21/11/2019 அடுத்­து­வரும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு இலங்கை ஜன­நா­யகக் குடி­ய­ர­சான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்­தலின் மூலம் நந்­த­சேன கோத்­தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்­களால் ஒப்படைக்கப்பட்டுள்­ளது.
அடுத்து பாரா­ளு­மன்­றத்­திற்­கான பொதுத் தேர்­தலும், மாகாணசபைகளுக்­கா­ன தேர்­த­லுக்­கான எதிர்­பார்ப்பும் உள்­ளது.
இவ்­வா­றுள்ள நிலையில் நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பெறு­பே­றுகள் தெரி­வா­கி­யுள்ள ஜனா­தி­ப­தியின் எதிர்­காலத் திட்­டங்கள் எவ்­வாறு அமையும் என்ற எதிர்­பார்ப்பை நாட்டு மக்­க­ளிடம் குறிப்­பாக சிறு­பான்மை மக்­க­ளிடம் மட்­டு­மல்ல உலக அரங்­கிலும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை நோக்க முடி­கின்­றது.
நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, தேசிய பாது­காப்பு, தொழிலற்றோர் பிரச்­சினை எனப் பல்­வேறு பிரச்­சினை களுக்குத் தீர்­வு­காண வேண்­டி­யுள்­ளது என்று கூறப்­பட்­டாலும், அதற்கும் அப்பால் நாட்டின் சகல இன, மத மொழி மக்­க­ளுக்கு மத்­தி­யிலே புரிந்­து­ணர்வும், நல்­லு­றவும் ஏற்­ப­டுத்தும் பாரிய பொறுப்பும் அவ­ருக்­குள்­ளது.
யார் விரும்­பி­னாலும், விரும்­பா­விட்­டாலும் நாடும், நாட்டு மக்­களும் எதிர்­நோக்­கி­யுள்ள முதன்மைப் பிரச்­சினை அது­வா­க­வே­யுள்­ளது.
பெரும்­பான்மை வெற்­றியின் மூலம் நாட்டில் இனப்­பி­ரச்­சினை இல்­லை­யென்­றாகி விடாது. இந்த நாட்டில் மக்­களின் பெரும்­பான்மை வாக்­கு­களால் வெற்­றி­யீட்­டிய அர­சாங்­கங்­களே இனப்­பி­ரச்­சி­னைக்கு அடித்­த­ள­மிட்­டன என்ற உண்­மையை மறைக்க முடியாது.