மரண அறிவித்தல்


மரண அறிவித்தல்

திருமதி கமலநாயகி பிரணவநாதன்

தோற்றம்: 15/06/1934         மறைவு: 08/12/2022


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சிட்னி, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலநாயகி பிரணவநாதன் அவர்கள் 08/12/2022 அன்று சிட்னியில் காலமானார்அன்னார் காலஞ்சென்றவர்களான திரு சின்னையா, திருமதி தங்கமுத்து அவர்களது அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு பிரணவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்காலஞ்சென்றவர்களான ருக்மணி, தவஞானம், சலஸ்வதி, Dr. பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் மயூரன், லோஜனா, அமலன், மோகனன் ஆகியோரின் அன்புத் தாயாரும், குமுதினி, கருணாசலதேவா, கிரிஜா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும், கோகுலன், திரிவேணி, Dr. ஜனனி, ஹரிகரன், சௌமியா, மகனியா, அனித்தா, கிரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக  திங்கட்கிழமை 12/12/2022  மாலை 6:30 மணியிலிருந்து 9 மணி வரை Liberty Funerals, 101 South Street, Granville NSW 2142 இல் வைக்கப்பட்டு 14/12/2022 புதன் கிழமை  காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை 4 Brooklyn Street, Strathfield South NSW 2136 இல்லத்தில் ஈம சடங்குகள் நடைபெற்று மதியம் 1:30 இலிருந்து 2:15 வரை இறுதி கிரியைகள் South Chapel, Rookwood Crematorium, 1 Hawthorne Ave, Rookwood NSW 2141 இல் நிறைவுபெற்று தகனம் செய்யப்படும்.


தொடர்புகளுக்கு:

 

மயூரன் (மகன்)       

0409 424 362

லோஜனா (மகள்)

0438 051 115

அமலன் (மகன்)

0419 555 097

மோகனன் (மகன்)

0439 439 054

கருணாசலதேவா (மருமகன்)

0418 442 674



”தீந்தமிழே! நல்லமுதே!” - கவிதை - மெல்போர்ன் அறவேந்தன்


 


நல் வழியில் நடைபயின்றார் நல்லைநகர் நாவலர் பெருமான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா                                                        

      

நல்லைநகர் என்றாலே எல்லையில்லா இன்பம்


வரும்.வல் வினைகள் போக்குகின்ற வடிவேலன் உறை யும் இடம்.அந்தவிடம் அமைந்த விதம் அனைத்துக்கும் பெருமைதான்.சொல்ல வல்ல ஒருவர் பிறக்கின்றா ர். அவர் பெயருடன் நல்லைநகரும் இணைந்து விடுகிறது. நல்லை நகர் சேர்ந்ததனால் அவர் புகழ் பெற் றாரா அல்லது அந்தக் கந்தப் பெருமான் அருள் கிடைத்ததால் அவர் புகழ் பெற்றாரா என்று எண்ணி நிற்கும் அளவுக்கு அவர் சிறந்தோங்கி விளங்கினார். அப்படி விளங்கியவர்தான் நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான்.

 


கந்தப்
  பெருமானைத் தன் சிந்தையில் இருத்தி - தன் வாழ்க்கைப் பாதையினை அவர் அமைத்து அதன் வழியில் நடந்தார் எனலாம். கந்தப் பெருமானை மனம்முழுக்க எண்ணிய இருந்த காரணத்தால் கந்த புராணத் தை உயிராக நாவலர் பெருமான் கருதினார். " கந்த புராண கலாசாரம் " என்னும் வகையில் ஒரு புதுமையான கலாசாரம் தோன்றி இன்றளவும் ஈழத்தில் யாழ்மண்ணில்  இருப்பதற்கு மூலகாரணமாய் நாவலர் பெருமானே அமைந்தார் என்பதை அனைவரும் அகத்தில் இருத்துவது அவசியமாகும்.

  நாவலர் பெருமானை ஐந்தாங் குரவர் என்று ஏற்றிப் போற்றும் ஒரு நிலையும் காணப்படுகிறது. சமய குரவர் என்னும் பொழுது சம்பந்தர்அப்பர்சுந்தரர் மணிவாசகர் வந்து அமைகிறார்கள். யாவருக்கும் இது தெரிந்த விடயந்தான். ஆனால் ஐந்தாம் நிலையில் ஒருவரை இவர்களு டன் எப்படி இணைப்பது எவ் வாறு இப்படி ஒரு சிந்தனை எழுந்தது என்றெல்லாம் எண்ண வைக்கிறதல்லவா ! இங்குதான் நாவலர் தேர்ந்தெடுத்து நடந்த பாதையினைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.சமய குரவர்கள் என்ன செய்தார்கள் அவர்களைக் கோவிலில்களில் வைத்து அவர்களுக்குக் குருபூசை செய்வதற்குக் காரண ந்தான் என்ன பூசிக்கப்படுகிறார்கள் கொண்டாடப்படுகிறார்கள் ,உயர்நிலையில் வைக்கப்படுகிறார்கள் - என்றால் அவர்கள் நிச்சயம் சமூதாயத்துக்கு மிகவும் உவப்பான அவசியமான செயல்களைச் செய்திருப் பவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது புலனாகி நிற்கிறதல்லவா !

  சமயகுரவர்களில் முன்னிற்பவர் சம்பந்தப்பெருமான். அவரின் சம காலத்தவர் அப்பர் பெருமான். இவர்கள் இருவரும் எங்கள் இன் தமிழை இதயத்தில் வைத்து ஏந்தினார்கள். அது போல் சைவவத்தையும் இதயத் தில் இருத்தி வைத்தார்கள். சைவம் ஒரு கண்ணாயும் தமிழ் மற்றக் கண்ணாயும் இவர்கள் கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது.மாற்று மதமும் வேற்றுக் கலாசாரமும் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டை யும் சைவத்தையும் அடக்கி ஒடுக்கி அழிக்கின்ற வகையிலே வந்த பொழுது - அவற்றை அகற்றிட        " நாமார்க்கும் குடியல்லோம் " என்னும் துணிவுடன் வந்தவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும். சம்பந்தர் இளையவர்.அப்பர் முதிர்ந்தவர். இளமையும் அனுபவமும் இணைந்து ஒரு பெரிய போராட்டமே தமிழ கத்தில் நடந்தது. அந்தப் போராட்டாத்தின் முதல் படைத் தளபதிகளாய் ஆண் டவனைத் துணையாக்கி நின்றவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும் ஆவர்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 43 எங்கள் வீட்டில் தங்கியிருந்த ஒரு பாடகியும் ஒரு படைப்பாளரும் ! அசைவ உணவுக்கு “ குட்பை “ சொன்ன சுகமான நாட்கள் ! ! முருகபூபதி


எனது இந்தத்
தொடர் எனது வாழ்க்கையையும் நான் உளமாற நேசித்த எழுத்துப் பணியையும் பற்றி பேசிக்கொண்டிருப்பதாக எனக்கு நெருக்கமான சில அன்பர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதனால்தான் தலைப்பே அவ்வாறிருக்கிறது என்பேன்.

ஒருவர் தான் உட்கொள்ளும் உணவின் தெரிவுகளில் கூடுதல் அக்கறை செலுத்தினால், அவருக்கு வயது மூப்பு நெருங்குகிறது என்பது அர்த்தம்.

நீண்ட காலமாக நீரிழிவு உபாதையினால் சிரமப்படும் நான் மாரடைப்பு வந்தமையினால்  இருதய  சத்திர சிகிச்சையை 2003 ஆம் ஆண்டு செய்துகொள்ள நேர்ந்தது. அதன்பிறகு  இன்சுலின், மருந்து மாத்திரைகள் என காலம் ஓடுகிறது.

அதன் பக்கவிளைவுகளினால், மேலும் சில உடல் உபாதைகள்


தொற்றிக்கொண்டுவிட்டன.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு வந்த பின்னர்தான் கோழி இறைச்சிக்கறியே சாப்பிட்டேன்.  ஊரில் எங்கள் வீட்டில் மச்சம் என்றால் கடல் உணவு மாத்திரம்தான் சமைப்பது வழக்கம்.

ஆட்டிறைச்சி சமைப்பது அபூர்வம்.  அம்மாவும் நானும் சாப்பிடமாட்டோம்.

1983 ஆம் ஆண்டு அப்பா இறந்தபோது, எட்டுச்செலவுக்காக உறவினர்கள் வெளியூரிலிருந்தும் வந்திருந்தார்கள்.  நான் வேலைக்குச்சென்று இரவு திரும்புகின்றேன்.  வீட்டு வாசலில் ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது.

அது கத்திக்கொண்டிருந்தது.  அதற்கு முன்னால் பலா மர இலைக்கிளைகள் கட்டப்பட்டிருந்தன. இருந்தும் அது ஏனோ ஈனஸ்வரத்தில் கத்திக்கொண்டிருந்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் இந்த ஆடுகள் குறித்து ஒரு உருக்கமான பாடலை எழுதியிருக்கிறார்.

 “ இரைபோடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம், வீண்
அனுதாபம் கொண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே 

மகாத்மா காந்தியடிகள் ஒரு தடவை ஆட்டிறைச்சியை உண்டுவிட்டு பெரிதும் வருந்தினாராம். தனது வயிற்றிலிருந்து ஒரு ஆடு கத்துவது போன்ற உணர்வால் அவர் துடிதுடித்திருக்கிறார்.

வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டின் ஓலத்தை கேட்டுவிட்டு,  “ யார்.. இந்த ஆட்டை இங்கே கட்டி வைத்திருப்பது..?  “ என்று அம்மாவிடம் கேட்டேன்.

 “ நாளை அப்பாவுக்கு எட்டுச்செலவு.  படையல் சமையலுக்காக தம்பி வாங்கி வந்து கட்டியிருக்கிறான்  “ என்று அம்மா சொன்னதும், எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

வேலையால் வந்து, உடையும் மாற்றாமல் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். நேரே அக்கா வீட்டுக்குச் சென்று முறையிட்டேன்.

 “ பாவம் அந்த ஆடு. ஆட்டிறைச்சி இல்லாமல் எங்கட ஆட்களுக்கு சாப்பிட முடியாதா..?  “ என்று கத்தினேன்.

அக்கா என்னை சமாதானப்படுத்தினார்.

அப்போது அக்காவுக்கு ஒரு கதை சொன்னேன்.

நீங்களும் அதனை இப்போது கேளுங்கள்.

வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ... ஆஸ்திரேலியா

 

  வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர். புதுமைக்கு வித்திட்ட  புரட்சிக்கவி.விடுதலைக்குக் கீதம் இசைத் திட்ட வீரக்கவி.இருப்பதில் இன்பத்தைப் பெருக்கிப் பார்த்திட்ட


ஏற்றமிகு கவி.பழமைக்கும் புதுமைக்கும் பாலமா ய் அமைந்திட்ட பாரத்தின் பண்பாடும் கவி.அஞ்சாத சிங்கமாய் ஆர்ப்பரித்து நின்ற அழகு தமிழ்க் கவி. அந்தக் கவிதான் எங்கள் முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் எடுப்பாய் திகழ்ந்து  - பாரதி என்று  பட்டொளி வீசி நின்ற  கவிக் குயிலாகும். பாரதி என்றதுமே அதில் ஒரு அதிர்வு உருவாகிற தல்லவா ! பாரதி என்றதுமே அதில் ஒரு புது உற்சாகம் பீறிட்டு வருகிற தல்லவா ! பாரதி என்றதும் தளர்வு அகன்று நிமிர்வு எழுகிறதல்லவா ! அந்தளவுக்கு  " பாரதி " என்பது ஒரு மந்திரமாய் தமிழுலகில் நிலைத்து நிற்கிறது என்பதை மனத்திருத்துவது அவசியமாகும்.

 எதையெடுத்தாலும் பாரதிக்கு முன் - பாரதிக்குப் பின் என்று பார்ப்பதுதான் உகந்ததாய் இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். சிந்தனைசெயற்பாடுஇலட்சியம் கருத்துக்கள்கவிதைஎழுத்து நடை என்னும் வகையில் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும்.பாரதிக்கு முன்னர் தமிழும் இலக்கியமும்சமுதாயமும் அமைந்த விதம் வேறாகவே இருந்தது. அதுதான் காலத்தின் நிலை. காலத்தின் தேவையினைக் கருதியே இலக்கியங்கள் எழுகின்றன. இதனால்த்தான் இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்று பார்க்கின்ற னர்.அந்தவகையில் பாரதிக்கு முன்னர் காணப்பட்ட இலக்கியப் போக்கிலிருந்து பாரதி மாறுபடுகிறாரா அல்லது வேறுபடுகிறாரா என்னும் வகையில் சிந்திப்பது பொருத்தமாய் இருக்கும் அல்லவா !

புகுந்த வீடு - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 1972ம் வருடம் நட்சத்திர நடிகர்களான எம் ஜி ஆர்,சிவாஜியின் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று கொண்டிருந்த கால கட்டத்தில் சந்தடி சாக்கில் வெளியாகி வெற்றி பெற்ற சின்ன பஜட் படம்தான் புகுந்த வீடு.இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் சம்பவங்கள்,மாற்று சம்பந்தம்,அதனால் ஏற்படும் சிக்கல்கள் இவற்றை அடிப்படையாக வைத்து படத்தின் கதையை எழுதி அவற்றுக்கான வசனங்களையும் அமைத்திருந்தார் கல்லூரி பேராசிரியர் ஏ எஸ் பிரகாசம்.



சுப்ரமணிய ரெட்டியார் என்ற புதுத் தயாரிப்பாளர் படத்தை தயாரித்திருந்தார்.படத்தில் கதாநாயகனில் ஒருவராக சிவகுமார் நடிப்பதாக ஆரம்பத்தில் இருந்த போதும் பின்னர் அந்த வேடத்தில் ரவிச்சந்திரன் நடித்தார்.உண்மையில் அந்த வேடத்துக்கு அவரே பொருத்தமாகவும் திகழ்ந்தார்.அலட்சியம்,தெனாவெட்
டு,காதல் என்று கலந்து தன் நடிப்பை வழங்கினார் அவர்.அவருடன் ஜோடி சேர்ந்தவர் லக்ஷ்மி.72ம் ஆண்டு இவர் நடிப்பில் பல படங்கள் வெளிவந்தன.ஆனால் ஒன்றிலும் குறை வைக்காமல் நடித்திருந்தார்.இந்த படமும் அவர் நடிப்பில் மிளிர்ந்தது.நீண்ட காலத்தின் பின் நடிகையர் திலகம் சாவித்ரி அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.நடிப்பிலும்,உருவத்திலும் முதுமை தெரிந்தது.

பல படங்களில் சகோதரிக்கு அண்ணனாக வந்து உருகும் ஏவி எம்

ராஜன் இதிலும் அதையே செய்கிறார்.அவருக்கு ஜோடி சந்திரகலா.சோ,மனோரமா இருவரும் சில நேரங்களில் சிரிக்க வைக்கிறார்கள்.இவர்களுடன் வி எஸ் ராகவன்,பழம் பெரும் நடிகை அங்கமுத்து ஆகியோரும் நடித்திருந்தனர்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அண்ணனின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் லலிதா சுத்தம் சுகாதாரம் என்று கூறி நோயாளர்களை வெறுக்கிறாள்.இளம் பாடகனாக சுந்தரத்தின் குரலில் மயங்கி அவனையே அண்ணனின் அனுமதியோடு மணக்கிறாள்.அதே சமயம் சுந்தரத்தின் தங்கையை லலிதாவின் அண்ணனும் மணக்கிறான்.ஆனால் சுந்தரத்தின் தாய் நோயாளி என்று அறிந்ததும் அவளை அவமானப் படுத்துகிறாள் லலிதா.இதனால் சுந்தரம் லலிதா உறவில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிகிறார்கள்.லலிதா புகுந்த வீட்டில் இருந்து அண்ணனின் வீட்டுக்கு திரும்புகிறாள்.வந்த கையோடு தனது பிடிவாதத்தால் தன் அண்ணியையும் அண்ணணிடம் இருந்து பிரித்து விடுகிறாள்.பிரிந்த குடும்பங்கள் மீண்டும் இணைந்தனவா என்பதே மீதி கதை.

படத்துக்கு பலமாக அமைந்தது லட்சுமியின் நடிப்பும்,ஏ எஸ் பிரகாசத்தின் வசனமுமாகும். இந்த நெஞ்சு வலி நம் நாட்டு பெண்கள் கருவில் உருவாகி கட்டையில் போகும் வரை இருக்கும் பந்த பாசத்தினால் உண்டான வலி,இது ஒரு உளுத்து போன மூங்கில் பந்தலுக்கு ஆகாது பாடைக்கும் உதவாது,நோயும் நொடியும் மனுசனுக்கு சொல்லிக்கிட்டு வாரதில்லை அழகும் இளமையும் நிலைத்து நிக்கிறதில்லை போன்ற பிரகாசத்தின் வசனங்கள் பிரகாசமாக இருந்தன. அதே போல் நோயாளர் மீதான அலர்ஜியை அடிப்படையாகக் கொண்டு அவர் உருவாக்கிய கதையின் கருவும் வித்தியாசமானது.

இரவினில் ஆட்டம் , பகலினில் தூக்கம் ! அவதானி


ஏறக்குறைய 58 வருடங்களுக்கு முன்னர் இயக்குநர் ஏ.பி. நாகராஜனின் நவராத்திரி திரைப்படம் வெளியானது. நடிகர் திலகம்  சிவாஜி கணேசனின் நூறாவது திரைப்படம்தான் நவராத்திரி.

இதில் ஒரு  இரவு விடுதியில்  அவர் மதுபோதையில் பாடுவதுபோன்று ஒரு காட்சி வரும். அந்தப்பாடல் வரிகளின் தொடக்கத்தையே இந்த பத்தியின் தலைப்பாக்கியிருக்கின்றோம்.

கவியரசு கண்ணதாசனுக்கு நன்றி.

அந்தப்படம் வெளியாகிய வருடத்திற்கு மறு ஆண்டு 1965 ஆம் ஆண்டு


பிறந்திருப்பவர்தான், இன்றைய இலங்கை அரசின் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே.

இவர் இங்கிலாந்து பிரஜை எனவும் செய்திகள் அடிபடுகின்றன.  இவரது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்தாக்கும் உத்தரவை பிறப்பிக்கக்கோரி மேன்முறையீட்டு நீதி மன்றிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் கசிந்தன.

சரிந்துகொண்டிருக்கும் இலங்கைப் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு டயனா கமகே அரசுக்கு வழங்கியிருக்கும் பெறுமதியான ( ? ) ஆலோசனையை ஊடகங்களில் படித்தபோதுதான், மேற்குறிப்பிட்ட   “ இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ..  “ பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

வெளிநாட்டுப் பிரஜையாக கருதப்படும் அவர் எவ்வாறு தற்போதைய அரசியல் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார் என்பது பற்றி ஆராய்வதல்ல இந்த பத்தியின் நோக்கம்.

அதனை மேன்மைதாங்கிய சபாநாயகர் அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக பராளுமன்றம் வந்திருக்கும்  அவர் எவ்வாறு ரணில் அரசுக்குள் உள்வாங்கப்பட்டார் என்பது பற்றியும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கட்டும்.  ஜனநாயகத்தின் போர்வையில் எது நடந்தால்தான் என்ன..? இதுவும் நடக்கும். இதற்கு மேலும் நடக்கும்.

இராஜாங்க அமைச்சர் சில மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டில் கஞ்சா பயிரிடுவதை சட்டபூர்வமாக்கவேண்டும் என பேசியபோதே, ஓகோ… அவர் எதனை நோக்கி காய் நகர்த்துகிறார் என்பதை அவதானிக்க முடிந்தது.

இலங்கைச் செய்திகள்

மாகாண, மாவட்டங்களிடையே மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போக்குவரத்து உடன் இடைநிறுத்தம்

சீனாவுக்கு எதிரான சாணக்கியனின் கருத்துக்கு எதிராக போராட்டம்

கிளிநொச்சியில் 165 மாடுகள் மற்றும் ஆடுகள் பலியாகின

புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்வர்

பெற்றோர் போதைக்கு அடிமை; 12,000 குழந்தைகள் அநாதை இல்லங்களில் வாழ்க்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்


மாகாண, மாவட்டங்களிடையே மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போக்குவரத்து உடன் இடைநிறுத்தம்


கிளிநொச்சி பிரதேசத்தில் குளிர் காரணமாக உயிருக்கு போராடும் கால்நடைகளை காப்பாற்றுவதற்காக, மக்கள் தீ மூட்டி அவற்றுக்கு அருகில் வைத்துள்ளனர்.

- வடக்கில் 358 மாடுகள்; 191 ஆடுகள் உயிரிழப்பு
- கிழக்கில் 444 மாடுகள்; 34 எருமைகள்; 65 ஆடுகள் பலி
- கால்நடைகளின் மாதிரிகளை பெற்று ஆய்வு

பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு, மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான  மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போக்குவரத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

உலகச் செய்திகள்

பாலி தாக்குதல்கள் குற்றவாளி விடுதலை

ரஷ்யாவின் தாக்குதல்களால் இருளில் மூழ்கியது உக்ரைன்

ரஷ்யாவின் எண்ணெய் மீதான ஐரோப்பிய விலை வரம்பு அமுல்; எண்ணெய் விலை அதிகரிப்பு

இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது சரமாரித் தாக்குதல்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; மக்கள் வெளியேற்றம்


பாலி தாக்குதல்கள் குற்றவாளி விடுதலை

2002ஆம் ஆண்டு 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட பாலி குண்டு தாக்குதல்களின் குற்றவாளி உமர் படெக் தனது தண்டனை காலத்தில் பாதியை அனுபவித்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மெல்பேர்ன் மாநகரில் 12/12/2022 முதல் 18/12/2022 வரை "சித்தாந்த கலாநிதி" "செந்தமிழரசு" திரு கி. சிவகுமார் M.E. அவர்களது " சைவத்தமிழ் பேருரைகள்"


 



“ஔவை நடராசனின் பன்முக ஆளுமை”

 


இலக்கியவெளி  நடத்தும்


இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 25


“ஔவை நடராசனின் பன்முக ஆளுமை

 

நாள்:         ஞாயிற்றுக்கிழமை 18-12-2022       

நேரம்:     

 

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 8.30        

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 

 

வழி:  ZOOM

 

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

                     

சிறப்புப் பேச்சாளர்கள்:

 

“செயல் ஆளுமை- பேராசிரியர் ப. தாமரைக்கண்ணன்


“சொல் ஆளுமை
 -  பேராசிரியர் இராம.குருநாதன்

 

“பட்டிமன்ற ஆளுமை- பேராசிரியர் க.பஞ்சாங்கம்

 

 

மேலதிக விபரங்களுக்கு:  - அகில்  001416-822-6316

விக்ரம், பொன்னியின் செல்வன் முன்னிலை

 Saturday, December 10, 2022 - 11:26am

ஜனவரி 07ஆம் திகதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் எடிசன் திரை விருது நிகழ்வில் உலக தமிழர்கள் கடந்த ஒரு மாதமாக வாக்களித்து வருகின்றனர்.

அவ்வாக்களிப்பில் கமலஹாசனின் விக்ரம், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் இவ்விரு படங்களும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கின்றன. கமலஹாசனின் திரை வாழ்க்கையில் அதிகப்படியான வசூலை ஈட்டிய படம் மட்டுமல்லாது மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழனின் பெருமைகளை உலகிற்கு எடுத்து சொல்ல வாய்ப்பை பயன்படுத்தி எடுத்த மணிரத்தினத்திற்கு மகுடமாய் அமைந்த பொன்னியின் செல்வன் திரை கலைஞர்கள் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளனர்.

2022ஆம் ஆண்டு திரைக்கு வந்த படங்களில் முக்கியமாக விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களை உலக தமிழர்கள் வாக்களித்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் மலேசியா தீனா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நன்றி தினகரன்