ஒரு கண்ணாடி இரவில்.. வித்யாசாகர்

.
குருவிகள் கூடடங்கும் பொழுதில்
இருட்டோடு அப்பிக்கொள்ளும் அமைதியின் போராட்டம்,
அதை இதை என எதையெதையோ
வாரி மனதிற்குள் போட்டுக்கொண்டு தவிக்கும் வதை,
உள்ளே தூக்கிலிடும் வார்த்தைகளாய்
வாழ்வின் கணங்கள் மௌனங்களுள் சிக்கி
ஏதோ ஒன்றாக உருவெடுத்துக் கொண்டு
நீ நானெனப் பிசையும் பீதியின் கசப்பில்
நிகழ்காலம் தொலைந்தேப் போகிறது..

நீ சிரிக்கையில் நான் சிரிப்பது
சரியா என்றுகூட தெரியவில்லை,
உள்ளே ஒன்றாக வெளியில் வேறாக வாழ்வதும்
ஒரு ஒழுக்கத்தின் கற்பிதமாக கற்றதன்
பெருந்தவற்றிலிருந்து தான்
விழுந்து உடைந்து நொறுங்கி வலிக்கிறது வாழ்க்கை,
இயல்பை வளைத்து வளைந்ததை நேரென்றுக்
கற்க அடிவாங்கி அடிவாங்கி வளர்ந்ததும்
காலத்தின் எழுதாவிதிக்கு இணங்கியெனில்
என் பழிக்கூண்டில் நிற்க
யாரை நான் தேடுவது..?

ஆஸ்திரேலிய தமிழ்க்கல்வியில் ஒரு சரித்திர நிகழ்வு- அன்பு ஜெயா

.

ஆஸ்திரேலியாவில் தமிழகத்துப் பல்கலைக் கழகங்களில் ஒன்றான SRM-பல்கலைக் கழகத்தின் அயலகத் தமிழாசிரியர் (Diaspora Tamil Teacher – Diploma Course) பட்டயப் படிப்பை வெற்றிகரமாக முடித்த தமிழாசிரியர்களுக்கு பட்டமளிப்பு விழா மெல்பர்ன் நகரின் மோனாஷ் பல்கலைக் கழக வளாகத்தில் 11 ஜூலை 2015-அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. தாயகப் பல்கலைக் கழகத்தின் தமிழுக்கான பட்டமளிப்பு விழா இங்கு நடைபெறுவது ஆஸ்திரேலிய தமிழ்க்கல்வி சரித்திரத்தில் இதுவே முதல் நிகழ்வாகும். இந்த, ஒரு வருடப் பட்டயப் படிப்பையும் பட்டமளிப்பு விழாவையும் மெல்பர்ன் நகரில் வெற்றிகரமாக நடத்திய ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை நிறுவனரும் தலைவருமான திரு நாகை சுகுமாரன் அவர்களும், அவருடைய மகள், வள்ளுவர் அறக்கட்டளையின் இயக்குனரும், ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையின் செயலருமான மருத்துவர் செல்வி புவனேசுவரி சுகுமாரனும், அவர்களுடன் உழைத்த தன்னார்வலர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

பக்தி மாலை 22 July 15

.
விபுலாநந்த விலாசம் - கான பிரபா

.
"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது."ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய செவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன. 

படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
புகலிடத்தையும்  தாயகத்தையும்  முடிச்சுப்போடும் கதைகளிலிருந்து    வெளியாகும்  செய்திகள்
கே.எஸ். சுதாகரின்    இரண்டாவது    கதைத்தொகுதி சென்றிடுவீர்    எட்டுத்திக்கும்

                                         
அண்மையில்  எனக்கு  வந்த  மின்னஞ்சலில்  தனித்தமிழியக்கம் நடத்தும்   தனித்தமிழ்ச்  சிறுகதைப்போட்டி -  பரிசு  3000.00  உருவா.  என்ற  தலைப்பில்  ஒரு  அறிவித்தல். 
எனக்கு  அதனைப்படித்ததும்  குழப்பமாக  இருந்தது.   அது  என்ன தனித்தமிழ்....? அது  என்ன  உருவா...?
ஏனைய  மொழிகளில்  இத்தகைய  திருக்கூத்துக்கள்  இல்லை  என நம்புகின்றேன்.   நான்  இலக்கியப்பிரதிகளை   எழுதவும்,  பேசவும் தொடங்கிய   காலத்தில்  மூத்த  தமிழ்  அறிஞர்  மு.வரதராசனின் நூல்களைப்படித்தேன்.   அவருடைய  சிறுகதைகள்,   நாவல்கள் படித்துவிட்டு    அந்த  வாசிப்பு  அனுபவம்  எனக்கு  எந்தப்பயனும் தராது    எனத்தீர்மானித்து  வெளியே  வந்துவிட்டேன்.
அதன்பிறகு  அவரது  எழுத்துக்களில்  எனக்கு  ஆர்வமே  இல்லாது போய்விட்டது.    மக்கள்  மொழியை   இந்த  தனித்தமிழ்  தீவிரவாதிகள் ஏனோ  மறந்துவிடுகிறார்கள்.   காலத்தையும்  வென்று  வாழ்வது இலக்கியம்.   இன்று  தமிழில்  படைப்புமொழி   எத்தனையோ கோலங்கள்    கொண்டுவிட்டன.   மண்வாசனை ,  பிரதேச  மொழிவழக்கு தலித்  இலக்கியம்,  வட்டார வழக்கு,   புகலிடத்தின்  புதிய மொழிப்பிரயோகம்  என்பனவற்றையெல்லாம்  பதிவுசெய்து,   தமிழ் தரணியெங்கும்   பரவிக்கொண்டிருக்கும்  வேளையில்,  தனித்தமிழ் இயக்கம்   அதனைப் பின்பற்றுபவர்களையே தனிமைப்படுத்திவிடலாம்.
போட்டிக்கென   கதைகள்  கேட்டு  உருவா பரிசலிக்கப்போகின்றவர்களுக்கு    சுதாகரும்  கதை   அனுப்பிவிடுவாரோ  என்றும்  அஞ்சினேன்.   ஏனென்றால்  அவரது இரண்டாவது    தொகுதிக்கதைகள்  அத்தனையும்  பரிசுபெற்ற சிறுகதைகள்.
இந்த  பின்னணியுடன்  அவுஸ்திரேலியாவில்  மெல்பனில்  வதியும் சுதாகரின்   இரண்டாவது  சிறுகதைத்தொகுதி  சென்றிடுவீர் எட்டுத்திக்கும்    பற்றிய  எனது  வாசிப்பு  அனுபவத்தை  இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.


ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்

ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ் அறிமுகம்

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில், ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ் அறிமுகம், எதிர்வரும் ஆடி மாதம் 26ஆம் திகதி (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரையில்,  ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் (Peacock Room, Shri Shiva Vishnu Temple, 52 Boundary Road, Carrum Downs, Vic 3201) நடைபெறும்.

சங்கத்தின் தலைவர் திரு ஜெயராமசர்மா அவர்களின் தலைமையில் -
திரு ஜெயக்குமரன், திருமதி சாந்தினி புவனேந்திரராஜா, திரு ஜூட் பிரகாஷ் என்பவர்கள் சிறப்பிதழில் வெளிவந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் பற்றிப் பேசுவார்கள்.

 948 பக்கங்களில் வெளியாகியுள்ள இச்சிறப்பிதழில் 50 கட்டுரைகள், 75 சிறுகதைகள், 126 கவிதைகள், நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


அன்புடன்,

ஸ்ரீநந்தகுமார்
(செயலாளர்)
                                                     
செயலாளர்                                                      தலைவர்                                     பொருளாளர்
ஸ்ரீநந்தகுமார்                                        ம.ஜெயராமசர்மா                          ந.அல்லமதேவன்

(03)98013282 / 0415405361                          0431200870                                             0413528342 

’’விழுதல் என்பது எழுகையே’’ - நிறைவில் நின்று திரும்பிப்பார்க்கின்றேன்.

.
அன்புக்குரிய தமிழ்முரசு வாசகர்களே 
வாராவாரம்  வெளிவந்துகொண்டிருந்த  ’’விழுதல் என்பது எழுகையே’’  என்ற பெரும் தொடரை ஆவலோடு  வாசித்து வந்த தமிழ்முரசு வாசகர்கள் ஆயிரக்கணக்கானவகள் என்பதை எமது செயலிமூலம் பார்த்து மகிழ்வுகொண்டோம். இதை தமது அயராத முயற்சியினால் உலகெங்கும் கொண்டு சென்ற தமிழ் எழுத்தாளர் இணைய அகம் நிர்வாக பொறுப்பாளர் பண்ணாகம் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்களையும் , நிர்வாக ஒருங்கிணைப்பாளர் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் ஏலையா திரு.க.முருகதாசன் அவர்களையும் தமிழ்முரசு வாசகர்கள்  சார்பாக வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம் .
விரைவில் ஆரம்பிக்க இருக்கும் கவிதைத் தொடரையும் நாம் எடுத்து வருவோம் கவிஞர்களுக்கான இந்தப் பணியில் நாமும் இணைந்து செயற்படுவோம். வாழ்த்துக்களோடு  Sena Paskaran ஆசிரியர்குழு சார்பாக 

வணக்கம் எமது தமிழ்மக்களே! வாசகர்களே! எழுத்தாளர்களே!
நிறைவில் நின்று திரும்பிப்பார்க்கின்றேன்.

 கடந்த 16.5.2014 முதல் இக்கதை ஆரம்பமாகி  10.7.2015 நிறைவு வரை கடந்து வந்த பாதையில்.
- எழுதியவர் - பண்ணாகம் திரு.இக.கிருஸ்ணமூர்த்தி அவர்கள்

 ’’விழுதல் என்பது எழுகையே’’ பெருந்தொடரின் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் வெளியீட்டாளன் என்ற வகையிலும் பண்ணாகம் இணையத்தள பிரதம ஆசிரியர் என்ற வகையிலும் எனது இலக்கிய நண்பர் ஏலையா முருகதாசன் அவர்களுடன் கடந்து வந்த பாதையைத்  திரும்பிப்பார்க்கின்றேன்.

உலகச் செய்திகள்


ஈராக்­கிய தலை­ந­கரில் குண்டு தாக்­கு­தல்கள் ; 40 பேர் பலி

சிறைக்­கூ­டத்­துக்கு கீழாக அமைக்­கப்­பட்ட சுரங்­கத்­தி­னூ­டாக தப்பிச் சென்ற போதை­வஸ்து கடத்தல் மன்னர்

ஆந்திரா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி : 29 பேர் காயம்

ரோமானிய பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்

யூரோ நிபந்தனைகள்; கிரீஸ் நாடாளுமன்றம் ஏற்பு: தலைநகர் ஏதென்ஸில் வன்முறை

ஈராக்­கிய தலை­ந­கரில் குண்டு தாக்­கு­தல்கள் ; 40 பேர் பலி

ஈராக்­கிய தலை­நகர் பக்­தாத்தில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்­களில்  40 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.


மணி ரத்தினம் ஒரு ஃபேக் இயக்குனர் - எழுத்தாளர் ஷோபா சக்தி பரபரப்பு பேச்சு

.
12. 07.2015ல் , ஞாநி அவர்களால் நடத்தப்படும் கேணிக்கூட்டம் வழக்கம் போல சிறப்பாக நடந்தது... எழுத்தாளர் ஷோபா சக்தி கலந்து கொண்டார்.. தனது அழகான ஈழ தமிழில் அவர் பேசியது வெகு அருமையாக இருந்தது....

இலக்கியம் , அரசியல் , சினிமா என விர்வாக பேசினார்..


முதலில் ஞாநி பேசினார்...

அவர் பேசுகையில் , ஈழ எழுத்தாளர்களை கவனித்த வரை , பெரிய அளவில் கவரும் வகையில் யாரும் உருவாகவில்லை.. சில விமர்சகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.. ஆனால் மற்றவற்றில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை..

ஈழ எழுத்தாளர்களில் என்னை கவர்ந்தவர்கள் இருவர்.. ஒருவர் ஷோபா சக்தி... இன்னொருவர் அவரை விமர்சித்து வரும் அ முத்துலிங்கம் ( கூட்டத்தில் பலத்த சிரிப்பு ) .... இருவர் எழுத்தும் மிக இனிமையான வாசிப்பு அனுபவம் தரக்கூடியவை..ஆனாலும் இருவருக்கும் இடையே ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு... முத்துலிங்கம் மரபு சார்ந்த எழுத்துக்கு சொந்தக்காரர்.. ஷோபா சக்தியோ கலகக்காரர்.. அவர் எழுத்து எப்போதுமே எனக்கு மிக நெருக்கமானது...

இப்போது அவர் பேசுவார்...பிறகு நாம் கேள்வி கேட்கலாம்..

மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு

.
மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு
பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று (செவ்வாய்கிழமை) காலமானார். அவருக்கு வயது 87.
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எmsvம்.எஸ்.விஸ்வநாதன். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள்.

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்த நேரத்தில், மீண்டும் எம்.எஸ்.விஸ்வாநனின் உடல்நிலை மோசம் அடைந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:15 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் செய்திகள்


ஐ.ம.சு.கூ.வின் குருநாகல் வேட்பாளர் பட்டியல் வெளியானது: மஹிந்த முதலிடத்தில்

மேர்வின், துமிந்த உள்ளிட்ட நால்வருக்கு வேட்புமனுக்கள் இல்லை

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன்: ஜனாதிபதி உறுதியாக தெரிவிப்பு

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் : 30 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நோர்வூட்டில்அஞ்சலி

ஐ.ம.சு.கூ.வின் குருநாகல் வேட்பாளர் பட்டியல் வெளியானது: மஹிந்த முதலிடத்தில்

13/07/2015 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

சாலைகள் இல்லாத நகரம் - த செல்வரத்னம் (லண்டன்).

இலங்கையில் உள்ள நயினா தீவு போன்ற தீவுகளுக்குப் போவதாயின் கடல்மூலம்தான். பிரயாணம் செய்ய வேண்டும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம்.  அத்துடன் நிலப்பரப்பை அடைந்த பின்னர் அங்குள்ள போக்குவரத்து மற்றைய இடங்களில் உள்ளது போன்று பஸ் கார் ‘ஓட்டோ’ வண்டி வசதிகள் உண்டு என்பதையும் நாம் அறிவோம். ஆனால் இங்கு குறிப்பிடப் போகின்ற விடயம் என்ன வென்றால் சாலை இல்லாத நகரம். அதாவது மோட்டார் பஸ் மோட்டார் கார் ஏன் மோட்டார்  சைக்கிள்  இல்லாத நகரம்.


இது இத்தாலியிலுள்ள வெனிஸ் (Venice) என்னும் நகரத்தில் நான் கண்டவை. நான் கண்ட அனுபவத்தை தமிழ் முரசு  வாசகர்களுடன் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


பாகுபலி BAKUPALI - ஜூலை 10 முதல் சிட்னி திரை அரங்கில்

.
ஆழமான விடயம் ஒன்று அடைந்து கிடக்கிறது

.
இது pichchikaran இணையத்தில் வந்தது. ஆழமான விடயம் ஒன்று அடைந்து கிடக்கிறது புரிந்து கொண்டவர்கள் comment  போடலாம்

முல்லாவுக்கும் தெனாலி ராமன் , பீர்பால் போன்றோருக்கும் வித்தியாசம் உண்டு.. முல்லா நம்மை போன்றவர்.. நம்மில் ஒருவர்..நம்மை பிரதிபலிப்பவர்..
இரவு வேளை ஒன்றில் முல்லா தெருவிளகடியில் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்.. வேறு சிலரும் உதவிக்கு வந்தனர்.. என்ன தேடுகிறாய் என கேட்டனர்... வாசலில் சாவி விழுந்து விட்டது என்றார்... அதை ஏன் இங்கு தேடுகிறாய் என கோபமாக கேட்டனர்.. இங்குதான் வெளிச்சமாக இருக்கு என்றார்
தேடல் முக்கியம்.. ஆனால் எங்கு தேடுகிறோம் என்பது முக்கியம்.. பேக் எழுத்து என்றால் என்ன என்பதை பேக் எழுத்துகளை படித்து கற்க இயலாது..
நல்லவற்றை படியுங்கள்

எம்எஸ்வி – ஓர் அஞ்சலி

.

கடந்த இரு வாரங்களாகச் சற்றே எதிர்பார்த்திருந்த தவிர்க்கவியலாத அந்தச் செய்தி இன்று காலை வந்தே விட்டது. ஆம், எம்எஸ்வி மறைந்துவிட்டார். இருபதாம் நூற்றாண்டு தமிழ் வாழ்வுச் சித்தரிப்பின் இன்றியமையாத அங்கங்களான, மக்களால் மாபெரும் கலைஞர்கள் என்று கொண்டாடப்பட்ட எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன், (விசுவநாதன்) ராமமூர்த்தி என்ற மகத்தான ஆளுமைகளின் வரிசையில் நம்மோடு எஞ்சியிருந்தவரும் இன்று விடைபெற்று விட்டார். எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கும் அவரது பாடல்கள் இன்று முழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றை உள்வாங்க முடியாமல் மரத்துக் கிடக்கிறது மனம்.
உண்மையில் சில தினங்களுக்கு முன் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்போது  எழுபதுகளில் வந்த தமிழ் திரைப்படப் பாடல்களுக்கான ஒரு வக்காலத்து என்றுதான் எழுதினேன். ஆனால் அதை எழுதும்போதுகூட, அந்த வக்காலத்து என்பது எம்எஸ்விக்கான ஒன்றாகவே அதிகம் அமைவது குறித்து வியந்து கொண்டே இருந்தேன். இன்று வந்தச் செய்தி முழுமையாகவே கட்டுரையை அப்படி எழுதும்படி அமைத்துவிட்டது என்று சொல்லவேண்டும்.

நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டடங்கள் - பேராசிரியர் கே. ராஜு

.
அறிவியல் கதிர்
நிலநடுக்கம் என்றாலே நமக்குக் குலை நடுங்குகிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் நாம் பெரிய பூகம்பங்களைச் சந்தித்ததில்லை. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பமே நமக்கு கிலியைத் தர போதுமானதாக இருந்தது. ஆனால் நிலநடுக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்பையும் பொருளிழப்பையும் பெருமளவுக்குக் குறைக்க முடியும் என்பது இன்று பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் அளவு அறிவியல் எப்போது முன்னேறப்போகிறது என்று நமக்கு ஆதங்கம் இருக்கலாம். ஆனால் நிலநடுக்கத்தைத் தடுப்பது தற்போது சாத்தியமாகாமல் இருப்பினும், கட்டடம் கட்டும் கலையில் நவீன மாற்றங்களைக் கொணர்ந்து நிலநடுக்கங்களைத் தாங்கும் வண்ணம் வீடுகளையும் கட்டடங்களையும் அமைப்பது இன்று சாத்தியமே. கட்டடங்களை அவ்வாறு அமைப்பது அறிவியல் பிரச்சனை மட்டுமல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடும் தொடர்புடைய முக்கியமானதொரு பிரச்சனை. நேபாளத்தில் மனித உயிர்களுக்கு மட்டுமல்ல,, அந்த நாட்டின் கட்டமைப்புக்கும் கடுமையான சேதாரம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இயல்புநிலைக்குத் திரும்ப கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்தாக வேண்டும். இதில் ஒரு சிறு பகுதியை பாதுகாப்பான கட்டடங்களை எழுப்புவதற்கு செலவழித்திருந்தாலே பேரழிவின் பாதிப்புகளிலிருந்து அந்த நாடு தப்பித்துக் கொண்டிருக்க முடியும். நம் நாட்டில்  குஜராத்திலும் இமாலயப் பகுதியிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோது பூகம்பங்களைத் தாங்கும் கட்டடங்களைப் பற்றி நாம் பேசினோம். ஆம்... பேச மட்டும்தான் செய்தோம்.  

ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வியின் எதிர்காலம் – கருத்தரங்கு

.
-       அன்பு ஜெயா

 மெல்பர்ன் நகரில் இயங்கி வரும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலை 11 ஜூலை 2015-அன்று “ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கல்வியின் எதிர்காலம்” என்ற கருத்தரங்கு ஒன்றை மோனாஷ் பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தியது. இரண்டு பகுதிகளாக நடந்த இந்தக் கருத்தரங்குக்கு பேராசிரியர் ரஸ்ஸல் டிசோசா (UNESCO Chair in Bioethics)  தலைமை ஏற்று நடத்தினார்.
சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகம் (Tamil Virtual Academy) நடத்தும் 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றிபெற்ற செல்வன் அனிருத் விஜயராஜ் ஷிவாகிக்கு பேராசிரியர் டிசோசா TVA-ன் சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.

எம்மோடே வாழுகின்றார் ! - எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

.
  மண்ணிலே உள்ளவர்கள்
       மனம்மகிழ இசையமைத்த
       மெல்லிசையின் மன்னனே
       விரைவாகப் போனதேனோ

        விண்ணிலே உள்ளவரும்
        மெல்லிசையைக் கேட்பதற்கு
        விரும்பியுனை அழைத்ததனால்
        விண்ணோக்கிச் சென்றனையோ

         கண்ணதாசன் வாலிபாடல்
         காலமெலாம் நினைப்பதற்கு
         உன்னுடைய இசையன்றோ
         உரமாக விளங்கியது

         ஏழ்மைதனில் இருந்தாலும்
         இன்னல்பல பட்டாலும்
         வாழ்வெல்லாம் இசையுண்டு
         மாயிசையைத் தந்துவிட்டாய்

        நோய்வந்து படுத்தாலும்
        நுடங்கிநாம் நின்றாலும்
        மன்னவனே உன்னிசையே
        மாமருந்தாய் இருந்ததன்றோ

விபுலானந்த அடிகளாரின் 68 ஆவது சிரார்த்த தினம் 19 July 2015

.

 19 ஆம் திகதி விபுலானந்த அடிகளாரின் 68 ஆவது சிரார்த்த தினமாகும்.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 68 வது சிரார்த்த தினத்தையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
சுவாமி விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்றமும் ஆக்கங்களும்
சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் கோயிலில் நாளும் செந்தமிழ் இசை பரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க கற்றோரும் மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

உணவே மருந்து - பாசிப்பயறு - நன்மைகள் !

.         


  பாசிப்பயறுக்குப் பயத்தம் பருப்பு பாசிப்பருப்பு என்ற பெயர்களும் மக்கள் வழக்கில் உள்ளன. இது ஒரு வகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை உள்ளிட்ட உண் பொருள்கள் இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்க்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் பாசிப்பருப்புப் பாயசம் மிகவும் புகழ் பெற்றது.
  பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள்ளன. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இப்பயறுகள் ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிகப் புரதம் கிடைத்திடச் செய்யும்.
  தொன்று தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களைவிட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகவும் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாகப் பல நாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளில்தான் அதிகச் சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. 

தமிழ் சினிமா


பாகுபலி


பிரமாண்ட மாளிகை, அரண்மனை, போர்க்களம் என இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டும் பார்த்து வந்த நமக்கு ராஜமௌலி பாகுபலி படத்தின் மூலம் செம்ம விருந்து படைத்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானா இந்த பகுதியில் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என்றால், கண்களை மூடிக்கொண்டு அனைவரும் கூறும் ஒரே வார்த்தை ராஜமௌலி.
இது இவரின் கனவுப்படமும் கூட, கிட்டத்தட்ட 3 வருட தவத்தில் இருந்த, ராஜமௌலி, அவருடன் இணைந்த பிரபாஸிற்கும் இன்று வரமாக அமைந்துள்ளது இந்த பாகுபலி.
கதைக்களம்
ராஜா கதை என்றாலே நம் நினைவிற்கு வருவது அரியனைக்கு போட்டிப்போடும் அண்ணன், தம்பி பின் அவர்களுக்குள் வரும் மோதல் இது தான். அதேபோல் தான் இந்த பாகுபலியும்.
படத்தின் முதல் காட்சியிலேயே ரம்யா கிருஷ்ணன், ஒரு குழந்தையை(பிரபாஸ்) கையில் ஏந்திகொண்டு, நீரில் மூழ்கி அந்த குழந்தையை மலைவாழ் மக்களிடம் ஒப்படைத்து ஒரு மலையை காட்டி இறக்கிறார்.
பிரபாஸிற்கு எப்போது அந்த மலை மேல் என்ன இருக்கின்றது என்ற ஆர்வம், வளர்ப்பு அம்மா அங்கு நீயெல்லாம் போக கூடாது என்று மிரட்ட, அதையும் மீறி அங்கு செல்கின்றார்.
கொள்கைக்காக போராடும் பெண்ணாக தமன்னா, இவரை பார்த்தவுடன் பிரபாஸிற்கு காதல் பற்றிக்கொள்ள, அந்த கொள்கையை உனக்காக நான் செய்கிறேன் என பிரபாஸ் அங்கு செல்ல, இவரை அந்த ஊர் மக்கள் கடவுளாக பார்க்கின்றனர். பாகுபலி என்றும் அழைக்கிறார்கள்.
ஏன் இவர்கள் பிரபாஸை இப்படி பார்க்கின்றார்கள், யார் அந்த பாகுபலி என்பதை மிக பிரமாண்டமான பிளாஷ்பேக்கில் சொல்லியிருப்பது தான் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் முதல் ஹீரோ ராஜமௌலி தான், எப்படி இந்த படத்தை இவர் எடுத்து முடித்தார் என, பார்த்த நமக்கும் தலை சுற்றி போய் விடும், நான் ஈ’யில் குட்டியாக பிரமாண்டத்தை காட்டி இதில் யானை அளவிற்கு தன் திறமையை வெளிபடுத்தியுள்ளார்.
பிரபாஸ் இந்த படத்திற்காக 3 வருடம் தன் உயிரை கொடுத்து தான் நடித்துள்ளார், அவருக்கு இணையாக 6 1/2 அடி உயரத்தில் ராணா மிரட்டியிருக்கிறார். தமன்னாவுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரம்.
சத்யராஜ் ஹீரோவிற்கு இணையான பாத்திரம், ஒரு படைத்தலைவனாக ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு மூத்த நடிகர் என நிரூபித்துள்ளார். அதிலும் பிரபாஸ் காலை தன் தலையில் தாங்கும் காட்சி, சல்யூட் சார்.
மரகதமணி இசையில் பாடல்கள் கொஞ்சம் சொதப்பினாலும், பின்னணி இசையில் கலக்கியுள்ளார், இவர்கள் எல்லோரையும் விட நம் கண்களுக்கு விருந்து படைப்பது செந்தில் குமாரின் ஒளிப்பதிவு தான்.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை கூறாமல் இருக்க முடியுமா? அதிலும் கடைசி ஒரு மணி நேரம் அந்த போர் காட்சிகள், காலரை தூக்கி சொல்லலாம் இது எங்க ஊர் சினிமா என்று. அப்பறம் அனுஷ்கா சொல்ல மறந்துட்டீங்களே என்றால், அவருக்கு இந்த படத்தில் எந்த பெரிதாக பாத்திரம் ஒன்றுமில்லை, ஆமாங்க இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வருகின்றது, அதில் தான் அனுஷ்கா கதாபாத்திரம் முழுமையாக வெளிப்படுமாம்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதியும், அந்த போர் காட்சிகளும். செந்தில்குமார் ஒளிப்பதிவு, இவை அனைத்திற்கும் மேலாக, ராஜமௌலி தன் கதை மற்றும் திரைக்கதையில் வைத்த நம்பிக்கை.
பல்ப்ஸ்
கொஞ்சம் ஹீரோயிஸம், ஆந்திரா மசாலா தெரிந்தாலும் இந்த மாதிரி படத்திற்கு எதற்கு குறை கூற வேண்டும்?.
மொத்தத்தில் இந்த பாகுபலி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத சாதனையாளன்.
ரேட்டிங்- 3.75/5  நன்றி cineulagam