.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும்.

மாலை 6:30 மணிக்கு முன்னரே Revergum Performing Arts Centre மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரட்ணம் ரகுராமும் செல்வி
கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை
ஆரம்பித்தனர்.
தொடர்ந்து,
அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு. சிறீ யோகராஜா கந்தசாமி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக சில
வார்த்தைகள் பேசி சம்பிரதாயபூர்வமாக அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்.
மண்டபத்தின் திரை விலகவும் ஒளி வெள்ளத்தில் நீல வர்ணத்தில் அமைந்த சிவனின்
பின்னணி திரைச்சீலையும் அதற்கு முன்னே அலங்கரிக்கப்பட்ட மேடையில் பாடகர் சிறீ
அகிலன் சிவானந்தன் நடு நாயகமாக வீற்றிருக்க, விழா நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் அணியிசைக் கலைஞர்களுடன் ஒருமித்த
இசையொலி நாதத்தை அள்ளி ஊற்றியது என்றால் மிகையாகாது.