ஈழத்தில் திருப்பாவையும் ஆண்டாள் நாச்சியாரும்

 













மகாதேவ ஐயர் 
ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்  

மெல்பேண் .. அவுஸ்திரேலியா

 



  " மாதங்களில் நான் மார்கழி " என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். அந்த வாக்கை வைணவர்கள் மனங்கொண்டு மார்கழிமுழுவதையும் வழிபாட்டுக்கு உரிய மாதமாக்கி விட்டார்கள் என்றுதான் எண் ண வேண்டி இருக்கிறது. மார்கழி என்றதும் சுப நிகழ்ச்சிகளைச் செய்வதை பொதுவாகவே இந்துக்கள் தவிர்த்துக் கொள்ளுகிறார்கள்.இந்த நிலை ஈழத்திலும் காணப்படுகிறது.

திருமணம், வீடு குடுபுகுதல், காதுகுத்தல், ஏடுதொடக்குதல் முதலான சுப விஷயங்களை மார்கழியில் செய்வதை தவிர்த்து விடுகிறார்கள். அப்படித் தவிர்ப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் - மார்கழி பீடை பிடித்த மாதம் என்பதே ஆகும். ஆனால் உண்மையில் மார்கழி பீடுடைய மாதமே என்பதை மனமிருத் தத் தவறி விடுகின்றனர்.

   மார்கழி தேவ வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பதாலேயே அதில் மக்களுக்கான விழாக்களைத் தவிர்த்தார்கள் என்பதுதான் உண்மையாகும்.

மார்கழியில்த்தான் திருப்பாவை , திருவெம்பாவை, பாடப்படுகிறது. ஆருர்த்தா தரிசனம், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறத்தல்,போன்ற முக்கிய தெய்வ வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இந்தவ கையில் மணிவாசகப் பெருமானும் ஆண்டாள் நாச்சியாரும் சைவர்களாலும், வைணவர்களாலும் ஏற் றிப் போற்றி வணங்குதலுக்கு ஆளாகி இருப்பதையும் காண்கின்றோம்.

   மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவை பற்றி ஈழத்தவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். ஈழத்தில் இருக்கும் சைவக் கோவில்கள் பெரியனவாக இருந்தாலும், சிறியனவாக இருந்தாலும், அங் கெல்லம் மார்கழியில் திருவெம்பாவை மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும்.

காலையில் அதுவும் மிகவும் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சியுடன் ஆரம்பித்து திருவெம்பாவை பாடல்முழுவதும் பாடி கோவிலில் பூஜை வழிபாடு நிறைவு பெறும்.

கெடுதலில்லாத தொழில் செய் - அன்பு ஜெயா கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் விருத்தம்

 

எங்கெங்கே திரும்பினாலும் புகைதான் வானில்,

    எக்காலம் முடியுமிந்த இழிவாம் செய்கை?

தங்களது தொழில்மட்டும் செழிக்க எண்ணித்

    தந்நலமே கருதிடுவோர் திருந்து வாரோ!

தங்களது நலம்மட்டும் நினைப்போர் தம்மின்

    தந்நலத்தை வேரறுத்து புவியைக் காப்போம்!

மங்கிவரும் மக்கள்தம் நலம்தான் அன்று

    மாசின்றி இவ்வுலகில் சிறப்பாய் மாறும்! (1)

 

இன்றுநீயும் தொழில்செய்ய விருப்பம் கொண்டால்

    இனிமையான தொழில்களிங்கே மிகையாய் உண்டே;

தொன்றுதொட்டு நம்மக்கள் நலமே காக்கும்

    தொழில்களையும் தெரிவுசெய்தே வளமாய் வாழ்வாய்!

நன்றாய்நம் முன்னோர்கள் வழியில் சென்று

    நம்மாழ்வார் போல்நாட்டை நலமாய்க் காப்பாய்;

இன்றேநீ ஏற்றிடுவாய் உறுதி தன்னை

    இவ்வுலகின் நலமேயென் வழிதான் என்றே! (2)

 

கல்விப் பின்புலத்தில் படைப்பிலக்கியவாதியாகத் திகழும் தன்னார்வத் தொண்டர் ராணி சீதரன் ! முருகபூபதி


சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேச வைப்பதுமே ஒரு படைப்பிலக்கியவாதியின் பிரதான கடமை.  இக்கடமையை தனது ஆசிரியப்பணியின் ஊடாகவும்,  கலை, இலக்கிய செயற்பாடுகளின் மூலமும்  மேற்கொண்டு வருபவர்  சகோதரி திருமதி ராணி சீதரன் அவர்கள்.

இவர் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, சண்முகதாஸ் முதலானவர்களின்  அபிமானத்திற்குரிய மாணவியாகத் திகழ்ந்தவர்.

அவர்களும்  எமது சமூகத்தில் கல்வி மற்றும் கலை, இலக்கியத்துறையில் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள்.  அவர்களின் நிழலில் வளர்ந்திருக்கும்  ராணி சீதரன்,  தன்னையும்  இந்தத்துறையில்  ஆளுமையாக்கிக்கொண்டிருக்கிறார்.

தான் கற்றதையும் பெற்றதையும்  தனது சமூகத்திற்கு


உரியமுறையில் வழங்குவதற்கு இவர் தேர்ந்தெடுத்த துறைகள்தான் கல்வியும், கலை, இலக்கியமும்..

 ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக  ,
 தேசிய கல்வி நிறுவகத்தின்  தமிழ்த்துறையில்  சிரேஸ்ட விரிவுரையாளராக  தன்னை வளர்த்துக்கொண்டவர்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் தொடர்ந்தும் எழுதிவருபவர். அத்துடன் கவியரங்குகளிலும் பங்குபற்றி வருபவர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து  மூன்று தசாப்த காலமாக 24 மணிநேரமும் ஒலிக்கும் இன்பத்தமிழ் வானொலியை நடத்திவருபவர் திரு. பாலசிங்கம் பிரபாகரன். இந்த வானொலி  சில வருடங்களுக்கு முன்னர் சித்திரை விழாவை மு;ன்னிட்டு மெய்நிகர் ஊடாக நடத்திய பன்னாட்டுக்கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கில்  ராணி சீதரனும் பங்கேற்று  பாராட்டுச்சான்றிதழ் பெற்றிருந்தார்.

அந்தப்போட்டியில் இவரைத் தேர்ந்தெடுத்தவர் தமிழகத்தின் சிறந்த கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான சினேகன். இந்நிகழ்வில் திரைப்பட கலைஞர் நெப்போலியனும் பங்கேற்று, ராணி சீதரனை பாராட்டியிருந்தார்.

எழுத்துலகில் வாழ்ந்தவாறு வான் அலைகளிலும் தனது குரலை ஒலித்தவர் ராணி சீதரன்.

ஆக்க இலக்கிய எழுத்துப்பணியில் இவர் இதுவரையில் வரவாக்கியிருக்கும் நூல்கள் வருமாறு:

சிறுகதைத் தொகுப்புகள் : மாங்கல்யம் தந்து நீயே,
கன்னியா தானம், நடுகல், நிலவும் சுடும்.

தேன்சிட்டு ( சிறுவர் பாடல் )

வாழ்க்கைப்பயணத்தில் கனவுகளை நனவாக்கிய விலங்கு மருத்துவர் நடேசனுக்கு இம்மாதம் 70 வயது !! தன்னார்வத் தொண்டர் இலக்கியவாதியான கதை !! முருகபூபதி


இலங்கை வடபுலத்தில்   ஐந்து தீவுகள்   சங்கமமாகும்  இந்து சமுத்திரக்கரையோரத்தில்   ஒரு  காலத்தில்    விரல்விட்டு  எண்ணக்கூடியளவு   வாழ்ந்த   மக்களின்  பூர்வீகம் எழுவைதீவு     கிராமம்.

பனையும்  தென்னையும்   பயன்தரு   மரங்களும்   மட்டுமல்ல  ஆர்ப்பரிக்கும் கடலின்  உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு  வாழ்வளித்தன.

ஒருகாலத்தில்   தீப்பெட்டிக்கும்  எண்ணெய்க்கும்  உப்புக்கும்  மாத்திரம்  கடைகளை   நாடிச்சென்ற  அந்தச்சிற்றூர்  மக்களுக்கும் கனவுகள்  இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து   மக்களுக்கு தமது       பிள்ளைகளின் எதிர்காலம்   குறித்து   கனவுகளும் அக்கறையும்        இருந்தன.

எழுவைதீவு  கிராமத்தில் ஒரு   சாதாரண குடும்பத்தில் 1954 ஆம்


ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி  பிறந்து, படிப்படியாக        கல்வியில்  உயர்ந்து,  தான்  பிறந்த  ஊருக்குப்பெருமை  சேர்த்தவர்தான்                 விலங்கு மருத்துவர்   நடேசன்.

இம்மாதம் இவருக்கு 70 வயதாகிறது. அதனை முன்னிட்டு, இவரது வாழ்வையும் பணிகளையும் பற்றிய எனது அவதானக்குறிப்புகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

ஒருவரது   வாழ்வு  கனவுகளுடன்தான்   ஆரம்பிக்கின்றது.  இளமைக்காலக்கனவுகள் , வளரும் பருவத்தில்  நனவாவது   குறிப்பிட்ட   பலருக்கு மாத்திரமே  சாத்தியம்!

மருத்துவமனை   வசதியே   இல்லாதிருந்த எழுவைதீவு மக்கள் ஒரு      காலத்தில்   படகில்சென்று,  அயலூர்   மருத்துவமனைகளில்தான்         சிகிச்சைபெற்றுவந்தனர்.


ர்ப்பிணிப்பெண்களும்   குழந்தைகளும் முதியவர்களும்   அவ்வாறு  அவதியுற்ற    காலத்தில் அங்கு  பிறந்த நடேசனின்   கனவு,    அவர்       கடல் கடந்து   அவுஸ்திரேலியா   வந்ததன்     பின்னர்தான்  நனவாகியது.   அதற்கான   வழித்தடத்தை  வழங்கிய   கங்காரு தேசத்திற்கு  நன்றி விசுவாசமாக  வாழ்ந்தவாறு, இங்கும்  பல      சமூகப்பணிகளை  முன்னெடுத்தவாறு  இலக்கியவாதியாகியிருக்கும் நடேசன்  தமிழ்நாட்டில் தஞ்சையில் தனது நாவலுக்காக கரிகாற்சோழன் விருதையும் பெற்றிருக்கிறார். அத்துடன் மேலும் சில இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

எழுவைதீவு மக்களுக்காக ஒரு மருத்துவ  மனையையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இலங்கையில் நீடித்த யுத்தம் முடிவுற்றதும், 2010 ஆம் ஆண்டு முற்பகுதியில் எழுவைதீவுக்கு இவர் சென்று குறிப்பிட்ட மருத்துவமனைக்கான தமது  பூர்வீக காணியை வழங்கினார்.  அந்தப்பயணத்தில் நானும், இங்கிலந்திலிருந்து வருகை தந்திருந்த பொறியியலாளர் திரு. சூரியசேகரம் அவர்களும் இணைந்துகொண்டோம்.

இந்தப் பயணம் குறித்து, ஏற்கனவே எனது பயணியின் பார்வையில் தொடரில் எழுதியிருக்கின்றேன்..

எழுவைதீவில் தனது  ஆரம்பக்கல்வியை முடித்துக்கொண்டு      யாழ்ப்பாணம்     இந்துக்கல்லூரியில்  மேலும் தொடர்ந்த நடேசன்,         உயர்தர வகுப்பில்   தேர்ச்சிபெற்று  பேராதனை   பல்கலைக்கழகத்தின்       விலங்கு மருத்துவ பீடத்தில்   தனது    மேற்கல்வியைத்      தொடர்ந்தார்.

இலட்சிய  நோக்கத்துடன்  வாழும்  ஒவ்வொருவரது  வாழ்விலும்  மூன்று அம்சங்கள்    தவிர்க்கமுடியாமல்   இரண்டறக் கலந்துவிடும்.

நின்றேனும் கொல்லும் தீங்கு (01): திகில் தொடர் - சங்கர சுப் பிரமணியன்.


இரவு பன்னிரெண்டு மணிக்கு ன்னும் சில 

மணித்துளிகளே உள்ளன. என்பதை 

கைக் கடிகாரத்தின் ரேடியம் மினுமினுப்பு தெளிவாகக்

காட்டியது. அமாவாசையின் கும்மிருட்டை

அந்தசாலையின் மின்  விளக்குகள் அதிகமாக விரட்ட முடியாமல் பனிமூட்டம் எங்கும் சூழ்ந்திருக்க 

சாலையில் யாருமேஇல்லாமல் வெறிச்சோடி இருந்தது.


கார் ஒரே சீரானவேகத்தில் செல்ல மரண அமைதியுடன்அந்த தெருகாட்சியளித்ததால் ஏதோ ஒரு விதமான

பயம் தொற்றிக்கொள்ள அதை விரட்ட முயன்றேன். என்ன செய்யலாம் என்று எண்ணியபோது காரின் 

சி.டி பிளேயரில்போட்டு வைத்திருந்த பழைய 

பாடல்கள் நினவுக்கு வந்தன. பயத்தை விரட்டியடிக்க பாடலைக் கேட்கலாம் என்று பிளேயரில் பாடலை ஓடவிட்டேன்


பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் "நானே.... வருவேன் 

அங்கும் இங்கும்யாரென்று.....யார்.....யாரறிவரோ?" என்ற பாடல் ஒலித்தது. யார் நீ? என்ற படத்தில் வெள்ளைப் புடவையுடன் கதாநாயகி லையை

விரித்துப் போட்டுக்கொண்டு வந்த காட்சியை  

நினைவூட்டி பயத்தை இன்னும் அதிகப் படுத்தவே 

சட்டென்று பாட்டை நிறித்தினேன்.  


மழை வருவதற்கு அறிகுறியாக வானத்தில் மின்னல் வெட்டியதைத் தொடர்ந்து இடியும் இடிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இலேசான தூறல்

விண்ட் ஸ்கிரீனில் வி வைப்பரால்துடைத்து விட்டேன்.கொஞ்ச தூரத்தில் தெருவோரத்தில் நின்ற அடர்ந்த 

வேப்ப மரத்தில் சாய்ந்தபடி நின்றிருந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் எனது மூச்சே நின்று போவதுபோலாயிற்று


உண்மையிலே அது ஒரு உருவம் தானா? அல்லது 

இப்போது கேட்ட  பாட்டினால் மனத்தில் ஏற்பட்டபிரம்மையாஎன்ற குழப்பத்தில் நெஞ்சு திக்திக் என்று அடிக்க ஆரம்பித்தது. வெளியே மழைத் தூறலோடு சற்று குளிராக இருந்தபோதும் எனக்கு குப்பென வியர்க்கத் தொடங்கியதை. கொஞ்சம் அருகே சென்றதும் வெள்ளைப் புடவை காற்றில் ஆடுவதைப் 

பார்த்த எனக்கு முதுகுத் தண்டில் ஐஸ் கட்டியை 

வைத்தது போன்று சில்லென்று ஓர் உணர்ச்சி 

ஏற்பட்டது.

 

காரை இன்னும் அருகில் ஓட்டிச் சென்றதும் அது ஒரு பெண் என்பதை அறிந்தேன்தலை முடியை விரித்துப் 

போட்டபடி எதையோ வெறித்து நோக்கியபடியே 

மரத்தோடு மரமாய்நின்றிருந்ததைப் பார்த்ததும் எனக்குவியர்த்துக் கொட்டஆரம்பித்ததுஅதற்குள் எனது கார் ந்த மரத்தை தாண்டிவிடவே என் மனதில் பற்பல 

எண்ண ஓட்டங்கள் ஆக்கிரமித்துக்கொண்டன.