இந்தக் கும்பலால் கையாடப்பட்டதாக குறிப்பிடுகின்றார் அசிஸ்டன் கொமிசனரான நிக் அன்ரிசிச்.

மெல்பேனில் பொப்பிசை பொழுது

.



திருடர்கள் - அ. முத்துலிங்கம்

.

என்னை ஆப்பிரிக்காவுக்கு அழைத்த கம்பனியில் நான் சேர்ந்த ஒன்றிரண்டு வாரங்களுக்குள்ளாகவே அங்கே பெரிய திருட்டுகள் நடப்பதை கண்டு பிடித்தேன். கண்டுபிடித்தேன் என்றால் திருடர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கவில்லை. களவுகள் நடப்பதை ஊகித்தேன். ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ்காரரால் ஆரம்பிக்கப்பட்ட மரம் ஏற்றுமதிசெய்யும் கம்பனி அது. காட்டுமரங்களை வெட்டி அதில் நல்ல மரங்களை இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளுக்கு அனுப்பும் வியாபாரம். மீதி மரங்களை உள்நாட்டில் விற்றார்கள். இன்னும் சில மரங்களில் தளவாடங்கள் செய்தார்கள். இந்தக் கம்பனியில்தான் பிரதம கணக்காளராக எனக்கு வேலை கிடைத்திருந்தது.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்

International Tamil Writers Forum

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்


3B,46th Lane, Colombo-06,                 P.O.BOX 350,Craigieburn,Vic-3064
SRILANKA                                         AUSTRALIA
T.Ph: O11 2586013 (Srilanka)               T.Ph: 00 61 3 9308 1484 (Australia)
E.Mail:international.twfes@yahoo.com.au
21-08-2010

அன்புடையீர் வணக்கம்.
எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் அடுத்த ஆண்டு (2011) ஜனவரி மாதம் முற்பகுதியில் நான்கு நாட்கள் இலங்கையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான விரிவான ஆலோசனைக்கூட்டம் கடந்த 03-01-2010 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், வானொலி தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள், பயிற்சிப்பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து சிறப்பித்து கருத்துக்களை பயனுள்ளமுறையில் பகிர்ந்துகொண்டனர்.

கை மேல் பலன் கிடைத்தது ! - குட்டிக் கதை

.
                                                                                                         ந. உதயகுமார்

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

களவாணி – இப்படியொரு படம் பார்த்து எத்தனை நாளாச்சு!

.



நடிப்பு: விமல், ஓவியா, இளவரசு, சரண்யா, கஞ்சா கருப்பு, திருமுருகன்
இசை: எஸ்எஸ் குமரன்
ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்
தயாரிப்பு: நஸீர்
இயக்கம்: ஏ சற்குணம்
பிஆர்ஓ: நிகில்

விவசாயி மீது ஒட்டியிருக்கும் வயல்சேற்றைப் போல இயல்பான காதலைப் பார்த்து எத்தனை நாளாச்சு… மண்ணும் மனிதர்களும் இயல்பான வாழ்நிலையையும் திரையில் காண முடியாதா? என ஏக்கப் பெருமூச்சு விட்டவர்களுக்காகவே மண்வாசனையுடன் வந்திருக்கிற படம் களவாணி!

மருத மடு திருத்தலத்தின் விழா

.

இன்று இலங்கையின் கத்தோலிக்க மக்கள் மருத மடு திருத்தலத்தின் விழாவை மிக மிக விமரிசையாக கொண்டாடினார்கள். ஐந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த இலங்கை கத்தோலிக்க விசுவாசம் ஆரம்பத்தில் வேருன்றிய காலத்தில் மாந்தை பகுதியில் ஆரம்பித்த இவ் மரியாளின் வணக்கம் மருத மடுவில் வேதகலாபனை காரணமாய் நிலைபெற்று இன்று இலங்கை வாழ் மக்கள் யாவருக்கும் இன, மத பேதம் இன்றி பரந்துள்ளதுள்ளது

PERTH மாநகரில் இன்னிசை தென்றல்


.


புராதன இலங்கையில் பௌத்த பிக்குகளும் பௌத்த சங்கமும் - பாகம் 01

.
வட இந்தியாவில் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் பெரும் பேரரசை அமைத்த அசோகன் கலிங்கப்போரில் தனக்கேற்பட்ட துயர அனுபவங்களின் பின்னர் போரின் மூலம் நாடுகளை இணைத்துக் கொள்ளும் திக்விஜயத்தைக் கைவிட்டு அறவழியில் செல்லும் தர்மவிஜயத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்தான்.

தமிழ் சினிமா-தமன்னாவின் விலை ஒரு கோடி

.
*தமன்னாவின் விலை ஒரு கோடி!
*'காவலன்' ஆகியது 'காவல் காதல்'

*இந்தியாவின் முதல் விஞ்ஞானப்படம் எந்திரன் : ரஜனிகாந்த்


விஞ்ஞானத்தை தழுவிய பல படங்கள் இந்தியாவில் வெளிவந்திருந்தாலும் முழுக்க முழுக்க விஞ்ஞானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் முதல் படம் எந்திரன் ஒன்றே என உறுதியாகக் கூறுகிறேன் என்று, மும்பையில் நடைபெற்ற எந்திரன் (ரோபோ) பாடல்களின் வெளியீட்டு விழாவில் ரஜனி குறிப்பிட்டுள்ளார்.

ரயில் சிநேகிதம் ! நகைச்சுவைக் கவிதை

.





அன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...
'தர்மம் போடுங்க சாமியோவ்...!'
நன்றி உளறுவாயன்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு - பதில்

.

அன்புடையீர் வணக்கம்.
இலங்கையில் கொழும்பில் நாம் அடுத்த ஆண்டு (2011) நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே நான் பல பத்திகள் எழுதியிருக்கின்றேன்.
2009 ஆம் ஆண்டு நடந்த அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டத்திலும் தெரிவித்துள்ளேன்.

2009 ஆம் ஆண்டு வெளியான மல்;;லிகை 44 ஆவது ஆண்டு மலரில் நான் எழுதியிருந்த கட்டுரையிலும் பின்னர் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் மல்லிகை 45 ஆவது ஆண்டு மலரிலும் மகாநாட்டின் தேவை குறித்து விரிவான கட்டுரை எழுதியிருக்கின்றேன்.

பலராம் ஜயந்தி -ஹரே கிருஷ்ணா-

.
ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி

வைஷ்ணவர்கள் முழு நிலவு சிரவண மாதத்தை பலராம ஜயந்தியாக கொண்டாடுவது வழக்கம். இவர் கிருஷ்ணருக்கு 8 நாள் முன் அவதரித்தார். அவர் அவதரித்த நாள் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியில் வருகிறது, அதனால் இந்த வாரம் அவரின் அவதார சிறப்பையும், கிருஷ்ண - பலராம லீலைகளை பற்றியும் காண்போம்.

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 02

.
யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டபோது கைலாயவன்னியன் அவர்களுக்கு அடங்காமல் சுதந்திரமாக தனது பற்றுக்களைப் பரிபாலனம் செய்தான்.

பிறவன்னியர்கள் அவரைத் தமது தலைவராக ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே வன்னி நாடு கைலாயவன்னியன் நாடு என்று 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களாற் குறிப்பிடப்பட்டுள்ளது.

SYDNEY மாநகரில் அனுராதா ஸ்ரீராம்

.



என்றும் இளமையாகத் திகழ்வதற்கு...

.

வயோதிபர்களில் சிலர் வயதுபோனாலும் கூட இளமைத் தோற்றத்துடனும் திடகாத்திரமானவர்களாகவும் விளங்குவார்கள். அவர்களிடம் சென்று உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறும் பதில் சிறந்த உடற்பயிற்சியும் முறையான உணவு பழக்கவழக்கமும்தான் என்பதுதான்.

அயராது உழைக்கும் கலைஞன் ரகுநாதன்

.

                                                                                                                   முருகபூபதி


கலைஞர் ரகுநாதனை நான் முதல் முதலில் சந்தித்தது நேற்று நடந்த நிகழ்வுபோன்று இன்னமும் எனது மனதில் பசுமையாக பதிந்திருக்கிறது. சிலசமயம் நண்பர் ரகுநாதன் இந்நிகழ்வை மறந்திருக்கவும் கூடும்.

சுமார் 47 வருடங்களின் முன்னர் அவர் இலங்கையில் கொழும்பில் ஒரு அரசாங்கத்திணைக்களத்தில் பணியிலிருந்தார். ஒரு நாள் மதியம் நண்பர் மு.கனகராஜன் என்னையும் அழைத்துக்கொண்டு ரகுநாதனிடம் வந்தார். அங்கே கலைஞர் டீன்குமாரும் இன்னும் சிலரும் அச்சமயம் இலங்கையில் வெளியான ஒரு தமிழ்த்திரைப்படக்காட்சிகள் தொடர்பாக உரையாடிக்கொண்டிருந்தனர். அங்கே டீன்குமார்தான் அதிகமாகப்பேசினார். குறிப்பிட்ட படத்தைப்பற்றிய தமது கடுமையான விமர்சனங்களை மிகவும் கேலியாக முன்வைத்துக்கொண்டிருந்தார்.

ஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்

.


ஐயா,

மிகப்பெரும்பான்மையான வாக்குகள் பெற்று நீங்கள் தேர்ந்தேடுக்கப்பட்டதற்காக அமெரிக்க மக்களை நாங்கள் பாராட்டுகிறோம். அடிமைகளை அடக்கி ஆளுவதன்மூலம் ஆதிக்கம் செலுத்துவது என்னும் போக்கினை எதிர்த்து நிற்றல் உங்கள் முதல் தேர்தலின் தாரக மந்திரம் எனில், அடிமை முறைக்கு சாவுமணி அடித்தல் தங்களது மறுதேர்வின் போர்முழக்கம்.

பசுமைக் கட்சியின் (Greens) வேட்பாளர்கள் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களுடன் நடாத்திய பொதுக்கூட்டம்

.


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலை முன்னிட்டு Tamils for Greens என்னும் அமைப்பின் ஏற்பாட்டில், அவுஸ்திரேலிய அரசியலில் 3 வது பிரதான கட்சியான ”GREENS” (பசுமை) கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், வேட்பாளர்களும் நேற்று ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை கிளேட்டன் மொனாஸ் பல்கலைக்கழக ரொருன்டா மண்டபத்தில், மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களை, பொதுக் கூட்டமொன்றில் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயன்ற ஐவர் கைது

.

சட்டவிரோதமான முறை அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஐந்து பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரவில கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்த பின்னர் நாட்டில் இடம்பெற்று வந்த பாரிய மனித கடத்தல் நடவடிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் அதுல சேனரத்ன தெரிவித்தார். கடற்படையினர் தீடீர் சோதனை மேற்கொண்ட போது மனித கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரும் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் அவுஸ்ரேலியாவுக்கு பலநாள் மீன்பிடிக்கும் இயந்திரத்தின் மூலம் செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.