விடியலைத் தேடிய விழிகள். -கவிதை -செ;பாஸ்கரன்


.

கண்ணிமையின் படபடப்பில்
மின்னல் முளைத்துப் போகிறது
காற்றுக்கூட மெல்லவீசி
உன் மூச்சுக்காற்றைத் தேடுகிறது
வாழ்க்கையின் தத்துவங்கள் போல
நீ வந்து வந்து போகிறாய்
தென்றலின் அசைவில்கூட 
தென்னைமரம் சிலிர்த்துக் கொள்வதுபோல்
உன் வருகையில் நான் உயரப் பறக்கிறேன்



மெல்பேர்ண் ஸ்ரீ முருகப் பெருமானின் தேர்த்திருவிழா


.
மெல்பேர்ண் சண்சயின் ஸ்ரீ முருகப் பெருமானின் மகோற்சவத் தேர்த்திருவிழா 
நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேர்ண்






Melbourne மாநிலத்தில் உள்ள Sunshine  னில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அழகன் கந்தனவன் தமிழ்க் கடவுள் என்று கூறப்படும் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த மாதம் 29.01.2012 ஞாயிற்றுக்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இறைவனின் ஜந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் ஆகியவற்றை விளக்குவதையே திருவிழாக்கள் குறிக்கின்றது எனலாம்.


ஈழத்தமிழர் கழகத்தின் உணவுடன் ஒன்றுகூடல்


.
ஈழத்தமிழர் கழகத்தின் உணவுடன் ஒன்றுகூடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிதொடக்கம் றைட் சிவிக் சென்ரர் மண்டபத்தில் இடம் பெற்றது.  யதுகிரி லோகதாசன் தமிழ்வாழ்த்துப்பாடி ஆரம்பித்து வைக்க தொடர்ந்து தென்துருவ தமிழ்சங்கங்களின் செயலாளர் விக்டர் ராஜகுலேந்திரன் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி எடுத்துரைத்த பின்

சங்கர் மகாதேவனின் இசை இரவு -19 Feb


எங்கோ... யாரோ...யாருக்காகவோ..... (சிறுகதை)


.
                                                                                                                       முருகபூபதி


“ சேர்... வவுனியா வந்திட்டுது.” சாரதி அருகில் அரைத்தூக்கத்திலிருந்த மூர்த்தியை தட்டி எழுப்பினான்.
 அதிகாலை கொழும்பிலிருந்து புறப்படும்போது, ‘எப்படியும் காலை ஒன்பது மணிக்குள் வவுனியாவை வந்தடைந்துவிடலாம்’ என்று  சொன்ன சாரதி சொன்னபடி நிரூபித்தும்விட்டான். அந்த வாகனத்தையும் சாரதியையும் வெள்ளவத்தையில் அறிமுகப்படுத்திய நண்பனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டார் மூர்த்தி. போர் முடிந்து இரண்டுவருடங்களின் பின்னர் இலங்கை வந்திருந்த மூர்த்திக்கு இலங்கையில் பார்ப்பதற்கு சொந்தபந்தங்கள் என்று குறிப்பிடும்படியாக எவரும் இல்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நாட்டில் புகலிடம்பெற்று, கடைகள் நடத்தலாம் சங்கங்களில் இணைந்திருக்கலாம். கோயில்கள் கட்டியிருக்கலாம். கடன் அட்டை மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம். எழுத்தாளர்கள் ஆகியிருக்கலாம்....அவர்களைப் பற்றிவரும் மின்னஞ்சல் தகவல்களும் தொலைபேசி அலட்டல்களும் மூர்த்திக்கு முக்கியத்துவமற்றுப்போய்விட்டன.
 போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்துடன் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்துடன் அதன் தொடக்க காலத்திலிருந்து இணைந்திருந்த மூர்த்தி, போருக்கு முன்னர் பலதடவைகள் இலங்கை வரமுயன்றும் சாத்தியமாகவில்லை.

இலங்கைச் செய்திகள்

.
பாகிஸ்தானில் ஜனாதிபதி மஹிந்த... _
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலிப் சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி உட்பட அதிகாரிகள் பலரையும் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



சிவனொளிபாதமலையில் சடலம் மீட்பு 


சிவனொளி பாதமலையின் சீதகங்குல ஆற்றுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லதண்ணி பொலிஸார் மீட்டுள்ளனர்.

வட - கிழக்கில் இராணுவத்தில் பணிபுரிந்தோர் ஆளுநர்கள் ஏனைய மாகாணங்களில் ஆளுநர்களாக சிவிலியன்கள் _




கிழக்கில் கடும் மின்னல் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள் நொருங்கின பலருக்கு காயம்



மொனம் கலைகிறது - 3 - றணிலின் இராசதந்திரமும் கிழக்கின் உடைவும்:-

.
நடராஜா குருபரன்
மௌனம் கலைகிறது - 3 - றணிலின் இராசதந்திரமும் கிழக்கின் உடைவும்:-
றணிலினது சனாதிபதியாகும் தனிப்பட்ட கனவு கலைந்தபோதும் அவரது இராச தந்திரம் எவ்வாறு விடுதலைப்புலிகளை ஒடுக்குவதிற் பங்காற்றியது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் சமாந்தரமாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை விரிவாக்கும் நடவடிக்கைகளிலும் றணில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததை ஏற்கவே விபரித்திருந்தேன் அக்காலத்தில் றணில் தனது பணிக்கு துணையாக அமெரிக்காவுடன் அப்போது நெருக்கத்தை கொண்டிருந்தவரும் மேலைத்தேச அரசியற் பொருளாதார கொள்கைகளில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தவருமான மிலிந்த மொறகொடவையும் இணைத்துக் கொண்டார்.

சிட்னியில் நிகழ்ந்த "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலத்திற்கு" -கானா பிரபா


.சிட்னியில் நிகழ்ந்த "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலத்திற்கு"




நேற்றைய சனிக்கிழமை மாலைப்பொழுது செந்தமிழும்,சைவமும் கலந்த செவிக்குணவு வாய்த்த மணித்துளிகளோடு கழிந்தது. சனிக்கிழமை மாலை என்பது நம் தமிழர் மரபுப்படி விருந்துண்டு கழித்து இலங்கைப்பிரச்சனையில் இருந்து சூடான் வரைக்கும், சிவாஜியில் இருந்து சிம்பு காலம் வரைக்கும் அலசி ஆராய்ந்து பேசி மகிழ்வது அல்லது அந்த வாரம் வந்த படங்களைச் சூட்டோடு சூடாக இரண்டு டொலர் டிவிடியில் பார்த்து முடிப்பது போன்ற இன்னோரன்ன அரும்பணிகளுக்காக ஒதுக்கப்படுவது.

பரபரப்பான போட்டி: ஆஸி. வெற்றி, இலங்கைக்கு மீண்டும் தோல்வி

.


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முக்கோண ஒருநாள் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்ரேலிய அணியின் முதல் விக்கெட் 22 ஓட்டங்களை பெற்ற நிலையிலேயே வீழ்த்தப்பட்டது. அவுஸ்ரேலிய அணி சார்பாக அதி கூடிய ஓட்டங்களாக 57 ஓட்டங்களை மைக்கல் கிளார்க் பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சில் மலிங்க, குலகசகர, மத்தியூஸ், சேனாநாயக்க, பிரசாத் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர். 

சைவமன்றம் வழங்கும் கலைநிகழ்ச்சி 18 Feb

.

சிந்தனைக்குச் சில…. அழுக்காறு - பரணி


.
இருவகை மக்களை இவ்வுலகில் பார்க்கின்றோம். பிறருடைய மகிழ்ச்சியான வாழ்வையும் சீர்சிறப்புக்களையும் பார்த்து தாமும் மகிழ்ந்து உவகையுறுகின்றார்கள் ஒருவகையினர். பிறருடைய சிறப்புக்களைக் கண்டு மனம் புழுங்கி அவர்களில் வெறுப்புக் கொண்டு பொறாமைப்படுகின்றார்கள் இன்னொரு பகுதியினர்.

இவர்களில் பிறராக்கம் கண்டு மகிழ்வோரே சந்தோஷமாகவும் மன அமைதியுடனும் வாழ்கின்றார்கள். பிறராக்கம் கண்டு பொறாமைப்படுவோர் மன அமைதி அற்றுஇ மன உறுத்தலுடன் வாழ்கின்றார்கள். மற்றவர் உயர்வைக் கண்டு பொறுக்க முடியாத குணத்தை அழுக்காறு என்பர். அவர்கள் மனமும் வாழ்வும் அழுக்கு நிறைந்ததாய்த் தீமையே விளைவிப்பதாய் இருக்கும். இதனையே திருவள்ளுவர்

“அழுக்காறு எனஒருபாவி திருச்செற்றுத்
 தீயுழி உய்த்து விடும்”

இலங்கைக்கு எதிரான இணைய மகஜருக்கு ஆதரவு கிடைக்கவில்லை – அரசாங்கம்


.
டொக்டர் அருண் சிவானந்தன் என்பவரினால் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்24ம் திகதி இந்த மஜகர் உருவாக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிராக பிரித்தானியாவில் முன்வைக்கப்பட்ட இணையமகஜருக்கு எதிர்பார்த்தளவு ஆதரவு கிடைக்கப் பெறவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும் இதுதொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் மகஜரில் கோரப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மகஜர் இணையத்தில்பிரசூரிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் 3430 பேர் மட்டுமே கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த மகஜர் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்நடத்தப்பட வேண்டுமாயின் 100,000 கையொப்பங்கள் திரட்டப்பட வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்றதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொக்டர் அருண் சிவானந்தன் என்பவரினால் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்24ம் திகதி இந்த மஜகர் உருவாக்கப்பட்டது.

அவன் உறங்கும் என் படுக்கையறை -மனுஷி - கவிதை


.

என் கற்பனை வீடு

மிகவும் அலாதியானது.

ஆண்டுபல கடந்தும்

சுவர்களும் திரைச்சீலைகளும்

புத்தம்புதிதாய்

வெண்ணிறமாய்

தூய்மையாய்.

வீட்டின் அறை முழுவதும்

சோபா செட்டுகள்

புத்தகக் குவியல்

தொலைக்காட்சி

ஆங்காங்கே பொம்மைகள்

மாலைதீவில் நடந்ததுதான் என்ன? (சிறப்புக் கட்டுரை) _ஜீவா சதாசிவம்





குறைந்தளவிலான மக்கள் தொகையைக் கொண்ட இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் தீவாக விளங்கும் 'மாலை" தீவில் நடந்தது தான்என்ன? அன்று செவ்வாய்க்கிழமை! ஜனாதிபதி மொஹமட் நஷீட் எதிர்பார்த்திராத நாள் என்று கூடக் கூறலாம். திடீரென நாடளாவிய ரீதியில் வெடித்தது பாரிய ஆர்ப்பாட்டம். 

முஹமட் நஷீட் பதவிவிலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் பிரதான கருப்பொருளாக இருந்தது. இந்நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது தடுமாறிய ஜனாதிபதி முஹம்மது நஷீட் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரது பதவி விலக்கல் ஒரு திட்டமிட்ட சதியா? அல்லது சர்வதேசங்களின் மறைமுக அழுத்தமா என்ற கேள்வி எழும்புகின்றது. 

உலகச் செய்திகள்

.
ஒபாமாவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய மாணவன் _
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதை உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவரொவர் ஒத்துக்கொண்டுள்ளார்.
சிறுமியைக் கடத்தி 10 வருடங்கள் பாலியல் அடிமையாக நடத்திய ஜோடி _
அநாதரவான செவிப்புலனற்ற 10 வயது சிறுமியொருவரை பிரித்தானியாவுக்குக் கடத்தி வந்து அவரை 10 வருட காலமாக பாலியல் அடிமையாக நடத்திய ஜோடி ஒன்று தொடர்பான வழக்கு பிரித்தானிய மின்ஷல் வீதி கிறவுண் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 


விடுதலைப்புலிகளுக்கு போர்க்கருவிகள் வாங்க சதி செய்ததாக இலங்கைத்தமிழர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு 

சிறைக்குள் எரிந்த என்னிதயம் -உண்மைச் சம்பவம்

.
நோர்வே நக்கீரா



காலை புலர்ந்தும் அமைதியாகக் கிடக்கிறது ஆறண்டால் நகர். நோர்வேயின் தெற்கே அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. பெருந்தொகை பணத்தில் அங்கே அழகாக அமைக்கப்பட்டிருந்தது ஒரு சிறைச்சாலை. எமக்குச் சிறைச்சாலை என்றதும் நினைவுக்கு வருவது சித்திரவதைகூடங்கள் தான். பாதுகாப்பு என்பது இல்லாதபோது எம்நாடே ஒரு சித்திரவதை கூடமாகத்தானே இருக்கிறது. தெருவில் வைத்து ஒரு இயக்கம் யாரையும் அடிக்கும், சித்திரவதை செய்யும், சுட்டுத்தெருவில் வீசியெறியும். துப்பாக்கியும் குழுவுமிருந்தால் எதுவும் செய்யலாம் என்றாகி விட்டது எம்நாட்டில். நாய் கூடக் குரைத்துத் தன் எதிர்ப்பைக் காட்டும். என்ஈழத் தமிழ்மக்களுக்கு இந்த உரிமைகூட இல்லை.

இங்கே பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், தற்காலிகமாகக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள், விசாரணையின் நிமித்தம் நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் என்று பல வகைப்படுவர்.

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)

.
"அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன தெரியுமா? இந்த விருது எனக்கு கிடைக்குமென்று என் பதின்மூன்று வயதிலேயே எனக்கு தெரிந்திருந்தது.

ஆம்.., அப்பவே நினைவு தெரிந்த போதே பெரிய ஆளுன்னு நினைப்பெனக்கு. என் நண்பன் சொல்லுவான் பெரிய மயிருடா நீன்னு சொல்லுவான், எனக்கு மனசுல தோணும் ஆமாண்டா நான் பெரிய மயிருதான்‘னு தோணும். ஏன்னா அப்படி ஒரு நம்பிக்கை எனக்கு என் மேல, இந்த வாழ்க்கை மேல.

முடியாதுன்னு நான் எதையுமே சொல்லமாட்டேன். வானத்தை தொட முடியுமான்னா முடியும்பேன். உலகத்தை தூக்க முடியுமான்னா தூக்கி ஒரு சுண்டுவிரல்ல நிறுத்தட்டுமா'ம்பேன். அப்படி ஒரு அசாத்திய நம்பிக்கை வேணும். அது எனக்கு இருந்தது. அது என்னை தீயா வளர்த்துச்சி. விவேகானந்தர் சொல்வாரு “எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்ன்னு’ அதை கேள்விப் படும் முன்னரே, எதுவாக நினைக்கிறனோ அதுவாக ஆவேன்னு நான் கனவு கண்டிருக்கிறேன். இது இப்படி தான்னு உணர்ந்திருக்கிறேன். நாம என்ன ஆவனும்றதை உண்மையில் நாமதான் தீர்மானிக்கிறோம். தீர்மானிக்கணும்” அழுந்த சொல்லி விட்டு அமைதியாக வளாகத்தையே பார்த்தார்.

இரு பறவைகள் - கவிதை -ஜெயமோகன்


.

வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு
சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகளின்மீது எம்பித் தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிக்கடல்
இரு பறவைகள்
இரண்டிலிருந்தும் வானம்
சமதூரத்தில் இருக்கிறது
Nantri: Jeyamohan.in

விரைவில் குணமடைவேன்: யுவராஜ்சிங்

.

நுரையீரல் பகுதியில் ஏற்பட்டுள்ள கட்டிக்காக யுவராஜ்சிங் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் புற்றுநோய் மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுமார் 9 வார காலத்திற்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே யுவராஜ்சிங் விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் யுவராஜ் சிங் கூறுகையில், மருத்துவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். கடவுளின் அருளால் விரைவில் குணமடைந்து திரும்புவேன். மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.