மரண அறிவித்தல்

                                                திருமதி அருளம்மா அந்தோனிப்பிள்ளை


இளவாலை மற்றும்  செவென்ஹில்ஸ் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட திருமதி அருளம்மா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 10.08.2020 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற திரு பஸ்தியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் , கொன்சிலா மதுபாலாவின் அருமை தாயாரும், ஜெரோம் எமிலியானஸ்சின் பாசம் மிகு மாமியாரும்,  சகானா , இன்பனா, ஆரணா ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார். 

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக  Our Lady Of Lourdes தேவாலயத்தில் மதியம் 12.15 மணிக்கு  வைக்கப் பட்டு 12.30 மணிக்கு நன்றி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

பின்னர் நல்லடக்கத்துக்காக Pinegrove Memorial Garden,  Kington Road, Minchinbury க்கு  எடுத்துச் செல்லப் படும்.

இறுதிச் சடங்குகள், தற்கால நோய்  பரவல் அரச விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் என்பதனையும்  அறியத் தருகிறார்கள்.

தொடர்புகளுக்கு 
Jerome 0425 233 287



மரண அறிவித்தல்

 

திருமதி மனோன்மணி சேனாதிராஜா 


கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி சேனாதிராஜா அவர்கள் 10.08.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற செல்லையா சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலம்சென்றவர்களான திரு திருமதி கந்தையா இரத்தினம்மாவின் சிரேஷ்ட புத்திரியும் ஆவார்.

கலாவதி (New Zealand), சிவகுமார் (Sri Lanka), கலாரூபி (Sri Lanka), ரஜனி (Sydney) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஸ்ரீபத்மநாதன் (New Zealand), மல்லிகா (Sri Lanka), காலம்சென்ற திருச்செல்வம் (Sri Lanka), கௌரிதாசன் (Sydney) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிரோஜன் பிரணிக்கா (Sydney), தசிந்தன் அபி (Sydney), நிமலன் (New Zealand), கஜனி (Sydney), துவாரகா ஜெயரூபன் (New Zealand), நிருத்திகா விரூபன் (Sri Lanka), ரிஷானி (Sydney), அனிஷ்சன் (Sydney), அக்சயா (Sri Lanka) ஆகியோரின் அன்புப் பேத்தியும், டிரயா, கீரா (Sydney) ஆகியோரின் அன்புப் பூட்டியும், சாரதா ஸ்ரீராமநாதன் (New Zealand) இன் அன்புப் பெரியதாயாருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை Manukau Memorial Gardens Chapel, Papatoetoe, Auckland, New Zealand இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புகளுக்கு:

ஸ்ரீபத்மநாதன் (NZ) +64211482124
சிவகுமார் (SL) +94777373314
கௌரிதாசன் (SYD) +61408647056



மரண அறிவித்தல்

                        திரு .வேலுப்பிள்ளை சச்சிதானந்தன்

யாழ் உடுவிலைப் பிறப்பிடமாகவும், Sydney, Australia வை வதிவிடமாகவும் கொண்ட திரு சச்சிதானந்தன் அவர்கள், கடந்த 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை  சிவபதம் அடைந்தார். 

அன்னார் Jaffna St. Patrick’s College, Moratuwa St. Sebastian College, Sydney Dulwich Hill High School ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியரும் .  முருகேசு வேலுப்பிள்ளை  ,     இரா சம்மா  வேலுப்பிள்ளை ஆகியோரது புத்திரனும், பத்மாவதியின் அன்புக் கணவரும், சசிகரன் , பிரபாகரன் ஆகியோரின்  அன்புத்  தந்தையும்  , சாரதா தேவி , சுகுணசோதி, சற்குணானந்தன் மற்றும் சுசீலாதேவி ஆகியோரின் அன்புச்  சகோதரரும், ஆரணி, அபிராமி ஆகியோரின்  மாமனாரும் , அருண், அரண், அன்னலக்சுமி  அவர்களின் அன்பு பாட்டனும் ஆவார். 

ஈமக்கிரிகைைள் விபரம் - ஆகஸ்ட் மாதம்  12ந் திகதி புதன் கிழலம, காலை 11:30 மணியிலிருந்து  2:15 வரை , South Chapel, Rookwood Cemetery, Lidcombe 2141 மயானத்தில் நடந்தேறும். 

உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த அறிவித்தலை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

இறுதிச் சடங்குகள், தற்கால நோய்  பரவல் அரச விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் என்பதனையும்  அறியத் தருகிறார்கள். 

தகவல் தருபவர் - 

Mrs. Satchi - +61 (0) 2 9744 9000 

Sasi +65 9665 4660 

Praba +61 (0) 408 624 760 

பின் குறிப்பு: அமரர் Libya வில் “Oasis Oil Company”,வட்டுக்கோடடை  Technical College, மற்றும் Sydney Telstra போன்ற நிறுைனங்களிலும் பணியாற்றி உள்ளார். இந்த தகவலை, அங்கு அவரை அறிமுகமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

ஹிரோஷிமாவும் சில அணுகுண்டுகளும் - நி.அமிருதீன்..

 ஆகஸ்ட் 6-ம் தேதி ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம். (06/08/1946.)


அன்று

ஹிரோஷிமாவிற்கு

அதிகாலையும்

இருளாகவே

விடிந்தது! -பெரும்

வெடிச்சத்தத்தோடு !!

 

 வெடிச்சத்தம்

நின்ற பின்னும்

பரவியிருக்கும்

கந்தக வாடை வீசும்

புகை மண்டலங்கள்

ஆங்காங்கே

அடர்த்தியாய் !!


கண்ணுக்கெட்டிய வரை

சிதறிக்கிடக்கும்

சதைப் பிண்டங்கள்

கோரமாய் !!

145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி


145 ஆசனங்களை பெற்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி-SLPP Won 145 Seats in Parliamentary Elections 2020

- ஆதரவு கட்சிகளுடன் இணைந்து 2/3 அமைப்பது உறுதியானது
- தனியாக 2/3 பெற 5 ஆசனங்களே குறைவு

என் மனதை கொள்ளை கொண்ட காதல் காவியம் Sufiyum Sujatayum திரைப்படம் செ .பாஸ்கரன்

.


 என் மனதை கொள்ளை கொண்ட காதல் காவியம் சுபியும் சுயாதையும். மலையாள திரைப்படமான இந்த திரைப்படம் ஒரு காதல் கதையை சொல்லுகிறது. எத்தனையோ திரைப்படங்கள் காதல் கதையை சொல்லி இருக்கின்றது, இங்கும் ஒரு முஸ்லிம் இளைஞனுக்கும் இந்து பெண்ணுக்கும் ஏற்படுகின்ற காதல்தான். ஆனால் இந்த திரைப்படத்தின் கதையை எழுதி நெறியாள்கை செய்த ஷாநவாஸ் அவர்கள் ஒரு கவிதை போல நகர்த்திச் செல்கிறார் இந்த திரைப்படத்தை.

நடனமும் சங்கீதமும் இணைகின்றது. ஒரு பெண் எவ்வளவு ஆழமாக காதலிக்கின்றாள், அந்த காதலுக்காக எந்த எல்லைக் கெல்லாம் சென்றாள் என்பதை ஒரு தெளிந்த நீரோடை போல் ஓடி மனதை வருடிச் செல்கிறது. முஸ்லிம் இளைஞனாக வருகின்ற தேவ் மோகன் (சுபி ) இந்தப் படத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றார். அவருக்கு கொடுக்கப்பட்ட பாடலும் அதன் இசையும் மனதை கொள்ளை கொள்ளுகின்றது. பள்ளிவாசலில் ஓதப்படும் அல்லாவு அஃபர் இவ்வளவு அழகாக ஒரு கவிதையைப் போல கொடுத்து இருக்கின்றார் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும்.

காதலை சுமந்து கொண்டு, மனதினால் அவனை மறக்க முடியாமல் பிரிந்துசென்ற அந்த இளம்பெண் சுஜாதை (Aditi Rao ) மனதிலே அந்த காதல் அழியாமல் இருக்கின்றது. புதிய குடும்பம், புதிய உறவுகளில் அவளுடைய வாழ்வு, எந்தவிதமான தடையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அவளது கணவன் அவளிடம் இருக்கும் காதலினால் மன அழுத்தத்தோடு குடும்பம் நடத்துகின்ற ஒரு கதாநாயகன் (Jayasuria ) திரைப்படத்தில் கதாநாயகன் அறிமுகப்படுத்தும்போது அட்டகாசம் பண்ணி அறிமுகப்படுத்துவார்கள் இங்கே கதாநாயகன் ஜெயசூர்யாவை அறிமுகப்படுத்துகின்ற முறையே தனியாகத்தான் இருக்கின்றது. திருமணத்திற்காக வருபவரிடம் ஊர் மக்கள் வழமைபோல் அவர்கள் கொண்டிருக்கும் காதலை பேச்சோடு பேச்சாக போட்டுவிடுகிறார்கள் அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அவன் மணம் முடிக்கின்றான் நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும்.

வித்தகத் தமிழுடன் அவுத்திரேலிய வளர் தமிழர் - -பரமபுத்திரன்


வித்தகத்  தமிழுடன் அவுத்திரேலிய வளர்  தமிழர் -  உலக அரங்கில் அறிமுகம் செய்யும் சிட்னி  கம்பன் கழகம் 

 

அவுத்திரேலியாவில் வளர்ந்து வரும் ஆற்றலுள்ள இளம் தமிழர்கள்  தங்களின் விவாதத்  திறனுடன்  வித்தகத் தமிழ்  வேள்வி விவாத அரங்கு மூலம் உலக அரங்கில் களம் இறங்கியுள்ளனர். இந்த நிகழ்வுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்து,  பயிற்றுவித்து, போட்டிக்கு  வழங்கும் முயற்சியினை அவுத்திரேலிய கம்பன் கழக நிறுவுனர் திரு. ஜெயாராம்  ஜெகதீசன் அவர்கள் செய்திருக்கின்றார். வித்தகத் தமிழ் வேள்வி என்பது ஈழத்திலிருந்து இணைய வழியினூடாக உலகத் தமிழர்களை இணைத்து நடைபெறும் ஒரு விவாத நிகழ்வாகும். இதுவரையில் அவுத்திரேலியா, மலேசியா, இலங்கை, இந்திய அணிகள் விவாதம் புரிந்துள்ளன

 இன்றைய காலகட்டத்தின்  முக்கிய சிக்கல் ஒவ்வொருவரும் தாங்கள் சிறப்புடன் வாழும் காலத்தில் வேலை, வருவாய், குடும்பம் என்று அலைவதும், அதனூடாக  தங்களையும் குடும்பத்தையும் வலுப்படுத்துவதும், மூத்தோர்கள் ஆனபின் தொடர்ந்து தங்களை சமூகத்தில் தக்க வைக்க முயற்சிப்பதும் என்பதாக அமைகிறது. இதனால் இளையவர்கள் அல்லது இளம் பிள்ளைகளுடனான தொடர்பாடல் மற்றும் இணைப்பு குறைகின்றது. இது தமது சொந்த சமுதாயத்திலிருந்து பிள்ளைகள்  புறந்தள்ளப்படுகின்ற நிலைக்கு இட்டுச்செல்கின்றது. மறுவளத்தில் எம்மை சுற்றியுள்ளவரை இகழ்ந்தும் மற்றவரை புகழ்ந்தும் வாழும் தன்மை வெளிக் காட்டப்படுகின்றது. வளரும் பிள்ளைகளுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் மானப்பாங்கு இல்லாமல் போகின்றது. அவர்களை எங்களுடன் அணைத்துச் செல்லும் ஆற்றல் குறைகிறது.  இந்த அடிப்படைக் காரணம்தான் எங்களுடன் எமது பிள்ளைகளை சரியான தளத்தில் பயணிக்கவிடாமல் மாற்றுவழி தேடவைக்கின்றது. அவர்கள் தமிழை, தமிழ் மக்களை தவிர்க்க வைக்கிறது. குறித்த ஒரு நாட்டில், அல்லது  வேறுபட்ட நாடுகளில் இருந்து வந்த தமிழர்கள் என்ற வகையில் நாம்தான் உறவுகள் எனப் பிள்ளைகளுக்கு வலுவாகச்  சொல்ல விரும்புதல்  அல்லது பிள்ளைகளை மற்றறைய தமிழர்களுடன் இணைந்து செயல்பட வழிகாட்டும் தன்மை குறைவாக உள்ளது. இது தொடருமாயின் எம்பிள்ளைகள் தமக்கென வலுவான சமுதாயம் அற்ற அநாதை  நிலையில் வாழவேண்டி வரும் என்பதை நாம் உணரவில்லை. இந்தவகையில் நோக்கும் போது தனது சொந்த நேரத்தினை இனாமாக வழங்கி கம்பன் கழகம் மூலம் குறித்த சிலரையாவது அறிமுகப்படுத்தி அத்துடன் தமிழையும் சிந்திக்க  வைக்கும் ஜெயராம் அவர்களை பாராட்டலாம். அதனுடைய அடுத்த பரிணாம நிலையாக வித்தகத் தமிழ் வேள்வி மூலம்  அவுத்திரேலிய இளைய தமிழரை உலக அரங்கில் களமிறக்கியுள்ளார். ஆற்றலுள்ளவர்கள் மிளிரவேண்டும், தமிழ்  வளரவேண்டும் என்ற நோக்கில் இயங்குவது நல்ல முயற்சி எனலாம்.

இலங்கைச் செய்திகள்


Mahindra Tractors உடன் இணைந்து மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO

ரணில் உள்ளிட்ட ஐ.தே.க. வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி

மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி

திகாமடுல்ல: ஶ்ரீ.ல.பொ.பெ; மட்டக்களப்பு: த.தே.கூ; திருமலை: ஐ.ம.ச. கைப்பற்றின

நுவரெலியா மாவட்டத்திலிருந்து 5 தமிழ் எம்.பிக்கள்

ஜனாதிபதியின் ஆட்சி 10 வருடங்கள் தொடரும்

பிள்ளையான், பிரேமலால் ஜயசேகர; சிறைக்குள்ளிருந்தவாறே வெற்றி

எம்மோடு இணையுங்கள்; ஒன்றாக பயணிப்போம்

மனோ, முஜிபுர், மரிக்கார்; கொழும்பில் மூன்று சிறுபான்மையினர்

1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் அமையவுள்ள மிக வலுவான அரசாங்கம்

பொதுஜன பெரமுன மீதான மக்களின் ஆதரவை மீள உறுதிப்படுத்திய தேர்தல்

2020 பாராளுமன்றத் தேர்தல்: எம்.பி. பதவியை இழந்த பிரபலங்கள்

9ஆவது பாராளுமன்றத்திற்கு 8 பெண்கள் தெரிவு

ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நானும் தயார்

இலங்கையின் 13ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு



Mahindra Tractors உடன் இணைந்து மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO

Mahindra Tractors உடன் இணைந்து மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO-DIMO Agri Machinery Division Together with Mahindra Tractors supports “Waga Saubhagya”-Youth-Led Barren Land Re-cultivation
"வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்கள் மீண்டும் பயிரிடும் திட்டம்
நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு தமது பங்களிப்பை மேற்கொள்ள முன் வந்துள்ளன.
பொருளாதாரத்தில் தன்னிறைவை அடையும் தனது தொலைநோக்கு பார்வையை அடைவதற்கு இந்த நிலங்களை மீண்டும் பயிரிட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதுடன், இதன் விளைவாக தேசிய திட்டமான “வகா சௌபாக்கிய" ஆரம்பிக்கப்பட்டது. “வகா சௌபாக்கிய" 2020 இன் தேசிய நிகழ்வு கேகாலை மாவட்டத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ இயந்திர பங்காளரான DIMO நிறுவனம் Mahindra Yuvo உழவு இயந்திரங்களை, கைவிடப்பட்ட நிலங்களை தயார்படுத்தும் பொருட்டு வழங்கியதன் மூலம் இம் முயற்சியின் தொடக்கத்தை வலுவூட்டியது.

பெண் என்பவள் யார் ? சி. ஜெயபாரதன், கனடா



பெண்ணைத்
தாயாக் குபவன் யார் ?
தாலி கட்டிய
கண்ணான கணவன் !
பெண்ணைத் தன் பூட்ஸ்
காலால் எற்றி
பேயாக் குபவன் யார் ?
ல்லான கணவன் !
மண்ணில்
உன்னை, என்னைப் பெற்றவள்
அன்னை.
உன்னுடன் பிறந்தவள்
அன்னை.
உனக்கு வந்தவள்
அன்னை.
உன்னை மணந்தவள்
அன்னை.
உனக்குப் பிறந்தவள்
அன்னை.
உன்னுடன்  பணி புரிபவள்
அன்னை.
உன் கீழ் வேலை செய்பவள்
அன்னை.

உலகச் செய்திகள்


லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்

இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

லெபனான் வெடிப்புச் சம்பவம்: எச்சரிக்கையை அலட்சியம் செய்த அதிகாரிகள் மீது மக்கள் கோபம்

லெபனான் வெடிப்பு: தலைநகரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை

கனடாவுக்கு கொலை கும்பலை அனுப்பியதாக சவூதி முடிக்குரிய இளவரசர் மீது குற்றச்சாட்டு

டிக்டொக்கிற்கு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையொப்பம்



லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்-Lebanon Beirut Blast

- பலர் பலி என அச்சம்; நூற்றுக் கணக்கானோர் காயம்
- குடியிருப்புகள், கட்டடங்கள் தரை மட்டம்
- வெடிப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை





அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 26 – பேரிமத்தளம் மற்றும் சுத்தமத்தளம் – சரவண பிரபு ராமமூர்த்தி

 


பேரிமத்தளம் மற்றும் சுத்தமத்தளம் – தோற்கருவி




அமைப்பு

பேரிமத்தளம் - மிருதங்கத்தை விட சற்று நீளமாக, சுத்த மத்தளத்தை விட சுற்றளவு குறைவாக உள்ளது பேரிமத்தளம். வைரம் பாய்ந்த பலாக்கட்டையால் செய்யப்பட்டு, ஆட்டுத்தோல் போர்த்தப்பட்டுள்ளது. ஓரடி நீளம் கொண்ட அரளிக்குச்சியால் ஒருமுகத்தில் மட்டுமே வாசிக்கப்படுகிறது.

 

சுத்தமத்தளம் சுமார் 20கிலோ எடையுள்ளது தற்கால சுத்தமத்தளம்.(திருவாரூரில் இசைக்கப்படும் பழமையான சுத்தமத்தளம் சுமார் 60கிலோ எடையுள்ளது) கழுத்து/தோள்பட்டையில் மாட்டி இசைக்க வேண்டும். மிருதங்கம் போலவே இருக்கும் இது, அதைவிடப் பெரிதாகவும் நீளமாகவும் இருக்கிறது. தபேலாவைப் போல அகலமான வெட்டுத்தட்டுப் பகுதியையும், மிருதங்கத்தை விட அகலமான வலம்தலைப் பகுதியையும் கொண்டது. சுத்தமத்தளம் கேரளத்தில் தான் செய்யப்படுகிறது. பாலக்காடு அடுத்த பெருவம்பா தோல் இசை



புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் 07 ( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய காணொளி ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை ) அவுஸ்திரேலியாவில்நாவல்-சிறுகதை இலக்கியம் முருகபூபதி

சிறுகதை  நாவல்  இலக்கிய வடிவங்கள்  எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்.

எமது முன்னோர்கள் சிறந்தகதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை     ஏனோ மறந்துவிடுகின்றோம். தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர்  கதைகேட்கும் ஆர்வம் குழந்தைகளுக்கும்இல்லை. கதைசொல்ல  பாட்டா, பாட்டிமாருக்கும்  அக்கறை  இல்லை.

இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  அவுஸ்திரேலியா தமிழ்ச்சூழலும்  அதற்கு விதிவிலக்கல்ல.       பகல்பொழுதில்  வேலைக்குச் சென்றதனால்  தொலைக்காட்சித்தொடர்களை  பிரத்தியேகமாக பதிவுசெய்ய  வழிசெய்துவிட்டு    -   மாலை வீடு திரும்பியதும்    அவற்றைப்பார்த்து  திருப்தியடையும் நடைமுறையும்  வந்தது.   கொரோனா  காலத்தில் வாட்ஸ்அப் வேடிக்கை பெருகிவிட்டது.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இணையவழி காணோளி அரங்கு

 



எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் -04 பத்துவயதில் பாட்டிக்கு ஒரு கடிதம் !! ஆசான்களின் ஆசியுடன் வளர்ந்த ஆக்க இலக்கியம் !! - முருகபூபதி

நான் பிறந்து வளர்ந்த இலங்கையில்  2020 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் முடிந்திருக்கும் வேளையில், எனது தொடரின் 04 ஆவது அங்கம் இங்கே பதிவாகின்றது.

இலங்கையில் பெரும்பான்மையினத்தைச்சேர்ந்த அரசியல்வாதிகளில் பலருக்கு சோதிடத்தில் நம்பிக்கை அதிகம். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பு மனுத்தாக்கலுக்கான திகதியையும் சோதிடரிடம் சென்று கணித்துவிடுவார்கள்.

அடிக்கடி தாங்கள் பிறந்த ராசி – நட்சத்திரத்திற்கு ஏதும்சிக்கல் வந்துவிட்டால், ஆலயங்கள் சென்று விசேட பூசைகள் நடத்தி பரிகாரமும் செய்துகொள்வார்கள்.

இலங்கையில் பல பெளத்த அரசியல் தலைவர்கள் அடிக்கடி  கடல் கடந்து திருப்பதிக்குச்  சென்று வரும் காட்சிகளையும்  பார்த்திருப்பீர்கள். பௌத்த பிக்குகளை அழைத்து பிரித் ஓதி மணிக்கட்டில் மந்திரித்த நூலும் கட்டிக்கொள்வார்கள்.  ஆனால்,  நீண்ட நாட்களுக்கு  அதனுடன் வாழ்வதனால், அதில் கண்ணுக்குத் தெரியாத  வைரஸ்கள் படிந்திருப்பதும் அவர்களுக்குத் தெரியாது.

அவர்களே வைரஸ் காவிகளாகிவிடுகிறார்கள். 


கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 25 கவிஞர் அடையாளத்தை தக்கவைக்கச்சொன்ன “எஸ்.பொ. “

சிறுகதை எழுதத் தொடங்கி,  தமிழ்த்தேசிய அரசியலினால் கவரப்பட்டு, கவிதை எழுதி,  தமிழ் மருத்துவ முன்னோடி கிறீன் பற்றிய ஆய்வும் எழுதி  இலக்கிய உலகில் என்னை தக்கவைத்திருந்தாலும், பொதுவாக கவிஞர் அம்பி எனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்தேன்.

எனது கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்த அதே சமயம்  தாயகத்தில் நாடெங்கும் நடந்த கவியரங்குகளில் பங்கேற்றும் வந்துள்ளேன்.

கவியரங்குகள், இலங்கையில் வடக்கிலிருந்து கிழக்கு மற்றும்  தெற்கு வரையில் நிகழ்ந்திருக்கின்றன. அதற்காக பயணங்கள் சென்றுள்ளேன்.

எனினும் எனது கவிதைகள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளிவரவில்லை. எனினும் எனக்கு அது ஒரு குறையாகவும் தென்படவுமில்லை.

எனது நீண்டகால நண்பர் எஸ்.பொ. அவர்கள் ஒருதடவை என்னுடன் தொடர்புகொண்டு,   “ அம்பி… நீங்கள்   மாணவர் உலகில் அம்பி மாஸ்டர் எனவும்  இலக்கிய உலகில் கவிஞர் அம்பி எனவும்தான் அறியப்பட்டுள்ளீர்கள். தற்போது நீங்கள் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டீர்கள்.  ஆனால், கவிதைப்பணியிலிருந்து இன்னமும் விடைபெறவில்லை. தொடர்ந்தும் கவிதை எழுதிவருகிறீர்கள். கவியரங்குகளிலும் பங்கு பற்றுகிறீர்கள். ஆனால், இதுவரையில் உங்கள் கவிதை நூல் எதுவும் வெளிவரவில்லையே… ஏன்…?   “ என்று நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

நான் யோசித்துப்பார்த்தேன். எஸ்.பொ. சொன்னதிலும் உண்மை இருந்தது.  அவ்வேளையில் அவர் அவுஸ்திரேலியா – தமிழ் நாடு என பறந்துகொண்டிருந்தார்.

நூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து அறியாததை அறிய உதவும் முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் நீலாம்பிகை கந்தப்பு


 

பொதுவாக துறைசார் பாடநூல்கள் தவிர்ந்தவை இலக்கிய நூல்களாகவோ ஆய்வு நூல்களாகவோ அமையும் .

 

              இலக்கியம் மனித மெல்லியல்புகளின் வெளிப்பாடு .  இதயத்துடன் தொடர்புபட்டது.  ஆய்வு அறிவின் தொழிற்பாடு . மூளையுடன் தொடர்புபட்டது .   கோபம் ,   குரோதம் போன்ற தீய இதய வெளிப்பாடுகள் மூளையை மழுங்கடையச் செய்வதால் வேண்டத்தகாத சம்பவங்கள் இடம்பெறும்.   

 

அதுபோல் அறிவு,    தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்போது இன்னல்களிலிருந்து காப்பாற்றப்படுவோம் .அதனால்தான்போலும்   ஆரம்பத்தில் சிற்றிலக்கியம் படைப்பவர்கள் அறிவு முதிர்ச்சி ஏற்பட விமர்சனம் ,மதிப்பீடு போன்ற ஆய்வுகளில்  ஈடுபடுவர்.

 

சிற்றிலக்கியம் அகம் சார்ந்தது .   ஆய்வு புறம் சார்ந்தது .  வெளிதேடல்களுடன் தொடர்புபட்டது .   மு .வரதராசன் கரித்துண்டு ,  கள்ளோ காவியமோ போன்ற பல சிற்றிலக்கியங்களை ஆரம்பத்தில் வெளியிட்டாலும் ,  மொழி நூல் ,  மொழி வரலாறு ,   தமிழ் இலக்கிய வரலாறு போன்ற ஒப்பற்ற ஆய்வு நூல்களை வெளியிட்டபின் எந்த சிற்றிலக்கியமும் படைக்கவில்லை .  

 

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 47 முருகபூபதி

 

ற்பகம் ரீச்சர் மகிழ்ச்சியான செய்தியுடன் வந்தாள்.

 “   சில விடயங்கள் எந்த முயற்சியும் இல்லாமல் எளிதாக நிறைவேறும்.  ஆனால்,  சிலவற்றுக்கு கடுமையான பிரயத்தனங்கள் மேற்கொண்டாலும் சாத்தியமாகாது. என்னுடைய இடமாற்ற உத்தரவும் அப்படிப்பட்டதுதான். ஓய்வூதியத்திற்கு தயராகியிருந்த வேளையில்,  ஊரோடு மாற்றம் கிடைக்கவிருக்கிறது.  “  கற்பகம் கோயிலிலிருந்து கொண்டு வந்த விபூதி பிரசாதத்தை நீட்டியவாறு சொல்லிக்கொண்டிருந்தாள்.

இறுதியாக விபூதி இருந்த வெற்றிலையை அபிதாவிடம் நீட்டி,       “ இந்தா பூசிக்கோ… அப்படியே அதை சுவாமிபடத்துக்கு முன்பாக வைத்துவிடு  “எனச்சொல்லிக்கொண்டு  “அப்பாடா… “ என அமர்ந்து கால்களை நீட்டி உளைவெடுத்தாள்.

 “  காலை பிடித்துவிடவேண்டுமா ரீச்சர்..?  “ அபிதா அருகில்வந்தாள். 

“  வேண்டாம்.  முடிந்தால் ஒரு தேநீர் தா…?   “ எனச்சொல்லிவிட்டு முன்னால் அமர்ந்திருந்த மஞ்சுளாவின் தாய் சிவகாமசுந்தரியை பார்த்து,  “  எப்படி  இருக்கிறீங்க…  நீங்கள் எந்த ஸ்கூல்…?   “ எனக்கேட்ட கற்பகம், குஷனில் சாய்ந்து அமர்ந்தாள்.

 கண்டியிலிருக்கும் சர்வதேசப்பாடசாலையைப்பற்றி மஞ்சுவின் தாய் விபரித்தாள்.

இரண்டு ரீச்சர்மாரும் இனியென்ன பேசுவார்கள் என்பதை தெரிந்துகொண்ட அபிதா,  வீட்டு வேலைகளில் மூழ்கினாள்.

கவனம் வேலையிலிருந்தாலும் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது. அந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு டிக்கட்டாக கழன்றுகொண்டிருக்கும்போது, ஒருகட்டத்தில் ஜீவிகா, தனக்கும் டிக்கட் கிழித்துவிடுவாளோ…? என்ற யோசனையும் அபிதாவுக்கு வந்தது.

கடந்த சிலநாட்களாக அவளுக்கு, அவளது எதிர்காலம் பற்றிய பயமும் யோசனையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

எது நடந்தாலும் விதிப்படிதானே நடக்கும்.  நிகும்பலையூருக்கு வருவேன் என்று என்றைக்காவது தீர்மானித்திருந்தேனா..? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் வன்னியிலிருந்து இந்த ஊருக்குத்துரத்தப்பட்டிருக்கிறேன். அடுத்து எங்கே…?

வந்தவிடத்தில் சந்தித்திருக்கும் பெண்கள் எவரையுமே முன்னர் தெரியாது. அனைத்தும் புதுமுகங்களாக இருந்து,  தற்போது பழைய முகங்களாக மாறிவிட்டன. 

அடியாத மாடு - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

’அடியாத மாடு படியாது’ என்று ஊர் வழக்கில் கூறுவார்கள். அன்று கற்றுக் கொடுப்பவர் தனது மாணவரின் தப்புகளைத் திருத்தும் போது அடிப்பது வழக்கம். அப்படி அடிப்பது முறை என்று கருதிய காலம் ஒன்று இருந்தது. இன்று போல பிள்ளைகளை அடிக்கக் கூடாது; அடிப்பது அவர்களின் மனோ வளர்ச்சியைப் பாதிக்கும் என யாரும் அன்று கருத வில்லை. அல்லது அன்று அடி வாங்கிப் படித்தவர்கள் யாரும் அடி பட்டதால் மனத்தாங்கல் ஏற்பட்டுப் பின் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களின் வாழ்க்கையை அது பாதித்து விட்டதாகவும் யாரும் கூறவில்லை.



இவ்வாறு திண்ணைப்பள்ளிக் கூடத்திலே அடி வாங்கிப் படித்தவர் தான் டாக்டர். உ.வே.சாமிநாதய்யர். பிற்காலத்திலே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மேதை அவர். இவர் தனது சுயசரிதையில் தான் ஆரம்பகாலத்தில் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் கற்றதை விளக்குகிறார்.

அதிகாலையில் எழுந்து திண்ணைப்பள்ளிக் கூடம் போக வேண்டுமாம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன். இருட்டாக வேறு இருக்கும்; அச் சமயத்தில் ஆசிரியருக்கு யார் வந்தனரெனத் தெரியாது. இப்போது மாதிரி என்ன மின்சார விளக்குகளா அந்தக் காலத்தில்? ஆசிரியர் சிறிது செருமுவார் - தான் இருப்பதை அறிவிக்க. அப்போது மாணவர் தனது பெயரைக் கூறுவார். ஓரிரு மாணவர்கள் வந்து சேர்ந்ததும் அடுத்து வரும் மாணாக்கருக்குக் கையை நீட்டச் சொல்லி ஆசிரியர் பிரம்பால் தடவுவார்.

பிரம்பாலே முதலில் கையில் தடவிய ஆசிரியர் அடுத்து வரும் மாணவருக்கு சிறிது உரமாக அடிப்பார். இவ்வாறு ஒவ்வொரு மாணவருக்கும் படிப்படியாக அடியின் வேகம் கூடும். கடசியாக வருபவருக்கு நல்ல அடி கிடைக்கும். ஏன் இப்படி அடிக்கிறார் என எண்ணுகிறீர்கள்? மாணவர் யாவரும் விடியற்காலை கருக்கல் பொழுதாக இருக்கும் பொழுதே திண்ணைப்பள்ளிக் கூடத்துக்கு வந்து விட வேண்டும். இது தான் படிக்கும் மாணவருக்கு இருக்க வேண்டிய பண்பு எனக் கருதப்பட்ட காலம் அது!

வலிசுமக்கும் ஆற்றலில்லார் வாழ்வுதனை இழக்கின்றார்! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா

உற்றாரைப் பெற்றாரை

ஊரைவிட்டு ஓடிவந்து

பெற்றுவிடும் ஆசையினால்

பெருங்கனவை மனமிருத்தி

கற்றகல்விக் கேற்காத

கண்டகண்ட வேலையிலே

காலைமாலை பார்க்காமல்

காசுழைக்க  ஓடிநிற்பார் !

 

மொழியறிவு இருக்காது

முழுவயிறும் நிரம்பாது

படுகின்ற தொல்லைகளோ

படுநரகம் ஆகிவிடும்

விளங்காமல் பலவற்றை

விழுங்கவே செய்திடுவார்

வளஞ்சிறக்க பணங்காணும்

வாஞ்சையிலே மழுங்கிடுவார் !

 

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 12 - பாதுகாப்பு - சுந்தரதாஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் பா வரிசையில் பல படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் பீம்சிங். இவர் இயக்கிய பாகப்பிரிவினை பாலும் பழமும் , பாவமன்னிப்பு போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று சிவாஜி பீம்சிங் இருவருடைய திரையுலக வாழ்விலும் தடம் பதித்தது. அவ்வாறு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் தான் பாதுகாப்பு. கலரில் உருவான இப்படத்தை 1970 ஆம் ஆண்டு தயாரித்து திரைக்கதை எழுதி இயக்கினார் பீம்சிங்.

இயந்திர படகு ஒன்றின் சொந்தக்காரரான வையாபுரி தன்மகன் விநாயகத்துடன் சேர்ந்து கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார் அவனுடைய இரண்டாவது மகனான கந்தன் இவர்களுடைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர்களுடனேயே பணியாற்றுகிறார். இந்நிலையில் ஓரிரவு படகு புறப்படும் போது வள்ளி என்ற பெண் பாதுகாப்பு கேட்டு படகில் ஏறுகிறாள். மூன்று ஆடவர்கள் மட்டும் இருக்கும் படகில் ஏறும் வள்ளி தான் யார் என்பது பற்றி மூன்று விதமான கதைகளை மூவரிடமும் சொல்கிறாள்.

கந்தனிடம் தான் ஒரு பாம்பாட்டி என்றும், விநாயகத்திடம் நாடக நடிகை என்றும் வையாபுரி இடம் நாட்டியக்காரி என்றும் கூறுகிறாள். மூவருக்கும் அவள் மீது ஆசை பிறக்கிறது ஆனால் வள்ளி யார் என்பதுதான் படத்தின் முடிச்சு.

படத்தில் வள்ளியாக நடித்தவர் ஜெயலலிதா விதவிதமான வேடங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார் . படத்தின் கதை அவரை வைத்து பின்னப்பட்ட தால் தன் நடிப்பை பாராட்டும்படி வழங்கியிருந்தார். கந்தனாக வருபவர் சிவாஜி இவரின் வழமையான கதாபாத்திரத்தில் இருந்து சற்று மாறுபட்டதாகவே இப்படத்தின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது அதனால் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. கூடவே நம்பியார் சுந்தரராஜன் இருவரும் இவர்களுடன் இணைந்தார்கள்.