தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

என்றுமே கவிமணி வாழ்கிறார் கவிகளில் !




























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …..  அவுஸ்திரேலியா 



கவிமணி எங்கள் தமிழ் மணி 
கனிவாய் தமிழில் கவி தந்தார்
புவியினை புனிதமாய் அவர் கண்டார்
புத்தரை இத்தரை போற்றிட வைத்தார்

எளிமையாய் கவிதை ஈந்தார் கவிமணி
இயல்பாய் சொற்கள் இணைந்தன அவரிடம்
புவினை எண்ணியே புகன்றார் கவிதையை
அறிவுரை ஆகியே அனைத்துமே அமைந்தது 

செந்தமிழ் ஆங்கிலம் சிறப்புடன் கற்றார்
சிறந்திடு படைப்புகள் செப்பமாய் அளித்தார்
நந்தமிழ் போற்றிடும் நற்றமிழ் கவியாய்
நாநிலம் மெச்சிட வாழ்ந்தனர் கவிமணி 

பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! யசோதா

 

தமிழ்வளர்த்த சான்றோர் விழா - 2025 வருணனையின் இறுதிப் பகுதி.

இடைவேளையைத் தெடர்ந்து சான்றோர் விழா ஆரம்பித்ததும் தமிழ் ஆர்வலர் சிவத்திரு நரேந்திரநாதன் அவர்கள் செந்தமிழ்ப் பூக்கள் நூல்களைப் படித்ததும் தனது மனதிலே மலர்ந்த அனுபவங்களைச் சொற்ப நேரத்திற்குள் மிக அற்புதமாக வெளிப்படுத்திய சிற்றுரை எல்லோரையும் மிகவும் கவர்ந்திருந்தது. அவையினருக்கு வணக்கம் கூறியதைத் தெடர்ந்து

 


அவர் பேசுகையில் 

"நாங்கள் இந்த மண்ணிலே புலம்பெயர்ந்தாலும் எங்கள்  பண்பாட்டின் பெயராலும்  எங்கள் பாரம்பரியத்தின் பெயராலும் நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குத் தமிழைச் சொல்லிக்கொடுப்பதில் இணைந்திருக்கின்றோம். அந்த வகையிலே எங்கள் சான்றோர் - வைத்தியர் பாரதி ஐயா அவர்கள் இன்று எங்களுக்கு இரண்டு செந்தமிழ்ப் பூக்கள் என்ற நூல்களை யாத்துத் தந்திருக்கின்றார்கள். இதிலே அழகிய 80 கவிதைகள் - பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

 

வேலவன் கொடியைக் காணுவோம் வாருங்கள் !

 

























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …..  அவுஸ்திரேலியா 




நினைக்க நெஞ்சில் நிற்பான் முருகன்
வனத்தில் குறத்தியை அணைத்தான் அவனும்
சினத்தில் மிதந்தால் செருக்கை அடக்குவான்
குணத்தில் உயர்வான் குறைகள் களைவான்

தீப்பொறி தோன்றினான் தீமையை அழிப்பான்
காத்திட நல்லூர் பதியினில் அமர்ந்தான்
ஆடியில் அவனுக்கு கொடியேற்ற உற்சவம்
அனைவரும் வாரீர் அவனருள் கிடைக்கும்

ஞானியர் தோன்றினர் நல்லருள் பெற்றனர்
ஊனெலாம் உருக்க உளமதை ஈந்தனர்
வானவர் மண்ணவர் மயக்கமே போக்கிட
வேலவன் நல்லூர் பதியினில் அமர்ந்தான்

இப்படியும் ஒரு காலமிருந்தது - சி.மெளனகுரு நூல் நயப்பு : கானா பிரபா

 “இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி!”


இந்த நூலின் அடி நாதமும் அதுதான். ஈழத்து, தமிழக எழுத்தாளர் பலரது நனவிடைதோய்தல்களைப் படித்த அனுபவத்தில், வித்தியாசமானதோர் வாழ்வியல் பயணத்தைப் படித்த திருப்தியோடு பெருமூச்சும் எழுகின்றது.

ஒரு காலகட்டம் வரை தமிழ் என்ற ஒரே குடைக்குள் வாழ்ந்த இருவேறுபட்ட மதத்தவர்களின் பண்பாட்டு, வாழ்வியல் அம்சங்கள் எவ்விதம் ஒன்றுபட்டுக் கலந்திருந்தன என்பதைத் தன் அனுபவப் பகிர்வுகளினூடாகக் காட்டுகிறார் பேராசிரியர் சி.மெளனகுரு.

மொத்தமாகப் பதினைந்து கதைகள் என்ற தலைப்புகளில் அமையும் ஒவ்வொரு அங்கங்களிலும் தன்னோடு வாழ்ந்தவர்கள், தன்னை வளப்படுத்தியவர்கள், என்று பயணித்து தனக்கு உயிர் கொடுத்தவரோடு நிறைவு செய்கிறார். அத்துணை பேரும் முஸ்லீம் சமூகத்தினர், அப்படியானதொரு இனப் பாகுபாடு பாலர் வகுப்பில் புகுத்தப்பட்டதைக் கூட விசனத்தோடு பதிவு செய்கிறார்.,
ஆகவே இவை கதைகள் அல்ல, மெளனகுரு அவர்களின் சுயசரிதையின் ஒரு பாதி எனலாம்.

மொழி பதிப்பகத்தினூடாக மே 2025 இல் வெளிவந்திருக்கும் இந்த நூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் அரங்கம் வாராந்த சஞ்சிகையில் வெளிவந்தவை.
இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பும், உயர் ரக அச்சுப் பொதியும் நயக்கத்தக்கது. அத்தோடு ரக்க்ஷானா ஷரிபுத்தீன் கொடுத்த ஓவிய வரைவும், கோபிஹரினின் கூட்டுப் பங்களிப்பும் நூலின் பாங்கை எடுத்த எடுப்பிலேயே காட்டி நிற்பது ஒரு தேர்ந்த நூல் வடிவமைப்புக்கான சான்று. இங்கேயும் இரு இனங்களின் இணைவு அமைந்திருப்பது எதேச்சையானதோ?

தனக்கு இருதய சிகிச்சை கொடுத்து மறுவாழ்வு தந்த டாக்டர் லாஹி அவர்கட்கு நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இன்றுடன் வாழ்வும் முடிவுக்கு வருமோ?


 -சங்கர சுப்பிரமணியன்




இன்று என்னை நாடி வந்தாள் அவள்

இன்று என்னுடன் இருப்பேன் என்றாள்
இன்றிரவு என்னோடு தனித்திருந்தாள்
இன்றிரவு முடியுமுன் முடிந்து போனாள்

இன்றிரவு முடிந்த பின் ஏது செய்வேன்
இன்றிரவை எண்ணி நான் வாழ்வேனா
இன்றிரவைப் போல் வேறு வந்திடுமா
இன்றிரவு போல் வந்தாலும் ஈடாமோ

இன்றிரவை வாழ்நாளில் மறப்பேனோ
இன்றிரவை எப்படி இவள் மாற்றினாள்
இன்றிரவு மடிமீது தலை வைத்தே நான்
இன்று விடியும்வரை தூங்கவா என்றாள்

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்


டொக்ரர்…. இன்னுமொரு ஹொஸ்பிற்றலுக்குப் போய், செக் பண்ணிப் பார்த்தால் என்ன?” எதிரே இருந்த குடும்ப வைத்தியர் கருணாகரனிடம் கேட்டுவிட்டு, தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் கமலா. கொஞ்ச நாட்களாக அவள் மனம் பதை பதைக்கின்றது. சரியாக உறக்கம் கொண்டு நாளாகிவிட்டன. திடீர் திடீரென உறக்கம் கலைந்து, எதையோ பறிகொடுத்தது போல யோசனைகள். வாழ்வின் சமநிலை குலைந்து மனம் அந்தரித்தபடி இருக்கின்றது.

அவுஸ்திரேலியாவிற்கு வந்த நாள் தொடக்கம், வைத்தியர் கருணாகரன்தான் இவர்களின் குடும்ப வைத்தியர். அவளுக்குப் பக்கத்தில் பன்னிரண்டு வயதில் மகளும், எட்டு வயதில் மகனும் இருந்தார்கள். இருவரும் தமது கைகளை முழங்காலுக்கு மேல் படரவிட்டபடி நிறுதிட்டமாக அமர்ந்திருந்தார்கள்.

வைத்தியர் கருணாகரன் நெடிதுயர்ந்த தோற்றம் கொண்டவர். மருத்துவத்துறையில் நீண்டகால அனுபவம் வாய்ந்தவர். சற்றே வயிறு துருத்திக் கொண்டிருந்தாலும் கம்பீரத்திற்குக் குறைவில்லை. குழந்தைகள் இருவரும் தமது கழுத்தை உயர்த்தி வலிக்கும் வண்ணம், வைத்தியர் முகத்தைப் பார்த்தபடி இருந்தார்கள். வைத்தியர், கமலாவின் கேள்விக்கு பதில் தராமல், புத்தகமொன்றை எடுத்து பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரவுன்லை நீங்கள் போனதுதான் நல்ல ஹொஸ்பிற்றல். அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று திரும்பவும் எனக்குச் சொல்லுங்கள்!” புத்தகத்தினின்றும் கண்ணை விலத்தாமல் கேட்டார் கருணாகரன்.

“இதுவரை மூன்று தடவைகள் போய் விட்டேன் டொக்ரர்! எல்லா ரெஸ்றுகளும் எடுத்துவிட்டார்கள். ஒன்றும் இல்லை என்றுதான் சொல்கின்றார்கள். ஏதாவது உடம்பில் வித்தியாசம் இருந்தால் வரச் சொல்லியிருக்கின்றார்கள்.

எனக்குப் பயமாக இருக்கின்றது டொக்ரர். எனக்குக் காச்சலோ தலையிடியோ இல்லை. காலின் அடிப்பாதங்களிலிருந்து கிழம்பும் வலி, உடம்புக்குள்ளாலை ஊடுருவித் தலை மட்டும் போகுது. அப்ப என்ரை உடம்பு முழுக்க பச்சை பச்சையாக நோகின்றது. இது வித்தியாசம் இல்லையா? செக்கண்ட் ஒப்பீனியன் எடுத்துப் பார்த்தால் என்ன டொக்ரர்?”
“சரி… இன்னுமொரு ஹொஸ்பிற்றலுக்கு எழுதித் தாறன். டொக்ரர் எட்வேர்ட் ஜென்னர் என்ற ஒரு ஸ்பெஷலிஸ்ற். அவரும் கெட்டிக்காரர் தான்” சொல்லியபடி கமலாவின் இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, நிறை என்பவற்றை அளந்து எழுதினார்.

“உங்க கணவர் இன்னமும் பேர்த்தில் தான் வேலை செய்கின்றாரா?”

“ஓம் டொக்ரர். அதுதான் ஒரே கவலையா இருக்கு. மெல்பேர்ணுக்கு மாதத்துக்கு ஒரு தடவைதான் வருவார். அவசரத்துக்கு ஒரு உதவி இல்லை. எனக்கு ஏதேனும் நடந்தா, பிள்ளைகளை யார் பாக்கிறது? அம்மா அப்பா, மாமா மாமி எல்லாரும் என்னோடைதான் இருக்கினம். அவைக்கும் வயது போயிட்டுது.” கண் கலங்கினாள் கமலா.

திருப்பதி ஆண்டவர் - பகுதி 1 - நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர்.


எம்மில் சிலரோ  பணம் சம்பாதித்து செல்வந்தராக பணம் படைத்தோருக்கான ஆடம்பர வாழ்வு
வாழ்கிறார்கள்.  ஆண்டவரால் படைக்கப்பட்ட மக்கள்தான் இப்படியாஆண்டவர்களின் கோயில்களிலும் சில
பணமும் , படாடோபமும் கொண்ட கோயில்களும் உண்டு. அதேசமயம் வருவாய்க்கு திண்டாடும் கோயில்களும் உண்டு.
இது எப்படி என எண்ணத் தோன்றுகிறதா?
Good பிஸினஸ் - இதற்கு எப்படி சிறந்த விளம்பரம் தேவையோ அதேபோல ஆண்டவருக்கும் உண்டு. சில கோயில்கள் புதுமையானது என பெயர் பெற்று விடுகின்றன.அப்படியான கோயில்களுக்கு மக்கள் நேர்த்தி கடன்கள் செய்து, தாம் நினைத்தது நடந்துவிட்டால், ஆண்டவனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து காணிக்கையும் செலுத்துவார்கள்.   இவ்வாறான சிறப்புகள் பேசப்படாத கோயில்கள் வருமானம் வராது திண்டாடுவதையும் நாம் காண்கிறோம். ஆண்டவனை நம்பும் பக்தர்களே இதற்குக் காரணம்.

இந்திய பெருங்கண்டத்தில் மிக பணம்படைத்த கோயிலான திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம், இந்திய அரசுக்கு பணம் கடன் கொடுத்து வட்டியும் பெற்றுள்ளது. திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க வருடம் பூராவும்  கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். இவ்வாறு வந்து போகும் பக்தர்கள் வெங்கடாசலபதிக்கு பலவாறாக காணிக்கை செலுத்துகிறார்கள். 
காணிக்கையை பெற்ற வெங்கடாசலபதியோ தம்மை நன்றாக வாழ வைப்பார், இன்னல்கள் வராது காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.

பலகோடிக்கு அதிபதியான 8 அடி உயரம் கொண்ட வெங்கடாசலபதி சுயம்புவாக தோன்றியதாக மக்கள் நம்புகிறார்கள், இது 2000வருடம் பழமையானது எனவும் நம்பப்படுகிறது. திருப்பதி ஆண்டவரான பாலாஜியோ இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு, கொஞ்சமேனும் வேர்வைசிந்தாது ஓடி உழைக்காது, பலகோடி சம்பாதிக்கிறார்.
இதற்கும் ஒரு கதை உண்டு, அதுவும் ஒரு பெண்மேல் கொண்ட காதல் கதை தான். ஆண்டவணோ காதல் விவகாரத்தில் மானிடர் எல்லோரையும் மிஞ்சிவிட்டார்.


                 பாலாஜியின் காதல்.
              

பட்டிக்காட்டு ராஜா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


1965 ம் வருடம் காக்கும் கரங்கள் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சிவகுமார் அடுத்து வந்த பத்தாண்டுகளில் பல படங்களில் சிறு வேடங்களிலேயே நடித்து வந்தார். அதிலும் பெரும் பாலான பாத்திரங்கள் அவரை மென்மையானவராக, அப்பாவியாக, வெகுளியாக காட்டும் பாத்திரங்களாகவே சித்தரித்தன. இந்த நிலையில் தான் 1975ம் வருடம் ஒரு அதிரடி , ஆக்க்ஷன் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அது மட்டுமன்றி அந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சந்தர்ப்பமும் கூடி வந்தது. இது சிவகுமார் ஒரு முழு நேர ஹீரோ அகி விட்டார் என்பதையும் கட்டியம் கூறியது. அப்படி அவர் நடித்து வெளி வந்த படம் தான் பட்டிக்காட்டு ராஜா . 



ஈஸ்ட்மென் கலரில் வெளிவந்த இந்தப் படம் அடிதடி, காதல், குடும்ப

செண்டிமெண்ட், வில்லன்களின் சதித் திட்டம், என்று எல்லாம் கலந்த ஒரு கலவையாகவும் இருந்தது. அது மட்டுமன்றி கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லா வகையில் காட்சிகளும் அமைக்கப்பட்டன. 


கிராமத்து அண்ணாசாமி பட்டணத்தில் கல்வி பயிலும் தன் முறைப் பெண் சரசுவை தேடி பட்டணத்துக்கு வருகிறான். வழியில் பணக்கார பெண்ணான உஷாவின் அறிமுகமும் அவனுக்கு கிடைக்கிறது . ஆனால் தான் தேடி வந்த சரசு ஒருவனை காதலித்து பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு நிர்கதியாக இருப்பதைக் கண்டு அவன் அதிர்ச்சியடைகிறான். அவளையும் காதலனையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் அவனுக்கு அடுத்தடுத்து பல சவால்கள் வருகின்றன. அன்னை மரியாளின் கிரீடத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் டைகர், மன்சூர், இருவரின் சதிகள், தன்னைப் போல் இருக்கும் டைகரின் கையாள் ராஜாவின் தந்திரங்கள், ஜாலக்காரி நீலுவின் சாகசங்கள் , என்று அவனை சுற்றி பல வலைகள் பின்னப்படுகின்றன. அவற்றில் இருந்து எவ்வாறு அவன் மீள்கிறான் என்பதே படத்தின் மீதி கதை. 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

இலங்கைச் செய்திகள்

செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

இந்தியா-இலங்கை படகு சேவையில் இதுவரை 17,000 பயணிகள் பயணம் - ஜனித ருவன் கொடித்துவக்கு

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள் !

இலங்கையின் 'மூன்றாவது பெரிய' மனித புதைகுழியாக மாறியது செம்மணி!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ; மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்வு

தமிழ்மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்புஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன- கனடாவின் எதிர்கட்சி தலைவர்

மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னாரில் இருந்து மாந்தை வரை அமைதி பேரணி!

 "உள்ளக பொறிமுறைக்கு ஆதரவான ஐநா மனித உரிமை ஆணையாளரின் கருத்து ஏமாற்றமளிக்கின்றது" - சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி வடக்குகிழக்கு சமூகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்



செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

27 Jul, 2025 | 10:29 AM

இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில்  ஆர்பாட்டம் நடந்தது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். ‛‛செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும். செம்மணி எங்கும் தமிழர் குருதி உள்ளது. சிங்களர் செய்த தமிழர் அநீதிக்கு நீதி வேண்டும். தோண்ட தோண்ட எலும்பு கூடு.. பார்க்க பார்க்க நொறுங்குது இதய கூடு.. இன்னும் எத்தனை சாட்சி வேண்டும்..

உலகச் செய்திகள்

 பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு

இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் - உலக சுகாதார ஸ்தாபனம்

காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்

இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள டெய்ர் அல் பலா - தரை வழிதாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்

உணவுவிநியோகம் இஸ்ரேலால் முடக்கம் - காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்


பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு

25 Jul, 2025 | 02:57 PM

பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகபதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மத்தியகிழக்கில் நீதியான நிரந்தர சமாதானம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்பின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்;ளார்.யுத்தநிறுத்தம் மற்றும் அனைத்து பயணக்கைதிகளும் விடுதலை ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ள அவர் நாங்கள் பாலஸ்தீன தேசத்தை கட்டியெழுப்பவேண்டும்,அதன் நம்பகதன்மையை  ஏற்றுக்கொண்டு, அதனை இராணுமயப்படுத்தலில் இருந்து விடுவித்து,இஸ்ரேலை முழுமையாக அங்கீகரிப்பது பிராந்தியத்தில் உள்ள அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவும் என அவர் தெரிவித்துள்ளார்   நன்றி வீரகேசரி 

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை 03/08/2025


 




சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025